இயேசு தம் அன்பின் ஆவியால் உங்களைச் சுத்திகரித்துப் புதுப்பிப்பேன் என்றும், அன்பின் புதிய யுகத்தையும் புதிய ஜெருசலேமையும் தருவேன் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் சுதந்திரம் தந்திருப்பதால் வலுக்கட்டாயமாக நுழையாமல் இதயத்தின் வாசலில் காத்திருக்கிறார்; இருக்கிறபடியே அன்பை ஒப்புக்கொடுக்க அழைக்கிறார். போலியான காட்சிகளின் திரையை வெகுவிரைவில் அகற்றுவேன் என்றும் சொல்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 75. ஆகஸ்ட் 17, 1988 என் ஆண்டவரா? நான்தான்; நான் உன் மீட்பர், எனவே, என்னை நம்பு; நான் உலக சமாதானம் மற்றும் அன்பின் செய்தியைத் தரவும், என் புனித இதயத்தையும், நான் எப்படி உங்களை நேசிக்கிறேன் என்பதையும் என் படைப்பு அனைத்திற்கும் காட்டவும் உன் வழியாக வந்திருக்கிறேன்; ஓ, வசுலா! என் இரக்கம் உங்கள் அனைவர் மீதும் பெரிதாய் இருக்கிறது! அனைவரிலும் அதிகப் பிரியமான ஆன்மாக்களே, உங்களை சுத்திகரிப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; நான் செய்ய இருக்கிற காரியத்திற்கு அன்பே காரணம், உங்கள் சுத்திகரம் நரக வாசல்களில் இருந்து உங்களை மீட்டு இரட்சிப்பதற்காகவே; நான் மின்னலைப் போல உங்கள் மீது இறங்கி வந்து, என் நெருப்பைக் கொண்டு உங்களைப் புதுப்பிப்பேன்; என் அன்பின் ஆவி, அன்பிற்குள் உங்களை இழுத்து, உங்களைச் சுட்டெரித்து, ஓர் உயிருள்ள அன்பின் சுவாலையாக உங்களை மாற்றுவதன் மூலம் உங்களை மீட்டு இரட்சிக்கும்; நான் என் அன்பின் ஆவியை விண்ணகத்தினின்று உங்கள் மீது பொழியச் செய்து, கறைபட்ட உங்கள் ஆன்மாக்களை பரிசுத்தமான, மாசற்ற ஆன்மாக்களாக ஆக்குவேன், பொன் நெருப்பில் புடமிடப்படுவது போல, நான் உங்களைப் பரிசுத்தமாக்குவேன்; நீங்கள் இரட்சிப்பின் நேரத்தையும், என் அன்பின் ஆவியானவர் இறங்கி வரும் நேரத்தையும் அடையாளம் கண்டுகொள்வீர்கள்; இது நிகழாவிட்டால், நான் உங்களுக்கு முன்னறிவித்த புதிய வானகங்களையோ, புதிய வையகத்தையோ நீங்கள் காணமாட்டீர்கள்; என் குழந்தாய், என் விதைகள், என் நெருப்பைக் கொண்டும், குறிப்பு: விதைகள்; நாம். என் நேசத்தைக் கொண்டும், என் இரக்கத்தைக் கொண்டும், என் நீதியைக் கொண்டும் முளைத்தெழுந்து, என் ஒளியையும், என் பணியையும் தேடி, சூரியனை எதிர்கொள்ளும் புதிய லீலிகளைப் போலத் திறக்கும்; நான் என் வானகங்களிலிருந்து என் ஒளியைப் பொழிந்து உங்களை அலங்கரிப்பேன், என் பணியைப் பொழிந்து, அன்பின் புதிய யுகம் ஒன்றை நீங்கள் காணும்படி உங்களுக்கு உணவளிப்பேன்; நான் என் வல்லமையைக் கொண்டு, எல்லா அக்கிரமத்தையும், வக்கிரத்தையும், தீமையையும் பெருக்கித் தள்ளுவேன்; நான் பரிசுத்தமாக்கும் தண்ணீர்களைக் கொண்டுள்ள ஒரு வன்மையான நீரோட்டத்தைப் போல, உங்கள் மீது இறங்கி, உங்கள் எல்லாத் தீமைகளையும் கழுவிப் போக்கி, தூய பொன்னாலான தூண்களைப் போல, நீங்கள் நேராக நிமிர்ந்து