இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் மக்களை விழித்தெழவும், தடைகளை அகற்றி இதயங்களைத் திறக்கவும் அழைக்கிறார்; உங்கள் காயங்கள் குணமாகக்கூடியவை, ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன் என்கிறார். தம் திருச்சபை காயீன்களால் நிறைந்துள்ளது, வெளிச்சடங்குகளுக்கே கவனம் தரப்படுகிறது என்று வருந்துகிறார். அன்னை மரியா மனந்திரும்பவும் அன்பில் வாழவும் அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 92: என் திருச்சபை காயின்களால் நிரம்பியுள்ளது - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் மக்களை விழித்தெழவும், தடைகளை அகற்றி இதயங்களைத் திறக்கவும் அழைக்கிறார்; உங்கள் காயங்கள் குணமாகக்கூடியவை, ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன் என்கிறார். தம் திருச்சபை காயீன்களால் நிறைந்துள்ளது, வெளிச்சடங்குகளுக்கே கவனம் தரப்படுகிறது என்று வருந்துகிறார். அன்னை மரியா மனந்திரும்பவும் அன்பில் வாழவும் அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 01/05/1989 - மே 19 கூட்டத்திற்கான செய்தி: விழித்தெழுங்கள்
16:36 12/05/1989 - என்னை உணர்ந்து தியானி
17:03 மார்ட்டிக்னி மே 19 கூட்டச் செய்தி
19:42 13/05/1989 - எளிய உள்ளத்தோர் பேறுபெற்றவர்கள்
24:31 15/05/1989 - சமாதானத்தையல்ல, வாளையே கொணர வந்தேன்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #திருச்சபைகாயீன்கள் #மார்ட்டிக்னிசெய்தி #மனந்திரும்புதல்

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 92. மே 1, 1989 ஆண்டவரே, மே 19 மறு ஒன்றிப்புக் கூட்டத்திற்கான உம் செய்தியை எழுத விரும்புகிறீரா? நீ தயாராயிருக்கிறாயா? நான் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை, ஆனால் என்னைத் தயார் செய்ய உம்மால் முடியும். கேள், உனக்குக் கொடுக்கப்படும்; என் ஆண்டவரே, உம் குரலைக் கேட்டு எழுத என்னைத் தயார் செய்யும்படி உம்மிடம் கேட்கிறேன். அப்படியானால், உன் செவியைத் திறந்து, கவனமாகக் கேள்; எழுது; சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக; நானே ஆண்டவர், எம்மானுவேல், இந்தப் பலவீனமான கருவியின் வழியாக என்னையே வெளிப்படுத்துகிற அதிபரிசுத்தர்; சிறியவர்களே, எவ்வளவோ உயர்வாக ஆதரிக்கப்பட்டிருக்கிற மக்களினமாகிய உங்களிடம் நான் வருகிறேன்; உங்கள் சொந்தக் கண்களுக்கு முன்பாக என் திரு இருதயத்தை வெளிப்படுத்தியபடி நான் உங்களிடம் வருகிறேன்; என் திரு இருதயம் பரிசுத்தமானது, மாசற்றது, அன்பால் நிரம்பியது; ஆகவே, கடந்த காலத்தில் இருந்தது போல விழித்தெழுங்கள், உங்கள் மந்த நிலையிலிருந்து விழித்தெழுங்கள், விழித்தெழுந்து, என்னை உணருங்கள்; என் ஆவி இடைவிடாமல் எப்போதும் வெகு தாராளமாக உங்கள் மத்தியில் பொழியப்படுகிறது, இருந்தாலும், உங்களில் மிகப் பலர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்... ஆண்டவராகிய நான் உங்களைப் படைத்ததிலிருந்தே இறைவாக்கினர்களை உருவாக்கி வருகிறேன், ஆனாலும், என் சொந்த மக்கள், தாங்கள் எப்போதும் செய்து வந்ததையே இப்போது மீண்டும் செய்கிறார்கள்... அவர்கள் இன்னும் கூட என் எல்லா இறைவாக்கினர்களையும் துன்புறுத்துகிறார்கள், அவர்களை ஊர் விட்டு ஊருக்கு