இயேசு ஜெபம், பரிகாரம், பதிலன்பு ஆகியவற்றை வேண்டுகிறார்; உலகம் மனம் திரும்பி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்கிறார். "உங்கள் நாட்டின் இருளை ஆசீர்வாதங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறி, குழந்தையைப் போல் தம்மிடம் வரும்படி அழைக்கிறார். தம் திருச்சபையை எந்த சக்தியும் அழிக்க முடியாது என்றும் சொல்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 104. அக்டோபர் 8, 1989. டோரினோ, டியூரின், ஞாயிற்றுக்கிழமை. நான் புனித அடக்கத் துயிலின் பேராலயத்திற்கு சென்றேன். ஜெபித்து இயேசுவிடம் பேசிய பிறகு நான் வெளியே போனேன். ஒரு மிகப்பெரும் மகிழ்ச்சியை நான் என்னில் உணர்ந்தேன். ஆண்டவர் தம் மகாபெரும் அன்பை கடந்த வருடங்கள் அனைத்திலும் நான் ஒருபோதும் அறியாதிருந்த ஓர் அன்பை எனக்கு காட்டியதற்காக நான் அவரைப் புகழ்ந்து போற்றினேன். சரியாக அதே நேரத்தில் ஒரு பலமான தூப நர்மணத்தால் நான் மூடப்பட்டேன். அவருடைய அடையாளத்தின் காரணமாக என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. சான் டொமினிக்கோ கோவிலுக்கு நடந்து சென்றோம். அங்கேதான் 2 வருடங்களுக்கு முன் என் ஒன்றுவிட்ட சகோதரி நம் பரிசுத்த அன்னையை ஆலயத்திற்குப் பக்கவாட்டு வாசலுக்கு மேலாக காட்சி கண்டாள். அன்று ஜெபமாலை மாதா திருநாளாக இருந்ததால் மாதா எங்களை உள்ளே வரும்படி அழைத்தார்கள். அப்போது எங்களுக்கு அது தெரியாது. பூசை தொடங்குவதற்கு வெகு முன்னதாகவே நாங்கள் உள்ளே போய்விட்டோம். ஆகவே அங்கே அமர்ந்திருக்கையில் நான் இயேசுவை ஆராதித்துக் கொண்டிருந்தேன். பிரெஞ்சு மொழியில் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். இதை நினைவு கூர்ந்தவளாக நான் அவரிடம் ஆங்கிலத்தில், "நான் ஏன் உம்மிடம் பிரெஞ்சு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறேன்? நான் உம்மிடம் ஆங்கிலத்தில் பேசுவேன்" என்றேன். உடனே இயேசு என்னிடம், "நீ உன் இதயத்தைக் கொண்டு என்னிடம் பேசுவதையே நான் விரும்புகிறேன்" என்றார். மேலும் தமது தூப நர்மணத்தை அவர் என் மீது பொழிந்தார். அக்டோபர் 9, 1989. சமாதானம் உன்னோடு இருப்பதாக. இரவில் வந்து என் திராட்சைத் தோட்டத்தை அழித்துவிட இன்னும் முயல்பவர்களுக்காக ஜெபி. என் பசுலா, இந்த ஆன்மாக்களின் மீது என் கடும் கோபம் தணியும்படியாக ஜெபி. என்னிடம் காயங்கள் உள்ளன; அவை இந்த தலைமுறையின் எல்லா குற்றங்களாலும் பற்றி எரிகிற என் பிதாவின் நீதியை வெகுவாக கிளறி விடுகின்றன. என் பரிகாரப் பலியை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதையும், என் திருவுடல் எப்படி காயப்படுத்தப்பட்டு, கசைகளால் அடிக்கப்பட்டு கிழிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் காணும்போது, நாடுகளை சிதறடித்து அவற்றை வெறும் புழுதி குவியலாக மாற்றிவிட வேண்டும் என்ற அவருடைய உத்வேகம் பெரிதாய் இருக்கிறது. இந்த பூமி முழுவதற்கும் என்ன நேரப் போகிறதோ என்பது பற்றி