இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 60. ஜனவரி 26, 1988 வசுலா, உன் பரிசுத்த மாதாவோடு சேர்ந்து பணி செய்வாயா? நாங்கள் பிரிக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறோம்; ஆம், ஆண்டவரே. நான் உன்னை நேசிக்கிறேன்; நான் எப்போதும் என் தாயாருக்கு அருகில் இருக்கிறேன்; உன் பரிசுத்த மாதா இப்போது உனக்குக் கற்பிப்பார்கள்; இயேசு புனித மாமரியுடன் ஒன்றாக இருந்தார்; அவரோடு எல்லா நேரமும் நான் அவர்களைக் காணவில்லை என்றாலும், அவர்கள் அவரோடு இல்லை என்பது அதன் அர்த்தமல்ல என்பதை நான் புரிந்துகொள்ளும்படி அவர் செய்தார். அவர்கள் எப்போதுமே ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். மகளே, நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்; நான் உன்னைப் பாதுகாத்து, உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; அப்போது நான் சில காரியங்களைப் புரிந்துகொள்ள, புனித மாமரி எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். கடவுள் எனக்காகத் தேர்ந்து கொண்டிருக்கிற இந்தச் சாலையில், அவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். நான் இறுதி வரைக்கும் உனக்கு உதவி செய்து கொண்டிருப்பேன்; ஒரு பேச்சு முறையைக் கொண்டு, புனித மாமரி, நாங்கள் திருவெளிப்பாடு 12 ஆம் அதிகாரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் புரிந்துகொள்ளச் செய்தார்கள். வா, நான் விளக்கிக் கூறுவேன்; சாத்தான் தோற்றுப் போனபோது, அவன் என் எஞ்சிய பிள்ளைகளைப் பின்தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பது என்று சூளுரைத்தான்; தனது கடும் கோப வெளியில், அவர்களைக் கடித்து விழுங்கப் போவதாக அவன் சபதமிட்டான், ஏனெனில், தன் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது அவனுக்கு தெரியும், இதன் காரணமாக, தன்னால் முடிந்தவரை மிக அதிகமான ஆன்மாக்களைத் தன்னோடு இழுத்துச் செல்ல அவன் விரும்புகிறான்; ஆம், அவனே பறவை நாகம், தன் வாளால் கடவுளின் படைப்பை அவன் அழிவிற்குள் பெருக்கித் தள்ளுகிறான்; குறிப்பு: இறைவனை மறந்துவிட்ட நம் வழிகள், பலவழிகள். வசுலா, என் குழந்தாய், அவன் தன்னிலே வீண் பெருமையாக இருப்பதால், இறைவன் தம் படைப்பை கை நெகிழ்ந்து விட்டார் என்றும், எங்கள் பிள்ளைகள் அவனுடைய தீய வழிகளைப் பின்பற்றும்படி படைக்கப்படுகிறார்கள் என்றும், அவருக்கு நிரூபிக்க விரும்பியவனாக, எல்லாம் வல்லவரின் செயல்களை அவன் குற்றஞ்சாட்டுகிறான்; வசுலா, நான் உன்னிடம் ஒரு காரியம் சொல்வேன், என்னை நேசிக்கிற அனைவரும் அகமகிழச் செய்கிற ஒரு காரியம் அது; இந்த ஆண்டு என் மகிமைக்காக இருக்கும்; குறிப்பு: எனக்குப் புரியவில்லை. இல்லை, நீ முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை; என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்; குறிப்பு: இங்கே