இறைவனில் உண்மையான வாழ்வு

ஆண்டவர் தம் பரம இரகசியங்களை பகுத்தறிவின் கண்களால் காண முயல்வோரால் திருச்சபை குழப்பத்திலும் துன்பத்திலும் இருப்பதாகக் கூறுகிறார். நற்செய்தி மாற்றப்படாமல், குழந்தைக்குரிய விசுவாசத்தோடு போதிக்கப்பட வேண்டும் என்கிறார். "நான் உங்களைக் கைவிடமாட்டேன்" என்றும், திருச்சபை ஒன்றாய் இருக்கும் என்றும் சொல்கிறார்.

Show Notes

அத்தியாயம் 71: என் மறை உண்மைகளை தர்க்கரீதியாக புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்

ஆண்டவர் தம் பரம இரகசியங்களை பகுத்தறிவின் கண்களால் காண முயல்வோரால் திருச்சபை குழப்பத்திலும் துன்பத்திலும் இருப்பதாகக் கூறுகிறார். நற்செய்தி மாற்றப்படாமல், குழந்தைக்குரிய விசுவாசத்தோடு போதிக்கப்பட வேண்டும் என்கிறார். "நான் உங்களைக் கைவிடமாட்டேன்" என்றும், திருச்சபை ஒன்றாய் இருக்கும் என்றும் சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:14 04/06/1988 - பரம இரகசியங்களும் பகுத்தறிவும்
08:46 07/06/1988 - என் இதயத் துடிப்புகளைக் கேள்
11:07 08/06/1988 - என் பழைய ஆடைகள், மாறாத நற்செய்தி
12:55 09/06/1988 - எளிய மனத்தோர் பேறு பெற்றோர்
14:16 10/06/1988 - ஜெபமாலை இராக்கினியின் அழைப்பு
16:26 20/06/1988 - மலரே, என் வார்த்தைகளை எழுதிவை
18:40 21/06/1988 - இராயப்பரிடம் திரும்பி வாருங்கள்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #பரமஇரகசியங்கள் #ஜெபமாலை #திருச்சபைஒற்றுமை

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 71. ஜூன் 4, 1988 ஆண்டவரா? நான்தான்; நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்; நான் என் திருச்சபையில் உள்ள குழப்பத்தைப் பற்றி உனக்கு மேற்கொண்டு போதிப்பேன்; நான் சொல்வதைக் கேட்க முயற்சி செய், பரிசுத்த ஜெபமாலையை ஜெபிப்பதன் மூலம் என்னை மகிழ்ச்சிப்படுத்து; பரம ரகசியங்களை உணர்ந்து பார், உன் பரிசுத்த மாதாவின் திருவிழிகளின் வழியாக அவற்றைப் பார்; உன் காலம் பகுத்தறிவைக் கொண்டு பார்க்கிற இந்தப் பரம இரகசியங்களை; மகளே, அவர்கள் குழந்தைகளாகவும், மாசற்றவர்களாகவும், குழந்தைக்குரிய விசுவாசத்தோடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை; என் திருச்சபை அநேக ஆன்மாக்களையும், முழு மக்களினங்களையும் போஷிக்கும் படியாக, அது செழிப்பிலும், மகிமையிலும் ஊறியிருக்கச் செய்தேன், அது தன் பரம இரகசியங்களில், உங்களில் பலர் இன்று பரம இரகசியங்களாக ஏற்றுக் கொள்ளாதிருக்கிற தனது பரம இரகசியங்களில், அது செழிப்புற்றிருக்கச் செய்தேன்; என் மக்களிடம் இன்று தாழ்ச்சியும், எளிமையும் குறைவுபடுகிறது, அவர்களிடம் மாசற்ற விசுவாசம் குறைவுபடுகிறது, உங்கள் இன்றைய யுகம் எல்லாவற்றையும், என் பரம இரகசியங்களையும் கூட, பகுத்தறிவின் கண்களால் காண முயன்று