வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 55. டிசம்பர் 2, 1987 கரபந்தாளின் செய்தி நம்பகமானது, அது பரப்பப்பட்டு, மதிக்கப்பட வேண்டும்; கரபந்தாலை அர்ச்சியுங்கள்; உங்கள் தவறுகள் திரும்பத் திரும்பச் செய்யப்படுகின்றன என்பதை உங்களால் காணவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையா? நீங்கள் பாத்திமா பற்றிச் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்கிறீர்கள்; ஓ, படைப்பே, நீங்கள் எப்போதுதான் என் மீது விசுவாசம் கொள்வீர்கள்? "இயே எம்பணிசெஸ் இத்தான்" ... குறிப்பு: கிரேக்க மொழியில் "அந்த காட்சிகள் நிகழ்ந்தன;" அங்கே நிகழ்ந்தன. என் இறைவா, இப்படிப்பட்ட துயரத்தில் நீர் பேச கேட்பதும், உம்மை உணர்வதும் பயங்கரமானதாய் இருக்கிறது. வசுலா, என்னைத் தேற்று; ஓ வாரும் ஆண்டவரே, நான் உம்மைத் தேற்ற விரும்புகிறேன், எல்லா ஆன்மாக்களும் ஆண்டவராகிய உம்மைத் தேற்றும்படியாகவும், அதனால் நீர் அநேகரால் தேற்றப்படும்படியாகவும், எல்லா ஆன்மாக்களும் இதை அறிந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்றால், அவர்கள் என்னைத் தேற்றுகிறார்கள்; வா, இயேசுவாகிய நான், காயினுக்கும், என் ஆபேலுக்கும் நடுவில் நிற்பேன் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்; காயின் இந்த முறை, தன் சகோதரனுக்குப் பதிலாக என்னை எதிர்கொள்வான்; அவன் தாக்குவதற்குத் தன் கையை ஓங்கினால், அவன் என்னைத்தான் அடிக்க வேண்டியிருக்கும்; அவன் ஆடைகள் உரியப்பட்டு, தன் கடவுளாகிய என் முன்பாகத் தான் நிர்வாணமாக நிற்பதைக் காண்பான்; என் ஆபேலே, எனக்கு மிகப் பிரியமுள்ள ஆபேலே, குறிப்பு: கடவுள் இதை எவ்வளவு உருக்கத்துடன் சொன்னார் என்றால், கடவுள் மட்டுமே இந்த முறையில் பேச முடியும்; வேறு யாராலும் அப்படி பேச முடியாது. நீ இந்த முறை உயிரோடு வாழ்வாய்; உன் இரத்தம் சிந்தப்படாது; என் நறுமணம் , என் தோட்டத்தை, என் ஆபேலின் இரத்தம் சிந்தப்பட்ட அதே தோட்டத்தை அழகுபடுத்தும்; வா, மலரே, என் பிரசன்னத்தைப் பற்றி நான் உனக்கு நினைவுபடுத்துவேன், விழிப்பாக இருந்துகொள்; டிசம்பர் 4, 1987 இயேசுவா? நான்தான்; மகளே, என் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இந்தக் காட்சிகளைக் கலாபனைக்கு உள்ளாக்கியவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்; அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, அவற்றை ஒத்துக்கொண்டு, மனம் திரும்புதலுக்காக எனக்கு முன்பாக வர வேண்டும் என்று மட்டும்தான் நான் கேட்கிறேன்; நான் அவர்களை மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பேன்; மகளே, அநேகர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வது பற்றிய பயத்தினால், இந்தச் செய்தியைத் தருவது இயேசுவாகிய நான்தான் என்பதை மறுத்து, என் செய்தியை மீண்டும் துன்புறுத்துவார்கள், ஏனெனில், குழந்தாய், இது மீண்டும் அவர்களுடைய ஞானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது; குறிப்பு: இந்த தெய்வீக அலுவல் கடவுளிடமிருந்தே இறங்கி வருகிறது என்பதை நம்புவது சிலருடைய புத்திக்கு அப்பாற்பட்டதாக இருப்பது