இறைவனில் உண்மையான வாழ்வு

தீய தலைமுறைக்காக ஆயத்தம் செய்த தண்டனையைக் குறைக்க தம்மால் முடியும் என்று கூறும் ஆண்டவர், மனஸ்தாபப்படவும் உபவாசம் இருக்கவும் தூயவர்களாய் இருக்கவும் சொல்கிறார். மிகப்பெரிய பரிகாரங்கள் செய்யப்படும்போது மட்டுமே தம் நீதியைக் குறைத்துக்கொள்வதாகவும் கூறுகிறார். வசுலாவைக் கைவிடமாட்டேன் என்றும், தம் எதிரிகளின் முகத்திரைகளைக் கிழிப்பேன் என்றும் சொல்கிறார்.

Show Notes

அத்தியாயம் 89: என் பகைவர்களை எல்லாம் நான் வெளிக்கொணர்வேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

தீய தலைமுறைக்காக ஆயத்தம் செய்த தண்டனையைக் குறைக்க தம்மால் முடியும் என்று கூறும் ஆண்டவர், மனஸ்தாபப்படவும் உபவாசம் இருக்கவும் தூயவர்களாய் இருக்கவும் சொல்கிறார். மிகப்பெரிய பரிகாரங்கள் செய்யப்படும்போது மட்டுமே தம் நீதியைக் குறைத்துக்கொள்வதாகவும் கூறுகிறார். வசுலாவைக் கைவிடமாட்டேன் என்றும், தம் எதிரிகளின் முகத்திரைகளைக் கிழிப்பேன் என்றும் சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 06/03/1989 - தேவதூதர் தானியல்: ஜெபிப்பதை நிறுத்தாதே
01:04 08/03/1989 - மனஸ்தாபப்படுங்கள், உபவாசம் இருங்கள்
06:26 20/03/1989 - லூர்து: ஏன் சந்தேகப்படுகிறாய்?
08:40 26/03/1989 - கரபந்தால்: நான் உன்னைக் கைவிடமாட்டேன்
15:26 27/03/1989 - என் எதிரிகளின் முகத்திரைகளைக் கிழிப்பேன்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #TamilTLIG #EnemiesUnveiled #ReparationAndMercy

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 89. மார்ச் 6, 1989 சமாதானம்; நான் உன் தேவதூதர், தானியல்; நான் உன்னை வழிநடத்தியபடி, உன்னோடு இருக்கிறேன்; ஆண்டவரின் சித்தத்தை நான் செய்து கொண்டிருக்கிறேன்; இடைவிடாமல் உனக்காக ஜெபிக்கிறேன்; ஆண்டவர் மீது ஆசை கொள்; அவர் உனக்குத் தருகின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்; தீமையைப் பற்றி எச்சரிக்கையாயிரு; தீமை என் அருகில் இருக்கும்போது, தயவுசெய்து அதைத் துரத்திவிடும்! அப்படியே செய்கிறேன், என் வசுலா, பக்தியார்வத்துடன் ஜெபி, ஏனெனில் ஆண்டவர் விரும்பும் விதம் இதுவே; ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே; வா, சமாதானத்தில் இரு; மார்ச் 8, 1989 ஆண்டவரா? நான்தான்; உங்கள் தீய சந்ததிக்காக நான் ஆயத்தம் செய்திருக்கிற தண்டனையின் கடுமையை எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ள என்னால் முடியும் என்பதை நீயும், என் குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதால்தான் யோனாஸ் ஆகமத்திலிருந்து வாசிக்கும்படி உன்னைத் தூண்டினேன்; இப்போது நிகழ்வது போல என் நீதியின் கிண்ணம் நிரம்பி வழிவதை