இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் துன்பத்தையும், தம் சொந்த மக்களின் விசுவாச மறுதலிப்பையும் பகிர்ந்து, தாம் எதிர்பாராத விதமாக ஒரு திருடனைப் போல வருவேன் என்று எச்சரிக்கிறார். "படைப்பே, இப்போதே மனம் திரும்பு, நான் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அழைக்கிறார். இதயங்களைத் திறந்து தம்மிடம் வரும்படியும் கேட்கிறார்.

Show Notes

அத்தியாயம் 72: நான் எதிர்பாராத விதமாக ஒரு திருடன் போல உன்னிடம் வருவேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் துன்பத்தையும், தம் சொந்த மக்களின் விசுவாச மறுதலிப்பையும் பகிர்ந்து, தாம் எதிர்பாராத விதமாக ஒரு திருடனைப் போல வருவேன் என்று எச்சரிக்கிறார். "படைப்பே, இப்போதே மனம் திரும்பு, நான் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அழைக்கிறார். இதயங்களைத் திறந்து தம்மிடம் வரும்படியும் கேட்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 29/06/1988 - நான் துன்பப்படுகிறேன், என்னை நேசி
02:53 03/07/1988 - நீதியின் கிண்ணம்; திருடனைப் போல வருவேன்
07:43 11/07/1988 - உன்னை ஒப்புக்கொடு; திருச்சபைகள் ஒன்றிணைதல்
11:50 14/07/1988 - உங்கள் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன்
17:57 17/07/1988 - சாம்பிகா, மெரினா திருநாள்
18:50 25/07/1988 - ஜெருசலேமே, நான் உன்னிடம் வருவேன்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #ThiefInTheNight #CupOfJustice #ReturnToGod

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 72. ஜூன் 29, 1988 ஆண்டவரே! நான்தான்; மலரே, நான் மனிதகுலம் முழுவதன் மீதும் கொண்டுள்ள இந்த அன்பு ஒருபோதும் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டதில்லை; நான் துன்பப்படுகிறேன்! நான் ஆழ்ந்த விதமாகத் துன்பப்படுகிறேன்; எனக்கு மிகவும் பிரியமான ஆன்மாவே, என்னை இளைப்பாற்று, என்னை நேசிப்பதன் மூலம் என்னை இளைப்பாற்று, ஓ ஆண்டவரே, உம் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உம் துன்பங்களைத் தணிக்க என்னால் முடியும் என்றால், அதைச் செய்ய என்னை அனுமதியும்; என்னைப் பயன்படுத்தும், என் ஒவ்வொரு மூலக்கூறையும் பயன்படுத்தும், அளவற்ற விதமாக உம்மை நேசிக்க எனக்குக் கற்பியும். என் திரு இதயத்தின் வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம்; வசுலா, நீ என் சிலுவையைப் பகிர்ந்து கொள்கிறாய் என்பதைப் புரிந்துகொள், ஓ வசுலா, நீ என் திருப்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறாய்! என் இரத்தம் என் திருவுடலிலிருந்து ஆறுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது, நான் என் சொந்த மக்களால், என் திருச்சபையின் தேவாலயப் பலிபீடப் பகுதியிலேயே உள்ள விசுவாச மறுதலிப்பால், கர்தினாள்களால், ஆயர்களால், குருக்களால், நான் மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறேன், என் மிக நெருங்கிய