நான் புரிந்து கொண்டேன். நான் பல ஆன்மாக்களை இயேசுவிடம் திரும்ப ஈர்ப்பேன்; புனித மாமரி, தன் காட்சிகளின் மீது என் கவனத்தை ஈர்த்தார்கள். நான் லூர்திலும், பாத்திமாவிலும் தோன்றியது போலவே, கரப்பந்தாலிலும் தோன்றி, அதே போன்ற ஒரு செய்தியைத் தந்தேன்; கரப்பந்தால் பாத்திமா செய்தியின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஆனால் திருச்சபை அதிகாரிகளை குழப்பும்படி, சாத்தான் மீண்டும் அவர்களுடைய கண்களில் புழுதியை வீசிவிட்டான்; அவர்கள் என் காட்சிகளை மறுத்தலித்து, என் செய்தி உலகம் முழுவதும் பரவாமல் தடுக்கும்படி, அவன் அவர்களுடைய இதயத்தில் தன் விதைகளை விதைத்துவிட்டான்; குறிப்பு: அவர்கள் நடுவே என்று நான் புரிந்து கொண்டேன். வசுலா, எங்கள் இருதயங்கள் தங்களுக்குள் குத்தப்பட்டிருக்கிற முட்களால் காயப்படுத்தப்பட்டு, இரத்தம் வடித்துக் கொண்டிருக்கின்றன; குழந்தைகளே, உங்களுக்கு மேலாக நான் எப்படி அழுகிறேன்! வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; காயப்படுத்தப்பட்டுள்ள என் இருதயம், பறவை நாகத்தின் வாலால் நீங்கள் பெருக்கித் தள்ளப்படுவதைக் கண்டு பிளந்து போகிறது! புனித மாமரி, மிக அதிகமாக வேதனைப்பட்டார்கள். வசுலா, நான் உன் காதில் ஒரு காரியம் சொல்வேன், ஆம், கவனி; புனித மாமரி, என் காதில் ஒரு இரகசியத்தைக் கிசுகிசுப்பாக கூறினார்கள். சில சமயங்களில், நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்றும், நான் விழித்தெழப் போகிறேன் என்றும் நான் நினைக்கிறேன். வசுலா, இது ஏனென்றால், இயேசு உன் கண்களின் மீது ஒரு திரையிட்டு மறைத்திருக்கிறார் என்பதால்தான்; சரியான நேரத்தில், அவர் அந்தத் திரையை விலக்குவார்; மகளே, நீ அவரை நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இந்த முறையில், உன்னை வழிநடத்த, அவரை அனுமதி; மலரே, துயரப்படாதே; நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்; டூரினில், என் தேவாலயத்திற்கு வெளியே, நான் எப்படி காட்சி தந்தேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? ஆம்! புனித மாமரி, தன் தேவாலயம் இருக்கும் இடத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டும்படியாக, என் ஒன்றுவிட்ட சகோதரிக்கு ஒரு பிரம்மாண்டமான சுரூபமாகக் காட்சி அளித்தார்கள். ஆம், நான் உன்னை அழைக்கும்படி காட்சி தந்தேன்; அன்பிற்குரிய குழந்தாய், என் தேவாலயத்தில் நீ வரவேண்டும் என்று நான் விரும்பினேன்; என் குழந்தைகளை அழைக்கும்படி, நான் பல்வேறு இடங்களில் பலருக்குத் தோன்றுகிறேன்; நான் உங்கள் எல்லோரையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிவீர்கள் என்றால், உங்கள் எல்லோரையும் அணைத்து, என் இதயத்திற்கு அருகில், உங்கள் எல்லோரையும் ஈர்த்துக்கொள்ள நான் விரும்புகிறேன்; இந்த வெளிப்படுத்துதலின் பிரம்மாண்டமான தன்மையினால், திருச்சபை