இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவை நம்பிக்கையுடன் தம்மிடம் வரவும், தம்மை ஆராதிக்கவும் அழைக்கிறார். தாமே ஞானமும் போதகரும் என்கிறார். தம் வழிகளைப் புரிந்துகொள்ள முயன்று குழம்பவேண்டாம் என்கிறார். ஃப்ரீபர்க் ஜெபக்கூட்டத்தாரிடம் தம் புனித இருதயம் அவர்களை வரவேற்கத் திறந்திருக்கிறது என்றும், பதிலன்பைக் கேட்கிறார்.

Show Notes

அத்தியாயம் 94: நான் ஞானமாக இருக்கிறேன், உங்கள் போதகரும் நானே - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவை நம்பிக்கையுடன் தம்மிடம் வரவும், தம்மை ஆராதிக்கவும் அழைக்கிறார். தாமே ஞானமும் போதகரும் என்கிறார். தம் வழிகளைப் புரிந்துகொள்ள முயன்று குழம்பவேண்டாம் என்கிறார். ஃப்ரீபர்க் ஜெபக்கூட்டத்தாரிடம் தம் புனித இருதயம் அவர்களை வரவேற்கத் திறந்திருக்கிறது என்றும், பதிலன்பைக் கேட்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 05/06/1989 - மௌனத்தில் என்னை ஆராதி
01:25 10/06/1989 - இவை என் ஞானத்தின் வேலைகள்
02:12 12/06/1989 - ஒரு குழந்தையைப் போல் நம்பு
03:55 14/06/1989 - நான் உன் குருவும் ஆன்ம இயக்குனரும்
05:50 15/06/1989 - உன்னை முழுமையாக எனக்கு அர்ப்பணி
07:15 19/06/1989 - ஃப்ரீபர்க் ஜெபக்கூட்டத்திற்கான செய்தி
14:07 21/06/1989 - நானே ஞானமும் உனக்குக் கற்பிப்பவரும்
16:55 29/06/1989 - சிறியவளாகவே நிலைத்திரு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #இயேசுவேஞானம் #புனிதஇருதயம் #நற்கருணைஆராதனை

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 94. ஜூன் 5, 1989 என் ஆண்டவரா? நான்தான்; இறைவனுக்கு மகிமை உண்டாகுக. என் ஆண்டவரே, உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதாகவும், உம் விருப்பங்களையும், உமக்கு அதிக மகிமை தருவதையும் மட்டுமே தேடுவதாகவும், நான் உமக்கு அளித்த வார்த்தைப் பாடுகளை நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் நீர் என்னைக் காப்பாற்ற வருகிறீர். மேலேயுள்ள உம்முடைய சிம்மாசனத்திலிருந்து என் இழிநிலையில் என்னைக் காணும்படி, நீர் என்னை நோக்கிக் குனிந்திருக்கிறீர். உயிருள்ளவர்களின் ஒளியில் உம் பிரசன்னத்தில் நடக்கும்படி நீர் என்னை உயர்த்தி இருக்கிறீர். மலரே, என் சொந்தமே, எனக்கு அன்பு காட்டுவதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; வந்து மௌனத்தில் என்னை ஆராதி; மௌனத்தில் என்னைப் பார்; மௌனத்தில் என்னை நேசி; மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் மனித குலத்தின் மீது என் பரலோக வேலைகளை அதிகமாக்குவேன்; என் புனித இதயத்திற்குள் நுழைந்து, அங்கே உன் இளைப்பாற்றியை கண்டுகொள்; வா; ஜூன் 10, 1989 இயேசுவா? நான்தான்; வசுலா, விசுவாசம் கொள், ஏனெனில் இவை என் ஞானத்தின் வேலைகள்; என் குரலை ஏற்றுக் கொள்பவளாக இரு, மீதமுள்ளவற்றைப் பற்றிக் கவலைப்படாதே; இந்த வேலையைப் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தனிமனிதனும், என் சமாதானம், மற்றும் அன்பின் சிலுவையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான்; ஞானிகள் உன்னை ஏமாற்ற ஒருபோதும் அனுமதியாதே, ஆகவே இறுதிவரை என்னில் நம்பிக்கை