நான் விரும்பவில்லை, ஆகவே, மனஸ்தாபப்படுங்கள், உபவாசம் இருங்கள், தூயவர்களாய் இருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆண்டவரே, நான்தான்; ஆண்டவரே, சிலர் உபவாசம் இருக்கிறார்கள், மனஸ்தாபப்படுகிறார்கள், முயற்சி செய்கிறார்கள். இது போதுமா? நாங்கள் சரியான பாதையில் இல்லையா? இந்த ஒரு சில வருடங்களாக நாங்கள் அதிக நன்றாக இருக்கிறோம், சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் வசுலா, பலர் தங்களில் குவிந்து வருகிற தீமையின் காரணமாக, அழிவின் பாதையில் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குள் இரவைப் போல் இருளாக இருக்கிறார்கள்; அப்படியிருக்க, இந்தத் தலைமுறை சரியான பாதையில்தான் இருக்கிறது என்று நீ எப்படிச் சொல்ல முடியும்? நாங்கள் ஒரு பெரும் அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை எல்லாரும் அறிந்து கொள்ளச் செய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும்? சிலருக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை! என் ஆவி நசுக்கப்படும் வரையிலும், என் சொந்த மக்களே, என் ஆவியை அழித்து, தீர்க்கதரிசனங்களை இழிவாக மதித்து, எங்கள் பிரசன்னத்தின் காட்சிகள் உண்மையல்ல என்று அறிவிப்பதில் கிட்டத்தட்ட இன்பம் கண்டு, என் எச்சரிப்புகளை முடமாக்கிவிடும் வரையிலும், இதை நான் இனியும் தாங்கிக் கொள்ள மாட்டேன்; என் நீதி மேலோங்கும்... இன்னும் கூட, இன்று மிகுந்த இரக்கமுள்ள நண்பராக, நான் உங்களிடம் வருகிறேன், ஆனால் நாளைக்கு ஒரு கடுமையான நீதிபதியாக நான் உங்கள் மீது இறங்குவேன்; என் ஆவியை அவர்கள் ஒடுக்குகிறார்கள், என் ஆசீர்வாதங்களை ஏளனம் செய்கிறார்கள்; இவர்கள் இன்றைய காயீன்களாக இருக்கிறார்கள்; பித்தாகும் அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன், இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; மிக ஏராளமான பரிகாரங்கள் செய்யப்படும் போது மட்டுமே நான் என் நீதியைக் குறைத்துக் கொள்வேன்; அன்பு உன்னை நேசிக்கிறது; இதோ, புனித மிக்கேல்; கடவுளின் குழந்தாய், கடவுளால் ஆகாதது எதுவுமில்லை; மிகப்பெரிய பரிகாரங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன; உன் சந்ததி மனந்திரும்புமானால், பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தர் தமது தண்டனையை இலகுவாக்குவார்; கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும், ஏனெனில் அவருடைய இரக்கம் அவருக்கு அஞ்சுவோருக்குத் தலைமுறை தலைமுறையாய் நீடிக்கிறது; விழிப்பாயிரு, உங்களைத் திருத்திக் கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்; இப்போது உன்னைக் கேலி செய்பவர்கள் பிற்பாடு தங்கள் பற்களைக் கடிப்பார்கள்; புனித மிக்கேல் ஆகிய நான் இந்தத் தீய தலைமுறைக்காக இடைவிடாமல் ஜெபிக்கிறேன்; குழந்தாய், ஜெபி, ஆண்டவருக்குக் கீழ்ப்படி; உங்கள் அனைவரின் மத்தியிலும் தமது ஆவியானவரைப் பொழிவதற்காக ஆண்டவரைப் போற்று; புனித மிக்கேல், உமக்கு