இயேசு தம்மை அன்பு செய்யவும் ஆராதிக்கவும் அழைக்கிறார். தாம் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தமாயிருக்க விரும்புவதாகவும், "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்" என்றும் கூறுகிறார். தம் வார்த்தைகளைக் கேட்டு வாழ வேண்டும் என்றும் சொல்கிறார். முந்திய செய்தியை மீண்டும் வாசித்து அனுசரிக்க அன்னை கேட்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 93. மே 16,1989 இயேசுவா? நான்தான்; என்னை ஒருபோதும் கைவிடாதே, முன் எப்போதையும் விட அதிகமாக என் மீது ஆசைகொள்; உன் துன்ப சோதனைகளில் வளரு; அவர்கள் தங்கள் இறைவனாகிய என்னை அன்பு செய்யக் கற்றுக்கொள்ளட்டும்; குறிப்பு: எல்லோரும். சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் பரிசுத்தராகிய என்னை ஆராதிக்க அவர்கள் கற்றுக்கொள்ள எனக்கு அன்பும் ஆராதனையும் வேண்டும்; என் ஆன்மாவின் நேசத்திற்குரியவர்களே, என் குருக்களும், ஆயர்களும், கர்தினால்களும், என் சித்தத்தைப் பகுத்துணர்ந்து கொள்ளும்படி, அவர்களுக்காக ஜெபியுங்கள்; ஆண்டவராகிய எனக்கு அன்பும், ஆராதனையும், ஒருமைப்பாடும் தேவை; அனைவரும் ஒன்றாக ஒரே ஒரு தேவநற்கருணைப் பேழையை சூழ்ந்திருப்பது தேவை; அவர்கள் என் விருப்பங்களையே நிறைவேற்றத் தேடினார்கள் என்றால், என் திரு இருதயம், என் இராயப்பரின், யாரிடம் மோட்சத்தின் திறவுகோல்களை நான் கொடுத்தேனோ, அந்த இராயப்பரின் தலைமையின் கீழ் இந்த ஒருமைப்பாட்டுக்காக எப்படி ஏங்கி ஆசிக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்; ஆகவே, ஆண்டவராகிய நானே ஒன்றிணையும்படி அவர்களை அழைக்கிறேன் என்பதை அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக, நீங்கள் அனைவரும் பக்தியார்வத்தோடு ஜெபியுங்கள்; என் திருப்பெயரின் கீழ் இருக்கும் அனைவரையும் என் ஆட்டுக்குட்டிகளின் இராயப்பரின் கீழ் உண்மையான ஐக்கியத்துடன் திரும்பி வரும்படி அழைக்கிறேன்; பிற்பாடு, திருநிலைப்படுத்தப்பட்டவராக என் திருப்பெயரை ஏற்றுக்கொள்ளும்படி மற்ற அனைத்து மக்களினங்களையும் நான் அழைப்பேன்; அவர்களுடைய இதயத்தில் நான் பேசுவேன்; மே 22, 1989 மெட்யுகோர்யே.ஆண்டவரா? நான்தான்; நான் உம்மை நேசிக்கிறேன், பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தரே, பரிசுத்த இயேசுவே, நான் உம்மை ஆராதிக்கிறேன்; என்னை நேசி, என்னை ஆராதி, இந்த முறையில் எனக்கு எப்போதும் வரவேற்பளி; மே 24, 1989 இயேசுவா? நான்தான்; அன்புக்குரியவளே, என்னை அன்பு செய்; என் குழந்தாய், இந்நாள் ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கட்டும்; களிகூர்வாயாக, ஏனெனில் எப்போதும் எல்லா இடங்களிலும் உன்னோடு இருக்கிற ஆண்டவராக நான் இருக்கிறேன்; வந்து என்னை ஆராதித்து என் புனித இருதயத்தை உணர்ந்து பார்; சிறியவர்களே, வந்து