துரத்தியடிக்கிறார்கள்; ஆபேலின் பரிசுத்த இரத்தம் இடைவிடாமல் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது; இந்த மக்கள் நீதியான சட்டங்களைத் தருமாறு என்னிடம் கேட்கிறார்கள், நான் அவர்கள் அருகில் இருக்க வேண்டுமென்று அவர்கள் ஏங்குகிறார்கள், ஆனால் நான் என் வரப்பிரசாதத்தின் பரிசுத்த ஆவியை அவர்களிடம் அனுப்பும்போது, அவர்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள், கேட்க மறுத்து விடுகிறார்கள், தங்கள் இதயங்கள் கருங்கல்லைப் போல் மாறும்படி விட்டுவிடுகிறார்கள்; அவர்கள் ஒன்றாகக் கூடி, ஒரு தீய பறவையை ஒருவன் விரட்டுவது போல என் அருளின் பரிசுத்த ஆவியானவரை வெளியே துரத்தி விடுகிறார்கள்; என் திரு இருதயம் வேதனையில் இருக்கிறது... உங்களைத் திறங்கள்! உங்களைத் திறங்கள்! குறிப்பு: இயேசு சத்தமாகக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார். என் வழியை மறிக்காதீர்கள்! நீங்கள் பட்டினிக்கு உள்ளாகியுள்ள இந்த மக்கள் என்னை வந்தடைய முடியாதபடி தடுக்க மட்டுமே செய்கிற இந்தத் தடைகளை அகற்றுங்கள்; நான் உங்களைக் குணமாக்கவும், உங்களைத் தேற்றவும் உங்களிடம் வந்திருக்கிறேன்; உங்களுக்கு சமாதானமும், அன்பும் கொண்டுவர நான் வந்திருக்கிறேன்; இந்த நிலத்தை வளப்படுத்தி, அந்த மண்ணைப் பண்படுத்த நான் வந்திருக்கிறேன்; என் திருப்பெயர் பரிசுத்தமானது, என் கட்டளைகளும், என் சட்டங்களும் பரிசுத்தமானவை; ஆம், என் அன்பைக் கொண்டு, தாகமுள்ள இந்த மண்ணுக்கு நான் நீர் பாய்ச்சுவேன்; ஆண்டவராகிய நான் என் குழந்தைகளை ஆசீர்வதித்தபடி, அவர்கள் மீது என் ஆவியானவரைப் பொழிந்து கொண்டே இருப்பேன்; நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் வாக்களித்திருந்தபடி, ஒரு புதிய விண்ணகத்தையும், ஒரு புதிய மண்ணகத்தையும் பெற்றுக் கொள்வதற்காக உங்களை நான் தயாரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை நீங்கள் காணவில்லையா? என் குரலைக் கேட்கும்படி நான் உங்கள் அனைவரையும் உலகில் ஒரு கோடி முனையிலிருந்து மறுகோடி முனைக்கு அழைக்கிறேன்; ஆ, அன்புக்குரியவர்களே, உங்கள் புண்களையும், உங்கள் காயங்களையும், உங்கள் நோய்களையும், இந்த இருளில் உங்கள் மீது மிகவும் காட்டு மிராண்டித்தனமாக உண்டாக்கப்பட்ட எல்லாவற்றையும் குணமாக்க நான் வந்திருக்கிறேன்; இல்லை, அன்புக்குரியவர்களே, உங்கள் புண்கள் குணப்படுத்த முடியாத அளவு நாட்பட்டவை அல்ல, உங்கள் காயங்கள் குணப்படுத்தப்படக்கூடியவை தான், ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்; எப்போதும் உங்களுக்கு மிக அருகில் இருக்கிறேன்; ஆகவே, அன்போடு என்னிடம் வாருங்கள்; அன்போடு என்னிடம் கேளுங்கள்; அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், அன்போடு என்னை மன்றாடுங்கள், உங்கள் மன்றாட்டை நான் கேட்பேன்; என் நெஞ்சை நோக்கி உங்களை உயர்த்தி, உங்களைத் தொட்டிலில் இட்டுத் தேற்றுவேன்; என் அன்பு மற்றும் சமாதானம் ஆகியவற்றின் கூக்குரலைக் கேளுங்கள்; அன்பு உங்களை அன்பு செய்கிறது; அன்பே, வாழ்வின் மரத்தின் வேராக இருக்கிறது; ஆகவே, உங்கள் இதயத்திலிருந்து வெளிவருவது அன்பாகவே இருக்கட்டும்; தீமையுள்ள இடத்தில் அன்பு தன்னை வெளிப்படுத்தும் போது, அது அனைத்து தீய குணங்களையும் அழித்து