இயேசு தம் திருச்சபையின் புதுப்பித்தலுக்காகவும் குருக்களின் புரிதலுக்காகவும் ஜெபிக்கச் சொல்கிறார். அன்பே எல்லாப் புண்ணியங்களின் வேர் என்றும், ஞானத்தின் திறவுகோல்கள் தம்மிடமே உள்ளன என்றும் கூறுகிறார். நிராகரிப்பு, காட்டிக்கொடுத்தல் நடுவிலும் தம்மிடம் சாய்ந்து, சிலுவையைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 76, ஆகஸ்ட் 25, 1988 ஆண்டவரா! நான்தான்; வசுலா, அன்பின் திரும்பி வருதலுக்காக ஜெபி, என் திருச்சபையின் புதுப்பித்தலுக்காக ஜெபி, அதன் மறுபிறப்பிற்காக ஜெபி; அதன் இப்போதைய வெதுவெதுப்பான, பக்தி ஆர்வமற்ற தன்மை, ஓர் அன்பின் சுவாலையாக மாறும்; அதன் அசட்டைத்தனம் என்னை அறிவதற்கும், என்னை பின் செல்வதற்குமான பக்திப் பற்றுதலாகவும், தாகமுள்ள ஆசையாகவும் மாற்றப்படும்; அதன் பிரமாணிக்கமின்மை, பிரமாணிக்கமாக மாற்றப்படும்; அதன் வறட்சி, என் ஆட்டுக்குட்டிகளுக்கு ஆறுதல் தருகிற பசும் புல் வெளிகளாகவும், மாசற்றத் தனத்தின் ஓர் ஊற்றாகவும் மாறும், அது அவர்களுடைய தாகத்தைத் தணித்து, அவர்கள் தங்குமிடமாக மாறும்; முன்பு என் திருச்சபைக்கு நான் தந்திருந்த அன்பின் கதகதப்பை, என் ஆட்டுக்குட்டிகள் அதனிடம் கண்டடையும்; அவை சமாதானத்தையும், அன்பையும் கண்டடையும்; அவை திரும்பி வரும்; ஆகவே, என் திருச்சபையின் இந்தப் புதுப்பித்தலுக்காக ஜெபி, நற்செய்திகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுமாறும், முரட்டுத்தனமாக வெற்றி அகற்றப்பட்ட பகுதிகள் திரும்பக் கொண்டுவரப்படுமாறும் ஜெபி; என் குழந்தாய், என் திருச்சபை ஒன்றிணைக்கப்படவும், தனது பழைய ஆடைகளால் உடுத்தப்படவும் வேண்டுமென்று ஜெபி; என் வார்த்தைக்கு இதுவரை தரப்பட்டுள்ள தவறான விளக்கங்கள் அனைத்தும் நின்று போய்விடும்படி ஜெபி; இந்தத் தவறான விளக்கங்கள் உங்களுக்கு ஒரு விஷ உணவு போல இருக்கின்றன, என் உணவு பரிசுத்தமானது, முழுமையானது; என் குருநிலையினர் என் வழிகளையும், வழியாயிருக்கிற என்னையும் முழுமையாகப் புரிந்து கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபி; அவர்கள் இன்னும் என்னைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்கள் அறிவின் ஒளியைப் பெறும்படி ஜெபி; ஓ, என் குழந்தாய், இறுதியில் என் பரிசுத்த பெயர் சகல மக்களினங்களாலும், மீண்டும் மகிமைப்படுத்தப்படுமாறும், போற்றி ஸ்துதிக்கப்படுமாறும், என் மகிமைக்காக ஜெபி; ஓ, இயேசுவே, இதெல்லாம் மிகவும் தொலைவில் இருப்பதாகவும், உம் வருகை இன்னும் அதிகத் தொலைவாக இருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறதே! , மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு, என்னை ஏற்றுக்கொள்ள சித்தமாகவும், ஆவலாகவும் இரு; நான் மிக அதிகாரப்பூர்வமாக உனக்குக் கூறுகிறேன், காலம் பறந்து கொண்டிருக்கிறது, அது நிழல்களைப் போல கரைந்து கொண்டிருக்கிறது, ஏற்கனவே என் மறு வருகையின் முதல் அடையாளங்களில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்; ஏற்கனவே