இறைவன் தம் மந்தையை தம்மிடம் வர அழைக்கிறார்; அன்பிலும் கட்டளைகளைக் கடைபிடிப்பதிலும் இதய எளிமையிலும் தம்மைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். “இன்று உங்கள் இதயம் என்னை வரவேற்கத் தயாராக இருக்கிறதா?” என்று கேட்கிறார். மன்னித்து, ஒரே பரிசுத்த மக்களினமாக இருக்கவும் அழைக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 98. ஆகஸ்ட் 7, 1989. ஆண்டவரா? நான்தான். சுற்றிலும் பார்த்து புரிந்துகொள். என் வார்த்தை உனக்குத் தரப்படுகிறது. என் அடையாளங்களை கண்டுபிடி. பயப்படாதே. ஆசீர்வதிக்கப்பட்டவளே, உன் ஒன்றுமில்லாமையின் காரணமாக நான் உன்னில் இருக்கிறேன். உன் சங்கிலிகளிலிருந்து நான் உன்னை விடுவித்தேன். யாரும் உனக்கு வலையிட விடாதே. நான் உன்மீது கல்வி அறிவையும் பகுத்தறிதலையும் பொழிந்திருக்கிறேன் என்பதை நினைவில் வை. அன்புக்குரியவளே, யாரும் உன்னை ஏமாற்ற விடாதே. குறிப்பு: நான் திருத்திய அந்த ஆளைப் பற்றி நான் ஆண்டவரிடம் மீண்டும் கேட்டபோது, இது சொல்லப்பட்டது: "நான் பகுத்துணர்வது அந்த மனிதர் சொல்வது போல வெறும் உணர்வுகள் மட்டுமா, அல்லது நான் பகுத்துணர்வது நிஜம் தானா?" என்று எனக்கு தெரியவில்லை. சிறியவளே, நான் அவனுக்கு என் சமாதானத்தையும் என் அன்பையும் தருகிறேன். குறிப்பு: அந்த குறிப்பிட்ட மனிதன். ஆண்டவராகிய நான் அவனை மன்னித்துள்ளது போல, நீயும் அவனை மன்னித்து அவனை ஆசீர்வதி. என் வசூலா, நான் உனக்குத் தந்துள்ளதெல்லாம் என் ஆவல்களை நிறைவேற்றுவதற்காகத்தான் என்று நான் சொல்லியிருக்கிறேன். நேரடியாக என்னிடமிருந்து வாங்கி உண்பது உன் ஆன்மாவை அழகுபடுத்துவதற்காகத்தான். எப்போதும் என் சார்பாக இரு, என் கரங்களில் தங்கியிரு. ஆண்டவராகிய நான் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன் என்று உனக்கு உத்தரவாதம் தருகிறேன். உன் ஒழுக்கத்தின் காரணமாக நீ கடுமையானவளாக இருப்பதாக அவர்கள் கருதுவார்கள். என் வழிகள் அவர்களுடைய வழிகள் அல்ல என்பதால், அவர்கள் உனக்கு முரண்படுவார்கள். குறிப்பு: கடவுளால் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் இதற்கு காரணம், ஆனால் அது பெரும் அச்சத்தை உண்டாக்கியது. ஆனால் இந்த மக்கள் ஆற்றின் நீரோட்டத்தை தான் எதிர்த்து போராடிக் கொண்டிருப்பார்கள். சமாதானமாய் இரு, மகளே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். ஆகஸ்ட் 9, 1989. 1989 ஆகஸ்ட் 18 அன்று காக்ஸில் உள்ள புனித சூசையப்பர் கத்தோலிக்க சிற்றாலயத்தில் நடக்க இருந்த ஜெபக்கூட்டத்திற்கான செய்தி. ஆண்டவரா? நான்தான். நான் சொல்வதைக் கேளுங்கள். அன்புக்குரியவர்களே, நான் பரிசுத்தர். புனிதத்துவத்தின் பாதைக்குள் நடக்க நான் உங்களை ஆயுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். என் சிறு குழந்தைகளே, உலக உடைமைகளில் பற்று வைக்காமல், மேலிருந்து வருபவையும், பரலோகத் தன்மை உள்ளவையும், பரிசுத்தமானவையுமான காரியங்களில் பற்று வையுங்கள். நான் பரிசுத்தர், நீங்கள் என் சந்ததியராக