என்னுடன் ஒன்றாயிருங்கள்; நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; அன்பு உங்களோடு இருக்கிறது; அன்பு உங்களை அன்பு செய்கிறது; இந்தச் செய்தி மெட்யுகோர்யேவிலுள்ள எங்கள் சிறு குழுவுக்குத் தரப்பட்டது. வந்து, தம்மை ஆராதிக்கும்படி இயேசு இன்று காலையில் எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். மாலையில் மாலை ஆராதனை நடைபெறும் என்று பிற்பாடு மதிய உணவு நேரத்தில் ஆலயத்தில் குருவானவர் அறிவித்தார். இயேசு எங்களை அழைத்துக் கொண்டிருந்ததால், நாங்கள் அங்கே "ஓடினோம்." மே 25, 1989 ஆண்டவரா? நான்தான்; மகளே, அவசரப்பட்டு எழுதாதே; உன் செவியைத் திறந்து, நான் சொல்வதைக் கேள்; நான் அன்பாயிருக்கிறேன், அன்பு மிகச் சிறிதளவே அன்பு செய்யப்படுகிறது; அன்பு மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது! வா, நாங்கள், நாம்? ஆண்டவரே, என்றென்றும். ஜூன் 1, 1989 திரு இருதயத் திருநாள். இயேசுவின் திரு இருதயமா? நான்தான்; இன்று என் திரு இருதயம் என் குரலைக் கேட்கும்படி சகல மக்களினங்களையும் அழைத்துக் கொண்டிருக்கிறது; நானே அன்பு, நானே சமாதானம், நானே வழியும், உண்மையும், வாழ்வும்; என் திரு இருதயத்தில் அல்லாமல் உங்கள் ஆன்மாவின் இரட்சிப்புக்கு வேறு எந்த புகலிடமும் இல்லை; மகளே, சென்ற வருடம் நான் உனக்கு எழுதத் தந்த ஜெபத்தை என்னோடு சேர்ந்து எழுது; ஓ, இயேசுவின் புனித இருதயமே, உன் வழிகளை எனக்குக் கற்பியும், இயேசுவின் புனித இதயமே, நேர்மையின் வழியில் என்னை நடத்தும்; தீயவனிடமிருந்து என்னை விலக்கிக் காத்தருளும், அவனுடைய விருப்பத்திற்கு என்னைக் கைவிட்டு விடாதேயும், இயேசுவின் புனித இருதயமே, என் அடைக்கலப் பாறையாக இரும், ஏனெனில் நீரே என் புகலிடம், உம் அன்பையும் சமாதானத்தையும் என்னை வழிநடத்தவும், எனக்குக் காவலாய் இருக்கவும் நியமித்தருளும், ஆமென். இயேசுவின் புனித இருதயமே, ஆசீர்வாதங்களின் பெருமழையை நீர் எங்கள் மீது பொழிகிறீர். இயேசுவின் திரு இருதயமே, தனிமைப்பட்டவர்களுக்கு நீர் ஒரு நிரந்தர இல்லத்தைத் தருகிறீர். உம்முடைய குடும்பம் ஓர் இல்லத்தைக் கண்டடைந்தது. நாளுக்கு நாள் எங்களைக் காத்து இரட்சித்து, ஒருவர் பின் ஒருவராக, தம் இருதயத்திற்குள் எங்களைக் கூட்டி வரும் நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. நம் சுமைகளைச் சுமந்து கொள்பவரும், நம் துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவருமான நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. ஆண்டவரா? நான்தான்; என் பிரசன்னத்தை உணர்; உன்னையே ஞான விதமாய் ஒடுக்கிக்கொண்டு, நான் சொல்வதைக் கேள்; ஜெபக் கூட்டத்திற்கான செய்தி. சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக; நான் உங்கள் இரட்சகராகிய ஆண்டவர், உங்கள் இதயங்களை தேடுபவர்; நாம் ஒவ்வொரு கதவுக்கும் வெளியே