கொண்டிருக்கிறது!! குறிப்பு: நம் மூடத்தனத்தைக் கண்டு கடவுள் அதிசயித்ததாக தோன்றினார். தங்கள் கடவுளாகிய என்னை மூடியுள்ள திரையை அகற்றிவிட தங்களால் முடியும் என்று அவர்களால் எப்படி நம்ப முடிகிறது? அவர்கள் பகுத்தறிவாத முறையில் என் பரம ரகசியங்களை விளக்க முயல்கிறார்கள்; மகளே, விதைப்பவன் மற்றும் காகங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்லியிருக்கிற உவமையில் வருகிற காகங்கள் இவர்கள்; குறிப்பு: மே 16, 1988 ஆம் தேதியின் செய்தியைக் காண்க. இந்தக் காகங்கள் தங்கள் விசுவாசத்தை இழந்துவிட்டு, தங்கள் சொந்த மனித புத்தியை எதிர்கொள்ளும்படி, தங்கள் சொந்த கொள்கைகளை உருவாக்கி, செய்தி ஊடகங்களை மகிழ்விக்க முயல்கிறார்கள்; ஆனால் உண்மையில் இதற்குக் காரணம் அவர்கள் என்னில் தங்கள் விசுவாசத்தை இழந்து விட்டதுதான்; என் பரம இரகசியங்கள் மாற்றப்படாமல், அவற்றின் மாசற்ற தன்மையில் அப்படியே விடப்பட்டிருக்க வேண்டும்; இந்தக் காகங்கள் என் திருச்சபையில் தப்பறைகளைப் பரப்பி, உண்மையையும், என் உவமையின் இந்தச் செழிப்பான அறுவடையாகிய என் வார்த்தையைச் சீர்கெடச் செய்துவிட்டார்கள்; என் வார்த்தையும், என் பரம இரகசியங்களும் மாற்றப்பட முடியாதவையாகவே நிலைத்திருக்க வேண்டும்; இன்று என் திருச்சபை மறைவிலும், குழப்பத்திலும் கிடக்கிறது; இதுவே என் தேவாலயப் பலிபீடப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள தப்பறையாக இருக்கிறது, இது என் குருக்களில் அநேகர் மீது தப்பறைகளைத் தூண்டிவிட்டுள்ளது; ஆவியானவர் எல்லாச் சபைகளையும் அழைத்து, அவற்றிடம் நேரம் வந்துவிட்டது, பொய்மையை மறுதலியுங்கள், தப்பறையைத் திருத்துங்கள், கீழ்படிதலுக்குத் திரும்பி வாருங்கள், ஆனால் எல்லாவற்றையும் பொறுமையோடும், கற்பிக்கும் கருத்தோடும் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குறிப்பு: ரெண்டு தீமோத்தேயு நான்காம் அதிகாரம், இரண்டு மற்றும் மூன்றாம் இறைவார்த்தைகள். நன்மையான போதனையோடு திருப்தி அடையாமல், குறிப்பு: இயேசு பரிசுத்த வேதாகமத்தைத் திறந்து, இந்த பகுதியை வாசிக்கும்படி என்னிடம் கேட்டார். மக்கள் மிக சமீபத்திய நவீன போதனையின் மீது பேராவலோடு இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த இச்சைகளுக்கு ஏற்ற போதகர்களின் தொடரைத் தங்களுக்கென்று திரட்டிக் கொள்கிறார்கள், உண்மைக்குச் செவிசாயிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கட்டுக்கதைகளிடம் திரும்புகிறார்கள். குறிப்பு: ரெண்டு தீமோத்தேயு நான்காம் அதிகாரம், மூன்று முதல் ஐந்து வரையுள்ள இறைவார்த்தைகள். வசுலா, நீ என்னிடம் சொல், நற்செய்தியைத் துண்டு துண்டாகக் கிழிக்கவோ, பிரிக்கவோ முடியுமா? இல்லை, ஆண்டவரே, அதற்குச் சாத்தியமே இல்லை. இதை