வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 40. ஜூலை 3, 1987 இயேசுவா?
நான்தான்; நேசமே. இலைகளின் மீது பனித்துளிகள் வருவது போல, தேவ ஏவுதல்கள் என்னிடமிருந்து வருகின்றன; நான் உனக்குப் பிரமாணிக்கமாக இருப்பதாக, உன்னோடு ஒர் ஒப்பந்தம் செய்திருக்கிறேன், நீயும் எனக்குப் பிரமாணிக்கமாக நிலைத்திருக்கும்படியாக, நான் என் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன், பார்த்தாயா? குறிப்பு: நான் எவ்வளவு பலவீனமானவள் என்று அறிந்திருந்தும், நான் அவருக்கு பிரமாணிக்கம் தவறமாட்டேன் என இயேசுவே உறுதிப்படுத்தினார். வசுலா, என் நிமித்தமாக, நீ என் திருச்சபையை ஒன்றுபடுத்துவாயா? நான் உன் வழிகாட்டியாக இருக்கிறேன், உனக்குக் கற்றுத் தர இருப்பவர் நானே; என்னைப் பின்செல்; என் எல்லாச் சபைகளும் இணைய வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் குருத்துவ ஆத்துமங்கள் என் முந்தின வேலைகளையும், என் சீடர்கள் கொண்டிருந்த எளிமையையும், ஆதிக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த தாழ்ச்சியையும், பிரமாணிக்கத்தையும் நினைவு கூற வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; வா, நான் என் இருதயத்தின் மிக ஆழமான, என் மிக அன்யோனியமான ஆசைகளை உனக்கு வெளிப்படுத்துவேன், சிறியவளே; அவற்றை உன்மீது செதுக்க என்னை அனுமதி; இங்கே நான் உண்மையாகவே பயனற்றவளாக உணர்ந்தேன். கடவுள் என்னிடம் சொல்பவையும், எழுதி வைப்பவையுமாகிய மிக அநேக முக்கியமான காரியங்களைக் கடவுள் ஆசிக்கிறார் என்று நான் உணர்கிறேன், நானோ முடக்கப்பட்டவளாக, அவற்றின் மீது அமர்ந்திருக்கிறேன். அவர் விரும்புவதை நான் செய்வதில்லை என்று நான் உணர்கிறேன், ஏனெனில் எதுவுமே மாறவில்லை, இதைப்பற்றி உண்மையில் யாருமே அதிகமாக அறியவில்லை என்றால், அது எப்படி மாற முடியும்? நான் கீழ்படியாமலும், அவர் மிக அதிகமாக விரும்புவதைச் செய்யாமலும், அவரை துயரப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று உணர்கிறேன். இயேசுவே, நூறு பேருக்கு மேலாக இந்த வெளிப்பாடுகளின் பிரதிகளை வைத்திருக்கிறார்கள்; ஆனால் அது போதாது! நான் இருக்கிறேன், சமாதானத்தில் வாழு; நான் என் திருச்சபையை மீண்டும் அதன் பழைய நிலையில் ஸ்தாபிப்பேன்; வசுலா, என் வார்த்தைகளை உன்மீது பதிக்க மட்டும் என்னை அனுமதி; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; என் திருச்சபையை இணைப்பது என் பணி; நீ என் பணிப்பெண் மட்டுமே; இந்த வித்தியாசம் உனக்குப் புரிகிறதா? குறிப்பு: எனக்குப் பல வருடங்கள் பிடித்தன; 1998 ஆகஸ்ட் 29 அன்று நான் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தபோது... என் திருச்சபைக்கு மீண்டும் உயிர்க் கொடு, என் திருச்சபையை ஒன்றுபடுத்து என்று நான் சொல்லும்போதும் கூட, அது ஒருபோதும் நேரடியாக உனக்கு சொல்லப்படுவது அல்ல; நீ கற்றுக்கொள்வாய், என்னோடு