வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 52. நவம்பர் 8, 1987 இயேசுவா? நான்தான்; நான் உன்னை விடுவித்திருக்கவில்லை என்றால், நீ இன்னும் கூட ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்திருப்பாய்; நான் மிகவும் வெட்கப்படுகிறேன். உண்மையிலேயே, நான்தான் பேசுவதில் கடைசியானவளாக இருக்கிறேன். நீர் எனக்குச் செய்தவற்றிற்கு, நான் என்ன செய்தாலும், உமக்கு நன்றி சொல்ல என்ன செய்தாலும், என்னால் போதுமான அளவு செய்ய இயலாது. நான் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, குற்றம் உள்ளவளாகவும், தயக்கம் உள்ளவளாகவும் உணர்கிறேன். ஏனெனில், ஆண்டவரே, என்னை விட அதிக நல்லவர்களாக இருக்கிற மற்றவர்களுக்காக ஜெபிக்க நான் எப்படித் துணிவேன்? அனைவரிலும் அதிக ஈனமானவள், தன்னை விட அதிக நல்லவராகிய ஒருவருக்காக எப்படி ஜெபிக்க முடியும்? இது கண்ணில் மரக்கட்டியை கொண்டிருந்து, மற்றவர் கண்ணில் துரும்பை காண்பது பற்றிய உம் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் ஒரு மரக்கட்டையை, ஒரு முழு காட்டையே கொண்டிருப்பதாக உணர்கிறேன். அப்படி இருக்க, ஆண்டவரே, நீர் என்னை விடுவித்தால் ஒழிய, என் கண்ணில் இந்த முழு காட்டையே வைத்துக்கொண்டு, குரல் எழுப்ப, நான் எப்படி துணிய முடியும்? என்னை சுத்திகரிக்கும்படி உம்மை கேட்க, என்னை அனுமதிக்கும்படி உம்மிடம் கேட்கிறேன். என் ஆத்துமத்தின் மீது இரக்கமாயிரும். நீர் விரும்பினால், என் சகோதரர்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவுமாறு என்னை தகுதியுள்ளவளாக்கும். வசுலா, உன் வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழ்கிறேன், ஏனெனில், நீ உன் தகுதியின்மையை உணரும் வரை, நீ உத்தமத்தனத்தின் பாதையில் செல்லத் தொடங்க மாட்டாய்; இது உம் சித்தத்திற்கு உட்பட்டது என்றால், பிதாவே, உம் உதவியை கேட்க என்னை அனுமதித்தருளும். மகளே, என்னிடமிருந்து உன் விளக்கை நிரப்பிக்கொள்; காத்திருக்காதே, சிறியவளே, என் ஒளியில் வளர்ச்சி பெறு; இந்தச் செய்தியில் விசுவாசம் கொள்பவன் யாராயினும், உன்னில் அல்ல, என்னிலேயே விசுவாசம் கொள்கிறான்; என் செய்தியில் விசுவாசம் கொள்பவன் யாராயினும், அவன் இனியும் இருளில் தங்கியிருக்க தேவையில்லாதபடி, உன் வழியாக ஒளியாகிய நான் உலகிற்குள் இறங்கி வருகிறேன்; உன் சாட்சிகள் உண்மையை அறிகிறார்கள்; இந்த வார்த்தைகள் உன்னுடையவை அல்ல என்று அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்; என் வசுலா, எழுதப்படுகிற எல்லாமே ஆண்டவராகிய என்னிடமிருந்து வருகிறது; உன்னை வரவேற்பவன் யாராயினும், அவன் என்னை வரவேற்கிறான் என்று உண்மையாகவே