இயேசு திருச்சபை சிலுவையில் காயப்பட்ட நிலையில் இருப்பதையும், குறுகிய காலத்தில் அது புதுப்பிக்கப்பட்டு உருமாற்றம் அடையும் என்பதையும் கூறுகிறார். எல்லோரையும் தம்மிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார்: "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை மன்னிப்பேன்!" புனித அன்னையும் மனந்திரும்பவும் ஜெபிக்கவும் கேட்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 74. ஆகஸ்ட் 9, 1988 ரோம். இயேசுவா? நான்தான்; அனைவருளும் அதிக பிரியமான ஆன்மாவே, நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்; திருச்சபை, என் வழியாக மீண்டும் உயிர்பெறும்; என் வெள்ளைப் போளமே, உன் வழியாக என்னை வெளிப்படுத்த என்னை அனுமதி; உன் ஆண்டவராகிய என் மணத்தை வீசு; என் புனித இருதயத்தை நான் உனக்கு காட்டியிருக்கிறேன்; ஆன்மாவே, என் வழிகளை உனக்குக் கற்பிக்கவும், உண்மையிடம் உன்னை இட்டுச் செல்லவும் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்; உண்மை என்பது நேசமாய் இருக்கும்போது, உன் தலைமுறை உண்மையைத் தேடுகிறது; ஆனால் அவர்கள் மத்தியில் நேசம் காணாமல் போயுள்ளது, என் திருப்பெயருக்கு... குறிப்பு: அன்பு என்பது அவர் பெயர். இனியும் அவர்கள் நடுவே எந்த பொருளும் இல்லை, இருந்தாலும், என்னை அவமதிப்பவர்கள் மீது என் இரக்கம் பெரியதாக உள்ளது; என் படைப்பு என் வழிகளைக் கைவிட்டுவிட்டது; அவர்கள் குருட்டு வழிகாட்டிகளால் தாங்கள் வழிநடத்தப்பட தங்களை அனுமதித்துவிட்டார்கள், அவர்கள் என்னுடையதல்லாத ஒரு சட்டத்தைக் கற்பித்து, என் திருச்சட்டத்திற்கு எதிராக கலகம் செய்துவிட்டார்கள்; படைப்பே! நீ வீழ்ச்சிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறாய் என்பதை மட்டும் அறிந்தாய் என்றால்! ஒருவரை ஒருவர் துன்புறுத்துவதற்குப் பதிலாக, ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுங்கள்; குறிப்பு: திருச்சபை அதிகாரிகள். என் வழிகளை, ஞானத்தின் வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு செயல் அல்லது சிந்தனையும் அன்பால் மூடப்பட்டிருப்பதாக; மலரே, நான் மிகுந்த அக்கறையுள்ள உன் பாதுகாவலர்; எனவே, என்னை நம்பு; நான் என் உயிர்ச்சாற்றைக் கொண்டு உனக்கு உணவூட்டி, என் ஒளியின் கீழ் எப்போதும் உன்னை வைத்திருப்பேன்; உன் கடவுளாகிய என்னை நம்பு, ஏனெனில் நான் உன்னை உயர்வான விதத்தில் ஆதரித்திருக்கிறேன்; நான் உன்னை அலங்கரித்தபடி எப்போதும் உன் அருகில் இருப்பேன்; நான் முழுப் பிரமாணிக்கம் உள்ளவராக இருக்கிறேன்; வா, நாங்கள், நாம்? என்னோடு ஒன்றாயிரு; என் இறைவா, உமக்கு நன்றி. கடவுளின் அழகின் ஒரு கடந்து போகிற கணநேரக் காட்சியை நான் கண்டேன், கடவுளால் சூழப்பட்டிருக்கும் இன்பத்தை நான் உணர்ந்தேன். பிற்பாடு: நம் புனித அன்னை பேசினார்கள். போராட்டம் இன்னும் முடியவில்லை; ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் எவ்வளவு அதிகமான ஆன்மாக்கள் நரகத்திற்குள் விழுகிறார்கள் என்பதை மட்டும் நீ அறிந்தாயானால்! அந்த எண்ணிக்கை எச்சரிக்கையூட்டுவதாக இருக்கிறது... நான் யார் என்று கேட்டேன். கர்த்தினால்களில் இருந்து இளம் குழந்தைகள் வரை; குறிப்பு: நம் பரிசுத்த மாதா தயங்கினார்கள். அவர்களில் ஒரு கடும் வேதனையின் தாக்குதலை நான் உணர்ந்தேன். உன் யுகம் இழிந்து போயுள்ளது; உண்மையில், அது எங்கள் எதிரியின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்டது; அவன் பூமியின் மீது தன் ஆளுகையை, அதன் முழுமைக்கும் விரிவுபடுத்திவிட்டான்; ஆ வசுலா... இறைவன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார், தாமே உங்கள் மீது பனித்துளியைப் போலப் பொழிந்து, உங்களை மீண்டும் ஒரு புதிய, செழிப்பான தோட்டமாக உயிர்ப்பிப்பதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்; இது புதிய பெந்தேகோஸ்தே என்று அழைக்கப்படும்; நீங்கள் எல்லோரும் வந்து, முழந்தாளிட்டு, அந்த மகிமையான நிகழ்ச்சிக்காக ஜெபியுங்கள்; இந்த வருகைக்காக ஜெபியுங்கள்; நேசம் திரும்பி வரும்படி ஜெபியுங்கள்; வசுலா, நானே ஜெபமாலை இராக்கினி; பரிசுத்த அன்னையே, நீங்கள் ஏன் இந்த முறையில் உங்களைக் காட்டுகிறீர்கள்? உங்கள் செய்தியில் ஒரு விசேஷ குறிப்பு இருக்கிறதா? ஆம், பாத்திமாவில் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிற அனைத்தும் இந்தக் காலகட்டம் முடியும் முன் நிறைவேற்றப்படும்; வா, என் மாசற்ற இருதயத்திலும், இயேசுவின் புனித இருதயத்திலும் இப்போது இளைப்பாறு; நீ செய்வது போல, இயேசுவுக்கு ஊழியம் செய்வதன் மூலமும், எங்களை நேசிக்காதவர்களுக்காகப் பரிகாரம் செய்து, அவரை நேசிப்பதன் மூலமும், இயேசுவை மகிழ்வி; நாங்கள், நாம்? ஆம், என்றென்றும். ஆகஸ்ட் 15, 1988 தேவ அன்னையின் விண்ணேற்புத் திருநாள். ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; என் புனித இருதயம் பிரசவ வேதனைப்படுகிறது, அது முட்களால் நிறைந்துள்ளது; என்னை நேசிப்பவர்களும், என்னை வாழ்த்தி ஸ்துதிப்பவர்களும், என்னைத் தேடுபவர்களுமாகிய அனைவரிடமிருந்தும் நான் நிவாரணத்தையும் ஆறுதலையும் தேடுகிறேன்; நான் திரும்பி, என் சிறிய ஆன்மாக்களை வந்தடைகிறேன், ஏனெனில் அவர்களுடைய சிறிய தன்மையில் நான் என் இளைப்பாற்றியைக் கண்டடைகிறேன்; என் ஆறுதலைக் கண்டடைகிறேன், ஆ இயேசுவே, இத்தகைய வேதனையில் உம்மை உணர்வது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது. இரட்சிக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கிற ஆன்மாக்களுக்காக ஜெபி; என்னிடம் ஜெபி, ஏனெனில் என் திருப்பெயர்; இரட்சிக்கிறவர்; மணித்தியாலங்கள் பறந்து கொண்டிருக்கின்றன, நாட்கள் எண்ணப்படுவது தொடங்கியுள்ளது; பதில் தாக்குதல்களுக்கான நாட்கள் இதோ வந்துவிட்டன; இந்தத் தலைமுறையின் அக்கிரமம் எந்த