நிற்கச் செய்வேன்; நான் என் அன்பார்வத்தின் நீர் தாரைகளைக் கொண்டு பொய்யானதும், போலியானதும் ஆகிய அனைத்தையும் பெருக்கித் தள்ளுவேன்; ஒரு சில மழைத்துளிகளால் களிமண் கழுவிப் போக்கப்படுவது போல, என் பக்திக்குரிய அன்பின் ஆவியானவரும் உங்கள் ஆன்மாவை கறைப்படுத்திய உங்கள் பாவங்களைக் கழுவிப் போக்குவார்; படைப்பே, உன் மீட்பராகிய நான் உன்னைப் புதுப்பித்து, உனக்கு என் கொடையைத் தருவேன், என் கொடை, ஒளிவீசிப் பிரகாசிக்கும் ஒரு புதிய ஜெருசலேம், மாசற்றதும், பரிசுத்தமானதும் ஆகிய ஒரு புதுப்பிக்கப்பட்ட திருச்சபை விண்ணகத்திலிருந்து இறங்கி வரும், குறிப்பு: விண்ணகத்திலிருந்து இறங்கி வருபவர்களும், ஒரு மிக பிரம்மாண்டமான தட்டின் மீது இருப்பது போன்ற ஒரு புதிய நகரத்தை சுமந்து கொண்டிருப்பவர்களுமான கோடிக்கணக்கான வானதூதர்களின் அறிவுசார்ந்த காட்சி ஒன்றை ஆண்டவர் எனக்குத் தந்தார். ஒரு புதிய, ஆசீர்வதிக்கப்பட்ட திருச்சபை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தது. ஏனெனில், இருந்தவரும், இருக்கின்றவரும், வர விருப்பருமாகிய நான் அதன் மத்தியிலும், அதன் ஆன்மாவிலும் வாழ்ந்து கொண்டிருப்பேன்; நீங்கள் அனைவரும் வீரியமும், உயிர் துடிப்பும் உள்ளதாக அதை உணர்வீர்கள், ஏனெனில், என் புனித இதயம் அதனுள் துடித்துக் கொண்டிருக்கும்; ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவராகிய நான், நெருப்பின் மீது இருப்பதைப் போல் இருக்கிறேன், குறிப்பு: ஆண்டவர் மிக பொறுமையற்றவராக, நெருப்பின் மீது இருப்பவரைப் போலத் தோன்றினார். என் புனித இருதயம் உத்வேகமுள்ள சுவாலைகளால் பற்றியெரிகிறது, என் அன்பின் சூளைக்குள் உங்களைத் தள்ளி, உங்கள் அன்பிற்குரிய இறைவனாகிய என் மீது உள்ள அன்பின் முழுமையான பரவசத்தால், நீங்கள் பற்றியெரியும்படி விட்டுவிடும் அளவுக்கு, அது உங்கள் அனைவரையும் தன்னுள் பொதிந்து கொள்ள ஏங்குகிறது! ஆம், நான் உங்கள் ஒவ்வொருவரையும் என் நெருப்பால் பற்றியெரிகிற ஒரு உயிருள்ள பலிபீடமாக மாற்றுவேன்; ஓ, படைப்பே! என் நெருப்பு உங்கள் இதயங்களை ஏவித் தூண்டும் போது, இறுதியாக நீங்கள் என்னை நோக்கி இப்படிக் கூக்குரலிடுவீர்கள்; நீர் ஒரே சர்வேசுவரனாக, ஒரே ஒரு சர்வேசுவரனாக, நீதிபரராக இருக்கிறீர், நீர் உண்மையாகவே செம்மறிப் புருவையாக இருக்கிறீர், நீர் எங்கள் பரலோகத் தந்தையாக இருக்கிறீர், நாங்கள் எப்படி இவ்வளவுக்கு குருடானவர்களாக இருந்திருக்க முடிந்தது? ஓ, பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தரே, எங்களில் இரும், எங்களில் வாழும்; ஓ, மீட்பரே, வாரும்! இந்த உங்களுடைய கூக்குரலுக்கு பதிலளிக்க நான் தயங்க மாட்டேன்; நான் மின்னலைப் போல் வேகமாக உங்கள் மீது இறங்கி வந்து, உங்கள் மத்தியில் வாழ்வேன்; அன்புக்குரியவர்களே, ஆதியில் இருந்தே நீங்கள் எனக்குச் சொந்தமானவர்களாகவும், என் வித்தாகவும் இருந்தீர்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; அப்போது