வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 44. ஆகஸ்ட் 28, 1987 வசுலா வா, பிரெஞ்சு மொழியில் என் செய்திகளை மொழியாக்கம் செய்யப் பார்; நான் உனக்கு உதவி செய்வேன், என் அப்பம் இலவசமாக கொடுக்கப்படட்டும்; அப்படியே செய்வேன், ஆண்டவரே. நீர் எனக்கு உதவுவீர் என்று எனக்கு தெரியும். வசுலா, நான் உன் மீது பகுத்தறிதல்களையும், கற்றுக் கொள்ளுதல்களையும் பொழிந்திருக்கிறேன்; நீ என்னால் கற்பிக்கப்பட்டிருக்கிறாய்; என் சேமிப்பறைகளில் இருந்து நான் உனக்கு என் அப்பத்தைத் தந்திருக்கிறேன்; என் தோட்டத்திலிருந்து உனக்கு நான் கனிகள் தந்திருக்கிறேன்; இந்த உலகத்திற்கு என் திருமுகத்தை வெளிப்படுத்தி, அதை ஒளிவிக்கும்படி என் பணிகளை உனக்குள் ஊற்றியிருக்கிறேன்; வா, நான் ஏன் உன்னை தேர்ந்துகொண்டேன் என்பதை மறக்காதே; மகளே, நான் உனக்குத் தருவதைக் கொண்டு திருப்தி அடைந்துகொள்; மற்றவர்களையும் உண்பிக்கும்படி உனக்கு நான் ஜீவியத்தின் மரத்திலிருந்து அபரிதமாகத் தந்திருக்கிறேன்; என் மீது சாய்ந்துகொள், என்னைச் சார்ந்திரு, உனக்குள்ளதெல்லாம் எனக்கு நீ தருவாயா? நான் கொண்டிருக்கிற எல்லாமே உம்முடையது. எனக்கு மட்டுமின்றி எதையும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. உண்மையில், உன்னிடம் உள்ள எல்லாமுமே என்னுடையது, ஆனாலும், தேர்ந்தெடுக்க நான் உனக்கு சுதந்திரம் தந்திருக்கிறேன்; ஆண்டவரே, எதை தேர்ந்தெடுக்க? நன்மை அல்லது தீமை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க; இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நான் எல்லோருக்கும் தந்திருக்கிறேன்; அப்படியானால், இது மட்டும்தான் நான் கொண்டிருக்கிற ஒரே ஒரு காரியம் என்றால், நான் உம்மோடு தங்கியிருப்பதையே தேர்ந்துகொள்கிறேன். அப்படியானால், என்னோடு உன்னைப் பிணைத்துக்கொள்ள என்னை அனுமதி; நான் எங்கே அதிகமாகத் தேடப்படுகிறேனோ, அங்கே உன்னை வழிநடத்த என்னை அனுமதி; பிதாவே, நான் உம்மை நேசிக்கிறேன். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. குழந்தாய், என்னை நேசி; நான் சொல்வதைக் கேள், என் நூல்களை நான் எழுதி முடிக்கும் வரையில், என்னிடம் வரும்படி உன் சங்கிலிகளை நான் அவிழ்க்க மாட்டேன்; என் ஆசைகளை எழுதி வைக்க உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நான் என்னை அனுமதிப்பேன்; அன்பானவர் உன்னை நேசிக்கிறார்; என் அடையாளத்தை வரை, கடவுளின் பிரியகுமாரனும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து; ஆகஸ்ட் 30, 1987 மாலை. இயேசுவா? நான்தான்; உன்னில் நான் இளைப்பாற அனுமதிப்பாயா? அனுமதிப்பேன், ஆண்டவரே. என் மலரே, என்னைத் தேடு, என்னை ஆர்வத்தோடு ஆசி, என்னை வாழ்த்து, ஆண்டவரே, நான் உம்மை வாழ்த்துகிறேன். என் ஆசீர்வாதங்களையும் கொண்டிரு; நான் தனியாக இல்லை! அவரைத் தொட முடியும் என்று எண்ணும் அளவுக்கு நான் அவரை உணர்ந்தேன். ஆகஸ்ட் 31, 1987 வசுலா, இரவின் அசைவற்ற அமைதியில், நான் வருவேன்; நேரம் அண்மையில் உள்ளது; நீ தனியாக இல்லை; உலகம் என் பிரசன்னத்தை மறந்துவிட்டது போலத் தோன்றுகிறது; ஆனாலும், எத்தனை