இருப்பதால், நீங்கள் பரிசுத்தத்தனத்தில் வாழ வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன். என் திருப்பெயரை பரிசுத்தம் என போற்றுங்கள். என் திருப்பெயரை அர்ச்சியுங்கள். எனக்கு சொந்தமானவர்களே, என்னிடம் வந்து மௌனத்தில் என்னை கண்டுபிடியுங்கள். என்னை உணருங்கள். முற்றிலுமாக எனக்குத் திறக்க உங்களை அனுமதியுங்கள். நீங்கள் அப்படி செய்யும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களை வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் தொடங்குவேன். உங்கள் மீது கல்வியை பொழிவேன். உங்கள் ஆன்மாவை என்னிடம் உயர்த்தி, அதை அழகுபடுத்துவேன். நான் என் பரிசுத்த வார்த்தையை இடைவிடாமல் நினைவுபடுத்துபவராக இருக்கிறேன். நானே ஒழுக்கமும் ஞானமுமாக இருக்கிறேன். நானே என்னிடம் தங்களை கையளித்துவிடும் அனைவரையும் பராமரித்து, அவர்களுக்கு கற்பிக்கிற ஒரே ஒப்பற்றவராக இருக்கிறேன். என் ஒளியில் வாழுங்கள். என் ரெக்கைகளின் கீழ் உங்கள் இல்லிடத்தை கண்டடையுங்கள். என்னிடமிருந்து உண்ணுங்கள். குறித்த காலத்திற்கு முன்பே உங்கள் தொப்புள் கொடியை வெட்டிவிடாதீர்கள். உங்களால் வாழ இயலும்படி நான் உங்களை முழுமையாக ஆயத்தம் செய்யவும், உங்கள் ஆன்மா முதிர்ச்சியும் உத்தமதனமும் அடையும்படி அதற்கு உணவளிக்கவும் என்னை அனுமதியுங்கள். என்னிடமிருந்து திரும்பிக் கொள்ளாதீர்கள். இரவு பகல் முழுவதும் என்னோடு நடங்கள். என்னை தேடியபடி இந்த வனாந்தரத்தில் இன்னும் தவறு செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் நான் திரும்பத் திரும்ப அழைக்கிறேன். வாருங்கள். நான் என் மீட்பரை தேடினேன், ஆனால் அவரை காணவில்லை என்று சொல்லி இந்த வனாந்தரத்தில் இன்னும் தவறு செய்து கொண்டிருப்பவர்களே, வாருங்கள். என் அன்புக்குரியவர்களே, சுய ஆர்வமின்றி என்னை நேசிப்பதன் மூலம் இறுதிய பரிசுத்தத்தில் என்னை கண்டுபிடியுங்கள். உங்களிடம் நான் ஆசிக்கும் கையளித்தலில் பரிசுத்ததனத்தில் என்னை கண்டுபிடியுங்கள். என் கட்டளைகளை கடைபிடிப்பதன் மூலம் என்னை கண்டுபிடியுங்கள். தீமையின் இடத்தில் அன்பை வைப்பதன் மூலம் என்னை கண்டுபிடியுங்கள். இதய எளிமையில் என்னை கண்டுபிடியுங்கள். இனி பாவம் செய்யாதீர்கள். தீமை செய்வதை நிறுத்துங்கள். நன்மை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நீதியை தேடுங்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். இந்த வனாந்தரமும் இந்த வறட்சியும் அக்களிப்பனவாக உங்கள் வெதுவெதுப்பு உக்கிரமுள்ள தீச்சுவாலையாக மாறட்டும். உங்கள் மந்த நிலையை விட்டு விலகி, அதன் இடத்தை பக்தி ஆர்வத்தைக் கொண்டு நிரப்புங்கள். நான் என் மீட்பரை தேடினேன், அவரைக் கண்டுகொண்டேன். அவர் முழு நேரமும் என் அருகில்தான் இருந்தார், ஆனால் என் இருளில் நான் அவரைக் காணத் தவறிவிட்டேன். ஓ, இறைவனுக்கு மகிமை உண்டாக! நம் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக. நான் எப்படி இவ்வளவு குருடாக இருக்க முடிந்தது