இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் அன்பிற்குரிய மகளிடம் சந்தேகப்படாமல் தம்மை நம்பும்படி கூறி, அவளுடைய பலவீனத்தைத் தம் தோள்களில் தாங்குவதாகச் சொல்கிறார். "நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள்; உங்கள் அனைவரையும் என் தோள்களின் மீது என் வீட்டிற்குள் சுமந்து செல்வேன்" என்கிறார். நற்கருணையில் தம் பிரசன்னத்தைச் சந்தேகிக்க வேண்டாம் என்றும் அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 102: உங்கள் பலவீனத்தை நான் என் தோள்களில் சுமக்கிறேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் அன்பிற்குரிய மகளிடம் சந்தேகப்படாமல் தம்மை நம்பும்படி கூறி, அவளுடைய பலவீனத்தைத் தம் தோள்களில் தாங்குவதாகச் சொல்கிறார். "நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள்; உங்கள் அனைவரையும் என் தோள்களின் மீது என் வீட்டிற்குள் சுமந்து செல்வேன்" என்கிறார். நற்கருணையில் தம் பிரசன்னத்தைச் சந்தேகிக்க வேண்டாம் என்றும் அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 24/09/1989 - என் தோள்கள் உன் பலவீனத்தைத் தாங்கும்
04:55 26/09/1989 - பல கதவுகளின் திறவுகோள்கள் என்னிடம்
05:30 28/09/1989 - என்னை முழுமையாகச் சார்ந்திரு
14:15 29/09/1989 - நற்கருணையில் என் பிரசன்னம்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #தோள்களில்சுமக்கிறேன் #TrueLifeInGod102 #நற்கருணை

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 102. செப்டம்பர் 24, 1989. என் ஆன்மா ஆண்டவரில் மகிமை அடைகிறது. என் ஆன்மா உம் ஒளியில் மகிழும்படி என்னிடம் வந்து நீர் சொல்வதைக் கேட்கவும், உம்மை உணரவும் எனக்கு உதவி செய்யும். அன்புக்குரியவளே, என்னால் நேசிக்கப்படுவதை உணர். இனி பாவம் செய்யாதே. என் வாயினின்று நீ கற்றுக்கொண்டுள்ள அனைத்தையும் மதிப்பிடு. மகளே, தைரியம் கொள். நான் உன் அருகில் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள். உனக்குத் தரப்படும் என் வார்த்தை காலை மூடுபனி போலப் பரவும் என்று உண்மையாகவே நான் உனக்குச் சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி. என் பற்றேறிய மாசைகளை உனக்குள் ஊற்ற என்னை அனுமதி. என் பலிபீடம் உன் இறைவனாகிய எனக்காக எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ எனக்கு கட்டுப்பட்டு இருக்கிறாய். இருந்தாலும் இதைவிட அதிக சுதந்திரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை. தொடக்கத்திலிருந்தே நான் உன்மீது எதையும் ஒருபோதும் சுமத்தவில்லை. உன் சுதந்திரத்தை நான் எப்போதுமே மதித்து வந்திருக்கிறேன். நான் எப்படி ஒவ்வொரு எட்டாக, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் எனக்கு நெருக்கமாக அழைத்து