இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 24. மார்ச் 5, 1987. சமாதானம் உன்னோடு இருப்பதாக; வசுலா, நீ என்னை நேசிக்கிறாயா? என் தேவனாகிய யாவே, உம்மை நான் என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன், உம் அருகில் தங்கியிருக்க நான் விரும்புகிறேன். நானும் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; வசுலா, நான் சமாதானம் மற்றும் நேசத்தின் அரசராகவும், ஆட்சியாளராகவும் இருக்கிறேன்; உங்கள் முன்பாக, உங்கள் எல்லோருக்கும், என்னுடைய பரிசுத்த முகத்தை வெளிப்படுத்தியபடி நான் இருக்கிறேன்; மகளே, நான் ஞானத்தைக் கொண்டு உனக்கு அதிகம் போதிப்பேன்; உன்னைக் கொண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; என் அழைப்புகளைக் கேட்டு, அவற்றை எழுதி வைத்து, என்னை மகிழ்வி; எழுதுவதில் சோர்ந்து போகாதே; வா, எதுவும் வீணாய்ப் போகாது; ஆம், என் ஆண்டவரே. நான் உனக்கு என் ஆசீர்வாதங்களைத் தருகிறேன்; வா, என் மீது சாய்ந்துகொள்; மகளே, என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; என்னை எப்போதும் தேடு; ஒருபோதும் என்னை மறுதலிக்காதே; மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்; என் வார்த்தையை நிறைவேற்று; என் நித்திய சமாதானத்தைக் கொண்டிரு; பிற்பாடு: வசுலா, என் அருகில் தங்கியிரு; உன் மணவாளராக, உன்னில் குறைவுபடுவதையெல்லாம் மிக அபரிதமாக உனக்குத் தருவேன் என்று நான் உனக்கு ஞாபகப்படுத்துவேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எழுதப்படும்; நாம் இணைந்து பணிபுரிவோம்; எழுதுவதில் களைத்துப் போகாதே; நான் புனித மைக்கேலின் ஜெபத்தை அவருக்கு வாசித்துக் காட்டினேன். புனித மைக்கேல் எனக்கு பதிலளித்தார். கடவுளின் வல்லமையைக் கொண்டு, புனித மிக்கேலாகிய நான் ஆத்துமாக்களை அழிக்கின்ற சாத்தானையும், மற்ற எல்லா துஷ்ட அரூபிகளையும் நரகத்தில் தள்ளுவேன்; அதன்பின், நான் புனித பெர்னார்தின் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபத்தை வாசித்தேன். நேச மகளே, நான் உனக்கு உதவி செய்வேன்; என் நித்திய சமாதானத்தைக் கொண்டிரு; நான் இறுதிவரை உன் அருகில் இருக்கிறேன்; வசுலா, என் செய்தியை நிறைவேற்று; கடவுளின் வார்த்தையை நிறைவேற்று; உன் பரிசுத்த பிதாவின் மீது சாய்ந்துகொள், ஏனெனில் அவர் பூரண வல்லமையுள்ளவர்; அவரை நேசி, அவரை மகிமைப்படுத்து, இதையெல்லாம் செய்வாயா? எங்கள் அருகில் தங்கியிரு; நான் உன்னை நேசிக்கிறேன்; மார்ச் 6, 1987. வசுலா, நான்தான் உன் இரட்சகராகிய இயேசு, நீ பசியாய் இருக்கிறாயா? இயேசுவே, நான் இப்போது உண்மையாகவே பசியாய் இருக்கிறேன். எப்போதும் பசியாய் இரு; என் அப்பத்திற்காகப் பசியாய் இரு; வா, என் அப்பம் இலவசமானது; என்னிடமிருந்து உண்ணும்போது நீ நிரப்பப்படுவாய்; இயேசுவே, நான் இவ்வுலக அப்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். வசுலா, அது எனக்குத் தெரியும், உனக்கு எது வேண்டுமென விரும்புகிறாய்? இரண்டையும், இயேசுவே. உன் அப்பம் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே உன்னைத் திருப்திப்படுத்தும், ஆனால் என் அப்பத்தை உண்ணும்போது நீ நிரப்பப்படுவாய்; என் அப்பத்திலிருந்து உண்பவன் யாராயினும், அவன் என்றென்றும் உயிர்வாழ்வான்; குறிப்பு: அருள், ஆறாம் அதிகாரம், வசனங்கள் 48 முதல் 51 வரை. வசுலா, நான் உனக்கு