பேர் என்னை நினைக்கிறார்கள்? மிகச் சிலர்தான்; நட்சத்திரங்கள் நிறைந்ததும், அசைவற்ற அமைதியுள்ளதுமாகிய ஓர் இரவை நான் கண்டேன். அந்த நட்சத்திரங்களுக்கும் அப்பால், நம் மீது பதிந்திருக்கிற கடவுளின் கண்களை நான் கண்டேன். சிறியவளே, விழிப்பாக இருந்துகொள், ஏனெனில், இரவின் இந்த அமைதியில் நான் இறங்கி வருவேன்; உன்னை நான் படைக்கும் முன்பே, என் திட்டங்களை நான் இட்டு வைத்திருக்கிறேன்; நான் உன்னை என்னிடம் உயர்த்தி, உனக்கு ஒன்றைக் காட்டுவேன்; நேசமே, இப்போது ஓய்விடு; செப்டம்பர் 1, 1987 பிரமாணிக்கம் தான் நான் மிகவும் நேசிக்கிற காரியம்; வசுலா, நான் என்னிடம் உன்னை உயர்த்துகிற ஒரு காட்சியை உனக்குத் தருவேன்; பரலோகம் எப்படித் தோற்றமளிக்கும் என்று நான் உனக்குக் காட்டுவேன்; ஆகாயம் எனக்கு காட்டப்பட்டது. அது எந்த ஒரு இரவையும் போல, அதன் நட்சத்திரங்களோடு காணப்பட்டது. அதன் பின் அது மாறியது. அது வர்ணபூச்சுக் கலவையின் புள்ளிகளுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓர் ஓவியனின் வண்ணத்தட்டை போல, ஆனால் ஒரு நிறம் மற்ற எல்லா நிறங்களையும் கடந்து ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. காடியைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறம், அது அடர்த்தியில் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அது நம் மீது ஊற்றப்படுவதைப் போல் இருந்தது. வசுலா, நான் வானங்களைத் திறந்து, கண்கள் ஒருபோதும் கண்டிராததை நீ காண உன்னை அனுமதிப்பேன்; நீ நன்கு பகுத்தறிந்திருக்கிறாய், விழிப்பாக இரு; நான் உன்னைக் கண்காணிப்பேன்; நான் சொல்வதைக் கேள்; எழுது; காலங்களின் துவக்கத்திலிருந்தே நான் என் படைப்பை நேசித்து வந்திருக்கிறேன்; ஆனாலும், என்னை நேசிப்பதற்காகவும், என்னை தங்கள் கடவுளாக அடையாளம் காணும்படியாகவுமே நான் என் படைப்பைப் படைத்தேன்; காலங்களின் தொடக்கத்திலிருந்தே, என் கரம் படைத்திருந்த அனைத்தையும் நான் புனிதப்படுத்தி வந்திருக்கிறேன்; நான் நேசத்தின் கடவுளாக இருக்கிறேன், நான் பக்திக்குரிய நேசத்தின் அரூபியாய் இருக்கிறேன்; படைப்பே, காலங்களின் தொடக்கத்திலிருந்து நான் மனுக்குலத்திற்கு என் அன்பைக் காட்டி வந்திருக்கிறேன், ஆனால் என் நீதியையும் நான் காட்டியிருக்கிறேன்; என் படைப்பு எனக்கும் என் சட்டத்திற்கும் எதிராக கழகம் செய்த ஒவ்வொரு தடவையும் நான் இருதயத்தில் கடினப்பட்டேன், என் இருதயம் அவர்களுடைய அக்கிரமங்களால் கடும் வேதனைப்பட்டது; நான் அன்பின் ஆவியாக இருக்கிறேன் என்றும், அவர்களும் ஆவிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு நினைவூட்டும்படி நான் வந்தேன்; அவர்கள் தூசியிலான பூமியின் மீது கடந்து போகிற வெறும் நிழல் மட்டுமே என்றும், அவர்கள் மீது விழும் என் மழையின் முதல் துளிகள் அவர்களைக் கழுவி, எதையும் விட்டு வைக்காமல் அழித்து விடும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட நான் வந்தேன்; நான் அவர்களுக்குள் என் உயிர் மூச்சை ஊதி, அவர்களுக்கு உயிரளித்தேன்; உலகம் இடைவிடாமல் என்னை நோக செய்து