இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசுவின் புனித இதயம் ஆன்மாக்கள் அவர் சொல்வதைக் கேட்காததால் காயப்பட்டிருக்கிறது. "என் நாள் வரும்போது, நான் எல்லாத் தீமையையும் அகற்றுவேன்" என்றும், அதற்கு முன் சுத்திகரிக்க இறங்கி வருவேன் என்றும் அவர் கூறுகிறார். அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள், பாவங்களை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றும் அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 81: என் நாள் வரும் போது, நான் அனைத்து தீமையையும் அகற்றுவேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசுவின் புனித இதயம் ஆன்மாக்கள் அவர் சொல்வதைக் கேட்காததால் காயப்பட்டிருக்கிறது. "என் நாள் வரும்போது, நான் எல்லாத் தீமையையும் அகற்றுவேன்" என்றும், அதற்கு முன் சுத்திகரிக்க இறங்கி வருவேன் என்றும் அவர் கூறுகிறார். அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள், பாவங்களை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றும் அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 10/11/1988 - புனித இதயத்தின் காயங்கள்; என் நாள்
05:56 14/11/1988 - பாத்ரே பியோ; அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள்
08:39 15/11/1988 - என் சிலுவையை உணர்; என்னை இளைப்பாற்று

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #EnNaalVarumPothu #PuthiyaBoomi #PunithaIdhayam

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 81. நவம்பர் 10, 1988 கடவுளுக்கு மகிமை உண்டாவதாக; குறிப்பு: புனித மிக்கேல். கடவுளுக்கு மகிமை உண்டாவதாக; குறிப்பு: புனித மாமரி. இது அவர்களிடம் செய்யப்பட்ட ஜெபங்களுக்குப் பிறகு சொல்லப்பட்டது. என் இறைவனா? நான்தான்; இந்த நேரத்திற்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தேன்; இயேசுவும் நானும் இந்த முறையில் சந்திக்க மிகக் கவலையோடும், ஆவலோடும் இருந்தோம். என் வசுலா, நான் சொல்வதைக் கேள்; வந்து என் புனித இதயத்தைத் தொடு; அதன் காயங்களை உணர்; என் புனித இதயம் வேதனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது அடையாளம் காண முடியாத அளவுக்கு காயப்பட்டுள்ளது; ஆன்மாக்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை... அவர்கள் நூற்றுக்கணக்கில் சாத்தானின் வலைகளுக்குள் விழுகிறார்கள்.... பிற்பாடு: சிறியவளே, நான் உன்னைக் கைவிடமாட்டேன், அல்லது தனியாக விட்டுவிடமாட்டேன்; கேட்டு, எழுது; என் திருச்சபை உட்பட இருக்கும் பெரும் துன்பத்துக்குப் பிறகு, நீங்கள் வானத்தில் மாபெரும் அடையாளத்தைக் காண்பீர்கள், என்னை நேசிக்கிறவர்கள் அனைவரும் அப்போது அகமகிழ்ந்து என்னைப் போற்றித் துதிப்பார்கள்; ஆனால் என் திருப்பெயரை அவமதித்தவர்கள் இன்னும் அதிக ஆழமான இருளுக்குள் விலகிச் சென்று முழு அறியாமைக்குள் விழுவார்கள்; என் அடையாளம் என் கட்டளைகளைக் கடைபிடித்தவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் என் வார்த்தையை அனுசரித்து என்னைக் கனப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள்; அவர்கள் என் திருச்சபையின் பொற் தூண்களாக, அதன் சரீரத்தின் திடமான அஸ்திவாரமாகவும், பலமான