இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 39. ஜூன் 19, 1987. வசுலா, செயல்கள், நான் செயல்களைக் காண விரும்புகிறேன்; உன் நேச வார்த்தைகளைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவை என் காயங்களுக்கு தைலமாய் இருக்கின்றன, ஆனால் உன்னிடமிருந்து செயல்களைக் காண்பதில் நான் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியடைவேன்! வா; பூலோகத்தில் நான் உடலோடு இருந்தபோது, எப்படி பணிபுரிந்தேன் என்பதையும், அதே விதத்தில் பணிபுரியும்படி என் சீடர்களுக்கு நான் எப்படி கற்பித்தேன் என்பதையும் உனக்கு நான் நினைவுபடுத்துவேன்; பாத் ரே பியோ உம்மைப் போலவே பணிபுரிந்தார். அவர் என்னைப் போல் அல்ல, மாறாக எனக்காக பணிபுரிந்தார்; என்னைக் கனப்படுத்தவும், என் திருப்பெயரைப் பரப்பவும், அந்த எல்லா வரப்பிரசாதங்களையும் நான் அவருக்கு வழங்கினேன்; என் திருப்பெயரால் பணியாற்றுவது என்னை மகிமைப்படுத்துகிறது, உன்னைச் சுத்திகரிக்கிறது; நான் எல்லோர் மீதும் ஒளிவீசுகிறேன் என்பதை நினைவில் வை; என்னைப் போன்ற ஆட்கள் மீதுமா? ஆம், உன்னுடையதைப் போன்ற ஆத்துமங்களின் மீதும் தான்; ஜூன் 20,1987 தாய்லாந்து. உன் ஒளியை ஏற்றுக் கொள்வதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன்; புனித மாமரி பேசுகிறார். நேசத்தைக் கொண்டு எங்களை அலங்கரி, எங்கள் சமாதானத்தைக் கொண்டிரு; மிகுந்த நேசத்தோடு புனித மாமரி இந்த வார்த்தைகளைக் கூறினார்கள். நான் சிலுவைப் பாதை ஜெபிப்பதற்கு முன், புனித மாமரிக்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்திருந்தேன். ஜூன் 21, 1987 ஆண்டவரே, ஏன் அதிகமான மனிதர்கள் உம்மை மறந்துவிட்டார்கள்? ஓ வசுலா! என் சரீரம் முடக்கப்படும் அளவுக்கு காயப்படுத்தப்படுகிறது; வசுலா, என் சிலுவைப் பாதை ஸ்தலங்கள் ஒவ்வொன்றிலும் முழந்தாளிட்டு, ஒளியேற்று; நான் மௌனமாகவே இருக்கிறேன்... வசுலா, நான் பேசிவிட்டேன், ஆண்டவரே, என்னால் என்ன செய்ய முடியும்?

ஒன்றும் செய்ய வேண்டாம்; என்னை எல்லாவற்றையும் செய்யவிடு; ஆம், யாருக்கும் அது தெரியாது என்பதால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள்! விசுவாசத்தைக் கொண்டிருப்பதும் என்னால் தரப்படுகிற ஒரு வரப்பிரசாதம் தான், வசுலா, என்னில் விசுவாசம் கொண்டிரு! பிற்பாடு, இப்போது நீர் என்னை வசீகரித்திருப்பதால் எனக்கு என்ன ஆகும்? நீ அதை அறிந்து கொள்ள விரும்புகிறாயா? முன்பு என் படைப்பாக இருந்து, இப்போது வனாந்தரமாகியுள்ள இந்தப் பரதேசத்திற்குள் என் கரங்களிலிருந்து உன்னை நான் வீசியெறியப் போகிறேன்! நீ அவர்கள் மத்தியில் வாழ்வாய்! என் தேவனே! நீர் என்னை நேசிக்க மாட்டீரா? நான் முற்றிலும் வேதனைக்குள்ளானேன். உம் கரங்களில் இருந்தது அற்புதமானதாக இருந்தது. இப்போது நான் விலகிவிட வேண்டும் என்று விரும்புகிறீர்! ஓ வசுலா, நீ எப்படி இவ்வாறு சொல்லலாம்! குறிப்பு: நான் அவரில் வேதனையின் கடும் தாக்குதலை