இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 43, ஆகஸ்ட் 16, 1987 என்தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன்! வசுலா, நீ என் கண்களுக்குப் பொருத்தமானவளாக ஆகி வருகிறாய்; கேட்டு எழுது: இன்றைய ஆபேல் உயிர் வாழ்வான்; உன் கடவுளைச் சார்ந்திரு; ஆபேல் உயிர் வாழ்வான்! இந்த முறை ஆபேல் உயிரோடு இருப்பான்; நேசமே, உலகம் தன் பலவீனத்தில் காயின்களால் நிரம்பியுள்ளது; என் ஆபேல்கள் காயின்களால் தீர்ப்பிடப்படுவதையும், கொல்லப்படுவதையும் நான் என்றென்றைக்கும் பார்த்துக் கொண்டிருப்பேனா? என் கண்களுக்கு முன்பாக இன்னும் எத்தனை பேர் அழிய வேண்டியிருக்கும்? வசுலா, மீண்டும் திறக்கப்படும் காயங்களை நான் கொண்டிருக்கிறேன்; இது காயின்களின் ஒரு சந்ததியாக இருக்கிறது; நேசமே, ஒவ்வொரு முறையும் ஓர் ஆபேல் எழும்பியபோதெல்லாம், ஒரு காயின் எந்த விதமான தயக்கமுமின்றி தன் குற்றத்தைத் திரும்பவும் செய்கிறான்; பார்த்தாயா, சிறியவளே? கடவுள் இதை எனக்குச் சொல்லும்போது துயரமாய் இருப்பதாகத் தோன்றினார், நானும் துயரமானேன். இதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் ஆபேல்கள் என் சந்ததியாக இருக்கிறார்கள், அவர்கள் என்னிடமிருந்து வருகிறார்கள்; காயின்கள்? காயின்கள்; அவர்கள் உலகத்திற்குச் சொந்தமானவர்கள்; அவர்கள் மனிதரிடமிருந்து வருகிறார்கள்; இந்த முறை நான் காயினுக்கும் என் ஆபேலுக்கும் இடையில் வந்து நிற்பேன்; நான் காயினிடமிருந்து வரும் எல்லாவற்றையும் வேரறுப்பேன்; காயினின் கரத்தினின்று அவனுடைய ஆயுதத்தைப் பிடுங்கி எறிந்து, அவனை ஆயுதமற்றவனாக்குவேன்; அவன் ஆயுதமற்றவனாக ஆபேலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; வசுலா, இதெல்லாவற்றையும் நான் உனக்குத் தெளிவுபடுத்துவேன்; என்னைப் பார்; அப்படிப் பார்க்கும்போது, என் உதடுகளைக் கவனி, அப்போது நீ புரிந்துகொள்வாய்; நீ இன்னமும் எனக்காக வேலை செய்வாயா? ஆம், என் தேவனே, நீர் என்னை அனுமதித்தால்? இயேசுவா? நான் சர்வேசரனுடைய பிரிய மகனும், மனிதனின் இரட்சகருமான இயேசு கிறிஸ்து; நாம் நாங்கள்? ஆம், ஆண்டவரே. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன், அவர் புன்னகை செய்கிறார்! அப்படியானால் வா, நாம் சேர்ந்து பணியாற்றுவோம்;

ஆகஸ்ட் 20, 1987 என் கடவுளா? நான்தான்; உம்முடைய முந்தைய செய்தியை நான் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். என் குழந்தாய், அதில் ஒரு பகுதியை மட்டும்தான் நீ புரிந்து கொண்டிருக்கிறாய்; நான் புரிந்து கொண்டதில் ஒரு பகுதி மனிதரிடமிருந்து வருகிற காயினியலும், அதாவது காயினிசம். ஆன்மீகமற்ற காரியங்களும் தானே? ஆம், காயின் உலகத்திற்குச் சொந்தமான எல்லா காரியங்களுடையவும் அடையாளமாக இருக்கிறான்; காயின் என் கண்கள் வெறுக்கிற எல்லாவற்றிற்கும் அடையாளமாக இருக்கிறான்; இந்த யுகத்தில் அக்கிரமமும், உலக ஆதாயமும், கலகங்களும், வெறுப்பும், அஞ்ஞானவாதமும், நான் ஆசீர்வதிப்பவர்களை அடக்கி ஒடுக்குதலும், ஒழுங்கின்மையும் காயினின் அடையாளமாக இருக்கின்றன; குறிப்பு: நாத்திகமும். நான் என் சாயலாக உருவாக்கிய ஆபேலைக் காயின் ஒருபோதும் புரிந்து கொள்ளவே இல்லை; ஆபேல் என்னிடமிருந்து வருகிறான், அவன் என் வாரிசாக இருக்கிறான்; அவர் ஆன்ம தன்மை உள்ளவர், அவர் உம்மை நேசிக்கிறார் என்பது இதன் பொருளா? மிகச் சரியாக சொன்னாய்; இது வேறுபாட்டின் காரணமாக அவன் காயினால் வெறுக்கப்பட்டான்; ஆவியானவரிடமிருந்து வருவதை ஞானிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்; ஆண்டவரே, நான் ஒரு காரியத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேன். அதை எழுத நான் விரும்பவில்லை. எனக்குத் தெரியும், அவனுடைய ஞானத்தைத் தூண்டி விடுவதுதான் நான் செய்ய விரும்பும் காரியம்; உனக்கு எது அதிக முக்கியமானது, அவனை பாரமான இயந்திரக் கற்களின் கீழ் விட்டு விடுவதா, அல்லது அவன் உன்னைக் கவலைக்குள்ளாக்குவதா? நீ துன்புற வேண்டி இருந்தாலும் எதை நீ தேர்ந்து கொள்வாய்? தயக்கமே இன்றி, நான் அவனுக்காகத் துன்புறுவதைத் தேர்ந்து கொள்வேன்; உன் உறக்கத்திலிருந்து நான் உன்னை எழுப்பினேன்; மற்றவர்களுக்கும் அதையே நான் செய்ய மாட்டேனா? செய்வீர், என் தேவனே. அப்படியானால் நல்லது, என் கரத்தினால் அர்ச்சிக்கப்பட்டுள்ள உன் வழியாக என்னைச் சுதந்திரமாக செயலாற்ற விடு; எனக்குத் திருமண ஒப்பந்தமானவளே, என் ஆத்துமத்தின் நேசமே, என் பரிசுத்த ஆவியானவர் உன்மீது இருக்கிறார்; நான் உனக்கு இலவசமாகத் தந்திருக்கிறேன்; ஆகவே நீயும் இலவசமாகக் கொடு; வா, என்னில் கரைந்து விடு, என்னோடு ஒன்றாகு! என் வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, நீர் விரும்புகிற எல்லாவற்றையும் நான் செய்வேன். எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை, ஏனெனில் நான் என்ன சொன்னாலும் அது போதாததாய் இருக்கிறது. அப்படியானால் வா, நான் என் படைப்பை மீண்டும் புதுப்பிப்பேன். நாங்கள்? நாம்? ஆம்! ஆகஸ்ட் 23, 1987 நேற்று மிகச் சிறப்பான ஒரு காரியம் நடந்தது! அது பரபரப்பான நாட்களில் ஒன்றாக இருந்தது. அன்று துணி துவைக்கும் நாள். ஆகவே நான் துவைக்கும் இயந்திரத்தைக் கொண்டு துவைத்தேன், துணிகளை உலர வைக்கும் இயந்திரத்தைக் கொண்டு உலர வைத்தேன். இது நன்கு வெயிலடிக்கும் அழகான நாளாக இருந்ததால், என் கணவர் எங்கள் மகனை நீச்சல் குளத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர் 11 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். தாங்கள் 3 மணிக்குத் திரும்பி வருவதாக அவர் கூறினார். நான் 3 மணிக்கு மதிய உணவைத் தயாராக வைக்க வேண்டும். ஆகவே நான் வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தேன். மணி இரண்டாக 10 நிமிடம் இருந்தபோது, மதிய உணவு தயாரிக்கத் தொடங்கலாம் என்று நினைத்து, வெண்ணையை உருக்குவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தேன். திடீரென எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. முக்கிய ஸ்விட்ச் பெட்டியில் உள்ள உருகு கம்பி, அதாவது பியூஸ் உருகி மின் தொடர்பு நின்றுவிட்டது. வீட்டின் எல்லா இடங்களிலும் மின்சாரம் இருக்கிறதா என்று நான் பரிசோதித்துப் பார்த்தேன். அதன்பின் உருகு கம்பியை மாற்ற நான் அதைத் தேடினேன். ஆனால் என் கணவர் வேறு எங்கோ அதை வைத்துவிட்டிருந்தார். கடைகள் மூடியிருந்தன. ஏனெனில் அன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் காரும் பழுதாகி இருந்தது. ஆகவே நான் விரக்தியடைந்தேன்... இந்த விரக்தியில் நான் போய், படுக்கையில் படுத்துக் கொண்டேன். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, சமையலறையில் ஏதோ சத்தத்தை நான் கேட்டேன். அது என்ன சத்தம் என்று பார்ப்பதற்காக நான் எழுந்து சென்றேன். அங்கே நான் அதிசயத்துப் போகும் விதமாக. அடுப்பின் விளக்குகள் எரிந்தன. அந்தத் தகடு வெண்ணையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. வீட்டில் வேறு எங்கும் மின்சாரம் இன்னும் வரவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கிய உருகுக் கம்பி உருகிவிட்டால் எல்லாமே நின்றுவிடும். அப்படி இருக்க...? நான் உணவைத் தயாரித்து அதை வறுக்கும்படி அடுப்பில் வைத்தேன். 3 மணிக்கு என் கணவர் திரும்பி வந்தபோது நான் நடந்ததை அவரிடம் கூறினேன். அவர் எல்லா இடங்களிலும் மின்சாரத்தைப் பரிசோதித்தார். இன்னும் வேலை செய்து கொண்டிருந்த அடுப்பை தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் போயிருந்ததை அவர் சரிபார்த்துக் கொண்டார். முக்கிய உருகு கம்பி உருகிவிட்டிருந்ததை அவர் பார்த்தார். அதற்குள் உணவு தயாராகிவிட்டது. முக்கிய உருகு கம்பியை அவர் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், "உணவு தயாராகிவிட்டது" என்று நான் சொன்ன மாத்திரத்தில், மீட்டர் நின்றுவிட்டது. ஆனால் அடுப்பு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. என் கணவர் ஒரு புது உருகு கம்பியை மாற்றியவுடன், மின்சாரம் வழக்கம் போல வந்துவிட்டது. அவராலும் இதை விளக்க முடியவில்லை. ஆகஸ்ட் நம்முடைய திருநாள்! நம் கொண்டாட்டம் கெட்டுப்போவதை நாம் விரும்பவில்லை; நீ சொல்ல வருவது... இயேசு என்னை முடிக்க விடவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் திருநாளின் போது நீ துயரமாய் இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை; வசுலா, நீ என் மலராய் இருக்கிறாய், மலர் எதைக் குறிக்கிறது என்று உனக்குத் தெரியுமா? மலர் எளிதில் கசங்கிவிடும் பலவீனத்தன்மையைக் குறிக்கிறது; அதனால்தான் நான் உன்னை நன்கு கவனித்துக் கொள்கிறேன், இல்லாவிடில் உன் பலவீனம் உனக்குத் தீங்கிழைத்துவிடும்; என் தேவனே, உமக்கு நன்றி. நீர் எனக்கு மிக அருகில் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நான் உம்மை நேசிக்கிறேன். நான் தர்ம சங்கடமாக உணர்கிறேன். ஏனெனில் நான் இதற்கும் தகுதியானவள் அல்ல. நேற்று மாலையில் என் மகனின் அறையில் இருந்தபோது நான் தூப நறுமணத்தால் மூடப்பட்டிருந்தேன். தூபத்தின் நறுமணம் ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருந்தது. நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்! என் தேவனா?