குழந்தைப் பிறப்பின் முதல் வேதனைத் தாக்குதல்கள் தொடங்கிவிட்டன, ஆனாலும், பைத்தியக்காரனைப் போல, என் படைப்பு அதைப் பார்த்து நகைக்கிறது, என் முதல் அடையாளங்களை மறுதலிக்கிறது, பிரசவ வேதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! ஆகவே, என் குழந்தாய், உன்னையே எனக்கு அர்ப்பணி, என்னிடமிருந்து உணவு கொள்; உனக்கு எதுவும் குறைவுபடாதபடி நான் பார்த்துக் கொள்வேன்; இடமோ வலமோ பாராமல், நேராக என்னிடம் வா; நான் ஆண்டவராக இருக்கிறேன், நான் தொடர்ந்து உன் ஆசிரியராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருப்பேன்; நீ ஞானத்திடமிருந்து கற்றுக் கொள்கிறாய், நீ என்னிடமிருந்து கற்றுக் கொள்கிறாய், ஞானத்தின் திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன்; ஞானமுள்ள கண்களைக் கொண்டுள்ளவைகளைக் காண நான் யாரையும் அனுமதிப்பதில்லை, நான் மட்டுமே அந்த ஞானத்தைக் குழந்தைகளுக்குத் தருகிறேன், வெறும் குழந்தைகளாகவே இருப்பவர்கள் மட்டுமே அதை ஊடுருவிக் காணவும், அதை சந்திக்கவும் நான் அனுமதிப்பேன்; என் இயேசுவே, உமக்கு நன்றி. ஆகஸ்ட் 26, 1988 நான் சில தீவிரவாத முஸ்லிம்களைச் சந்திக்கவும், அவர்களுடைய இரண்டு இமாம்களையும், ஷேக்குகளையும் சந்திக்கவும் அழைக்கப்பட்டேன், மறைவல்லுனரான என் நண்பர் ஒருவரோடு நான் அவர்களுடைய இடத்திற்குச் சென்றேன். இந்த காரியம் முழுவதும் எனக்கு தீர்ப்பிடவும், இரகசியமாக எனக்குப் பேயோட்டவுமே ஏற்பாடு செய்யப்பட்டது, அவர்கள் அதைத்தான் செய்தார்கள். என்னில் எந்த தீய ஆவியையும் காணாததால், அவர்கள் தங்கள் மன அமைதியை இழந்து, குறிப்பாக அவர்களுக்கான ஒரு செய்தியை, அன்பின் செய்தியை நான் பெற்றுக் கொண்டபோது, மிகுந்த வன்முறை உள்ளவர்களாக அவர்கள் மாறினார்கள். நான் முழு அமைதியோடு இருந்ததைக் கண்டது, அவர்களை இன்னும் அதிகமாக கோபவெறி கொள்ளச் செய்தது, நான் ஒரு பொய்க்காரி என்றும், வஞ்சகி என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். என் ஆண்டவராகிய நீர் 'ஓர் அன்பின் கடவுள் அல்ல' என்று அவர்கள் சொன்னார்கள். நானும் மறைவல்லுனரான என் நண்பரும் அமைதியாக எழுந்து, அவர்களை விட்டுப் புறப்பட்டோம். நாங்கள் ஸ்விட்சர்லாந்தில் இராமல் இருந்திருந்தால், அவர்கள் எங்களை கொன்றிருப்பார்கள். ஆண்டவரா? என் வசுலா, அன்பு முதலில் வருகிறது; நான் அன்பின் கடவுளாக இருக்கிறேன்; அன்பே, வேராக இருக்கிறது என்று நான் எப்படி உனக்குக் கற்பித்தேன் என்பது உனக்கு நினைவில் இருக்கிறதா? நற்கனிகளைச் சுமந்திருக்கிற ஒரு நல்ல மரத்தின் உதாரணத்தை நான் உனக்கு தந்திருக்கிறேன்; இந்த மரம் ஓர் உத்தமமான மரம், ஏனெனில், அன்பே, அதன் வேராய் இருக்கிறது; அனைத்து புண்ணியங்களும் அதன் கிளைகள், அவை முழுவதும் நல்லவையாக இருக்கின்றன; அன்பின் வேரின்றி, இந்த மரம் புண்ணியங்களையோ, அதன் காரணமாக கனிகளையோ கொண்டிருக்காது; கனிகளற்றதாகவோ, அல்லது அழுகிப் போன கனிகளைக் கொண்டதாகவோ இருக்கிற ஒரு மரத்தை நீ காணும்போது, என் குழந்தாய், அதன் வேர் உலகில் உள்ளத்திலேயே மிகவும் அதிகத் துர்குணமுள்ள