போலவே, அக்காலத்தில் இயேசுவை தேவ சுதன் என்பதை நிஜமாகவே புரிந்து கொள்வதும், நம்புவதும் அவர்களது புத்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒருவேளை தங்கள் ஆழ்மனதில் இது நீர்தான் என்பதை மறுதலிப்பது அவர்களுடைய நோக்கமாக இல்லாதிருக்கலாம். அதை தாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்று ஒருவேளை அவர்கள் நம்பலாம். ஏனெனில், அவர்கள் இந்த புதுமைகளை உண்மையென உணர்ந்திருந்தால், அவர்கள் உம்மை வாழ்த்தி ஸ்துதித்திருப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்! அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவுதான். உன் வாதத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேன் - ஏன் அவர்களை மூடிப் பாதுகாக்கிறாய்? ஏனெனில் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள், அவர்கள் இதை அறியவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றால்.... நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; அப்படியானால் நான் உம்மிடம் கேட்க துணிவேனாகில்; அவர்களுக்கு மன்னிப்பையும், அவர்கள் மீது உம் இரக்கத்தையும் நான் கேட்கிறேன். ஆனால், குழந்தாய், அவர்கள் உன்னைத் துன்புறுத்துவர்களாக இருப்பார்கள், உன் ஆன்மாவைத் துன்புறுத்துவார்கள் - உன்னை கசைகளால் அடிப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்; அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், அப்போது அது அவர்கள் தெரிந்தே செய்த தவறாக இருக்காது. அவர்கள் பலவீனம் உள்ளவர்களாக இருப்பதால், தாங்கள் செய்கிறது என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை. உன் தேவ சிநேகத்தைக் கொண்டு, இது நீர்தான் என்று அவர்கள் புரிந்து கொள்ள, அவர்களுக்கு உம்மால் உதவ முடியும். என் தேவனே, உம்முடைய தெய்வீக கரம் அவர்களை தாக்காதிருப்பதாக. ஏனெனில், அவர்களை நீர் தாக்கும்போது, நிறைய மாசற்ற ஆன்மாக்களும் தண்டிக்கப்படலாம். வசுலா, என் படைப்பு மிருக நிலைக்கு தாழ்ந்து விட்டது; பிரம்மாண்டமான பரிகாரங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது, என் சிருஷ்டிகள் தாங்கள் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்; என் குருத்துவ ஆன்மாக்கள் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு, என் ஆட்டுக்குட்டிகளை அன்பாலும் அறிவாலும் நிரப்ப வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; இப்போது அவர்கள் முழு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; குறிப்பு: கடவுளின் படைப்பு. ஆம், இயேசுவே, ஆனாலும் இப்படி 'வழக்கத்துக்கு மாறாக' உம்மோடு இருக்கும் விதம் திருச்சபையின் அதிகாரிகளுடைய புத்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்றாலும் கூட, அவர்களை ஒளிர்வித்தருளும்; ஆண்டவரே, அவர்களுடைய கண்களையும் காதுகளையும் திறந்தருளும். நான் சிறு குழந்தைகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஞானத்தைத் தருவேன்; அறிஞர்களுக்கு அல்ல; ஆண்டவரே, அவர்களுடைய வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றதே; அவர்கள் தொலைந்து