என் திருவுடலுக்கும் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்; என் சரீரமும் பிரிக்கப்பட முடியாததாக இருக்கிறது; இருந்தாலும், அவர்கள் அதை பிரித்துவிட்டார்கள்..... கலகம் என் திருச்சபையின் இதயத்துக்குள்ளும் ஊடுருவி விட்டது; முதலில் ஓர் அந்தரங்கக் கலகம் சாத்தானால் தூண்டப்பட்டு, என் குருக்கள், ஆயர்கள் மற்றும் கருதினால்மார் சிலரின் ஆன்மாக்களுக்குள் ஊடுருவி, அவர்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக ஆக்கியது; சாத்தானின் இறக்கைகளின் கீழ் நிழலிடப்பட்டவர்களாக, அவர்கள் அவனுடைய வலைகளுக்குள் விழுந்தார்கள்; இந்தக் கலகம் இப்போது அவர்கள் மத்தியில் இருக்கிறது, அது என் திரு இருதயத்தைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது; தொடக்கத்தில், இந்தக் குருநிலையினர், சாத்தானிடமிருந்து கலகத்தின் விதையைக் கிரகித்துக் கொண்டு, தீய திட்டங்களை உருவாக்கி, திட்டங்களை வகுத்து, இந்த விதை முளைத்து வளரச் செய்தார்கள்; அவர்கள் எதிர்ப்பை வளர்த்தார்கள், இராயப்பனின் ஸ்தானாதிபதிக்கு, என்னால் தேர்ந்துகொள்ளப்பட்ட இந்த என்- ஆட்டுக்குட்டிகளின்- இராயப்பருக்கு முரண்பட்டார்கள்; இந்தக் கலகத்தின் விதை இப்போது முழு வளர்ச்சி பெற்றதாக, அவர்கள் தங்கள் கலகத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்ய, மீண்டும் பிளவுபட, என்னுடைய திருச்சபையின் மீது நஞ்சுள்ள அம்புகளை வீச, அவர்களுக்கு வலிமை தந்தது.... அவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்தார்கள்... குறிப்பு: காட்டிக் கொடுத்தவர்கள் என்று இயேசு சொன்னபோது, மிகவும் நோவடிக்கப்பட்டவராக அதைச் சொன்னார். அவர்கள் கெட்சமனியில் யூதாஸ் செய்தது போலவே, அன்பால் நிரம்பிய இந்த இதயத்தைக் காட்டிக் கொடுத்தார்கள்... நான் கசையால் அடிக்கப்படும்படி, அவர்கள் என்னை இழுத்துச் செல்கிறார்கள்... அவர்கள் என்னைக் கசைகளால் அடிக்கிறார்கள், ஓ, வசுலா, நான் எவ்வளவு துன்புறுகிறேன்... ஓ, ஆண்டவரே, வேண்டாம்! ஓர் உள்ளரங்கக் காட்சியில் நம் ஆண்டவரை, ஒரு கற்றூணில் கட்டப்பட்டு, கசைகளால் அடிக்கப்பட்டவராக என்னால் காண முடிந்தது. அவருடைய திருவுடலைக் கிழித்த ஒவ்வொரு கசையடியின் போதும், அவர் மூச்சுத் திணறியபடியும், மூச்சுக்குத் தவித்தபடியும் நடுங்கினார், அவரது திருவுடல் முழுவதுமாக ஒரு பெரிய புண்ணாக மாறியிருந்தது. ஓ, ஆண்டவரே, அவர்கள் எப்போதுதான் இதை நிறுத்துவார்கள்? அவர்கள் இதை நிறுத்தவில்லை, அவர்கள் வீண் பெருமையாலும், கீழ்ப்படியாமையாலும், குடிபோதை கொண்டவர்களாக, காட்டு மிராண்டித்தனமாக என்னைக் கசைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் என் எதிரிக்கு மட்டுமே கீழ்படுகிறார்கள், அவனுக்கு மட்டுமே