என் பணிகளில் ஒரு பகுதியை நீ கற்றுக் கொண்டிருக்கிறாய் அல்லவா? ஆம், ஆண்டவரே, கற்றுக் கொண்டிருக்கிறேன். காத்திரு; நீயே காண்பாய்; குறிப்பு: ஒரு நீண்ட இடைவெளி. நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் சொல்லும் முன், வேறு எதையுமே கூறாமல் என் கரத்தை காகிதத்தின் மீது நிறுத்தி வைத்திருந்தார். நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது: நீ ஏன் ஆறுதலைத் தேடி இப்போது என்னிடம் வருவதில்லை? ஆம், மிகச் சரியாக, ஆம்; இயேசு ஒரு நொடிப்பொழுதில் பளிச்சென்று எனக்கு ஒரு காட்சியையும், அதற்குப் பின்னால் உள்ள ஒரு முழுக் கதையையும் தந்தார்; ஒர் உவமையைப் போல. அது ஒரு குழந்தையையும், ஒரு தாயையும் பற்றியது. அந்தத் தாய் பல வருடங்களாகத் தன் குழந்தையை தொலைத்துவிட்டிருந்தாள். அவள் இறுதியாக அதைக் கண்டுபிடித்து மிக மகிழ்ச்சியாக இருந்தாள். தன் குழந்தைக்கு எது வேண்டுமானாலும் தன்னிடம் வரும்படி அதற்கு கற்றுத் தர அவள் முயற்சி செய்து கொண்டிருந்தாள்; ஏனெனில் அவள் அதை நேசித்தாள். அது அவளுக்கு சொந்தமானதாக இருந்தது. அந்த குழந்தை இப்போது தன்னுடைய தாய் என்று சொல்லிக் கொள்பவளும், தன்னை பராமரிக்கிறவளும் ஆகியோர் ஒருத்திக்கு ஏற்றபடி மறுபடியும் தன்னை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன. முன்பு தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், தன் நிர்பாக்கியங்களை தனக்குள்ளேயே விழுங்கிக் கொள்ள அந்த குழந்தை பழக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் தனக்கு உதவி, தன்னைத் தேற்றக்கூடியவள் தன் தாய் தான் என்பதையே அது மறந்துவிட்டது. அந்தக் காட்சி மீண்டும் முழுமையான நிர்பாக்கிய நிலையில் இருக்கிற ஒரு மிகச்சிறிய குழந்தையைப் பற்றியதாக இருந்தது. அது தாயை அசட்டை செய்து, அழுது புலம்பியபடி வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தது. குழந்தையை அது நிர்பாக்கிய நிலையில் கண்ட தாய் மனம் நொந்தாள். தன் குழந்தை பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதைக் கண்டும், குழந்தை இன்னமும் தன்னிடம் வந்து, தன் கரங்களில் விழுந்து, தனக்கு அவளுடைய பாசம் தேவையாய் இருக்கிறது என்று காட்ட விரும்பாமல் இருப்பதைக் கண்டும், அவள் மனம் காயப்பட்டது. தன் குழந்தை நிர்பாக்கிய நிலையில் இருப்பதையும், அது தன்னில் நம்பிக்கை வைத்தால் அதற்காக எவ்வளவோ அதிகமாக செய்யக்கூடியவளாகிய தன்னை அலட்சியம் செய்வதையும் கண்டு, அவளுடைய இதயம் முற்றிலும் நொறுங்கிப் போனது! அந்தக் குழந்தை நான்தான்; இயேசுதான் தாய். நான் எதுவும் சாதிக்கவில்லை என்று நான் உணர்ந்ததால்தான். என் முதுகின் மீது இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு வேறெதுவும் செய்யாமல் இருப்பதாக நான் உணர்கிறேன். இதை மறப்பதற்காக நான் போய் படுத்துறங்க முடிவு செய்தேன். நான் இன்று