நன்றி. சமாதானம் உன்னோடு இருப்பதாக, வசுலா; என்ன, ஆண்டவரே? இதைச் சேர்த்துக் கொள்; எனக்குச் சொந்தமானவர்களில் பெரும்பாலானவர்கள் என் ஆவியின் செயல்களை மறுதலித்து, அதை நிராகரித்துத் தள்ளி, அதை நசுக்கி விடும்போது, அவர்கள் எப்படி அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணத்தை மன சமாதானத்தோடு ஜெபிக்க முடியும், பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களில் புனிதமானது எதையும் நான் காணவில்லை; தொடர்ந்து, தங்கள் தீச்செயல்களை இருளில் செய்யும்படியும், இவ்வாறு தாங்கள் ஒளிக்குத் திறப்பானவர்களாக இராதபடியும், இந்த இருளில் தொலைவிலிருந்து ஒரு சிறு தீச்சுடரை அவர்கள் காணும்போது, ஒரு மிகப் பலத்த காற்றைப் போல் அவர்கள் வந்து, அதை ஊதி அணைத்து விடுகிறார்கள்; இல்லை, வசுலா, அவர்கள் ஒளியில் வாழ விரும்புவதாகத் தோன்றவில்லை; நான் உம்மை ஆராதிக்கிறேன், ஆண்டவரே. என் ஒளியே, உலகத்தின் ஒளியே. குறிப்பு: முதலில், இந்த உலகின் ஒளியே என்று எழுதிய நான், சற்றுத் தயங்கி, இந்த என்ற வார்த்தையை அழித்துவிட்டு, உலகின் ஒளியே என்று எழுதினேன். நம்முடைய இந்த உலகம் இருளில் அரசாள்கிறது என்ற எண்ணத்தில் இப்படிச் செய்தேன். இவ்வாறு இயேசு புன்னகைக்கும்படி நான் செய்தேன்; வா, நீ என்னை மகிழ்விக்கிறாய்; என் குழந்தாய், ஒருநாள் நீ ஒளியை, ஒளியை மட்டுமே காண்பாய்! ஒருபோதும் அதைரியப்படாதே, ஏனெனில் இறுதிவரை நான் உன்னோடு இருக்கிறேன்; ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி. வாழ்த்தப்படுவீராக, ஆண்டவர் துதிக்கப்படுவாராக. மார்ச் 20, 1989 பிரான்ஸ், லூர்து. வசுலா, இது நான்தான், இயேசு; ஏமாற்றுபவன் உன்னை ஏமாற்ற அனுமதியாதே; நான் உனக்குத் தந்துள்ள எல்லாமே என்னுடையது; அவன் சந்தேகப்பட என்னைத் தூண்டுகிறான்... நீ ஏன் அவன் சொல்வதைக் கவனிக்கிறாய்? உன் செவியை நான் பயிற்றுவித்திருக்கிறேன், இல்லையா? நீ என்னைக் காணும்படி நான் உன் கண்களைத் திறந்திருக்கிறேன், அப்படியிருக்க, ஏன் சந்தேகப்படுகிறாய்? என்னுடைய பல ஊழியர்களுக்கு உன்னுடையதைப் போன்ற இதே கொடை தரப்பட்டிருக்கிறது, அப்படியிருக்க, ஏன் சந்தேகப்படுகிறாய்? வசுலா, என் ஆட்டுக்குட்டியே, நீ இளைப்பாறும்படி பசும்புல் மேய்ச்சலுக்கு உன்னை இட்டுச் செல்கிற நல்ல மேய்ப்பராக நான் இருக்கிறேன்; என் கரங்களில் உனக்கு அடைக்கலம் தருகிறேன், என் புண்ணியங்களால் உன்னை போஷிக்கிறேன், என் இருதயத்தில் ஓய்வெடுக்க உன்னை நான் அனுமதிக்கிறேன்; என் கண்கள் எப்போதும் உன்மீது இருக்கின்றன; ஆகவே, என் வேலைகளைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்? ஏனெனில் நானே நல்லவளாக இல்லை. எனக்குத் தெரியும், ஆனாலும் நான் உன்னை உத்தமமானவளாக்க என்னை அனுமதி; பார்த்தாயா? கடவுளின் அன்பின் வெதுவெதுப்பான ஒரு மழை என்னை மூடுவதை நான் உணர்ந்தேன். அது