பிரமாணிக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் என் ஸ்தாபனத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என் ஆடுகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இராயப்பரின் கால்களை மிதித்து, அவரை ஒதுக்கித் தள்ளுகிறார்கள், அவர்கள் அவரை மௌனமாக்கிவிட முயன்று கொண்டிருக்கிறார்கள்.... காயின் ஒருபோதும் என் ஆபேலைப் புரிந்து கொள்ளவில்லை; நான் உங்களைக் கைவிடமாட்டேன்; உங்கள் கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார்; உங்கள் இறைவன் உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் எதிரியாக இருக்கிற என் எதிரியை மிதித்து நசுக்கவும், தேவதூதர்களின் படையணி ஒன்றுடன் வந்து கொண்டிருக்கிறார்; நான் என் தூதர்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன், காயின் உங்களை அடிக்க மாட்டான்; அவன் தன் கடவுளாகிய எனக்கெதிராகத் தன் கரத்தை உயர்த்த வேண்டி இருக்கும்; ஆண்டவராகிய நான் அவனை வியப்புக்குள்ளாக்குவேன்; என் திருச்சபை என் திரு இருதயத்தாலும், உங்கள் பரிசுத்த மாதாவின் மாசற்ற இருதயத்தாலும் ஒன்றிணைக்கப்படும்; எங்கள் இரண்டு இருதயங்களும் இணைந்திருப்பது போலவே, என் திருச்சபையும் இணைக்கப்படும்; என் திருச்சபை ஒன்றாய் இருக்கும். ஜூன் 7, 1988 ஆண்டவரே! நான்தான்; குழந்தாய், நான் உனக்கு மிக அருகில் இருக்கிறேன்; என் இதயத் துடிப்புகளைக் கேள்... என் சம்மணசுக்கள் என் காயங்களை கண்டுணரும் படியாக, அவர்கள் எல்லோரையும் என் இருதயத்தினுள் நான் ஈர்ப்பேன்; அவர்கள் தங்கள் கடவுளின் திருக்காயங்களை உணர்வார்கள், அப்படி அவர்கள் உணரும்போது, அவர்களுடைய குரல் எவ்வளவு பலமாக உயரும் என்றால், என் எதிரி அதைக் கேட்டு நடுங்குவான், பூமியின் அஸ்திவாரங்களே கூட அசைக்கப்படும்; என் நொறுங்குண்ட இதயம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அவர்கள் காணும்போது, அவர்கள் தங்கள் கடவுளாகிய என் பேரில் உள்ள அன்பின் சுவாலை ஒன்றைத் தங்கள் சொந்த இதயங்களில் உணர்வார்கள்; உங்கள் பரிசுத்த மாதாவால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தத் தேவதூதர்கள், அன்பைக் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்ட இவர்கள், நம் திருச்சபையைப் பாதுகாக்கும்படி ஆயத்தம் செய்யப்பட்ட உங்கள் பரிசுத்த அன்னையின் படையணியாக இருப்பார்கள்; இந்த சம்மணசுக்கள் தீமைக்குத் தங்கள் அன்பால் பதிலளிப்பார்கள்; என் திரு இதயத்தின் வசுலா, வா, ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை எதிர்கொள்; நினைவில் கொள், நான் இப்போது என் கரத்தில் என் இதயத்தோடு வந்து, அதை மனிதகுலம் முழுவதற்கும் அதைக் கையளிக்கிறேன்; குறிப்பு: இயேசுவிடமிருந்து வரும் இந்த அறிக்கையிலிருந்து, நம்மில் பலரோடு தமது தெய்வீக செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள அவர் விரும்புகிறார். அவற்றைப் பலரோடு பகிர்ந்து