நான் உங்கள் மத்தியிலிருந்து ஒரு நித்தியமான அன்பைக் கொண்டு, உங்கள் மீது அரசாள்வேன்; நான் உங்கள் இறைவனாக இருப்பேன், நீங்கள் என் சொந்த மக்களாக இருப்பீர்கள்; அனைவரிலும் அதிகப் பிரியமான ஆன்மாவே, என்னை உன் அரசரைப் போல நடத்து; உன் அன்பைக் கொண்டு எனக்கு முடிசூட்டு; நாங்கள், நாம், வா; ஆகஸ்ட் 18, 1988 மேலே மடத்தில். நான் சந்தித்த மக்கள் கூட்டம் ஒன்றுக்கு உதவி செய்யும்படி நான் ஆண்டவரிடம் கேட்டேன். அவர்கள் மிகுந்த வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் பசாசால் துன்புறுத்தப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள். ஆண்டவரா? நான்தான்; மகளே, ஒவ்வொரு ஆன்மாவும் விடுவிக்கப்பட முடியும், ஆனாலும், அவைகளாகவே திறக்கும் போதும், அவை அதை விரும்பினாலும் மட்டுமே அவை விடுவிக்கப்பட முடியும்; நான் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இந்த சுதந்திரத்தைத் தந்திருக்கிறேன், அவர்களுடைய சித்தம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது; இப்போது, ஓர் ஆன்மா தன்னையே எனக்கு திறந்து காட்டாதபடி பிடிவாதமாக இருக்கும்போது, அதன் இதயத்தினுள் நான் எப்படி நுழைவேன்? நான் ஆண்டவரும், கடவுளுமாக இருக்கிறேன், என்றாலும் நான் உங்கள் அனைவருக்கும் சுதந்திரத்தையும், உங்கள் சித்தத்தையும் தந்திருக்கிறேன்; நீங்கள் என்னை நம்பி, உங்கள் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடுத்து, அதை எனக்கு அர்ப்பணித்தால், நான் உங்கள் இதயத்தினுள் நுழைந்து உங்களைக் குணமாக்குவேன்; நான் வலுக்கட்டாயமாக நுழைய மாட்டேன்; நான் அவற்றின் வாசல் அருகிலிருந்து, அவை திறந்து என்னை உள்ளே வரவேற்கும்படி காத்துக் கொண்டிருக்கிறேன்; ஆகஸ்ட் 19, 1988 நான் எவ்வளவு அதிகமாக உம்மை நேசிக்கிறேன் என்பதை உமக்குச் சொல்ல விரும்புகிறேன், மேலும், ஆண்டவரே, நீர் எனக்கு செய்திருப்பதும், இன்னும் செய்து கொண்டிருப்பதுமாகிய அனைத்திற்காகவும் உமக்கு நன்றி கூற விரும்புகிறேன். இந்த எல்லா வரப்பிரசாதங்களுக்கும் உமக்கு ஈடு செய்ய நான் ஒருபோதும் இயலாதவளாய் இருப்பேன். ஆண்டவரா? மலரே, என் மீது சாய்ந்துகொள், நான் அனைவருளும் மிக ஈனமானவர்களுக்கும் கூடத் தருவேன்; நான் இரக்கத்தின் ஊற்றாக இருக்கிறேன், ஆனால் நான் உண்மையில் எப்படி இருக்கிறேன் என்பதை உங்களில் பலர் மறந்துவிட்டது, என் பெரும் துயரமாக இருக்கிறது; நான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புள்ள ஒரு இறைவன் அல்ல, நான் நீதி உள்ளவராக இருக்கிறேன்; உங்களில் மிகக் கொடியவர்களுக்கும் கூட நான் தருகிறேன்; என் புனித இருதயத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு துடிப்பாயாக! உன் அன்பை எனக்குத் தா, அது சில சமயங்களில் வெதுவெதுப்புள்ளதாக இருந்தாலும், நான் அதை ஏற்றுக் கொள்வேன், உன் அன்பை எனக்குத் தா, நான் என் தெய்வீகத்தில் அதை உத்தமமானதாக்குவேன்; இப்போது போல, சுய