நான் உனக்குச் சொல்கிறேன்; இல்லை, என் தேவனே, நான் தகுதியற்றவள்! ஏன், வசுலா, நான் உன்னை சுத்திகரித்து விடவில்லையா? நானே என்னுடையவளாய் இருக்கும்படி உன்னை அபிஷேகம் செய்து விடவில்லையா? உண்மையில், உன் வழியாக நான் என்னை வெளிப்படுத்துவேன், ஆகவே, மகளே, என்னை மகிமைப்படுத்து; வா, நான் என் வழிகளை உனக்குக் கற்பிப்பேன்; நான் என் மூச்சை உன்னில் ஊதவிடு; மகளே, என்னை உன்னில் இளைப்பாறவிடு; என் ஆத்துமத்தை காயப்படுத்துவோரிடமிருந்து எனக்கு ஓய்வு கொடு; ஓ, வசுலா, நீ மட்டும் அறிந்திருந்தால்... என் இரத்தம் இன்று மறுபடியும் ஏராளமாய்ப் பாய்ந்து வெளிவருகிறது; ஓ, தேவனே, இன்று ஞாயிற்றுக்கிழமை! ஏன்? சிறியவளே, அவர்கள் என் இருதயத்தை மேலும் மேலும் குத்தித் துளைக்கிறார்கள்; என் தேவனே, அதற்குப் பதிலாக அவர்கள் என்னை குத்தித் துளைக்கட்டும்! நான் சொல்வதைக் கேள், நீயும் இப்படியே இருப்பாய்; அவர்கள் உன்னைக் குத்தித் துளைப்பார்கள்; இப்போது வா, நான் உன்னில் இளைப்பாற அனுமதி, மகளே, என் கிண்ணத்தைப் பகிர்ந்துகொள்; ஏன்? ஏன் இது இப்படி இருக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? நம் கடவுளுக்கு அவர்கள் ஏன் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்? அதன்பின் கடவுளும், சமாதானத்தின் கடவுளும், ஒரு தந்தையும், ஒரு நண்பருமானவருக்கு, அவர்களால் எப்படி முடிகிறது? நான் நோய்வாய்ப்பட்டதாக உணர்கிறேன். இயேசு மறுபடியும் இன்று இரத்தம் வடிக்கிறார். நம் கொடிய தன்மையால் துன்பப்படுகிறார். உலகம் சாத்தானால் கடத்தப்பட்டிருக்கிறது என்றும் ஒருவன் சொல்லலாம். இயேசு மீண்டும் நம்மை மீட்க முயன்று கொண்டிருக்கிறார். என் தேவனே, நீர் இவ்வளவு காயப்படுவதாக என்னை உணர்ச் செய்வதில் எனக்கு மிக அதிகமாக வேதனையை தருகிறீர். அளவற்ற நன்மைத்தனமும், அன்பின் பாதாளமுமாக மட்டுமே நீர் இருக்க, அவர்கள் ஏன் உம்மை பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? உம் துன்பங்களை இதற்கு மேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் உம் துன்பங்களைப் பற்றியும், உம் வேதனைகளைப் பற்றியும் நான் அக்கறை கொள்கிறேன். ஆண்டவரே, நான் உம்மில் அக்கறை கொள்கிறேன். உம்மை நேசிக்கிறேன். வசுலா, என் வசுலா, என் ஆத்துமத்தின் பலிப்பொருளே, என் இருதயத்தின் பலிப்பொருளே, என் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அவற்றை என்னோடு பகிர்ந்துகொள்; என் கிண்ணத்திலிருந்து பருகு; என்னை கசையால் அடிப்பவர்களை உணர்ந்து பார்; என் ஆத்துமத்தின் நேசமே, அன்பினால் நான் உனக்கு என்னதான் செய்ய மாட்டேன்; நீ என் துன்பங்களில் பங்குபெற, நான் உன்னை அனுமதிப்பேன்; நான் உன் இதயம் தாங்க முடியாத