இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 31. மே 2, 1987. நான் இயேசு; இயேசுவே, உமது முறைமையின்படி, எனக்கு ஒரு முக்கியமான செய்தியைத் தரப்போகிறீர் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் தீமை நான் எழுதவிடாமல் அதை அறியப்படுத்தும்படி என்னைத் தாக்குகிறது. என்னை நேசித்து, எனக்காகத் தங்கள் உயிரைப் பலியாக்குபவர்களுக்காக நான் ஒரு செய்தி வைத்திருக்கிறேன்; குறிப்பு: எல்லாக் குருக்களும், துறவியர்களும், சகோதரிகளும், சகோதரர்களும், அவரை உண்மையாகவே நேசிக்கும் அனைவரும். அவர்களுக்குப் பலம் தந்து, அவர்களை ஊக்கப்படுத்த நான் விரும்புகிறேன்; வார்த்தையாகிய நான், இந்தப் பலவீனமான கருவியின் வழியாக என் வார்த்தைகளை வெளிப்படுத்துவேன்; இந்தச் செய்தியின் வழியாக, உங்கள் எல்லோர் மீதும் என் ஒளி பிரகாசிக்க அனுமதித்து, நான் பூமியின் மீது இறங்குவேன்; என் ஆன்மாவின் நேசர்களே, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்; என் அன்யோனியமுள்ள ஆன்மாவின் உள்ளாழங்களில், எனக்குள் ஒரு உயிருள்ள, அணையாத தீச்சுடரை நான் வைத்திருக்கிறேன்; நான் மாசற்றத் தனமும், பக்தியும், செல்வத்தின் பாதாளமுமாக இருக்கிறேன்; என் நேசர்களே, வந்து என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் இதயங்களை ஊற வையுங்கள், வந்து என்னிடமிருந்து உறிஞ்சிக் குடியுங்கள்; வந்து என் திறந்த காயங்களுக்குள் ஊடுருவுங்கள்; வந்து உங்கள் ஆன்மாக்களை என் இரத்தத்தில் மூழ்க வையுங்கள்! மூழ்க வைக்க உங்களால் இயலும்படி, என் உயிருள்ள ஊற்றில் வந்து பருகுங்கள், இந்தப் பாழ்பட்ட வனாந்தரத்திற்குப் பாசனம் செய்து, என் ஆட்டுக்குட்டிகளைக் குணமாக்குங்கள்; இந்த உயிருள்ள தீச்சுவாலையில் இருந்து பெற்றுக்கொண்டு, அது உங்கள் இதயங்களைத் தனக்குள் வைத்து மூடிக்கொள்ள விடுங்கள்! உங்கள் மனங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன்; வாருங்கள், என் பரிசுத்த சிலுவையைச் சுமப்பதில் சோர்ந்து போகாதீர்கள், ஏனெனில் நான் உங்களோடு இருந்து, உங்களோடு அதைச் சுமக்கிறேன்; என்னைப் பின் செல்லுங்கள், எப்போதும் எனக்கு நெருக்கமாக இருந்து கொள்ளுங்கள், உங்கள் பாதங்களை என் பாதச் சுவடுகளுக்குள் வையுங்கள், கடுமையாக உழைப்பதிலும், துன்புறுவதிலும் சோர்ந்து போகாதீர்கள், என்னை மகிமைப்படுத்துங்கள், உங்கள் குரல்கள் இனிய தூப நறுமணத்தைப் போல, மோட்சத்தில் எழக்கடவது; என்னைப் புகழுங்கள்; நான் அக்களிக்க அனுமதியுங்கள், நான் உங்களில் இன்பம் காண அனுமதியுங்கள்; என் பேரில் உங்களுக்குள்ள நேசத்தில், நான் இன்பம் காண என்னை அனுமதியுங்கள்; இந்த அளவற்ற நேசத்தினால், உங்கள் இதயங்களை