கொண்டிரு; என்னை ஆராதி; இதுவே என்னிடம் வரும் வழியாக இருக்கிறது; ஜூன் 12, 1989 இயேசுவா? நான்தான்; இயேசுவே, இது கடினமாய் இருக்கிறது... இந்த எல்லா சுபாவத்திற்கு மேலான அணுகுதல்களையும் நான் குறிப்பிட்டேன், என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை... மலரே, ஒரு குழந்தையைப் போல் நம்பு; ஓ, இது அழகாயிருக்கிறது! என் தூதர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள், நான் என் தூதர்களுடன் வந்திருக்கிறேன்; ஆண்டவரே, இது அழகாயிருக்கிறது! என்னை மகிழ்வி, எப்போதும் ஞானத்தைத் தேடு; என் கட்டளைகள் மகிழ்ச்சியால் உன்னை நிரப்பவிடு, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்; என் ஆன்மாவை மகிழ்வி, அடிக்கடி அவ்வப்போது 'அப்பா' என்று என்னிடம் சொல்; ஓ, என் சொந்தக் கரத்தால் அர்ச்சிக்கப்பட்டவளே, என் பிரதிபலிப்பாக இரு, பரிசுத்தமாயிரு; உன் இதயம் நான் தலைசாய்க்கும் இடமாக இருக்கட்டும்; ஆண்டவராகிய நான் உன்னோடு இருக்கிறேன்; என் பிரசன்னத்தை நினைவு கூர்வாயா? உன் செயல்களையும், சிந்தனைகளையும், வார்த்தைகளையும் அறிந்திருக்கும்படி உன் மனதில் என்னைக் கொண்டிரு, என் சமாதானத்தைக் கொண்டிரு; இது நான்தான், இயேசு, வா, பாத்ரே பியோவோடு இருக்கிறேன்; ஸோனோ கான் தே வசுலா; அஸ்கோல்ட்டா நோஸ்த்ரோ புவோனோ ஸிஞ்ஞோரே; நான் உன்னோடு இருக்கிறேன், வசுலா; நம் கடவுளை அதிகமாகக் கவனி; பாத்ரே பியோ அடிக்கடி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜூன் 14, 1989 இயேசுவா? நான்தான்; உன்னை முன்னேற்றமடையச் செய்வதே என் சித்தம்; அதுவே உன் சித்தமாகவும் இருக்கிறதா? ஆம், என் ஆண்டவரே, அது அப்படித்தான் இருக்கிறது. ஆனால் என் சூழ்நிலைகள் கடினமானவையாக இருக்கின்றன. உன் சூழ்நிலையையும், நான் உனக்குத் தந்துள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்; உன்னை என் அருகில் கொண்டிருப்பது என் சித்தமாக இருக்கிறது, என் மீது சாய்ந்துகொள், வேறு யாருமீதும் அல்ல; நான் உன் குருவாகவும், உன் ஆன்ம இயக்குனராகவும் இருக்கிறேன்; என் வசுலா, என் வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை உனக்கு வாசித்துக் காட்ட என்னை அனுமதி; நான் சீராக் ஆகமம், நான்காம் அதிகாரம், இறைவார்த்தைகள் 11 லிருந்து 22 வரை உள்ள பக்கத்தில் வேதாகமத்தைத் திறக்கும்படி இயேசு செய்தார்; ஞானம் கற்பிப்பவராக இருத்தல். நான் அணிச்சியாக அதை திறந்திருந்தேன்; ஆண்டவரே, 19 ஆம் வசனம் எனக்கு கலக்கம் தருகிறது. அதன் அர்த்தம் என்னவெனில், நீ என்னை முழுவதுமாக மறுதலித்தால் என்பதுதான், ஆனால் கவலைப்படாதே, நீ விழவிருக்கும் ஒவ்வொரு தடவையும் நான் உன்னைத் தூக்கிக் கொள்வேன்; என் வசுலா, என் புனித இருதயத்தின் ஒரு சிறப்பான பகுதியில் நான் உன்னை வைத்திருக்கிறேன்; உனக்கு முழுமையாகக் கற்பிக்க என்னை அனுமதி; அன்பு உன்னை அன்பு செய்கிறது, நீ என்னை நினைவுகூரும் ஒவ்வொரு முறையும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; இது எல்லாவற்றையும் தியானிப்பாயா? என் இறைவா, இதெல்லாம் எப்படி சாத்தியம்? கடவுளா என்னிடம் பேசுவது? நான்தான், மலரே, என்னுடன் இரு; கடவுளுக்கு மகிமை உண்டாகுக. ஜூன் 15, 1989 