அளவுக்கு மிகப் பெரியதாகவும், இதன் விசுவாச மறுதலிப்பு எவ்வளவு கடுமையானதாகவும் இருக்கிறது என்றால், அவற்றின் அநீதியாலும், அவற்றின் அவதூறான குற்றங்களாலும் எங்கள் இரு இருதயங்களும் முழுமையாகக் குத்தி ஊடுருவப்பட்டுள்ளன; என்னிடம் திரும்பி வரும்படி நான் உங்களிடம் இரந்து கேட்கிறேன், என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை மன்னிப்பேன்! நேசத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள், நான் உங்கள் மீது ஆசீர்வாதங்களைப் பொழிவேன்; ஒருவருக்கொருவர் நீதி உள்ளவர்களாகவும், ஒருவருக்கொருவர் கருணை உள்ளவர்களாகவும் இருங்கள்; ஒருவரை ஒருவர் நேசியுங்கள், என் ஒளியின் குழந்தைகளாக ஆகுங்கள்; இவ்வளவு அதிகமான இயற்கை அழிவுகள் ஏன் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்; அவை உங்கள் ஆன்மாவில் குவிக்கப்பட்டுள்ள தீமையால் உங்கள் மீது இழுத்து விடப்படுகின்றன; என்னிடம் திரும்பி வாருங்கள், என் இரத்தம் உங்களை சுத்திகரிக்கட்டும்; பிற்பாடு: நான் உன் பரிசுத்த அன்னை; என் குழந்தைகளே, கடவுளிடம் திரும்புங்கள்; திரும்பி வரும்படி நான் உங்களிடம் இரந்து கேட்கிறேன், அப்போது கடவுள் உங்களை மன்னிப்பார்; படைப்பே, இரக்கம் உன் மீது பனித்துளியைப் போல் இறங்கி வருகிறது, நீங்கள் மலர்களைப் போலத் திறந்து, அவருடைய ஒளியைக் கிரகித்துக் கொள்வீர்கள்; நான் உங்களை அழைக்கிறேன், உங்களை ஊக்கவிக்கிறேன், ஆனால் எத்தனை பேர் எங்கள் அழைப்புகளை அறிகிறார்கள்? எத்தனை பேர் இந்த அழைப்புகளை விசுவாசிக்கிறார்கள்? உங்களில் ஒரு கைப்பிடி அளவு மனிதர்கள் மட்டுமே இந்த அழைப்புகளை நம்புகிறார்கள் என்று சொல்வதில் என் இதயம் வேதனைப்படுகிறது; இந்தத் தலைமுறையின் இதயம் கருங்கல்லாக மாறிவிட்டது; பகுத்தறிவு வாதத்தால் குருடாக்கப்பட்டு, அவர்கள் கடவுளின் வழிகளை மறந்துவிட்டார்கள், அவர்கள் கடவுளின் அற்புதங்களை மறந்துவிட்டார்கள், அவர் எல்லாம் வல்லவர் என்பதையும், இரக்கம் நிறைந்தவர் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்; கடவுளின் படைப்பு சோதோம், கொமோரா நாட்களிலும் கூட இவ்வளவு கீழாக விழுந்ததில்லை; உங்கள் அலட்சியம் நித்தியத்தைத் துளைத்து ஊடுருவி உள்ளது; உங்கள் விசுவாசக் குறைவு உங்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கிறது; என் காட்சிகளையும் கடவுள் தம் செய்திகளைத் தந்து ஆசீர்வதிப்பவர்களையும் நீங்கள் இரக்கமற்ற விதமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவது உங்கள் வீழ்ச்சிக்கான ஒரு காரணமாக இருக்கப்போகிறது; உங்கள் பரிசுத்த அன்னையும், உங்கள் இரட்சகரின் திருமாதாவுமாகிய நான், மனந்திரும்பி, மாற்றம் அடையும்படி உங்களிடம் விண்ணப்பிக்கிறேன், உங்களை இரந்து கேட்கிறேன்; எங்களிடம் திரும்பி வாருங்கள், பரிசுத்தமாக வாழுங்கள், கடவுளின் கண்களின் கீழ் பரிசுத்தமாக