விடுகிறது, சூரியனின் முதல் வெப்பக் கதிர்களால் மூடுபனி மறைந்து போவது போல, அன்பு தீய குணங்களை மறைந்து போகச் செய்கிறது; என் பக்தியுள்ள மக்களுக்காக நான் எல்லாப் பிணங்களையும் உயிர் பெறச் செய்வேன்; நான் மௌனமாக இருக்க மாட்டேன்; உங்கள் அனைவரையும் என் வார்த்தையால் நான் எழுப்புவேன்; என் உடலை நான் மகிமைப்படுத்தி, என் முழுத் திருச்சபையையும் நான் புதுப்பிக்கும் வரையிலும் நான் மௌனமாக இருக்க மாட்டேன்; என் அருளின் ஆவியை அழிக்க விரும்புபவர்களும், என் குரலை நெறித்துவிட விரும்புபவர்களும், உங்கள் தீய முயற்சிகளும், தீய நோக்கங்களும் வீணானவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; நான் என் கரத்தை, எல்லோரை நோக்கியும், கலகம் செய்பவர்களையும், இரவும் பகலும் என் கோபத்தைத் தூண்டுபவர்களை நோக்கியும் கூட நான் தொடர்ந்து நீட்டியபடி இருப்பேன், பார்த்தீர்களா? நீங்கள் எந்த ஜாதியானாலும் சரி, இனமானாலும் சரி, நீங்கள் அனைவரும் என் மக்கள்; நான் அன்பாக இருக்கிறேன் என்பதையும், நானே உங்கள் அனைவரையும் படைத்தேன் என்பதையும் நினைவில் வையுங்கள்; இன்று என் மீட்புத் திட்டம் உலகம் முழுவதையும் தன்னுள் அடக்குகிறது; உங்கள் விசுவாசத்தை வளர்ப்பதற்காகவும், உங்களை மனந்திரும்புவதற்காகவும், சமாதானத்தையும், அன்பையும் நிலைநாட்டுவதற்காகவும், உங்களை ஒன்றிப்பதற்காகவும், நான் ஒவ்வொரு நாட்டிற்கும் தூதர்களை அனுப்பி வந்திருக்கிறேன், இப்போதும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் குரலையும், என் அன்னையின் அழைத்தல்களையும் ஒடுக்கிவிட முயலாதீர்கள்; எங்கள் குரல்கள் பாறைகளை உடைத்து நொறுக்கும் சம்மட்டிகளைப் போல, குறிப்பு: பாறைகள் என்றால் கல்லாலான இருதயங்கள். என் மகிமையின் நாள் வரையிலும் உங்கள் மீது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்; கனிகள் நிறைந்த என் திராட்சைத் தோட்டத்தைக் குறித்து அக்களித்து ஆர்ப்பரியுங்கள், ஏனெனில் என் சொந்தக் கரத்தாலேயே மண் உழவு செய்யப்பட்டு, பண்படுத்தப்பட்டது, என் சொந்தக் கரத்தாலேயே முட்களும் முட்புதர்களும் பிடுங்கப்பட்டு, எரிக்கப்பட்டன; என் சொந்த மேலங்கியால் நான் அதை மூடி, என் எதிரியிடமிருந்து எழும் வறண்ட காற்றுகளிலிருந்தும், புயல்களிலிருந்தும் அதைப் பாதுகாக்கிறேன்; நான் எப்போதும் அன்பார்வத்தோடும், என்றென்றைக்குமாக அதைக் காவல் காக்கும் அர்ப்பணமிக்க தோட்டக்காரராக இருக்கிறேன், அதன் கனிகள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, உலகம் முழுவதையும் நிரப்பி, அதற்கு உணவளிக்கும்; ஆ, என் ஆன்மாவின் அன்பர்களே, என் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து, அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; சந்தேகப்படாதீர்கள், இடைவிடாமல் என்னை சோதிக்காதீர்கள்... ஆண்டவராகிய நான் முற்றிலும் அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன்; வேத நூல்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன; ஆகவே, என் ஆவி தாராளமாகப் பொழியப்படுவதைக் கண்டு, உங்களில் மிகப் பலர் ஏன் வியப்படுகிறீர்கள்? உங்கள் இளைஞர்கள் காட்சிகள் காண்பதைக் கண்டு ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நான் என் வார்த்தையைப் பற்றிய உங்கள் அறிவை மாற்றுவதற்காக