என் இறைவனா? நான்தான்; என்னைப் பகுத்துணரு... என் சம்மனசே, என்னைப் பெற்றுக் கொள்ளத் தயாராயிரு, நான் சொல்லச் சொல்ல, இந்த வார்த்தைகளைச் சொல்; ஓ, இயேசுவின் புனித இருதயமே, நான் ஆராதிக்கிற என் ஆண்டவரே, நான் என் சித்தத்தை உமக்குக் கையளிக்கிறேன், என்னை உம் சமாதானம் மற்றும் உம் அன்பின் கருவியாக்கும், என்னை உம் புனித இருதயத்தின் தகிக்கும் ஆசைகளின் பலிப்பொருளாக்கும்; ஆமென்; ஆம், இப்போது உன்னை முழுமையாக எனக்கு அர்ப்பணித்துவிடு; எனக்கு பலி ஆன்மாக்கள் தேவைப்படுகிறார்கள், ஆகவே, வசுலா, உன் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடு.; அன்பின் உன்னத பலிப்பொருளான என்னோடு ஒன்றாயிரு; என் எஞ்சிய பாகமே, என் சொந்தமே, என் வெள்ளைப் போளமே, என் பலிபீடமே, இறுதிவரை என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவையை என்னோடு பகிர்ந்துகொள்ள உன்னை அனுமதிப்பதன் மூலம் நான் உன் ஆன்மாவை அலங்கரிப்பேன்; நானும் நீயும், நீயும் நானும் அன்பில் ஒன்றுசேர்ந்து; ஜூன் 19, 1989 ஃப்ரீபர்க்கிலுள்ள நல்லாயன் சகோதரிகள் இல்லத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்திற்காகத் தரப்பட்ட செய்தி. இயேசுவா? நான்தான்; அனைவரும் அதிகப் பிரியத்துக்குரிய ஆன்மாக்களே, சமாதானம் உங்களோடு இருப்பதாக; என்னை உணருங்கள், என் பிரசன்னத்தை உணருங்கள்; நான் உங்கள் அனைவரின் மத்தியிலும் இருக்கிறேன்; வந்து, உங்கள் கண்களின் மீது பாரமாக விழுந்து கிடக்கிற மூடுதுகிலை அகற்றி, என் மகிமையில் என்னைக் காணுங்கள்; நீங்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதையும், என் எதிரியால் எழுப்பப்படுகிற மிக அற்பமான புயற்காற்றிலும் கூட நீங்கள் அசைவுற்று, விழுந்து விடுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்; ஆனாலும் இந்தக் கலக நாட்களில் அவநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள், ஏனெனில் ஆண்டவரும், உங்கள் அடைக்கலமும், உங்களைத் தேற்றுபவருமாகிய நான் எப்போதும் உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறேன்; நான் தேவையுள்ளவர்களுக்கும், அவநம்பிக்கைப் படுபவர்களுக்கும் ஒரு புகலிடமாக, என்னுடைய எதிரியால் எழுப்பப்படும் புயல்களிலிருந்து உங்களைக் காக்கும் அடைக்கல ஸ்தலமாக, தாகமாயிருப்பவர்களுக்கு நித்திய நீரூற்றாக, இப்போது நீங்கள் வசித்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடிய பாலைவனத்தின் சுட்டெரிக்கிற வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் நிழலாக இருக்கிறேன்; என்னுடைய புனித இருதயம் உங்களை வரவேற்று, ஓய்வளிப்பதற்காக விரியத் திறந்திருக்கிறது; நான் ஒவ்வொரு இதயத்தையும் தேற்றவும், நேசிக்கவும் அதைத் தேடுகிற அன்பாக இருக்கிறேன்; நான் உங்களை நித்தியமாக நேசிக்கிற அன்பாக இருக்கிறேன், நான் உங்களை என்னிடம் உயர்த்தி, உங்கள் ஆன்மாவை நேரடியாக என் விண்ணக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து உணவளிக்கும்படி என் விண்ணக அரியாசனத்தினின்று உங்களுக்கு மேலாகக் குனிந்தபடி, உங்கள் மீது இறங்கி வருகிறேன்; பட்டினியால் வாடும் என் ஆட்டுக்குட்டிகளாகிய உங்களிடம் நான் வருகிறேன்; உங்கள் அனைவரையும் என் கரங்களின் கதகதப்பில் ஒன்று