நின்றபடி, சோர்வே இல்லாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருப்பவர்; நாம் பாவியைத் தேடிச் செல்பவர், ஞானம் உள்ளவர்களை வாயடைத்துப் போகச் செய்பவர்; நான் என் ஆசீர்வாதங்களை அதிகரிப்பவர்; என் புதிய ஜெருசலேமுக்குள் நுழைய உங்களை மென்மையான முறையில் தயாரிப்பவர்; குறிப்பு: அதாவது சுத்திகரிக்கப்பட்ட பின் நம்முடைய புதிய நிலையில். நானே பரிசுத்த தமத்திரித்துவம், அனைவரும் ஒருவரிலும், ஒரே ஒருவராகவும் இருக்கிறவர்; என் இரட்சணியத் திட்டத்தைக் கொண்டு உங்கள் அனைவரையும் ஒரே பரிசுத்த மந்தைக்குள் ஒன்றிணைக்கும்படி தயார் செய்து கொண்டிருப்பவர்; நான் உயரமான மரங்களின் வளர்ச்சியைத் தடுத்து, சிறிய மரங்கள் வளர அனுமதிப்பவராக இருக்கிறேன்; அன்புக்குரியவர்களே, அஞ்சாதீர்கள், ஏனெனில் இந்த வனாந்தரத்தில், நான் அன்பு மற்றும் சமாதானத்தின் புதிய விதைகளை விதைப்பேன்; கடவுளற்றவர்களும், கொடியவர்களும் என் தெய்வீகக் கரம் உங்கள் அனைவர் மீதும் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து கொள்ளச் செய்யும்படி, நான் என் தோட்டத்தைப் புதுப்பிப்பேன்; கல்லான இருதயங்கள் என் அளவற்ற இரக்கத்தையும், பரிசுத்தராகிய நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்பதையும் புரிந்து கொள்வார்கள்; நான் உங்கள் வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன், என் பிரசன்னத்தை உணருங்கள்; நான் உங்களைக் கைவிடமாட்டேன்; ஆகவே, பயப்படாதீர்கள்; ஆம், நான் உங்கள் ஒவ்வொருவரையும் கைப்பிடித்து நடத்தி, நீங்கள் ஒளியின் மக்கள் என்றும், உரிமைக்காக உழைப்பவர்கள் என்றும் அழைக்கும்படியாக உங்களை உருவாக்குவேன்; ஆண்டவராகிய நான் பரிசுத்தராயிருப்பது போல, நீங்களும் பரிசுத்தமாய் இருப்பதை விரும்புகிறேன் என்பதை தொடக்கத்திலிருந்தே நான் சொல்லி வந்திருக்கிறேன்; நான் உங்கள் கடவுளாகவும், நீங்கள் என் மக்களாகவும் இருப்பதால், நீங்கள் என் சட்டத்தை அனுசரிக்க வேண்டியிருக்கும்; என் சட்டம் அன்பின் சட்டமாகும்; என்னை அன்பு செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்; என்னை ஆராதிப்பது எப்படியென்று கற்றுக்கொள்ளுங்கள், நான் உங்கள் இதயத்தைத் தேடுகிறேன்; உலகம் சொல்வதைக் கேட்காதீர்கள், என் அன்பின் கூக்குரலைக் கேளுங்கள், என் இருதயத் துடிப்புகளைக் கேளுங்கள், என் ஒவ்வொரு இருதயத் துடிப்பும் ஓர் ஆன்மாவுக்கான அழைத்தலாக இருக்கிறது. என்னிடம் என் விரித்த கரங்களுக்குள் வாருங்கள், உங்களையே என் அரவணைப்பிற்குள் திணித்துக் கொண்டு, உங்கள் மீது நான் கொண்டுள்ள இரக்கத்தை உணருங்கள்! என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்; என் வார்த்தைகளைப் பெரும் செல்வமென மதித்து, அதை உங்கள் இதயத்தில் பொறித்துக் கொள்ளுங்கள்; நான்கு காற்றுகளாலும் என் வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட அனுமதிக்காதீர்கள்; வந்து என் மீது உங்கள் கண்களைப் பதித்துக் கொள்ளுங்கள்; உங்கள் கண்களிலிருந்து என்னை அகற்றிவிட யாரையும் அனுமதிக்காதீர்கள்; ஆண்டவராகிய நான்... உங்களுக்குத் தந்தருள்கிற அருள் வரங்களை உணர்ந்து கொள்ளுங்கள்; மலரே, உன் ஆர்வக் குறைவின் மீது வெற்றி கொள்; ஆண்டவரே, அதிலிருந்து வெளிவர எனக்கு உதவும்! என்னை மகிழ்வி; நான் சொல்வதைக் கேள்.; என் ஆண்டவரே, நீர் சொல்வதைக் கேட்க எனக்கு உதவும். குறிப்பு: இயேசு தம் எழுத்து வேலையைத் தொடர்கிறார். நான் பிரசன்னமாயிருக்கிறேன், நான் உங்களுக்கு தந்து கொண்டிருக்கிற அருள் வரங்களை உணருங்கள்; உங்கள் குற்றத்தை அறிக்கையிட்டு, என் மீது ஆசை கொள்ளும்படி நான் உங்கள் அனைவரிடமும் அதிகாரப்பூர்வமாகக் கேட்கிறேன்; உங்கள் மீது பாரமாக விழுந்து கிடக்கிற இந்த அசமந்த உணர்வை அகற்றும்படி, உங்கள் அனைவர் மீதும் என் அருளின் ஆவி பொழியப்படுகிறது; நீங்கள் அழுகி சிதைந்து போகத் தொடங்கும்முன், அது உங்களை உயிர்ப்பிக்கிறது; ஆகவே, உங்கள் செவிகளைத் திறந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; உங்களில் பெரும்பாலானவர்கள் உயிரோடு இருப்பதாக நம்பினாலும், இப்போது எப்படி இறந்து போயிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனாலும், அதன் காரணம், நீங்கள் முழுவதுமாக உங்களை என்னிடம் கையளித்துவிட மறுப்பதுதான்; என்னை நம்புங்கள், என்னைத் தடுக்காதீர்கள், உங்களை என்னிடம் கையளித்து விடுங்கள்; கையளியுங்கள், கையளியுங்கள், உங்கள் அன்புள்ள இறைவனாகிய நானே உங்கள் சிறிய இதயங்களைக் கைப்பற்றுபவராக இருக்க அனுமதியுங்கள்; அஞ்சாதீர்கள், நான் அன்பாக இருக்கிறேன், அன்பு உங்கள் இதயங்களை அலங்கரிக்க ஆசிக்கிறது, எனவே, என் வார்த்தைகளின் மீது கவனமாய் இருங்கள். அவை உங்களுக்கு எளிமையானவையாகத் தோன்றலாம், ஆனால் நான் எளிமையின் இறைவன்; நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவர்; நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என்று உங்களில் பலர் எப்போதும் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்; ஆனாலும், இது ஏனென்றால் என் வார்த்தைகள் உங்களை ஊடுருவதாகவே தோன்றவில்லை என்பதால்தான்! நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால், அது உங்கள் மந்த புத்தியின் காரணமாகவும், உங்கள் செவிட்டுத்தனத்தின் காரணமாகவும்தான்; உங்களில் பலர் என் வார்த்தைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்பதால்தான்; நான் என் கரத்தில் என் இருதயத்தை உங்களுக்கு வழங்கியபடி வருகிறேன், நான் என் சமாதானத்தையும், என் அன்பையும் உங்களுக்கு வழங்கியபடி வருகிறேன், நான் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரே ஆட்டுப்பட்டிக்குள் ஒன்றுசேர்க்கும்படி