என் தூதர்கள் நடுங்குகிறார்கள். என் அப்பா தங்களை பலியாக்குபவர்களும் என்னை அன்பு செய்பவர்களுமாகிய ஒரு சில ஆத்துமங்களின் காரணமாக மட்டுமே சினம் தணிகிறார். ஆ, பசுலா, என் வேதனைகள் பெரியவை. சிறிய ஆன்மாவே, பேரார்வத்தோடு நான் உன்னை அன்பு செய்கிறேன். தாராளமுள்ள ஆத்துமங்களை, மற்றவர்களுக்காக பாவப் பரிகாரம் செய்ய மனதாய் இருக்கிற ஆன்மாக்களை நான் மேலும் பரிசுத்தப்படுத்துகிறேன், சுத்திகரிக்கிறேன். அன்பின் பலிப் பொருட்களாக, என் திருப்பாடுகளின் பலிப் பொருட்களாக ஆகக்கூடிய பலி ஆன்மாக்கள் எனக்கு தேவைப்படுகின்றன. தங்கள் சொந்த சுயத்திற்கு மறிக்கும் பலி ஆன்மாக்கள். என் சிலுவையைப் பகிர்ந்து கொள்ள மனதாய் இருக்கிற பலி ஆன்மாக்கள். என் சொந்த கரத்தால் உயிருள்ள பாடுபட்ட சுரூபங்களாக உருவாக்கப்பட மனதாய் இருக்கிற தாராளமுள்ள ஆன்மாக்கள் எனக்கு தேவை. வேறு எந்த விதத்தில் என் பிதாவின் கரம் உங்களைத் தாக்காதபடி நான் தடுத்துக் கொள்வேன்? உலகம் மாற வேண்டும். மனம் திரும்ப வேண்டும். பரிசுத்தமாக வாழ வேண்டும். என் புனிதப் பெயர் அவசங்கை செய்யப்படுவதை இனியும் அனுமதிக்க என்னால் முடியாது. என் திருப்பாடுகள் என் மறையுடலில் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. என் திருப்பாடுகளில் எந்த அளவுக்கு துன்புற்றேனோ அதே அளவுக்கு இப்போதும் துன்புறுகிறேன். மகளே, நான் திரும்பத் திரும்ப கல்வாரிக்கு செல்லும் அதே பாதையில் நடக்கிறேன். ஒவ்வொரு மணி நேரமும் நான் மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறேன். அன்பாய் இருக்கிற எனக்கு இதெல்லாம் தகுதிதானா? உம் அன்பின் பொருட்களாக நாங்கள் மாறி, மற்றவர்களுக்காக பரிகாரம் செய்யக்கூடியவர்கள் ஆகும்படி ஆண்டவராகிய இயேசுவே, உம் உயிர் மூச்சை எங்கள் மீது ஊதுவீராக. எனக்கு சொந்தமானவர்களே, உங்கள் அன்புக்கொண்டு என்னை நீங்கள் விடுவிக்க முடியும். என்னை நேசித்து பரிகாரம் செய்யுங்கள். உபவாசம் இருங்கள். பரித்யாகம் செய்யுங்கள். இந்த எல்லா காரியங்களும் என் தந்தையின் கடுஞ்சினத்தை நிறுத்தி வைக்கின்றன. பசுலா, உன்னை நிரப்ப என்னை அனுமதி. உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி. ஆ, ஆ மகளே, உன் கண்ணீர் என்னைத் தேற்றுகிறது. என் மலரே, உன் கண்ணீர்த் துளிகள் என் கண்ணீரில் கலந்து ஒன்றாகட்டும். அவர் சாந்தப்படுத்தப்படுவார். இயேசுவாகிய நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். உங்கள் வீடுகளில் நீங்கள் வைத்திருக்கிற எல்லா பக்திப் பொருட்களையும் ஆசீர்வதிக்கிறேன். குறிப்பு: "ஓ, உமக்கு ஆறுதல் தர நான் எவ்வளவு விரும்புகிறேன்" என்று நான் இயேசுவிடம் சொன்னேன். இதை திரும்பச் சொல். குறிப்பு: "இயேசு வீபக்குள்ளானவராக, இதை திரும்பச் சொல்" என்றார். அவருடைய திரு இருதயம் மகிழ்ச்சியால் துள்ளுவதை நான் உணர்ந்தேன். ஓ, உமக்கு ஆறுதல் தர நான் எவ்வளவு விரும்புகிறேன். ஆ, பசுலா, நீ எனக்கு ஆறுதல் தர விரும்புவதன் மூலம் எனக்கு