அதிகாரிகள் சந்தேகம் கொள்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு எண்ணம், ஒரு சோகமான எண்ணம் மட்டும் என் மனதில் ஓடியது. இயேசு இருமுறை கூறியது போல, இது மீண்டும் அவர்களுடைய ஞானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. சந்தேகங்கள், சந்தேகங்கள், சந்தேகங்கள்; பகுத்தறிவு வாதம், பகுத்தறிவு வாதம், பகுத்தறிவு வாதம்..... குழந்தாய், இயேசு பூமியில் தம் உடலோடு இருந்தபோது எப்படி நடத்தப்பட்டார் என்பதை நீ ஏன் மறந்து போகிறாய்? அவர் பரிசேயர்களால் துன்புறுத்தப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டார்; அவர்கள் அவரை நம்பவில்லை; மகளே, இன்று அவர்கள் கடவுளின் பல விண்ணகச் செயல்களை நம்பாமல் இருக்கிறார்கள்; மகளே, உன் யுகம் சோதோமைப் போல ஆழத்தில் விழுந்துவிட்டது; உன்னை ஒடுக்குவோர் பலராய் இருப்பார்கள் என்று இயேசு உன்னை எச்சரித்தார், ஆனால் உனக்கு வந்திருக்கக்கூடிய அனைத்திலும் மோசமான காரியத்திலிருந்து நான் உன்னை மூடிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்; வசுலா, வா, கடவுளின் அதிபரிசுத்த ஸ்தலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை மறக்காதே; இறைவன் தமது புனித இதயத்தில் உன்னை வைத்திருக்கிறார் என்பதை உனக்கு நினைவுறுத்தும் படியாக, நான் இதை உனக்குச் சொல்கிறேன்; தமது ஒளிக்குள், ஆம், 'சூரியனுக்குள்' ஊடுருவிச் செல்ல அவர் உன்னை அனுமதித்திருக்கிறார்; குறிப்பு: நான் அதை சூரியன் என்று அழைக்கிறேன். கடவுளின் மிகப் பரிசுத்த ஸ்தலத்தை நீ பார்த்திருக்கிறாய்; புனித மாமரியே, அந்நேரத்தில் இந்த 'ஒளிப்பந்து' மிகப் பெரியதாக இருந்ததால், அது பாத்திமாவில் காணப்பட்ட அதே ஒளிப்பந்துதான் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை! நீ அப்போது அறியாமல் இருந்தாய்; அன்பு உன்னை உயர்த்தி, தமது திரு இதயத்தில் உன்னை வைத்தது; இதை எங்கள் பிள்ளைகளில் எஞ்சியவர்களுக்கும் அவர் செய்வார்; நாங்கள் எங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டிருக்கிறோம்; கடவுள் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார்; மனம் வருந்தவும், தங்களை சீர்திருத்தவும், அவர் அவர்களுக்குக் கற்பிப்பார்; அவர் தம் வழிகளை அவர்களுக்குக் கற்பிப்பார்; அவர் நேர்மையால் அவர்களை உண்பிப்பார், அவர்கள் மனம் திருப்பப்படுவார்கள்; வா, என்னைக் கனப்படுத்து; வசுலா, உன் பரிசுத்த தாயைப் போல என்னை நடத்து; நீ என் குழந்தையாக இருக்கிறாய்; சரி, பரிசுத்த மாதாவே, நான் இப்போது ஒரு பரிசுத்த குடும்பத்தைக் கொண்டிருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். நான் நாளைக்காகக் கவலைப்பட்டேன். கவலைப்படாதே; நான் என் வார்த்தைகளை உன் காதில் கிசுகிசுப்பேன்; வசுலா, நான் எல்லோருக்கும் தாயாக இருக்கிறேன், வா; நான் அவர்களுடைய இருதயத்தை உணர்ந்தேன். இயேசு எவ்வளவு