எல்லா துயரத்தையும் கொண்டு இரத்தம் வடிக்கும் என் இருதயத்தின் பலியாக இருக்கும்படி உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; உன் ஆன்மா தாங்கக்கூடிய இந்த எல்லாவித கடும் வேதனைகளாலும், மறுதலிப்புகளாலும், கேலி பரிகாசங்களாலும், என் ஆன்மாவின் பலிப்பொருளாய் இருப்பவளே; வா, நீ என் சிலுவையில் பங்குபெறுவாய்; நானே உன் ஏக நேசம்; நான் என் குறிக்கோளை அடைந்து விட்டேன். நான் உன் மனம் மற்றும் ஆன்மாவின் இனிய வாதையாய் இருக்க என்னை அனுமதி; நீ என்னை மகிழ்விக்கிறாய், ஏனெனில், இப்போது நான் என் எல்லா போட்டியாளர்களையும் முற்றிலுமாக அழித்துவிட்டேன், அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்; யாரும் இங்கு இல்லை! உன் இயேசுவாகிய நான் மட்டுமே உன்னோடு விடப்பட்டிருக்கிறேன்; என் மேன்மைக்கும் அளவற்ற தாராளத்துக்கும் உரிய ஓரிடத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்; நீ யாராய் இருக்கிறாயோ, அதற்காக நான் உன்னை நேசிக்கவில்லை, மாறாக, நீ யாராக இல்லையோ, அதற்காகவே உன்னை நேசிக்கிறேன்; வா, உன் ஒன்றுமில்லாமை என்னை வசீகரிக்கிறது, உன் இயலாமை என்னைப் பேச்சற்றவனாகச் செய்கிறது; ஆண்டவரே, எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. வசுலா, ஏதாவது ஒன்றாக இருக்க, ஒருபோதும் தேடாதே; ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திரு, ஏனெனில், நான் நிறைவேற்றுகிற ஒவ்வொரு தெய்வீக வேலையும் உன்னுடையதாக இல்லாமல், முழுவதும் என்னுடையதாகவே இருக்கும்; என் திருச்சபை ஒன்றாக, ஒரே அதிகாரத்தின் கீழ் இருக்கும்; என் ஆடுகளை மேய்க்கும்படி நான் இராயப்பனிடம் கேட்கவில்லையா? என் ஆடுகளை மேய்க்கும்படி நான் அவரைத் தேர்ந்துகொள்ளவில்லையா? "நீ பாறையாய் இருக்கிறாய், இந்தப் பாறையின் மீது நான் என் திருச்சபையைக் கட்டுவேன்" என்ற வார்த்தைகளை நான் உச்சரிக்கவில்லையா? என் மக்களினங்களிடையே ஏன் இந்த ஆணவம்? மக்களிடையே ஏன் இந்தப் பயனற்ற சதித்திட்டங்கள்? என் இருதயத்திற்கு ஏற்றவராகிய இராயப்பரை நான் தேர்ந்துகொண்டேன், அவர் மீது என் திருச்சபையை கட்டுவதாகக் கூறினேன்; அப்படி இருக்க, நீங்கள் ஏன் என் கட்டளையை திரித்துக் கூறுகிறீர்கள்? ஆண்டவரே, நீர் யாரைக் குறிப்பிட்டு பேசுகிறீர்? என் அஸ்திவாரத்திற்கு எதிராகத் திட்டமிடுவோரும், சதி செய்வோருமாகிய மனிதர்களைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன், உங்கள் சதித்திட்டங்கள் பயனற்றுக் கிடக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? ஆண்டவரே, நீர் யாரைக் குறித்துப் பேசுகிறீர் என்று எனக்குத் தெரியவில்லை. வசுலா, எனக்குத் தெரியும்; இதெல்லாம் உனக்கு