உணர்ந்தேன். எல்லாத் தீமைக்கும் மத்தியில் உன்னைக் காண்பதில் என் இருதயம் கிழிந்து புண்ணாகிறது; குழந்தாய், கடவுளற்ற மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும்படி நான் உன்னைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்; வெளியே, இந்தப் பரதேசத்தில் உன்னை விட்டு வைத்திருப்பதில் நான் துன்பப்படுகிறேன்; மகளே, அநேகர் உன்னைக் காயப்படுத்த முயற்சிப்பார்கள். இப்போது உன் துன்பங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியும், குறிப்பு: பிரிவுபட்டு; என் ஆன்மா அவரது இருதயத்திலும், என் உடல் உலகத்திலும் இருக்கின்றன. ஆனால் நான் தாங்கிக் கொள்ள மாட்டேன், இல்லை, அவர்கள் உன்னைக் காயப்படுத்துவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்; ஆண்டவரே, நீர் என்ன செய்வீர்? நான் வெறுமனே உன் அருகில் நின்று கொண்டிருக்க மாட்டேன்; நீர் ஏன் என்னை அணைத்து சீராட்டி, என்னை மயக்கி ஈர்த்துவிட்டு, பின் ஏன் என்னைத் தூக்கி எறிகிறீர்? இது ஏறக்குறைய நியாயமில்லாததாக இருக்கிறதே! நான் ஏறக்குறைய கதறிக் கொண்டிருந்தேன். நீ என் பலியாக இருப்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா? நான் உன்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்; நீ என் வலையாக இருக்கிறாய்; ஆம், நான் உன்னை உலகத்தின் மீது வீசியெறிகிறேன்; நீ எனக்கு ஆன்மாக்களை காணிக்கையாகத் தர வேண்டும்; அவர்களது மீட்பிற்காக, நான் அவர்களை மீட்டு இரட்சிப்பேன்; இது நீ துன்பப்படாமல் நடக்காது; பசாசு உன்னை வெறுக்கிறது, அது உன்னை சுட்டெரிக்கவும் தயங்காது, ஆனாலும், அது உன்மீது கை வைக்காது; நான் அதை அனுமதிக்க மாட்டேன்; அன்றொரு நாளில், படகின் சூடான புகை வெளியேற்றும் குழாயை நான் தொட்டதை இது எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் என் இடது கையை முழு அழுத்தத்தோடு அந்தக் குழாயின் மீது ஊற்றினேன். அதுவோ ஒரு முட்டையை பொரிக்கும் அளவுக்கு சூடாக இருந்தது. வேதனையால் நான் கிட்டத்தட்ட மயக்கமானேன். என் இடது உள்ளங்கை முழுவதும் பொசுங்கிவிட்டது. வலி நிவாரணத்திற்காக அதைக் கடல் தண்ணீரில் அமிழ்த்த வேண்டும் என்ற துடிப்பு அதிகமாய் இருந்தது. ஆனாலும், தீப்பட்ட தசையை குளிர்ந்த நீரில் ஒருபோதும் வைக்கக்கூடாது. அது அந்த இடத்தை புண்ணாக்கிவிடும் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். பத்து நிமிடங்களாக என் கரம் இன்னும் சூடாகவும், சிவந்தும், வீங்கியும் இருந்தது. அரை மணி நேரத்திற்கு பிறகு எல்லாம் போய்விட்டது. வலி இல்லை, தீக்காயங்கள் இல்லை. என் வலது கரத்தைப் போலவே இடது கரமும் மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருந்தது. குழந்தாய், நீ காயப்படுத்தப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; நான் உன்னை நேசிக்கிறேன், இந்த நேசத்தினால், உனக்கான என் சுத்திகரங்களை நான் தேர்ந்தெடுப்பேன்; உன்மீது எந்தக் கறையும் இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன், நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்; குறிப்பு: சாத்தானால் விரும்பப்படும் எந்தத் துன்பமும் நிறைவேறாது, ஆனால் கடவுளிடமிருந்து வரும் துன்பங்கள் நிறைவேறும் என்பது இதன் அர்த்தம். இதனால் ஆத்துமம் சுத்திகரிக்கப்படுகிறது. ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் எதையும் நான் நேசிப்பேன், அது இன்பங்கள் ஆனாலும் சரி, துன்பங்கள் ஆனாலும் சரி. நேசமே, ஆம், உன் இதயத்தில் எனக்கென்று ஒரு மோட்சத்தை உருவாக்கு; குழந்தாய், இதை உன்னிடமிருந்து கேட்பதில் நான் எவ்வளவு மகிழ்கிறேன்! குறிப்பு: நான் படவேண்டிய துன்பங்களை ஆண்டவர் தாமே தேர்ந்தெடுப்பார். ஆம், உன் சொந்த சித்தம் தேர்ந்தெடுக்கிற எந்தத் துன்பமும் அது என்னை மகிழ்விக்கும் என்று நீ நினைத்தால், அது என் கண்களில் ஒரு பயங்கரமாக இருக்கும். நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டு மட்டும் இருப்பாய்; அது பசாசுக்காகத்தான், எனக்காக அல்ல; இதற்கான பரிகாரங்களை நான் சொல்லித் தருவேன்; நான் உம்மை நேசிக்கிறேன், உம் மீது முழுவதும் சார்ந்திருக்கிறேன். ஆம், என்னை நேசிப்பதன் மூலம், நீ என்னை மகிமைப்படுத்துகிறாய்; "அந்தத் தருணங்கள் எனக்கு மரண வேதனையாக இருக்கின்றன" என்று சாத்தான் சொல்வதை நான் கேட்டேன். என் மீது கடவுள் கொண்டுள்ள சிநேகத்திலும், அவர் மீது நான் கொண்டுள்ள சிநேகத்திலும் என் இதயம் களிகூர்வதையும். எங்கள் பரஸ்பர சிநேகத்தையும் சாத்தானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது சிவந்து கனன்று கொண்டிருக்கும் சிலுவையைக் கொண்டு அவன் உடம்பு முழுவதும் சூடு வைப்பது போன்றது; ஜூன் 23, 1987 இயேசுவே, தொடக்கத்திலிருந்து நீரே என் போதகராக இருந்து வருகிறீர், ஆனாலும், அவர்கள் சொல்வது போல, என்னை ஓரளவுக்கு வழிநடத்த ஓர் ஆன்ம இயக்குனரைப் போன்ற யாரையேனும் நான் வைத்துக் கொள்ளலாமா? இதுவரை அப்படிப்பட்ட யாரையும் நான் கொண்டிருக்கவில்லை. நான் அணுகியவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை, அல்லது நேரமில்லாமல் இருந்தார்கள், அல்லது திகிலடைந்திருந்தார்கள். யாரும் என்னிடம்: "என் குழந்தாய், இதைச் செய்" அல்லது "அதைச் செய்" என்று ஒரு மென்மையான முறையில் சொல்லவில்லை. இதை கண்காணிக்கவும் இல்லை. உறுதியான முறையில் ஒரு உத்தரவைத் தந்த ஒரே ஒருவரும் கூட, "இதை நிறுத்திவிடு, இது கடவுளிடமிருந்து வரவில்லை, ஆகவே எழுதுவதை நிறுத்திவிடு, குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது இதை நிறுத்திவிட்டு, என்ன நடக்கிறது என்று பார்" என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னதைக் கேட்டு, எழுதுவதை நிறுத்தினேன். ஆயினும், நான் என் சொந்த குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தபோது, "கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன், இதை