பிற்பகலில் படுக்கைக்கு சென்று உறங்க முயன்றேன். நான் இயேசுவைப் பற்றி நினைத்தேன்; ஆனாலும் அவரை எதிர்கொள்ள இயலாத அளவுக்கு மிகவும் பரிதாப நிலையில் இருப்பதாக நான் உணர்ந்தேன். நேசமே, நான் உன்னை தேற்றுகிறவர்! உன் தலையை என்மீது சாய்த்துக்கொள், உன்னை வருடி சீராட்டவும், உன் வலியைத் தணிக்கவும் என்னை அனுமதி; என் வார்த்தைகளை உன் செவிகளில் முணுமுணுக்க என்னை அனுமதி; என் இருதயத்தினுள் உனக்கென்று ஓரிடம் வைத்திருக்கிறேன்; வேறு எங்கும் கொஞ்ச நேரம் கூட செலவிடாதே; இப்போது உன் இடத்திற்கு வா; குறிப்பு: இதை அவர் எவ்வளவு உருக்கமாகச் சொன்னார் என்றால், கடவுள் மட்டுமே இந்த முறையில் பேச முடியும். நான் தகுதியற்றவள்.... நான் உன்னை உயர்த்தி, அங்கே நான் உன்னை உள்ளே வைப்பேன்; ஜூலை 7, 1987 ஸ்விட்சர்லாந்து. வசுலா, நீ கடுமையான துன்ப சோதனைகளை எதிர்கொள்வாய், குறிப்பு: ஆண்டவர் என் அப்போஸ்தலப் பணிக்காக என்னை தயாரித்துக் கொண்டிருந்தார். என் பிரசன்னத்தை மறந்துவிடாதே; நான் உன் அருகில் இருக்கிறேன்; என் விண்ணகப் பணிகளில் விசுவாசம் கொள்வதும் என்னால் தரப்படுகிற ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது; என் பணிகள் உன் கண்களில், முற்றிலுமாக வழக்கத்திற்கு அப்பாற்பட்டவையாகத் தோன்றலாம்; ஆனால் நான் சர்வேசரன். என்னை நீ யாரோடு ஒப்பிடக்கூடும்? என் பணிகளை நீ எதனோடு ஒப்பிட முடியும்? வசுலா, என் குருத்துவ ஆத்துமங்களில் அநேகர் என் அடையாளங்களையும், என் பணிகளையும் மறுதலிக்கிறார்கள் என்பதையும், நான் என் வரப்பிரசாதங்களைத் தந்து உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்பதை உலகில் யாருக்கு நினைவுபடுத்துகிறேனோ, அவர்களை குருக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் காணும்போது, நான் துயரப்படுகிறேன்... அவர்கள் விரும்பாமலே என் சரீரத்தைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். போனோ! குறிப்பு: போனோ; கிரேக்க மொழியில் நான் வேதனைப்படுகிறேன் என்பது பொருள். அவர்கள் என் வேலைகளை மறுதலித்து, அதன் மூலம் செழிப்பான நிலங்களுக்குப் பதிலாக பாலைவனங்களை உருவாக்குகிறார்கள்! ஆண்டவரே, அவர்கள் உம் வேலைகளை மறுதலிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணங்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஞானமுறையில் இறந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தாங்களே பாலைவனங்களாக இருக்கிறார்கள்; அவர்கள் உருவாக்கிய அந்த மாபெரும் வனாந்தரத்தில் ஒரு மலரை அவர்கள் கண்டுபிடிக்கும்போது, அதை நோக்கி விரைந்தோடி, அதை மிதித்து நாசமாக்கி விடுகிறார்கள்; ஏன்? ஏனா? அது அவர்களுடைய வனாந்தரத்திற்குப் பொருந்தாத ஒன்றாக இருக்கிறது, தங்கள் பாலைவனம் வறண்டதாகவே இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்! அவர்களில் பரிசுத்தத்தனம் எதையும் நான் காணவில்லை, எனக்கு