என்று சொல்லக்கூடியவர்களாக நீங்கள் இருக்கும்படி இந்த எல்லா காரியங்களையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் வாழும்படி என் கொள்கைகளை அனுசரிக்கவும், அவற்றை மதித்துப் போற்றவும் நான் உங்களுக்கு நினைவுபடுத்துவேன். ஓ, உண்மையிலிருந்து வழிதவறி போய்விட்ட மேற்பர்களாகிய நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். சட்டத்தின் அனுசரியாமை அல்லது அழிவின் பாதை எதையும் நாங்கள் கண்டுபிடிக்காமல் விட்டதில்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? எந்த தடத்தையும் விடாமல் பாலைவனங்களை கடந்து வந்ததாக நீங்கள் எப்படி பெருமை அடித்துக் கொள்ள முடியும்? பெருமை அடித்தலும் அகம்பாவமும் என் மந்தைக்கு தந்துள்ளது என்ன? ஆம், நீங்கள் பெருமை அடித்துக் கொண்ட உங்கள் மந்தை எங்கே? நீங்கள் நீதியோடு நிர்வாகம் செய்ததாக இப்போது சொல்ல முடியுமா? நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மேய்ப்பராகிய நான் விரும்பினேனோ, அப்படி நடந்து கொள்கிறீர்களா என்று உண்மையுள்ள மனதோடு எப்போதாவது உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டதுண்டோ? ஆகவே, நான் சொல்வதைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். பொய்மையின் செங்கோல் ஒன்றுக்காக உங்கள் ஆயனுக்குரிய கைக்கோலை கை நெகிழ்ந்து விட்டவர்களும், உங்கள் ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டுள்ளவர்களுமான நீங்கள் இந்த வார்த்தைகளை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தோள்களில் இருந்து சுமையை இறக்கி வைத்தது நான்தான் அல்லவா? உங்கள் பாவங்களுக்கு நான் பரிகாரம் செய்யவில்லையா? கண்ணீரின் அப்பத்தை நீங்கள் உண்பதை நான் கவனித்துக் கொண்டே இருந்திருக்க முடியுமா? நான் செய்துள்ளதெல்லாம் உங்களை விடுவிக்கவும், உங்களை காப்பாற்ற வருவதற்குமே மிகுந்த பரிவன்போடு நான் உங்களை என் ஆயர்களாக நியமித்திருக்கிறேன். காலம் இப்போது குறைவாய் இருக்கிறது. நான் அற்புதங்களையும் அடையாளங்களையும் தந்து கொண்டிருக்கிறேன். நான் வானகங்களை அடையாளங்களால் நிரப்பியுள்ளேன். நான் உங்களுக்கு எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கை தந்து கொண்டிருக்கிறேன். என் அன்பு மற்றும் என் இரக்கத்தின் மாபெரும் அடையாளங்களை நான் உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் இவற்றை அறியாதிருக்கிறீர்கள். இன்று உங்கள் இதயம் என்னை வரவேற்க தயாராக இருக்கிறதா? உங்கள் வாய்கள் பேசவும், இந்நாட்களில் நான் உங்கள் மீது பொழிகிற என் அருளின் ஆவியை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறதா? உங்கள் கண்கள் காண சித்தமுள்ளவையாக இருக்கின்றனவா? உங்கள் காதுகள் என் அன்பின் கூக்குரல்களை அடையாளம் கண்டுகொள்ள தயாராக இருக்கின்றனவா? உங்கள் இதயங்கள் திறந்து என் இன்றைய அருள் வரங்களை ஏற்றுக்கொள்ள மனதாய் இருக்கின்றனவா? என் பிறப்பின் போது என்னை ஆராதித்து மகிமைப்படுத்தி வந்த