உணவூட்டுவேன்; இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். "இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்ற இந்த வார்த்தைகளை ஒவ்வொரு உதட்டினின்றும் கேட்க நான் எவ்வளவோ ஏங்குகிறேன்! என் இருதயத்தை உணர நீ விரும்புகிறாயா? என்னைப் பார், நான் உனக்கு முன்பாக நிற்கிறேன்; நான் அவருடைய திரு இருதயத்தைப் பார்த்தேன். அவருடைய மார்பு முழுவதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. என் திரு இருதயம் நேச ஆர்வமுள்ள அன்பால் பற்றியெரிகிறது, என் இருதயம் தன் நேசத்தில் உன்னைச் சுட்டெரிக்க விரும்புகிறது; என் இருதயம் உன்னை வசீகரித்து, என்றென்றும் என்னுடையவளாக்கிக் கொள்ள விரும்புகிறது! வா, மகளே, அன்பிற்காகக் கூக்குரலிடு, சமாதானத்திற்காகக் கூக்குரலிடு, இறுதிவரை என்னோடு இணைந்திரு; வா, நாம் மற்றவர்களை உயிர்ப்பிப்போம்; அன்பே, என்னை மகிமைப்படுத்த உன்னால் இயலும்படி, உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு மனதோடும் என்னை நேசி; இயேசுவே, உம்மை நேசிப்பது வேதனையானது, ஏனெனில் உம்மோடு இருக்க விரும்பும் ஒருவர் தன் சரீரத்தை அகற்றிவிட்டு உமக்கு அருகில் இருக்க வேண்டும். அதனால்தான் நேசிப்பது வேதனையாக இருக்கிறது. உங்கள் எல்லோர் பேரிலும் எனக்குள்ள மாபெரும் நேசத்தின் காரணமாக நான் துன்பப்படுகிறேன்; நேசத்தின் காரணமாக நான் கொடூரமாகத் துன்புற்றேன்; நான் உங்கள் பேரில் கொண்டுள்ள நேசத்திற்குப் பதில் நேசம் எதையும் பெற்றுக் கொள்ளாதபோது, இன்னமும் நான் துன்புறுகிறேன்; நான் எப்படி உணர்கிறேன் என்பதை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? நேசமே, என்னை உண்மையாகவே நேசிக்கிற ஆன்மாக்கள் எனக்குத் தேவையாய் இருக்கிறார்கள்; என்னை அசட்டை செய்பவர்களுக்காகப் பரிகாரம் செய்கிற ஆன்மாக்கள் எனக்குத் தேவை; அவர்களிடம் கூறு, அன்பின் காரணமாக அவர்களுக்காக என் உயிரைக் கையளித்த பிறகும், அவர்களது அன்பு இல்லாமலும், எந்த பதிலும் இல்லாமலும், அவர்களை நேசிப்பது எப்படிப்பட்டது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்! என் சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையைச் சுமப்பதில் சோர்ந்து போகாதே; எனக்காக அதை சுமப்பது என் சோர்வுற்ற ஆத்துமத்திற்கு இளைப்பாற்றியைத் தருகிறது; நேசமே, நான் ஓய்வெடுக்க வேண்டும்; இயேசுவே, நீர் விரும்புவதை நான் செய்வேன், நீர் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்; மாலையில் என் ஆன்மா பாரமாகவும், துயரமாகவும் இருந்தது. மார்ச் 7, 1987. வசுலா, இயேசுவாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; அன்பே, நான் உன்னில் ஓய்வெடுத்துவிட்டேன்; வா, நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; என்னை நம்பு; நான் உன்னில் ஓய்வெடுத்துவிட்டதாக உணர்கிறேன்! நாம் அன்போடு பணிபுரிந்து பரிகாரம் செய்வோம்; வா, பரிகாரம் செய்வதற்கு நான் உனக்குக் கற்பிப்பேன்; நானே வாழ்வின் சகல நோய்களையும் தீர்க்கும் நோய் நிவாரணி; நானே உயிர்ப்பு; இயேசுவே, ஒவ்வொரு ஆன்மாவும் உம்மை நேசிக்க வேண்டுமென நான் எவ்வளவோ விரும்புகிறேன்! உம்முடையதைப் போன்ற மிகப்பெரும் அன்புக்குப் பதிலன்பைப் பெறாமல் இருப்பது எவ்வளவோ தாங்க முடியாத வேதனையாக இருக்க வேண்டும்! வசுலா, என் விருப்பம் உன் ஆன்மாவில் ஏற்கனவே நடப்பட்டிருக்கிறது; மகளே, மகிழ்ச்சியால் என்னை