கொள்ளவும், இந்தத் தெய்வீகத் திட்டத்தில் இணையும்படி மக்களைக் கேட்டுக்கொள்ளவும் அவர் விரும்புகிறார் என்று நான் புரிந்து கொண்டேன். நான் உங்கள் எல்லோரையும் எவ்வளவாக நேசிக்கிறேன்! நான் ஒரு சூரியனின் உள்ளார்ந்த காட்சி ஒன்றைக் கண்டேன், அதனுள் நம் அன்னையுடன் ஒரு இதயமும், ஒரு சிலுவையும் இருந்தன. வசுலா, பரிசுத்த ஜெபமாலை ஜெபிப்பதை அலட்சியம் செய்யாதே; இல்லை, இயேசுவே, நான் அலட்சியம் செய்ய மாட்டேன். வா, நாங்கள்?நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள், நாம். ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! ஜூன் 8, 1988 இயேசுவா? நான்தான் என் செய்தி ஒன்றில் ஒரு சில நாட்களுக்கு முன் நான் உனக்குத் தந்திருந்த ஒரு சொற்றொடரை என்ன பொருளில் கூறினேன் என்பதை நீ புரிந்து கொள்ளும்படி நான் செய்வேன்; நீ இராயப்பரைச் சந்திக்கும் போது, குறிப்பு: 2004 நவம்பரில் நிறைவேறிய தீர்க்கதரிசனம். என் பழைய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று நான் சொன்னபோது, என் நற்செய்தி மாற்றப்படக்கூடாதது, மாறாக, அது நான் போதித்தபடியே போதிக்கப்பட வேண்டும் என்று உனக்குச் சொல்லும்படியாகவே அப்படிச் சொன்னேன்; என் ஆடைகள் எளிமையானவை என்றும் நான் சொன்னேன்; இதன் மூலம் நான் குறிப்பிடுவது என்னவெனில், நீ ஒரு குழந்தையாக, குழந்தைக்குரிய விசுவாசத்தோடு நற்செய்தியை அணுகவும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதே; வசுலா, இன்று பல குருக்கள் என் பரம ரகசியங்களை மேற்கொண்டு விசுவாசிப்பதில்லை, ஆகவே, அவர்கள் நற்செய்திகள் போதிக்கப்பட வேண்டிய விதத்தில் அவற்றைப் போதிப்பதில்லை; அவர்கள் உங்கள் காலத்தை மகிழ்விப்பதிலும், உங்கள் கலாச்சாரத்தை எதிர்கொள்வதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்; இந்தக் குருக்கள் என் ஆடைகளில் இருந்து வேறுபட்ட புதிய ஆடைகளை உடுத்துகிறார்கள்; இது என்னை எவ்வளவு வேதனைப்படுத்துகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்; என் நற்செய்தி தப்பறைகள் இன்றி போதிக்கப்பட வேண்டும், என் பரம இரகசியங்கள் பரம இரகசியங்களாகவே நிலைத்திருக்க வேண்டும்; ஆண்டவரே, உமக்கு நன்றி. இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென். ஜூன் 9, 1988 வசுலா, ஆண்டவராகிய நான் உன் நிர்பாக்கியத்தையும் மீறி உன்னை நேசிக்கிறேன்; நீ எளிய மனமுள்ளவள், ஆனால், எளிய மனத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே என்று நான் சொன்னேன்; ஆ, வசுலா, நானும் உன் பரிசுத்த அன்னையும் நுட்பமாக செய்து கொண்டிருப்பது இதைத்தான்; தங்களை ஞானிகள் என்று அழைத்துக் கொள்பவர்களைக் குழப்பமடையச் செய்யும்படி, என் தேவ பராமரிப்பின் பணிகளை வெளியிட, எங்கள் இதயங்கள் எளிய மனதோரும், என் படைப்பில் மிக அற்பமானவையுமாகிய ஈனமுள்ள ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளன; என் ஆவியானவர் ஞானிகளை நாணச் செய்யும்படி, ஒன்றுமில்லாமல் என்றும் இழிவுக்குரியவர்கள் என்றும் உங்களால் அழைக்கப்படுபவர்களையே எப்போதும் தேர்ந்துகொள்வார்; வசுலா, நிலைத்திரு, குறிப்பு: பரிசுத்த ஜெபமாலை ஜெபிக்க இந்நாள் முடிந்தவரை முயற்சி செய்வது. நான் எப்போதும் உனக்கு உதவி செய்கிறேன், வா, நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள் நாம். நாங்கள், நாம்? ஆம், புனித மாமரியே, நாங்கள் நாம். ஜூன் 10, 1988 பரிசுத்த அன்னை பேசிக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஜெபமாலையைக் கொண்டு நான் வெற்றி பெறுவேன்; மகளே, இந்த முதல் காலடி வரவிருக்கும் வேறு பல நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருக்கிறது; வசுலா, பாத்திமாவில் நான் ஜெபமாலை இராக்கினியாகக் காட்சி அளித்தேன் என்பதை உணர்ந்து கொள்; குறிப்பு: பரிசுத்த ஜெபமாலையைக் கற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் என்னிடம் கேட்டதிலிருந்து, ஒரு கத்தோலிக்கர் என்று நான் அறிந்திருந்த ஒரு பழைய அண்டை வீட்டுக்காரியைத் தொலைபேசியில் அழைத்து, ஜெபமாலையை முறையாக எனக்கு கற்றுத் தர, அவருக்கு நேரம் இருக்கிறதா என்று கேட்டேன். நான் ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் என்பதால், அவர் ஆச்சரியப்பட்டாலும் என்னைக் காண வந்தார். வசுலா, நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன், ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஜெபமாலை ஜெபிக்க நீ சித்தமாய் இருக்கிறாயா? ஆம், அதாவது உங்களுக்கும், இயேசுவுக்கும் கீழ்படிய சித்தமாய் இருக்கிறேன். என் குழந்தைகளே, கீழ்படிதல், தீமை கீழ்படிதலால் எவ்வளவு அதிகமாக வெற்றி கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்; திருச்சபை புத்துயிர் பெறும்; இயேசுவும், நானும் எப்போதும் சேர்ந்தே உழைத்துள்ளோம், ஏனெனில் எங்கள் இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன; இயேசுவின் திவ்விய இருதயம் உன் வழியாக, அவருடைய சமாதானம் மற்றும் அன்பின் செய்தியைத் தயாரித்துள்ளது, அதற்காக, மனிதகுலம் முழுவதிலும் அதிக பலவீனமானதும், அதிக அற்பமானதும், அதிக ஈனமானதுமாகிய குழந்தையை அது தேர்ந்தெடுத்துள்ளது, ஆனால் நீ எப்படி இருக்கிறாய் என்பதையும் மீறி, இயேசு அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறார்; அவர் தமது அளவற்ற இரக்கத்தை உலகிற்குக் காட்டும்படி உன்னைத் தேர்ந்தெடுத்தார்; உன் வழியாகத், தமது அன்பை வெளிப்படுத்தும்படி அவர் உன்னை தேர்ந்தெடுத்தார்; படைப்பை திரும்பி வா, எங்களிடம் திரும்பி வா! காலம் ஏறக்குறைய இப்போது முடிந்துவிட்டது! எங்கள் அழைப்பைக் கேள்; குழந்தைகளே, இன்னும் அதிக