உங்கள் முன் வருகிறேன்; என் மகன்கள் மற்றும் மகள்களின் பிரேதங்களுக்கு உயிர் தருவதற்காக, மிகுந்த அன்புடன் நான் வருகிறேன்; உங்களை மனமாற்றவும், என் கட்டளைகளை உங்களுக்கு நினைவுறுத்தவும் நான் வருகிறேன்; பாவியை பாவச் சங்கீர்த்தனத்திற்கு அழைக்க நான் வருகிறேன்; என் திரு இருதயத்தை மிகக் கொடிய விதமாகக் காயப்படுத்தி, தங்கள் நண்பரும், இறைவனுமான என்னைக் காட்டிக் கொடுத்த அனைத்து குருக்களும், ஆயர்களும், கர்தினால்களும் மனம் வருந்துபடி அழைக்க நான் வருகிறேன்; ஒரு நடுவராக நான் வரவில்லை, இன்னும் அதற்கு நேரம் வரவில்லை; நான் பிச்சைக்காரனாக, கந்தைகள் அணிந்தவனாகவும், வெறுங்காலோடும், வறண்டு வெடித்த உதடுகளோடும், எங்காவது கொஞ்சம் அன்பு எனக்குக் கிடைக்காதா, என் அன்புக்குப் பதிலன்பு கிடைக்காதா என்று கெஞ்சியபடியும், புலம்பியபடியும் உங்களிடம் வருகிறேன்; நான் உங்களிடம் இரந்து கேட்கிறேன், என்னிடம் திரும்பி வந்து, என்னை நேசியுங்கள், என்னை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; என்னை அன்பு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். என்னோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்; நான் உங்களை நிராகரிக்க மாட்டேன்; நானே அன்பாக இருக்கிறேன், நித்தியத்திற்கும் நான் உங்களை அன்பு செய்கிறேன்; இன்னும் நேரம் வராதிருக்கும் போதே என்னிடம் வாருங்கள், என் நீதி வந்து சேரும் வரை காத்திருக்காதீர்கள், என் நீதி எதிர்பாராமலும், நீங்கள் அறியாமலும் வந்து உங்களை சிக்க வைக்க விடாதீர்கள்; அந்த பயங்கரமுள்ள அச்சம் தரும் நேரத்தில், ஒரு மகத்துவமுள்ள கடுமையான நீதிபதியாக உங்கள் முன் நின்றுகொண்டிருப்பேன்; புலம்புகின்ற ஒரு பிச்சைக்காரனுடையதாக இருந்த என் குரல், கடும் புயலிலும், பெரும் மழையிலும், ஆலங்கட்டி மழையிலும் சுட்டெரித்து விழுங்கும் நெருப்பின் தகதகப்பாக மாறும்; என் சுவாசம் கந்தகக் காட்டாறு போல இருக்கும், அது உங்களைச் சுத்திகரித்து, உங்கள் அனைவரையும் மாற்றியமைத்து, ஒரே பரிசுத்த மக்களினமாக உங்களை ஒன்று சேர்க்கும்படி எல்லா இடங்களிலும் நெருப்பைப் பற்றியெரியச் செய்யும்; என்னில் நம்பிக்கை கொள்பவர்களும், இப்போது மனிதகுலம் முழுவதன் மீதும் நான் மிக தாராளமாகப் பொழிகிற என் அருளின் ஆவியானவரை வரவேற்பவர்களுமான அனைவரும் பேறுபெற்றவர்கள், ஏனெனில் நீங்கள் உங்கள் இறைவனாகிய என்னைக் காண்பீர்கள்; எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது; கேட்கச் செவியுள்ளவர்களும், கேட்பவர்களும், இதயத்தில் எளிமையானவர்களாக இருந்து, குழந்தைக்குரிய விசுவாசத்தோடு என் அருளின் ஆவியானவரை வரவேற்பவர்களுமாகிய அனைவரும் பேறுபெற்றவர்கள், ஏனெனில் இந்தச் சிறிய இருதயங்களில் என் வார்த்தை வேரூன்றும்; நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே; இன்னும் சிறிது காலத்திலேயே என் சிறு புறாக்களும் நானும் உங்களோடு இருப்போம், என் சமாதானத்தைக் கொண்டிருங்கள்; உங்கள் ஒவ்வொருவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன்; இயேசு கிறிஸ்துவாகிய நான் உங்களைத் துன்புறுத்துவோரை ஆசீர்வதிக்கிறேன், அவர்களை மன்னிக்கிறேன், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; ஆண்டவராகிய நான் உங்கள் அனைவரையும் நித்தியத்திற்கும் அன்பு