முதல் இடையர்களைப் போல, உங்கள் கால்களும் நடக்கவும் என்னிடம் வந்து என்னை தெண்டனிட்டு ஆராதிக்கவும் தயாராக இருக்கின்றனவா? இம்முறை உங்கள் இதயத்தைக் கொண்டு என்னை மகிமைப்படுத்தவும், என் மந்தைக்கு உங்கள் அன்பையும் எனக்கு உங்கள் பிரமாணிக்கத்தை காட்டவும் நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா? நீங்கள் செத்தவர்களாக இல்லை, உயிரோடு இருக்கிறீர்கள் என்று சாதிக்கிறீர்கள். அப்படியானால், உங்களிடமிருந்து நான் ஏன் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை? ஏன் எந்த ஆசீர்வாதங்களையும் நான் கேட்கவில்லை? நான் அன்பு செய்யும் அனைவரையும் கண்டிப்பவரும், ஒழுங்குபடுத்துவவரும் நான்தான். வந்து மனம் வருந்துங்கள். இன்று என் புனித இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புங்கள். நீங்கள் இந்த பாலைவனத்தில் குறிக்கோள் இன்றி இனியும் தவறு செய்யாதபடி, உங்கள் மேய்ப்பராகிய என் மீது உங்கள் கண்களை பதித்துக் கொள்ளுங்கள். சமாதானம், அன்பு மற்றும் ஒருமைப்பாட்டின் பாதைக்குள் உங்கள் பாதங்களை வழிநடத்தும்படி நான் உங்களோடு இருக்கிறேன். ஆகவே, என் அரசின் திறவுகோலை எடுத்து பயன்படுத்தும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் அரசின் திறவுகோல் அன்பு, தன் முழு மகிமையுள்ள அன்பு. அன்பும் தாழ்ச்சியும் ஒருமைப்பாட்டிற்கு மற்றொரு திறவுகோலாக இருக்கிறது. உங்கள் திறவுகோல்களை எடுத்து அவற்றை பயன்படுத்துங்கள். என் அன்பர்களே, அவற்றை பயன்படுத்துங்கள். ஒன்றாய் இருங்கள். ஒரே பரிசுத்த மக்களினமாக இருங்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன். உங்கள் நெற்றிகளின் மீது என் அன்பின் அடையாளத்தை பதிக்கிறேன். நான் என் செய்தியில் இதை சேர்க்க விரும்புகிறேன். ஒளியில் இருப்பதாக சொல்லிக்கொண்டே, தன் சகோதரனை வெறுப்பவன் இன்னும் இருளில் இருக்கிறான். மன்னியுங்கள், ஆண்டவராகிய நான் மன்னிப்பது போல, நீங்களும் மன்னியுங்கள். நான் பரிசுத்தராய் இருப்பது போல, நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். அன்பு உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறது. நம் பரிசுத்த அன்னை இப்போது தம் செய்தியை தருகிறார்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறேன். நீங்கள் இடைவிடாமல் ஆண்டவரை போற்றவும், அவருடைய செய்திக்காக அவருக்கு நன்றி கூறவும் வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த செய்தி அதை நம்பி பின் செல்லும் உங்கள் மத்தியில் இன்னும் ஒரு உயிருள்ள வல்லமையாக இருக்கிறது. ஆகவே, அருளின் சிம்மாசனத்தை நம்பிக்கையோடு அணுகி செல்லுங்கள். ஏனெனில், அவருடைய இரக்கத்தையும் அன்பையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில், அவர் எப்போதும் மிகுந்த தயவிறக்கம் உள்ளவராக இருக்கிறார். அவருடைய போதனைகளை கடைபிடித்து, அவருடைய செய்திகளை வாழுங்கள். அவற்றை வாசித்துவிட்டு, வெறுமனே ஒரே பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்த செய்திக்காக