ஒப்புக்கொடுப்பதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது? எதுவுமில்லை; ஆண்டவரே, பாதுகாப்பு! உம் வார்த்தையைத் திரித்துக் கூறாமல் இருக்கும்படியான பாதுகாப்பு! இல்லை, அவர்கள் என்னைப் பாதுகாக்கவில்லை; என் தெய்வீகத்தை அவர்கள் மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் என் அளவற்ற செல்வத்தை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் என் சர்வ வல்லபத்தை மறுதலிக்கிறார்கள், அவர்கள் தங்களையே என்னோடு ஒப்பிடுகிறார்கள்; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? அவர்கள் நாத்திகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்னைக் கசையால் அடிப்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஞான செவிட்டுத் தனத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் என்னை ஆதரித்துக் காக்கவில்லை, அவர்கள் என்னைப் பரிகசித்து நகைக்கிறார்கள்; அவர்கள் தங்கள் பங்கிற்கு என் ஆட்டுக்குட்டிகளுக்கு உதவுவார்கள்; அவற்றிற்கு உணவளிப்பார்கள் என்பதற்காக, அவர்களது மறுதலிப்புகளையும் மீறி, நான் அவர்களுக்கு உதவ சித்தம் கொண்டிருக்கிறேன்; வசுலா, என்னை நேசி, என்னை ஒருபோதும் மறுதலியாமல் என்னைக் கனப்படுத்து; நான் ஒருபோதும் உம்மை மறுதலிக்க மாட்டேன்; நான் சாக வேண்டி இருந்தாலும், இவை உம் பணிகள் என்பதை நான் ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்! என் இனிய வெள்ளைப் போளமே, என் எஞ்சிய பகுதியே, என் நேசமே, என் விருப்பங்களின் மீது அக்கறை காட்டு; என் பீடமாய் இரு; நான் உன்னில் பணிபுரியும்படியாகவும், உன்னில் செயலாற்றும்படியாகவும், சிறியவளாகவே இரு; வா, நாம் ஜெபிப்போம், இரக்கத்தின் பிதாவே, உம் ஆடுகளை ஒன்றுபடுத்தும்; அவற்றை மறுபடியும் ஒன்று கூட்டும்; அவர்கள் தங்கள் வறட்சியை உணர்வார்களாக; அவர்களை மன்னியும்; அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீர் விரும்புகிறீரோ, அப்படி அவர்களை உருவாக்கி அருளும்; உம் வழிகளை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி அருளும்; உம்முடைய பரிசுத்த பெயருக்கு என்றென்றும் சதாகாலமும் சகல மகிமையும் உண்டாகக் கடவது, ஆமென்;. கடவுளுக்காக நான் துயரப்பட்டேன். அன்பே, உலகத்திற்காகவும் அது எப்படி ஆகிவிட்டது என்பது பற்றியும் துயரப்படு; என்னில் இளைப்பாறு; ஜூலை 8, 1987 ஆண்டவரே, நீர் இறந்து அடக்கம் செய்யப்பட்டபோது, உம் சரீரம் அணுக்களாக பிரிந்து, காற்றில் கரைந்து, மறைந்து போனது என்றும், அதனால்தான் அவர்களால் உம்மை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஒருமுறை ஒரு குரு என்னிடம் சொன்னார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அந்த குரு உம் உயிர்த்தெழுதலை