வருகிறேன்; உங்களை என்னிடம் இழுத்து, உங்களை உயிர்ப்பிக்கும்படி, என் மோட்ச சிம்மாசனத்திலிருந்து உங்களை நோக்கிக் குனிகிற உங்கள் இறைவனாகிய என்னிடம் வந்து என்னைப் போற்றுங்கள்; என் அருளின் ஆவி உங்கள் மீது வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிற நீங்கள் அனைவரும் என்னைப் போற்றுங்கள்; போய் எல்லா மக்களினத்தாருக்கும் என் நீதியை அறிவியுங்கள்; என் செய்தி உலகின் எல்லைகளைச் சென்றடையச் செய்யுங்கள், அவர்கள் என் அன்பின் கூக்குரல்களை கேட்கச் செய்யுங்கள்; எனக்காக தாகம் கொள்கிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு அக்களிப்புக் கொள்ளுங்கள், ஏனெனில் நான் உங்களை நிரப்புவேன்; பகலும், இரவும் ஒடுக்கப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும் உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்; ஏனெனில் உங்களைத் தேற்றவும், உங்களைக் காக்கவும் நான் இங்கே இருக்கிறேன்; என் புனித இருதயம் உங்கள் அனைவரையும் பரிசுத்த தனத்தில் என்னிடம் வரும்படி அழைக்கிறது; என் மீது சாய்ந்து கொள்ளுங்கள், உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நான் காத்துக் கொண்டிருக்கிற என் தேவ நற்கருணைப் பேழைக்கு நான் உங்களை வழிநடத்துவேன்; வாருங்கள், வந்து பரிசுத்தத் தனத்திலும், மாசற்றத் தனத்திலும் என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள்; என்னை நோகச் செய்யாதீர்கள்; என்னைப் பெற்றுக் கொள்ளும்போது மாசற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருங்கள், உங்களை ஞான விதமாய் ஒடுக்கி, சின்ன வெண்ணிற அப்பத்தில் என் உயிருள்ள பிரசன்னத்தைக் கண்டுகொள்ளுங்கள்; நான் உங்கள் பரிசுத்தத்தையும், மாசின்மையும் உணர விடுங்கள்; ஓ, எத்தகைய ஒரு அருள் வரத்தை நான் உங்களுக்குத் தரத் துடிக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிவீர்களானால்! வாருங்கள், என் செய்தியைத் தியானிப்பதன் மூலம் என்னை மகிழ்வியுங்கள்; என்னை மகிழ்வியுங்கள், என் செய்தியை வாழுங்கள், என்னை மகிழ்வியுங்கள், உங்கள் வாழ்வுகளை மாற்றுங்கள் என்று நான் தரும் செய்தியைத் தியானித்து, தன் இதயத்தை ஆராய்ந்து, தன் ஆத்துமத்தை பரிசோதிக்கிற மனிதன் பேறுபெற்றவன், ஏனெனில் நான் அவனை எழுப்புவேன்; தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ஆயக்காரனைப் போல, என்னிடம் வரும் குருக்களும், ஆயர்களும், கர்தினால்களும் பேறுபெற்றவர்கள்; குறிப்பு: லூக்கா 18 ஆம் அதிகாரம், இடைவார்த்தைகள் ஒன்பது முதல் 14 வரை. ஏனெனில் இந்த இதயங்களில் என் இதயம் வேரூன்றி, செழித்து வளரும்; அப்போது, எனக்குத் தேவைப்படுவதெல்லாம் அன்புதான், அன்பும் ஆராதனையும் மட்டும்தான் என்பதை அவர்கள் கண்டுணரும் படியாக, நான் அவர்களுடைய கண்களின் மீதுள்ள மூடுதுகிலை அகற்றுவேன்; ஆனால் அந்தோ! இந்த