காயப்படுத்தப்பட்டிருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக நம் பரிசுத்த மாதாவும் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆம், என் வசுலா, என் கரப்பந்தால் செய்தியை மறுதலிப்பதன் மூலம், திருச்சபையின் அதிகாரிகள் மீண்டும் செய்து கொண்டிருக்கிற தவறால், நான் காயப்படுத்தப்படுகிறேன்; கரப்பந்தால் பாத்திமா செய்தியின் விரிவாக்கமாக இருக்கிறது; வசுலா, இப்போது ஓய்வெடு, நான் நாளைக்கு உன்னை அழைப்பேன்; சரி, புனித மாமரியே, நான் உங்களை வாழ்த்துகிறேன். மகளே, நீ விரும்பும்போது என்னிடம் வா; ஜனவரி 29,1988 நேற்றிரவு நான் என் மரணத்தை நான் எந்த முறையில் மரணமடைவேன் என்பதை, தத்ரூபமாக என் கனவில் கண்டேன்; நான் இறந்து கொண்டிருந்தபோது, இயேசு என்னைத் தாங்கிக் கொண்டிருந்தார். நான் நின்று கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தேன்; நான் என் முகவாயைத் தமது தோலின் மீது வைக்கும்படி அவர் செய்தார். நான் அவருடைய தலைமுடியை என் வலது கனத்தின் மீது உணர்ந்தேன். அவருடைய தலைமுடி பரிசுத்த அடக்கத்துகளின் படத்தில் உள்ளது போல, அவர் கொடுங்கொன்மைக்கு உட்பட்டிருந்தபோது இருந்தது போல, இருந்தது. எப்படி மரணத்தின் தீவிரத்தை குறித்து, அவர் என் ஆன்மாவை பெற்றுக்கொள்ளும்படி, அதை எப்படி என் உடலை விட்டு புறப்பட அனுமதிப்பது என்ற அறிவுரைகளோடு கலந்த ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை என் காதில் முணுமுணுப்பதன் மூலமாக, அவர் எனக்கு உதவி செய்து கொண்டிருந்தார்; அவ்வப்போது, அவர் ஒரு மருத்துவரைப் போலத் தோன்றினார். நான் கண்டதெல்லாமும் என்னை எச்சரிப்பதாக இருக்கவில்லை, நான் எந்த வேதனையையும் ஒருபோதும் உணரவில்லை. வசுலா, நாங்கள் ஒன்றாய் இருக்கிறோம், குழந்தாய்; இயேசுவும் புனித மாமரியும். என் மலரே, உன் நேரம் வரும்போது, உன் அறுவடையாளராகிய நான் உன்னைப் பறித்தெடுத்து, என் பேரின்பங்களின் தோட்டத்தில் உன்னை நட்டு வைப்பேன்; வசுலா, நீ கண்டது நிதர்சனத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே; அன்பிற்குரியவளே, இப்போது வந்து, மனம் வருந்து; நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; நான் மனஸ்தாபப்பட்டு, என் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டேன். எல்லாம் மன்னிக்கப்படுகிறது; நான் உனக்கு நேர்மையையும்... எப்படிப் பரிசுத்தமாய் வாழ்வது என்றும் கற்பிப்பேன்; இனி பாவம் செய்யாதே; புனித மாமரி. ஆம் வசுலா, உன் முழு ஆன்மாவோடும், உன் முழு மனதோடும், பலத்தோடும், கடவுளை நேசி; அவர் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறார்; ஆம், குழந்தாய், அவர் தீமையிலிருந்து எப்படி உன்னை விடுவித்தார் என்பதை ஒருபோதும் மறவாதே; அவர் ஒருபோதும் இளைப்பாறுவதில்லை, அவர் தம் இதயத்தை தம் கரத்தில் ஏந்திக்கொண்டு, அந்த ஆன்மா தாம் சொல்வதைக் கேட்கும் என்ற