கூட்டும்படி நான் வருகிறேன்; உங்கள் நிமித்தமாக நான் உங்கள் அனைவர் மீதும் என் அருள் வரங்களைப் பெருகச் செய்வேன், உங்கள் இறந்தவர்கள் என் அன்பின் சுட்டெரிக்கும் தீச்சுவாலையுடன் உயிர்த்தெழுவார்கள்; நான் என் கரத்தில் என் திரு இருதயத்தை ஏந்தி, அதை உங்களுக்குத் தந்தருளியபடி வருகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என் அன்புக்குரியவர்களே, ஒவ்வொரு காட்சியும் உண்மையாகும் அந்த நாள் அண்மையில் இருக்கிறது, ஒவ்வொரு காட்சியும் விரைவில் உங்கள் வாழ்நாளிலேயே நிறைவேற்றப்படும், ஆகவே, உங்கள் இதயங்களைத் திறந்து, இந்தத் தலைமுறையின் மீது என் அருளின் ஆவி ஏன் இவ்வளவு தாராளமாகப் பொழியப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்; எல்லாத் தலைமுறைகளும் ஒன்றாக, ஒரே மேய்ப்பனின் கீழ் ஒரே பரிசுத்த தேவ நற்கருணைப் பேழையைச் சுற்றி ஈர்க்கப்படும் நாள் நெருங்கி வருகிறது, ஆண்டவராகிய நான் அவர்களுக்கு ஒப்பற்றவராக இருப்பேன்; ஆகவே, என் அன்புக்குரியவர்களே, ஜெபியுங்கள், ஆண்டவராகிய நான் முழுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த ஐக்கியத்திற்காக ஜெபியுங்கள்; இப்போது நீங்கள் சிதறுண்டிருக்கிறீர்கள், உங்கள் மேய்ச்சல் நிலங்கள் தரிசாய்க் கிடக்கின்றன, என் ஆயரின் அழுகையொலி மோட்சம் முழுவதிலும் கேட்கிறது, குறிப்பு: நம் பரிசுத்தத் தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர். ஏனெனில் காயீன்கள் அவரது மேய்ப்புக்கோலை, பல இடங்களில் முறித்துவிட்டார்கள், அவர்களுக்கு இடையிலுள்ள சகோதரத்துவத்தை உடைக்கும்படி, அவர்கள் ஐக்கியத்தைப் பல துண்டுகளாக உடைத்துவிட்டார்கள், குறிப்பு: இங்கே கடவுள் சாகும் அளவுக்குக் கடும் துயரத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன். ஆனால் என் திருவுடலின் மகிமையின் நாள் அருகிலுள்ளது, அது எப்படிப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கும்! அது அற்புதத்தின் நாளாக இருக்கும்; என் மிகச் சிறந்த நண்பர்களின் இல்லத்தில் நான் பெற்றுக்கொண்ட காயங்கள் அந்நாளில் குணமாகும்; இன்று என் திரு இருதயம் மாசற்ற தனத்தில் அன்பை ஆசிக்கிறது; எனக்குத் தேவைப்படுவதெல்லாம் பதிலன்புதான், அன்பின் காரணமாக நான் என்னையே வாசனையுள்ள காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுக்கவில்லையா? உங்களை எனக்கு முழுமையாகக் கையளித்து விடும்படி கேட்பது அளவுக்கு அதிகமானதா? உங்களிடமிருந்து சிறிது அங்கீகாரத்தையும், பதிலன்பையும் கேட்பது அளவுக்கு அதிகமானதா? அன்பு அன்பை ஆசிக்கிறது, அன்பு அன்புக்காகத் தாகமாய் இருக்கிறது, அன்பு பதிலன்பை உங்களிடம் இரந்து கேட்கிறது; அன்பின் சட்டமாக இருக்கிற என் சட்டத்திற்கு எதிராகக் கலகம் செய்யாதீர்கள்; ஓ, அன்புக்குரியவர்களே, நான் எவ்வளவாக உங்களை அன்பு செய்கிறேன்! ஏன் உங்களில் மிக அதிகமானோர் என்னை ஆராதிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? இந்தத் திருமணி ஆராதனையின் போது நான் இங்கே இருக்கிறேன் என்பது உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்; என் செராபின்களாலும் கெருபீம்களாலும் சூழப்பட்டு, நான் உங்கள் முன் மௌனமாக