காத்துக் கொண்டிருக்காதீர்கள். அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். ஏனெனில், இது அவருடைய திரு இருதயத்தை மகிழ்விக்கும். என் குழந்தைகளே, அவருடைய குரலை கேளுங்கள். உங்கள் பிரச்சனைகளையும், உங்கள் துன்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். அவருடைய திருப்பெயரை பரிசுத்தம் என போற்றுங்கள். அன்பு உங்கள் மத்தியில் இருக்கிறது. வாருங்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன். ஆகஸ்ட் 12, 1989. இயேசுவா, நான்தான் மலரே. ஐக்கியமும் எனக்கு அடிமையாய் இருப்பதும், பிரமாணிக்கமும், பக்தி ஆர்வமும் உன்னை என்னிடம் உயர்த்தும். என்னை ஆராதி, நான் உன் இறைவன். என்னில் இளைப்பாறு, நான் உன் பரிசுத்த தோழர். எனக்கு ஆறுதல் கொடு, நான் உன் மணவாளர். என்னில், என்னில் மட்டும் நம்பிக்கை கொள். ஏனெனில், நான் உன்னை மீட்டு இரட்சிக்கிறவர். நானே இயேசு. ஆகஸ்ட் 13, 1989. என் குழந்தாய், என் ஆவி உன் மீது உள்ளது. என் கரம் உன் கரத்தின் மீதும், என் வார்த்தை உன் உதடுகள் மீதும் உள்ளன. என் பழமொழிகள் உன் விளக்காக இருக்கிறது. உன் காலடிகளை வழிநடத்துகின்றன. நீ எப்போதும் என்னை அன்பு செய்து, என் போதனைகளை பின்பற்றி, என் கட்டளைகளை கைகொண்டு வருவாய் என்றால், அன்பும் பிரமாணிக்கமும் உன்னை ஒருபோதும் கைவிடாது. நான் உன் நம்பிக்கையாக நிலைத்திருப்பேன். நீ என் தந்தைக்குரிய செல்வங்களுக்கு உரிமையுள்ள குழந்தையாகவே நிலைத்திருப்பாய். என் குழந்தாய், நான் உன்னை சூழ்ந்துள்ள அனைத்து தீமையையும் அடக்கி ஆளுவேன். நான் உன் நிர்பாக்கியங்களில், உன் அருகில் வெறுமனே நின்று கொண்டிருக்க மாட்டேன். நீ என் நீதியையும், அழுகிக் கிடைக்கிற பிணங்களையும் கூட மீட்டு இரட்சிக்கிற என் வல்லமையையும் அறிக்கையிடுவாய். நானே உயிர்ப்பு. ஒவ்வொரு மக்களினமும் என்னை மகிமைப்படுத்தி, என்னை போற்றி துதிக்கும். நான் இறுதிவரை உன்னுடன் இருப்பேன். நாங்கள் என் குழந்தாய். நாங்கள் குறிப்பு இரண்டாவது. நாங்கள் நம் பரிசுத்த அன்னையிடமிருந்து வந்தது. உன் தாயாகிய நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன் என்பதை நினைவில் வை. இடைவிடாமல் ஜெபி. ஆகஸ்ட் 14, 1989. தேவ அன்னையின் விண்ணேற்பு திருநாளுக்கு முந்திய நாள். நானே ஆண்டவர், என் குழந்தாய். நான் இந்த அந்நிய நாட்டை கடந்தும் கடக்காமல் இருந்தபோது, உன்னை என் இருதயம் அன்பு செய்கிற உன்னை கண்டேன். நான் உன்னை இருகப் பற்றிக்கொண்டு, நேரான சாலைக்கு உன்னை திரும்ப நடத்தி வந்தேன். என் தாயின் இல்லத்திற்கு என்னை கருத்தாங்கியவர்களின் அறைக்குள் உன்னை நான் கூட்டி வரும்வரை, நான் உன்னை போகவிடவில்லை. நாளைய உன் தினத்தை அர்ப்பணி, என் தூபமாக இருந்து, உன் சுற்றுப்புறத்திற்கு மனமூட்டு. என் ஆவி உன் மீது தங்கியுள்ளது. தைரியம் கொள். நான் உன்னை நெற்கதியாக விடமாட்டேன். என் குழந்தாய், என் ஆசீர்வாதங்கள் உன் மீது இருக்கின்றன. ஆகஸ்ட் 16, 1989. என் குழந்தாய், சமாதானம். நான் உன்னை