நிரப்பு, "நாம் சென்று பணிபுரிவோம்; நாம் இதை அல்லது அதை செய்வோம்" என்று சொல்லக் கற்றுக்கொள், நாம் என்ற வார்த்தையைப் பயன்படுத்து, நாம் என்றென்றைக்குமாக இணைந்திருக்கிறோம்! "பிதாவே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்று சொல்வதன் மூலம் என்னை மகிழ்வி, எனக்கு எதையும் மறுக்காதே; மகளே, என்னை மறுதலித்த ஆன்மாக்கள் எப்படித் துன்பப்படுகிறார்கள் என்பதைக் காண என் எதிரியின் இருண்ட ஆளுகையின் ஸ்தலத்திற்குள் இன்று நீ என்னைப் பின்பற்றி வருவாய்; இயேசுவே, அவர்கள் இழக்கப்பட்டுவிட்டார்களா? நரகத்தில் உள்ளவர்கள் இழக்கப்பட்டுவிட்டார்கள், ஆனால் உத்தரிக்க ஸ்தலத்தில் உள்ள இரட்சிக்கப்பட்டவர்கள், குறிப்பு: மோட்சத்திற்கு உயர்த்தப்படுவார்கள். அவர்களுக்காக ஜெபித்து, பரிகாரங்கள் செய்பவர்களின் நேசத்தால் காப்பாற்றப்படுவார்கள்; பயப்படாதே; ஏனெனில் என் ஒளி உன்னைப் பாதுகாக்கிறது; நான் உன்னோடு இருக்கிறேன்; பூமிக்கடியில் நான் இருக்கக் கண்டேன்; அது ஒரு இருண்ட நிலத்தடி; குகை போல் தெரிந்தது; நெருப்பால் மட்டுமே அது ஒளியூட்டப்பட்டது; அது ஈரமாகவும், தரை பிசுபிசுப்பாகவும் இருந்தது; நான் அநேக ஆன்மாக்களை ஒரு வரிசையில் கண்டேன்; அவர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்; அவர்களுடைய தலைகளும், வாதைப்பட்ட முகங்களும் மட்டும்தான் தெரிந்தன; அங்கே மிக இரைச்சலாக இருந்தது; இரும்பு இயந்திரங்கள் வேலை செய்து கொண்டிருந்தது போல் இரைச்சலாக இருந்தது; நிறைய கூச்சல்களும், சுத்தியல் ஓசைகளும், அலறல்களுமாக அந்த இடம் மிகப் பரபரப்பாய் இருந்தது; அந்தத் தலைகளுக்கு முன்னால் ஒருவன் நின்று கொண்டிருந்தான்; அவனுடைய கரங்கள் விரிக்கப்பட்டிருந்தன; அவனுடைய உள்ளங்கைக்குள் லாவா என்னும் எரிமலைக் குழம்பு இருந்தது. அவனுடைய மேற்கரம் வலதும் இடதுமாக அசைந்து கொண்டிருந்தது; அது சூடான லாவாவை எரிப்புண்களால் வீங்கியிருந்த முகங்கள் மீது தெளித்தான்; திடீரென நான் சாத்தான் என்று அடையாளம் கண்டுகொண்ட இந்த மனிதன் நாங்கள் அங்கு இருப்பதை உணர்ந்து திரும்பினான்; சாத்தான் பேசுகிறான். "அவளைப் பாருங்கள்!" இயேசுவின் பிரசன்னத்தையும், என் இருப்பையும் கண்டவுடன் அவன் அருவருப்போடும் கடும் கோபத்தோடும் தரையில் உமிழ்ந்தான். "ஈனப்புழுவே, அவளைப் பார்; இந்நாட்களில் நம் இரத்தத்தை உறிஞ்ச வருகிற புழுக்ககளும் கூட நம்மோடு இருக்கின்றன." அவன் என்னிடம்: "பார்." என்றான்; மீண்டும் சூடான லாவாவை அந்த முகங்களுக்குக் குறுக்கே வீசி எறிந்தான். "ஓ, எங்களைச் சாகவிடு..." என்று அவர்கள் அலறியதை நான் கேட்டேன்; அப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல காட்சி அளித்த சாத்தான், கடும் கோபத்தோடு புகைந்து கொண்டு, "பூமியின் சிருஷ்டிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் என்னிடம் வருவீர்கள்!" என்று சபதமிட்டான்; அவன் மிரட்டிக் கொண்டிருந்தாலும். இறுதியில் தான் வெற்றி பெறுவான் என்று நம்பும் அளவுக்கு அவன் ஒரு முட்டாளாக இருந்தான் என்று மட்டும் நான் நினைத்தேன். அவன் என் இழிவுபடுத்தும் சிந்தனைகளை வாசித்திருக்க வேண்டும், ஆகவே என்னை வெகுவாக மிரட்டும் விதமாக, "நான் ஒரு முட்டாள் அல்ல!" என்றான்; அதன்பின் ஒரு கொடூரமான நகைப்போடும் பரிகாசத்தோடும் அவன் அந்த பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களிடம்: "கேட்டீர்களா? அவள் என்னை