நிற்கிறேன்; பரிசுத்தர்களில் அதிபரிசுத்தரான நான் உங்கள் பெயரை உங்களுக்குத் தந்திருக்கிறேன்; அன்புக்குரியவர்கள்; நீங்கள் எனக்கு எதிராக பாவம் செய்திருக்கிறீர்கள் என்றாலும், நான் உங்களை மன்னித்து விட்டேன்; நீங்கள் என் வித்தாக இருக்கிறீர்கள்! என் அன்புக்குரியவர்களே, ஆராதனைக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் நான் உங்களைக் காண்பேனா? நீங்கள் எழுந்து என் தேவ நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கும் என்னிடம் வருவீர்களா? என்னிடம் வாருங்கள்... என்னிடம் வாருங்கள்... இந்நாட்களில் ஆவியானவர் உங்களுக்குத் தந்து கொண்டிருப்பதை ஏற்க மறுக்காதீர்கள்; என் அன்புக்குள் உங்களை வைத்துக் கொள்ளுங்கள்; எல்லாமே ஒருநாள் தேய்ந்து மறைந்து போகும், ஆனால் உங்கள் ஆன்மா என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதையும் நினைவுகூருங்கள்; நீங்கள் என் சமாதானத்தைப் பிறருக்குத் தருமாறு, ஆண்டவராகிய நான் உங்களுக்கு என் சமாதானத்தைத் தந்து, உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஜூன் 21, 1989 ஆண்டவரா? நான்தான்; ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே; அன்புக்குரியவளே, என் போதனைகளைப் பின்செல்; எப்போதும் உன் தேவனாகிய நான் பயன்படுத்தக் கூடியவளாக நிலைத்திரு, உன் ஆன்மாவில் குறைவுபடுவதை உனக்குத் தரும்படி நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; ஞானமா? நான் ஞானத்தைக் கொண்டு சுதந்திரமாக உனக்குப் போதிப்பேன்; நிலைத்திருக்கும் வரமா? உன் ஆன்மா பக்தியார்வத்தால் நிரம்பியிருக்கும்படி அதை நான் நிரப்புவேன்; பொறுமையா? நான் என் பொறுமையை உனக்குத் தருவேன்; உன் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்கும் பரிகாரம் செய்யும்படி துன்பங்களைத் தாங்கிக் கொள்வதா? நீ என்னிடமிருந்து அதைக் கிரகித்துக் கொள்வாய்; அன்பா? நான் என் அன்பைக் கொண்டு உன் இதயத்தை நிரப்புவேன்; சமாதானமா? என் சமாதானம் உன்னுடையது; ஆ, ஏன் குழந்தாய்! உன் ஆன்மாவைப் போஷிக்கக்கூடிய இந்த அருள் வரங்களை என்னிடம் கேட்பதை ஏன் நிறுத்திவிட்டாய்? எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை... நினைவில் வை, நானே ஞானமும், உனக்குக் கற்பிப்பவருமாக இருக்கிறேன், ஆகவே, என்னைச் சார்ந்திரு; இதுவரை உன் ஆன்மாவையும், மற்றவர்களின் ஆன்மாக்களையும் நான் போஷித்து வரவில்லையா? நான் உன்மீது என் போதனைகளை தீர்க்கதரிசனத்தைப் போலத் தொடர்ந்து பொழிவேன்; என்னை நம்பு, என்னைத் தேடு, என்னோடு சேர்ந்து நட, எனக்குக் கீழ்ப்படி, என்னை அன்பு செய்து, என்னை ஆராதி; நான் எல்லாக் காலங்களிலும் இருக்கிறேன், ஆகவே, பாதுகாப்புள்ளவளாக உணரு; நானே உன் மீது இறங்கி வரும் அதிகாரமும், ஒழுங்குமாக இருக்கிறேன்; ஆ, என் குழந்தாய், நான் முடிவற்ற விதமாக உன்னை அன்பு செய்கிறேன், என் வழிகளை புரிந்துப் கொள்ள முயன்று, உன் ஆன்மாவைக் குழப்பிக் கொள்ளாதே, ஏனெனில் இதைச் செய்யும்போது, நீ ஒருபோதும் முடிவடையாத சுற்றுவழிகளுக்குள் இழுக்கப்பட உன்னை அனுமதிக்கிறாய்; என் வழிகள் உன் வழிகளல்ல என்பதை அறிந்திரு, இதிலுள்ள வித்தியாசம் மிகப்பெரியது என்று