தீமைகளால் உருவாகியுள்ளது என்பதை அறிந்துகொள்; நான் அதிகாரப்பூர்வமாக உனக்குச் சொல்கிறேன், அனைத்து புண்ணியங்களின் வேர் அன்பு என்று அழைக்கப்படுகிறது; நான் அன்பாக இருக்கிறேன், நானே உங்களுக்கு உணவளிப்பதும், உங்களை அழகுபடுத்துவதுமாகிய வேராக இருக்கிறேன்; வந்து, என்னில் இரு, நீ என்றென்றும் உயிர் வாழ்வாய்! ஆகஸ்ட் 29, 1988 இயேசுவா? நான்தான்; சமாதானம் உன்னோடு இருப்பதாக; என்னிடம் உன்னை உயர்த்தியதன் மூலம், நான் உன்னை எவ்வளவு அதிகமாக ஆதரித்திருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்; என் வசுலா, என் அதீத அபரிதமான அன்பை என் போதகர்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்; நான் சாந்தமும் மென்மையும் உள்ளவனாகவும், கனிவு நிரம்பியவனாகவும் இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்; நான் அன்பைக் கொண்டு கற்பிக்கிறேன், நான் அன்பைக் கொண்டு உனக்குக் கற்பித்தேன், அன்போடும், கீழ்படிதலோடும், பொறுமையோடும் உன்னை வளர்த்தேன்; என் வேலைகளைத் தொடர, நீ மனதாயிருக்கிறாயா என்று உன்னிடம் அடிக்கடி நான் கேட்டுக்கொண்டிருந்தேன்; ஆண்டவராகிய நான் உன் சுதந்திரத்தை மதித்தேன், நான் ஒருபோதும் உன்னை வற்புறுத்தவில்லை, ஒருபோதும் உன்னிடம் கடுமையாக இருக்கவில்லை; அன்பையும், ஏராளமான கனிவையும் கொண்டு நான் உன்னைப் போஷித்தேன்; என் போதக வழிகளைப் பின்பற்றவும், இந்தப் போதக முறையைப் பரப்பவும், நான் என் சீடர்களுக்குக் கற்பித்திருக்கிறேன்; மென்மையோடும், அன்போடும், என் ஆட்டுக்குட்டிகளை என்னிடம் வழிநடத்து வரும்படி நான் அவர்களுக்குக் கற்பித்தேன்; இன்று என் போதக வழிகள் மறக்கப்பட்டுவிட்டது எப்படி? என் இல்லம் தெய்வீகமான அனைத்தையும் இழந்து, ஆன்ம வறட்சி மற்றும் இணக்கமின்மையின் பொழுதுபோக்கு இடமாக மாறியது எப்படி? என் இல்லம் இன்று தரிசாகக் கிடக்கிறது, அது மனித ஒழுங்குகளோடும், மனித சிந்தனையோடும், ஆன்மா அக்கறையற்றிருக்கிறது, அது பாழ்பட்டுக் கிடக்கிறது! 'சுதந்திரம்' என்பதற்கு மேற்கொண்டு எந்த அர்த்தத்தையும் கொண்டிராத சட்டங்களால் என் இல்லம் ஆளப்படுகிறது; என் வசுலா, என் புறாவே, நீ என்னோடு இருப்பதால், சுதந்திரமாக இருக்கிறாய், நான் உன் எஜமானர்; சுதந்திரத்தைக் கொண்டு மட்டுமே நான் உன்னை வழிநடத்துகிறேன், எந்த நேரத்திலும் எனக்காக வேலை செய்யும்படி நான் ஒருபோதும் உன்னைக் கட்டாயப்படுத்தியதில்லை, என் வேலைகளை உன் விருப்பமில்லாமல் நான் உன்மீது சுமத்த நான் ஒருபோதும் வந்ததில்லை; மற்றவர்களின் மீது பொறுப்புள்ள அனைவரும் செயல்படும் முறையிலிருந்து என் வழிமுறை முற்றிலும் வேறாய் இருக்கிறது; ஆண்டவராய் இருப்பவரும், உன்மீது அரசாள்பவருமான நான்,... இன்ன காரியத்தைச் சொல்ல செய்ய என்னை அனுமதி... என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே தான் எப்போதும் உன்னை அணுகினேன்; என் இல்லம் மாற வேண்டும், என் இல்லம் என் வழிகளை நினைவு கூற வேண்டியுள்ளது; நான் அன்பாக இருக்கிறேன்; செப்டம்பர் 5, 1988 நான் சில