வந்தேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? என் வசூலா, ஜெபி. நான் உனக்கு என் பலத்தையும், தொடர்ந்து நிலையாயிருப்பதற்கான சித்தத்தையும் தருவேன். ஏனெனில் என் தோள்கள் என் சிலுவையைச் சுமந்து களைத்துள்ளன. எனக்கு ஓய்வுதந்து, என் சிலுவையை என்னுடன் சுமந்துகொள்ளும் விருப்பமுள்ள என் அன்பின் பலி ஆன்மாக்கள் எனக்குத் தேவைப்படுகிறார்கள். நான் பித்தாகும் அளவிற்கு உங்களை அன்பு செய்கிறேன். உங்களில் யாரும் இழக்கப்படுவதை நான் விரும்பமாட்டேன். என் துன்பங்களை தாராளமுள்ள ஆன்மாக்களோடு பகிர்ந்து கொள்வது எனக்கு தேவையாயிருக்கிறது. என் வசூலா, இப்போது நீ என்னைப் புரிந்துகொள்கிறாயா? என்னிடம் வரும் வழி ஒடுக்கமானது, கடினமானது. அதற்கு இப்போது நீ எனக்குத் தருவதைவிட இன்னும் அதிகமான பரித் தியாகங்களைத் தரவேண்டியிருக்கும். ஆனாலும் நீ தொடர்ந்து செல்ல நான் உதவுவேன். சில சமயங்களில் நிகழ்வது போல நீ பயப்படாதே. நான் உன்னை அச்சிப்புக்கு அழைத்துச் செல்கிறேன். நான் எப்போதும் உனக்கு முன்பாக இருக்கிறேன். ஆகவே என்னைத் தடுக்காதே. உன்னை என்னிடம் கையளித்துவிடு. என் அன்பு எப்படி இரட்சிக்கிறது என்பதை நினைவில் வை. என்மீது ஆசையொள். என்னை முதலானவராகக் கொள். ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதே. உன்னை சோதிக்கும்படி பசாசு கால் வைக்க அவனுக்கு இடம் தராதே. சந்தேகப்படுவதை நிறுத்து. ஏனெனில் இன்னும் எவ்வளவு காலம் நீ சந்தேகப்படப் போகிறாய்? மலரே, நீ உடையக்கூடியவள், பலவீனமானவள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னை நம்பு. நான் உன் பலவீனத்தை என் தோள்களின் மீது தாங்கிக் கொள்வேன். என் இல்லம் வரை வழி முழுவதும் நான் உன்னைத் தூக்கிச் செல்வேன். உன் இறைவனாகிய நான் உன்னை என் சொந்த மகளாக சுவீகாரம் செய்துள்ளேன். நீ உண்மையாகவே என்னுடையவள். என் மகிழ்ச்சியை உணர். நான் பரிவன்பால் உன்னை உயர்த்தியிருக்கிறேன். நீ இருக்கிறபடியே உன் எல்லாப் பாவங்களோடும், உன் பலவீனத்தோடும், உன் குற்றங்களோடும் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் இரக்கம் எப்படி காலங்காலமாகக் கடந்து வருகிறது என்றும், உங்கள் பாவங்களையும், உங்கள் குறைபாடுகளையும் மீறி நான் எப்படி உங்களை முழுமையாக மன்னிக்கிறேன் என்றும், என் விண்ணரசை நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும்படி உங்கள் அனைவரையும் எப்படி நான் என் சுவீகார மக்களாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன் என்றும் உலகம் முழுவதற்கும் காட்டும்படி இப்படி செய்திருக்கிறேன். என் அன்பு தலைமுறை தலைமுறையாகக் கடந்து வருகிறது. அது எப்போதும் அப்படிக் கடந்து வரும். ஆகவே என் கையைப் பிடித்துக்கொண்டு என் வீட்டிற்கு உங்கள் அனைவரையும் நடத்திச் செல்ல என்னை அனுமதியுங்கள். இப்போது நீ உள்ளபடியே என்னிடம் வா. என் குழந்தாய், நான் உன்னை