கொண்டிருக்கிறது, நான் என் பங்கிற்கு, இடைவிடாமல் என் இரத்தத்திலையும் நான் அவர்களை எப்படி நேசிக்கிறேன் என்பதையும் அவர்களுக்கு நினைவுபடுத்தி வந்திருக்கிறேன், படைப்பே, என் நீதியின் கிண்ணம் நிரம்பியுள்ளது; என் நீதி உங்கள் மீது பாரமாக இருக்கிறது! என் படைப்பே, ஐக்கியப்பட்டு என்னிடம் திரும்பி வந்து என்னை மகிமைப்படுத்து; அப்போது நானும் என் நீதியை உன்னிடமிருந்து அகற்றி விடுவேன்; என் கூக்குரல்கள் வானகங்கள் முழுவதிலும் எதிரொலித்து அவற்றை அசைக்கிறது; அது வரவிருக்கும் காரியங்களைக் கண்டு என் எல்லா சமணசங்களும் நடுநடுங்குகிறார்கள்; நான் நீதியின் கடவுளாக இருக்கிறேன்; என் கண்கள் வெளியேடத்தையும், நாத்திகத்தையும், ஒழுக்கமின்மையையும் கண்டு சோர்ந்து போய்விட்டன; என் படைப்பு அதன் அழுகளில் சோதோமுக்கு ஒப்பானதாகிவிட்டது; நான் சோதோமியர்களை இடியாக தாக்கியது போல, என் நீதியைக் கொண்டு உன் மீதும் இடியாக முழங்குவேன்; படைப்பே, நான் வருவதற்கு முன்பாக மனஸ்தாபப்படு; நான் உங்களை பல தடவைகள் உண்மையாகவே முன் எச்சரிக்கை செய்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் என் போதனைகளை கடைபிடிக்கவில்லை; நான் உங்களை எச்சரிக்க புனிதர்களை தோற்றுவித்தேன்; ஆனால் மகளே, அவர்கள் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டார்கள்; என் படைப்பு அசுத்த மோகத்தால் அதிகமாக வாழ்வதையும், என்னை அலட்சியம் செய்வதையும் விரும்புகிறது; அவர்களை எழுப்பும்படி நான் அடையாளங்களை அவர்களுக்கு தந்திருக்கிறேன்; என் தேவனே, உன் பிள்ளைகள் உறங்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள். தயவுசெய்து வந்து அவர்களை எழுப்பும். அவர்கள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மணிக்கணக்கில், ஆண்டுகணக்கில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் ஆண்டவரே, அவர்களுக்கு கற்பிக்கப்படவில்லை என்றால் யாரை குற்றம் சாட்டுவது? உம்மை பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர்கள் ஏறத்தாழ மாசற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கற்பிக்கும்படி ஊழியர்களையும் போதகர்களையும் நான் ஏற்படுத்தி இருக்கிறேன்; ஆண்டவரே, உன் போதகர்களும் ஊழியர்களும் வேலை செய்கிறார்கள். ஆனாலும் மக்கள் கூட்டங்கள் எதிர்மறையாக இருக்கும்போது, அவர்கள் என்னதான் செய்ய முடியும்? அவர்கள் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள்! உதவியற்றவர்களாகவா? அவர்கள் என்னிடம் வந்து மனஸ்தாபப்பட வேண்டும், நான் காலங்கள் தோறும் அவை என்னிடமிருந்து வராதவை என்பது போல, அவற்றை நிராகரித்து விட்டார்கள்; நான் பலவீனம் உள்ளவையும், இழிந்தவையுமான ஆன்மாக்களின் வழியாக அவர்களுக்கு எச்சரிக்கைகள் தந்தேன், ஆனால் அவர்களோ என் வார்த்தைகளை சந்தேகப்பட்டார்கள்; அவர்கள் என் எல்லா ஆசீர்வாதங்களையும் புறக்கணித்துவிட்டு என்னைத் துயரப்படுத்தினார்கள்; ஓ பாறையாலான இதயங்களைக் கொண்டுள்ள மனிதர்களே! அற்ப விசுவாசம் உள்ள மனிதர்களே! அவர்கள் அன்பாலான இதயம் உள்ளவர்களாக இருந்திருந்தால், இப்பொழுதாவது