நண்பர்கள் என்னைக் காட்டிக் கொடுக்கிறார்கள்; நான் அநேகரால் கைவிடப்பட்டிருக்கிறேன்; நான் அநேகரால் கசையால் அடிக்கப்பட்டிருக்கிறேன்; நான் மிக அன்யோனியமான நண்பர்களால் குத்தித் துளைக்கப்பட்டிருக்கிறேன்; நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன், நான் இரண்டாவது பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்; என் ஆண்டவரே, என்னை நேசி, என்னை நேசி, உன் காவல் சம்மணசானவர் உன்னிடம் கூறிய அதே வார்த்தைகளை நானும் உச்சரிக்கக் கூடியவராய் இருப்பேனாக; அவருடைய வார்த்தைகள்: "நீ உன் சம்மணசானவரை நேசித்ததுபோல எந்த மனிதனும் தன் சமணசானவரை ஒருபோதும் நேசித்ததில்லை;" சிறியவளே, ஒருநாள் நானும் உன்னிடம்: 'உன் காலத்தில் நீ என்னை நேசித்ததுபோல, வேறு எந்த மனிதனும் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை' என்று சொல்லக்கூடியவராக நான் இருப்பேனாக; ஜூலை 3, 1988 ரோட்ஸ். என் ஆண்டவரே? குழந்தாய், சமாதானம் உன்னோடு இருப்பதாக; என் திருச்சபை புத்துயிர் பெறும், ஆனால் இந்த புதிப்பித்தலுக்கு முன்பாக, அது இன்னும் அதிகமாகத் துன்பப்படும்; குறிப்பு: இப்போது அது துன்பப்படுவதை விட அதிகமாக. அது தன் துன்பங்களின் தொடக்கத்தில் இருக்கிறது; இதோ, என் நீதியின் கிண்ணத்தைப் பார்; விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் அழகிய தங்கக் கிண்ணத்தை நான் பார்த்தேன்; அது விளிம்புவரை நிரம்பி இருந்தது, யாராவது அதை அசைத்தால், அது நிச்சயமாக சிந்திவிடும். அது எவ்வளவு நிரம்பி இருக்கிறது என்று பார்த்தாயா? அது நிரம்பி வழியும் அளவுக்கு மிக அருகில் இருக்கிறது; படைப்பே, அது நீண்ட காலத்திற்கு முன் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சாபத்தை வெளிப்படுத்தியபடி உன் மீதுதான் ஊற்றப்படும்; நீ இருளுக்குள் மூழ்கடிக்கப்படுவாய்; நான் எதிர்பாராத விதமாக, ஒரு திருடனைப் போல் உன்னிடம் வருவேன்; நான் உங்களுக்கு எச்சரிக்கைகளைத் தந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் விழிப்பாய் இருக்கும்படியாக நான் உங்களுக்கு அடையாளங்களைத் தந்து கொண்டிருக்கிறேன், ஆனால் நீங்களோ அவற்றை நிராகரிக்கிறீர்கள், நீங்கள் காலங்களின் முடிவை ஒப்புக்கொள்ள மனதில்லாமல் இருக்கிறீர்கள், நான் எவ்வளவுதான் உங்களை எச்சரிக்க முயன்றாலும், என்னில் உங்கள் அவநம்பிக்கை முழுமையானதாக இருக்கிறது; என் எச்சரிக்கை மாபெரும் தயவிரக்கத்தோடு உங்களை மனம் திருப்பும்படி, உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தும்; படைப்பே, உனக்கு ஐயோ கேடு! உங்கள் அவி விசுவாசத்தைத் தீவிரப்படுத்தி, இன்னும் அதிகமாக எனக்கு எதிராகத் திரும்பவிருக்கும் அவிவிசுவாசிகளாகிய உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் ஆவி தெளிவின்மையால் சூழப்பட்டு, தெளிவின்மையாகவே இருப்பவனால் ஒரு நீரோட்டத்தில் இழுக்கப்படுவதுபோல் இழுக்கப்படும்; குறிப்பு: இதே சொல்கையில் கடவுள் வேதனையில் இருந்தார். துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். படைப்பே, நான் உன் மீது எவ்வளவாகப் பரிதாபப்படுகிறேன், நீ என்றென்றைக்குமாக இழக்கப்படுவதைக் கண்டு நான் எவ்வளவு துன்பப்படுகிறேன்; நான் என் உயிர்மூச்சை ஊதி உயிர்பெறச் செய்து, நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே என்னால் அர்ச்சிக்கப்பட்டவர்களாகிய என் குழந்தைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்! எத்தனை அதிகமானோர் இந்த நீரோட்டத்தில், முழு இருளுக்குள்ளும், நித்திய அழிவிற்குள்ளும் இழுக்கப்படுவார்கள் என்பதைக் கண்டு என் இதயம் நொறுக்கப்படுகிறது! படைப்பே, உன் பாவங்கள் இரத்தச் சிவப்பாக இருந்தாலும், நான் உன்னை மன்னிக்க முழுவதும் சித்தமாய் இருக்கிறேன்; வா, என்னிடம் வா, உன் தந்தையாகிய என்னிடம் திரும்பி வா; நான் உன்னை வரவேற்று, ஊதாரி மகனின் தந்தையை விட ஆயிரம் மடங்கு அதிக அன்போடு உன்னை நடத்துவேன்; என் கிண்ணம் நிரம்பி வழிந்து, உன்மீது அளவற்ற கொப்புளங்களை உண்டாக்கி, உன்னையும் உன்னைச் சுற்றியுள்ள மற்ற எல்லா உயிரையும் தீய்த்து விடுவதற்கு முன்பாக, என்னிடம் திரும்பி வந்துவிடு; நீ சுவாசிக்க விரும்புவாய், ஆனால் உள்ளுக்குள் உன்னை எரித்து, ஓர் உயிருள்ள தீப்பந்தமாக உன்னை ஆக்குகிற சுட்டெரிக்கிற காற்றைத்தான் நீ உள்ளிழுப்பாய்! படைப்பே, இந்த வேலை எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாக மாறியுள்ளது என்பதைப் புரிந்துகொள், ஏனெனில் இன்று மரங்கள் இன்னும் பூப்பூத்துக் கொண்டிருப்பதை நீ பார்க்கிறாய், ஆனால் நாளைக்கு எதுவும் மிஞ்சியிராது; நீ சாத்தானின் புகையால், ஒர் ஆபத்தான மூடுதிரையால் மூடப்பட்டிருப்பாய்; ஓ, இந்தப் பேரிடர்களும் பெரும் இயற்கை அழிவுகளும் உன் தீச்செயல்களாலும், உன் விசுவாச மறுதலிப்பாலும், எனக்கு எதிரான உன் கலகத்தாலும் உன்மீது இழுத்து விடப்படுகின்றன; இப்போதே, இன்னும் நேரம் இருக்கிறபோதே, மனஸ்தாபப்படு, இப்போதே, மனம் திரும்பு! நான் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்; வசுலா, உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; சரி, ஆண்டவரே, அனைத்தும் உம் சித்தப்படியே இருப்பதாக. உன் ஆண்டவராகிய என்னை மகிழ்ச்சிப்படுத்து, எனக்குக் கீழ்ப்படி; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; என் திரு இதயம் என் சமாதானத்தை உனக்குத் தருகிறது; ஜூலை 11, 1988 ரோட்ஸ். தனியாய் இருப்பதிலும், எழுதுவதிலும் எனக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன. அளவுக்கு அதிகமான மனிதர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். ஓ மகளே, ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; வா, உன்னிடம் உள்ள அனைத்தையும், உன் தீக்குணத்தையும், எனக்கு ஒப்புக்கொடு, நான் அதை நன்மையாக மாற்றுவேன்; ஆண்டவராகிய நான் தெய்வீகமானவனாக இருக்கிறேன், எனக்கு ஒப்புக்கொடுக்கப்படும் எதுவும் என் தெய்வீகத்தால் மாற்றப்பட முடியும்; நான் ஒவ்வொரு தனிச் செயலையும் சுத்தமாக்குகிறேன்; என் மாசற்றத்தனத்தின் வழியாக என்னால் எதையும் மாற்ற முடியும்; வசுலா, அடிக்கடி தியானம் செய், ஒரு குறுகிய