நம்பிக்கையில், ஏக்கத்தில், வீடு வீடாகச் செல்கிறார்; அந்தோ, மிகச் சில ஆன்மாக்கள் தான் அவர் சொல்வதைக் கேட்கின்றன. வசுலா, நான் எப்படிப் பணியாற்றுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா? இல்லை, அவ்வளவாக தெரியாது.... நான் ஜெபிக்கிறேன், ஆன்மாக்களின் மீட்பிற்காக ஜெபிக்கிறேன்; நான் உங்களை தீமையிலிருந்து மூடிப் பாதுகாக்கிறேன்; தன் குழந்தை தீமைக்கு உட்படாதபடி, அதை மூடிப் பாதுகாக்கிற எந்த ஒரு தாயையும் போல, நான் உங்கள் கவசமாக இருக்கிறேன்; நான் சாத்தானிடமிருந்து, அவனுடைய அவபக்தியின் வலைகளில் இருந்தும், மூடிப் பாதுகாக்கிறேன்; ஆன்மாக்கள் இயேசுவிடம் திரும்பி வருவதற்காக, நான் ஜெபிக்கிறேன்; நான் அவற்றை ஒன்று கூட்டி, அவர்களை ஆசீர்வதிக்கிறேன்; அவர்கள் என்னை காண்பதில்லை என்பது உண்மைதான், ஆனால் பலர் என்னை உணர்கின்றனர்; உங்களை உண்மையாகவே மகிழ்ச்சி அடையச் செய்கிற ஏதாவது ஒன்றை, என் சக்திக்கு உட்பட்ட ஏதாவது ஒன்றை, உங்களுக்குத் தர என்னால் முடிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆ, வசுலா, இந்த முறையில் என்னை மகிழ்விக்க முயற்சி செய். கீழ்ப்படி, கடவுளின் சித்தத்திற்குக் கீழ்ப்படி; பாஸ் குறிப்பு: கிரேக்க மொழியில் எப்படி? என்பது பொருள். கடவுள் ஏன் மற்றவர்களிடம் செல்லாமல், இந்தச் செய்தியோடு உன்னிடம் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளத் தேடாதே; குழந்தாய், ஏற்றுக்கொள், அவர் உன்னிடம் எதையாவது கேட்கும்போது, அவருக்குக் கீழ்ப்படி; எழுதுவதற்கு முன், நீ ஜெபிக்க வேண்டும் என்று அவர் கேட்ட ஜெபங்களை நீ ஜெபித்து வருகிறாயா? இல்லை, வசுலா, நான் உனக்கு உதவுவேன்; புனித மாமரியே, அவர் இப்போது என்னிடம் கோபமாய் இருக்கிறார், ஏமாற்றம் அடைந்தும் இருக்கிறார், இல்லையா? நான் என்னையே வெறுத்தேன். அவரை ஏமாற்ற நான் ஒருபோதும் விரும்பியதில்லை. வசுலா, இல்லை, அவர் கோபமாக இல்லை, ஏனெனில், நீ சொல்ல இயலாத அளவுக்கு பலவீனமானவள், இழிவானவள் என்பதை அவர் அறிவார்; அவநம்பிக்கைப்படாதே; இயேசு உனக்குக் கற்பித்து வருகிறார், நீ அவரை மகிழ்விக்கிறாய்; ஆனாலும், அவர் வேண்டுகோள்களுக்கு கீழ்படிந்து, இன்னும் அதிகமாக அவரை மகிழ்வி; உனக்குத் தீங்கு இழைக்கக்கூடிய எதையும், இயேசு ஒருபோதும் உன்னிடம் கேட்க மாட்டார்; இயேசு உன் மீட்பிற்காக இருக்கிறார், இயேசு என்றால், மீட்பர் என்று பொருள்; புனித மாமரியே, நான் உங்களை வாழ்த்துகிறேன். வசுலா, நான் உன்னை எப்போதும் ஆதரித்துக் காப்பேன்; என்னிடம் மீண்டும் வா, மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; ஜனவரி 30, 1988 வசுலா, வழி தவறிப் போய்விட்ட என் குழந்தைகளுக்காக நான் அழுகிறேன்; புனித மாமரி அழுகிறார்கள். அவர்களின் குரல் மிகவும் துயரமாக இருக்கிறது. இப்போது, அவருடைய நேர்மை மற்றும் பரிசுத்தத் தனத்தின் அப்பத்தைக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களுக்கு