நேரமில்லை; ஓ, அன்பிற்குரியவர்களே, எங்கள் குரலைக் கேளுங்கள், எங்கள் மன்றாட்டைக் கேளுங்கள், உங்களுக்காக இடைவிடாமல் அழுது கொண்டிருக்கிற இந்த இதயங்கள் சொல்வதைக் கேளுங்கள்; எங்களிடம் திரும்பி வாருங்கள்! ஜூன் 20, 1988 மலரே, என் புத்தகத்திலிருந்து இந்த வார்த்தைகளை வாசித்து, அவற்றை எழுதிவை; என் வசுலா, வாசி; ஆண்டவராகிய நான் என் சிந்தனைகளை இன்னும் அதிகமாகப் பரப்ப விரும்புகிறேன், உன் கடவுளாகிய நான் உன்னைப் பயன்படுத்த நீ அனுமதிப்பாயா? ஆம், ஆண்டவரே, ஆனால் என் இயலாமையை தயவுசெய்து ஒருபோதும் மறந்து விடாதேயும். நான் அதை மறப்பதில்லை; நான் சொல்வதைக் கேட்டு மலர்வாயாக; தூபத்தைப் போல ஒரு இனிய மனத்தை வெளியிடு; உன் நறுமணத்தை வெளியில் பரப்பு; என் எல்லாக் கைவேலைகளுக்காகவும், உன் ஆண்டவராகிய என்னை வாழ்த்து; என் திருப்பெயரின் மேன்மையை அறிவி; என் தேவ பராமரிப்பின் பணிகள் எவ்வளவு அற்புதமானவையாக இருக்க முடியும் என்பதை அறிவி; நான் கட்டளையிடுகிற அனைத்தும் விரைவாக நிறைவேற்றப்படுகிறது; தீர்ப்பிடாதபடியும், இது என்ன, அது ஏன் அப்படி என்று சொல்லாதபடியும், அவர்களுக்குக் கற்றுக் கொடு, உரிய நேரத்தில் எல்லாமும் ஆராயப்படும்; குறிப்பு: இந்த செய்திகளைப் பற்றிய ஆய்வு 2002 முதல் 2004 வரையின் போது, வத்திக்கானில் உள்ள சிடிஎப் அமைப்பால் செய்யப்பட்டு, நேர்மறையான முடிவுகள் பெறப்பட்டன. அவர்கள் இவற்றை ஆராய்ந்து, 'நம் ஆண்டவரின் எல்லா கைவேலைகளும் நல்லவையாக இருக்கின்றன' என்று சொல்வார்களாக; உரிய நேரத்தில், நான் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவேன்; 'இது அதைவிட அதிக மோசமானதாக இருக்கிறது' என்று அவர்கள் சொல்லக்கூடாது, ஏனெனில் அனைத்தும் தனக்குரிய நேரத்தில் தன் மதிப்பை எண்பிக்கும்; ஆகவே, இப்போது அகமகிழும்படியும், உங்கள் கடவுளாகிய என்னை வாழ்த்தும்படியும், நான் உங்களுக்குக் கூறுகிறேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்! என்னோடு ஒன்றாய் இருங்கள்; என்னை உணருங்கள், என்னை பகுத்தறிந்து, என்னைப் பின்பற்றுங்கள்; சரி, ஆண்டவரே. ஜூன் 21, 1988 ஆண்டவரே! நான்தான்; என் திருச்சபையின் புதுப்பித்தலுக்காக ஜெபி; இராயப்பரை எதிர்க்கிற ஆன்மாக்களுக்காக ஜெபி; இராயப்பரை மௌனமாக்கிவிட முயன்று கொண்டிருப்பவர்களுக்காக ஜெபி; நாட்கள் இப்போது எண்ணப்படுகின்றன, என் ஆன்மா துயரத்தில் மூழ்கி இருக்கிறது; என் பரிசுத்த இதயம் கசப்பால் நிரம்பியுள்ளது, அவர்கள் தங்கள் தப்பிதத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று என் ஆன்மா ஏங்கிக் கொண்டிருக்கிறது; இராயப்பரை எதிர்க்கிறவர்கள் என் திருச்சபையை எதிர்க்கிறார்கள், அவர்கள் என் திருச்சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தங்கள் ஆண்டவரும், இறைவனுமாகிய