ஒரு முட்டாள் என்று அழைத்தாள்" என்றான்; அதன்பின் அவர்களை ஏளனம் செய்யும் குரலில், "பிரியமுள்ள நேச ஆன்மாக்களே, அவள் சொன்னவைகளுக்காக நீங்கள் ஈடு செய்யும்படி நான் செய்வேன்" என்றான். அவன் வீசுவதற்கான புது லாவாவை எடுக்கத் தயாரானான்; நான் கடும் திகிலோடு இயேசுவிடம் திரும்பி "ஏதாவது செய்யும்! அவனைத் தடுத்து நிறுத்தும்" என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இப்படிப் பதிலளித்தார்: நான் அவனைத் தடுத்து நிறுத்துவேன்; சாத்தான் லாவாவை வீசும்படி கரத்தை உயர்த்திய நிமிடத்தில் அது அவனுக்குக் கடும் வேதனையைத் தர, அவன் இயேசுவைச் சபித்தபடி வேதனையில் அலறினான்; அதன்பின் அவன் என்னிடம். "சூனியக்காரியே, போ; ஆம், எங்களை விட்டு போய்விடு" என்று கத்தினான். நரகத்தின் வாசல்களின் அருகில் காணப்பட்ட ஆத்துமாக்களிடமிருந்து வந்த குரல்கள்; "எங்களை இரட்சியும்; எங்களை இரட்சியும்" குறிப்பு: நமது ஜெபங்களினால் நரகத்தின் வாயில் அருகில் உள்ள ஆன்மாக்களை, உத்தரிப்பு ஸ்தலத்து தாழ்நிலையில் உள்ள ஆன்மாக்களை 'உயர்த்த முடியும்'. அவர்களின் வாதைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். என்று அழுது கூக்குரலிட்டன. அதன்பின் ஒருவன் முன்னே வந்தான். அவன் சாத்தானின் உதவியாளர்களில் ஒருவன் என்று நான் புரிந்துகொண்டேன். அவன் சாத்தான் உதவியாளனிடம்: "நீ உன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறாயா? நான் உனக்குச் சொன்ன வேலையை நீ செய்கிறாயா? அவளைக் காயப்படுத்து, அவளை அழித்துவிடு, அவளை அதைரியப்படுத்து" என்றான். சாத்தான் என்னைத்தான் குறிப்பிடுகிறான் என்பதை நான் அறிந்திருந்தேன். இந்தப் பசாசு தவறான வார்த்தையைக் கொடுத்து, அல்லது நான் பெறும் செய்தியை அழித்து அதனால் இயேசுவைச் சந்திக்க நான் பயப்படும்படி செய்யவேண்டும் என்று விரும்பினான். புறப்படலாமா என்று நான் இயேசுவிடம் கெஞ்சினேன்; இயேசு சொன்னதாவது: வா, நாம் போவோம்; இதெல்லாவற்றையும் நீ எழுத வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் உன் எழுத்துக்களை உனக்காகத் தொகுத்துத் தருவேன்; நேசமே, என் அருகில் இரு- தங்கள் ஆத்துமங்கள் உயிர் வாழ்கின்றன என்பதையும், தீமையும் பிழைத்திருக்கிறது என்பதையும் என் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை எல்லாமும் ஒரு புராணக் கதை அல்ல; சாத்தான் இருக்கிறான், அவன் உங்கள் ஆத்துமங்களை அழிக்கத் தேடுகிறான்; நீங்கள் ஆழ்ந்து உறங்குவதையும், அவன் இருப்பதை அறியாதிருப்பதையும் காண்பதில் நான் துன்பப்படுகிறேன்; உங்களுக்கு எச்சரிக்கைகள் தர, உங்களுக்கு அடையாளங்களைத் தர நான் வருகிறேன், ஆனால் உங்களில் எத்தனை பேர் என் எச்சரிக்கைகளை தேவதைக் கதைகள் வாசிப்பது போல வாசிப்பீர்கள்? அன்பர்களே, நான் உங்கள் இரட்சகர்; என் வார்த்தையை மறுதலிக்காதீர்கள்; என்னிடம் திரும்பி, நான் உங்கள் பேரில் கொண்டுள்ள அன்பின் துடிப்புகளை உணர்வீர்களாக; சாத்தானின் காலடியில் உங்களையே வீழ்த்த நீங்கள் ஏன், ஏன் இவ்வளவு விருப்பத்தோடு இருக்கிறீர்கள்? ஓ, இப்போது என்னில் விசுவாசம் கொள்ளாதிருக்கிற நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்; என்னைக் கைவிட்டுவிட்ட நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்; வந்து பாருங்கள், ஏனெனில் இதுவே நீங்கள் கேட்பதற்கான நேரம்; என் ஆத்மாவை காயப்படுத்துகிற