செய்கிறேன்; அதன்பின் ஆண்டவர் வேதாகமத்தில் நான் எந்தப் பகுதியை அவர்களுக்காக வாசிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அது எபிரேயர் மூன்றாம் அதிகாரம், இறைவார்த்தை ஏழு முதல் 19 வரை, மற்றும் எபிரேயர் நான்காம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஒன்று முதல் 16 வரை ஆகிய பகுதிகளில் உள்ளது. யாவே, என் அப்பா, உம்முடைய கட்டளைகளை நான் கடைபிடித்து, உமக்கு பிரமாணிக்கமுள்ளவளாய் இருக்க எனக்கு நினைவூட்டும். என் அப்பா, உம்முடைய கட்டளைகள் நீதியுள்ளவை என்று நான் அறிந்திருக்கிறேன், மேலும், பிரமாணிக்கத்தின் காரணமாகவே என்னை துன்புறச் செய்கிறீர் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன், அப்படியே நம்புகிறேன். உம்முடைய கசப்பான கிண்ணத்திலிருந்து சுவைப்பதும், பருகுவதும் எனக்கு நல்லதாக இருந்தது. இப்போது, ஆண்டவரே, தயவுசெய்து, உம்முடைய அன்பால் என்னைத் தேற்றும், வந்து கனிவோடு என்னை நடத்தும், நான் உயிர் வாழ்வேன், ஏனெனில் உம் திருச்சட்டம் என் வாழ்வாகவும், என் இன்பமாகவும் இருக்கிறது. நீர் எனக்கு வாக்களித்துள்ளது போல, உம்முடைய இல்லத்தை நோக்கி என் காலடிகளை வழிநடத்தும், பரலோகத்தில் இருக்கிற பிதாவே, நான் உம்மீது ஆசை கொள்கிறேன், உமக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன், யாவே, என் அப்பா, நான் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தாய், அன்பு உன்னை அன்பு செய்யும், என்னிடமிருந்து உன்னைப் பிரித்துவிட நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன்; நீ இப்போது என்னில் ஒரு பகுதியாக இருக்கிறாய், நாம் வேலை செய்வோம்; பிற்பாடு, இரவில் என் கனவில், ஒரு காட்சியில் இயேசுவின் சித்திரம் ஒன்றை நான் பார்த்தேன். இயேசுவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருப்பதையும், அந்தக் கண்ணீர்த் துளிகள் தரை மீது விழுமுன், நான் விரைந்து சென்று என் கரத்தை விரித்ததையும் நான் கவனித்தேன். என் உள்ளங்கை இயேசுவின் விலையேறப்பெற்ற கண்ணீர்த் துளிகளால் நிரம்பியிருக்க, நான் நடக்கத் தொடங்கினேன். அவருடைய கண்ணீர்த் துளிகளைப் பருகி விடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; வா, நான் உன்னோடு இருக்கிறேன்! என்னோடு இருப்பது உனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா? ஓ, ஆமாம், என் ஆண்டவராகிய இயேசுவே! உன் சித்தத்தை எனக்குக் கையளிக்கவும், எனக்காக வேலை செய்யவும் நீ இன்னும் மனதாய் இருக்கிறாயா? ஆம், ஆண்டவரே, தயவுசெய்து மீண்டும் உம் பெயரை எனக்குச் சொல்லும். நான் உன் மீட்பரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து; சரி, ஆண்டவரே, இதுதான் உம் விருப்பம் என்றால், இதுதான் என் விருப்பம், உன் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடு, நான் அதைப் பயன்படுத்துவேன்; நான் என் சித்தத்தை உமக்குக் கையளிக்கிறேன், என் சித்தத்தை கையேற்றுக் கொண்டு, என்னை உம் விருப்பம் போல் நடத்தும். அப்படியானால், என் கரத்தைப் பிடித்துக்கொள்; நானும் நீயும் சேர்ந்து; நான் உன்னை அன்பு செய்கிறேன், என்னை அன்பு செய்; இங்கே, ஆண்டவருக்கு முன்பாக ஞான ஒடுக்கம் செய்ய நான் முயன்று கொண்டிருந்தேன், அவருடைய பரிசுத்த பிரசன்னத்தை