நேரத்திற்குத்தான் என்றாலும், என்னிடம் வா; பிற்பாடு: ஒன்றாக இணைவதற்கு உரோமன் கத்தோலிக்கர்களும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று நான் இயேசுவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன்; நான் என் சித்தத்தை உமக்குக் கையளிக்கிறேன். அமைதியாக இருந்து கேள்; உன் சித்தத்தை எனக்குக் கையளித்து, என் பரிசுத்த இதயம் அக்களிப்பால் துள்ள அனுமதி; இந்த நேசப்பற்றுதல் உள்ள இதயத்தை மகிழ்வி; உன் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடு, நீ உன்னை படைத்த உன் தந்தையிடம் அதை ஒப்புக்கொடுக்கிறாய்; வா, நான் உனக்குப் பதில் தருவேன்; உன்னை இணைக்க விரும்புபவர் ஆண்டவராகிய நான்தான் என்று உன் சகோதரர்கள் புரிந்து கொள்ளவும், நம்பவும் வேண்டும்; குறிப்பு: உரோமைக் கத்தோலிக்கர்களும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும். நான் என் ஆசைகளை எழுதி வைக்க, உன்னை என் எழுது பலகையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று உன் சகோதரர்கள் நம்ப வேண்டி இருக்கும்; அவர்கள் எல்லோரும் தங்களுக்கென உருவாக்கிக் கொண்ட உயர்ந்த ஆசனங்களில் இருந்து கீழே இறங்கி வர மனதுள்ளவர்களாக இருக்க வேண்டி இருக்கும்; என் பழைய திருச்சபை மாசற்றதாகவும், தாழ்ச்சி உள்ளதாகவும், அன்பால் நிரம்பியதாகவும் இருந்தது; என் இன்றைய திருச்சபை அரியணைகளின் படை ஒன்றைப் போலத் தோன்றும்படி மாற்றப்பட்டுள்ளது; அவர்கள் எல்லோரும் அந்த உயர்ந்த ஆசனங்களில் இருந்து இறங்கி வந்து, நான் அவர்களுக்குத் தந்துள்ள புதிய கட்டளையை அனுசரிக்க வேண்டி இருக்கும்; நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன், அவர்கள் அந்தக் காயின்களால் வெளியே துரத்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் என் இல்லத்தை இப்போது முட்களும், முட்புதர்களும் மட்டுமே வளரும் வனாந்தரமாக மாற்றிவிட்டார்கள்; வசுலா, நேரம் அண்மையில் உள்ளது; என் திரும்பி வருதல் விரைவில் நிகழும்; அன்பானவர் அன்பாகத் திரும்பி வருவார்; அன்பு உங்களை நேசிக்கிறது; என் செய்திகளை எழுத, நான் ஏன் உன்னை தேர்ந்து கொண்டேன் என்பதை அறியத் தேடாதே; இந்த சமாதானம் மற்றும் அன்பின் செய்திக்காக ஓர் ஒன்றுமில்லாமையைத் தேர்ந்து கொண்டதால், நான் இன்னும் அதிகமாக மகிமைப்படுத்தப்படுகிறேன் என்பதை மட்டும் புரிந்துகொள்; ஏனெனில் நீ எவ்வளவு அற்பமானவளாக இருக்கிறாயோ, அவ்வளவுக்கு நான் உயர்ந்தவனாக இருப்பேன்; நீ எவ்வளவுக்குத் தாழ்ந்தவளாக இருக்கிறாயோ, அவ்வளவுக்கு உன்மீது குனிந்து உன்னை வந்தடைய நான் அதிக விருப்பமுள்ளவனாக இருப்பேன்; முற்றிலும் ஒன்றுமில்லாமையாக இரு, அதன் மூலம் என் ஆவி உன்னில் ஊதப்பட அனுமதி; நான் மட்டுமே காணப்படும்படி, உன்னை முழுமையாகத் துடைத்து அழித்துவிடு; ஆன்மாவே, என்னை அடிக்கடி சூழ்ந்து கொள்வதன் மூலம், உன் சித்தத்தை எனக்குக் கையளிப்பதன் மூலம் என்னை மகிழ்ச்சிப்படுத்து; நீ அன்பானவரிடம் உன்னை அர்ப்பணிக்கிறாய்; நாங்கள், நாம்? ஆம்! என்றென்றும். ஜூலை 14, 1988 நான் ரோட்ஸில் இருந்தபோது, இயேசு