நீங்கள் எல்லோரும் எழுங்கள்; மீண்டும் உயிர் பெறுங்கள், என் ஒளியைக் காணுங்கள்; எனக்கு அஞ்சாதீர்கள், நான் உங்களை மன்னித்துவிட்டேன்; நான் உங்கள் பாவங்களைப் போக்குவேன், என் இரத்தம் அவைகளைக் கழுவும்; நான் உங்கள் பலவீனத்தைப் பொறுத்துக்கொண்டு உங்களை மன்னிக்கிறேன்; வந்து நீதியின் பனித்துளியை உறிஞ்சிக்கொண்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற உங்கள் ஆன்மாக்களைப் பழைய நிலையில் ஸ்தாபியுங்கள்; நான் உங்களைத் தேடிக்கொண்டு வருகிறேன், நான் என் தொலைந்து போன ஆடுகளைத் தேடி வருகிறேன்; நல்ல மேய்ப்பனாகிய நான், நீங்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டபிறகும் அலட்சியமாய் இருப்பேனா? வசூலா, அழிந்து கொண்டிருக்கிற எல்லோருக்காகவும் ஜெபிக்க நீ சித்தமாய் இருக்கிறாயா? இயேசுவே, இப்போதா? ஆம், இப்போதுதான்; ஆண்டவரே, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் உனக்குக் கற்பிப்பேன்; நான் சொல்வதைக் கேள்; நான் சொல்லச் சொல்ல, திருப்பிச் சொல். "ஓ, பரிசுத்த பிதாவே, உம் வல்லமையாலும், உம் இரக்கத்தாலும், உம் ஆடுகளை ஒன்று சேர்த்தருளும்படி நான் உம்மை மன்றாடுகிறேன், அவர்களை மன்னித்து, உம் நேச இல்லத்திற்கு அவர்களைத் திரும்பி வரச் செய்தருளும்; உம்முடைய பிள்ளைகளாக அவர்களைக் கண்ணோக்கி, உம் திருக்கரத்தால் அவர்களை ஆசீர்வதித்தருளும், ஆமென்;" என் இருதயத்திற்குள் வா, வசுலா, ஏனெனில் அங்கேதான் ஆழ்ந்த சமாதானம் இருக்கிறது; மார்ச் 8, 1987. வசுலா, நேசத்துக்குரியவளே, என் மற்ற பிள்ளைகளுக்கு மேலாக உனக்கு நான் விசேஷ சலுகை எதுவும் காட்டவில்லை என்று நான் மீண்டும் உனக்கு நினைவுபடுத்துகிறேன்; ஏனெனில் உன் பேறுபலன்கள் எதுவும் இல்லை; என் கண்களில் உன் தகுதி இன்னும் குறைவாய் இருக்கிறது; ஆனாலும் நான் உன்னை நேசிக்கிறேன்; இது என் சித்தமாக இருப்பதால், நான் இந்த வரப்பிரசாதத்தை உனக்குத் தந்தேன்; என் பணிப்பெண்ணாக இரு, உன் வழியாக நான் என்னை வெளிப்படுத்துவேன்; நான் என்னிலேயே முரண்படுகிறேன் என்று எண்ணாதே; உன் பேரில் எனக்குள்ள அன்பு அளவற்றது; நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்பதால் நீ என் நேசத்துக்குரியவளாக இருக்கிறாய்; உன் பலவீனங்களை நான் சுட்டிக்காட்டுகிறேன் என்பதால் நான் உன்னை குறைவாக நேசிக்கிறேன் என்று ஒரு நிமிடம் கூட நினைக்காதே, நான் உன்னை அறிந்திருக்கிற உன் பரிசுத்த பிதாவாக இருக்கிறேன், நான் உன் தவறுகளைச் சுட்டிக்காட்டவில்லை என்றால் வேறு யார் சுட்டிக்காட்டுவார்கள்? வசுலா, நீ நான் உருவாக்குகிற என் பலவீனமுள்ள மலர், நீ வளரும்படி, என் பலத்தை உறிஞ்சி குடிக்க நான் உன்னை அனுமதிக்கிறேன்; நான் உன்னில் ஊதுகிற வெளிப்பாடுகள் உன் சொந்த நன்மைக்காக மட்டுமல்ல, அவை என் அப்பம் அவசரமாகத் தேவைப்படுகிற மற்றவர்களுக்காகவும் தான் என்பதை உனக்கு மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்; பசியாய் இருக்கிற உங்கள் எல்லோருக்கும் உணவூட்ட நான் வருகிறேன்; என் செய்தி சமாதானம் மற்றும் அன்பின் செய்தி; அது உங்கள் அஸ்திவாரங்களையும், உங்களைப் படைத்தவர் யார் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுமாறு தரப்படுகிறது; என் சரீரமே என் திருச்சபை என்று நான் உங்களிடம் சொல்ல வருகிறேன்; ஆம், படைப்பு அனைத்தையும் நிரப்புகிற என் திருச்சபை; இந்த உலகத்திற்கு