உணரவும், அவரோடு ஒன்றாக இருக்கவும் நான் முயன்று கொண்டிருந்தேன். சிறியவளே, நீ எப்படி முயற்சி செய்கிறாய் என்பதை நான் உணரும் ஒவ்வொரு முறையும், என் புனித இருதயம் ஆழ்ந்த மகிழ்ச்சியடைகிறது; நான் உன்னதமானவர், நான் உன்னை அன்பு செய்கிறேன்; நீ உன்னையே ஞானவிதமாய் ஒடுக்கி, விசுவாசத்தோடு ஜெபிப்பாயா? என் ஆண்டவரே, நான் முயற்சி செய்வேன். நீர் விரும்புவது போல ஜெபிக்க உதவும். அப்படியானால், உன்னை முழுமையாக என்னிடம் கையளித்துவிடு; என்னை மகிழ்வி, இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று என்னிடம் சொல்; நேர்மையோடும், இருதயத்திலிருந்தும் வருகிற தன்னிச்சையான அன்பின் வார்த்தைகளைக் கொண்டு என்னை மகிழ்ச்சிப்படுத்து; என் புனித இருதயம் உன் அடைக்கலமாக இருக்கிறது; என்னில் ஓய்வெடு; வா, என் மீது உனக்குள்ள அன்பை அதிகரி, நீ உத்தமமானவளாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்! நான் உம் சித்தத்தைச் செய்யவும், உம்மை முழுமையாக மகிழ்விக்கவும் விரும்புகிறேன். ஆண்டவரே, என் வசுலா, நான் உனக்கு உதவி செய்வேன், நாங்கள், நாம்? என்றென்றும். வா, என் இருதயத்தில் ஓய்வெடு; என் இதயத்தில் ஓய்வெடும், ஆண்டவரே. அப்படியே செய்வேன்; மே 12, 1989 இயேசுவா? நான்தான் என்னை உணர்ந்து, என்னைக் கண்டு தியானி; நான் அன்பாகவும், பரிசுத்தராகவும் இருக்கிறேன்; என்னை நேசித்து, பரிசுத்தமாயிரு; நான் உனக்குக் கற்பிப்பேன், ஏனெனில் நானே ஞானம்; வா, என் தாய் உன்னை நேசிக்கிறார்கள், அவர்கள் இப்போது செய்தியை எழுதுவார்கள்; மார்ட் டிக்னியில் 1989 மே 19 கூட்டத்திற்கான செய்தி. என் குழந்தாய், உன் புனிதத் தாயாகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இதோ, என் செய்தி; சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, நான் உங்கள் அனைவரையும் நேசித்து, உங்களை ஆசீர்வதிக்கிறேன், இன்றைய எங்கள் அழைப்புகளைக் கேளுங்கள், அவற்றை நன்கு கவனியுங்கள், காலம் எப்படி நெருங்குகிறது என்று உணருங்கள்; இயேசுவும் நானும் இரவும் பகலும் உங்களை மனந்திரும்ப அழைக்கிறோம்; உங்கள் மனந்திரும்புதலுக்கான எங்கள் அழைத்தல்கள் இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கின்றன; அவை பெருகும்; என் குழந்தைகளே, காலம் வேகமாக நெருங்குகிறது; உங்களில் பலர் எங்கள் அழைப்புகளின் அவசரத்தைப் புரிந்து கொள்வது போலத் தோன்றவில்லை என்பதால், என் இருதயம் வேதனைப்படுகிறது; தியானிக்கும்படியாகவும், உங்களையே பரிசோதித்துக் கொள்ளுமாறும், நீங்கள் மனந்திரும்பி கடவுளின் வழியில் இருக்கிறீர்களா என்று பார்க்கும்படி, உங்களைப் பரீட்சித்துப் பார்க்குமாறும் நான் உங்களிடம் கேட்கிறேன்; என் அன்புக்குரிய குழந்தைகளே, அது வெறுமனே கடவுளை விசுவசிப்பதும், ஜெபிப்பதும் அல்ல, மனந்திரும்புவது என்பது கடவுளை மகிழ்விப்பது, அவரை முழுவதுமாகக் கண்டு தியானிப்பது; மனந்திரும்புவது என்றால், பரிசுத்தமாயிருப்பது, பரிசுத்தத்தனத்தில் வாழ்வது; மனந்திரும்புவது என்பது, இறைவனோடு சமாதானம் செய்து கொள்வது, உங்கள் முழு ஆன்மாவோடும் இறைவனை நேசிப்பது; இயேசு, உங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கிற அன்பைப் பற்றி சிந்தியுங்கள்; கிறீஸ்துவில் வாழுங்கள், உங்களையே சுத்திகரியுங்கள், இயேசு, உங்களைக் குணப்படுத்தும்படி