மறுதலித்தார். வசுலா, அவர்கள் என் வார்த்தையைத் திரித்துக் கூறுகிறார்கள்; நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன், நான் அணுக்களாகப் பிரியவில்லை; என் சரீரம் உயிர்த்தெழுந்திருக்கிறது; ஆண்டவரே, நீர் என்னிடம் உருவகமாய் பேசிக் கொண்டிருக்கிறீரா? அல்லது நீர் உண்மையாகவே சரீரத்தில் உயிர்த்தெழுந்தீர் என்று சொல்கிறீரா? குழந்தாய், நான் உன்னிடம் உள்ளதை உள்ளபடி பேசியிருக்கிறேன்; என் சரீரம் உயிர்த்தெழுந்தது, மனித புத்தியை மகிழ்விக்கும்படி என் வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதை நிறுத்தும்படி அவர்களிடம் கூறு; நாம் சர்வ வல்லபர்; பிற்பாடு; ஆண்டவரே, உம் திட்டங்களை நான் தாமதப்படுத்தி விடுவேன் என்று பயப்படுகிறேன். செயலாற்றுபவர் நான்தான் என்றால், நீ எப்படி என்னைத் தாமதப்படுத்துவாய்? பாவங்களைக் கொண்டு தடை செய்து. அடிக்கடி மனஸ்தாபப்படும்படி நான் உன்னிடம் கேட்பேன்; உன் பாவங்களைச் சுட்டிக்காட்டுவேன்; நீ மாசற்றவளாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஜூலை 9, 1987 என் கடவுளா? நான்தான் வசுலா; உன்னிடமிருந்து மறைந்திருக்கிற ஏராளமான பரம ரகசியங்களை நான் கொண்டிருக்கிறேன்; உனக்கு நான் வெளிப்படுத்திய அந்த ஒரு சில பரம ரகசியங்கள் மனித கண்களால் காணப்பட்டு, அதனால் புரிந்து கொள்ளப்படாதிருக்கின்றன; ஒன்று, அவை ஒதுக்கி வைக்கப்படும், அல்லது அவற்றிற்கு தவறான விளக்கம் தரப்படும்; என் பணிகளை மனித பணிகளோடு ஒப்பிடுவது எப்படி சாத்தியம்? விண்ணகப் பணிகளோடு விஞ்ஞானம் ஒப்பிடப்பட முடியாது; அது நீ என்னை மனிதர்களோடு ஒப்பிட விரும்புவதற்கு ஒப்பானது; உண்மைதான், என் பணிகள் வழக்கத்திற்கு மாறுபட்டவையாக உனக்குத் தோன்றலாம்; என் சொந்தக் குருத்துவ ஆன்மாக்கள் என் பணிகளில் சந்தேகம் கொண்டு, விசுவசிக்க மறுத்து, அதன் மூலம் என்னைப் பரப்புவதற்குப் பதிலாக என்னை விலக்கி வைப்பது என்னை அதிகமாகத் துயரப்படுத்துகிறது; என் படைப்பு ஒரு பாலைவனமாக, வறண்டதாக, செழிப்பற்றதாக, நேசத்திற்காகத் தாகங் கொண்டதாக மாறியுள்ளது; அவர்களிடம் என் ஆடுகளுக்குத் தர எதுவும் இல்லாதபோது, என் ஆடுகள் எதைக் கொண்டு பசியாறும்? ஜூலை 10, 1987 என் மலரே, என் சரீரத்தில் இணைந்துகொள்; இந்த வனாந்தரத்தில் வசிப்பது கடினமானது; ஆனாலும் நான் என் நீரூற்றுக்கு உன்னை எப்போதும் நடத்தி வருவேன்; அங்கே நான் உன் தாகத்தைத் தணித்து, உனக்கு இளைப்பாற்றியும் வசிப்பிடமும் தருவேன்; மகளே, என் பலியாய் இரு; எதுவும் வீணாய் போகாது; என்னைப் பற்றி பிடித்துக்கொள்; நீ தனியாக இல்லை; நாம் ஒன்றாகவே இந்த வனாந்தரத்தை கடந்து செல்கிறோம்; "உன்னை நேசிப்பதைப் போல, உன் அயலானையும் நேசி" என்ற என் தனிப்பட்ட கட்டளையை உன்மீது பதிக்க என்னை அனுமதி; ஆனால் ஆண்டவரே, இது புதிதல்ல; இது நீர் முன்பே சொல்லியிருக்கிறீர். அதை நீ அனுசரிக்கிறாயா? திருச்சபையை சார்ந்த ஒவ்வொரு ஆத்துமமும் என் கட்டளைக்குக் கீழ்படிய இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது; அவர்கள் என் அளவற்ற