உள்ளூர் குருக்களால் விரைவில் நான் நிராகரிக்கப்படுவேன் என்று ஆண்டவர் இன்று அதிகாலையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவரே, நான் நிஜமாகவே சில குருக்களால் மீண்டும் நிராகரிக்கப்படப் போகிறேனா? ஆண்டவரே? நான்தான்; அஞ்சாதே, விரைவில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும், என் செய்தியை விசுவசிக்க மறுத்து, உன்னை மறுதலித்த அனைவரும் மன்னிப்பிற்காக பிதாவிடம் ஜெபிப்பார்கள்; வசுலா, அவர்கள் 'குருடர்களாக' இருந்திருந்தால், நான் அவர்களைக் குணப்படுத்தி இருப்பேன், ஆனால் தாங்கள் 'காண்பதாக' அவர்கள் சாதிக்கிறார்கள்; இவர்கள் நான் பூமியில் இருந்த காலத்திலிருந்த அந்தக் குருட்டு வழிகாட்டிகளின் வழித்தோன்றல்களாக இருக்கிறார்கள், அவர்கள் என்னைச் சிலுவையில் அறைந்தவர்களின் மத்தியில் தாங்களும் இருப்பார்கள், அவர்கள் அவர்களுடைய வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள், அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கல்லால் எறிந்து கொன்று, அவர்களை வாயடைக்கச் செய்தவர்களுக்கு மத்தியில் தாங்களும் இருப்பார்கள்; ஏன் இப்போதைக்கும் அப்போதைக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? என்னை விசுவசிப்பதாக அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள், ஆனால் ஆவியாரிடமிருந்து வருவதை அவர்கள் மறுதலிக்கிறார்கள்; நீ என்னுடைய செய்தியோடு, என்னிடமிருந்து வருகிறாய், ஆனால் அவர்களோ திருச்சட்ட வல்லுனர்களையும், பரிசேயர்களையும் போல, சாட்சியங்களை, உறுதியான சாட்சியங்களைக் கேட்கிறார்கள்; என் குழந்தாய், உன்னை ஆயத்தம் செய்துகொள், கசையடிகளுக்கு உன் முதுகைத் தயார் செய்; ஆண்டவராகிய நான் என் முதுகைக் கசைகளால் அடிக்க அவர்களை அனுமதித்தேன்; அப்படியே நீயும் அவர்களுக்கு உன் முதுகை ஒப்புக்கொடு; அவர்கள் கேட்க மறுப்பதால், தங்கள் தவறுகளை அவர்கள் மீண்டும் செய்யட்டும்; ஆண்டவராகிய நான் மறுதலிக்கப்பட்டேன், இறுதியில் மரத்தில் ஆணிகளால் அறையப்பட்டேன், அப்படியே நீயும் எளிதில் வளைபவளாக இருந்து, என் சிலுவையைப் பகிர்ந்து கொள்; நேற்றையப் போல்தான் இன்றும் இருக்கிறது; நான் யாரை அனுப்பினாலும், அவர்கள் விமர்சன ஆய்வு செய்கிறார்கள், அவர்கள் துன்புறுத்துகிறார்கள், அல்லது நிராகரிக்கிறார்கள்; ஆபேலின் இரத்தம் தொடங்கி இந்தத் தலைமுறை வரை, நான் அனுப்புபவர்களின் இரத்தம் தொடர்ந்து சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது! சட்ட வல்லுனர்களையும், பரிசேயர்களையும் நான் எச்சரித்து வந்தது போலவே, இன்று என் தூதர்களைத் துன்புறுத்தி என் வார்த்தையை தீர்ப்புடுபவர்களை நான் எச்சரிக்கிறேன்; என் ஆவியைப் பரிகசித்து நகைப்பவர்களை எச்சரிக்கிறேன்; 'உங்கள் சொந்த சாட்சியமே உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுகிறது, உங்களில் ஒருவனும் கூட மாறிவிடவில்லை, உங்கள் கைவேலைகள் அப்படியே நிலைத்திருக்கின்றன, நீங்கள் சிந்திக்கும் விதம் உங்களுக்கு எதிராகப் பேசுகிறது; வழிகாட்டிகளே! ஆன்மச் செய்திகளைப் போதித்தாலும், இன்னும் ஆவியானவரிடமிருந்து