ஒருபோதும் மறக்காதே" என உம் கரம் எப்படியோ எழுதிவிட்டது. நீர் என் கரத்தை முழுவதும் உமதாக்கிக் கொண்டீர். அதன்பின் மீண்டும் ஒரு சில நிமிடங்களில், "கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை ஒருபோதும், ஒரு நாளும் மறக்காதே" என்று நீர் எழுதினீர். என்னை நேசித்த ஒருவர் சிறையில் வந்து என்னைச் சந்தித்தது போல நான் உணர்ந்தேன், ஒரு எதிர்பாராத சந்திப்பு. அது அற்புதமானதாக இருந்தது! என் குழந்தாய், உன் ஆன்ம இயக்குனராக என்னை இருக்க விடு; நான் உன்னைப் போதுமான அளவுக்கு மகிழ்விப்பவராக இல்லையா? நானே உன்னில் குறைவுபடும் எல்லாமுமாக இருக்கிறேன்; வசுலா, என் ஸ்தலங்களில் ஒளியேற்றி, அவை ஒவ்வொன்றிலும் முழந்தாளிட்டு என்னை மகிமைப்படுத்தி, கௌரவிப்பதன் மூலம் என்னை மகிழ்விப்பாய்; நான் இன்னும் அதிகமான என் போதனைகளை சரியான நேரத்தில் உனக்குத் தருவேன்; இயேசுவே, டேவிட்டைச் சந்திக்க என்னை அனுமதித்ததற்காக உமக்கு நன்றி. என் குழந்தாய், என்னைப் பற்றி அவனிடம் விவரித்துச் சொல்லி, அவனிடம் நான் அவனைப் பயன்படுத்த அனுமதிப்பானா என்று கேள்; ஆண்டவரே, நீர் ஏற்கனவே இதைக் கேட்டுவிட்டீர் அல்லவா? நீர் என்ன சொல்ல வருகிறீர்? அவன் எனக்காக வேலை செய்ய சித்தமாய் இருப்பானா என்று இதன் மூலம் நான் சொல்ல வருகிறேன்; என் சிலுவை பாரமாய் இருக்கிறது. சற்று நேரத்திற்கு என் பாரத்திலிருந்து என்னை விடுவிப்பாயா? சரி, ஆண்டவரே. இன்னும் நெருங்கி வா; ஜூன் 26, 1987 பாங்காக். காலை 7:30 மணிக்கு, நிறமுள்ள ஒரு மேகத்தைக் கண்டேன். அது வெகு அழகாய் இருந்தது. அதன்பின் ஐந்து ஒளிக்கற்றைகள் ஒரு நட்சத்திரத்தைப் போல வெளிவந்தன. "பாருங்கள்!" என்று நான் சொன்னேன். ஒரு கரம் பின்னால் இருந்து என்னை முன்னோக்கி தள்ளியது. அதன்பின் மற்றொரு மாற்றம் வந்தது. அந்த ஒளிக்கற்றைகளில் ஒன்றின் மீது ஒரு மெழுகுவர்த்தி தோன்றியது. நான் மறுபடியும் "பாருங்கள்!" என்றேன். எனக்குப் பின்னாலிருந்த கரம் என்னை முழங்கால்களில் விழச் செய்தது. இந்த நிகழ்வின் ஒரு கணத்தை கூட நான் இழக்க விரும்பவில்லை என்பதால், எனக்கு இதை செய்து கொண்டிருந்தவர் யார் என்பது பற்றி நான் அவ்வளவாக கவனமின்றி இருந்தேன். அந்த ஐந்து ஒளிக்கதிர்களும் வேகமாகச் சுற்றித் திரும்புவதன் மூலம் ஒருவிதமான ஒளி வளையத்தை உண்டாக்கின. அந்த ஒளி வளையத்தின் நடுவிலிருந்து இயேசு திடீரென தோன்றினார். "பாருங்கள்" என்று நான் சொன்னேன். மீண்டும் என் பின்னால் இருந்த கரம் என்னை தள்ளியது. இப்போது நான் என் கரங்களை தரை மீது ஊன்றினேன். திடீரென நூற்றுக்கணக்கான குரல்கள் இயேசுவை ஆராதித்துக் கொண்டிருந்தன. அவர்கள் முழு நேரமும் "இயேசு" என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன்பின் இயேசுவின் தோற்றம் மறைய, அவருக்கு பதிலாக மற்றொரு காட்சி தோன்றியது. நான் மறுபடியும் "பாருங்கள்" என்றேன். அந்த கரம் என்னை தரையில் சாஷ்டாங்கமாக