மறைபொருளாய் இருக்கும்; ஆனாலும், ஏமாற்றுகிறவர்களுக்கு இது பகலைப் போல தெளிவாய் இருக்கிறது! என் கண்கள் அவர்கள் மீது நிலைத்திருக்கின்றன; என் வாள் உயர்த்தப்பட்டு தாக்கத் தயாராய் இருக்கிறது; அவர்கள் தங்களை அறிந்திருக்கிறார்கள், என்னை நம்புகிறார்கள், அவர்களது நாட்கள் எண்ணப்படுகின்றன; ஆம், உங்கள் பார்வையை உங்களைச் சுற்றி வீசுங்கள், ஏமாற்றுகிறவர்களே! ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நீங்கள் அழிந்து போவீர்கள், ஏனெனில், இந்நாட்களில் நான் செய்யவிருக்கும் காரியத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டால், அதை நம்புவது உங்களுக்குக் கடினமாய் இருக்கும்! நேசமே, உன் மனதில் உள்ள கேள்விக்கு என்னை பதில் சொல்லவிடு; என் செய்தி அந்த ஏமாற்றுகிறவர்களாலும் வாசிக்கப்படும்; நேசமே, என்னை உணர்ந்து பார்; நான் உன்னைப் போலவே வேதனையில் இருக்கிறேன்; என் சிலுவை உன்மீது இருக்கிறது, அதை அன்புடன் சுமந்துகொள்; என் சிலுவை உண்மையான வாழ்வுக்கு வாசலாக இருக்கிறது; அதை விருப்பத்தோடு அணைத்துக்கொள்; வசுலா, சுய மறுதலிப்பும், துன்பமும் ஒரு தெய்வீக பாதைக்குள் இட்டுச் செல்கின்றன, பரிசுத்தத்தனம் மற்றும் புண்ணியங்கள் நிறைந்த பாதை இது; குறிப்பு: நான் எதுவும் செய்ய முடியாமல் துயரமாய் இருந்தேன். ஓ, நேசமே, வா, நான் உன்னோடு இருக்கிறேன்; குறிப்பு: இயேசு என் தலையை வருடிக் கொண்டிருந்தார். ஆண்டவரே, நான் மிக பயங்கர துயரத்தை உணர்கிறேன். நான் இதற்கு மேல் கண்ணீர் எதுவும் சிந்தக்கூடாது என்றும், பின் நாட்களுக்காக ஈடு கட்டும்படி அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது. அதற்குப் பதிலாக, கண்ணீர்த் துளிகள் எதுவும் இல்லை என்றால், அவற்றிற்கு பதிலாக நான் என் இரத்தத்தை சிந்தத் தயாராக இருக்கிறேன். என் வசுலா, நீ இந்த உலகத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதை நினைவு கூர்வாய், நீ எனக்குச் சொந்தமானவள்; என் புனித இருதயத்தை உன்னால் காண முடிகிறதா? குறிப்பு: ஒளிவீசும் தம் நெஞ்சையும் இருதயத்தையும் இயேசு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார். என் திரு இருதயத்திற்குள் பிரவேசி; அதன் உள்ளாளங்களுக்குள், உன் இளைப்பாற்றியை நீ கண்டடைவாய்; நான் உன்னை எடுத்து அதன் உள்ளாழங்களுக்குள் உன்னைத் தள்ளுவேன்; என் வேதனை தாங்க முடியாததாக இருக்கிறது; குறிப்பு: என்னை அந்த அந்நிய நாடாகிய உலகத்தில் விட்டு வைத்திருக்கும் வேதனை. நீ ஒரு சிறு குழந்தையாக மட்டுமே இருந்தபோது, நான் உன்னை அழைத்தது உனக்கு நினைவிருக்கிறதா? இயேசு எனக்குப் பத்து வயதாய் இருந்தபோது நடந்த காட்சியை எனக்குத் தந்தார். அதுவே முதல் அழைத்தலாக