நிரப்பி, அது என் ஆட்டுக்குட்டிகளின் மீது வழிந்தோடி, அவர்களைக் குணப்படுத்தும்படி செய்யுங்கள்; பூமியின் மீது உள்ள ஒவ்வொரு உயிருள்ள படைப்பும் என் கதகதப்பை உணர்வதாக; குளிர்ந்ததும், கல்லாகிப் போனதுமான ஒவ்வொரு இதயமும் உருகி, என் மாசற்றத் தனத்தில் கரைந்து, என் சரீரத்தோடு ஒன்றுபட்டு, என்னோடு ஒன்றாகி விடுவதாக! கடந்த காலத்தின் ஒவ்வொரு நிழலும், பாவத்தால் இறந்து போன ஒவ்வொரு ஆன்மாவும், ஓர் உயிருள்ள ஆன்மாவாக, நேர்மையும், சமாதானமும் நேசமும் நிறைந்த ஆன்மாவாக, புதுப்பிக்கப்படுவதாக; இந்த என் படைப்பைக் கொண்டு, ஒரு ஏதேன் தோட்டத்தை உருவாக்குங்கள்! ஐக்கியப்படுங்கள், இணைந்து ஒன்றாய் இருங்கள், ஏனெனில், கடவுளாகிய நான் ஒன்றாய் இருக்கிறேன்; ஒருமைப்பாடு பலத்தைக் கொண்டு வருகிறது, ஒன்றிணையுங்கள்; என் அர்ப்பணமுள்ள விதைப்பவர்களாக இருங்கள், என் சமாதானம் மற்றும் நேசத்தின் விதைகளை விதையுங்கள்; பூமியின் மீது ஒரு பரலோகத்தை விளைவிக்கக்கூடிய தானிய மணிகளை நான் படைத்திருக்கிறேன். ஏனெனில் பூமியின் மீது என் அரசு, என் பரலோக அரசைப் போல் இருக்கும்; என் இருதயத்தில் இருப்பவையும், என் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டவுமாகிய தானிய மணிகளை எடுத்து, அவற்றை எல்லா இடங்களிலும் தூவுங்கள்; அன்பர்களே, நான் இந்த விதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் என் இருதயத்திற்குள் பிரவேசித்து, அவற்றை ஈர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஒருமைப்பாட்டைத் தேடுங்கள்; நான் என் மலர்களைக் குணப்படுத்தி, அவற்றை மணமுள்ளவையாக்கி, அவற்றைச் செழிப்பாக்குவேன், என் தோட்டத்தை நான் அலங்கரிப்பேன், உங்கள் இதயங்களுக்கு நீர் பாய்ச்சுவேன், நான் உங்களை உயிர்ப்பிப்பேன்; படைப்பே, நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்மீது ஒளிவீசுவேன், என் வெப்பமான கதிர்கள் அந்த கனத்த இருண்ட இடி மேகங்களைச் சிதறடித்து, அவற்றைக் கலைத்து விடுவனவாக; என் ஒளி அவற்றை ஊடுருவும், உங்கள் மீது பாரமாக இடப்பட்டுள்ள எல்லா இருளும், தீமையும் மறைந்து போகும். உங்களுக்கு பலவீனத்தையும், பரிதாப நிலையையும், தீக்குணத்தையும் மட்டுமே கொண்டு வந்த இந்த இருள் மறைந்து போகும்; என் வெப்பமுள்ள ஒளிக்கதிர்கள் என் எல்லா மலர்களையும் உயிர்ப்பிக்கும், நான் மோட்சத்திலிருந்து என் நீதி, பரிசுத்தத்தனம், மாசற்றத்தனம், நேர்மை, சமாதானம் மற்றும் நேசத்தின் பனித்துளியை ஊற்றுவேன்; நான் உங்கள் மீது ஒரு விழிப்புள்ள கண்ணோடு இருக்கிற உங்கள் அர்ப்பணமுள்ள பாதுகாவலராக இருக்கிறேன்; நானே இந்த உலகின் ஒளி என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நானே