அன்பு செய்கிறேன். நீ இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள். நான் உங்கள் அனைவரையும் என் தோள்களின் மீது அன்போடு என் வீட்டிற்குள் சுமந்து செல்வேன். செப்டம்பர் 26, 1989. என் ஆண்டவரா? நான்தான். ஒருபோதும் சந்தேகப்படாதே. பல கதவுகளுக்குரிய திறவுகோள்களை வைத்திருப்பவர் நான்தான் என்பதை நினைவில் கொள். நான் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றையும் சரியான நேரத்தில் திறப்பேன். என் குழந்தாய், நான் சொல்வதைப் புரிந்துகொள்கிறாயா? நீ கவலைப்படத் தேவையில்லை. நீ அவசரப்படத் தேவையில்லை. ஆண்டவராகிய நான் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் நிறைவேற்றுவேன். செப்டம்பர் 28, 1989. என் ஆண்டவரே, உம் எண்ணங்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. நான் உம் கண்களுக்குப் பிரியமானவளாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். சில சமயங்களில் நீர் என்னிடமிருந்து மறைந்துகொள்வதாக நான் உணர்கிறேன். அதற்கு காரணம் என் பாவங்களா? வசூலா, உன்மீது எனக்குள்ள அன்பு ஒருபோதும் வற்றிப் போகாது. அதிகமாக ஜெபி. நான் உனக்குத் தந்துள்ள ஜெபங்களை அவ்வப்போது ஜெபிக்கும்படி நான் உனக்கு நினைவுறுத்தப்படு. நான் உனக்காகத் தேர்ந்தெடுத்துள்ள சங்கீதத்தை ஜெபி. குறிப்பு: சங்கீதம் 86ஆம் அதிகாரம். உன்மீது சுதந்திரமுள்ளவராகவும், உன்னை ஆண்டு நடத்துபவராகவும் இருக்க என்னை அனுமதி. ஆகவே அஞ்சாதே. இப்போது என்னை முழுமையாக சார்ந்திரு. வேறு யாருமின்றி நீ என்னோடு மட்டும் இருக்கும்படியாக நான் உன்னை உயர்த்தியிருக்கிறேன். உன்னை நெருங்கி வரும் என் எல்லாப் போட்டியாளர்களையும் நான் வேரோடு அழித்து விடுவேன். உன் மனதை என்னிடமிருந்து அகற்றி உன் கவனத்தை சிதறடிக்க நான் அவர்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். நீ இப்போது என்னுடையவள். என்றென்றைக்கும் நீ அப்படியே இருப்பாய். என்னிடம் வந்து மௌனத்தில் என்னை ஆராதி. இப்போது என்னை முழுமையாக சார்ந்திரு. அது என்னை மகிழ்விக்கிறது. நான் உனக்குக் கற்பித்துள்ளது போலவே என்னை சார்ந்திரு. மௌனத்தில் தியானி. என்மீது தாகம் கொள். நான் அதை விரும்புகிறேன். என்மீது ஆசைகொள். உன் தேவனாகிய என்மீது இடையறாத தாகம் கொண்டிரு. எல்லா நேரமும் ஆச்சரியப்படுவதை நிறுத்து. நான் ஆண்டவர்களுக்கெல்லாம் ஆண்டவராக இல்லையா? என் வேலைகளைப் பற்றி சந்தேகம் கொள்ளாதே. உன் திறன் எவ்வளவென்று நான் அறிவேன். ஆகவே அளவற்ற விதமாக என்னை அன்பு செய். மற்றவர்களுக்காக மனமுவந்து உன்னைப் பலியாக்கு. எனக்குப் பிரமாணிக்கமாயிரு. என் ஆவி உன்மீது இருக்கிறது. அது எப்போதும் உன்னை வழிநடத்தும். என்னிடம் பேசு. ஏன் என்னை அலட்சியம் செய்கிறாய்? உன் கவலைகள் என் பிரசன்னத்தைவிட அதிக முக்கியமானவையா? என்மீது