அன்பு செய்வது போல, நீயும் என்னை அன்பு செய். என்னை உணரு, என்னை பகுத்துணரு. நீ என்னை காணும்போது, என்னை தொடு. என் குழந்தாய், இதை செய்ய நான் உன்னிடம் கேட்டதில்லையா? ஆம், ஆண்டவரே, கேட்டிருக்கிறேன். இதை செய்வாயா? இப்போது சரி, என் கரத்தை பிடித்துக்கொள். நான் உனக்கு தந்து கொண்டிருக்கிற இந்த சமாதானத்தை அடையாளம் கண்டுகொள். நான் உனக்கு தந்து கொண்டிருக்கிற அன்பைக் கொண்டு என்னை அடையாளம் கண்டுகொள். நான் ஏன் இந்த அந்நிய நாட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும்? என் ஆண்டவரே, இது முடிவற்றதாக தோன்றுகிறது. எனக்கு தெரியும், ஆனாலும் நான் விரைவில் நிறைவேற்றி முடிக்கப் போகிற இந்த பணிக்கு உன்னை நான் நியமித்திருக்கிறேன். நான் உன்னை கைவிடமாட்டேன். நீ என்னை மகிமைப்படுத்தும்படி நான் பார்த்துக் கொள்வேன். வசூலா, என் அருகில் தங்கியிரு. இதை நீ எனக்காக செய்வாயா? என் ஆண்டவரே, நான் உமக்கு கீழ்படிய விரும்புகிறேன். எப்போதும், ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன். என்னை பற்றிக்கொள். நானே உனக்கு கற்பிக்கிறவர் என்பதை நினைவில் கொள். நாங்கள் நாம். ஆம், ஆண்டவரே, என்றென்றும். ஆகஸ்ட் 22, 1989. உன் திருப்பெயர் போற்றப்படுவதாக, என் ஆண்டவரே, சுவாசமுள்ள அனைத்தும் உம்மை துதிப்பதாக. அன்பு உன்னை அன்பு செய்கிறது. அறிவு கெட்டாத என் அன்பும் இரக்கமும் உன் மீது இருக்கிறது. என் மீது சாய்ந்து கொள். நான் உன் வழிகாட்டி. என் அன்புக்குரியவளே, சந்தேகப்படாதே. நான் எப்போதும் உன்னை நிரப்புவேன். நான் என் சமாதானமும் அன்பும் ஒரு நதியைப் போல் உன் மீது பாயும்படியாக அவற்றை அனுப்பவில்லையா? ஆகவே, மகிழ்ச்சி கொள். ஏனெனில், ஆண்டவராகிய நான் உன்னோடு இருக்கிறேன். என் வார்த்தையை வாசி. அப்போது நான் நோக்கம் ஏதுமின்றி, இசையாஸ் 49வது அதிகாரம், இறைவார்த்தை ஆறாவது பகுதியில் உள்ள பக்கத்தை திறக்கிறேன். பிற்பாடு, என் திராட்சைத் தோட்டம் இப்போது என் சொந்த கரங்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், நான் தேவையில் உள்ளவர்களிடமிருந்தும், நீதிமான்களிடமிருந்தும் துன்பக் கூக்குரல்களை கேட்டேன். அவர்கள் தங்களுக்கு கனிகள் தரும்படி கேட்பதைக் கேட்டேன். ஆகவே, இரக்கத்தின் ஆண்டவராகிய நான், அப்பங்களையும் மீன்களையும் பழுக செய்து, பெரும் கூட்டமான மக்களுக்கு உணவளித்தது போல, இப்போது என் கனிகளை பழுக செய்கிறேன். இந்த கனி, இந்த பூமியின் அழகாகவும், மகிமையாகவும் இருக்கும். என் எதிரி என் திராட்சைத் தோட்டத்திற்குள் வந்து, அதை தன் காலால் மிதிக்காதபடி, நான் அதை சுற்றிலும் ஒரு சுவர் எழுப்புவேன். அன்புக்குரியவர்களே, திராட்சைத் தோட்டத்தின் எஜமானனாகிய நான், உங்கள் நடுவே இருக்கிறேன். என் அன்புக்குரியவர்களே, தைரியம் கொள்ளுங்கள். ஒளி உங்களிடமிருந்து எப்படி விளக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். நீங்கள் எப்படி இருளுள் சிறைப்படுத்தப்பட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும், கொழுந்துவிட்டு