வார்த்தையானவர்; உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக; என்னை மகிமைப்படுத்துங்கள்; என் மீது சாய்ந்து கொள்ளுங்கள்; கடுமையாக முயற்சி செய்யுங்கள், என் சிலுவையை சுமந்து, என் குழந்தைகளை குணப்படுத்துவதில் சோர்ந்து போகாதீர்கள்; என் வசுலா, எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; நான் உன்னை நேசிக்கிறேன்; ஞானம் உனக்குக் கற்பிக்கும்; நானும் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே. உமது சித்தம் செய்யப்படுவதாக. மே 5, 1987. நான் என் மீது கடவுளின் நேசத்தை உணரும்போது, என் மனம் ஏறக்குறைய சுருண்டு போகிறது! அவர் தம் சரீரத்தில் என்னைக் கரைந்து போகச் செய்யும்போதும், அவரது திருச்சரீரத்தில் என் உடல் கரைகின்ற போதும், நான் காற்றைப் போல உணர்கிறேன், உண்மையாகவே, நான் சரீரமில்லாத அரூபி போல் உணர்கிறேன்! பரவச நிலையா? இந்த வார்த்தைகளும் கூட, அவருடைய நேசம் எனக்கு தருகிற நிலையை முழுமையாக விளக்கிக் கூற முடியாது. அவருடைய வரப்பிரசாதமும், நன்மை தனமும் விவரிக்கப்பட இயலாதவை. இத்தகைய மேன்மையையும், அவருடைய பரிசுத்த தனத்தின் மகத்துவ பேரொளியையும் விளக்க வார்த்தைகளே இல்லை. அவர் என்னை நெருங்கி வருவதற்கு முன், நான் அவரை எப்படி நிராகரித்தேன் என்பதை நினைத்தால்! வசுலா, என்னிடம் வா; என் ஐந்து காயங்களும் திறந்திருக்கின்றன; வசுலா, என் காயங்களுக்குள் ஊடுருவி, என் வேதனையை உணர்ந்துகொள்; வா, என் காயங்களில் உள்ள என் இரத்தம் உன்னை அர்ச்சிப்பதாக, என்னை மகிமைப்படுத்து, நான் உன்னை வழிநடத்துவேன், மகளே; நான் இலவசமாகத் தருகிறேன், ஆகவே, நீயும் இலவசமாகவே கொடு; ஆண்டவராகிய நான், என் பரிசுத்த புத்தகத்தோடு திரும்பி வருவேன்; இயேசு ஒரு சிறு புத்தகத்தை வைத்திருந்தார். "எனக்கு விவாக ஒப்பந்தமானவளே, என் ஆன்மாவின் பேறு பெற்றவளே, என் மகளே, நான் சுட்டிக்காட்டும் இடத்தைப் பகுத்துணர்ந்து, அதை வாசி; என் ஆட்டுக்குட்டிகளை மேய்; என் தானிய மணிகளைத் தூவு, அவை ஒரு செழிப்பான அறுவடையாகத் தரட்டும், அதை அறுவடை செய்து, என் அப்பத்தை இலவசமாய்க் கொடு; நான் ஜீவியத்தின் அப்பமாக இருக்கிறேன்; என் ஆடுகளை மேய், நான் காலங்களின் முடிவு வரையிலும் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்;" குறிப்பு: இந்த புத்தகத்தில் உள்ளடக்கம் முழுவதும் என்னிடம் ஒப்படைக்கப்படும் அலுவலை என் அப்போஸ்தலத்துவத்தை வெளிப்படுத்தின. என் தேவனே, உன் வழிகாட்டுதலுக்காக உமக்கு நன்றி. இன்னும் எழுதப்படாத இந்த வார்த்தைகளால் என் குரல் வறண்டதாக ஒலிக்கிறது. ஆனாலும், நான் அவற்றை காகிதத்தில் எழுத