போவார்கள்! குழந்தைகளாக என்னிடம் திரும்பி வரவில்லை என்றால், அவர்கள் தொலைந்து தான் போவார்கள்.... வசுலா, நீ கசைகளால் அடிக்கப்படுவாய் என்பதால், துன்பத்தைப் பொறுமையாய்த் தாங்கும் உன் குணத்தை நான் அதிகரிப்பேன்; குறிப்பு: ஆன்மாவின் துன்பத்தை அடையாளமாக குறித்துக் காட்டுகிறது. என்னை சுதந்திரமாக விடு; என் வேலைகளில் குறுக்கிடாதே; ஆண்டவரே, நீர் அவர்களுடைய பலவீனங்களைக் கண்டும் காணாதிருந்து, அவர்களை மன்னிப்பீரா? நான் இன்னும் துணிந்து குறுக்கிட்டேன். குழந்தாய், அவர்கள் உன்னைக் காயப்படுத்துவதைக் காண்பதை என்னால் தாங்க முடியாது; உமக்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை; ஆனாலும், அவர்களுடைய பலவீனங்களைக் கண்டும் காணாதிருக்கும்படி நான் உம்மிடம் கேட்கலாமா? மலரே, நீ அவர்களால் மிதிக்கப்படுவதைக் காண நான் விரும்பவில்லை; அவர்கள் உன்னை நசுக்குவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது; இருந்தாலும், அவர்களைத் தாக்காதீர்; அவர்களுக்கு கற்பியும், ஆண்டவரே. அப்படியானால், அவர்கள் தங்கள் செவிகளைத் திறக்க வேண்டும்; வசுலா, உனக்காக என்ன காத்திருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? நீ என் சிலுவையைக் கண்டிருக்கிறாய்; உன் துன்பச் சோதனைகள் கடினமாய் இருக்கும் என்றாலும், நான் உன் பக்கத்திலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்; என் அருகில் என் பரிசுத்த மாதா இருக்கிறார்கள்; அவர்களுடைய வார்த்தைகளைக் கேள்; மகளே, அன்பே, கரப்பந்தாலை அர்ச்சிப்பாய்; நான் கரப்பந்தாலில் தோன்றி, என் செய்தியைத் தந்தேன்; என் செய்தி முறையான விதத்தில் பரப்பப்படவில்லை; அநேக குருநிலையினர் என் காட்சிகளை மறுத்தளித்து விட்டார்கள்; அதன் மூலம் தங்கள் இதயங்களில் எங்களுக்கு ஒரு இடம் தர மறுத்துவிட்டார்கள்; ஆனால் நான் என் நேச குழந்தைகளை மறந்து விடவில்லை; அவர்களே சந்தேகம் கொண்டு குழப்பத்தில் விழுந்து, என் காட்சிகளை மறுத்த சமயங்கள் இருந்தன; இது ஒரு ஒப்புமையாகத் தரப்பட்டது; இன்றைய திருச்சபையில் எப்படி என்ன ஒரு குழப்ப நிலை ஆட்சி செய்கிறது என்பதை என் குழந்தைகளுக்கு காட்டும்படியாகவே இது தரப்பட்டது; என் கரப்பந்தால் காட்சிகளை நான் உறுதிப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறேன்; மணித்துளிகள் பறந்து கொண்டிருக்கின்றன, என் செய்திகள் முறையான விதத்தில் பரப்பப்படவில்லை, என் பரிசுத்தத்தனம் மதித்து வணங்கப்படவும் இல்லை; இறைவா, இன்றே இந்தக் கணத்திலேயே இந்தச் செய்தி பரப்பப்பட வேண்டும் என்பது போல் இது மிக அவசரமானதாகத் தோன்றுகிறது. எங்கள் பாதையை திறப்பதற்கு நாங்கள் உம்மைத்தான் சார்ந்திருக்கிறோம். உம் செய்திகளைப் பரப்ப நாங்கள் சித்தமாய் இருக்கிறோம். ஆனாலும், உம் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு பலமும், தைரியமும், வாய்ப்புகளும் தாரும். ஆமென். என் வசுலா, இப்போது உன்னை நான் கைவிடுவேனா? இல்லை, ஆண்டவரே, தொடர்ந்து வேலை செய்வதற்கு உம்முடைய பலம் எனக்குத் தேவை. நீ உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்ற போதுமான பலத்தை