ஆறுதல் தருகிறாய். நான் எனக்கு ஆறுதல் தருவதற்காகவே உன்னைப் படைத்திருக்கிறேன். எனக்கு ஓய்வளிக்கும்படியாகவும், என்னை அன்பு செய்யும்படியாகவும், என் துன்பங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும்படியாகவும் நான் உன்னைப் படைத்திருக்கிறேன். விரைவில் நான் உன்னோடு இருப்பேன் என்பதை நினைவில் வை. அக்டோபர் 10, 1989. என் ஆன்மா இன்று உமக்காக இயங்குகிறது. உம்மால் உருவாக்கப்படும்படி நான் என் இதயத்தையும் என் ஆன்மாவையும் உமக்கு தந்திருக்கிறேன். என் ஆன்மாவை தம்மிடம் உயர்த்தவும், தமது மகாபெரும் அன்பையும் இரக்கத்தையும் எனக்கு காட்டவும், என் ஆண்டவர் தமது முழு மகிமையொளியிலும் மகத்துவத்திலும் என்னிடம் வந்திருக்கிறார். அவர் தமது அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் அனைத்து மக்களினங்களுக்கும் அறிவிக்கும்படியாக தயவோடு என்னை உயர்த்தி இருக்கிறார். அவருடைய அன்பு நித்தியமானது. அன்புக்குரியவளே, என் திரு இருதயத்திற்குள் எளிதாக நுழைய வசதியாக எப்போதும் சிறியவளாகவே நிலைத்திரு. அன்பு உன்னை அன்பு செய்கிறது. நான் சொல்வதைக் கேட்டு எழுது. சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. நானே சமாதானம். நானே அன்பு. என் திராட்சைத் தோட்ட நிலங்கள் இறந்து கொண்டிருக்கிற உங்கள் நாட்டிற்கு உணவளிக்க போதிய கனிகளைப் பிறப்பிக்கும்படியாக என் திராட்சைத் தோட்டத்தை உங்கள் நாட்டிலும் விரிவுபடுத்தும்படி என் அளவற்ற அன்பின் காரணமாக நான் உங்கள் நாட்டுக்கு வருகிறேன். என் தெய்வீக எழுத்துக்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றன. அவை உரிய நேரத்தில் தேவையானவை ஒவ்வொன்றையும் தருவதால் அவை அனைத்தும் நல்லவையாய் இருக்கின்றன. பக்தியுள்ள குழந்தைகளே, என் குரலைக் கேட்டு வசந்தகாலம் வரும்போது மலர்கள் மலர்வதைப் போல் மலருங்கள். உங்கள் மீது வீசப்படும் என் மாசற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டு மலருங்கள். நான் உங்கள் நாட்டின் இருளை ஆசீர்வாதங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறேன். உங்கள் பரிதாபமான ஆன்மாவை குணப்படுத்த நான் விரும்புகிறேன். நான் உங்கள் சோர்ந்துபோன ஆன்மாவில் ஓய்வெடுக்க விரும்புகிறேன். ஆகவே என் திறந்த கரங்களுக்குள் உங்களைத் திணித்துக் கொள்ளுங்கள். நான் என்னிடம் திரும்பி வரும்படி உங்களை அழைக்கும் உங்கள் மீட்பராக இருக்கிறேன். என் குழந்தைகளே, மந்த நிலையுணர்வு அநேக நாடுகளை மூடி அவற்றில் பல நாடுகளை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியுள்ளதைப் பாருங்கள். நான் மேலிருந்து கடும் அவஸ்தையோடும் வேதனையோடும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று ஆண்டவராகிய நான் உங்கள் இதயத்தைத் தேடுகிறேன். ஏனெனில் எனக்கு தேவையானதெல்லாம் அன்பு. பதிலன்பு மட்டுமே. வாருங்கள், ஒரு குழந்தை தன் தந்தையை நம்பிக்கையோடு அணுகி வருவது போல இதய எளிமையோடு என்னிடம் வாருங்கள். உங்கள் பலவீனத்தை