வேண்டும். உன் திருப்பெயர் என்றென்றும் சதாகாலமும் வாழ்த்தப்படுவதாக! நான் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்னைக் கைவிடமாட்டேன்; நாம் சேர்ந்து பணியாற்றுவோம்; எழுதுவதில் களைத்துப் போகாதே; இப்போது நான் என் சமாதானம் மற்றும் நேசத்தின் செய்தியை முத்திரையிட்டு இருக்கிறேன், நான் உன்னை வழிநடத்துவேன், வசுலா, என்னிடம் வா; ஆண்டவரே, நான் உம்மை பின்தொடர்வேன். நான் உம்மை நேசிக்கிறேன். உன்னில் என்னைச் சுதந்திரமாக செயல்படவிடு, ஆண்டவரே, உம்முடைய சித்தமே செய்யப்படுவதாக. நான் ஞானத்தைக் கொண்டு உனக்குக் கற்பிப்பேன்; பிற்பாடு: நேற்று கடவுளின் செய்திக்குப் பிறகு, கடவுள் என்னிலும் நான் அவரிடம் இருப்பதை மிக மிக அதிகமாக நான் உணர்ந்தேன், இனி ஒருபோதும் அவரிடமிருந்து என்னால் பிரிய முடியாது என்று உணர்ந்தேன். என் தோழியே, நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, எனக்கு எல்லாவற்றையும் தா. உனக்குள்ள எல்லாவற்றையும் எனக்குத் தா; நான் என் நேசத்தை உமக்குத் தந்திருக்கிறேன். நான் என்னையே உமக்குத் தந்திருக்கிறேன். பூமியில் இருந்து என் உணர்வுகளை நான் அறுத்துக் கொண்டேன். நான் கையளித்துவிட்டேன். இன்னும் அதிகமாக எதையாவது என்னால் உமக்குத் தர முடியுமா? மகளே, உன் அர்ப்பண ஜெபத்தைக் கேட்பதை நான் நேசிக்கிறேன்; நான் உன்னைச் சிறைப்படுத்துபவராக இருப்பேனாக; நான் இன்று மாலையில் இயேசுவை எவ்வளவு பலமாக உணர முடிந்தது என்றால், அவருடைய திருமுகத்தை என்னால் தெளிவாகக் காண முடிந்தது. மற்ற சமயங்களில் இது எளிதாக இருக்காது. மாலையில் அவர் மிகத் தீவிரம் உள்ளவராகவும், நேசப்பற்றுதல் மிக்கவராகவும், ஆர்வம் உள்ளவராகவும், நேச ஆர்வத்தோடு வெதுவெதுப்புள்ளவனாய் இருக்கிற ஒருவனை உறுதிப்படுத்தும் தீர்மானத்தோடு வருகிற ஒருவரைப் போலவும் தோன்றினார். நீ என் காயங்களை முத்தமிடுவாயா? நான் ஒரு 'காட்சித் தியான' முறையில் முத்தமிட்டேன். அதன்பின் நான் இயேசுவிடம் எனக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமரும்படி கேட்டேன். அதே 'காட்சித் தியான' முறையில், அவர் அமர்ந்ததை உணர்ந்தேன். அவர் எனக்கு எதிரே இருந்தார், தம் கரத்தை மேசை மீது நீட்டி, என் குறிப்பேட்டின் மீது என்னைத் தொட்டார். இயேசு இந்தப் பதிவுகளை என் மனதில் பதிக்கிறார். என் மலரே, உன்னை முழுமையாக எனக்கு அர்ப்பணி, நான் சொல்வதைக் கேட்க நீ தயாராய் இருக்கிறாயா? ஆம், இயேசுவே. மண ஒப்பந்தமானவளே, என் ஆன்மாவின் பேறுபெற்றவளே, நான் இலவசமாகத் தந்தேன், எனவே, இலவசமாகவே கொடு; உன்னை என்னோடு ஒன்றித்துக்கொள், என்னோடு ஒன்றாய் இரு; என் கண்களுக்குள் உற்றுநோக்கு; நான் அப்படியே செய்தேன். இயேசுவே, இன்னும் அதிகமாக நான் என்ன செய்ய