என் இரக்கத்தைக் காட்டும்படி நான் வருகிறேன்; வசுலா, நீ என்னை காயப்படுத்தியவர்களும், என் நேசத்திற்கு ஒருபோதும் பதில் நேசம் காண்பிக்காமல் என்னை கசந்து போக செய்தவர்களுமாகிய அந்த மக்கள் கூட்டங்களில் ஒருத்தியாய் இருந்தாய்; என்னுடையதைப் போல் இவ்வளவு தாகமும், இவ்வளவு மேலானதுமாகிய ஓர் அன்பிற்குப் பதிலன்பைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதை விட அதிக கசப்பானது வேறு என்ன இருக்கிறது? அதற்குப் பதிலாக, உன் வனாந்தரத்தில், நீ அன்றாட உலக இன்பங்களைத் தேடினாய்; அவற்றைத் தெய்வங்கள் என்று அடையாளப்படுத்தினாய், அவற்றிற்கு ஆராதனை செலுத்தினாய், என்னிடமிருந்து இன்னும் தொலைவாக உன்னை விலக்கிக் கொண்டாய், என்னைக் கசந்து போக செய்து, என் இருதயத்தைத் தேடாமலும், நேசிக்காமலும், முற்றிலும் மறந்தும் ஓர் உயிருள்ள கடவுளாகிய என் இருதயத்தை நீ காயப்படுத்தினாய்; மகளே, நான் உனக்கு அவ்வளவு தொலைவில் இருந்தேனா? வா, வந்து, என் இருதயத்தை உணர்ந்து பார்; என் இருதயம் உங்கள் எல்லோருக்காகவும் அழுது கொண்டிருக்கிறது; என் மகன்களே, என் மகள்களே, வாருங்கள்... எனக்கு இன்னும் அருகில் வாருங்கள், என்னிடம் திரும்புங்கள், உங்களைத் தாங்கிக்கொள்ள என்னை அனுமதியுங்கள், உங்களை நான் என் இருதயத்திற்குள் ஆழமாக அமிழ்த்தவும், அது உங்களை தனக்குள் சூழ்ந்து கொள்ளும்படி செய்யவும், இவ்வாறு ஆழ்ந்த சமாதானத்தை உங்களுக்குத் தரவும் என்னை அனுமதியுங்கள்; வந்து என் சமாதானம் மற்றும் நேசத்தின் ஞான உலகில் பிரவேசியுங்கள்; என்னிடம் வந்து என் திருச்சரீரத்திலிருந்து உண்ணுங்கள்; ஏனெனில் என் அப்பம் மாசற்றது, அது உங்களைச் சுத்திகரிக்கும்; என் திருச்சரீரம் உங்களுக்காகக் கூக்குரலிடுகிறது; உங்களைப் போஷிக்குமாறு இராப்பகலாய் தேவ நற்கருணைப் பேழையில் உங்களுக்காகக் காத்திருக்கும் என்னை வந்து பாருங்கள்; என்னைக் கண்டு திகிலடையாதீர்கள்; எனக்கு பயப்படாதீர்கள், என்னை மறுதலிக்காதீர்கள்; உங்கள் இதயத்தில் எனக்கு ஓர் இடம் தர ஏன் மறுக்கிறீர்கள்? வந்து என்னை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்னை நேசிப்பீர்கள்; ஏனெனில் நீங்கள் அறியாத ஒருவரை அல்லது குறைவாகவே அறிந்துள்ள ஒருவரை நேசிக்க உங்களால் எப்படி முடியும்? என்னை நன்கு அறிந்து கொள்ள பிரயாசைப்படுங்கள்; அப்போது நீங்கள் பக்தி ஆர்வத்தோடு என்னை நேசிப்பீர்கள்; வசுலா, நீ வழிதவறிப் போயிருந்தாய், இவ்வாறு என்னிடமிருந்து உன்னையே விலக்கியிருந்தாய்; நீ சத்தியத்திடமிருந்து திரும்பி, நன்மையைத் தீமையாய் மாற்றினாய்; நன்மையை விட அதிகமாய்த் தீமையிடமே பற்றுக் கொண்டிருந்தாய்; ஆகவே, என்னிடமிருந்து தந்திரமாய் தப்பிச் செல்கிற நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், உங்கள் பாவங்களைக் கொண்டு வாருங்கள்; நான் அவற்றை மன்னிப்பேன்; வந்து என்னிடமிருந்து உண்ணுங்கள்; வந்து என் முன் உங்கள் இதயங்களை வெறுமையாக்குங்கள், நான் அவற்றை நேசத்தால் நிரப்ப என்னை அனுமதியுங்கள்; நீங்கள் பலவீனர்கள் என்பதை நான் அறிவேன், ஆனாலும் உங்கள் எல்லாரிலும் செயல்பட என்னை அனுமதியுங்கள்; என் நேசத்திற்குரியவர்களே, உங்கள் சம்மதத்தை எனக்குத் தாருங்கள்; உங்கள் எல்லா அக்கிரமங்களையும் நான் வேரறுத்து, அவற்றை வீசி எறிந்துவிட்டு, என் சமாதானம் மற்றும் நேசத்தின் விதையை உங்களில் விதைக்க என்னை