உணவூட்டும்படி, அன்பும் இரக்கமும் உங்களிடையே இறங்கி வந்தன; உங்களுக்கு நம்பிக்கையும் சமாதானமும் தரும்படி, அன்பு இறங்கி வருகிறது; வசுலா, நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; சிறு இடைவெளி. டூரினில் உள்ள என் கோயிலில், நீ என்னிடம் வருவாயா? அங்கே அடிக்கடி வந்து என்னைச் சந்தி; உன் பிரமாணிக்கத்தின் வார்த்தைப் பாடுகளை எனக்குத் தருவாயா? மகளே, என் திருமகனுக்கு மண ஒப்பந்தமாக இருக்கிற நீ, உன் வார்த்தைப் பாடுகளை எனக்குத் தருவாயா? பரிசுத்த தாயாரே, உங்கள் மாசற்ற இதயத்தை மகிழ்விக்க நான் விரும்புகிறேன்; நான் டூரினில் உங்களிடம் வருவேன், ஆனால் என் அறியாமையில், 'பிரமாணிக்கத்தின் வார்த்தைப்பாடுகள்' என்பது எதை குறிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் விரும்புகிற எதையும் நான் உங்களுக்கு தருவேன். என் அறியாமையில் நான் அவற்றை மீறாதிருக்கும்படி, நான் உங்களுக்கு எதை தந்து கொண்டிருப்பேன் என்பதை அறிந்து கொள்ள, தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். உன் முழு நேசத்தையும், என் மாசற்ற இருதயத்தின் மீதான பக்தியையும், அவருக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம், அவரை இன்னும் அதிகமாக நேசி; அவர் ஆன்மாக்களை மீட்கும்படியாக, அவற்றை அவருக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம், என் மகனை இன்னும் அதிகமாக மகிழ்வி; உன் பிரமாணிக்கத்தின் வார்த்தைப்பாடுகளை எனக்குத் தருவதன் மூலம், என்னை மகிழ்வி; இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம், நீ இதைச் செய்வாய், அவருடைய பிரதிபலிப்பாக இரு; அவருக்கு பிரமாணிக்கமாக இரு; வசுலா, நான் உனக்காக ஜெபிப்பேன்; நான் உனக்காகப் பரிந்து பேசுவேன்; இயேசுவுக்கு மண ஒப்பந்தமானவளே, எங்கள் இரு இதயங்களும் ஒரு முள் வளையத்தால் சூழப்பட்டுள்ளன; என் கரப்பந்தால் செய்தி அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது; என் அன்பிற்குரிய மகன் அருள் சின்னப்பர் என்னிடம் வந்து, என் மாசற்ற இதயம் மற்றும் இயேசுவின் தெய்வீக இதயம் ஆகியவற்றை உணர்வாராக, எங்கள் இருதயங்கள் எப்படி நொறுக்கப்பட்டும், பிளவுபட்டும் இருக்கின்றன என்பதை அவர் உணர்வாராக; அவை ஒரு பெரிய புண்ணாக மட்டுமே இருக்கின்றன; அவர்கள் தங்கள் இறைவனின் திரு இருதயத்தை நொறுக்கி விட்டார்கள், அவர்கள் ஒரு தாயாகிய என் மாசற்ற இருதயத்தை நொறுக்கி விட்டார்கள்; உன்னை மறுதலிக்கிறவர்கள் எல்லோருக்காகவும், நீ ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் குழந்தாய், நீ எவ்வளவு துன்புறுவாய்! கடவுளின் மகிமைக்காகத் துன்பப்பட, நான் மனதாய் இருக்கிறேன். இயேசுவும், நானும் உன்னோடு இருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்காதே; மலரே, நாங்கள் உன்னை தேற்றுவோம்; நீயே நேரடியாக