சாய்ந்துகொள். நீ சாய்ந்துகொள்வதற்காக நான் கோடிக்கணக்கான தடவைகள் உனக்கு என் தோள்களைத் தருகிறேன். வா, உன் முகம் மகிழ்ச்சியால் பிரகாசமாக இருப்பதைக் காண நான் விரும்புகிறேன். நான் உனக்கு என்ன தந்திருக்கிறேன் என்று பார். ஒரு சூரியகாந்தியைப் போலிரு. உன் முகத்தை என்னை நோக்கித் திருப்பி என் ஒளியைப் பின்பற்று. நான் என் முகத்தை உன்னிடமிருந்து மறைத்துக் கொள்ளவில்லை. மலரே, நீ உன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாலே போதும். உன் கவலைகள் உன்னைவிட்டு நீங்கிவிடும். உன் கவலைகள் உன்னைவிட்டு நீங்கிவிடும். என்னில் நம்பிக்கையொள். என்னில் நம்பிக்கை கொள். எனக்கு எல்லாவற்றையும் ஒப்புக்கொடு. நான் உனக்கு உதவுவேன். வா, இந்த எல்லாப் பரித் தியாகங்களும் வீணாய்ப் போகாது. உன் இயேசு உன்னை அன்பு செய்கிறார். குறிப்பு: ஒரு கணம் அமைதி நிலவியது. இப்போது என்னிடம் நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லையா? ஆம், என் ஆண்டவரே. நான் சொல்லவேண்டிய காரியம் உள்ளது. நீ ராப்பகலாக எப்போதும் என் மனதில் இருக்கிறீர். நான் இரவு முழுவதும் உம்மை தியானிக்கிறேன். உம்மை என் மனதில் கொண்டிருந்தபடி என் நாளை முடிக்கிறேன். உம்மை என் மனதில் கொண்டிருந்தபடி என் நாளைத் தொடங்குகிறேன். என் ஆன்மா உம்மோடு ஒட்டிக்கொள்கிறது. அப்படியானால் மகிழ்ச்சிகொள். உன் இதயமும் ஆன்மாவும் அக்களிக்கட்டும். உன் அரசர் உன் வெறுமையிலும் உன் வறுமையிலும் உன்னிடம் வந்தார். உன் அரசர் உன் நிர்வாணத்தை தம் அன்பாலும் தம் சமாதானத்திலும் மூடினார். அவர் தம் பரிவன்பால் உன்னைத் தம் மிக விலையேறப்பற்ற அணிகலன்களைக் கொண்டு கம்பீரமாக அலங்கரித்தார். நான். நான் உன் தலையை என் முள்முடியால் அலங்கரிக்கவில்லையா? என் அணிகலன்களை நான் உன்னிடம் ஒப்படைக்கவில்லையா? நாம் என் சிலுவையை நம் திருமணப் படுக்கையாகப் பகிர்ந்து கொள்ளவில்லையா? என் அழகை நான் உனக்கு வெளிப்படுத்தவில்லையா? நான் எனக்கு உன்னைத் திருமண ஒப்பந்தம் செய்திருக்கிறேன். மகளே, பேசு. என் ஆண்டவரே, நான் என்ன சொன்னாலும் அது போதாததாய் இருக்கும். என் பரிதாப நிலையின் மீது இரக்கமாயிரும். நான் உம் அன்பில் நம்பிக்கை வைக்கிறேன். இன்னும் அதிகமாக பரித் தியாகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன். அப்படியானால் உன் செவிகளைத் திறந்து என் திருமணப் பாடலைக் கேள். நீ எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். மண்ணாலும் சாம்பலாலும். உன் தலையை உயர்த்தி என்னைப் பார்ப்பதன் மூலம் உன் இருளிலிருந்து வெளியே வா. நானே உன்னை உயிரோடு எழுப்பியவர். நானே உன் ஆன்மாவை அமைதியிலும் நிசப்தத்திலும் காப்பாற்றுபவர். என் கரங்களில் மூடி நான் உன் ஆன்மாவைப் பாதுகாக்கிறேன். நீ உன் ஆன்மாவை என்னிடம் உயர்த்தும்படி