ஆவல்கள் இன்றி என்னிடம் வந்து, உன் அன்பை எனக்கு ஒப்புக்கொடு, உன் அன்பை எனக்குத் தருவதற்கு ஒரு புனிதையாகும் வரைக் காத்துக் கொண்டிருக்காதே; நீ இருப்பது போல, உன் சகல குறைகளோடும் வா, என் மாசற்றத்தனத்தில் நான் உன் அன்பை மாசற்ற அன்பாக மாற்றி, மேலிருந்து அது உன்மீது பிரதிபலிக்கச் செய்வேன்; சிறிய ஆன்மாவே, நீ எனக்கு ஒப்புக்கொடுக்கிற எல்லாவற்றையும் நான் அழகுபடுத்துவேன், ஆகவே, நீ இருக்கிறபடியே என்னிடம் வந்து, உன் அன்பை மிகப் பலரிடம் இல்லாதிருக்கிற இந்த அன்பை, எனக்கு ஒப்புக்கொடு! ஆன்மாவே! உத்தரிக்கிற ஸ்தலத்தில் எவ்வளவு அதிக ஆன்மாக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நீ அறிந்தாயானால்... என்னிடம் வர அவர்களால் இயலும்படி அவர்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவி; அவர்கள் என்னோடு இருப்பதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும், அவர்களுடைய ஆன்மாவின் மீதியிருக்கிற கறைகளின் காரணமாக, என்னிடம் வர அவர்களால் இயலாது; ஜெபங்களையும் பரித்தியாகங்களையும் கொண்டு அவர்களை விடுவி; என்னை நேசிப்பதன் மூலம், என்னை ஆராதிப்பதன் மூலம் அவர்களை விடுவி, என்னோடும், என் சிலுவையோடும் உன்னைச் சங்கிலியால் பிணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை விடுவி; என் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களை விடுவி; வசுலா, இந்த ஆன்மாக்கள் எனக்காகவும், மீண்டும் என்றென்றைக்குமாக என்னோடு இணைக்கப்படும்படியாகவும் ஏங்கித் தவிக்கிறார்கள், ஆனாலும், என் பிரசன்னத்தில் இருப்பதற்கு முன்பாக அவர்கள் முதலில் தங்களையே சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்; ஆண்டவரே, 'என்னோடு மீண்டும் இணைக்கப்படும்படி...' என்று நீர் சொன்னீர். தங்கள் மரணத்திற்குப் பிறகு சிறிது காலம் அவர்கள் உம்மோடு இருந்திருக்கிறார்களா? நான் அவர்களுடைய ஆன்மாவை அவர்களுடைய உடல்களில் இருந்து விடுவித்திருக்கிறேன், நான் ஒரே ஒரு கணம் மட்டும் என் பரிசுத்த முகத்தை அவர்களுக்குக் காட்டி இருக்கிறேன், அதே கணத்தில், திரை அகற்றப்பட்ட அவர்களுடைய கண்கள் என் மாசற்றத்தனத்திலும், என் ஒளியிலும் என்னை எதிர்கொண்டன, அவர்கள் நேரடியாக சத்தியத்தை முகமுகமாய்த் தரிசித்து, பாவத்தால் தங்கள் ஆன்மா எவ்வளவு கறைப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டார்கள்; என் விரிந்த கரங்களுக்குள் விழவும், குறிப்பு: நாம் கடவுளை நெருங்காதபடி அவர் தம் பக்கத்தைப் பூட்டிக் கொள்வதில்லை. தடையெல்லாம் நம் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதை இது எண்பிக்கிறது. என்னைப் பின் செல்லவும், தங்களுக்குள்ள சுட்டெரிக்கிற ஆசையையும் மீறி, தங்கள் ஆன்மாவைச் சுத்திகரிப்பதற்கு முன் இது சாத்தியமல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; ஆகவே, குத்தித் துளைக்கிற துயரத்தின் வேதனை