எனக்கு காட்டியபடியும், உங்கள் பிரச்சனைகளை என்னிடம் சொல்லியபடியும் கூட என்னிடம் வாருங்கள். பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா நீங்கள் கூறுவதைக் கேட்கட்டும். நானே அன்பு. ஒரு பதிலன்புக்காக தாகமாய் இருக்கிற அன்பின் பக்திக்குரிய ஆதாரம். என் வேண்டுகோளை மறுக்காதே. என் குழந்தாய், உன்னைச் சூழ்ந்துள்ள சோதனைகளை மறுத்துவிடு. சாத்தான் காலூன்ற இடம் தர மறுத்துவிடு. நான் உனக்கு எவ்வளவு அருகில் இருக்கிறேன் என்றும் உன் ஆன்மாவை என்னிடம் தூக்கிக் கொள்ளவும், உண்மையான உணவுக்கு உன்னைப் பழக்கவும் நான் எவ்வளவு ஆவலாக உள்ளேன் என்றும் நீ அறிவாயானால் என்னை புரிந்துகொள்ள முயற்சி செய். என் திருச்சித்தத்தை உணர்ந்துகொள்ள முயற்சி செய். உன் வினோத பிரியத்தை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் இங்கே இராதே. கற்றுக் கொள்வதற்காக இங்கே இரு. எனக்காக மட்டும். உன்னில் என் இல்லத்தை அமைத்துக் கொள்ள என்னை அனுமதிப்பதற்காக மட்டும் உன் இதயத்தை அகலப்படுத்து. ஒழுங்கின்மை, பகுத்தறிவு வாதம், சுயகர்வம், இன்னும் மற்ற பாவங்களால் உன்னிலுள்ள என் ஆவியை மூச்சுத்திணறடிக்காதே. என்னை மூச்சுத்திணறடிக்காதே. என் ஆவி உன்னில் சுவாசிக்க அனுமதி. உன் கண்களை மோட்சத்தை நோக்கி உயர்த்தி நான் என் தந்தையிடம் ஜெபித்து வந்துள்ளது போல மௌனத்தில் ஜெபி. உன் இதயத்தோடு ஜெபி. உன் ஜெபத்தை அவர் கேட்பார். அன்போடு ஜெபி. அவர் உன்னை மறுக்கமாட்டார். விசுவாசத்தோடு ஜெபி. உன் மன்றாட்டை அவர் மறுக்கமாட்டார். நீ செய்வதெல்லாம் அன்புக்காக. அன்போடு செய். நான் மௌனமாகவோ, அசைக்கப்படாமலோ அல்லது உன் வேண்டுதலுக்கு பதிலளிக்காமலோ இருக்கமாட்டேன். ஏனெனில் நான் இரக்கம் நிறைந்தவராகவும் பரிவிரக்கம் நிறைந்தவராகவும் இருக்கிறேன். நான் சிதைவுகளிடையே என் ஆட்டுக்குட்டிகளையும் என் ஆடுகளையும் தேடுகிற நல்ல மேய்ப்பனாக இருக்கிறேன். உனக்குத் தரும்படியாக என் இருதயத்தை என் கையில் தாங்கியபடி நான் உன்னைத் தேடி வருகிறேன். நீ தந்தையற்றவள் அல்ல என்பதையும், நீ முழுவதும் எனக்கு சொந்தமானவள் என்பதையும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தும்படி நான் உன்னைத் தேடி வருகிறேன். என் குழந்தாய். குறிப்பு: இயேசு மிகவும் நெகிழ்ச்சியுற்றவராக இதைச் சொன்னார். என் தந்தையின் இல்லத்தில் உனக்கு ஒரு அறை உள்ளது என்று உனக்கு நினைவுபடுத்துவதற்காக நான் வருகிறேன். உனக்கு சொந்தமான அறை. என் ஆன்மா உனக்காக இயங்குகிறது. ஒரு அறை நித்தியத்திற்கும் வெறுமையாக விடப்படும்போது என் ஆன்மா உரைக்க இயலாத அளவுக்கு கடும் வேதனைப்படுகிறது. ஆண்டவராகிய நான் உங்களுக்குத் தருவதற்காக மோட்சத்தை உங்களுக்கான ஒரு பரிசாக என் கரங்களில் கொண்டு வருகிறேன். குறிப்பு: இயேசு தம் கரங்களில் மிக அதிகமாக மின்னித் துளங்கிய ஓர் ஒளி பொருந்திய கோலத்தை வைத்திருந்ததை நான் ஓர் அந்தரங்கக் காட்சியில் கண்டேன். அது அதிதூதரான புனித மிக்கேலின் ஒளிமிக்க