என்னை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் என் -ஆட்டுக்குட்டிகளின்- இராயப்பரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம், அவர்கள் என் திருச்சட்டத்தைத் தீர்ப்பிடுகிறார்கள்; வீண் பெருமையாகவே இருப்பவனால் குருடாக்கப்பட்டவர்களாக, இராயப்பரைக் கண்டனம் செய்வதன் மூலம், அவர்கள் திருச்சட்டத்தை அனுசரிக்காமல், அதற்குப் பதிலாக என் திருச்சட்டத்தைத் தீர்ப்பிடுபவர்கள் ஆகிறார்கள் என்பதை மேற்கொண்டு தெளிவாகக் காணாமல் இருக்கிறார்கள்! ஓ, தேவ ஆவியானவர் திருச்சபையிடம் கூறுவதைக் கேளுங்கள்! திரும்பி வாருங்கள்; அன்புக்குரியவனே, திரும்பி வா; குறிப்பு: இங்கு ஆயர் லெபோரை குறிப்பிடுகிறார். இன்று இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரைத் தாங்கியுள்ள இராயப்பனைத் தேர்ந்தெடுத்தவர் ஆண்டவராகிய நான்தான்; அன்பிற்குரியவனே, நான் உனக்குச் சொல்கிறேன், என் திரு இதயம் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளது; அன்பிற்குரியவனே, திரும்பி வா, என் நிமித்தமாக, ஒப்புறவாகு; ஆண்டவராகிய நான் உன் பாவங்களை மன்னித்து, உன்னைத் தூய்மையாக்குவேன்; திரும்பி வாருங்கள்! நீங்கள் எல்லோரும் இராயப்பினிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில், உங்கள் கடவுளாகிய நான்தான் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; ஒரு சீடனின் நாவை அவருக்குத் தந்திருப்பவர் நானே, என் வழியாக, கலைப்புற்றவர்களுக்குப் பதில் கூறக்கூடியவராக அவர் இருக்கிறார்; ஓ, படைப்பே! உங்களில் ஞானம் கொஞ்சமும் மீதம் இல்லையா? படைப்பே! நான் உங்கள் மீது கொண்டுள்ள என் ஆழம் காண முடியாத அன்பை மதித்துப் போற்ற நீ தவறுகிறாய், இருந்தாலும், என்னை மன்றாடுகிற எல்லோருக்கும் நான் பதிலளிக்கிறேன்; நீங்கள் பிரச்சனையில் இருக்கும்போது, நான் உங்களோடு இருக்கிறேன், நான் உங்கள் புகழிடமாக இருக்கிறேன்; இன்று, ஆண்டவராகிய நான் மேலும் ஒரு கட்டளையைத் தருவேன்; எழுது: 'வளையுங்கள்! ஒப்புறவாகவும், ஒன்றிணையவும், உங்களால் இயலும்படி, வளையுங்கள், ஒன்றிணைக்கும்படி, உங்களையே தாழ்த்திக் கொள்ளுங்கள்; குழந்தாய்! என்ன ஆண்டவரே? நான் என் சமாதானத்தை உனக்குத் தருவேன்; கீழ்படிதல் உள்ளவளாய் இரு, நான் விரும்புகிறபடி, உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; என்னை நம்பு, நீ உன் பிதாவின் கரங்களில் இருக்கிறாய்; ஆண்டவரே, நான் உம்மை மட்டுமே பின் செல்கிறேன். தன் தாயோடு இருக்கிற ஒரு குழந்தையைப் போல, என் ஆன்மா உம்மில் முழுமையாக நம்பிக்கை வைத்தும், ஒரு குழந்தையை போலவும், சமாதானத்தில் இருக்கிறது. நான் உமக்கு கீழ்படிய விரும்புகிறேன். என் பிரசன்னத்தை நினைவில் கொள், நான் உன்னோடு இருக்கிறேன்; நாங்கள், நாம்? நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, ஆம், புனித மாமரியே.