இருந்தது. நீ நகர முடியாதவளாக இருந்தாய்; நான் தேவ வல்லமையாய் இருக்கிறேன். நீ எனக்குரியவள். குறிப்பு: இயேசு தம் சுட்டுவிரலால் தம் இருதயத்தை சுட்டிக்காட்டினார். இப்போது வா, நான் தேற்றப்பட வேண்டியவராக இருக்கிறேன்; நாம் ஒருவரில் மற்றவர் இளைப்பாறுவோம்; இயேசு மிக அதிக வேதனையிலும் துயரத்திலும் இருந்தார். இப்படிப்பட்ட துயரத்தை நான் எப்படித் தேற்ற முடியும்? என்னைப் பக்தி ஆர்வத்தோடு நேசிப்பதன் மூலம்; வசுலா, என்னை நேசித்து, எனக்கு ஆறுதல் கொடு; என்னை உன் முழு ஆத்துமத்தோடும் நேசி; நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே. அது உமக்கு தெரியுமே. அளவு கடந்த விதமாக என்னை நேசி! அளவு கடந்து உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத் தாரும்; நான் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன்; இப்போது வா, நான் உனக்குச் சொல்ல விரும்புகிற ஒரு இரகசியம் என்னிடம் உள்ளது; பயப்படாதே, நான் அதை உன் காதில் கிசுகிசுப்பாகச் சொல்வேன்; இயேசு எனக்கு மிக அதிக மகிழ்ச்சி தந்த ஒரு இரகசியத்தை எனக்குச் சொன்னார்! ஓ, கடவுளே! நீர் நிஜமாகவே இதைச் செய்வீரா? செய்வேன், நேசமே, நான் செய்வேன்; ஒருபோதும் சந்தேகப்படாதே, என் வசுலா, எல்லாமே அதன்படி செய்யப்படும்; இயேசுவே, என் தேவனே, உமக்கு நன்றி. உம்மை வாழ்த்த என்னை அனுமதியும். நேசமே, நானும் உன்னை வாழ்த்துகிறேன்; வா, தாமதமாகிவிட்டது; நாம் ஒருவரில் ஒருவர் ஓய்வு கொள்வோம்; சரி, ஆண்டவரே. அப்படியானால் வா; நவம்பர் 10, 1987 என் தேவனே, உம் இருதயம் ஆசிக்கிற எல்லாவற்றையும் என் மீது பதிக்கும்படி என்னைப் பயன்படுத்துவீராக. உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, உம்முடைய நாமம் மகிமைப்படுத்தப்படுவதாக. மனுக்குலத்துக்கு மத்தியில் என் தானியங்களைத் தூவ நேரம் வந்துவிட்டது; என் செய்தியைப் பரப்பு, நான் உன் எல்லா முயற்சிகளிலும் உனக்கு உதவுவேன், என் வார்த்தைகள் அறியப்படுவனவாக, என் படைப்புகள் என் மாபெரும் நேசத்தைப் பற்றியும், என் அளவற்ற இரக்கத்தைப் பற்றியும் அறிந்து கொள்வனவாக; என் ஆட்சி சமாதானம், நேசம் மற்றும் ஒருமைப்பாட்டின் ஆட்சியாக இருக்கும்; திறனற்ற, ஈனமான பிறவியாக, பயனற்ற பேச்சு, திறனற்ற பிறவியாக நான் வசுலாவை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; இதையும் எழுது; குறிப்பு: தொடர்ந்து என்ன நிகழ்கிறது என்று அவர் சொல்லக் கேட்டேன். நான் தர்ம சங்கடத்தோடும் தயக்கத்தோடும் அவரைப் பார்த்தேன். ஆம், என் திருச்சபையைப் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல், ஒரு வெறுமையான கேன்வாஸ் துணியாக, அதில் ஆண்டவராகிய நான் என் பணிகளை