தன்மையை எனக்கு நினைவூட்டுவதாக இருந்தது. ஆனால் அதை நீங்கள் பெற்றுக் கொள்ளாமல் தடுக்க எதிரி விரும்புகிறான். பல தடவைகள் என் குரலை முடக்கி என் பரிசுத்த ஆவியானவரின் அருள் வரங்களை தடை செய்து என் திருவுடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்து விடும்படி பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களை அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். ஓர் இருளின் மேகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த ஆன்மாக்கள் தீமை மற்றும் வீண் பெருமையின் எஜமானர்களாக இருக்கிறார்கள். இவர்கள் என் வழிகளை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இந்த மக்கள் என் இருதயத்தில் பெரும் பாரமாக இருக்கிறார்கள். இவர்கள் வெறும் கயிறாக அச்சமின்றி என்னிடம் வருகிறார்கள். இவர்கள் வாக்குறுதியை ஏலனம் செய்கிறார்கள். என் வலது கரத்தில் மீண்டும் ஒரு மூங்கில் தடியை வைத்து என்னை நோக்கி ஏலனமாய் சிரித்து அதன்பின் என் கரத்திலிருந்து அந்தத் தடியை எடுத்து அதைக் கொண்டு என் தலையில் அடிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் திருச்சபைக்கு வெளியே இருக்கிற மக்கள் அவர்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசும்படி எனக்கு மரியாதை தரும்படி அவர்கள் முன் முழங்கால் இடுகிறார்கள். இந்த தேவ துரோகங்கள் ஒவ்வொரு நாளும் என்னை மீண்டும் சிலுவையில் அறைகின்றன. அவர்கள் என்னைத் திரும்பத் திரும்ப கல்வாரிக்கு இழுத்துச் செல்கிறார்கள். எந்தக் காரணமும் இன்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். ஆ, என் குழந்தைகளே, இந்த மக்கள் என் கண்களையும் என் தாயின் கண்களையும் ஒரு நித்திய நீரூற்றாக மாற்றி விட்டார்கள். என் சிலுவையிலிருந்து நான் இடும் கூக்குரலைக் கேளுங்கள். ஏனெனில் என்னில் அடங்காத மக்கள் கூட்டங்கள் இடைவிடாமல் நித்திய நரகத்தில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். உயிர் தருகிற ஆவியானவர் கூறுவதைக் கேளுங்கள். உங்கள் உதடுகள், உங்கள் நாடுகள் இதயத்தில் கரடுமுரடாயுள்ளன. அவை அறிவின் ஊற்றைக் கைவிட்டு விட்டன. உங்கள் கண்களை என்னிடம் திருப்புங்கள். உங்கள் தலைகளை என்னை நோக்கி உயர்த்துங்கள். வந்து என் ஒளியை கிரகித்துக் கொள்ளுங்கள். உங்கள் நாட்டை மூடியிருக்கும் அடக்கத் துகிலை அகற்ற என்னை அனுமதியுங்கள். நான் உன்னிடம் உனக்கு பதிலன்பு காட்டும்படி கெஞ்சுகிற உங்கள் ஆன்மா மற்றும் இதயத்தின் காவலராக இருக்கிறேன். நான் உன்னிடம் எனக்கு பதிலன்பு காட்டும்படி கெஞ்சுகிற உங்கள் ஆன்மா மற்றும் இதயத்தின் காவலராக இருக்கிறேன். சுயநலமற்ற அன்பு. உங்கள் சுயத்துக்கு இறந்து ஆவியானவரால் உங்கள் இதயம் வழிநடத்தப்பட அனுமதியுங்கள். ஆவியானவர் உங்களை உண்மைக்கு வழிநடத்துவார். என்னை ஏற்றுக்கொள்ள செய்வார். உங்கள் ஜெபங்களை அதிகரியுங்கள். பரிசுத்தமாக வாழுங்கள். நான் பரிசுத்தராக