முடியும்? என்னை நேசி, நான் உம்மை நேசிக்கிறேன், இதை பல தடவைகள் நான் சொல்லிவிட்டேன், நான் இதை உணர்ந்து சொல்கிறேன் என்பது உமக்குத் தெரியும். என் ஆன்மா உமக்காக இயங்குகிறது. நான் பற்றற்றவளாக இருக்க வேண்டும் என்று நீர் விரும்பினீர், ஆகவே, நான் பற்றற்றவளாக மாறியிருக்கிறேன். வசுலா, நான் உனக்காக ஏங்கவில்லையா? குறிப்பு: இங்குதான் "ஆன்மா தன் கடவுளுக்காக இயங்குகிறது. அதன் கடவுள் ஆன்மாவுக்காக ஏங்குகிறார்" என்பதன் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன். உன் கடவுளாக நானும் துன்பப்படவில்லையா? குறிப்பு: ஆன்மா உடலில் இருப்பதன் மூலம், அது அவரிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பதால். நேசமே, என்னில் வாழு, நான் உன்னில் வாழ்கிறேன், நீ என்னிலும், நான் உன்னிலும், நாம் நம்மிலும்; எனக்குள் உன்னைப் பொருத்திக்கொள், ஒன்றித்துக்கொள்; இயேசுவே, நீர் நம்மை இணைத்திருக்கிறீர், அப்படிச் செய்ததாக நீரே சொன்னீரே! சொல்லியிருக்கிறேன்; நான் திடீரென உடல் ரீதியாக முற்றிலும் சோர்ந்து போனவளாக உணர்ந்தேன், ஆகவே, நான் போக அனுமதி கேட்டேன். நாம் போகலாமா, இயேசுவே? ஏன் மகளே? நான் களைத்துப் போயிருக்கிறேன், இயேசுவே. அன்பே, நீ இங்கேயே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், இருப்பாயா? இயேசு வற்புறுத்தியது இதுதான் முதல் தடவை. அப்படியானால், நான் இருப்பேன்.... நான் தனியாக விடப்படும்போது, என் இருதயம் கிழிபடுகிறது, ஆனால், நீர் என்னோடு இருக்கிறீர். நாம் ஒன்றாய் இருக்கிறோம்.... நான் இப்போது உன்னோடு இருக்கிறேன், ஆனால், நீ பல சமயங்களில் என்னை மறந்து விடுகிறாய்; என் தெய்வீகக் கரங்கள், நான் விரும்புகிறபடி உன்னை வார்த்தெடுக்க என்னைச் சுதந்திரமாக விடு; நான் என் சாயலின்படி உன்னை உருவாக்குவேன்; உன்னில் என்னை சுதந்திரமாக வேலை செய்யவிடு; மகளே, நான் இயேசு, இயேசு என்பதற்கு இரட்சகர் என்பது அர்த்தம்; நான் உன்மீது நேசப் பொறாமை கொண்டிருக்கிறேன்; நீ முழுவதும் என்னுடையவளாய் இருக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன்; நீ செய்வதெல்லாம் எனக்காகவே இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் போட்டியாளர்களை சகித்துக் கொள்ள மாட்டேன்; நீ என்னை ஆராதிக்க வேண்டும் என்றும், எனக்காக வாழ வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்; எனக்காக சுவாசி, எனக்காக நேசி, எனக்காக சாப்பிடு, எனக்காகப் புன்சிரி, எனக்காக உன்னைப் பலியாக்கு, நீ செய்யும் எல்லாவற்றையும் எனக்காகச் செய்; நான் உன்னை ஆட்கொள்ள விரும்புகிறேன்; நீ என்னை மட்டுமே ஆசிக்கும்படி என் உள்ளம் பற்றியே செய்ய