மட்டும் நிரப்ப சுதந்திரம் உள்ளவராக இருந்தேன்; இதன் மூலம் எழுதப்படுவது எல்லாமும் என் வாயினின்றே வருகிறது என்பது தெளிவாகிறது; எல்லா செயல்களும் அவள் வழியாக என்னால் செய்யப்படும்; நான் அவள் வழியாகப் பேசுவேன், அவள் வழியாக செயலாற்றுவேன்; நானே அவளை உருவாக்கினேன், அறிவிக்கப்பட இருக்கிற இந்தச் செய்திக்கு என் தூதுப் பெண்ணாக அவள் இருக்க உதவும்படி, அவள் மீது என் எல்லாச் செயல்களையும் பொழிந்தேன்; நீ என் செய்தியைப் பரப்புவாயா? இதை நீ எனக்காகச் செய்வாயா? உன்னை ஆசீர்வதிக்கிறவர், கடவுளின் நேச மகனும், மனிதகுலம் அனைத்தின் இரட்சகரும், வார்த்தையானவருமாகிய இயேசுவாகிய நானே என்பதை நினைவில் வை; நான் உன் முயற்சிகளை ஆசீர்வதிக்கிறேன்; நீ எதிர்கொள்வது மகிழ்ச்சியோ, துக்கமோ, எது வந்தாலும் நம்பிக்கையோடு இரு; நான் என் தார்மீக ஆதரவை உனக்குத் தருவேன்; நான் எப்போதும் உன் முன் இருந்து, உன்னை வழிநடத்துகிறேன்; என் திருச்சபையை ஒன்றுபடுத்துவது என்னை மகிமைப்படுத்தும்! என் இரத்தம் சிந்தும் திருவுடலின் உள்ளாழங்களுக்குள்ளேயே நான் உன்னை நடத்திச் செல்வேன்; என் முட்களை நான் உனக்குச் சுட்டிக்காட்டுவேன், நீ அவற்றை அடையாளம் கண்டுகொள்வாய்; என் மகிமையைத் தவிர வேறு எந்த ஆவலும் இல்லாதிரு, என் பணிகளை ஒருபோதும் சந்தேகிக்காதே, எனக்கு மிகப் பிரியமானவளே, நேசம் உன்மீது ஒளிவீசுகிறது; கடுமையாக உழைத்து என்னை மகிழ்வி; வா, நான் உன் அருகில் இருக்கிறேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு, குறிப்பு: இயேசு என்னை நோக்கி திரும்பி இதைச் சொன்னார். நாம் தந்தையை நோக்கி ஜெபிப்போம், "நேச தந்தாய், நீதி உள்ளவரே, உம் திருப்பெயர் வாழ்த்தப்படுவதாக. உமக்குப் பிரமாணிக்க உள்ளவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும், வானகங்கள் உமது நீதியை எடுத்துரைப்பனவாக. ஒவ்வொரு உதடும் உம் திருப்பெயரைத் தொடர்ந்து போற்றிப் புகழ்வதாக, துர்க்குணம் வஞ்சகர்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும், தங்கள் ஆவி நசுக்கப்படுபவர்களுக்கு உதவும், உமது வார்த்தை வாக்களித்துள்ளது போல, அவர்களை புதுப்பியும், நான் தந்துள்ள வார்த்தைப்பாட்டை நான் காப்பாற்றி அதை நிறைவேற்றுவேன், உமது சபைகளுக்காக நான் ஜெபிக்கிறேன், அவை அனைத்தும் ஒன்றாய் இருப்பனவாக, தந்தாய், அவை அனைத்தும் உம்மில் ஒன்றாய் இருப்பனவாக, ஆமென்; இயேசு ஜெபிப்பதற்கு எனக்கு உதவி செய்தார். இவை அவரது வார்த்தைகள். நவம்பர் 12, 1987 நேசமே, நான்தான் இயேசு; ஓய்வெடுக்கும்போது, நான் உனக்குக் கற்றுக் கொடுத்தபடியே என் சிலுவையைப் பற்றிக்கொள்; இரவில் ஓய்வெடுக்கும்போது, ஒரு பாடுபட்ட சுரூபத்தை