அனுமதியுங்கள்; நான் உங்களைத் தூய்மைப்படுத்துவேனாக; வசுலா, இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம், நான் பிற்பாடு தொடருவேன்; என் பிரசன்னத்தை மறக்காதே; எப்போதும் நாம் நாங்கள் என்பதை நினைவு கூர்வாயாக; நான் நினைவு கூர்வேன்; நான் முயற்சி செய்வேன், ஆண்டவரே; நாம் போவோமாக; போகலாம்; தொடர்ச்சி; என்னிடம் வந்து என்னை அறிந்துகொள், நான் எட்டாத தூரத்தில் இல்லை; நாம் அருகருகே நடக்கிறோம்; நீ என்னில் வாழ்கிறாய், நான் உன்னில் வாழ்கிறேன்; நாம் ஒருபோதும் பிரிவதில்லை, ஒருபோதும்; என்னிடம் வந்து என் அளவற்ற நன்மைத்தனத்திலிருந்து பெற்றுக்கொள்; உன் இரக்கமற்ற தன்மை என் பரிசுத்த தனத்தில் கரைந்து போகட்டும்; ஓ மகளே, என் நேசக் குழந்தைகளில் அநேகர் ஞானஸ்தானத்தால் பரிசுத்தமாக்கப்பட்டாலும், ஒரு சிலர் மட்டுமே நான் இருக்கிறபடி என்னை அறிந்திருக்கிறார்கள்; அவர்கள் ஒரு நேசத் தந்தையாக என்னைக் காண மறந்து போகிறார்கள், அவர்களில் பலர் நான் எட்டாத தூரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை விட்டு விலகுகிறார்கள்; தங்களைப் போன்றே நிரந்தரமாக வெறுக்கத்தக்க சார்பு மனப்பான்மையோடு நான் இருப்பதாக என்னையும் அநேகர் எண்ணுகின்றனர்; சிலர் பயத்தில் மட்டுமே என்னைப் பற்றி நினைக்கிறார்கள்; மற்றவர்கள் என் அளவற்ற நேசத்தில் சந்தேகப்படுகிறார்கள்; குறிப்பு: இந்த செய்தி மார்ச் 18, 1987 அன்று தொடர்கிறது; இங்கே நான் இடைமறிக்கப்பட்டேன்; நான் கேட்டிருந்த "புனித டியூரின் துகிலின்" புகைப்படம் வந்துவிட்டது; நான் அதைக் கண்டு தியானித்தேன்; அதன்பின் எழுதுவதற்கு திரும்பி வந்து இன்னும் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் இன்னும் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் என்பதை மறவாதே; வசுலா, நான் மிகவும் கசந்து போயிருக்கிறேன்; ஏன், இவ்வளவு அதிகமான ஆடுகள் சிதறடிக்கப்படுகின்றன; அவற்றைப் பார்; என் பலி வீணாகப் போய்விட்டதா? மகளே, நான் எவ்வளவு வேதனைக்குள்ளாகி இருக்கிறேன், என் ஆன்மா முழுமையாக நொறுக்கப்பட்டிருக்கிறது; நான் துன்பப்படுகிறேன்; என் ஆடுகளை போஷிப்பாயாக; எழுதுவதில் சோர்ந்து போகாதே; இல்லை, ஆண்டவரே, நான் சோர்ந்து போகமாட்டேன். உனக்குத் தேவையான பலத்தை நான் தருவேன்; வா, நாம் பணிபுரிவோம், தொடர்ந்து பணிபுரிவோம்; நான் உன் போதகராக இருக்கிறேன்; என்னை மகிழ்ச்சியால் நிரப்பு, என் பிரசன்னத்தை மறக்காதே; வசுலா, நீ என் பிரசன்னத்தை உணர்ந்தாய்; உண்மையில் நான் உன் படுக்கையின் மூலையில் அமர்ந்திருந்தேன்; நான் எழுதியதைச் சரிபார்க்க விடு; குறிப்பு: இயேசு என் மொழியைப் பயன்படுத்துகிறார்; ஏனெனில் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மொழிநடையைக் கடவுள் தம்முடையதாக்கிக் கொள்கிறார் என்று புனித அவிலா தெரசாவிடமிருந்து நாம் அறிந்திருக்கிறோம்; "நான்தான் இயேசு; நான் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், ஆனாலும் இக்கணத்தில் நீ எழுவாய் என்பதால், நானும் எழுவேன்;" அவர் எழுதி முடிப்பதற்கு முன்னரே கதவு அவசரமாக தட்டப்பட்டது. நான் துள்ளி எழுந்தேன். முற்றிலும் குழப்பமடைந்தவளாக நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், அன்று மாலையில் இயேசு தம் பிரசன்னத்தை எனக்கு மிக அதிகமாக வலியுறுத்திக் கொண்டிருந்தார். வேறு சில சமயங்களைப் போல அது எந்த அளவுக்கு அதிகமாக இருந்தது என்றால் நான் ஒரு