இருப்பதால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள். மிகப் பல இருதயங்களில் ஆட்சி செய்யும் நாஸ்திகத்தால் இன்று என் இல்லம் தகர்ந்து கிடக்கிறது என்றால். குறிப்பு: இயேசு இதைச் சொன்னபோது மிக அதிகம் துயரத்தோடு இருந்தார். உங்கள் தலைமுறை தங்கள் இதயத்தில் எனக்கு ஓர் இடம் தர மறுப்பதுதான் அதற்குக் காரணம். நான் வரும்போது அன்பும், விசுவாசமின்மையும், நம்பிக்கையின்மையையும் மட்டுமே காண்கிறேன். என் இல்லம் சிதைந்து கிடக்கிறது. பதிலன்பு, பரிசுத்தம், தீர்வுவாதம், கீழ்ப்படியாமை, வீண் பெருமை ஆகியவற்றால் அது நொறுங்கிக் கிடக்கிறது. என் தேவாலயத்தை ஊடுருவி விட்ட மாபெரும் விசுவாச மறுதலிப்பின் காரணமாக என் மகிமையான கடந்த கால மேய்ச்சல் நிலங்கள் இப்போது தரிசாக இருக்கின்றன. கீழ்ப்படிதலைக் காணவில்லை. நான் என் ஆயனுக்குரிய கோலை நான் திரும்பி வரும்வரை என் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும்படியாக ராயப்பனிடம் தந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தங்கள் தீக்குணத்தாலும் என்னுடையதல்லாமல் தங்களுடைய சுயநலத்திற்காகவும் என் ஆயனுக்குரிய கோலை முதலில் இரண்டாகவும் அதன்பின் துண்டு துண்டாகவும் உடைத்து விட்டார்கள். சகோதரத்துவம் முறியடிக்கப்பட்டுவிட்டது. பிரமாணிக்கம் சிதறடிக்கப்பட்டுவிட்டது. முன்பொரு காலத்தில் இருந்த ஊற்றுக்களாகிய அன்பு, சமாதானம், ஒருமைப்பாடாகிய ஊற்றுக்களின் அருகில் என் மந்தையின் ஆடுகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கின்றன. ராயப்பருக்கு தங்கள் முதுகை காட்டுகிற இந்த ஆயர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அவர்கள் தலைத்தாழ்த்தி தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான். அவர்களுக்கென நான் வைத்திருக்கிற ஓய்விடத்திற்கு அவர்கள் வந்து சேர வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விண்மீன்களைப் போல விழுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் மட்டும் ஆவியானவர் இன்று அவர்களுக்குச் சொல்வதைக் கேட்பார்கள் என்றால் அவர்களுடைய விசுவாச மறுதலிப்பையோ அல்லது அவர்களிடமிருந்து நான் பெறும் காயங்களையோ அவர்களுக்கு நினைவுபடுத்த மாட்டேன். இந்த குருக்களுக்காக ஜெபியுங்கள். நான் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு பெரியது. ஆனால் அவர்கள் இன்று எனக்குத் தரும் துயரங்களும் அப்படிப்பட்டவையே. அவர்கள் குனிந்து தாழ்ச்சியோடும் அன்போடும் ஒருவர் மற்றவருடைய பாதங்களை கழுவ வேண்டுமென்று ஜெபியுங்கள். உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் உங்கள் நெற்றியின் மீது என் அன்பின் பெருமூச்சுகளை சிரமத்தோடு ஊதிக் கொண்டிருக்கிறேன். பரிசுத்த தமத்திருத்துவம் ஒன்றாய் இருப்பது போல நீங்களும் ஒன்றாக இணைந்திருக்குமாறு நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன். நீங்களும் என் பரிசுத்த பெயரின் கீழ் ஒன்றாய் இருங்கள். அக்டோபர் 12, 1989. ஆண்டவரே, என்னை