நேசத்திடமிருந்து முகந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நேசிக்க கற்றுக்கொள்வார்களாக; வசுலா, என்னை உணர்ந்து பார்; என் சரீரத்தின் எல்லாப் பகுதிகளும் கிழிக்கப்பட்டுள்ளன; என் ஆசைகளை எல்லாம் நீ எழுதுவதற்கு நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை; இன்னும் பெரிதான ஓர் ஆசை என்னிடம் இருக்கிறது; வசுலா, நீ அதை உணரத் தொடங்குகிறாய்; ஏனெனில் நான் விரும்புவதை உணர்வதற்கு நான் உனக்கு ஞான வெளிச்சம் தந்து கொண்டிருக்கிறேன்; நான் என் சிருஷ்டிப்பை எல்லையற்ற விதமாக நேசிக்கிறேன்; என் சர்வேசரா, நீர் ஆசிப்பது இதுதான் என்றால், அப்போது உண்மையாகவே பூலோகத்தில் உள்ள உம் ராஜ்ஜியம், பரலோகத்தில் உள்ள உம் ராஜ்ஜியத்தைப் போலவே இருக்கும்; சிறிது சிறிதாக நீ புரிந்து கொள்வாய்; இயேசுவா, நான் ஆதரவற்றவளாக உணர்ந்தேன்; நான் அவரிடம் ஒரு காரியத்தை கூறினேன். எனக்கு தெரியும், ஆனாலும் நான் இதுவரை உன்னை வழிநடத்தி வரவில்லையா? காட்சிகளை நான் உனக்கு தருவேன்; நீ அவற்றை எழுதி வைப்பாய்; துன்பப்படுகிற உன் கடவுளோடு இரு; படைப்பே, என் படைப்பே, உன் கடவுள் என்ற முறையில் இன்று நீ என்னை மறுதலிக்கிறாய்; ஆனால் நாளைக்கு நீ என்னை போற்றி, துதித்து, என்னை ஆராதித்து, என்னை ஆசித்து தேடுவாய்; வா, வசுலா, நான் யார் என்பதை ஒருபோதும் மறக்காதே; என்னைப் பற்றிக்கொள்; என்னை கூப்பிடு; குறிப்பு: இது நேற்றிரவு நடந்தது; எங்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 10 மணிக்கு வீடுகளுக்கு செல்லும் முக்கிய நுழைவாயிலை வாயிற்காப்பவர் பூட்டு போட்டு பூட்டிவிடுவார்; நாங்கள் எங்கள் சாவியை எங்கள் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு போயிருந்தோம்; திரும்பி வந்தபோது கதவு மூடியிருப்பதைக் கண்டு, ஓ கடவுளே, கதவு மூடியிருக்கிறது என்று சொல்லிவிடாதீர்; தயவுசெய்து அது திறந்திருக்கச் செய்யும் என்று வேண்டியபடி கதவை நெருங்கிச் சென்றோம்; அது பூட்டியிருந்தது; ஆனால் சரியாக அதே நேரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து கதவைத் திறந்தார்கள்; நான் உன்னிடம் விரைந்து வருவேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை ஆசிப்பதன் மூலமும், என்னை நேசிப்பதன் மூலமும் என்னைக் கனப்படுத்து; இத்தகைய சூழ்நிலைகளில் உங்களில் பெரும்பாலானோர் என்னை மறந்துவிட்டு, இது வெறும் அதிர்ஷ்டமே என்கிறார்கள்; என் அகராதியில் அதிர்ஷ்டம் என்ற வார்த்தையே இல்லை; படைப்பே, உனக்கு உதவுபவர் நான்தான்; ஜூலை 11, 1987 மனஸ்தாபப்படு! என் தேவனே, என்னை பராமரித்து வருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்; நான் மனஸ்தாபப்பட்டேன். நேசமே, சகலமும் மன்னிக்கப்படுகின்றன; ஏனெனில் இதுவே என் இரக்கமாக உள்ளது; அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன் கவனித்துப் பார்க்க நான் உனக்கு