காகிதத்தை எடுத்து அதைச் சரிபார்க்கத் தொடங்கினேன், அவர் மேற்கண்ட பத்தியை எழுதினார். வாசலில் என் வேலைக்காரி என்னிடம் எதையோ சொன்னாள். நான் உன்னை நேசிக்கிறேன்; எழுதுவதில் சோர்ந்து போகாதே; நீ எனக்குத் தரும் இந்தச் சுதந்திரத்தை நான் விரும்புகிறேன்; குறிப்பு: என்னை பயன்படுத்தும் சுதந்திரத்தை. இயேசுவே, நீர் அற்புதமானவர்! நான் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, நீ எப்போதும் மகிழ்ச்சியாய் இரு; என்னைத் தொடர்ந்து வா; நீ என் பிரசன்னத்தை மறந்தாய் என்றால், என்னைத் துயரப்படுத்துவாய்; ஒருபோதும் என் பிரசன்னத்தை மறக்காதே, மறக்கவே மறக்காதே! ஆனால் ஆண்டவரே, இது கடினமாய் இருக்கிறது; நான் சில சமயங்களில் என் காரை ஓட்ட வேண்டியுள்ளது, சாலையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது, அற்ப காரியங்களைப் பற்றி நான் நண்பர்களோடு பேசுகிறேன், என் மகனுக்கு அவனுடைய வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறேன்; ஆகவே நான் இடையறாமல் எப்போதும் பிரசன்னத்தை என் மனதில் எப்படி கொண்டிருக்க முடியும்? அது ஏறத்தாழ இயலாத காரியம்! வசுலா, என் மலரே, தாழ்ச்சியோடும் பக்தியோடும், மென்மையோடும் தயவோடும், உண்மையோடும், நேசத்தோடும் இருப்பதன் மூலம் புண்ணியங்களை நினைத்துக் கொள்ள வேண்டும்; ஆம், புண்ணியம் உள்ளவளாக இருப்பது என்னை நினைவு கூர்வதாகும்; வா, நாம் போவோம்; உன் சுபாவத்திற்கு மேலான முறையில் நான் உன்னை அணுகி வந்து உனக்கு என் செய்திகளைத் தருகிறேன் என்பதை நான் உனக்கு அறிவிக்க விரும்புகிறேன்; நான் உன் இரக்கத்தின் கடவுள் என்பதை மறக்காதே; உன் ஈனத்தன்மையையும் நீ எனக்கு காட்டிய அசட்டைத்தனத்தையும் மீறி நான் உன்னை நேசிக்கிறேன்; நீ நேரடியாக என் உதடுகளிலிருந்து கற்றுக் கொள்ளும்படியாகவே இந்தத் தனிப்பட்ட வரப்பிரசாதத்தை உனக்குத் தந்தேன்; வசுலா, உன் இருதயத்தில் இளைப்பாறுவது நன்றாய் இருக்கிறது; பிற்பாடு: மீண்டும் சந்தேக அலை என்னை ஆட்கொண்டது; வா, துன்புறுதல் உன்னைச் சுத்திகரிக்கிறது; என் மீது சாய்ந்து கொள், துன்புறுவதை ஏற்றுக்கொள்; பிறருக்காகப் பரிகாரம் செய், பரிகாரம் செய், பரிகாரம் செய்; வா, நாம் என் பிள்ளைகள் எல்லோரையும் உயிர்ப்பிப்போம்; அங்கே நான் மிகுந்த துயரத்துக்குள்ளானேன்; ஆனால் என் தேவனே, நான் ஆதரவற்றவள்; என்னால் என்ன செய்ய முடியும்? அவர் மிக மென்மையாக இப்படிக் கூறினார்; நான் எப்போதாவது உன்னைக் கைவிடுவேனா? என் தானியங்களைப் பயன்படுத்து, அவற்றை வயல்களில் விதை, அவை சமாதானம் மற்றும் அன்பின் கனிகளைத் தரும்; என் வார்த்தை அனைவராலும் அறியப்படட்டும்; நான் முழு நேரமும் உன்னோடு இருப்பேன்; அவர்கள் ஒருவேளை உம்முடைய வார்த்தையை மறுதலித்து அதைப்பற்றி சந்தேகம் கொண்டு அதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்றால்? ஒருவேளை அது நல்லதல்ல என்று அவர்கள் நினைத்தால்? ஒருவேளை இது நீர்தான் என்பதை அவர்கள் நம்பவில்லை என்றால்! என் வசுலா, நான் சொல்வதைக் கேள், நீ ஏன் பயப்படுகிறாய்? என் சிருஷ்டிப்பு முழுவதும் என் கரத்தால் செய்யப்பட்டது, நான் சர்வ வல்லவர் என்பதை நீ மறந்துவிட்டாயா? என் சிருஷ்டிப்பு முழுவதும் என் சித்தத்திற்குக் கீழ்படுகிறது; சிறியவளே, நான் மகா உன்னதராக இருக்கிறேன்; வாழ்வதற்கு என் ஒளி தேவையாய் இருக்கிற ஒரு மலரைப் போல் இருந்து என்னை மகிமைப்படுத்து;