ஒன்றோடு, அவர்கள் பின்வாங்கி, சுத்திகரிக்கப்பட தங்களையே ஆயத்தப்படுத்துகிறார்கள்; இது அவர்களை வார்த்தை கெட்டாத விதமாக வேதனைப்படுத்துகிறது, சுட்டெரிக்கிறது, ஏனெனில் அவர்களால் என்னை பார்க்க முடிவதில்லை, நான் அவர்களோடு இல்லாதிருப்பது அவர்களை எரிக்கிறது; அவர்களோடு நான் இல்லாதிருப்பதே உத்தரிக்க ஸ்தலத்தில் அவர்களுடைய அனைத்திலும் பெரிய துன்பத்தின் காரணமாக இருக்கிறது, அவர்கள் தங்கள் பாவங்களைப் பொறுத்து, நெருப்பில் வேறு விதமான துன்பங்களுக்கும் உள்ளாகிறார்கள்; படைப்பே, முன்கூட்டியே உன் ஆன்மாவை ஆயத்தம் செய், மரணம் உன்மீது நிழலிடும் வரை காத்திருக்காதே; உன் ஆன்மாவைச் சுத்தமாகவும், கறையின்றியும் வைத்துக்கொள்; உங்களால் முடியுமளவுக்கு அடிக்கடி என் திருவுடலைக் கொண்டு உங்களையே போஷித்துக் கொள்ளுங்கள், என் இரத்தத்தைப் பருகுங்கள்; அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள், இந்த நாளுக்காக ஆயத்தமாய் இருங்கள்; உபவாசம் இருங்கள், உபவாசம் உங்களுக்கு உதவுகிறது; என் குரலைக் கேட்டு, இன்றே நம் சந்திப்பு நிகழும் என்பது போல, உங்கள் ஆன்மாவை ஆயத்தம் செய்திருங்கள்; காத்திராதீர்கள், காத்திருத்தல் என்பது உறங்குவதாகும், காத்திருத்தல் என்பது உங்கள் விளக்குகள் எண்ணையின்றிப் போக விட்டுவிடுவதாகும்; உங்கள் மீட்பரைச் சந்திக்க ஆயத்தமாய் இருங்கள்; பைத்தியமாகும் அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன், என் ஆளங்காண முடியாத இரக்கத்திலிருந்து அதை உணர்ந்து கொள்ளுங்கள், உங்கள் எல்லோரையும் ஆயத்தம் செய்ய நான் விரும்புகிறேன்; பிற்பாடு: புனித மாமரி, அம்மாவா? என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் உன் அம்மாதான்: ஆம், குறிப்பு: புனித மாமரி, என் மூத்த மகனைப் பற்றி என்னிடம் ஒரு காரியம் சொன்னார்கள். தன்னால், அதாவது தான் நம் பிதாவிடம் செய்த வேண்டுகோள்களின் காரணமாகத்தான் என் மூத்த மகன் தன் நோயிலிருந்து பிழைத்துக் கொண்டான் என்று நான் புரிந்து கொள்ளும்படி நம் அன்னை செய்தார்கள். இது 13 வருடங்களுக்கு முன் நடந்தது. இது என்னை மிக உணர்ச்சி வசப்படச் செய்ததோடு, என்னை மிக அதிகமாக தொல்லைப்படுத்தியது. என் வசுலா, என் கண்ணீர் உன்னை இரட்சித்தன, பிதாவிடம் நான் செய்த மன்றாட்டுகள் உன்னை இரட்சித்தன; பிதாவை நேசி, ஏனெனில் அவர் அனைவரிலும் அதிக தயவிறக்கம் உள்ளவர்; நான் என்ன சொல்ல முடியும்? உங்களுக்கு நன்றி சொல்வது போதாது. நான் சொல்வது அல்லது செய்வது அனைத்துமே போதுமானதாக இராது! என் குழந்தாய், உன்னை அவரிடம் விட்டுவிடு, அடிக்கடி உன்னைக் கையளி; இது கடவுளைப் பெருமளவுக்கு பிரியப்படுத்துகிறது; நம்பிக்கையோடு இரு, ஏனெனில் நீ அவருடைய கரங்களில் இருக்கிறாய்; நான் என் சமாதானத்தை உனக்குத் தருவேன்; கடவுளுக்குக் கீழ்படிவதன் மூலம் அவரை மகிமைப்படுத்து; அம்மா, நான் உங்களை வாழ்த்துகிறேன். நான் உன்னையும், உன் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கிறேன்; பிற்பாடு, இந்த