விழச் செய்தது. என் தலை மட்டும் அந்தக் கடைசி காட்சியைக் காணும்படி உயர்ந்திருந்தது. ஐந்து பேர் சூழ முழந்தாளிட்டு இருந்த ஒருவரை நான் கண்டேன்; இந்தக் காட்சிக்கு முன்புறம் ஒரு மிகப் பிரகாசமான வெள்ளிக்கிண்ணம் இருந்தது. அந்த ஐவரும் தங்கள் மத்தியில் முழந்தாளிட்டு இருந்த ஒருவருக்கு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். "அபிஷேகம் செய்யப்படுதல்" என்ற வார்த்தைகள் எனக்குக் கேட்டன. அதன்பின் எல்லாமும் அப்படியே மறைந்து போயின. என் தேவனே, நீர் எனக்குக் காட்டிய கனவை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஞானம் உனக்குக் கற்பிக்கும்; ஜூன் 27, 1987 ஆக, எனக்கு இப்போது புரிகிறது; நான் பிளவுபட்டிருக்கிறேன்; என் ஆன்மாவைத் தன்னில் கொண்டிராமல் என் சரீரம் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. என் தேவனே, நீர் என் ஆன்மாவை எடுத்துக் கொண்டீர். நான் ஒரு பிணத்தைப் போல் உணர்கிறேன்! முழுமையாக பற்றறுக்கப்பட்டவளாக. யாராவது இதை அனுபவித்திருக்கிறார்களா? விழித்திருக்கும் போதெல்லாம் கடவுளைப் பற்றி நினைப்பதையும், அவரை மட்டுமே உணர்வதையும்? ஒரு ஆண்டிற்கு மேலாக தினமும் ஒரு நாளில் 24 மணி நேரமும் கடவுளைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்த அனுபவம் யாருக்காவது இருந்திருக்கிறதா? என் மனம் இதை மறக்கத் தொடங்கும் நிமிடத்தில், ஒரு கரம் என் முகவாயைப் பிடித்து என் தலையைத் திருப்பி, இயேசுவின் புன்னகைக்கிற முகத்தை பார்க்கச் செய்கிறது. மற்ற காரியங்களையும் எப்படி என்னால் கையாள முடிகிறது என்று நான் என்னையே வியந்து கொள்கிறேன்! வசுலா, நான் இப்போது உன் இருதயத்தை எடுத்து என் இருதயத்தில் வைத்திருக்கிறேன்; குறிப்பு: என் இருதயம் ஒன்றுமே இல்லை என்பது போல மிகச் சாதாரணமாக இது சொல்லப்பட்டது.... நான் யாவே, நான் உன்னை நேசிக்கிறேன்! என் நேசத்தை தொட்டிலிட்டுத் தாலாட்டு; படைப்பே, உன்னைப் படைத்தவரின் அருளில் தங்கியிரு; எப்படி, எப்படி உம் அருளில் நான் தங்கியிருக்க முடியும்? நீ பரிசுத்தமாய் இருக்க வேண்டும்; நான் எப்படி பரிசுத்தமாய் இருக்க முடியும்? என்னைப் பக்திப் பற்றுதலோடு நேசிப்பதன் மூலம்; அப்படியானால், அதுவே உம் சித்தமானால், அப்படி இருக்க எனக்கு உதவும். நான் உனக்கு உதவுவேன், என் ஆசீர்வாதங்களைக் கொண்டிரு; நான் உனக்குத் தீங்கிழைக்கக்கூடிய எதையும் உன்னிடம் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்பதை எப்போதும் நினைவில் கொள்; வா, நான் என் ஆழமான, அதிக அன்யோனியமான ஆசைகளை வெளிப்படுத்துவேன்; சிறியவளே, உன்மீது அவற்றைச் செதுக்க என்னை அனுமதி; ஜூன் 30, 1987 டாக்கா. எழுதும்படி இயேசு என்னை வற்புறுத்திக் கொண்டிருந்ததால் நான் விரைந்தேன். நான் உன்னை அழைத்தேன்! இயேசு மகிழ்ச்சியாய் இருப்பதை நான் உணர்ந்தேன். அதைக் கண்டேன். ஆம், நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன், மகிழ்ச்சியாக