அற்புதமானதாக இருந்தது. நான் அன்பாக இருக்கிறேன்; இப்போது நானும் நீயும் ஒன்றாக, உன் கை, என் கையில், நீ என் பிரசன்னத்தை மறக்காமல் இருக்கும்படி, நான் உன் கையை விட்டுவிடமாட்டேன்; வா, நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. அப்படியானால் அதை நான் கேட்கவிடு. பிற்பாடு, நாங்கள் லூர்தில் நம் அன்னை புனித பெர்னதெத்துக்கு காட்சியளித்த கெபியை சந்திக்கச் சென்றோம். அதுதான் காட்சிகளுக்குப் பிறகு கட்டப்பட்ட முதல் ஆலயமாக இருந்த அங்குள்ள நிலவறைக்கு நாங்கள் சென்றோம். அங்கு நம் பரிசுத்த அன்னையோடு நான் உரையாடினேன். அவர்கள் சொன்னார்கள்; "இறுதியில் எங்கள் இருதயங்கள் வெற்றி பெறும்." மார்ச் 26, 1989 கரபந்தாலுக்கு நான் சென்று வந்த பிறகு, கரபந்தாலைப் புனிதப்படுத்தும்படி நான் உன்னிடம் கேட்டிருந்தேன்; நான் அங்கு உன்னை உயர்த்தியிருக்கிறேன், இப்போது நீ அதைச் செய்துவிட்டாய்; என் வழிகள் உன் வழிகள் அல்ல என்பதை நினைவில் வை; நான் உன்னையே முழுவதுமாக எனக்குக் கையளித்துவிடவும், என் ஆவியை உன்னில் ஊத இடம் விட்டு வைக்கும்படியும் உனக்குக் கற்பித்திருக்கிறேன், பார்த்தாயா? நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன், ஒருபோதுமில்லை; உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நீ செய்து முடிக்கும்படி இறுதிவரை உன்னைப் பயன்படுத்த நான் எண்ணுகிறேன்; என் விரல் உன்மீது தங்கியிருக்கவும், இவ்வாறு உன் கடவுளின் ஆசைகள் உன்மீது செதுக்கப்படவும் அதை அனுமதி; என் ரோஜாவே, நான் உன்னை நேசிக்கிறேன்; இந்த முறையில் என்னிடம் வருவதன் மூலம், என் கட்டளைகளை நீ அனுசரிக்கிறாய்; நீ உன் சித்தத்தை எனக்குக் கையளிக்கிறாய்; என்னோடு நீ செலவிடும் நேரத்தைக் கணக்கிடாமல், என்னை முதலாவதாகக் கொண்டிரு; என்னோடு இடையறாத தொடர்பில் எப்போதும் இருக்க ஆசைப்படு; நானே உன் வாழ்வு; என்னோடு இணைக்கப்பட்டிருப்பது உனக்கு நன்மை பயக்கிறது; நான் என் புனித இதயத்திற்குள் இன்னும் ஆழமாக உன்னை இழுத்துக்கொண்டு, உன் ஆன்மாவை உத்தமத் தனத்திற்குள் இட்டுச் செல்வேன்; ஆகவே, என் கரங்களுக்குள் உன்னைக் கையளித்து விடுவதன் மூலம் இந்த முறையில் என்னை மகிழ்ச்சிப்படுத்து; நம்பிக்கையோடிரு; வா, என்னை மகிழ்வி, என்னைப் போற்று; உன் தாயாகவும் இருக்கிற என் தாயார் உன்னைக் கவசமாக மூடிக் காக்கிறார்கள், உன்னை வழிநடத்துகிறார்கள், உனக்கு உதவுகிறார்கள்; மகளே, அவர்களை வாழ்த்து; ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே; என் தேவனே, உம்மை நான் ஆராதிக்கிறேன். என்னை எப்போதும் ஆராதி; இன்று மாலையில் நான் முற்றிலும் சோர்ந்து போனதாக உணர்ந்தேன். இறைவன் எனக்குத் தந்திருக்கிற இந்தப் பணி என்னை நசுக்குவதாக நான் உணர்ந்தேன். இந்த எல்லாப் பரித் தியாகங்களுக்கும் ஏதாவது பலன் இருக்கப் போகிறதா? அல்லது