வரும் காரியத்தை அலட்சியம் செய்பவர்களே! வழிகாட்டிகளே! என் ஆட்டுக்குட்டிகளை என் திருவுடலைக் கண்டு போஷித்தாலும், என் இரத்தத்தை விலக்கி வைத்திருப்பவர்களே! என் போதனைகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? குறிப்பு: அடிக்கூடிட்ட அனைத்தும் கோபத்திலும் உரத்த சத்தமாகவும் சொல்லப்பட்டது. என் வசுலா, என் முட்களை நீ உணர அனுமதிப்பேன், பகுத்தறிவு வாதம் எப்படி இந்தக் குரு நிலையினரின் இதயங்களை ஆண்டுகொண்டிருக்கிறது என்பதை நீ உணர நான் அனுமதிப்பேன்; நான் உனக்கு என் அப்பத்தை உணவாகத் தந்து கொண்டிருக்கிறேன்; என்னோடு ஒன்றாய் இரு; என் முட்களை உணர், அவை உன் முட்களாகவும் இருக்கட்டும்; ஒவ்வொரு ஆணியும் என்னை துளைத்தது போலவே, உன்னையும் துளைக்கட்டும்; நான் உன்னை எச்சரித்துவிட்டேன், இப்போது கசையடிகளுக்குத் தயாராக இரு; ஆயினும், என் முதுகும் அவர்களுக்குத் திறந்து காட்டப்பட்டது என்பதையும் நினைவில் கொள்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே! மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எனக்குச் செய்தி கிடைத்தது; நான் நம்பிய குருக்களில் ஒருவரும், கடவுளின் செய்தியை நம்பினார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தவருமாகிய ஒரு குரு என்னைக் 'காட்டிக் கொடுத்தார்.' அவர் கொஞ்சமும் இதை நம்பவில்லை, மாறாக, எப்போதும் அதை நம்பி வந்ததாக பாசாங்கு செய்திருக்கிறார். 'கடவுள் இந்த முறையில் எந்த வகையான ஆளுக்கு தம்மை வெளிப்படுத்தவில்லை' என்று அவர் மிகச் சாதாரணமாகக் கூறினார். இது அதிகமாக வேதனைப்படுத்தியது, ஏனெனில் அவர் புரிந்து கொண்டார் என்றும், அவர் ஒரு நண்பராக இருந்தார் என்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு 'நண்பரை' நான் இழந்துவிட்டேன்... இந்தச் செய்தியை மற்றொரு நண்பரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டேன். செப்டம்பர் 6, 1988 ஆண்டவரா! நான்தான்; என் குழந்தாய், நான் இந்தக் காட்டிக் கொடுத்ததலைப் பற்றி உன்னை எச்சரித்திருந்தேன்; வா, என் மீது சாய்ந்து கொள்; இது என்னிடமிருந்து வரவில்லை என்று சொல்பவர்களின் வாதங்கள் எவ்வளவு அர்த்தமற்றவையாக இருக்கின்றன என்பது அறியப்பட்டிருப்பதாக; அவர்களுடைய பக்தி ஆர்வம் தவறாக வழிநடத்தப்படுகிறது; அவர்கள் என் நீதியைத் தெளிவாகக் காண்பதாகத் தோன்றவில்லை, தங்கள் சொந்த எண்ணங்களாலேயே அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்; 'நற்செய்தியைக் கொண்டு வருபவர்களின் காலடியோசை வரவேற்புக்குரிய ஒளியாக இருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது, நான் தேர்ந்து கொள்கிற கருவிகளின் தன்மையைக் கண்டு வியப்படைவர்களுக்கு என்னை தேடாதவர்கள் என்னை கண்டடைந்தார்கள்; என்னை ஆலோசியாதவர்களுக்கு நான் என்னை வெளிப்படுத்தினேன்;' ஆனாலும், அவரிடம் ஒரு நல்ல வாதம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கொடையை பெற்றுக்கொள்ள நான் உண்மையாகவே தவறான ஆளாக