நான்தான்; நான் உன்னை நேசிக்கிறேன், சந்தேகப்படாதே! நீ தனியாக இல்லை; மலரே, இயேசுவாகிய நான் உன்னோடு இருக்கிறேன்; நான் கவனம் சிதறும் அளவுக்கு உன்னை எப்போதும் நேசித்து வந்திருக்கிறேன்; உனக்குக் கற்பிக்கப்பட்டது போல உன் வாசனையைப் பரப்பு; வா, என் தோட்டத்தை அலங்கரி, என்னை மகிழ்வி; பார், வசுலா, நீ என்னை புரிந்து கொள்ளத் தொடங்குகிறாய்; நான் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கி இருக்கிறேன், நேசமே, நான் உனக்கு என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நீ முற்றிலுமாக அறியாதிருந்தாய்; என் கரத்தை உன் தோளில் போட்டு மற்றவர்களிடமிருந்து உன்னை இழுத்துக் கொண்டதை நீ உணரவில்லையா? அதே வேளையில், என் இருதயத்தின் ஆசைகளை உன் காதில் கிசுகிசுப்பாகக் கூறிய என் குரலை நீ கேட்கவில்லையா? இப்போது நீ உன் தலையை உயர்த்தி உள்ளதால், உன்னைச் சுற்றிலும் என்னைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ திடீரென உணர்கிறாய்; நான் உன்னை எவ்வளவோ நேசிக்கிறேன்! நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்! என்னோடு மட்டும் இருக்கும்படி உன்னையே மாற்றிக்கொள்; ஆம், நாம் இருவர் மட்டும், நானும் நீயும், நீயும் நானும்; ஆ வசுலா! எனக்கு நேராக நில்; உன் கடவுளாகிய எனக்கு நேராக நில், இன்றிலிருந்து நான், நான் மட்டுமே; நானே உன் சர்வேசரன், நானே உன் புனிதத் தோழன், நானே உன் இரட்சகர், நானே உன் மணவாளர்; நானே உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவேன்; அன்பே, உனக்கு உதவி தேவையா? நான் உன்னிடம் விரைந்து வருவேன்; தைரியம் தேவையா? நான் உனக்கு என் பலத்தைத் தருவேன்; ஆறுதல் தேவையா? என் கரங்களில் விழு, என் இருதயத்தில் தங்கீயிரு; வசுலா, என்னைத் துதி! என்னைத் துதி, மகளே! வந்து என்னை மகிமைப்படுத்து! என்னை மகிமைப்படுத்து, என் பாதங்களுக்கு முன் சாஷ்டாங்கமாக விழு, என்னை ஆராதி! என்னுடையவளாக இரு! ஆ வசுலா, நான் உன்னை நேசிப்பது போல நீயும் என்னை நேசி! நான் உன்னை வாழ்த்துவது போல, நீயும் என்னை வாழ்த்து, நான் என் வாசனையைக் கொண்டு உன்னை மூடுவது போல, நீயும் உன் வாசனையைக் கொண்டு என்னை மூடு; உன் இரட்சகராகிய நான் உன் முன்னால் நிற்கிறேன்! என்னை ஆராதி, அதே நேரத்தில் இந்த மணித் துளியில் என் இருதயத்தை உணர்ந்து பார், இந்த நேரத்தில் இந்த மணித்துளியில் என் இருதயத்தை உணர்ந்து பார்; விரைவில் இரவு வந்துவிடும், நீ என்னிடமிருந்து உன் விளக்கை நிரப்பிக் கொள்ள மாட்டாயா? பகல் முடியும் வரையிலும் ஒருபோதும் காத்திராதே; நான் உன் விளக்கை எண்ணெயால் நிரப்ப எனக்கு அனுமதி கொடு; வந்து என்னிடமிருந்து முகந்துகொள்; நான் உன்னோடு தனியாக இருக்கவிடு; எனக்காக வாழு, நம் தனிமையில் நான் அகமகிழ்கிறேன்! நான் உன்மீது நேசப் பொறாமை கொள்கிறேன்! உன்னை மற்றவர்களிடமிருந்து பிரிக்கும் அளவுக்கு உன் மட்டில் எனக்கு அன்பு