பெற்றுக் கொள்வாய்; டிசம்பர் 6, 1987 வசுலா, எழுது, ஆண்டவராகிய நான் என் சிலுவைப் பாதையின் ஸ்தலங்கள் சங்கை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; மெழுகுபர்த்தியை ஏற்றுங்கள்; முதலில் என்னுடைய திருமாதாவை மகிமைப்படுத்துங்கள், அவர்களுக்கு ஒரு மெழுகுபர்த்தியை ஒப்புக்கொடுங்கள், அதன்பின் என் எல்லா ஸ்தலங்களிலும் உங்கள் முழங்கால்கள் மண்டியிடுவதை நான் காண விரும்புகிறேன், என் ஸ்தலங்களில் ஓர் ஒளியை, அதாவது எரியும் மெழுகுபர்த்தியை பிடித்துக் கொள்வதன் மூலம் எனக்கு ஆராதனை வணக்கம் செலுத்துங்கள்; ஆண்டவரே, நீர் ஏற்கனவே உம்முடைய திட்டங்களை வகுத்துவிட்டீர். ஆண்டவராகிய உம்மை நாங்கள் ஆராதித்து வணங்குவதற்கு எங்களுக்கு பாதையை திறக்கும்படி நான் உம்மிடம் இரந்து கேட்கிறேன். நான் அதைத் திறப்பேன்; என் மீது சாய்ந்து கொள், நான் உன்னைச் சுமந்து செல்வேன்; வசுலா, இது நிறைவேற்றப்படும்போது, விரைவில் இரண்டாவது நிகழ்ச்சி வரும் என்பதை நான் உனக்கு நினைவுபடுத்துவேன்; இனியும் நீ உன் சௌகரியத்தை தேடாதிருக்கும்படி நான் உனக்கு நினைவுபடுத்துவேன்; என் இறைவா, எங்கள் எல்லோருக்காகவும் நீர் பேசிக் கொண்டிருக்கிறீரா? இல்லை, வசுலா, நான் உன்னிடம் தான் பேசுகிறேன்; என் முகத்திற்கு நேராக பார், இந்த நேரத்தின் தொடக்கத்தில் உன்மீது என் வல்லமையுள்ள கரத்தை நீ உணர்வாய் என்பதை நான் உனக்கு நினைவூட்டுவேன்; என் தெய்வீக உத்தரவுகள் உன்னில் பாயும்; நீ எளிதில் வளையக்கூடியவளாகவும், எனக்கு ஊழியம் செய்ய சித்தமுள்ளவளாகவும், பிரமாணிக்க உள்ளவளாகவும், எனக்கு சங்கை செலுத்துபவளாகவும் இருக்க வேண்டும்; நான் உன்னைப் பயன்படுத்துவேன், நீ என் இலக்காகவும் இருக்கும் அளவுக்கு நீ முழுமையாகப் பயன்படுத்தப்படுவாய்; சிறியவளே, நீ என் எழுது பலகையாக இருக்கிறாய்; நான் இராயப்பனிடம் என் ஆடுகளைத் திரும்பக் கொண்டுவர விரும்புகிறேன்; ஆண்டவரே, என் தேவனே, இப்போது ஒரு வருடத்திற்கு மேலாக நான் உம்முடைய எழுது பலகையாக இருந்து வருகிறேன். நீர் ஒவ்வொரு நாளும் என்னை பயன்படுத்தி இருக்கிறீர். இந்த விதத்தில் நான் உமக்கு இன்னும் அதிக நெருக்கமாக இருக்கிறேன் என்பதால், நான் உம்மை நேசிக்கிறேன். நீர் என்னை பயன்படுத்த முடியும். நான் பிரம்மாணிக்கமாகவும் உம்முடைய அடிமையாகவும் இருப்பேன். வசுலா, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்; நீ சிலுவைப் பாதை ஸ்தலங்களைச் செய்து முடித்த பிறகு, என் பாதங்களை முத்தமிடுவாயா? சரி, ஆண்டவரே, நான் முத்தமிடுகிறேன். வா, என் பிரசன்னத்தை மறக்காதே; நீ இந்நாட்களில் என்னை அலட்சியம் செய்பவளாகத் தோன்றுகிறாய்; என் தேவனே, எல்லாவற்றையும் கையாள்வதற்கு எனக்குப் பலம் தாரும். நீர் அறிந்துள்ளது போல, நான் உம்மை சந்தோஷப்படுத்த விரும்புகிறேன். ஆனால் என் திறமையோ மிகக் குறைவாய் இருக்கிறது. நீர் என்னை மன்னிப்பீரா? ஓ, வசுலா, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்; நான் உன்னை மன்னிக்கிறேன்; நீ பார்த்ததை எழுது! இயேசு, நான் அவரை அலட்சியம் செய்கிறேன் என்று சொன்னபோது, துயரமாகவும் தீவிரம் உள்ளவராகவும் தோன்றினார். என்னை