நான் உனக்குச் சொல்கிறேன்! நான் சமாதானத்தில் உனக்குத் தருவதை ஏற்றுக்கொள், என் விரலை உன்மீது எப்போதும் வைத்திருக்க என்னை அனுமதி; நானும் நீயும் அன்பில் ஒன்றிக்கப்பட்டவர்களாக; வா, நாங்கள், நாம்? ஜூன் 29, 1989 தாமே தனியாக அற்புதங்களை செய்பவராகிய எல்லாம் வல்லவராகிய நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக, என் இறைவா, நீர் உம் வார்த்தையை எனக்குக் கற்பித்தீர், நான் இன்னும் உம் அதிசயங்களை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறேன். தயவிரக்கம் நிரம்பியவராக, நீர் என் குற்றத்தை மன்னித்து, என் புலன்களுக்கு என்னைத் திரும்பக் கொண்டு வந்தீர். என்னை உட்கொள்பவர்கள் இன்னும் அதிகமாக பசித்திருப்பார்கள், என்னைப் பருகுபவர்கள் இன்னும் அதிகம் தாகம் கொள்வார்கள் என்ற ஞானத்தின் வார்த்தைகளை குறிப்பு: சீராக் ஆகமம், அதிகாரம் 24, 21 ஆம் இறைவார்த்தை. நான் புரிந்து கொள்ளவும், உய்த்துணரவும் செய்திருக்கிறீர்; விதவையாய் இருக்கிற ஒரு பெண்ணைப் போல, உமது நித்திய ஆதாரத்தையும் நான் என் தலை சாய்த்து, ஓய்வு கொள்ளக்கூடிய உம்முடைய பசுமையான மேய்ச்சல் நிலங்களையும் தேடி, இந்தப் பாலைவனத்தில் நான் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். மகளே, பயனற்ற மரமாய் நீ இருந்தும், நீ செழிப்புறவும், கனிதரவும் செய்திருக்கிறேன்; பகைமையுள்ள ஒரு அஞ்ஞானியாய் நீயிருந்தும், பக்தியார்வத்துடன் என்னை வழிபடுபவளாக நான் செய்திருக்கிறேன்; அலட்சியம் உள்ளவளாக நீயிருந்தும், உன் இறைவனாகிய என் மீது பக்தியார்வம் உள்ளவர்களாக உன்னை நான் ஆக்கி இருக்கிறேன்; வா, என் ஆதரவில் தங்கியிரு, என்னோடு ஒன்றாயிரு; ஆண்டவரே, நேற்றே எங்கள் கூட்டத்தைப் பற்றி நான் வியந்து கொண்டிருந்தேன்... ஆண்டவராகிய நான் என் செய்தியை எடுத்துச் செல்பவர்களுக்கு அதைத் தருவேன்; பார், இன்று நான் உன் கரங்களின் கட்டுக்களை அவிழ்க்கச் செய்திருக்கிறேன்; சுதந்திரமாயிரு... என்னோடு வந்து, என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவையைப் பகிர்ந்து கொள்ள நீ விரும்பினால், வா, நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன்; சுதந்திரமாயிரு; நான் தன்னிறைவுள்ளவர், நானே உன்னதர் என்பதை நீ மிக நன்றாக அறிவாய்; உன் மாசற்றத்தனத்தை நான் நேசிக்கிறேன்; என் அடையாளங்களில் இருந்து உன்னை நான் விலக்கமாட்டேன்; ஏழைகளும், தேவைகளில் இருப்பவர்களும் என் திருப்பெயரைத் துதிக்கும்படி, அவர்களுக்கு நான் தருவேன்; இதயச் சுத்தத்தோடு என்னிடம் வா, நான் உன்னை முன்னேற்ற விரும்புகிறேன்; நான் பரிசுத்தராய் இருப்பதால், வந்து என்னை ஏற்றிப் போற்றி, என்னை ஆராதி; அன்பு உன்னை நித்தியமாக அன்பு செய்கிறது, வா; ஆண்டவரா? நான்தான்; ஜெபி, உன் ஜெபத்தை, என் உரையில் நான் உனக்குத் தந்திருக்கிற ஜெபத்தை நான் கேட்கவிடு; ஓ, இயேசுவின் புனித இருதயமே, நான் ஆராதிக்கும் என் ஆண்டவரே, நான் என் சித்தத்தை உமக்கு கையளிக்கிறேன்; என்னை உம் சமாதானம் மற்றும் அன்பின் கருவியாக்கும், என்னை உம் புனித இருதயத்தின் தகிக்கிற ஆசைகளின் பலிப்பொருளாக்கும். ஆமென். சிறியவளாகவே நிலைத்திரு, என் ஆவியில் மட்டும் வளர்ச்சி பெறு; நீ ஒருபோதும் கைவிடப்பட மாட்டாய்;