உணர்கிறேன்! வா, நாம் பணியாற்றுவோம், நான் என் ஆசைகளை திரும்பக் கூறுவேன்; வசுலா, என் செயல்களைக் காட்டப் பயப்படாதே; ஆண்டவரே, உணர்ச்சி வேகத்தோடு செயல்படுகிற நம்முடைய நல்ல சிநேகிதி மார்த்தாவைப் பற்றி நான் நினைவூட்டுகிறேன். நானும் இப்போது அவளைப் போல பொறுமையற்றவளாக இருக்கிறேன். காரியங்கள் எல்லாம் வேகமாக நடைபெற வேண்டுமென விரும்புகிறேன். நாளைக்கு, இன்றைக்கு, இப்போதே கூடுமானால், உம் ஆசைகள் எல்லாமும் நிறைவேறிவிட வேண்டுமென விரும்புகிறேன்! இப்போதே முட்கள் பிடுங்கி எறியப்படவும், உம் இருதயத்திலிருந்து ஈட்டி உருவப்படவும், நீர் ஆசிக்கிற எல்லாமும் நிறைவேறிவிடவும் வேண்டுமென்று விரும்புகிறேன்! வசுலா,அவசரப்படாதே; அவருடைய திருக்கரம் என் தலையை வருடி சீராட்டுவதை நான் உணர்ந்தேன். என் ஆசைகளை மறுபடியும் கேள், நான் என் வழிகளை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன், அவர்கள் ஒருவருக்கொருவர் நஞ்சுள்ள அம்புகளை ஒருவர் மீது ஒருவர் எய்வதை நிறுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன், வசுலா, நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தேனா? இயேசு இந்த கேள்வியால் என்னை வியப்புக்குள்ளாக்கினார். அவருடைய குரலின் தொனி வித்தியாசமாய் இருந்தது. நல்லது, நீர் ஒரு அரசியல்வாதி அல்ல என்பதை நான் கூட அறிந்திருக்கிறேன்... மிகச் சரி, வசுலா, நான் ஒரு அரசியல்வாதி அல்ல; நான் யார் என்று நீ சொல்கிறாய்? இங்கே நீர் இவ்வுலகில் மனவுருவோடு இருந்த காலத்தைக் குறிப்பிடுகிறீரா, ஆண்டவரே? ஆம், கடவுளின் நேசகுமாரனாக இருந்தீர். ஆம், பார்த்தாயா, நீ கூட நான் ஒர் அரசியல்வாதி அல்ல என்று அறிந்திருக்கிறாய்; வசுலா, என்னை யோசிக்கவிடு; இயேசு தாம் வழக்கமாக இருக்கும் முறையில் ஒரு கரம் தமது வயிற்றிற்குக் குறுக்காகவும், மற்ற கரத்தின் முழங்கை இடுப்பின் மீதும், ஆள்காட்டி விரல் தமது கன்னத்தின் மீதும் இருக்க சிந்தித்துக் கொண்டிருந்தார். என் வழிகாட்டுதல் முழுவதிலும் என்னிடமிருந்து துர்க்குணத்தின் எந்தச் சுவடையாவது நீ எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? இல்லை ஆண்டவரே, எந்தச் சுவடும் இல்லை, ஒருபோதும் இல்லை. நல்லது; இது என்ன, ஆண்டவரே? வசுலா, நீ எப்படி உணர்ந்திருக்கிறாய்? இயேசு என் முந்தின கேள்வியை அலட்சியம் செய்துவிட்டார். நீர் என்னை மயக்கியதாகவும், நான் மிக அதிகமாக நேசிக்கப்படுவதாகவும், அனைத்து சீராட்டப்படுவதாகவும், மன்னிக்கப்படுவதாகவும் நான் உணர்ந்தேன். தொடர்ந்து சொல்; அது சமாதானமும் அற்புதமுமாய் இருக்கிறது. உம் நேசத்தால் நான் உயர்த்தப்படுவதாக உணர்ந்தேன்; உம்மோடும் எனக்கு மீண்டும் வழிகாட்டுகிற உம் நேசத்தோடும் இருந்த நேரத்தை விட வேறு ஒருபோதும் நான் அதிக மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை. நீர் எனக்கு நேசத்தை, பரிசுத்தத் தனத்தை, தாழ்ச்சியைக் கற்பித்தீர். ஆம், வசுலா, அரசியல் புரட்சியின் சுவடு