மன்னிக்கும்படி நான் அவரைக் கேட்டபோது, அவருடைய தெய்வீக முகம் ஒளிபெற்றது. ஒரு பிரகாசமான புன்னகையோடு, தனது கண்ணுக்குழிகளை அவர் எனக்குக் காட்டினார். நான் அவருடைய அணைப்பிற்குள் விழும்படி, அவர் தம் கரங்களை அகல விரித்தார். எந்தவிதமான தயக்கமும் இன்றி, மன்னிப்பு எப்போதும் தரப்படுகிறது; நான் மன்னிக்கும் விதத்தை என் பிள்ளைகளுக்குச் சொல்ல, உன்னால் இயலுமாறு, நீ என்னை முழுமையாக பகுத்துணரும்படி நான் செய்திருக்கிறேன்; வா, நாம், நாங்கள்; இயேசு இதைச் சொல்லும்போது, ஒரு ஆசிரியரைப் போல, என்னை எச்சரிக்கும் விதமாக, தம் சுட்டுவிரலை அசைத்தார். டிசம்பர் 7, 1987 நான் 'பாரம்பரியம் இல்லாத ஒரு வழியில்' உன்னை நடத்துகிறேன்; ஆனாலும், நான் கடவுள், நான் எந்த வழியையும் தேர்ந்து கொள்வேன், மணித்துளிகள் பறந்து கொண்டிருக்கின்றன, காலம் அருகாமையில் உள்ளது; வசுலா, நான் விரும்புகிறபடி உன்னை வழிநடத்துவேன்; டிசம்பர் 8, 1987 எனக்காக என்ன காத்திருக்க கூடும் என்பதைப் பற்றி சிந்தித்த பிறகு, நான் கடும் அச்சப்படத் தொடங்கினேன். இவை அதீத பலவீனத்தின் தருணங்களாக இருந்தன. நான் மிகவும் குழப்பம் அடைந்திருந்தேன். என் இறைவா, நான் உம்மை மற்ற எந்த ஒரு சாதாரண மனித பிறவியையும் போல, ஒரு சாதாரணமான முறையில் நேசிக்க முடியாதா? நேசத்திற்குரிய தேவனே, இந்த முறைக்கு பதிலாக, ஒரு வழக்கமான விதத்தில் என்னை வழிநடத்த உம்மால் முடியாதா? ஓ, இறைவா, இது எல்லாவற்றிற்கும் மிக அதிக பொறுப்புள்ளவளாக நான் உணர்கிறேன். நீர் என் மீது பொழிந்து கொண்டிருக்கிற எல்லா வரப்பிரசாதங்களையும் மீறி, நான் ஈனமாகவும், அதிக பாவம் உள்ளவளாகவும், கொடியவளாகவும் இருக்கிறேன் என்று அறிவது ஒரு வாதையாக இருக்கிறது. ஏன், ஆண்டவரே, ஏன் நீர் என்னை உம்மோடு வைத்துக் கொண்டிருக்கிறீர்? என்னால் இதற்கு மேல் உம்மை எதிர்கொள்ள முடியாது. நான் உமக்கு தகுதியானவள் அல்ல. நான் என் மூளைக்கு போக என்னை அனுமதியும், என்னை உமக்கு இவ்வளவு பக்கத்தில் வைத்திருக்காதீர். ஏன்? ஏன்? என் தேவனே, இல்லை, மற்றவர்களைப் போலவே, நானும் உம்மை இயல்பான முறையில் பின்பற்றி உம்மை நேசிப்பேன். அன்பே, நான் உன்னை நேசிக்கிறேன்; குறிப்பு: என் வார்த்தைகள் இயேசுவை காயப்படுத்தியதைக் கண்டு, நான் மிக மோசமாக உணர்ந்தேன். ஓ, இயேசுவே, நான் உம்மை காயப்படுத்திக் கொண்டு மட்டுமே இருக்கிறேன். என்னை போகவிடும், நான் என் நிர்பாக்கியத்தில் இளைப்பாறுவேன். ஆனாலும், உம்மை மகத்துவப்படுத்துவதையும், உம்மை நேசிப்பதையும் நான் நிறுத்த மாட்டேன். குறிப்பு: நான் போய் படுத்து உறங்கி, என் பயங்கர உணர்வை தவிர்க்க விரும்பினேன். பொறு! ஆண்டவரே, இதெல்லாம் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது! இது எனக்கு அப்பாற்பட்டது! குறிப்பு: சுபாவத்துக்கு மேலான அணுகுதலும், வரவிருக்கும் எல்லா நிகழ்வுகளும் இல்லை, இது உம் புரிதலுக்கு அப்பாற்பட்டதல்ல, மேற்கொண்டு, அது அப்படி இல்லை; நேசமே, என் ஐந்து காயங்களும் விரியத் திறந்திருக்கின்றன; குறிப்பு: தாம் எப்படி துன்பப்படுகிறார் என்று எனக்கு காட்டியபடி, இயேசு வெடித்தார். நான் ஏராளமாக இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறேன்; நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்; உன் கடவுள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்; நீ என் உடலை மகிமைப்படுத்த மாட்டாயா? என் சிருஷ்டிகள் எனக்கு எத்தகைய துயரத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீ காணும்படி, என் ஐந்து காயங்களும் திறந்திருக்கின்றன; உங்கள் கொடிய தன்மையை மீறி, உங்கள் தோல்விகளை மீறி, உங்கள் சந்தேகங்களை மீறி, உங்கள் அக்கிரமத்தை மீறி, உங்கள் மறுதலிப்புகளை மீறி, உங்கள் பகுத்தறிவு வாதத்தை மீறி, என் சரீரத்தின் பெயரில் உங்களுக்குள்ள நேர்மையற்ற தனத்தையும் மீறி, நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நீங்கள் இன்னும் இதை புரிந்து கொள்ளவில்லையா? நீங்கள் ஏன் என்றென்றைக்குமாக எனக்கு உங்கள் இருதயங்களை மூடிக்கொண்டு விட்டீர்கள்? உங்களில் பெரும்பாலானோர் ஏன் என்னை கைவிட்டு விட்டீர்கள்? என்னைப் பின் செல்வோர் ஏன் பாதை மாறிவிட்டார்கள்? அவர்கள் ஏன் என் தோட்டத்தை அலட்சியம் செய்துவிட்டார்கள்? அவர்கள் ஏன் என் மலர்களுக்கு நீர் பாய்ச்சாமல் இருந்துவிட்டார்கள்? ஏன்? இராயப்பா, என் ஆட்டுக்குட்டிகள் எங்கே? வா, அவற்றை கண்டுபிடிக்கவும், ஒன்றுபடுத்தவும் நீ எனக்கு உதவி செய்வாயா? அவற்றைக் கண்டுபிடிக்க நான் உனக்கு உதவி செய்வேன், அவற்றுக்கு உணவு கொண்டு வந்து, அவற்றைப் போஷிப்பேன்; இல்லை, இராயப்பா, இந்தத் தரிசு நிலத்தில் நீ எதையும் கண்டுபிடிக்க மாட்டாய்; இங்கே எதுவும் எஞ்சி இருக்கவில்லை; மீதமாக விடப்பட்டிருந்த கொஞ்சமும் இப்போது காய்ந்து வீணாகிவிட்டது; கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தரிசு நிலங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை; ஆனால், ஆண்டவராகிய நான் என் களஞ்சியங்களில் இருந்து என் அப்பங்களை எடுத்து, என் விளைச்சலைக் கொண்டு உங்கள் களஞ்சியங்களை நிரப்புவேன்; நான் என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிப்பேன்; இந்த வனாந்தரத்திற்கு நீர் பாய்ச்சுவேன்; அன்புக்குரியவர்களே, என்னை நம்புங்கள்; என்னை நம்புவதால், நான் உங்கள் எல்லோரையும் மீண்டும் ஒன்றுபடுத்துவேன்; ஒன்றாக, என் வசுலா ;மலரே, நீ அவர்களால் மிதிக்கப்படுவதை நான் காணமாட்டேன்; என் சரீரத்தின் மகிமைக்காக உன்னைப் பயன்படுத்த எண்ணி இருக்கிறேன்; கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நம் ஆண்டவர் இந்தச் செய்தியில், "என் சரீரத்தின் பெயரில் உங்களுக்குள்ள நேர்மை இன்மையையும் மீறி..." என்று சொன்னபோது, அவர் ஒருமைப்பாட்டிற்காக ஒழித்துக் கொண்டிருந்தவர்களைப் பற்றியே பேசினார். வழக்கமாக, ஒரு தீர்வை கண்டுபிடிக்கும்படி திருச்சபையின் அதிகாரிகள் சந்திக்கும் போது, பின் வருவதுதான் நடக்கிறது. ஒருவரை சந்திக்க வருகிற மற்றொருவர், தம்மை எதிர்கொள்பவர் தான் ஏதோ ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டியவர் என்று நம்புகிறார். இறுதியில், யாரும் விட்டுக்கொடுக்காமலே இது முடிவடைகிறது. நேற்றிரவு, ஆண்டவரே, இதை நான் புரிந்து கொள்ளச் செய்தார்.