வாழுங்கள், நற்செயல்களாலும் பரிசுத்தத்தனத்திலும் நிறைந்துள்ள உங்கள் கரங்களோடு அவரை எதிர்கொள்ள ஆயத்தமாய் இருங்கள்; இன்று கோவிலை விட்டு வெளியே போய், பல படிகள் கீழே இறங்கிய பிறகு, நான் ஒரு ரோஜாத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தது போல் இருந்தது; சுற்றிலும் ஒரு மலர் கூட இல்லை, வெறும் சிமெண்ட் தான் இருந்தது. பிற்பாடு: நான் என் நறுமணத்தை உன் மீது பொழிந்திருக்கிறேன்; என் பிரசன்னத்தை நீ உணர வேண்டுமென விரும்பினேன்; குழந்தாய், நான் உனக்குத் தந்திருக்கிற இந்த உபகாரத்தைக் கொண்டு, நீ எங்களுக்கு எவ்வளவு பிரியமானவள் என்று உனக்கு நினைவுபடுத்த நான் விரும்பினேன்; நான் உன் புனித அன்னை, மீண்டும் உன்னை எங்கள் அருகில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; அன்பிற்குரியவளே, நான் உன்னையும், உன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதிக்கிறேன்; புனித அன்னையே, அனைத்திற்காகவும் உங்களுக்கு நன்றி. நான் உங்களை வாழ்த்துகிறேன். மலரே; சொல்லும், ஆண்டவரே! இப்போதிலிருந்து உன் பரிசுத்த அன்னையை அம்மா என்று கூப்பிடு; நீ என்னோடு அன்யோனியமாய் இருப்பது போல், அவர்களோடும் இரு; நாங்கள் நாம் என் போதனைகளை நினைவில் வைத்திரு; சரி, ஆண்டவரே! ஆண்டவராகிய நான் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஆகஸ்ட் 16, 1988 ஆண்டவரா? நான்தான், ஒருபோதும் சந்தேகப்படாதே, இது இயேசு கிறிஸ்துவாகிய நான்தான்; நான் என் சிலுவையிலிருந்து உன்னை அழைத்திருக்கிறேன், என் திருச்சபையின் தலையாய் இருக்கிற நான் இன்று எவ்வாறு கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று உனக்குக் காட்டும்படி, என் அவஸ்தையில் நான் உன்னை அழைத்திருக்கிறேன்; உங்கள் விசுவாச மறுதலிப்பு எப்படி என் திருச்சபையைத் துரோகம் செய்தது என்று உங்கள் அனைவருக்கும் காட்டுவதற்கு, என் அன்னையின் கரங்களில் இறந்து கிடக்கிற என் உருவம் ஓர் அடையாள முறையாக இருக்கிறது, குறிப்பு: இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்த பிறகு, புனித மாமரியின் மடியில் வளர்த்தப்பட்டிருக்கும் சுருவம். இது ரோமில் உள்ள சான் செல்வஸ்திரோவில் உள்ளது. மகளே, பார், தற்போதைய திருச்சபையின் சரியான உருவத்தைக் காணும்படி நான் உன்னை வழிநடத்தினேன்; என் தாயின் மீது அவர்களுடைய துயரத்தையும், அவர்களுடைய திருக்கரங்களில், காட்டிக் கொடுக்கப்பட்டு, அடிகளால் நொறுக்கப்பட்டு, கசைகளால் அடிக்கப்பட்டு, துளைக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டிருந்த என் மரித்த உடலை நீ கண்டாய், இதுவே மிகச்சரியாக என் திருச்சபை காணப்பட வேண்டிய விதமாக இருக்கிறது; என் அன்னை கொல்கொத்தாவில், என் சரீரத்திற்கு மேலாக அழுதது போல, இப்போது என் திருச்சபையின் மீது இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்; ஆனால் மிகக் குறுகிய காலத்தில், அது புதுப்பிக்கப்படும், குறிப்பு: திருச்சபை உருமாற்றம் அடையும், ஆண்டவராகிய நான் உயிர்த்தது போல, உயிர்ப்பிக்கப்படும்; அது இந்த இரங்கத்தக்க நிலையில் இனியும் விழுந்து கிடக்காது; என் எதிரிகள் என் தேவாலயத்தை அழித்து விட்டார்கள், ஆனாலும், மேலிருந்து இறங்கி வருகிற என் வல்லமையைக் கொண்டும், என் வரப்பிரசாதத்தைக் கொண்டும், ஆண்டவராகிய நான் மூன்றே நாட்களில் என் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினேன்; என் திருச்சபை மீண்டும் உயிர் பெறும் என்றும், அது புதுப்பிக்கப்படும்படி நான் செய்வேன் என்றும், நான் உருமாற்றம் அடைந்தது போல, அதுவும் உருமாற்றம் அடையும் என்றும், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்; நான் என் தேவாலயத்தை மீண்டும் கட்டுவேன்; நேர்மை அதன் இடையை சுற்றியுள்ள இடைக்கச்சையாகும்; குறிப்பு: இசையாஸ் 11 ஆம் அதிகாரம் ஐந்தாம் வசனம், பிரமாணிக்கம் அதன் இடுப்பின் மீதுள்ள இடைவாராகும்; என் திருப்பெயருக்குக் கலங்கம் வருவித்த அனைவரையும் அதன் ஒளியில் வழிநடத்தவும், அவர்களைச் சுத்திகரிக்கவும், பரிசுத்தத்தனம் அதன் தீப்பந்தமாக இருக்கும்; ஏனெனில், ஆண்டவர்களுக்கெல்லாம் ஆண்டவரும், செம்மரி புருவையுமான நான் அதில் வாழ்ந்து கொண்டிருப்பேன், என் உயிர்ப்பிற்குப் பிறகு, எனக்குச் சொந்தமானவர்களால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டது போல, தனக்குச் சொந்தமானவர்களால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்; அப்போது, தன் குழந்தையைத் தேற்றுகிற ஒரு தாயைப் போல, நானும் இன்னும் அதிகமாக உங்களைத் தேற்றுவேன்; மிக அதிக நேசத்தோடு, உங்களை என் கரங்களில் அரவணைத்துக் கொள்வேன்; ஆ, அன்பிற்குரிய குழந்தைகளே, நீங்கள் வசிப்பதற்காக ஒரு புதிய வானகத்தையும், ஒரு புதிய வையகத்தையும் ஆயத்தம் செய்கிறேன்; வாழ்வின் மரத்திலிருந்து வருகிற கனிகளால் நிரம்பியுள்ள ஒரு பூமியை நான் ஆயத்தம் செய்கிறேன்; அதன் வேர் அன்பாக இருப்பதால், குறிப்பு: யூத கோத்திரத்தின் சிங்கம், தாவீதின் வேர், திருவிளைப்பாடு ஐந்தாம் அதிகாரம் ஐந்தாம் வசனம். இது பிற்பாடு 1988 செப்டம்பர் 1 அன்று எனக்கு புரிய வைக்கப்பட்டது. அதன் கனிகள் சமாதானம், பரிசுத்தத்தனம், நேசம் என்னும் பெயர்களைத் தாங்கி இருக்கும்; அப்போது, நீங்கள் முதல் பெந்தகோஸ்தேயில் நிகழ்ந்தது போல, என் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக, உங்கள் இறைவனாகிய என்னை எதிர்கொண்டு வருவீர்கள்; என் ஆவி அன்பால் உங்களை நிரப்பும்... என் தோட்டத்தை நான் அலங்கரிப்பேன்; என் மலர் பாத்திகளுக்கு நான் நீர் பாய்ச்சுவேன்; அன்பிற்குரியவர்களே, என் நீதியின் பணி உங்கள் மீது இறங்கும், என் ஒளி ஒழுக்கம் பிரகாசிக்கச் செய்து, உங்கள் தண்டுகளைப் பலப்படுத்தும்; மகளே, தைரியம் கொள்; அன்பிற்குரியவர்களே, தைரியம் கொள்ளுங்கள்; வனாந்தரத்தில் வாழ்வது