கையில் வைத்திருக்கும்படி இயேசு எனக்கு கற்பித்தார். இந்த முறையில் நான் விழித்தல நேரும்போது, என் கரத்தில் பாடுபட்ட சுரூபத்தை நான் உணருகிறேன். உடனடியாக என் மனம் அவர் மீது இருக்கிறது. என்னை விட்டு ஒருபோதும் ஒரு வினாடி கூட விலகாதே; அனைத்தும் நானே; என் சிலுவையை பிடித்திருப்பதன் மூலம், நீ என்னை மகிமைப்படுத்துவதோடு, எனக்கு ஆராதனை வணக்கமும் அளிக்கிறாய்; என் குழந்தாய், உன் கடவுளாகிய நான் உன்னை சுத்திகரித்துத் தேற்றுகிறேன்; ஆகவே, நீ என் தெய்வீக வழிகளை விட்டுத் தவறிப்போய், என்னிடமிருந்து விலகி அலைந்து கொண்டிருந்தபோது, உன்னை மிக அதிகமாகத் தேடிக் கொண்டிருந்த உன் பிதாவுக்கு ஆராதனை வணக்கம் செலுத்து; கவனி, குழந்தாய், நீ எப்போதும் எனக்குச் சொந்தமாய் இருந்தாய்; இப்போது நான் உன்னை கண்டடைந்திருப்பதால், என் மேலங்கியின் கீழ் நான் உனக்கு அடைக்கலம் தருவேன், அங்கேயே உன்னை வைத்துக் கொள்வேன்; பார்! ஸ்கார்லெட் சிவப்பு நிற நீண்ட மீலங்கியில் இயேசு கிறிஸ்துவை நான் கண்டேன். அவர் இரண்டு கரங்களாலும் அதை திறந்து, தமது திருமார்பின் நின்று ஒரு மிகப் பிரகாசமான ஒளி வெளிச்சத்தை எனக்கு காட்டினார். திடீரென, ஒரு மின்னலைப் போல, ஒரு நெருப்பு நாவு நேராக என்னை நோக்கி வந்து என்னை ஊடுருவியது. அது வேதனை தருவதாக இல்லை. அது அவருக்கான என் நேசத்தை மட்டும் ஏற்றி வைத்து, முன் எப்போதையும் விட அதிகமாக அவரை ஆசிக்கும்படிச் செய்தது. என் தீச்சுவாலை உன் இதயத்தைப் பற்றி எரியச் செய்யும்; என் தீச்சுவாலை எப்போதும் உன்னில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்க வேண்டும், பலிபீடமே, நான் என் தீச்சுடரை உன்னில் புதுப்பித்திருக்கிறேன்; என் தெய்வீகச் செய்தியோடு நீ தொடர்ந்து செல்லும்படியாக, ஏனெனில் நீ என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள இயலாதவளாக இருக்கிறாய், ஆகவே, என் தீச்சுடர் உன்னில் எப்பொழுதும் கொழுந்துவிட்டு எரிந்து கொள்ளுமாறு நான் பார்த்துக் கொள்வேன்; வா, நான் உன் திறமையின்மையை நேசிக்கிறேன், ஏனெனில் அதை உணரும் அருளை நான் உனக்குத் தந்திருக்கிறேன்; அனைத்திற்காகவும், உனக்கு நான் தேவைப்படும்போது, நான் மகிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்; உன் பலவீனம் என் பலத்தை ஈர்க்கிறது; உன் துர்ப்பாக்கிய நிலை என் இனிமையை வசீகரிக்கிறது; வசுலா, என்னை நேசி, என் முட்களையும் ஆணிகளையும் பகிர்ந்து கொள், என் சிலுவையைப் பகிர்ந்து கொள், உன் அன்பை எனக்கு முடியாகச் சூட்டு; உன் விசுவாசத்தைக் கொண்டு என்னைக் கனப்படுத்து; நான் ஒருபோதும் உன்னைத் தனியே விடமாட்டேன்! பரிசுத்த