அவர்கள் அன்புள்ள இதயம் உள்ளவர்களாக இருந்தால், நான் அவர்களுக்கு உதவி இருப்பேன்; நான் அவர்களுடைய உறக்கத்திலிருந்து அவர்களை எழுப்பினேன்; ஆனால் அவர்கள் எத்தனை முறை தங்கள் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்; ஆனாலும், நீர் உம் அடையாளங்களை தரும்போது, அவர்கள் ஏன் அவற்றை உலகத்திற்கு அறிவிப்பதில்லை? சிலர் அறிவிக்கிறார்கள்; ஆனால் என் குருத்துவ ஆன்மாக்களின் பெரும்பாலானவர்கள் சந்தேகப்பட்டபடியும், பயந்தபடியும் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டார்கள்; அவர்களில் அநேகர் பயப்படுகிறார்கள்; வசுலா, பரிசேயர்களை உனக்கு நினைவிருக்கிறதா? ஆம், ஆண்டவரே. அவர்களில் அநேகர் அந்த பரிசேயர்களின் மாதிரிகளாக இருக்கிறார்கள்; சந்தேகப்பட்டபடியும், பயந்தபடியும், வீண் பெருமையாலும், வெளியேடத்தைக் கொண்டு குருடாக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்; எத்தனை தடவைகள் நான் அவர்களுக்கு அடையாளங்களை தந்திருக்கிறேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நான் நூற்றுக்கணக்கான தடவைகள் அவர்களுக்காக அடையாளங்களை தந்திருக்கிறேன்; அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? காலங்கள் மாறவில்லை, என் குருத்துவ ஆன்மாக்களில் அநேகர் பரிசேயர்களின் பிரதிகளாகத்தான் இருக்கிறார்கள்! நான் அவர்களுக்கு அடையாளங்களைத் தந்தேன்; ஆனால் அவர்கள் தடையங்களால் விளக்கப்படக்கூடிய அடையாளங்களைத் தேடுகிறார்கள்; அவர்களுக்குத் தேவை சாட்சியங்கள்; உம்முடைய கடந்த கால அடையாளங்களை அவர்களுக்கு ஒரு தடையமாக நீர் தருவீரா? மேலும் இந்த வெளிப்பாட்டைப் பற்றி எந்த நிரூபணத்தையாவது கொடுப்பீரா? நான் அவர்களுக்குத் தருவதெல்லாம் நீயே தான், குழந்தாய்; ஆனால் ஆண்டவரே, இது நம்பச் செய்வதற்கு போதுமாய் இல்லை. நான் அவர்களை நம்பச் செய்யக்கூடியவளாக இல்லை. அவர்கள் நம்புவதற்கு நான் ஒரு பொருட்டே இல்லை. என் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் எள்ளி நகையாடுவார்கள். நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன்; ஆண்டவரே, இது நீர்தான் என்பதை நான் அறிவேன், இன்னும் ஒரு சிலரும் அறிவார்கள். ஆனால் அநேகர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இது உம்மிடமிருந்து தான் வருகிறது என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. நான் ஒன்றுமில்லாதவள். உமக்கு அது தெரியும். மகளே, நான் எல்லாமுமாக இருக்கவிடு; ஒன்றுமில்லாமையாக நிலைத்திரு; நான் எல்லாமுமாக இருக்கவிடு; நீ எவ்வளவுக்கு மிகக் குறைவானவளாக இருக்கிறாயோ, அவ்வளவுக்கு நான் அதிகமாக இருக்கிறேன்; இப்போது நான் என் நீதியை மனுக்குலத்தின் மீது வைத்திருக்கிறேன்; அவர்கள் அறுவடை செய்தது அவர்கள் மேலேயே இருக்கிறது; இதற்கு தீர்வு எதுவும் இல்லையா? அதாவது, ஏதாவது ஒரு விதத்தில் எல்லாமே நீர் விரும்புகிறபடி மாறவும், அதனால் உம் நீதி அகற்றப்படவும்? வசுலா, என் குருத்துவ ஆன்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களால் மறுதலிக்கப்படாமல் இருப்பேன் என்றால், நான் என் நீதியை