உங்கள் இதயத்தை முழுவதுமாகத் திறங்கள்; மனந்திரும்புவது என்பது கடவுளோடு இருக்க விரும்புவது, உங்கள் முழு இதயத்தோடும், அவருக்காக ஏங்குவது; அனைத்திலும் பெரிய ஆன்ம கொடை, அன்புதான் என்பதை பலர் மறந்து போகிறார்கள்; இயேசுவின் கட்டளையை நான் உங்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்; நான் உங்களை அன்பு செய்வது போல், நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்; என்னை மகிழ்வியுங்கள், எங்கள் செய்திகளை வாழுங்கள்; எங்கள் சிறு ஒலிப்பெருக்கிக் கருவிகளாக இருங்கள், எங்கள் தானிய விதைகளை எங்கும் தூவுங்கள், கேட்க செவியுள்ளவர்கள் கேட்கட்டும்; எங்கள் செய்திகளின் அவசரத்தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள்; இன்றிரவில் நீங்கள் அனைவரும் ஒன்றாக இங்கே கூடியிருப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; நீங்கள் வைத்திருக்கிற எல்லா வேதப் பொருட்களையும் நாங்கள் ஆசீர்வதிக்கிறோம்; இன்று தியானம் மற்றும் உங்கள் ஆன்மாவின் மீதான ஒரு முழுமையான பரிசோதனை என் சிறப்பான இரவாக இருக்கட்டும்; இயேசுவும், நானும் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் இங்கே இருக்கிறோம், ஆகவே, உங்கள் இதயத்தைக் கொண்டு எங்களுடன் பேசுங்கள், நாங்கள் கேட்போம்; நான் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன், ஆமென்; மே 13, 1989 இயேசுவா? நான்தான் ; என்னை முழுமையாகவும், நான் உனக்குத் தந்திருக்கிற திறமையிலும் பகுத்துணர்வாயாக; எளிய உள்ளத்தோர் பேறுபெற்றவர்கள், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே; பேரு பெற்றவளாயிரு; உன்னை அதைரியப்படுத்தி விடும்படி, தன் முயற்சிகளை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிற தீமையைப் பற்றி எச்சரிக்கையாயிரு; அவனுடைய வலையில் நீ விழுந்து விடாதபடி நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; உன் பாதையை நான் சமப்படுத்துகிறேன், நீ கவனிக்கவில்லையா? ஆம், என் ஆண்டவரே, நான் கவனித்திருக்கிறேன், நான் உம்மை வாழ்த்துகிறேன்; அனைவரிலும் பிரியமான ஆன்மாவே, உன்னை முன்னேற்றுபவர் நான்தான் என்பதை நினைவில் கொள்; உன் திறமையில்லாமையையும், நான் இல்லாமல் மூச்சு விடக்கூட உன்னால் இயலாது என்பதையும் ஒருபோதும் மறக்காதே; நான் வேலை செய்யும் முறையை எப்போதும் நினைவில் வைத்திரு; நான் என் செய்திகளைப் பெற்றுக் கொள்வதற்கு, மற்றவர்களுக்கும் மத்தியில் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; எளிய ஆன்மாக்களை அணுகுபவர் என்று நான் பெயர் பெற்றிருக்கிறேன்; அவர்களைக் குணமாக்கு, அவர்கள் வழியாக, என் வார்த்தையை அறிவி; ஆண்டவரா? நான் உம்மிடம் துணிந்து ஒரு காரியம் சொல்லலாமா? அன்பு கேட்டுக்கொண்டிருக்கிறது; ஆண்டவரே, பல தடவைகள் உம் வார்த்தைத் தரப்படுகிறது, ஆனால் பல தடவைகள் அது கேட்கப்படாமல் அல்லது நம்பப்படாமலும் போகிறது. நான் அதை அறிவேன், என்றாலும், எல்லாமுமே வீணாய்ப் போகாது, ஏனெனில் அநேகர் அதைக் கேட்கவில்லை என்றாலும், ஒரு சிலர் கேட்கிறார்கள்; இவ்வாறு, ஒரே ஒரு தானியமணி வேரடித்தாலும், இந்த எல்லாப் பரித்யாகங்களும் தகுதியுள்ளவையாகவே இருக்கின்றன; ஆண்டவரே, உம் அருளைக் கொண்டும், உம் தயவிரக்கத்தின் காரணமாகவும், நீங்கள் எங்களுக்கு