பல பாடுபட்ட சுரூபங்களையும் பதக்கங்களையும் முத்தமிட்டு அவற்றை ஆசீர்வதித்தார். குழந்தாய், சமாதானம் உன்னோடு இருப்பதாக; என்னை மகிழ்ச்சிப்படுத்து, என்னை காணும்போது, என்னைப் பார்த்துப் புன்னகை செய்; ஆ, வசுலா, அவர்கள் என்னைத் தங்கள் வாசலிலேயே வைத்திருக்கிறார்கள்... என்னை மறந்துவிட்டு, தங்கள் அற்ப கடமைகளைக் கவனிக்கத் திரும்பிப் போய்விட்டார்கள், பார்த்தாயா? எழுந்திருங்கள்! நான் உங்கள் வாசல்களில் இருக்கிறேன்! நான் ஒரு பிச்சைக்காரனைப் போல இருக்கிறேன்! உங்கள் அரசர் ஒரு பிச்சைக்காரனைப் போல் உங்களிடம் இரந்து கேட்டுக்கொண்டிருப்பதைப் பாருங்கள்; நான் உங்களிடம் அன்பை இரந்து கேட்கிறேன்; நல்லவர்களாக இருங்கள்! உத்தமர்களாக இருங்கள்! ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள்; அடிக்கடி ஜெபியுங்கள், உங்கள் சொந்த ஆவல்களுக்காக மட்டும் ஜெபிக்காதீர்கள்; அன்பினால் என்னிடம் வாருங்கள்! ஆண்டவராகிய நான் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் ஒருபோதும், மோட்சத்திற்கு நீங்கள் வந்து சேரும் வரையிலும், உங்களால் புரிந்து கொள்ள இயலாத அன்பைக் கொண்டு நேசிக்கிறேன்; ஆண்டவராகிய நான் உங்களை அணைத்துக் கொள்வது போல, என்னை அணைத்துக் கொள்ளுங்கள்; இனி பாவம் செய்யாதீர்கள்.... நான் உங்கள் பலவீனங்களையும், உங்கள் நோய்களையும் அறிந்திருக்கிறேன்; உங்கள் ஆன்மாவை நான் அறிவேன்; வாருங்கள், என்னிடம் வந்து எல்லாவற்றையும் எனக்குத் தாருங்கள், நான் உங்களை அழகுபடுத்துவேன்; வசுலா, அவர்கள் தங்கள் இதயங்களை முழுவதுமாகத் திறந்து, என்னை உள்ளே அனுமதித்தால், அவர்கள் என்னை இன்னும் நன்றாக அறிந்து கொள்வார்கள் என்று அவர்களிடம் கூறு; நான் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அவர்கள் மத்தியில் இருப்பேன்; ஆண்டவரே, இது நாங்கள் எல்லோரும் சந்திக்கும் போதா? ஆம், நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. குறிப்பு: இயேசு ரோதியர்களைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. வசுலா, என் குழந்தாய்; சொல்லுங்கள், புனித மாமரியே, என்னை மகிழ்வி, என் மற்ற குழந்தைகளோடு என்னிடம் மேலேறி வா; குறிப்பு: சாம்பிகா சிற்றாலயம், மத்திய தரைக்கடலுக்கு மேலாக உயர்ந்திருக்கிற ஒரு செங்குத்தான குன்றின் முனையில் இருக்கிறது. அங்குள்ள நம் அன்னையின் புதுமைச் சுரூபம் ஒன்றால் இச்சிற்றாலயம் புகழ்பெற்று விளங்குகிறது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்களுக்கு நிகழும் புதுமைகளுக்காக இது புகழ்பெற்றுள்ளது. வாருங்கள், நான் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பேன்; நான் உங்களை நேசிக்கிறேன்; நான் உங்களை வாழ்த்துகிறேன். இயேசு அதன்பின் இப்படிச் சொன்னார்: "ஆண்டவராகிய நான் அவர்களை இன்னும் எப்படி அழைக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்து; அவர்கள் என்னை அணுகி வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் அன்பிடமிருந்து விலகிச் செல்கிறீர்கள்? நான் எப்போதும் என் திவ்ய