இருக்கிறேன். இதற்கு நான் சரியானவள் அல்ல என்றாலும், என் சிநேகிதியான பெயாத்ரீஸ் அவரிடம் மரியா மதலேனை பற்றி என்ன சொல்கிறீர் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், "ஆ, சரிதான்" என்றாலும், அவள் பிற்பாடு மனம் திருப்பப்பட்டாள் என்று சொல்லியிருக்கிறார். ஆக, நான் மனம் திருப்பப்படவில்லை என்று அவர் நம்புகிறாரா? சமாதானத்தோடு இரு; நான் என் புனித இதயத்தில் உன்னை வைத்திருக்கிறேன்; அவர் மட்டும் 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்தால், என்னை ஒரு பாவி என்று அவர் கல்லால் எறிந்திருப்பார். நான் அதை அனுமதித்திருக்க மாட்டேன், 'உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்று, முன்பு நான் சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லியிருப்பேன்; உங்கள் இருதயங்களைத் திறங்கள்! உங்கள் மனங்களை அல்ல! வசுலா, உன் இரட்சகராகி என் மீது சாய்ந்து கொள்; யாருடைய இதயங்கள் எப்போதும் மூடியே இருக்கின்றனவோ, அவர்களுக்காக ஜெபி; தங்கள் காதுகளை மூடிக்கொண்டவர்களுக்காக ஜெபி; சரி, ஆண்டவரே! எஞ்சியுள்ள என் பாடுகளுக்காக உன்னை ஆயத்தப்படுத்து; உன் சிலுவையின் அளவை நான் உனக்கு காட்டி இருக்கிறேன் என்பதை நினைவு கூறுவாய்; சரி, ஆண்டவரே! ஆனால் நீயும் நானும் அதை ஒன்றாகச் சேர்ந்து பகிர்ந்து கொள்வோம்; எல்லாம் வீணாய்ப் போகாது; உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலைச் செய்து முடிக்க நான் உனக்கு உதவி செய்வேன்; அதன்பின்... நீ என்னிடம் பறந்து வருவாய், ஆம்! குறிப்பு: இயேசு மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றினார். வா, நான் பிரசன்னமாய் இருக்கிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே! பிற்பாடு: என் ஆண்டவரா? நான்தான், என் கண்களுக்குள் உற்றுநோக்கு, இடமோ, வலமோ பாராதே; உன் ஆண்டவராகிய என்னைப் பார்; நானே வழி, உண்மை, நித்திய வாழ்வு; எவ்வளவு மாபெரும் அன்போடு நான் உனக்கு என் வார்த்தையை கற்பித்திருக்கிறேன் என்பதை நினைவு கூர்; நீ அறிந்திருக்கிற அனைத்தையும் என்னிடமிருந்தே அறிந்திருக்கிறாய்; என் அரசு முழுவதும் அற்புதங்களால் நிறைந்துள்ளது; நானே ஆல்பாவும், ஒமேகாவுமாக இருக்கிறேன்; என்னை நேசி; உன்னிடம் உள்ள ஒவ்வொரு துளி அன்பையும் எனக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் என்னை ஓர் அரசராக நடத்து; நான் என்னை நேசிப்பதற்காக உன்னை படைத்தேன்; உன்னிடம் உள்ள அன்பை எல்லாம் எனக்குரியதாக மட்டுமே இருப்பதாக; குறிப்பு: இறைவனை அன்பு செய்ய கற்றுக் கொள்வதன் மூலம் நாம் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்ய கற்றுக் கொள்கிறோம்; நான் இன்றி நீ எவ்வளவு பலவீனமாகவும், நிர்பாக்கியம் உள்ளவளாகவும் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்; ஆனாலும், என் கரங்களில் ஒரு சிறு குழந்தையை, ஓர் ஒன்றுமில்லாமையை மட்டும் நான் கொண்டிருக்கிறேன்; இந்த ஒன்றுமில்லாமையில் நீ எனக்கு தந்து கொண்டிருக்கிற இந்த இடத்தில் என் ஆவியானவர் சுதந்திரமாக