நான் உனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறேன். நான் உனக்கு என் அளவற்ற இரக்கத்தைக் காட்டியுள்ளேன். என் கிண்ணத்திலிருந்து உனக்குப் பருகத் தந்து உன்னை ஆதரித்திருக்கிறேன் இல்லையா? மகளே, என்னை மகிழ்விக்கத் தேடு. என் வழிகளைத் தேடு. என் வழிகள் புனிதமானவை. ஆகவே எதைப் பற்றியும் முறையிடாதபடி எச்சரிக்கையாயிரு. நான் எப்போதும் உன் அருகே இருந்து உன்னை வழிநடத்தி வந்திருக்கிறேன். என் வசூலா, எப்போதும் இதய எழுமையில் என்னிடம் வா. ஏனெனில் பூமியின் மீது உன் நாட்கள் கடந்து போகும் ஒரு நிழல் மட்டுமே. அது மங்கி மறைந்து போகும் ஒரு மேலோட்டமான கடந்து போதல் மட்டுமே. பூமியின் மீது எதுவும் என்றென்றும் நிலைத்திருப்பதில்லை. ஆகவே என் சட்டங்களை அனுசரி. என் கட்டளைகளைக் கடைப்பிடி. நான் என்னுடைய மிக விலையுயர்ந்த அணிகலனை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேன். அதைப் பாதுகாத்துக்கொள். அதை அரவணைத்துக்கொள். அதை இறுகப் பற்றிக்கொள். என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவை உன் ஆன்மாவின் இனிய வாதையாக இருக்கும். என் சிலுவையைப் பகிர்ந்து கொள்வதில் உன் ஆவல் என்னில் உள்ளது போல உன்னிலும் ஒரு உக்கிரமுள்ள தீச்சுவாலையாக இருக்கவேண்டும். என் சிலுவைக்கான உன் தாகம் என்னுடைய தாகத்தைப் போல் வளரவேண்டும். நான் எப்படி உனக்கு என் அன்பைக் காட்டுகிறேன் என்பதை நீ இப்போது புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆம், துன்புற உன்னை அனுமதிப்பதன் மூலம். ஆன்மாவே, உன் வறட்சியைப் பொங்கிப் பாயும் நீரூற்றாக நான் மாற்றியிருக்கிறேன். என்மீது உனக்கிருந்த பகைமையைக் கனிவுள்ள அன்பாகவும், உன் அசட்டைத்தனத்தை என் சிலுவையின் மீதான பக்தி ஆர்வமாகவும், உன் மந்தநிலையை உன் வீட்டின் மீதும், உன் தந்தையின் மீதும் உனக்குள்ள ஏக்கமாகவும் நான் மாற்றியிருக்கிறேன். ஆன்மாவே, அக்களிப்பாய். உன் அரசர் உன் உடலை மூடியிருந்த அடக்கத் துகிலை அகற்றி லாசரைத் தாம் எழுப்பியது போல உன்னை சொந்தமாகக் கொண்டிருக்கும்படி உன்னை உயிரோடு எழுப்பியிருக்கிறார். ஓ, இயேசுவே, தேர்ந்தெடுப்பதில் நீர் அதிகம் பகத்துணர்பவராக இல்லை. என் தேர்வு என்னுடையது. நீ என் விண்ணரசை என்னோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் என் மகிமைக்காகவே. பார், என் புறாவே, நீ இப்போது சுதந்திரமாக இருக்கிறாய். நான் உன் எஜமானராக இருக்கிறேன். நீ எப்போதுமே என்னிடம் வருவாய். என் புனித இதயத்தில் நீ எப்போதும் ஓய்வுகொள்வாய். என் திரு இருதயம் உன் கூடாகவும் புகழிடமாகவும் இருக்கிறது பார்த்தாயா? உன் எஜமானர் யார்? அவர் உன்னிடம் என்ன தேடுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க நான் உன்னை பயிற்றுவித்திருக்கிறேன். உன் எஜமானரும் அரசருமானவருக்கு உன்னிடமிருந்து இப்போது அன்பு தேவைப்படுகிறது. வா, என் அன்புக்கு