இயேசுவின் செய்தியை எந்த திருச்சபை அதிகாரியிடமும் தர வேண்டியதில்லை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்; இயேசு உனக்காக சான்று பகர வேண்டியுள்ள சாட்சிகளை உனக்குத் தந்திருக்கிறார்; ஓ புனித மாமரியே, நாங்கள் இதுவரை செய்துள்ளது தவறானதாக இருந்ததா? ஆம், வசுலா, உன் நண்பர்கள் இயேசுவின் செய்திகளை வாசிக்க அனுமதித்து, அவர்களை மனம் திருப்பு, ஆனால் நீயே நேரடியாக போய் திருச்சபையின் எந்த அதிகாரத்திடமும் உன்னையே அறிமுகப்படுத்திக் கொள்ளாதே; இந்த வேலையை நீ உன் இரண்டு சாட்சிகளிடம் விட்டுவிட வேண்டும்; தாம் வேலை செய்யும் விதத்தை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு, இயேசு அவர்களுக்கு ஆன்ம வெளிச்சம் தந்துள்ளார்; நான் எப்போதும் அவர்களோடு இருப்பேன்; ஆம், நம் ஆண்டவர் காலகாலமாக நம் அடைக்கலமாக இருந்து வந்திருக்கிறார், அவருடைய நிலைத்த தன்மை கவசமும் பாதுகாவலுமாக இருக்கிறது; என் இறைவா, உம் குழந்தைகள் உமது மகத்துவப் பேரொளியை அனுபவித்து மகிழ்வார்களாக! என் செய்தி இழக்கப்பட்ட ஆன்மாக்களைக் குணப்படுத்தி, மனம் திருப்புகிறது; குறிப்பு: இப்போது பேசியவர் இயேசு. வசுலா, என் செய்தியை நம்பிக்கைக்குரியதாகச் செய்கிற அனைத்திலும் பெரிய புதுமை எது? மனம் திரும்புதலா? ஆம், என் வசுலா, என் குருவே, இப்போது நீயும் அறிந்திருக்கிறாய்; மகளே, என் அனைத்திலும் பெரிய புதுமை, மனம் திரும்புதலே, மகளே, இறுதியில் எங்கள் இதயங்கள் வெற்றி பெறும்; மகளே? குறிப்பு: நம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை பேசுகிறார்கள். சொல்லுங்கள், புனித மாமரியே, டூரினில் உள்ள என் கோவிலில் என்னிடம் வா; அப்போது நீ உன் வார்த்தைப் பாடுகளை எனக்குத் தருவாயா? தருவேன், புனித மாமரியே. உன்னை அங்கே காண்பதில் நான் அகமகிழ்கிறேன்; இஸ்மினியிடம் கூறு, உன்னுடன் உன் நண்பர்களையும் கூட்டி வா; நான் அவர்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பேன்; ஜனவரி 31, 1988 வசுலா, நாங்கள் இருவரும் உன் அருகில் இருக்கிறோம், சற்று நேரத்திற்கு முன்புதான், நான் சோபாவில் அமர்ந்திருந்தபோது, இயேசுவின் ஆடை என் வலது மேற் கரத்தின் மீது உரசிக் கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். அவர் தம் கரத்தை என் தோளின் மீது வைத்தார். நான் மீண்டும் உயிரோட்டம் உள்ள விதத்தில் அவருடைய பிரசன்னத்தை உணர்ந்ததாகத் தோன்றியது. நான் எழுத எழுந்தேன். புனித மாமரி, என் அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். நான் உன்னிடம் தேடும் வார்த்தைப்பாடு பிரமாணிக்கமாகும்; இயேசுவுக்கு விசுவாசமாக இரு, அவரை முதலானவராகக் கொண்டிரு; அவருடைய சித்தத்தைச் செய்ய மனதாய் இரு; புனித மாமரியே, நான் இன்னும் உணர்வதாகத் தோன்றவில்லை. நான் இதையெல்லாம் முழுமையாக உணரவில்லை என்று எனக்குத் தெரியும்... என் குழந்தாய், கடவுள் உன் கண்களை