நான் விரும்புகிறேன்; மலரே, உன் இதழ்களைக் கொண்டு என்னை அலங்கரி; உன் நேசத்தால் எனக்கு முடிசூட்டு; என் முள்முடியை அகற்றிவிட்டு, உன் மென்மையான இதழ்களின் முடியை எனக்குச் சூட்டு; உன் மனத்தால் என்னை வாசனையாக்கு, என்னை நேசி; என்னை மட்டுமே நேசி; நான் பக்திக்குரிய நேசத்தின் காரணமாக, உனக்காக என் உயிரைக் கையளித்தேன்; உன் மணவாளராகிய எனக்காக நீயும் அதையே செய்ய மாட்டாயா? மண ஒப்பந்தமானவளே, உன் மணவாளரை அக்களிப்பாக்கு, என்னை மகிழ்வி! நித்திய கட்டுகளைக் கொண்டு என்னோடு உன்னை இணைத்துக்கொள்; எனக்காக, எனக்காக மட்டுமே வாழு; என் பலியாய் இரு, என் இலக்காய் இரு, என் வலையாய் இரு, படைப்பே, நீ என்னை நேசிக்கிறாயா? என் தேவனே, நான் எப்படி உம்மை நேசிக்காமல் இருக்க முடியும்? நான் நேசிக்கிறேன்! அதைச் சொல், அதைப் பல தடவைகள் சொல்; அதை நான் கேட்கவிடு; அதை நான் கேட்க விரும்புகிறேன்; அதை ஒவ்வொரு நாளும் ஓராயிரம் தடவை சொல், என்னில் நீ இளைப்பாறிய பிறகு, ஒவ்வொரு நாள் காலையிலும் சொல். எனக்கு நேராக நின்று, "என் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்; இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன், ஆனால், நீர் ஏன் இவ்வளவு இருக்கமுள்ளவராக ஆகிக்கொண்டிருக்கிறீர்? குறிப்பு: இங்கே நான் சொல்ல வந்த அர்த்தம் அதிகமாக எதிர்பார்த்தல். இயேசு தமது ஏக்கப்பற்றுதல் உள்ள அன்பின் காரணமாக என்னிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவேளை, நான் போதுமான அளவுக்குச் செய்யாமல் இருக்கலாம். வா, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே! நேசமே பேசிக்கொண்டிருக்கிறது, நேசமே ஆசிக்கிறது, நேசமே சுவாலை விட்டு எரிகிறது, இது நேசத்தின் பொறாமையுள்ள நேசம்; என்னால் போட்டியாளர்களைச் சகித்துக் கொள்ள இயலாது; உன் பரிசுத்தப் பிதாவும், மணவாளரும், தோழரும், சர்வேசுவரனும் ஆனவரின் மீது சாய்ந்து கொள்; வா, நாம் ஒருவரில் ஒருவர் இளைப்பாறுவோம்; மகளே, ஒரு பொறாமையுள்ள நேசத்தோடு நீயும் என்னை நேசி; குறிப்பு: போட்டியாளர் என்ற வார்த்தைக்கு கடவுளுக்கு முன்பாக நாம் வைக்கிற அனைத்தும் என்ற பொருள், நாம் கடவுளையே முதலிடத்தில் வைக்க வேண்டும். மே 6, 1987 தேதியிட்ட செய்திக்கு முன்பாக, அவருக்கு என் செய்தி முழுமையாக அர்ப்பணிப்பது என கடவுள் சொல்வதன் பொருள் என்ன என்று நான் அறிந்து கொண்டு வருகிறேன். உலகப் பற்றின்றி இருப்பது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின் செல்வது, அவருடைய வார்த்தைகள் உருவகமானவை. அவை இலௌகீகமானவை அல்ல. அர்ப்பணம்: நான் முதலில் அவரை முதலாவதாகவும், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாகவும் நேசிப்பதன் மூலம், நான் என்னை