காப்பாற்றுவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். என் இறைவனாகிய உம்மை, உம்மை மட்டுமே நான் ஆராதிக்கிறேன். ஆ, இதை நான் அடிக்கடி கேட்க செய். உன் இதயம் என்னிடம் பேசட்டும். வந்து என்னைப் பற்றி தியானி. வழியும், உண்மையும், வாழ்வுமானவரைப் பற்றி தியானி. தியான ஆராதனைக்கு வா. ஏனெனில் என்னை மகிழ்விப்பது அதுதான். நானும் நீயும், நீயும் நானும், முகமுகமாக, முழு அமைதியில் நான் என் அழகை உனக்கு வெளிப்படுத்திக் கொண்டும் நீ என்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும். என் இருதயம் ஒவ்வொரு ஆன்மாவைப் பற்றியும் ஏங்கித் தவிக்கிறது. நான் இப்போது உன்னை என்னிடம் திரும்ப எடுத்துக் கொள்கிறேன். ஆனாலும் எத்தனை அதிகமான ஆன்மாக்களை நான் திரும்ப கொண்டுவர வேண்டியிருக்கும்? வந்து என் இருதயத்தில் ஓய்விடு. நான் உன் இதயத்தில் ஓய்வெடுக்க என்னை அனுமதி. அன்பு உன்னை அன்பு செய்கிறது. ஆண்டவரே, நான் உம்மை எவ்வளவு நேசிக்கிறேன். நான் உம்மீது எவ்வளவு ஆசை கொள்கிறேன். நான் உம்மீது எவ்வளவு தாகமாய் இருக்கிறேன். நீர் எனக்கு எவ்வளவு அதிகமாக தேவைப்படுகிறீர். இறுதியாக சுதந்திரம். குறிப்பு: இயேசு மிகுந்த மகிழ்ச்சியோடு இதைச் சொன்னார். இங்கே நான் மகிழ்ச்சியோடு கூச்சலிட்டேன். அக்டோபர் 17, 1989. கிரீஸ் ரோடோஸ். என் ஆண்டவரா? நான்தான் உன்னை வழிநடத்துபவர். யார் என்பதை நினைவில் வை. என்னோடு ஒன்றித் திரு. எப்போதும் உன் இதயத்தோடு கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன் இதயத்திலிருந்து வரும் ஜெபங்கள் என் செவிகளுக்கு இனிய இசையைப் போல் இருக்கின்றன. அக்டோபர் 22, 1989. எப்படியோ நான் ரோடோஸில் இருந்த ஒரே வாரத்தில் இந்த வெளிப்பாட்டைப் பின்பற்றுகிற மக்கள் உள்ளூர் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் குருக்களோடு இரு ஜெபக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். நாம் இப்படி சொல்வோம். புனித பிரான்சிஸும், பேட்ரோபியோவும், புனித பேசிலோடு சேர்ந்து இடைவிடா சகாய மாதாவின் வழிநடத்துதலின் கீழ் இந்த எதிர்பாராத கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒன்று புனித பிரான்சிஸ் ஆலயத்திலும் மற்றொன்று அன்னாலிப்சிஸின் ஆர்த்தடாக்ஸ் ஆலயத்திலும் நடந்தன. தந்தையா, செப்டம்பர் 30ஆம் தேதியின் செய்தியில் நீர் என்னிடம் கேட்டுக் கொண்டபடி நான் கூக்குரலிட்டு விட்டேன். நான் உண்மையை உரக்கக் கூக்குரலிட்டு விட்டேன். என் குழந்தை, பார், குழப்பமடையாதே. ஏனெனில் நான் உன்னதராக இருக்கிறேன். மேலிருந்து என் வார்த்தை உன்மீது இறங்குகிறது. என் திருச்சபையை உயிர்ப்பிக்க நான் வருகிறேன். இதை எப்போதும் நினைவில் வை. எந்த ஒரு சக்தியோ அல்லது உயரமோ அல்லது ஆழமோ என் திருச்சபையை ஒருபோதும் அழிக்கவே முடியாது. என் திருச்சபை மீண்டும் என்னால் தன் பழைய நிலையில் ஸ்தாபிக்கப்படும். என் பசூலா, நீ ஒன்றுமில்லாமையாக, முற்றிலும் ஒன்றுமில்லாமையாக