பிரகாசமாக இருக்கிற என் அன்பின் நெருப்பைக் கொண்டு, இந்த இருளை விரட்டி அடிக்கும்படி நான் இறங்கி வருகிறேன். உலகம் முழுவதும் சுடர் வீசும் ஒளியால் பிரகாசிக்கும் அன்பாக இருக்கிற நான், உங்கள் நடுவே வாழ்வேன். ஆகஸ்ட் 23, 1989. வசூலா, அசையாதிரு. என்னை சமாதானத்தில் பெற்றுக்கொள். உன்னோடு என் வழிகள் அமைதியில் இருக்கின்றன. என் வார்த்தையை இடமும் வளமும் அறிக்கையிடு. ஒருபோதும் தயங்காதே. என் அளவற்ற அன்பின் காரணமாக, நான் மனிதகுலம் முழுவதற்கும் உனக்கு ஒரு கொடையை தந்திருக்கிறேன். என்னை போற்று, என்னை அன்பு செய். என் திருப்பெயரை எப்போதும் பரிசுத்தமாகக் கொண்டிரு. என் வரப்பிரசாதம் உன் மீது இருக்கிறது. நான் சொல்வதைக் கேள். திராட்சைத் தோட்டம் அறுவடைக்கு தயாரானதும், நீ என்னிடம் வருவாய். நான் உன்னை முழுவதுமாக அழித்து, என் திருவுடலாக மாற்றுவேன். மகா உன்னதராகிய நான், ஓர் ஒன்றுமில்லாமையாக நீ இருப்பதை அறிந்திருப்பதால், உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். ஆகவே, நீ எவ்வளவாக எனக்கு தேவைப்படுகிறாய் என்பதை காண்கிறாயா? ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திரு. அப்போது என்னில் நீ தங்கியிருப்பாய். சுய திருப்தி உள்ளவளாக இரு. ஒவ்வொரு தேவதூதர்களின் ஒவ்வொரு சபையையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான படை அணிகளால் சூழப்பட்டிருக்கிற உன் தேவனாகிய எனக்கு கீழ்படிந்திரு. என் பரிசுத்தத்தனத்தை உணர், என் தெய்வீகத்தை உணர். உன் கண்கள் என் மீதும், என் புனித இதயத்தின் மீதும் பதிந்திருக்கட்டும். என் மலராக இரு. வா, நான் உன்னை ஆசீர்வதிக்கும் போது, உன் கண்களை தாழ்த்து. இப்போது இதை நீ செய்வாயா? உனக்காக நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த வழியை ஏற்றுக்கொள். இதயத்தில் எளிமையாய் இரு. ஏனெனில், என்னை மகிழ்விப்பது இதுதான். என்னிடம் ஞானத்தைக் கேள். நான் அவர்களை உன்மீது பழுக செய்வேன். பகுத்துணரும் திறனைக் கேள். நான் அவர்களை உன்மீது பொழிவேன். என்னை ஆராதிக்கும் போது, இந்த காரியங்களைக் கேள். வா, என்னிடமிருந்து நீ கற்றுக்கொண்டுள்ள அனைத்தையும் மதிப்பிடு. நானே உன் ஆசிரியர், உனக்கு கற்பிப்பவர். நீ ஞானத்தின் உதடுகளிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறாய். பார்த்தாயா? என் வசூலா, நான் உனக்கு உணவளிக்கிறேன். எதைக் கொண்டு என்று அறிவாயா? ஆன்மீகத்தைக் கொண்டு, என் கனியைக் கொண்டு, என் வாழ்வின் மரத்தின் கனியைக் கொண்டு. பார்த்தாயா? என் யாவே எனக்கு நல்லவராக இருக்கிறார். அவருடைய அன்பு நித்தியமானது. அவருடைய பிரமாணிக்கம் காலகாலமாய் நிலைத்துள்ளது. அவர் என்னை படு குடியிலிருந்து வெளியே இழுத்து, என்னை குணப்படுத்தி உள்ளார். அவர் என் பாதங்களை ஒரு பாறையின் மீது நிலைநிறுத்தி, என் காலடிகளை திடப்படுத்தி உள்ளார். என் ஆண்டவரே, தேவரீர், எங்களுக்காக எவ்வளவு அதிகமான அற்புதங்களை செய்திருக்கிறீர்.