உணர்ச்சி வசப்படுதலுக்குப் பின்: வசுலா, விரைவில், பாத்திமாவில் என்னால் முன்னுரைக்கப்பட்ட பல காரியங்கள் நிறைவேறும் என்று உனக்குச் சொல்ல நான் விரும்புகிறேன்; நான் வரப்பிரசாதங்களால் நிரம்பி இருக்கிறேன், அவற்றை இந்த ஆண்டிலிருந்து என் குழந்தைகளின் மீது பொழிய நான் சித்தமாயிருக்கிறேன்; காலம் அண்மையில் உள்ளது, எஞ்சியுள்ள இந்தக் குறுகிய காலத்தின் காரணமாக, உன் பரிசுத்த அன்னையாகிய நான் முன்னறியப்பட்ட எப்போதையும் விட இன்னும் அதிகமாக உங்களுக்கு அருகில் இருப்பேன்; உங்களை அலங்கரிக்கவும், மிகப் பெருமளவுக்கு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற இயேசுவுக்கு இன்னும் நெருக்கமாக உங்களை இழுக்கவும், உங்களில் பலர் மீது நான் என் வரப்பிரசாதங்களைப் பொழிவேன்; ஆம், மகளே... ஒர் ஆன்மா எங்களிடம் திரும்பி வரும் ஒவ்வொரு முறையும், எங்கள் இதயத்திலிருந்து ஒரு முள் எப்போதும் பிடுங்கி எடுக்கப்படுகிறது! 'நான் உங்களை நேசிக்கிறேன்!' என்று யாராவது ஒருவன் எங்களை நோக்கி கூக்குரலிடும் ஒவ்வொரு தடவையும் ஒரு முள் எப்போதும் பிடுங்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மலர் அங்கே வைக்கப்படுகிறது; மகளே, சமாதானம் உன்மீது இருப்பதாக; நாங்கள், நாம்; ஆம், நாங்கள், நாம். ஆகஸ்ட் 20, 1988 இயேசுவா? நான்தான் அன்பிற்குரியவளே, இந்த நாட்களில் என்னிடமிருந்து வருகிற வெளிப்பாடுகளையும், காட்சிகளையும் தாக்குவதன் மூலம் சாத்தான் பலரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்; நான் உன்னை விடுவிக்க வராமல் இருந்திருந்தால், நீ இன்னும் அவனுடைய கால் நகங்களில் சிக்கி இருந்திருப்பாய்; விசுவசி, என் இரக்கத்தில் விசுவாசம் கொள், என் வேலைகளை விசுவசி; இப்போது நீ இருக்கும் நிலையையும், முன்பு நீ இருந்த நிலையையும் ஒப்பிட்டு பார், உன்னை மீட்க நான் மட்டும் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்; நான் ஒளியாக இருக்கிறேன், நான் இருளிலிருந்து உன்னை விடுவித்திருக்கிறேன்; வசுலா, சாத்தான் அவநம்பிக்கையின் நிலையில் இருக்கிறான், அவன் உங்கள் எல்லோரையும் குழப்பவும், உங்களில் ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்கு எதிராகத் திருப்பவும், அவன் முயன்று கொண்டிருக்கிறான்; என் வேலைகள் எப்படி பல ஆன்மாக்களை மீட்டு இரட்சிக்கின்றன என்பதை அவன் அறிவான், இதனால்தான் அவன் என் திட்டங்களைக் குலைக்க விரும்புகிறான், அவற்றிக்கு எதிராகப் போரிடுகிறான்; நான் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன், அப்போஸ்தலர் நடபடி இரண்டாம் அதிகாரத்தை வாசி; என் ஆவியானவர் மேலிருந்து பலருக்குக் கொடுக்கப்படுகிறார்; ஆனாலும், எப்போதும் போல, சிலர் அவரது பரம ரகசியங்களை விளக்க முடியாமல், அவரையே பரிகசித்து