பதிலன்பு காட்டு. ஒரு கண்ணாடியைப் போல் என் அன்பை பிரதிபலி. நீ என்னை நேசிக்கும்படி நான் அன்பின் காரணமாக உன்னைப் படைத்திருக்கிறேன். இதை ஒருபோதும் மறக்காதே. செப்டம்பர் 29, 1989. அல்லேலூயா. நான் ஆண்டவரை அழைக்கும் ஒவ்வொரு தடவையும் நான் சொல்வதைக் கேட்க அவர் என்னை நோக்கித் தாழ குனிகிறார். என் ஆண்டவரே, என் பார்வை உன்மீது பதிந்துள்ளது. நான் இடைவிடாமல் உம்மைப் பற்றி தியானிக்கிறேன். நீரே என் உணவு. என் அப்பம். என் திராட்சை ரசம். இந்தப் பகைமை உள்ள உலகத்தில் எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை. என் ஆன்மா உமக்காகத் தாகம் கொள்கிறது. என் முதுடுகள் உமக்காக வறண்டு வெடித்துள்ளன. நீரே என்னைத் தேடி என் இழைத்தன்மையில் என்னைக் கண்டடைந்த என் இறைவனாய் இருக்கிறீர். உம் திரு இருதயத்தில் தங்கியிருக்க என்னை அனுமதியும். நான் உன்னை ஒருபோதும் நிராகரிக்கமாட்டேன். நீ என்னைப் பெற்றுக் கொள்ள வரும் ஒவ்வொரு முறையும் என் திரு இருதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. நான் வெண்ணிற அப்பத்தில் என்னையே மிகச் சிறியவராக ஆக்கியிருக்கிறேன். என்னை உட்கொள்வதில் நீ என்னை ஏற்றுக் கொள்கிறாய். இந்த முறையில் என்னை ஏற்றுக் கொள்வதில் நீ உண்மையை ஒப்புக்கொள்கிறாய். நானும் நீயும் அப்போது ஒன்றாய் இருக்கிறோம். நீ என்னுடன் ஐக்கியத்தில் இருக்கிறாய். உன் தேவனாகிய என்னோடு ஒன்றாக இணைந்திருப்பதைவிட அதிக இன்பமானது வேறு என்ன இருக்கிறது? இதைவிட மாசற்றதும் பரிசுத்தமானதுமாகிய சந்திப்பு வேறு என்ன இருக்கிறது? உன் இறைவனாகிய நான் என் படைப்பாகிய உன்னை சந்திக்கிறேன். உன் மீட்பராகிய நான் என்னால் மீட்கப்பட்டவளாகிய உன்னை சந்திக்கிறேன். இயேசுவாகிய நான் பித்தாகும் அளவுக்கு உன்னை அன்பு செய்கிறேன். என் அன்பை சந்தேகித்து இந்த மாசற்ற பரிசுத்தமான அன்பை அசுத்தமாக்க உங்களில் சிலரால் எப்படி முடிகிறது? உங்களில் பெரும்பாலானோரால் பரிசுத்த அப்பத்தில் என் பரிசுத்த பிரசன்னத்தை சந்தேகப்பட எப்படி முடிகிறது? என் தேவ நற்கருணை தரையில் விழவோ அல்லது அது பரிசுத்தமற்றது என்பதைப் போல கையாளப்படவோ கூடாது. நான் உங்களுக்கு என்ன தருகிறேன் என்பதையும் உங்களில் நீங்கள் யாரைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதையும் மட்டும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றால் இடைவிடாமல் என்னை வாழ்த்திப் போற்றிக் கொண்டே இருப்பீர்கள். பாருங்கள், மேலிருந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற என் தூதர்களும் கூட தங்களால் அல்ல, உங்களால் மட்டுமே உண்ண முடிகிற இந்த உணவின் மீது ஆசை கொள்கிறார்கள். இருந்தும் உங்களில் பலர் அதன் முழுமையை உணர்ந்தது போலத் தோன்றவில்லை. ஒவ்வொரு தேவ நற்கருணைப் பேழைக்குப் பின்னும் நான் அன்பின் கைதியாக