அர்ப்பணித்திருக்கிறேன்; அவர் என்னை பயன்படுத்த வேண்டும் என நான் விரும்பும் உணர்வையும் அர்ப்பணித்திருக்கிறேன்; பற்றற்றவளாக இருப்பதன் மூலம், என் உடலிலிருந்து விடுபட்டவளாக இருக்கும் அளவுக்கு, பற்றற்றவளாக இருப்பதன் மூலம், அதாவது, அவரோடு இணைந்து கொள்ளும்படியாகவும், அவரை மட்டுமே பின் செல்லும்படியாகவும், சரீரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புவதும், ஆசிப்பதுமாகிய ஒரு ஆன்மாவை நான் கொண்டிருக்கிறேன். -துன்பம்; ஆம், அவரோடு இல்லாமல் இருப்பது பற்றி, பூமியில் இன்னும் ஜடப்பொருளாய் இருப்பது பற்றி, இங்கே ஒரு விதவையாய் இருக்கும் உணர்வை கொண்டிருப்பது பற்றி. -துன்பப்படுதல்: அன்றாட வாழ்வை, இலௌகிக வாழ்வை வாழ வேண்டி இருப்பதை அறிந்து, துன்பப்படுதல் உண்மையில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் தைலத்தாலும், அவிசுவாசிகளாலும், பகுத்தறிவுவாதிகளாலும், வயதின் காரணமாக நீங்கள் நிலை தடுமாறுகிறீர்கள் என்று எண்ணுகிற மக்களாலும், இடைவிடாமல் நசுக்கப்படுவது உண்மையாகவே ஒரு சுமையாக இருக்கிறது. துன்பப்படுதல்: உங்களுடைய செயல் திட்டங்களைப் பின்பற்ற வேண்டி இருத்தல். துன்பப்படுதல்: நான் உலகத்திடமிருந்து பிரிந்து, கடவுளோடு மட்டும் தனித்திருக்க விரும்புவதாக உணரும் போது, என் உணர்வை மறைக்க வேண்டி இருப்பது, அவரும் நானும் மட்டும் என் கவனத்தை திசை திருப்ப வேறு யாரும் வேறு எதுவும் இல்லை. நான் இதை எழுதியது கூட என் உணர்வுகளை எழுத எனக்கு உதவும்படி நான் கடவுளிடம் கேட்டேன். ஏனெனில் என் மனதில் உள்ளவை எடுத்துரைக்க என்னால் இயலாது. ஆகவே, அவர் என் காதில் சரியான வார்த்தைகளை முனுமுனுப்பாக சொல்லி எனக்கு உதவி செய்தார்! நான் மனக்குலத்திற்கு மத்தியில் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்; சுமப்பதற்கு மேலும் ஒரு சிலுவை, என் உடல் வலிக்கிறது. என் சரீரமும் தான்; நீ உணர்வதை எல்லாம் நானும் உணர்கிறேன்; மகளே, என்னை வாழ்த்து, நான் உம்மை வாழ்த்துகிறேன், என் பிரியமுள்ள தேவனே, பிற்பாடு, இன்னும் கடவுளில் கரைந்திருப்பதாகிய உணர்வு: நான் உன்னை நேசிக்கிறேன், பார்த்தாயா? நேசம் துன்பப்படும், நேசம் கட்டுண்டிருக்கும், நேசம் அபரிதமான பிரமாணிக்கத்தை அளிக்கிறது; பரித்யாகம் செய்வதில் அன்பு எந்த கட்டுப்பாடும் கொண்டிருப்பதில்லை; வசுலா, நேரம் பறக்கிறது, உன் நேரம் அண்மையில் இருக்கிறது; உன்னை ஒப்புக்கொடு, தாழ்ச்சியில் வளரு, என் கரத்திலிருந்து உண்ணு; என் அன்பே, நான் உன் சங்கிலிகளை அவிழ்ப்பேன், உன் ஆத்மம் வெகு சீக்கிரத்தில் என்னிடம் பறந்து வரும்; நான் உம்மை நேசிக்கிறேன், என் தேவனே....