எதுவும் அதில் இல்லை என்று நீ காண்கிறாய்; ஏதுமில்லை; இயேசு தமது வலக் கரத்தைக் கொண்டு, "எதுமில்லை" என்று சைகை காட்டினார், வலியுறுத்தினார். நான் இப்படித்தான் இருக்கிறேன், நான் நேசத்தின் முழுமையாக இருக்கிறேன், என் உண்மையான, உண்மையானவர்களாக இருக்க வேண்டிய, சீடர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; - நான் சொல்வதைக் கேள். நானே திருச்சபை; ஒருபோதும் இதை மறக்காதே; வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் பைத்தியமாகும் அளவுக்கு உம்மை நேசிக்கிறேன், இயேசுவே, இதை நீர் இப்போது அறிந்திருக்கிறீர். நேசமே, என் இதயம் தன் நேசத்தின் தீச்சுவாலையால் உன்னைச் சூழ்ந்து கொள்ளும். உன்னை என் இருதயத்தில் எப்போதும் கொண்டிருக்க என்னை அனுமதி; நான் அந்த காட்சியைப் பற்றி நினைத்தேன். அந்த ஐந்து ஒளிக்கதிர்கள் என் ஐந்து காயங்களில் இருந்து வெளிவருகின்றன; அந்தக் கதிர்களில் ஒன்றின் மீது இருந்த மெழுகுவர்த்தி? நான் ஒளியை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். உம் ஸ்தலங்களிலா? ஆம்; அப்போது நான் உம்மைக் கண்டேன். ஆம், நான் என் முள்முடியை அணிந்திருந்தேன், நினைவிருக்கிறதா? ஆம், நினைவிருக்கிறது. ஆனால் அந்த கடைசி காட்சி என்ன? என் அபிஷேகம்; நான் ஏன் ஒரு நெடுஞ்சான் கிடையான நிலைக்குத் தள்ளப்பட்டேன்? நீ நெடுஞ்சான் கிடையாக கிடக்க வேண்டும் என்பதால்; ஆண்டவரே, அந்தக் கிண்ணம்? அது உங்களைச் சுத்திகரிப்பதற்கும், என் திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்துவதற்கும்; ஆண்டவரே, உமக்கு நன்றி. வசுலா,என் சரீரத்தின் உள்ளாழத்தில், ஈட்டி முனை என் இருதயத்தைத் துளைத்துக் கொண்டிருக்கிறது, அது எப்போதும் அங்கே இருக்கிறது; அந்த ஈட்டி அகற்றப்பட வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; சமாதானத்தையும், ஐக்கியத்தையும், நேசத்தையும் ஸ்தாபிப்பதன் மூலம் என் சரீரத்தை மகிமைப்படுத்து; அன்புள்ள சர்வேசரா, இதெல்லாம் எனக்கு மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. உம் வார்த்தைகளின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. என் தலையில் ஊடுருவியுள்ள முட்களை அகற்று. வசுலா, நீ இதை எனக்காகச் செய்வாயா? நான் எப்போதும் உன் முன்பாக இருப்பேன், என் சரீரத்தைக் குணப்படுத்து, அதன் வேதனையைத் தணி; என் ஐந்து காயங்களும் விரியத் திறந்திருக்கின்றன, பார்த்தாயா? என்னை நேசி, என்னை அலங்கரி, என்னை அழகுபடுத்து. தங்கள் சொந்த உயிரை விட என்னை அதிகமாக நேசித்த அந்த ஆதிக் கிறிஸ்தவர்களை அவர்களுக்கு நினைவுபடுத்து; ஆண்டவரே, உம்முடைய செய்தியை ஒளிநகல் எடுத்து அதை வினியோகிப்பதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது! இதைவிட மிக அதிகமானதை நீ செய்வாய்; உன்னை வழிநடத்துபவர் யார் என்பதை ஒருபோதும் மறக்காதே; சரி, ஆண்டவரே, நான் உம்மை சார்ந்திருக்கிறேன்.