நற்கருணைப் பேழையில் இருக்கிறேன், அவர்களில் ஒருவன் என்னை சந்திக்க வருகிறானா என்று பார்க்கும்படி பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கிறேன்; அந்தோ, நான் இன்னும் காத்துக் கொண்டே இருக்கிறேன்... உங்களுக்கு எல்லாவிதமான சாக்குப்போக்குகளையும் எப்போதும் ஏற்பாடு செய்து, அவை அறிவுபூர்வமானவை, நியாயமானவை என்று உங்களை நம்பச் செய்கிற சாத்தானைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்; அவை எப்போதையும் விட அதிகம் அறிவுக்கு உகந்தவையாகத் தோன்றும்படி அவன் அவற்றை அழகுபடுத்தி, நீங்கள் என்னிடம் வரவிடாமல் தடுத்து விடுகிறான்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; அவர்களை விட அதிகமாக நான் உன்னை நேசிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்; அவர்களில் சிலர் இதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்; அவர்கள் என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியை வாசிப்பார்கள் என்றால், அவர்கள் புரிந்து கொள்வார்கள்; ஆண்டவராகிய நான் உங்கள் எல்லோரையும் ஒரே விதமாக நேசிக்கிறேன்; இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பவர்களுக்காக இதை நான் திரும்பவும் சொல்கிறேன்; ஆகவே, என்னிடம் வாருங்கள், என்னைச் சந்தியுங்கள்; வந்து என்னிடமிருந்து பருகுங்கள், இன்னும் அதிகம் பருகும்படி நீங்கள் தாகமாய் இருப்பீர்கள்; வந்து என்னை உண்ணுங்கள், அப்போது என்னை இன்னும் அதிகமாக விரும்பித் தேடுவீர்கள்; உங்கள் இதயங்களைத் திறந்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் வாசலில் நான் நின்று கொண்டிருக்க விடாதீர்கள்! உங்கள் இதயங்களில் என்னை வரவேற்பீர்களாக; உங்கள் தேவைகளை நான் அறிவேன்; உங்கள் பலவீனங்களையும் நான் அறிவேன்; உங்கள் ஆன்மாவுக்கு நான் தேவைப்படுகிறேன், என் வழியாக மட்டுமே நீங்கள் மோட்சத்தில் பிரவேசிப்பீர்கள்; உங்கள் ஆன்மா என் எதிரியால் விரிக்கப்பட்டுள்ள வலைகளில் சிக்கிக் கொள்ள, அதை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்னிடம் திரும்பி வாருங்கள், என்னை எதிர்கொள்ளுங்கள், என் பரிசுத்த வார்த்தையை வாசிப்பதன் மூலம் உங்களுக்கு நீங்களே கற்பித்துக் கொள்ளுங்கள்; என்னை வாசிப்பதில் செலவிடப்படும் உங்கள் நேரம் வீணாய்ப் போகாது; நிச்சயமாக, உங்களுடைய ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை உங்கள் இரட்சகருக்குத் தர உங்களால் முடியும்; ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; ஒருவரோடு ஒருவர் சமாதானத்தோடு இருங்கள்; நான் உங்கள் பாவங்களை மன்னிப்பது போல, நீங்களும் மன்னியுங்கள்; தீமைக்குப் பதிலாக நன்மை செய்யுங்கள்; நல்லவர்களாக இருங்கள்! உத்தமர்களாக இருங்கள்! வாருங்கள், அன்பு உங்களை நேசிக்கிறது, அன்பு ஒருபோதும் உங்களை விட்டு விலகாது; அன்பு உங்களுக்கு உதவும், இறுதிவரை உங்களை வழிநடத்தும்; ஜூலை 17, 1988 ஞாயிற்றுக்கிழமை, மெரினா திருநாள். வசுலா, மேலே சாம்பிகாவில் உள்ள என் சிறிய இல்லத்தில் என் குழந்தைகளை