சுவாசிக்க முடியும் என்றும் நான் அறிந்திருக்கிறேன்; உன்னை அச்சில் வார்த்து வடிவமைக்க என் ஆவியானவரை அனுமதி; நீ கற்றுக் கொள்கிற அனைத்தும் ஞானத்திடமிருந்து வருகிறது; நானே ஞானமாக இருக்கிறேன்; செப்டம்பர் 7, 1988 ஆண்டவர் துதிக்கப்படுவாராக! நம் ஆண்டவர் ஆசீர்வதிக்கப்படுவாராக! இறைவனுக்கு மகிமை உண்டாவதாக! பிதாவே, மரணம் வரைக்கும் நான் உம்மை நேசிக்கிறேன். ஆண்டவரா? நான்தான்; என் குழந்தாய், கேள், நீ உன் ஆண்டவராகிய எனக்காகத் தொடர்ந்து வேலை செய்வாயா? நான் இருக்கிறபடியே உமக்கு நான் தேவை என்றால், நீ எனக்கு தேவை, உன் வார்த்தை கெட்டாத பலவீனம் என்னை கவர்கிறது; வந்து என்னிடமிருந்து கிரகித்துக் கொள்; உயிருள்ளவளாகவும், குணப்படுத்தப்பட்டவளாகவும் இரு! நீ உண்மையை முகமுகமாய் கண்டிருக்கிறாய்; நான் உன்னைக் குணப்படுத்தினேன்; நான் உன்னை மனம் திருப்பினேன்; நான் உன்னை உயர்த்தி என் புனித இதயத்தில் உன்னை வைத்திருக்கிறேன்; நான் உன்னை ஆசீர்வதித்தேன்; உன்னை கொண்டு நான் தொடங்கியுள்ளதை நானே முடிப்பேன்; நீ என் மண்டபத்திலேயே தங்கியிருப்பாய்; என்னால் மட்டுமே உணவூட்டப்படுவாய்; தீமையிலிருந்து உன்னை விளக்கும்படி நான் உன் கண்களை திரையிட்டு வைத்திருக்கிறேன்; நான் உனக்குத் தருகிற இந்த எல்லா வரப்பிரசாதங்களாலும் நீ கர்வம் கொள்வதை நான் விரும்ப மாட்டேன்; என் புனித இதயத்தை உன் இல்லிடமாகத் தந்திருக்கிறேன்; அதன் உள்ளாளங்களுக்குள் தவழ்ந்து செல். அதன் ஆழங்களுக்குள் ஒழிந்துகொள்; அதைவிட்டு ஒருபோதும் வெளியே வராதே; மீட்பராகிய நான் இறுதிவரை அதில் உன்னை மறைத்து வைத்திருப்பேன்; ஆண்டவரே, உமக்கு நன்றி. செப்டம்பர் 9, 1988 ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். நான் கற்றுக்கொண்டது எதுவோ, அதை உம்மிடமிருந்து மட்டுமே கற்றுக்கொண்டேன். ஆனால், ஆண்டவரே, பல திருச்சபை அதிகாரிகள் என்னை ஏழனம் செய்கிறார்கள். இது நீர்தான் என்பதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். உம்முடைய எழுத்துக்களை, குழந்தைகளின் காட்சிகளை, வெளிப்பாடுகளை அவர்கள் புறக்கணித்து தள்ளுகிறார்கள். இவை அனைத்தும் கால்களின் கீழ் மிதிக்கப்படுகின்றன. நீர் மௌனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். என் தேவனே, தயவுசெய்து ஒதுங்கி நிற்காதீர். எங்கள் இரட்சகராகிய ஆண்டவரே, எங்களிடம் விரைந்து வந்து எங்களுக்கு உதவும் வந்திருப்பவர் ஆண்டவர்தானா? நான்தான்; வசுலா, உன்னை ஒடுக்குவோருக்கு நான் தரும் அறிவுரை; நீங்கள் மீண்டும் குழந்தைகளைப் போல் ஆகாவிடில், என் அரசினுள் நுழைய உங்களால் இயலாது என்பதே என் குழந்தாய், ஒவ்வொரு காட்சியும் உண்மை என்று அறிக்கையிடப்படும் காலம் வரும்; என் திருச்சபையில் வெறுமையான காட்சி என்றும், வஞ்சகமுள்ள தீர்க்கதரிசனம் என்றும் எதுவும் இருக்காது என்று நான் சொல்லியிருக்கிறேன்; நான் சொன்னது விரைவில் உண்மையாகும், ஏனெனில் நான் சொல்வதை உன் வாழ்நாளிலேயே நான் நிறைவேற்றுவேன்; உமக்கு நன்றி, ஆண்டவரே. நாங்கள், நாம்? என்றென்றும் ஆமென்.