கடினமானது என்பதை நான் அறிவேன், ஆனாலும், இந்தக் காலங்களின் முடிவு விரைவில் உங்களோடு இருக்கும்; குறிப்பு: விசுவாச மறுதலிப்பின் காலங்கள் விரைவில் நான் உங்களை சுத்தமாக்க இறங்கி வருவேன்; ஆண்டவராகிய நான் அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன், நான் என் ஒளியை உங்கள் மீது ஏவித் தூண்டி, எதிர்பாராத வியப்பில் உங்களை மூழ்கடிப்பேன், என் வானகங்கள் பூமியை அசைக்கும், என்னை நேசிப்பவர்கள் அனைவரும் தங்கள் முழங்கால்களை மடக்கி, என்னை மகிமைப்படுத்துவார்கள், பலர் என்னை நினைவுகூர்ந்து, என்னிடம் திரும்பி வருவார்கள்; இது திருச்சபையின் மாபெரும் மனம் திரும்புதல் என்று அழைக்கப்படும்; ஆனாலும், என் பரிசுத்த திருப்பெயரை தூஷணித்தவர்களும், என் எதிரியின் சார்பாக இருந்து போர் தொடுப்பவர்களுமாகிய பிடிவாதமுள்ள ஆன்மாக்கள் இருப்பது என்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கும்; இந்த ஆன்மாக்கள் இன்னும் அதிகமாக என்னை மறுதலிப்பார்கள்; இது நிகழும்போது, சாத்தான் தன்னோடு அவர்கள் நித்திய நெருப்புக்குள் இழுத்துச் சென்று, அவர்களை அழித்தொழிப்பான்; வசுலா, என் புனித இதயத்தை உணர்ந்து பார்... இதைச் சொல்வதில் நான் மனித வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு துன்பப்படுகிறேன், ஏனெனில், நான் அன்பின் கடவுளாக, இரக்கத்தின் கடவுளாக இருக்கிறேன், ஆனாலும், நான் நீதியின் கடவுளாகவும் இருக்கிறேன், என் படைப்பு எனக்கு எதிராகக் கலகம் செய்யும்போது, நான் உங்கள் நடுவராகவும் இருக்க வேண்டியுள்ளது; என் ஆன்மா காயப்படுத்தப்படுகிறது, என் இரத்தம் ஆறுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது; நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்! ஆனாலும், நீங்கள் என்னைக் காயப்படுத்தி விட்டீர்கள்; நானே உங்கள் பரிசுத்தராக இருக்கிறேன், ஆனால், நீங்களோ என்னைக் குத்தித் துளைத்தீர்கள்; நான் இன்று என் சிலுவையிலிருந்து உங்களை நோக்கி கூக்குரலிடுகிற உங்கள் இரட்சகராக இருக்கிறேன்; என்னிடம் திரும்பி வாருங்கள்! என்னிடம் மனந்திரும்பி வாருங்கள்! வந்து, நான் பரிசுத்தராய் இருப்பது போல, நீங்களும் பரிசுத்தராக இருங்கள்! வா, குழந்தாய், நான் உன்னோடு இருக்கிறேன்; என்னை உன் இருதயத்தில் வைத்துக்கொண்டு, எனக்கு இளைப்பாற்றி கொடு, என்னோடு ஒன்றாய் இரு; என் ஆண்டவரே, சரி, நான் உம்மை ஆராதிக்கிறேன். என்னை ஆராதி, எனக்கு இளைப்பாற்றிக் கொடு, நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்... ஆண்டவரே, நாங்கள், நாம்? ஆம், நாங்கள், நாம், நித்தியத்திருக்கும்: ஆமென். பிற்பாடு: புனித மாமரி: வசுலா, என்னோடு நெருக்கமாக இரு; என்னை அம்மா என்று கூப்பிடு, என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன். உம்மை இன்னும் அதிகமாக நேசிக்க எனக்குக் கற்பியும். வசுலா, நான் உன்னை