வேதாகமத்தில் பேசப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவசி; நவம்பர் 13, 1987 என் வசுலா, நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்புதான்; ஒவ்வொரு புண்ணியமும் அன்பிலிருந்தே பூக்கிறது; அன்பே, ஒவ்வொரு புண்ணியத்திற்கும் வேராக இருக்கிறது; அன்பு ஒரு பழமரத்தைப் போன்றது; அது முதலில் பூக்கிறது, அதன்பின் தனது கனிகளைத் தருகிறது; ஒவ்வொரு கனியும் ஒரு புண்ணியமாக இருக்கிறது; வா, நீயும் நானும் பிதாவிடம் ஒன்றாக ஒரு மௌன ஜெபம் செய்வோம்; நான் சொல்லச் சொல்ல, நீ சொல்; பிதாவே, நீதி உள்ளவரே, என் அடைக்கலமே, உம் ஒளியையும், உம் உண்மையையும் அனுப்பும், இவையே என் வழிகாட்டியாக இருந்து, நீர் வாழ்கிற உமது பரிசுத்த ஸ்தலத்திற்கு என்னை வழிநடத்துவனவாக, நான் என் பங்கிற்கு, உம்மை முழுமையாக நேசிப்பேன், உம் வார்த்தையை நிறைவேற்றும்படி, நான் என் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றுவேன், பரிசுத்தப் பிதாவே, என் குற்றங்களை, என் பாவங்களை நான் அறிந்திருக்கிறேன், என் மீது இரக்கமாயிரும், உமது நன்மைத் தனத்திலும், மாபெரும் தயவிலும், என் பாவங்களை மன்னித்து என்னை சுத்திகரியும், ஆண்டவரே, என் இரட்சகராயிரும் என்னைப் புதுப்பியும், என் ஆவியை உமக்குப் பிரமாணிக்க உள்ளதாகவும், சித்தம் உள்ளதாகவும் வைத்திரும், நான் என் சித்தத்தை உமக்குக் கையளிக்கிறேன், கையளித்து, உம்முடைய எழுது பழகியாக இருக்க நான் சித்தமாய் இருக்கிறேன், நான் உம் திருப்பெயரை புகழ்ந்து போற்றுகிறேன், நீர் எனக்கு தந்துள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. ஆமென்; இப்போது என்னோடு இதை திரும்பவும் சொல்; நாங்கள் சேர்ந்து அதை மீண்டும் சொன்னோம். படிப்படியாக என்னை நடத்தி செல்வதற்காக உமக்கு நன்றி, இயேசுவே. நீர் என் பரிசுத்த ஆசிரியராய் இருந்து, அன்பையும் பொறுமையையும் கொண்டு எனக்கு கற்பிக்கிறீர். நானும் மற்றவர்களும் உம்மை இன்னும் நன்றாக அறியவும், நீர் அளவற்ற நேசமாய் இருக்கிறீர் என்பதை அறியவும் எங்களை வழிநடத்துகிறீர். ஒருபோதும் எங்களை கைவிடுவதில்லை. ஆனால் காணாமல் போயிருந்த எங்களை தேட எப்போதும் தயாராக இருந்து, எங்களை உம்மிடம் திரும்பக் கொண்டு வருகிறீர். உம்மிடம் கடுமையையோ, பொறுமையின்மையையோ நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மாறாக, நேசிக்கப்படுவதாகத்தான் உணர்கிறேன். நீர் அன்பையும் சமாதானத்தையும் எனக்கு தந்தீர். உண்மையிலான சுபாவம் இதுதான், ஆண்டவரே. நான் ஒருபோதும் உம்மை விட்டு பிரியமாட்டேன். மகளே, என்னை எப்போதும் ஆசி; என்னை நேசித்து, என்னை ஆராதித்து வணங்கு; எனக்கு பிரமாணிக்கமாக நிலைத்திரு; நாம் சேர்ந்தே இருப்போம்; என் பிரசன்னத்தை மறக்காதே;