நீங்கள் வருவதைக் காணும் நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வனாந்தரத்தில் இன்னும் வழிதப்பி அலைந்து கொண்டிருக்கிற அனைவரும் என்னை அணுகி வாருங்கள். மாசற்றவர்களாகவும் சுத்தமானவர்களாகவும் என்னிடம் வாருங்கள். நான் உங்களில் அக்களிக்க என்னை அனுமதியுங்கள். உங்கள் பாவங்களை அடையாளம் கண்டு அவற்றிற்காக மனம் வருந்துவதன் மூலம் என் இதயத்திற்கு மேலும் அதிக மகிழ்ச்சி தாருங்கள். ஏன் பாவ சங்கீர்த்தனம் செய்யவேண்டும்? என் ஆன்ம குருவிடம் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை என்று சொல்லாதீர்கள். பாவ உணர்வை இழந்துவிட்டவர்களில் ஒருவராக இராதீர்கள். நீங்கள் உத்தம தனத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களில் சிலர் தங்களில் எந்தக் கரையும் இராதது போலவும் தாங்கள் உத்தம தனம் அடைந்துவிட்டது போலவும் நடந்து கொள்கிறார்கள். தாழ்ச்சியோடு இருங்கள். இதய நேர்மையோடு ஜெபித்து உங்கள் பாவங்களைக் கண்டுபிடிக்க என் உதவியைக் கேட்பீர்கள் என்றால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிப்பீர்கள். என் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து என் போதனைகளைப் பின்பற்றி என் பரிசுத்த திரு வருட்சாதனங்களைக் கனப்படுத்துவோர் பேறு பெற்றவர்கள். முழு விசுவாசத்தோடு என்னை உண்டு பருகும்படி என்னிடம் வருபவர்கள் அனைவரும் பேறு பெற்றவர்கள். நான் பரிசுத்தர். ஆகவே மிகப் பரிசுத்தமான இந்த நேரத்தில் உங்கள் ஆன்மாவுக்கு உயிரளிக்கும் என் அருள் வரங்களை உங்கள் மீது நான் பொழியும்படி பரிசுத்தத்தனத்துடன் என்னைக் கையாளுங்கள். நான் என் செல்வங்களை மறைத்துக் கொள்ளவில்லை. உங்களில் மிகச் சிறியவர்களுக்கும் கூட நான் மிகத் தாராளமாக அவற்றைத் தருகிறேன். வா, நான் உங்களோடு இருக்க எவ்வளவோ ஆவலாய் இருக்கிறேன். ஆகவே உங்கள் ஜெபங்களை அவசரமாகச் சொல்லாதீர்கள். அவற்றில் பொறுமையற்றவர்களாய் இராதீர்கள். தேவ பக்தியை நிந்தித்துத் தள்ளாதீர்கள். என் அதிகாரப்பூர்வ கட்டளையைச் சிந்தித்து தியானியுங்கள். உங்களால் என்னைக் காண முடிவதில்லை என்றாலும் உங்கள் அனைவரின் மீதும் என் மூச்சை ஊதி உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தபடி என் கரம் உங்கள் அனைவர் மீதும் இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்றாய் இருங்கள். பிற்பாடு: துன்புற வேண்டியிருப்பது எனக்கு நல்லது. உம்முடைய திருச்சட்டங்களை கற்றுக் கொள்வது இன்னும் நல்லது. குறிப்பு: சங்கீதம் 119ஆம் அதிகாரம் இறைவார்த்தை 71: அன்பினால்தான் நீர் என்னைத் துன்புற செய்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் என்னை உம் சந்ததியாக ஆக்கிக் கொண்டதால்தான் என் மீது