அவையெல்லாம் வீணாகிவிடுமா? என்னால் ஒருபோதும் நிறுத்த முடியாது என்பது போல தொடர்ந்து செயல்படும் அளவுக்கு என்னிடம் இன்னும் இந்தப் பலம் இருக்கிறதா? அல்லது ஒருநாள் அது என்னை மூழ்கடிப்பதைக் கண்டு நான் அதை நிறுத்திவிட போகிறேனா? என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் சொல்வதைக் கேள்; ஞானம் உனக்குக் கற்பித்துள்ளது, அஞ்சாதே; என் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன் என்பது பற்றி மகிழ்வாயாக; எப்போதும் மிக விலையேறப் பெற்றதாக இருக்கிற என் சிலுவை உன்மீது இருக்கிறது; நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன், நீ எனக்குத் தருவதில் எதுவும் வீணாய்ப் போகாது... எதுவுமே வீணாகவில்லை; நான் மகிமைப்படுத்தப்படுகிறேன்; என் தந்தையிடமிருந்து என்னுடைய சமாதானம் மற்றும் அன்பின் சிலுவையை என்னோடு பகிர்ந்து கொள்ளும் உபகாரத்தைப் பெற்றிருக்கிற என் அன்புள்ள பலிப்பொருளே, எப்போதும் என் பலிப்பொருளாகவே நிலைத்திரு; ஒரு பலிப்பொருளாக நம் துன்பங்கள் இந்த உலகில் இலகுவானவையாக இருக்காது; நீ இந்த உலகுக்கு இனியும் சொந்தமானவள் அல்ல என்பதையும், அதனால்தான் தங்களைப் போல் இராததற்காக உலகத்தினர் உன்னை கடிந்து கொள்வார்கள் என்பதையும் புரிந்துகொள்; அவர்களுடைய உடல்கள் எப்படி சாம்பலாக மாறிப்போகும் என்பதை மறந்தவர்களாக, அவர்கள் உன்னை கேலி செய்வார்கள்; ஆகவே, எதைப் பற்றியும் முறையிடாதபடி எச்சரிக்கையாயிரு; குறிப்பு: ஞானாகமம் ஒன்றாம் அதிகாரம், இறைவார்த்தை 11. உன்னிடம் நான் கேட்பதெல்லாம் பகிர்ந்து கொள்ளுதலே, அன்பின் காரணமாக, அன்பானவரோடு பகிர்ந்து கொள்ளுதல் மட்டுமே; அன்பின் கிண்ணத்தின் சுவை கசப்பாக, மிகக் கசப்பாக இருக்கிறது; அதை என்னோடு நீ பகிர்ந்துகொள்ள மாட்டாயா? என்னைத் தடுக்காதே! பூமியிலிருந்து வரும் உன் வேண்டுதலைக் கேட்கும்போது, நான் என்றாவது உன்னை தடுத்திருக்கிறேனா? நான் உனக்கு உறுதியாகக் கூறுகிறேன், எதுவும் வீணாய்ப் போகாது; நித்தியத்திலிருந்தே நீ மிக பலவீனமானவள் என்று நான் அறிந்திருக்கிறேன், ஒரு ரோஜாவுக்கு சிறப்பான கவனம் தேவைப்படுவது போலவே, உன்மீதும் நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன், தேவைப்படும்போது, உன் கிளைகளை நான் கழிக்கிறேன், என் கண்கள் இடைவிடாமல் உன்மீது இருக்கின்றன, ஓர் அந்நியன் உன்னைப் பறித்து விடாதபடி, நேசப் பொறாமையோடு நான் உன்னைக் கண்காணிக்கிறேன்; யாருடைய விரல்களும் உன் பூவிதல்களை நசுக்கி விடாதபடி, யாரும் உன்னைத் தொட நான் விடுவதில்லை; இரவும் பகலும் நான் உன்னைக் காவல் காக்கிறேன்; நான் உன் காவலராக இருக்கிறேன், ஆகவே, நம்பிக்கையோடிரு; உனக்கு யாரும் தீங்கு செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்; முந்தின நாளில் எங்கள் நீண்ட பயணத்தின் காரணமாக - காரில் 12 மணி நேர பயணம் மிகவும் சோர்ந்து போயிருந்த