என் புனித இருதயத்தில் வைத்திருக்கிறேன், ஆண்டவரே, உம்மைச் சந்திப்பதும், உம்மை உணர்வதும், உம்மைக் காண்பதுமாகிய இந்த வரப்பிரசாதத்தை எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி. இது உனக்கு என் பரிசு; ஆனாலும், என் ஆவல்களுக்காகவும், என் மகிமைக்காகவுமே இந்தப் பரிசு உனக்குத் தரப்படுகிறது என்பதை மறக்காதே; உன் அன்பால் என்னை வருடிச் சீராட்டு; உன் அன்பைக் கொண்டு எனக்கு நறுமணம் ஊட்டு; உன் அன்பைக் கொண்டு எனக்கு ஆறுதல் கொடு; உன் அன்பைக் கொண்டு உன் ஆண்டவராகிய என்னை மகிமைப்படுத்து; என்னை நோக்கி, என்னை நோக்கி மட்டுமே உன் மனதை உயர்த்து; நான் ஒருவன் மட்டுமே மதிப்பிற்குரியவன்; நானே அனைத்துமாக இருக்கிறேன், நான் நித்தியராக, ஆல்பாவாகவும், ஒமேகாவாகவும் இருக்கிறேன்; நானே இரட்சிக்கிறவராக, உன் சிருஷ்டியாக இருக்கிறேன்; நானே பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தராக இருக்கிறேன், நான் அன்பின் ஆவியாக இருக்கிறேன், ஆகவே, என்னிடம் வா; நீ எவ்வளவு பலவீனமானவள் என்பதை நான் அறிவேன், என்னிடம் வந்து என்னை நேசி; நான் உன் இறைவன் என்பதை எப்போதும் உனக்கு நினைவுபடுத்துவேன்; நீ எவ்வளவு பலவீனமாகவும், ஈனமாகவும் இருந்தாலும், அது பிரச்சனை இல்லை, என் பலம் உன்னைத் தாங்கும்; அனைவரிலும் அதிக பிரியமான ஆன்மாவே, இன்னும் ஒரு காரியத்தை நினைவில் கொள்; எனக்கு யாரும் தேவையில்லை என்பதை நினைவில் கொள்; என் வேலைகளைச் செய்து முடிப்பதற்கு எனக்கு நானே போதுமானவர் என்றாலும், என் படைப்போடு என் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதை நான் நேசிக்கிறேன்; ஆகவே, ஆன்மாவே, என்னை உற்றுநோக்கி, நான் உன்னை ஆதரித்துள்ளதால், அகமகிழ்ந்து களிகூர்வாயாக; நீ காண்பதைக் காண ஏங்கி இருக்கக்கூடிய பலர் இருக்கிறார்கள், ஆனாலும், அவர்கள் அதை ஒருபோதும் காணவில்லை, நீ கேட்பதை கேட்க ஏங்கி இருக்கக்கூடிய பலர் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை. நீ உணர்வதை உணர விரும்பக்கூடியிருக்கக்கூடிய பலர் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் அதை ஒருபோதும் உணரவில்லை; ஆகவே, ஆன்மாவே, களிகூர்வாய்! என்னை புகழ்ச்சிகளால் மூடு, அன்பின் மலர்க் கிரீடங்களால் எனக்கு முடிசூட்டு; தூபத்தைக் கொண்டு எனக்கு நறுமணமூட்டு, உன் மழலையான அன்பின் வார்த்தைகளால் என்னை அலங்கரி; அன்பிற்குரியவளே, உன் ஆண்டவராகிய என்னை வாழ்த்தி, என்னை வழிபடு; என் அப்பத்தை நீ எப்போதும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வாய், அதை ஏராளமாகவும் பெற்றுக் கொள்வாய்; நான் உன் ஆன்மாவுக்கு உணவூட்டுவேன்; நான் உன் இரட்சகராக இருக்கிறேன், இந்த சிறப்பான விதத்தில், இறுதி வரைக்கும், நான் எப்போதும் உன் அருகில் இருப்பேன்; ஞானம் தன் செல்வ ஆதாரங்களை நீதிமான்களுக்கு மட்டுமின்றி, நீதி அற்றவர்களுக்கும் தருகிறது; வா;