கற்றுத் தருவேன்; விழிப்பாய் இரு; எல்லாவற்றுக்கும் மேல் என்னை ஆதரி; மலரே, உன் முகத்தை என் ஒளியினின்று திருப்பிக் கொள்ளாதே; என்னைப் பார்; என்னை எதிர்கொள்; செழித்து வளர்; நான் பலவீனமானவள்; சில சமயங்களில் உம் சிலுவையை சுமப்பதை கடினமானதாக நான் உணர்கிறேன்; என் மீதமே, என்னோடு ஒன்றித்து ஒன்றாய் இரு; ஒன்றாக, ஒன்றாக இணைந்து நாம் என் திருச்சபையை மீண்டும் ஸ்தாபிப்போம்; ஜூலை 12, 1987 வசூலா, நீ உணர்ந்து கொள்ளும்போது நான் அக்களிக்கிறேன்; சில சமயங்களில் நான் நிஜமாகவே கடவுளோடு இருக்கிறேன் என்றும், அவர் என்னோடு இம்முறையில் தொடர்பு கொள்கிறார் என்றும் நான் முழுமையாக உணர்கிறேன்; இதனால் என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது; அது அலைகளாக வருகிறது; பெரும்பாலான நேரங்களில் நான் அதை உணர்கிறேன்; ஆனால் உண்மையில் முழுமையாக உணரவில்லை; ஆண்டவரே, இதை நீர் அறிவீரா? அறிவேன்; நான் மிக நன்றாக அறிவேன்; வசூலா, உனக்கு யுவானை நினைவு இருக்கிறதா? நாம் அவனை என்னோடு இணைப்போம். என் தேவனே! இதோ இருக்கிறேன்; நீர் யுவானை பற்றி நிறைய சிந்திக்கிறீர்; அவன் என் நேசத்திற்குரிய ஆத்மம்; நான் அவனை நேசிக்கிறேன்; அவன் என் அருகில் இருக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; அவனை வழிநடத்தவும், அவனை என் மாபெரும் ஊழியனாக்கவும் நான் விரும்புகிறேன்; வசுலா, எவ்வளவோ தலைசிறந்த காரியங்களை அவன் எனக்காக செய்ய முடியும்; ஆனால் ஆண்டவரே, அது சாத்தியமே இல்லை; குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அவன் உம்மை விசுவசிக்கவே இல்லை; மேலும் அவனுக்கு வாழ்வில் வேறு வேலைகள் இருக்கின்றன; குழந்தாய், உன்னை வழிநடத்துபவர் யார் என்பதை நீ உணர்கிறாயா? ஆம், என் தேவனே. நான் ஆல்பா வும் ஒமேகாவுமாக, தொடக்கமும் முடிவுமாக அனைத்தையும் படைத்தவராக இருக்கிறேன்; அவன் பல வருடங்களாக என்னை தேடிக் கொண்டிருக்கிறான் என்பதை நீ உணர்கிறாயா? தேடிக் கொண்டிருக்கிறானா? அவன் விசுவசிக்கவில்லை என்று நான் நினைத்தேன்; அவன் எப்போதுமே விசுவசித்து வந்திருக்கிறான்; அவன் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறான்; அவ்வளவுதான்; நான் அவனை நேசிக்கிறேன்; என்னை கண்டுபிடிக்கும்படி நான் அவனை வழிநடத்துவேன்; நானே நேசம்; அவன் நேசத்திடம் வருவான்; நான் என் நேசத்தைக் கொண்டு அவனை நிரப்புவேன்; என் எல்லா ஆசீர்வாதங்களும் அவனை முந்தின நிலைக்கு கொண்டுவரும்; நேசமே, இப்போது நீ இளைப்பாற வேண்டும்; ஆண்டவரே, நான் எழுதும்போது முழந்தாளிட்டு இருக்க வேண்டும் என்று நீர் இன்னமும் எப்போதும் விரும்புகிறீரா? விரும்புகிறேன்; என் பிரசன்னத்தை மகிமைப்படுத்து; சரி, ஆண்டவரே. ஜூலை 13, 1987 வசுலா, என் பணிப்பெண்ணாக இருப்பதற்கு நான் உனக்கு கற்பித்தபடி நீ என்னை நேசிக்க வேண்டும்; உயிரோடு, இறுதியாக, உயிரோடு; நான் உன்னை மரித்தோரிடமிருந்து