இருக்கிறது; என்னைப் புரிந்து கொள்ள நீ முயற்சி செய்வாயா? உன்னோடு தனியாய் இருக்க நான் ஏங்கினேன்; நேசம் பற்றி எரியிறது; நேசம் பற்றி எரியும்போது என்னை மகிழ்விக்கும் காரியத்தைச் செய்ய நானே என்னை அனுமதித்துக் கொள்கிறேன்; இப்போது நீ என்னுடையவள், நீ நேசத்தின் மலர்க் கிரீடங்களால் என்னைக் கவர்ந்திழு, அவற்றால் என்னை நிரப்பு; உன் மழலை வார்த்தைகளால் என்னை வசீகரி; இப்போது எனக்குப் பிரியமான விதத்தில் உன்னை நேசிக்க என்னை அனுமதி; நான் விரும்புகிறபடி உன்னைப் பயன்படுத்தும் உரிமையை நீ எனக்குத் தந்திருக்கிறாய் அல்லவா? ஆம், ஆண்டவரே, தந்திருக்கிறேன். ஆகவே நான் அந்த உரிமையைப் பயன்படுத்துவேன்; என் விரல் உன் இதயத்தைத் தொடும், அப்படி அது தொடும்போது நீ என்னிடமிருந்து எதையும் ஒதுக்கி வைக்க மாட்டாய்; எல்லாவற்றிற்கும் மேலாக இது நம் ஆகஸ்டாக இருக்கிறது. நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் எப்போதும் உனக்கு நினைவுபடுத்துவேன்; ஆகஸ்ட் 24, 1987 வசுலா, மனஸ்தாபப்படு! குறிப்பு: நான் மனஸ்தாபப்பட்டேன். நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்; இப்போது நீ என்னை ஸ்துதிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்! குறிப்பு: சரியான வார்த்தைகளைத் தேடியபடி நான் தயங்கினேன். வசுலா, "சர்வ வல்லவரான கடவுளுக்கு மகிமை உண்டாவதாக" என்று சொல்; நான் யார் என்பதை நீ அறிவாயா? நீரே ஆல்ஃபாவும் ஒமேகாவும் அனைத்தையும் படைத்தவர் நீரே. என் குழந்தாய், நன்றாகச் சொன்னாய்; இப்போது நான் இதை உனக்குச் சொல்கிறேன்; என் செய்தியை வாசித்து நான் எழுதுவதை காணாமலே நான்தான் எழுதினேன் என்று விசுவசிக்கிறவர்கள் பேறு பெற்றவர்கள்; என் செய்தியைக் கேட்டு அதை அனுசரிக்கிறவர்கள் பேறு பெற்றவர்கள்; ஒன்றிணைந்து சமாதானத்தையும், நேசத்தையும் பரப்புபவர்கள் பேறு பெற்றவர்கள்; என் செய்தியைப் பரப்பு, என் சமாதானத்தைப் பரப்பு, அது எல்லா இதயங்களிலும் அரசாள்வதாக. என் நேசத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படாதே; நான் அதை எப்படிப் பரப்ப வேண்டுமென நீர் விரும்புகிறீர்? நான் இதை எப்படி செய்ய முடியும்? நான் ஆதரவற்றவள். வசுலா, பொறு, நீ காண்பாய்; நான் உனக்கு உதவுவேன்; வா, நாம், நாங்கள்; ஆம், என் தேவனே, நாம் நாங்கள். ஆகஸ்ட் 25, 1987 என் குழந்தாய், நான் உன்மீது கொண்டுள்ள நேசத்தை நினைவில் வை; வசுலா, சிறியவளே, நீ உன் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கிற சிவப்புச் சிலுவையை நான் ஆசீர்வதித்திருக்கிறேன்; விசுவசி! வசுலா, என் விண்ணகப் பணிகளில் விசுவாசம் கொள்; என் தேவனே, உமக்கு நன்றி. நீர் எவ்வளவு அதிகமாக எனக்குத் தருகிறீரோ, அவ்வளவுக்கு மிக மிகக் குறைந்த தகுதி உள்ளவளாக நான் உணர்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்; வா, எனக்கு நெருக்கமாக இருந்துகொள், என் பிரசன்னத்தைப் பற்றியும், நான் உனக்குச் சொன்ன