இருக்கிறாய் என்றாலும் என்னால் உன்னை பயன்படுத்த முடியும். நீயாக இருப்பதை நிழலிட்டு மறைத்துவிட்டு என் ஆவி உன்னில் பேசவும் செயலாற்றவும் முடியும். உன்னில் இருக்கும் என் ஆவி எந்த ஒரு போட்டியாளனையும் சந்திக்கக் கூடாது. அஞ்சாதே. என் ஆவி ஒரு போட்டியாளனை சந்திக்கும் போது கூட அந்தப் போட்டியாளனை முற்றிலுமாக அழித்து விடுவதை நான் எப்போதும் உறுதி செய்து கொள்வேன். ஒவ்வொரு நாளும் உன்னை என்னிடம் கையளித்து விடு. என் சித்தத்தை செய்ய மனதாய் இரு. மீதியை உன் கடவுளாகிய என்னிடம் விட்டுவிடு. அக்டோபர் 23, 1989. ஆண்டவரா? நான்தான். ஒருபோதும் சந்தேகப்படாதே. நான் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் நீ எனக்குத் தருகிற இந்த சிறிய விசுவாசம். உன்னால் ஒவ்வொரு நாளும் தரப்படுகிற ஒரு மலர் செண்டு போல் இருக்கிறது. என் சிறியவளே, இந்த முறையில் நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன். குறிப்பு: நான் தினமும் அவரிடம் வந்து என் கரத்தைப் பயன்படுத்த அவரை அனுமதிக்கும் போது என்னும் பொருளில் இயேசு இப்படிச் சொன்னார். எனக்கு எதையும் மறுக்காதே. என் இறைவனாகிய என்னைப் போல் கோபம் கொள்ள தாமதி. நன்மை செய்வதில் விரைவாய் இரு. எனக்கு பிரமாணிக்கமாய் இரு. என் ஆன்மாவின் அன்புக்குரியவளே, உன் சித்தத்தையும் உன் ஆன்மாவையும் உன் இதயத்தையும் எனக்குக் கையளிக்க சித்தம் கொண்டவளே, பயப்படாதே. ஏனெனில் நீ உன் தந்தையின் கரங்களில் இருக்கிறாய். ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதை விட அதிக அற்புதமானது என்ன இருக்கிறது? எனக்கு எதையும் மறுக்காதே. நான் முழுமையாகக் காணப்படும்படியாக உன்னை முழுவதுமாக அழித்து விடு. என் வல்லமை உன் ஒவ்வொரு பாகத்தையும் ஆக்கிரமிக்கும்படி சிறியவளாகவே நிலைத்திரு. அனுதினமும் உன் சுயத்திற்கு இறந்து விடு. நானே எல்லாமாக இருக்குமாறு ஒன்றுமில்லாமையாக இரு. நான் இந்த முறையில் மகிமை பெறும்படியாகவும் என் விருப்பப்படி உன்னைப் பயன்படுத்தும்படியாகவும் குழந்தைக்குரிய விசுவாசத்தோடு என்னை விசுவாசி. நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பு, அன்பு, அன்புதான். நீ என் திருப்பெயரில் அன்போடு செய்வதெல்லாம் என்னை மகிமைப்படுத்துகிறது, உன்னை சுத்திகரிக்கிறது. அன்பிற்காக அன்போடு நற்செய்தி அறிவி. அன்றாடம் என் திரு இருதயத்திற்குள் நுழைந்துகொள். நான் உன் இதயத்தில் ஓய்வுகொள்ள என்னை அனுமதி. சமாதானமாய் இரு. ஏனெனில் நானே சமாதானம். நான் உனக்கு என் அப்பத்தை அனுதினமும் தருவேன் என்று உனக்கு வாக்களிக்கிறேன். இயேசுவாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன். என்னிடம் உன் ஆன்மாவைக் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். குறிப்பு: மோட்சத்தில் என்னும் அர்த்தத்தில் இயேசு இப்படி கூறுகிறார். ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். என் ஆண்டவரும் மீட்பருமானவரே, நானும் உம்மை வாழ்த்துகிறேன்.