நான், மாலையில் ஜெபமாலை ஜெபிக்கச் சென்றேன். என் கண்கள் பாத்திமா அன்னையின் சுரூபத்தின் மீது நிலைத்திருந்தன. நான்காவது தேவ இரகசியத்தை நான் தியானித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மாமரியின் மேலங்கியும், ஆடையும் ஒரு பிரகாசமான வெள்ளி நிறத்திற்கு மாறத் தொடங்கின. இந்த வெள்ளி நிற ஒளி எப்படி இருந்தது என்றால், அது சுரூபத்திற்கு உள்ளிருந்து வெளியே வருவது போலத் தோன்றியது. அவர்கள் உயிர் பெறுவது போலத் தோன்றினார்கள். இது ஐந்து வினாடிகளுக்கு மேல் நீடித்திருக்காது. அது அழகாக இருந்தது. ஏனெனில் இன்னும் நன்றாக ஜெபிக்க, அது என்னைத் தூண்டியதுடன், என்னை மிக மிக மகிழ்ச்சி அடையச் செய்தது! மறுநாள் நான் மீண்டும் பாத்திமா மாதா சுரூபத்தைப் பார்த்தபடியே, ஜெபமாலை சொல்லிக் கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய கண்களையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென அவர்களது கண்களில் ஒன்றில் இருந்த குறைபாடு, இது என்னை பாதித்துக் கொண்டிருந்தது. இப்போது காணப்படவில்லை என்பதை நான் கவனித்தேன். இரண்டு கண்களுமே இப்போது முழுவதும் நன்றாக இருந்தன. அது ஒரு சிறிய குறைபாடு: அவர்களுடைய கண்ணிமைகளில் ஒன்றில் வர்ணப்பூச்சு உதிர்ந்திருக்க வேண்டும்; இந்த வெள்ளைக்கோட்டை வர்ணப்பூச்சு கொண்டு பிரவுன் நிறமாக மாற்ற வேண்டும் என்றும், இந்த வெள்ளைக்கோட்டின் காரணமாக, கண்ணிமைகளில் இல்லாதிருந்த முடிகளை வரைய வேண்டும் என்றும் நான் அடிக்கடி நினைத்தேன். இப்போது இந்தக் குறைபாடு அங்கே இல்லை, இரண்டு கண்களும் முழு அழகோடு இருந்தன. மார்ச் 27, 1989 இயேசுவா, நான்தான், அன்பிற்குரியவளே. என் அரசு வரும்; என் மகிமைக்காக உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; உன் ஆன்மா சில நேரங்களில் உன் கடவுளாகிய என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நான் உன்னைக் கைவிடமாட்டேன்; அனைவரிலும் அதிகப் பிரியமுள்ள குழந்தாய், என்னை நம்பு, என்னைச் சார்ந்திரு; என் ஆவி உன்னில் முழுமையாகவும் சுதந்திரமாகவும் ஊதப்பட அனுமதி; என் குழந்தாய், கீழ்படிவதன் மூலமும், என் காரியங்களில் மட்டுமே அக்கறையாயிருப்பதன் மூலமும், இப்போது எனக்குப் பரிகாரம் செய்; நான் எப்போதும் உனக்கு முன்பாக இருக்கிறேன்; ஆகவே, தங்குமிடமோ, மேய்ச்சல் நிலங்களோ இல்லாததும், தரிசானதும், வறண்டதுமான இந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கப் பயப்படாதே; அதன் இருண்ட நிலை உன் ஆன்மாவைத் திகிலுக்கு உள்ளாக்குகிறது என்பதை நான் அறிவேன், ஆனாலும், பாலைவனங்களின் வழியாக என்னால் வழிநடத்தப்பட்டவர்கள் ஒருபோதும் தாகத்தால் தவித்ததில்லை என்று நான் அறியப்பட்டிருக்கிறேன்; என் அன்பைக் கொண்டு, வறண்ட காற்றுகளிலிருந்து உனக்குத் தஞ்சமளிக்கும்படி, நான் உனக்கு முன்பாக இருக்கிறேன்; என் வார்த்தையைக் கொண்டு