இந்த எல்லாச் செய்திகளையும் தருகிறீர், ஆனால் அதை வாசித்து மனந்திரும்பி இருக்கக்கூடியவர்கள் ஏராளமானோர் இருந்திருக்க முடியும், ஆனால் அது அப்படி நடக்கவில்லை. உம்முடைய செய்திகள் உம் சொந்த மக்களாலேயே எதிர்க்கப்படுகின்றன, பல தடவைகளில் அலட்சியம் செய்யப்படுகின்றன. என் மலரே, இதுதான் என் திருச்சபையிலுள்ள மாபெரும் விசுவாச மறுதலிப்பாகும்; என் திருச்சபை காயீன்களால் நிறைந்துள்ளது; என் ஆலயத்தில் தங்களையே அரியணையில் அமர்த்திக் கொண்டு, அவர்கள் என் அன்பின் போதனையை விட, வெளிச்சடங்குகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள், அவர்கள் அன்போடு என்னிடம் வழிநடத்தும்படி, நான் அவர்களிடம் கோடிக்கணக்கான ஆன்மாக்களை ஒப்படைத்திருக்கிறேன், ஆனால் அவர்களோ அறிவின் திறவுகோலை அகற்றி விட்டார்கள்; அவர்களும் உள்ளே போவதில்லை, போக விரும்பும் மற்றவர்களையும் அனுமதிப்பதில்லை; ஆண்டவரே, இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் துன்புற வேண்டி இருக்கும்? அதிக காலத்திற்கு அல்ல, என்னில் உன் நம்பிக்கையை வை; வா, நான் என் வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை உனக்கு வாசித்துக் காட்டுவேன்; ஏசியனுக்கு எரேமியா நான்காம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஐந்து முதல் 31 வரை உள்ள பகுதியை சுட்டிக்காட்டினார். படைப்பே, தாமதிக்காதே; மனந்திரும்பி, என் வார்த்தையைக் கேள்; வா, நாங்கள், நாம்? ஆம் என், ஆண்டவரே. இதை என் நாட்களில் நான் சொல்வதாக தோன்றவே இல்லை. வசுலா, நீ அதைச் சொல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன்... என்னைப் பார்த்துப் புன்னகை செய்; நீர் உண்மையாகவே சொல்கிறீரா? உண்மையாகத்தான் சொல்கிறேன்; மலரே, எவ்வளவு அடிக்கடி நான் இதை உனக்குச் சொல்ல வேண்டும்? இயேசுவே, எனக்குத் தெரியும். ஆனால் அதை நீர் உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படியானால், நீ என் பெயரை திரும்பத் திரும்பச் சொல்வதைக் கேட்க, நானும் எவ்வளவு விரும்புகிறேன் என்பதை புரிந்துகொள்; நீ என்னை அழைப்பதைக் கேட்பதில் நான் ஒருபோதும் சோர்ந்து போவதேயில்லை; என் திருப்பெயரை எப்போதும் உன் மனதில், உன் இதயத்தில் வைத்திரு; எப்போதும், எங்கும் என் பெயரை உச்சரி; என்னைப் பற்றி பேசு, அது என்னை மகிமைப்படுத்துகிறது; ஆ, இயேசுவே, நீர் எனக்கு மிக அதிகம் தந்திருக்கிறீர், உம்முடைய திருப்பெயர் வாழ்த்தப்படுவதாக, இறைவனுக்கு மகிமை உண்டாகுக. என் சமாதானத்தைக் கொண்டிரு; என் பாதங்களை நீ முத்தமிடுவாயா? சரி, என் ஆண்டவரே, நான் என் உள்ளத்திலும் ஒரு பாடுபட்ட சுரூபத்திலும் ஆண்டவரின் திருப்பாதங்களை முத்தமிட்டேன். எனக்குப் பிரமாணிக்கமாக நிலைத்திருப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; மே 15, 1989 கடுமையாக துன்புறுத்தப்படுகிறேன். ஆண்டவரா? நான்தான்; நான் பூமிக்கு சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக வரவில்லை; சமாதானத்தையல்ல, வாளையே கொணர வந்தேன்... குறிப்பு: மத்தேயு பத்தாம் அதிகாரம், இறைவார்த்தைகள் 34, 35. என் சம்மனசே, அன்பிற்காக, அன்புடன் நற்செய்தி அறிவி; நான் உனக்கு உதவி செய்வேன்; இது இயேசு கிறிஸ்துவாகிய நானே, நான் உன்னை நேசிக்கிறேன்;