அகற்றி விடுவேன்; நான் அவர்களை எச்சரித்துவிட்டேன்; ஆனால் அவர்களோ என் எச்சரிக்கைகளை மறைத்தே வைத்திருக்கிறார்கள்; அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதற்கான காரணத்தை தயவுசெய்து எனக்கு சொல்லும். என் சர்வ வல்லபத்தையும் என் செல்வத்தையும் அவர்கள் மறந்துவிட்டதாக தோன்றுகிறது. அவர்கள் எல்லாவற்றையும் ஒரே ஒரு காரியத்திற்குள் ஒன்று திரட்ட முற்படுகிறார்கள், குறிப்பு: திடமான, அசைக்க முடியாத, தொட்டுணரக்கூடிய நிரூபணம். அவர்கள் கண்டால் மட்டுமே விசுவாசிப்பார்கள்; அவர்கள் என் ஆசீர்வாதங்களை பொருட்படுத்தாமல் என்னைத் துயரப்படுத்துகிறார்கள்; குறிப்பு: அதன்பின் அவர் என்னிடம் திரும்பி தம் கட்டளையை என் மீது வைத்தார். படைப்பே, படைப்பே! என் திருச்சபைக்குப் புத்துயிர் கொடு, வசுலா, என்னைக் கனப்படுத்து; நேரம் நெருங்கியுள்ளது, நேசமே, நேரம் அண்மையில் உள்ளது; அன்பானவர் மீண்டும் அன்பாகவே திரும்பி வருவார்; நன்றி, ஆண்டவரே. நான் உம்மை வாழ்த்தி ஸ்துதிக்கிறேன். இந்த கடைசி மூன்று நாட்களும் ஒரு விவரிக்க முடியாத கடும் வேதனையை நான் என் ஆத்துமத்தில் உணர்ந்தேன். முதல் தேதிக்கும் நான்காம் தேதிக்கும் இடையில். செப்டம்பர் 4,1987 என் தனிக் குறிப்புப் புத்தகத்தில் இயேசு எனக்கு ஒரு செய்தியைத் தந்தார். அது என்னை திடுக்கிட செய்தது. நான் அந்த செய்தியை அப்படியே விட்டுவிட்டு எழுந்தேன். பிற்பாடு நான் எழுத சென்றபோது, இயேசு மறுபடியும் அதே செய்தியை கூறினார். நான் பயப்படத் தொடங்கினேன். என் நினைவுகள் முன்பு போலவே மீண்டும் குழப்ப நிலைக்கு விரைந்தன. நான் என்னையும் கடவுளையும் ஏன் நான் என்று கேட்டேன். இதெல்லாம் ஏன் எழுதப்படத் தொடங்கியது? நான் ஏன் இதைப்போல் கடவுளோடு இணைக்கப்பட்டவளாக உணர்கிறேன்? ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேன்? இப்போது எப்படி இருக்கிறேன்? நான் சத்தியத்தில் வாழ்கிறேன். நடக்கிற எல்லாவற்றிற்கும் பொறுப்புள்ளவளாக உணர்கிறேன். கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அதன்பின் மறுபடியும் சந்தேகங்கள். இயேசுவை நான் பரிசோதிக்கும்படி செய்த சந்தேகங்கள். நான் சந்தேகப்பட்டபடி அவரிடம் வருகிறேன். அவர் அதை அறிந்திருந்தார். என் கரத்தை நானே கட்டுப்படுத்திக் கொண்டு என் சொந்த காரியத்தை எழுத வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்தேன். இயேசுவா? நான்தான்; சரியா? நீ மீண்டும் முயற்சி செய்யலாம்; குறிப்பு: என் கரத்தைக் கட்டுப்படுத்த முயன்றபடி எழுது...எழுது! அன்பு, அன்பு, அன்பு, அன்பு; எழுத நான் எவ்வளவு போராடுகிறேன். ஆனால் எப்படி என்னால் முடியவில்லை என்பதை இந்த மூன்று புள்ளிகள் காட்டுகின்றன. அதன்பின் அவர் எழுது என்று எழுதினார். மேலும் அவர் என் கரத்தை கட்டாயப்படுத்தி நகர்த்தி அன்பு என்று நான்கு முறை எழுத செய்தார். நான் என் கரத்தை நிறுத்த போராடிக் கொண்டிருக்கையில், நான் நேசமாய் இருக்கிறேன்; உன் தோள்களின் மீது நான் என் சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையை சுமத்தி இருக்கிறேன் என்பதை