காரியங்களைப் பற்றியும், இஸ்மினுக்குக் கற்பிப்பதையும், மற்ற காரியங்களைப் பற்றியும் கூட நீ சொல்வதையும் கேட்க நான் விரும்புகிறேன்; எனக்காக வாழு; என்னை மகிமைப்படுத்து; சில சமயங்களில், ஆண்டவரே, நான் உம் பிரசன்னத்தைக் குறைவாக உணர்கிறேன். "கடவுள் இப்போது எனக்கு அவ்வளவு நெருக்கமாக இல்லை" என்று நினைக்கிறேன். இது ஏன் ஆண்டவரே? நான் உனக்குப் போதுமான அளவு பக்கத்தில் இல்லை என்று நீ தவறாக நம்புகிறாய், ஆனால் அந்தத் தருணங்களில் நான் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ, அவ்வளவுக்கு நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன்; நீ தனியாக இல்லை, ஒருபோதும் இல்லை! திடீரென்று நான் அவரை மிகத் தெளிவாக பகுத்துணர்ந்தேன். அவர் தமது உயிரோட்டமுள்ள பிரசன்னத்தை தமது சில செய்கைகளைக் கொண்டு எனக்கு எண்ணிப்பித்தார். அது ஒரு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நீடித்தது. அது அற்புதமாய் இருந்தது! எல்லாமே ஞான ரீதியானது; இதன் மூலம் எல்லாமே இயற்கைக்கு மேற்பட்டது. நீங்கள் இந்த செயல்களை லௌகிக நிலையில் வைத்தால், அவை புரிந்து கொள்ள முடியாதவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது உலகத்தன்மையானது அல்ல. இதன் காரணமாக உலக முறையில் அதை விளக்குவது சாத்தியமில்லை. இவை இயற்கைக்கு மேற்பட்ட உலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நம்முடைய நிதர்சன உலகத்தில் அல்ல. உங்களில் அநேகர் நான் அரூபியாய் இருக்கிறேன் என்பதையும், நீங்களும் அரூபியாய் இருக்கிறீர்கள் என்பதையும் மறந்துவிட முற்படுகிறார்கள்; குறிப்பு: ரெண்டு கொரிந்தியர் மூன்றாம் அதிகாரம் 17 ஆம் வசனம் மற்றும் ஒன்று ராயப்பர் மூன்றாம் அதிகாரம் 11 ஆம் வசனம்.

ஆகஸ்ட் 26, 1987

வசுலா, நீ இன்னமும் என்னுடைய பணிப்பெண்ணாக இருக்க விரும்புகிறாயா? ஆம், ஆண்டவரே, என் இயலாமையையும் தோல்விகளையும் மீறியும் கூட உமக்கு நான் தேவைப்படுகிறேன் என்றால், குழந்தாய், உன் அலுவலை நீ செய்து முடிக்க நான் உனக்கு உதவுவேன், அதன்பின் நான் உன்னை விடுவிப்பேன்; ஞானம் உனக்குப் போதிக்கும்; உன் ஓய்வு நேரங்களை விளக்கி எனக்காக அதிக பரித்யாகம் செய்ய நீ சித்தமாய் இருக்கிறாயா? ஆம், சித்தமாய் இருக்கிறேன். என் கரத்தைப் பிடித்துக்கொள்; நான் உனக்கு ஆதரவாய் இருப்பேன்; வசுலா, நீ வாழும் யுகம் எல்லா ஞான மதிப்பீடுகளையும் இழந்துவிட்டது. இருந்தாலும், உனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் உன் அருகில் இருப்பேன்; நான் சர்வேசரனுடைய பிரிய மகனாகிய இயேசு கிறிஸ்து; நான் உன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்; உன்னை வழிநடத்த கண்மூடித்தனமாக என்னை அனுமதி; இறுதிவரை கண்மூடித்தனமாக என்னை விசுவாசி; குறிப்பு: அர்த்தம் "நிரூபணம் எதுவும் இல்லாமலே என்னை அப்படியே விசுவாசி." கண்மூடித்தனமாக விசுவாசிப்பது அவரை மகிமைப்படுத்துகிறது.