உம் அன்பைத் தாராளமாகப் பொழிகிறீர். நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களைப் பயிற்றுவிக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆண்டவரே, நீர் சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கிறீர். என் வசூலா, கடந்து போகும் ஒவ்வொரு நாளும் உன்னை எனக்கு அதிக நெருக்கமாகக் கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் நான் என் அன்பின் சாட்சியங்களை உனக்குத் தருகிறேன். இம்முறையில் நானே என்னை உனக்கு வெளிப்படுத்துவவராக இருக்கிறேன். ஆனால் உன் தலைமுறை உனக்கு ஒரு பெரும் தொற்றுநோயாக இருக்கிறது. இந்த தலைமுறையின் இந்த தொற்றுநோய் பகுத்தறிவு வாதம் என்று அழைக்கப்படுகிறது. பகுத்தறிவு வாதம் மரண ஆபத்துள்ளது. பகுத்தறிவு வாதம் இருளின் அரசனிடமிருந்து இறங்கி வருகிறது. இருளில் வசிக்கும் அனைவரும் மற்ற நோய்களிடையே இந்த நோயையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னிடமிருந்து வருவது எல்லாம் ஒளியினின்று வருகிறது. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இருண்ட உலகத்தை ஒளிர்விக்கும்படி என் தெரிந்துகொள்ளப்பட்ட ஆன்மாக்களிடம் நான் இறங்கி வரும்போது அவர்கள் வழியாக தீய செயல்கள் செய்பவர்கள் அனைவருக்கும் என் ஒளி தொந்தரவாக இருக்கிறது. என் ஒளி அவர்களுக்கு எவ்வளவு அதிகத் தொந்தரவாக இருக்கிறது என்றால் தங்கள் தீய குணமும் அவர்களுடைய நிர்வாணமும் எல்லாக் கண்களும் காண வெளியாக்கப்படுவதால் அவர்கள் கொலை செய்யவும் தயாராய் இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர் செயல் என்னிடமிருந்து தப்பி ஒளிந்து கொள்ள முயன்ற ஆதாம் ஏவாளின் செயலிலிருந்து அதிகம் வேறுபட்டதாக இல்லை. ஆம், என் ஒளியின் குழந்தாய், நீ எனக்கு சொந்தமானவள். அதனால்தான் இருள் உன் எதிரியாகவும் உன்னைத் துன்புறுத்துபவனாகவும் இருக்கிறது. இருளின் சந்ததியார் எப்போதும் என் சந்ததியாரைத் துன்புறுத்துவார்கள். என் ஒளி அவர்களுக்கு தொந்தரவு தருகிறது. உங்கள் நாடுகளின் மீதுள்ள ஒளியின் நேரம் இந்த மக்களைக் கடும் அச்சம் கொள்ள செய்கிறது. ஏனெனில் அவர்கள் கெட்ட நடத்தையைக் கருத்தரிப்பதிலும் பகுத்தறிவு வாதத்தைப் பெற்றெடுப்பதிலுமே ஒரு வாழ்நாளை செலவழித்தார்கள். ஒளியின் நேரம் கல்லறைகளில் நோய்வெடுக்கும் இந்த இருண்ட ஆன்மாக்களுக்கு ஒரு இடைவிடாத வாதையாக இருக்கிறது. ஆனால் நான் என் ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கச் செய்வேன். என் ஒளி இந்த இருளைத் தொலைக்கும். என் வெப்பக் கதிர்கள் பயனற்றுக் கிடக்கும் அனைத்தையும் உயிர்ப்பிக்கும். இருள் இனி தன் நிழலை நாடுகளின் மீது வீசாது. என் ஒளி அவர்களுடைய இளம் மொட்டுக்களை வளப்படுத்தும். என் கதிர்கள் அதன் மலர்களைத் திறக்கும். பூமியின் கிளைகள் மீண்டும் பசுமையாகும். என் குழந்தாய், ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே. அன்பு உன்னை நித்தியமாக அன்பு செய்கிறது.