திரையிட்டு மறைத்திருக்கிறார்; அவர் உன்னில் செயலாற்றும் முறையை ஏற்றுக்கொள்; அவரை நம்பு; வசுலா, நான் என் கோயிலில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்; குறிப்பு: டூரினில் என் இல்லத்தில் நுழைபவர்கள் எல்லோரையும் நான் ஆசீர்வதிப்பேன். ஆம், என்னிடம் வருபவர்கள் எல்லோரையும் நான் ஆசீர்வதிப்பேன்; வசுலா, துன்பச் சோதனைகள் வரும்போது அதைரியப்படாதே; தொடர்ந்து ஜெபி; என்னிடம் வா, உன்னை துன்புறுத்துபவர்களை ஆசீர்வதி; உன்னை ஒடுக்குவோருக்காக ஜெபி; தீமைக்கு பிரதியாக அன்பு செலுத்து; இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்; பாத்திமாவில் எல்லோரும் விசுவாசிக்கும்படியாக நான் அதி அற்புதமான ஒரு புதுமையைச் செய்தேன், நீங்கள் அதை சூரிய புதுமை என்று அழைக்கிறீர்கள்; மலரே, அதனுள் நுழைய கடவுள் உன் ஆவியை அனுமதித்தார் என்பதை நீ அறிவாயா? அவருடைய வசிப்பிடத்தில் நீ நுழைந்திருக்கிறாய்; வசுலா, கடவுள் உனக்கு தந்திருக்கிற இந்த உபகாரத்தை நீ எவ்வளவு குறைவாக உணர்கிறாய்! ஆம், புனித மாமரியே, நான் ஒருபோதும் முழுமையாக உணர்வதில்லை. ஆனால் இதுதான் கடவுளின் சித்தம் என்றால், நான் காரியங்களை அவை இருக்கிறபடியே ஏற்றுக் கொள்கிறேன். ஆம், ஏனென்று ஒருபோதும் கேட்காதே. கடவுள் உனக்கு தரும் எல்லாவற்றையும் தயவோடு ஏற்றுக்கொள்; கடவுள் கேட்கும் காரியங்களுக்கு வரப்பிரசாதத்தோடு கீழ்ப்படி; உன் கண்களை திரையிட்டு மறைத்து வைத்திருப்பதன் மூலம், உன் மீது அவர் பொழிந்து கொண்டிருக்கும் எல்லா வரப்பிரசாதங்களாலும் உன் ஆன்மா சிறுக்குள்ளதாக ஆகிவிடாமல் பாதுகாக்கிறார்; கோடிக்கணக்கான பத்திச்சுவாலகர் என்கிற சம்மனசுக்குள், அவருடைய சிங்காசனத்தை இடைவிடாமல் சூழ்ந்து நின்று, அவரை ஆராதித்துக் கொண்டிருக்கிற அவருடைய அனைத்திலும் அதிபரிசுத்தமான ஸ்தலத்திற்குள் நுழைய நீ அனுமதிக்கப்பட்டிருக்கிறாய்; கடவுளின் பரிசுத்த வசிப்பிடத்திற்குள் நுழைய, அனைவரிலும் அதிக பரிசுத்தமான அவருடைய வானதூதர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்; மகளே, அவர் உனக்குச் செய்திருக்கிற மாபெரும் நன்மையை இப்போது நீ அறிந்துகொள்; புனித மாமரியே, முழுமையாக உணர்ந்து கொள்ளாததற்காக என்னை மன்னியுங்கள். நான் உனக்காகப் பரிந்து பேசுவேன்; பரிசுத்த தாயாரே, எனக்கு உதவி செய்வதற்காக உங்களுக்கு நன்றி. இயேசு இதோ இருக்கிறார்; வசுலா, நானும் பிரசன்னமாய் இருப்பேன்; குறிப்பு: டூரினில் புனித மாமரியின் இல்லத்தில் என்று நான் புரிந்து கொள்ளும்படி இயேசு செய்தார். வரும் எல்லோரையும் நான் ஆசீர்வதிப்பேன்; இப்போது வா, என்னை உணர், என்னை துய்த்து மகிழ், என்னைப் பார்த்து புன்சிரி; பேசு, நான் உன் வார்த்தைகளைக் கேட்பேனாக; வசுலா, உன் பரிசுத்த மாதாவாகிய என் தாயாரின் அருகில் என்னைத் தேடு; நாங்கள் சேர்ந்திருக்கிறோம்; நான் உன்னை நேசிக்கிறேன்;