உனக்கு உணவளிக்கிறேன்; நீ நடக்கும்போது, நான் உன் பாதையை சமப்படுத்துகிறேன்; உன் கால்கள் இடறாதபடி கற்கள், பாறைகள் அனைத்தையும் நான் அகற்றுகிறேன்; உனக்கு வழியைத் திறக்கும்படி, நான் அவற்றை அகற்றுகிறேன்; என் புனிதப் பிரசன்னம் உன் எதிரிகளாகவும் இருக்கிற என் எதிரிகளைத் தூரமாக விரட்டி அடிக்கிறது; முட்புதர்களும், முட்களும் வரும்போது, அவை உன்னைச் சூழ்ந்திருக்கிற என் தூதர்களால் விரைவாக வெட்டி எரிக்கப்படுகின்றன; என் குழந்தாய், இந்த முட்களில் எதுவும் உன்னைக் கீறிவிட, உன் மீட்பராகிய நான் அனுமதிப்பதில்லை; அனைவரிலும் அதிக அன்புக்குரியவளே, என்னைச் சார்ந்திரு; நான் எல்லாம் வல்லவர், நான் உந்நதமானவர்; உன்னிடமிருந்து நான் விரும்புவதெல்லாம் அன்பு, அன்பு, அன்பு மட்டுமே, ஆகவே, வந்து என்னோடு பகிர்ந்து கொள்; நானே உன் மகிழ்ச்சியாக இருக்கவிடு; ஆ, வசுலா, என்னை அன்பு செய்து, உன் குழந்தைத்தனமான இதயத்தைக் கொண்டு என்னைத் தேற்று; வந்து என் தலையை உன்மீது சாய்த்து, ஓய்வெடுக்கவிடு; என் தலைக்கு சாய்மானமாக இரு; என் பாதமணையாக இரு, என் மோட்சமாக இரு; இந்த மரணப் பள்ளத்தாக்கின் வழியாக உன்னை நான் வழிநடத்த என்னை அனுமதி; விரைவில் இந்தப் பாழும் ஸ்தலத்திலிருந்து என் இல்லத்திற்குள் நான் உன்னை கூட்டிச் செல்வேன்; அதுவே உன் இல்லமாகவும் இருக்கிறது; என் குழந்தாய், என்னோடு ஒன்றாயிரு; ஓ, அனைவரிலும் அதிகப் பிரியமான குழந்தாய், உன் இரட்சகராகிய எனக்கு ஆறுதல் தருவாயா? எனக்காக அன்பின் அதிசயங்களை நிகழ்த்துகிற நம் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக. ஆண்டவரே, மனிதகுலம் முழுவதும் காண, உமக்கு அஞ்சுவோருக்கென நீர் ஏற்பாடு செய்துள்ளதும், உம்மில் தஞ்சமடைவோர் மீது பொழியப்படுவதுமாகிய உமது நன்மைத்தனம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது! நம் ஆண்டவரும், மீட்பருமானவரில் அக்களியுங்கள், புண்ணியவான்களே, அகமகிழுங்கள், நேர்மையுள்ள எல்லா இருதயங்களே, மகிழ்ச்சியால் கூக்குரலிடுங்கள்! என் எதிரிகள் அனைவரின் முகத்திரைகளை நான் கிழிப்பேன்; என் சுவாசத்தைக் கொண்டு, என்னிடம் வருவதற்கான வழியைத் தடுக்கும் அனைவரையும் நான் பெருக்கித் தள்ளுவேன்; என் திருமுகத்தை நான் மீண்டும் வெளிப்படுத்துவேன், இந்த வனாந்தரத்தை மாசற்றத் தனத்தாலும், பரிசுத்தத் தனத்தாலும், நேர்மையாலும் நான் மூடுவேன்; அன்பும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக, உங்கள் மத்தியில் தங்கியிருப்பதா; பார்த்தாயா? நான் உங்கள் மத்தியில் வசிப்பேன் என்றும், நீங்கள் என் சொந்த மக்களாயிருப்பீர்கள் என்றும் நான் சொல்லவில்லையா? என் குழந்தாய், பெருமையுள்ள மனிதர்களைப் பற்றி என் ஆவி எப்படி எரிச்சலடைகிறது என்றும், தாழ்மையும் எளிமையும் உள்ளவர்களுக்கு ஞானம் தரப்படுகிறது என்றும், அவர்களுக்கு நினைவூட்டு; வா...