உனக்கு நினைவுறுத்துவேன்; எழுந்திரு! உயர்த்து! மகளே, நான் ஏன் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன், என்பதை நீ உணர்கிறாயா? என் திருச்சபையை ஒன்றுபடுத்தவே நான் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன், பலிபீடமே, ஞானிகளின் வாயினின்று அல்ல, மாறாக குழந்தையின் வாயினின்று நீ சத்தியத்தை கேட்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா? ஞானிகள் கேட்டும், கேட்டும் புரிந்து கொள்ள மாட்டார்கள்; பார்த்தும், பார்த்தும் உணர மாட்டார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்; ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் கரடு முரடானவையாக ஆகிவிட்டன; அவர்கள் தங்களின் காதுகளை மூடிக்கொண்டார்கள், கண்களை பொத்திக் கொண்டார்கள்; வசுலா, நான் உன்னை மரித்தோரிடமிருந்து எழுப்பி, ஞானத்தைக் கொண்டு உனக்குப் போதித்திருக்கிறேன்; அஞ்சாதே, முன்னேறு; இயேசுவுக்கு எதிரே நான் இருப்பது போன்ற ஒரு காட்சியை அவர் எனக்குக் காட்டினார். நான் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். அவர் என் கைகளை பிடித்திருந்தார். அவர் பின்னோக்கி நடந்தபடி நான் முன்னோக்கி வருமாறு அவர் என்னை நடத்திக் கொண்டு போனார். ஓ மகளே, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்; மலரே, நீ உணர்வதெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன; முன்னேறு; நான் இப்போதுதான் முதல் எட்டு எடுத்து வைப்பது போல் உணர்ந்தேன், சிலிர்த்துப் போனேன்! வசுலா, பயந்தவளாக இருப்பதன் மூலம் நீ என்னை வசீகரிக்கிறாய்; மகளே, பின்வரும் வார்த்தையை எழுது; கரபந்தால், வசுலா, உன்னை நான் உன் உறக்கத்திலிருந்து எழுப்பியபோது, உன்னை வெறுமனே எழுப்புவதற்காக மட்டுமல்ல, மாறாக, உன்னைப் பயன்படுத்த என்னால் முடியும்படியாகவே எழுப்பினேன்; நேசமே, உன்னைச் சுத்திகரித்தது வெறுமனே உன்னைச் சுத்திகரிப்பதற்காக மட்டுமல்ல, அது நீ என் பிரசன்னத்தை உணர வேண்டும், என் பிரசன்னத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே; உன்னைப் பயன்படுத்தியது, என் செய்திகளையும் ஆசைகளையும் வெறுமனே நீ எழுதி வைப்பதற்காக மட்டுமல்ல, மாறாக கரபந்தாலில் உள்ள என் சிறு குழந்தைகளுக்காக நீ என் ஆசீர்வாதங்களை எழுதி வைக்கும்படியாகத்தான்; என் செய்தி மகிமைப்படுத்தப்படும்படியாக நான் வருகிறேன், பலிபீடமே, இந்தச் சுவாலை அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்குமாறு பார்த்துக்கொள், என் வல்லமையை கொண்டு நான் என் திருச்சபையை மீண்டும் ஸ்தாபிப்பேன்; என்னை நேசி, தடுமாறாதே, என் மீது சாய்ந்து இளைப்பாறு, நீ முன்னேற, நான் உதவுவேன்; நேரம் அண்மையில் உள்ளது, என்னோடு ஜெபி, "தந்தாய், உம் கரங்களில் என்னை ஏற்றருளும், உம் அருகில் நான் இளைப்பாற அனுமதியும் தந்தாய்; நீர் என்னை ஏற்றுக் கொள்ளும்போது, என்னை பரிசுத்தப்படுத்தும், நான் மற்றவர்களை மன்னித்தது போல, என் பாவங்களையும் மன்னியும், என் பிதாவாகிய சர்வேசுவரனுக்கு மகிமை உண்டாவதாக நான் உம்மை வாழ்த்தி ஸ்துதிக்கிறேன்; ஆமென்."