நான் சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் என் மாசற்ற இதயம் அக்களிக்கிறது; உங்களுடைய பரிசுத்த அன்னையாகிய நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; வாருங்கள், நாங்கள், நாம்? ஆம், புனித மாமரியே; நாங்கள் நாம். ரோதியர்கள் இயேசு முத்தமிடும்படி என்னிடம் பாடுபட்ட சுரூபங்களையும் பதக்கங்களையும் தந்தார்கள். ஆண்டவரா? நான்தான்; அந்தப் பொருட்களை முத்தமிட்டு அவற்றை ஆசீர்வதிக்க நீர் விரும்புகிறீரா? அவற்றை என் உதடுகளிடம் உயர்த்து, அவையெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்; நான் ஒவ்வொன்றையும் இயேசுவின் உதடுகளை நோக்கி உயர்த்தினேன். ஜூலை 25, 1988 மீண்டும் சுவிட்சர்லாந்தில். இயேசுவா? நான்தான்; நான் உனக்குத் தந்துள்ள ஜெபங்களை என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடு; ஆண்டவரே, அந்த மூன்று ஜெபங்களா? மிகச்சரி; அன்புக்குரியவளே, உன்னை எனக்கு முழுமையாக அர்ப்பணி; என் ஆவல்களைத் தேடு, என்னை மகிமைப்படுத்து; ஆண்டவரே, உம்முடைய உதவியுடன். என்னைச் சார்ந்திரு, நான் இறுதிவரை உன்னை வழிநடத்துவேன், அனைத்தும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும்; என் பணிகளை ஒரு திராட்சைக் கொடிக்கு ஒப்பிடலாம்; திராட்சைக்கொடி தனக்குரிய பருவத்தில் கனிகளைப் பிறப்பிப்பது போலவே, அவையும் செழித்து வளர்ந்து சரியான பருவத்தில் கனிகளைப் பிறப்பிக்கும்; உன்னைச் சூழ்ந்துள்ள சிரமங்களை எனக்காகத் தாங்கிக்கொள்; உன் கடவுளாகிய என்னைச் சார்ந்திரு; நம்பிக்கை இழக்காதே; என் குழந்தாய், உன் காலம் ஒரு வனாந்தரமாக இருக்கிறது, இந்த வறட்சி உன்னைப் பாதிக்க அனுமதியாதே; நீ என்னை நம்ப வேண்டும், நான் உன்னை மரித்தோரிடமிருந்து உயிர்ப்பிக்கவில்லையா? நான் தன்னிலேயே ஒளியும் வாழ்வுமாக இருக்கிறேன்; அவ்வப்போது உன்னைப் பரிசோதிக்க என்னை அனுமதி; கண்மூடித்தனமாக விசுவாசத்தில் உன்னை இட்டுச் செல்ல என்னை அனுமதி; நீ என் மீது கொண்டுள்ள அன்பை பரிசோதிக்க என்னை அனுமதி; நீ என் மீது கொண்டுள்ள இந்த அன்பை விரிவடையச் செய்ய என்னை அனுமதி; என் ஒளியின் குழந்தையாக இரு; என் ஒளியின் கீழ் வாழு; நான் உன்னை அழகுபடுத்துகிற இவ்வுலகின் ஒளியாக இருக்கிறேன், எனக்கு பிரம்மாணிக்கமாக நிலைத்திரு; என் நாள் நெருங்கி வருகிறது, ஜெருசலேமே, நான் ஒரு திருடனைப் போல, எதிர்பாராத விதமாக, உன்னை எச்சரிக்காமல், உன்னிடம் வருவேன்! நீ உன் ஆண்டவராகிய என்னைக் காட்டிக் கொடுத்தாய், உன் இதயத்தின் மையத்திலேயே தீமை வேரூன்றி இருக்கிறது; ஆம், ஜெருசலேமே, உனக்குள் ஈட்டியின் கூர்முனை இருக்கிறது; நம்பிக்கை துரோகமும் தப்பறையும் உன்னில் ஊடுருவியுள்ளது; உன் தீய குணம் என்னால் காணப்படாமல் போகும் என்று நீ எப்படி நம்ப முடியும்? நான் உன்னை வீசி எறியும்படி எதிர்பாராத விதமாக உன்னிடம் வந்து கொண்டிருக்கிறேன்; நான் இப்போது உன் வாசலிலேயே இருக்கிறேன், மின்னலைப் போல, நான் உன்மீது இறங்குவேன்; நீ என் வரப்பிரசாதத்தை அல்லாமல் என் எதிரியின் சக்தியை தேர்ந்து கொண்டாய்; நீ ஒளியாகி என்னைத் தேர்ந்து கொள்வதற்கு பதிலாக கருப்பு மிருகத்தை சார்ந்திருந்து தீக்குணத்தை தேர்ந்து கொண்டாய்; என் சொந்தக் கரத்தோடு நான் உன்னிடம் வந்து, உன் ஆசனங்களை அதிகாரத்தினின்று அகற்றி, உண்மைக்கு வழிமறிக்கிற தீமை செய்வோர் அனைவர் மீதும் வெற்றி கொள்வேன்; ஜெருசலேமே! உன் துன்பங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன; நான் என் நெருப்பில் உன்னை சுத்திகரிப்பேன்; நான் உன் தீய வேர்களை வேரறுத்து, அவற்றையும் என் சரீரத்தை அசுத்தப்படுத்திய எல்லா தீய கோட்பாடுகளையும் சுட்டெரிப்பேன்; நீ உன் மெய்ப்பரை விரும்பவில்லை; குறிப்பு: பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பர், வீண் பெருமையாலும், கீழ்படியாமையாலும், இணக்கமின்மையாலும் குடிவெறி கொண்டிருக்கையில், நீ பிழைத்திருக்க முடியும் என்று எப்படி நம்ப முடியும்? என் ஆவல்களில் அல்லாமல், உன் ஆவல்களிலேயே அக்கறை கொண்டு, உன் கீழ்படியாமையின் வழியாக என் ஆட்டுக்குட்டிகளை நீ பட்டினி கிடக்க செய்துவிட்டாய்; ஜெருசலேமே, நீ எனக்கு மிக அதிகமான துயரத்தைத் தருகிறாய், தன் இறக்கைகளுக்கு அடியில், தன் குஞ்சுகளை ஒன்று கூட்டி, அவற்றிற்கு அடைக்கலம் தருகிற கோழியைப் போல, உங்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கவும், உன் பிள்ளைகளை ஒன்று கூட்டவும், நான் எவ்வளவாக எப்போதும் ஏங்கினேன்; ஆனால் நீயோ மறுத்துவிட்டாய்... என் கண்களும், உன் பரிசுத்த அன்னையின் கண்களும், என் சொந்த வீட்டிலேயே இவ்வளவு அதிகமான அநீதியைக் கவனித்து, தொடர்ந்து இரத்தக்கண்ணீர் வடிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை; நான் முடிவில்லாத ஒரு அன்பைக் கொண்டு உங்களை நேசித்திருக்கிறேன், ஆனாலும், நான் என் சொந்த நண்பர்களால் நான் காட்டிக் கொடுக்கப்பட்டதும், காயப்படுத்தப்பட்டுள்ளதும் தான் நடந்துள்ளது.... என் இரக்கம் பெரியது, நான் உங்களை முழுமையாக மன்னிக்க மனதாய் இருக்கிறேன்; நான் என் காயங்களைப் பார்க்க மாட்டேன்; உங்கள் பாவங்களை மறக்க நான் சித்தமாய் இருக்கிறேன்; வசுலா, அவர்கள் இடைவிடாமல் என்னை கசையால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்; இருந்தாலும், என்னுடைய கடுமையான துயரத்தையும் மீறி, நான் அவர்களை மன்னிக்கவும், மறக்கவும் சித்தமாய் இருக்கிறேன்... குழந்தாய், வா, என் திரு இதயத்தில் தங்கியிரு; அன்பு, அன்பிற்காகத் தாகமாய் இருக்கிறது; இயேசுவின் உதடுகள் பார்ச்மென்ட் காகிதத்தை போல காய்ந்திருந்தன. இப்போது ஓய்வெடு; நான் உன்னோடு இருக்கிறேன்; என்னை மறுதலிக்கிற ஆன்மாக்களுக்காக ஜெபி; என்னை நேசிப்பதன் மூலம் என் வேதனைகளை ஆற்று; உன் கடவுளை, உன் சொந்த அப்பாவை மகிழ்வி; வா, நாங்கள் நாம்? ஆம், அப்பா, அவர்கள் நிராகரிக்கிற நம் தந்தைக்காக நான் மிகுந்த நிகழ்ச்சியையும் பரிவிருக்கத்தையும் உணர்ந்தேன். வசுலா, உன் சகோதரர்களின் மீது பரிவிரக்கம் கொள்; அவர்களுடைய வீழ்ச்சிகளின் மீது பரிதாபம் கொள்; அவர்களுடைய குருட்டுத்தனத்தின் மீது பரிதாபம் கொள், அவர்களுக்காக ஜெபி;