தேவ ஊழியர்களில் மிகப்பலர் சாத்தானின் வசியங்களுக்குள் விழுந்து விட்டார்கள்! அவர்களுக்குள் அன்பு இல்லாதபோது, அவர்களுடைய வெளிச்சடங்குகளையும் போலியான தாழ்ச்சியையும் நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? இவர்களில் எல்லோரிலும் முதலாவதாக, என் குழந்தைகளுக்கு நல்ல மாதிரிகை தந்து, என்னிடம் அன்பு நிறைந்த இதயத்தோடு வந்து, என் பரிசுத்த பிரசன்னத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து, மௌனமாக என்னை ஆராதிக்கிறவராக யார் இருப்பார்? அன்புக்குரியவர்களே, நான் கேட்பதெல்லாம் புனிதத்துவத்தில் அன்பு மட்டும்தான்; நான் உங்கள் இதயத்தைத் தேடுகிறேன்; வந்து, உங்கள் இதயத்தை எனக்கு ஒப்புக்கொடுங்கள்; அப்போது, உங்கள் பங்கிற்கு, என் குழந்தைகளின் இதயங்களையும் நிரப்பும்படி, உங்கள் இதயம் என் அன்பில் ஊறியிருக்கச் செய்வேன்; நான் இந்த எளிய கேள்வியை உங்களிடம் கேட்கும், உங்கள் பரிசுத்தராக இருக்கிறேன்; ஒரு காலத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தை, உங்கள் பெருமையாக இருந்த உங்கள் மந்தை எங்கே? குறிப்பு: எரேமியா 13 ஆம் அதிகாரம், இடைவார்த்தை 20. உங்களைச் சுத்திகரியுங்கள், மனம் வருந்துங்கள், என் திருச்சபையின் தலைவருக்குக் கீழ்படியுங்கள்; அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை, ஆனால் நீங்கள் அவரை ஒதுக்கி அலட்சியம் செய்கிறீர்கள்; இன்னும் அவரை ஏளனம் செய்து கொண்டிருக்கிற நீங்கள் எல்லோரும் என் புனித இருதயத்தை மேலும் மேலும் அதிகப் பாரமாக அழுத்துகிறீர்கள்... நான் காட்டிக் கொடுக்கப்பட்டும், தனியாகவும் இருக்கிறேன்... ஏனெனில் இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் என் மந்தைக்கு ஏமாற்றும் பாலைவனச் சோலையாகவும், ஒரு முடிவற்ற பாலைவனத்தின் கானல் நீராகவும் இருப்பீர்கள்? சகோதரர்களே, நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் அன்புதான்; வந்து என்னை ஆராதியுங்கள், நான் இல்லாத இடங்களில் என்னைத் தேடுவதில் நேரத்தைச் செலவிடாதீர்கள்; என் மந்தைக்கு முன்மாதிரிகையாக இருங்கள்; அன்பு காத்துக் கொண்டிருக்கிறது; வந்து என்னை ஆராதியுங்கள், உங்கள் தேவனும் அரசருமான என்னிடம் வந்து என்னை ஆராதியுங்கள்; என் சகோதரர்களே, என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது, இயேசுவாகிய நான் ஒரு நித்திய அன்பால் துடித்துக் கொண்டிருக்கிற என் புனித இருதயத்தைக் கொண்டு, உங்கள் மீது பரிதாபம் கொண்டு, உங்கள் பாவங்கள் என்னை கடந்து போகச் செய்வேன்; அவற்றில் ஒன்றைக் கூட நான் ஒருபோதும் உங்களுக்கு நினைவுபடுத்த மாட்டேன்; என் இரக்கத்தில் இன்னும் காணப்படக்கூடியவராக நான் இருக்கும்போதே என்னைத் தேடுங்கள்; குறிப்பு: அவருடைய நீதி வரும்முன், நான் வந்து குருடர்களின் கண்களையும், நானே செவிடாக்கி