எழுப்பிவிட்டேன்! மற்றவர்களின் நிலை என்ன? படைப்பே, மற்றவர்கள் இன்னும் உயிர்த்தெழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள்; என் நேசத்தின் பனித்துளி அவர்கள் மீது விழும்; என் ஒளி அவர்களை மூடிக்கொள்ளும்; அவர்கள் உயிர் பெறுவார்கள்; படைப்பே, நான் உன்னை உயிர்ப்பிப்பேன்; உன்னை உயிர்ப்பிப்பது உன் மகிமைக்காக அல்ல; என் மகிமைக்காகவே நான் உன்னை உயிர்ப்பித்தேன்; ஆம், ஆண்டவரே. சிறியவளே, என்னை அப்பா என்று கூப்பிடு; ஆம், எனக்கு நெருக்கமாக இரு; நான் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன். ஜூலை 18, 1987 எழுதுவதற்கு உடல் தகுதி உள்ளவளாக நான் உணரவில்லை; ஸ்விட்சர்லாந்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து நான் நல்ல உடல்நிலையில் இல்லை; முதலில் ப்ளூ காய்ச்சல்; அதன்பின் வாயில் நோய் தொற்று; என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை; அதன்பின் என் விழாவில் குத்தித் துளைக்கும் ஒரு வலி; இது என்னை ஐந்து இரவுகளாக உறங்க விடாமல் செய்துவிட்டது; இன்னும் இந்த வலி இருக்கிறது; உடல் முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பாதிப்பு; அத்துடன் உதட்டில் புண். வா, இவை எல்லாமே என்னிடமிருந்தே வருகிறது என்று நான் உனக்கு சொல்லவிடு; இவை என் சுத்திகரிப்புகளாக இருக்கின்றன; மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; நான் எப்படி பணிபுரிகிறேன் என்பதை கற்றுக்கொள்; நீ துன்புற வேண்டி இருந்தாலும் நான் உன்னை தாங்குவேன்; நான் உன்மீது அக்கறை கொள்கிறேன்; உன் ஆன்மாவின் மீது எந்த கரையையும் நான் அனுமதிக்க மாட்டேன்; நான் எப்படி பணிபுரிகிறேன் என்பதை புரிந்துகொள்; ஆனால் என்னை உணரு; நீ என்னிடம் பேசுவதை நான் கேட்க வேண்டும்; என்னை நினைவில் வை; எனக்கு முன்பாக எதுவும் வருவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்; நானே முதலானவர்; உன் ஆத்துமத்தை பளபளப் பாக்குவது அதை பொன்னைப் போலப் பிரகாசிக்கச் செய்யும்; இப்போது நான் ஏன் உன்னை தேர்ந்து கொண்டேன் என்பதை உனக்கு நினைவுபடுத்துவேன்; உன் வாக்குக்கெட்டாத இழிந்த தன்மை மற்றும் பலவீனத்தின் காரணமாகத்தான் நான் உன்னை தேர்ந்து கொண்டேன்; நான் இரக்கத்தின் கடவுளாக இருக்கிறேன்; இப்போது நீ வேலை செய்யலாம்; ஆனால் என்னை எப்போதும் மனதில் கொண்டிரு; நான் என் பார்வையிலிருந்து உன்னை ஒருபோதும் விளக்குவதில்லை; நான் உன்னிடம் பேசும்போது என் உதடுகளை கவனி; வா, நான் உன்னை நேசிக்கிறேன்; எழுந்திரு; எனக்கு எதிரிலேயே இரு; இப்போது நீ பேசுவதை நான் கேட்கட்டும்; கடவுளே, சிறிது காலமாக நான் அலட்சியம் செய்தது உண்மை; நாடு கடந்து செல்வது தொடர்பான வேலைகள் என்னை ஆக்கிரமித்திருந்தன; இன்னும் கொஞ்ச காலம் நான் உன்னை பயன்படுத்த என்னை அனுமதி; சரி ஆண்டவரே. என் ஆசீர்வாதங்களைக் கொண்டிரு; நான் உம்மை வாழ்த்துகிறேன், ஆண்டவரே.