நகைப்பார்கள்; மனிதகுலம் முழுவதன் மீதும் என் ஆவியைப் பொழிவேன், நீங்கள் இறைவாக்குறைப்பீர்கள் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன்; இளைஞர்கள் காட்சிகள் காண்பார்கள், குறிப்பு: வழக்கமாக நம் காலத்தில் குழந்தைகள் தான் காட்சிகள் காண்கிறார்கள்; எடுத்துக்காட்டு: மெட்யூ கோரியே, பாத்திமா, கரபந்தால். உங்கள் முதியவர்கள் கனவுகள் காண்பார்கள்; உங்களில் மிகச் சிறியவனுக்கும் கூட நான் என் ஆவியை பொழிவேன்; குறிப்பு: உதாரணமாக, ஒர் ஒன்றுமில்லாமை. படைப்பே, மேலேயுள்ள ஆகாயத்தில் நான் அரும் குறிகளையும், கீழே பூமியில் அடையாளங்களையும் நான் காட்சிக்கு வைப்பேன்! நீ உண்மையாகவே இந்தத் தீர்க்கதரிசனத்தைப் புரிந்து கொண்டிருக்கிறாயா? என் கைவேலைகளில் விசுவாசம் கொள்ளாதிருக்கிற என் போதகர்களிடம், பழமொழிகளின் மறைவான பொருளைத் தேடும்படியாகவும், அனைத்து மூப்பர்களின் ஞானத்திற்குள் உற்று நோக்கும் படியாகவும் நான் அதிகாரப்பூர்வமாகக் கேட்கிறேன்; அவர்கள் என் திருப்பெயரின் மேன்மையைத் தாங்கள் புரிந்து கொள்ளும்படி செய்கிற புத்தியின் ஆவியால் தாங்கள் நிரப்பும்படி கேட்க வேண்டும்; சாத்தானின் வழிகளைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள், அவனுடைய துர்புத்திகளைப் பற்றி நான் உங்களை முன்னமே எச்சரித்திருக்கிறேன்; என் குழந்தாய், ஆண்டவராகிய நான் அளவற்ற விதமாய் உன்னை நேசிக்கிறேன்; நீ இழக்கப்படுவதை நான் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; ஆண்டவரே, ஆனால் போலியான காட்சிகளும் வெளிப்பாடுகளும் கூட இருக்கின்றனவே! ஆம், இருக்கின்றன, ஆனால் வெகுவிரைவில் நான் அவற்றின் மூடுதிரையை அகற்றி, அவை போலியானவை என்று காட்டுவேன்; தன் குழந்தை, ஆண்டுக்கு ஆண்டு, தவறான பாதையில் செல்வதைப் பார்த்துக்கொண்டு, எந்தத் தந்தைதான் அவனை எச்சரிக்காமல் இருப்பான்? அல்லது தன் குழந்தை ஏமாற்றப்படுவதைப் பார்த்துக்கொண்டு, எந்தத் தந்தை மௌனமாக இருப்பான்? அவன் அவனை எச்சரித்து, சத்தியத்தை அவனுக்கு காட்ட மாட்டானா? அப்படி இருக்க, அன்பாகவும், இரக்கமாகவும் இருக்கிற நான் மௌனமாய் இருந்து விடுவேனா, அந்த ஆபத்துகளுக்குத் திறப்பானவர்களாக நீங்கள் இருக்கும்படி விட்டுவிட்டு, உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும்படி உங்களிடம் ஓடி வராமல் இருந்து விடுவேனா?... முயற்சி செய்து புரிந்துகொள்... குறிப்பு: இறைவன் ஒரு பொறுமையுள்ள தந்தையை போல் நிதானமாக பேசினார். என் இறைவா, எங்கள் எல்லோரிடமும் உமக்குள்ள பொறுமைக்காக உமக்கு நன்றி. உன் இரக்கம் உண்மையாகவே பெரிதாய் இருக்கிறது. ஆ, வசுலா, அவர்கள் மட்டும் இந்த என் இரக்கத்தைப் புரிந்து கொள்வார்கள் என்றால்! நான் அவர் மீது சாய்ந்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக நான் உணர்ந்தேன். நீ என் மீது சாய்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் படைப்பு முழுவதும் என் மீது சாய்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்;