உள்ளவர்களின் காதுகளையும் திறப்பேன், நான் அவற்றை மூடியிருந்த முகத்திரையை உடைப்பேன்; நீங்கள் மனம் திரும்பி, என்னை ஏற்றிப் போற்றி, உங்கள் இதயத்தின் உள்ள ஆழங்களிலிருந்து, உங்கள் இறைவனாகிய என்னை மகிமைப்படுத்துமாறு, என் ஒளியைக் காணவும், என் வார்த்தையைக் கேட்டு புரிந்து கொள்ளவும், நான் உங்களை அனுமதிப்பேன்; ஆண்டவராகிய நான் என் கரத்தை உங்கள் தலைமீது வைத்து, உங்களை ஆசீர்வதிக்கிறேன்; ஒன்றாயிருங்கள், என் குழந்தாய். நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன். என் தாய் சொல்வதைக் கேள்; மலரே, என்னை உணர்; நான் உன்னை அன்பு செய்கிறேன்; பெண் சிங்கமானது தன் குட்டிகளைக் காப்பது போல், நான் உன்னைக் காப்பேன் என்பதை நினைவில் வை; ஆசீர்வதிக்கப்பட்டிரு, என் செய்தியைக் கேள்; என் சிறு குழந்தைகளே, கடவுளின் அழைத்தலைப் புறக்கணிக்காதீர்கள்; கையளியுங்கள், அவர் மீது சாய்ந்து கொண்டு, அவர் உங்கள் இதயத்தை ஏற்றுக் கொள்ள விடுங்கள்; அவர் சொல்வதைக் கேட்டு, அவர் சொல்வதைச் செய்யுங்கள்; நான் ஆண்டவருடைய வார்த்தையே வாழ்வு, கடவுளின் வார்த்தையே ஒளி என்று உங்கள் அனைவருக்கும் நினைவூட்டுகிற உங்கள் பரிசுத்த தாயாக இருக்கிறேன்; உங்களில் பலர் அவருடைய அன்பின் வேண்டுகோளைக் கேட்கிறீர்கள், ஆனால் இந்த வளாகத்தை விட்டு வெளியே சென்றவுடன், உலகம் திரும்ப உங்களைத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது, அதனால், அவருடைய அன்பின் வேண்டுகோள் மறக்கப்படுகிறது; என் மிகச் சமீபத்திய செய்தியில் தியானிக்குமாறும், உங்கள் மனச்சான்றுகளை பரிசோதிக்குமாறும், உங்களை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; இன்று நான் உங்களிடம் கேட்கிறேன்; என் செய்தியை கேட்டள்ள, உங்களில் மிகப்பலர், முந்திய செய்தி இன்னும் தியானிக்கப்படாமல், அல்லது திரும்ப வாசிக்கப்படாமல் இருக்கும்போது, இன்று ஏன் ஒரு புதிய செய்தியைக் கேட்க வருகிறீர்கள்? பிரியமுள்ள குழந்தைகளே, என் மாசற்ற இதயம் உங்களை அன்பு செய்கிறது, அதனால்தான், இன்று என் முந்தின செய்தியை மீண்டும் வாசித்து, அதை நடைமுறையில் அனுசரிக்கும்படி நான் உங்களிடம் கேட்கிறேன்; நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன். என் மாசற்ற இருதயம் உங்கள் துயரங்களில், உங்கள் தைலமாக இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். ஆமென்; வாசிக்கப்பட வேண்டிய வேதாகம பகுதிகள்: ஒன்று, தீமத்தேயு நான்காம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஒன்று முதல் 16 வரை; ஒன்று, தீமத்தேயு ஆறாம் அதிகாரம், இறைவார்த்தைகள் 20 மற்றும் 21; இரண்டு, தீமத்தேயு இரண்டாம் அதிகாரம், இறைவார்த்தைகள் 14 முதல் 26 வரை; மற்றும் இரண்டு, தீமத்தேயு மூன்றாம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஒன்று முதல் 17 வரை.