கட்டுமானமாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள்; அவர்கள் அதனுள் இருக்கிற சுத்திகரிக்கிற தூபமாக இருக்கிறார்கள்; ஆண்டவராகிய நான் இந்த ஆன்மாக்களை உயர்த்தி, அவர்களை என் புனித ஜெருசலேமில் என்றென்றைக்குமாக வைப்பேன்; அவர்களுடைய புதிய இல்லம் மேலிருந்து அவர்களுக்குத் தரப்படும், ஏனெனில் மேலிருந்து என் புதிய திருப்பெயர் உங்களுக்கு மீண்டும் தரப்படும், அவர்களும் நானும் ஒன்றாய் இருப்போம்; என் மக்களாகிய நீங்கள், என் புதிய பெயருடன் நீங்கள் கடவுளற்றவர்கள் என்று அழைக்கப்பட மாட்டீர்கள், மாறாக, நான் உங்களுக்கு என் திருப்பெயரைத் திரும்பத் தருவேன்; என் நாள் வரும்போது, நான் எல்லாத் தீமையையும் அகற்றி, அவற்றைப் பூட்டி வைத்திருப்பேன்; அன்பின் ஆண்டவராகிய நான் இந்த புதிய பூமி அன்பின் விதைகளை முளைப்பிக்க அனுமதிப்பேன், நான் அதைத் திறப்பேன், பாறைகளில் இருந்தும் கூட புதிய நீரூற்றுகளைப் புறப்படச் செய்வேன்; நான் உண்மையாகவே என் தோட்டத்தைச் செழிப்பாக்குவேன்; உங்கள் நிமித்தமாக, உங்களைப் போஷிக்கும்படி என் பரிசுத்த வானதூதர்களை உங்கள் மீது இறங்கி வர அனுமதிப்பேன்; என் புனிதர்கள் உங்கள் போதகர்களாக அனுமதிப்பேன், அவர்கள் என் பரிசுத்த வார்த்தையை உங்களுக்குப் போதித்து, உங்கள் நண்பர்களாக உங்களை வழிநடத்துவார்கள்; அன்பு ஒவ்வொரு இருதயத்திலும் அரசாளும். புண்ணியம் என் புதிய பூமியைச் சேர்ந்த என் எல்லா மக்களுக்கு ஒரு மகுடமாக அணிவிக்கப்படும், நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன்; அது விரைவில் நிறைவேற்றப்படும்; என்றாலும், இதற்கு முன்பாக உங்களைச் சுத்திகரிக்க நான் இறங்கி வருவேன்; செம்பொன் உலையில் சுத்திகரிக்கப்படுவது போல, நான் உங்களைச் சுத்திகரிப்பேன், சகல அசுத்தங்களும் இந்த நெருப்பில் சுட்டெரிக்கப்படும், ஒரு சாபத்தைப் போல, இந்த பூமியை மூடுகிற அசுத்தம் முழுவதையும் கழுவிப் போக்கும்படி, இந்த எல்லாக் காரியங்களையும் நான் செய்ய வேண்டியுள்ளது; நான் அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன், நிகழ்ந்த அனைத்தும், இனி நிகழ இருக்கிற அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு வார்த்தையும் என் ஏட்டுச் சுருளில் எழுதப்பட்டிருக்கிறது, இந்த ஏட்டுச் சுருள் திறக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு, அதன்பின் உட்கொள்ளப்பட வேண்டும்; ஆண்டவராகிய நான் என் சொந்த இரத்தத்தால் அதை சுத்தமாக்கி இருக்கிறேன், ஆகவே, அதை உண்ணுங்கள், என்னை வாசியுங்கள்.... படைப்பே, ஞானம் உங்களைப் போஷித்து, என் ஞான நூல்களில் இன்னும் மறைவாய் இருக்கிற உண்மைகளையும், பரம இரகசியங்களையும் வெளியாக்க உங்களுக்கு உதவும்படி, அது உங்கள் மீது இறங்கி வருமாறு ஜெபி; அடிக்கடி மனஸ்தாபப்படு, நான் எப்போதும் உன்னை மன்னிக்கிறேன்; மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; உன் சிறு கரத்தைப் பயன்படுத்த என்னை அனுமதித்ததற்காக நான் உன்னை நேசிக்கிறேன்; 'கேட்கச் செவியுள்ளவன் கேட்கக் கடவான்' என்று சொல்வதோடு, இன்றைய என் செய்தியை நான் முடித்துக் கொள்கிறேன்; வா, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நாங்கள் நாம்? நித்தியத்திற்குமாக, ஆண்டவரே. ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக. ஆமென். நவம்பர் 14, 1988 இன்று நான் இயேசுவின் வார்த்தைகளின் படி ஒரு பெரும் புனிதரான பேட்ரோபியாவின் படத்தைப் பார்த்தேன். அவருடைய படத்திற்குக் கீழே செலோபனால் சுற்றப்பட்ட இடத்தில், அவருடைய துணித்துண்டு ஒன்று இருக்கிறது. அது இருண்ட பழுப்பு நிறம் உள்ளது, ஏனெனில் அவர் ஒரு கப்புச்சின் துறவியாக இருந்தார். அவரை உற்றுநோக்குவதன் மூலம், அவரை விரும்பியதால், அவருடைய ஆடைகளில் ஒன்றின் ஒரு சிறு துண்டோடு இந்த படத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்று நான் அறிந்து கொண்டேன். ஆகவே, அவர் ஒரு பெரிய புனிதர் என்பதால், நான் அவரிடம் ஜெபித்தேன், என்னில் எதை அனைத்திலும் மோசமானதாகக் கொண்டிருக்கிறேனோ, அதில் என்னை சீர்படுத்தும்படி நான் அவரிடம் கேட்டேன். அதன்பின், நான் அநேகமாக தீமையான காரியங்களால் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்பதால், மீண்டும் யோசனை செய்து, என்னிடமிருந்து குறைந்தது இரண்டு காரியங்களையாவது அகற்றி விடும்படி நான் அவரிடம் கேட்டேன். என் வீண் பெருமையை முழுமையாக அகற்றவும், ஆண்டவரில் என் விசுவாசத்தைப் பலப்படுத்தவும் எனக்கு உதவும்படி நான் கருத்துக் கூறினேன். ஆண்டவரா? நான்தான்; உனக்காகப் பரிந்து பேசும்படி பாத்ரே பியோவிடம் கேட்குமாறு நான்தான் உன்னைத் தூண்டிவிட்டேன்; வா, இன்று நீ நான் சொல்வதைக் கேளாமல் என் செய்தியை எழுதுவாய்; நான் உன் கரத்தை மட்டும் இயக்குவேன்; இப்போது இயேசு என் செவிப்புலனை மந்தமாக்கிவிட்டார். அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள், நான் உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி அவற்றையெல்லாம் என்னிடம் கொண்டு வாருங்கள்; நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள், நான் உங்களை உத்தமமானவர்கள் ஆக்குவேன்; என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்துங்கள், எந்நேரமும் என்னை வாழ்த்திப் போற்றுங்கள்; நானே ஆண்டவர்; ஆண்டவர் விரும்பியபடி இது எழுதப்பட்டது. என்னால் அர்ச்சிக்கப்பட்டிருக்கிற என் அன்புக்குரியவர்களே, என் கரத்தைப் பிடித்துக்கொண்டு என்னோடு வாருங்கள். நான் ஞானத்தைக் கொண்டு உங்களுக்குப் போதிப்பேன்; திடீரென மிக உயிரோட்டமான முறையில் ஆண்டவருடைய பிரசன்னத்தை நான் உணர்ந்தேன். வசுலா, நீ முழுமையாக விசுவசிக்கும் போது, நான் உன்னில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை நீ அறிவாயா? குறிப்பு: நம் ஆண்டவரின் உண்மை பிரசன்னத்தில் இயேசு மிக மிக மகிழ்ச்சியாக இருந்தார்! நானும் தான்... என்னைப் பகுத்துணர், அது என்னை மிக அதிகமாக மகிழ்விக்கிறது; வா, நாங்கள், நாம்? ஆம், நாங்கள், நாம். நவம்பர் 15, 1988 இன்று நான் இயேசுவின் சிலுவையை என் தோள்களின் மீது உணர்ந்தேன். அவருடைய இதயம் மிகக் கடுமையான வேதனையால் நிரப்பப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அவர் எவ்வளவாகத் துன்புறுகிறார்... ஆண்டவரை மறுதலிக்கிற உலகத்திற்காக. ஆண்டவரா? நான்தான்; என் ஒளியின் குழந்தாய், என் சிலுவையை உணர், என்னை இளைப்பாற்று; நான் மிகவும் களைத்திருக்கிறேன், என் அருகில் தங்கியிரு; இந்த ஆறுதலற்ற நிலையில் நான் ஆறுதல் படுத்தப்படுவது தேவையாயிருக்கிறது; என் வசுலா, நான் சொல்வதைக் கேட்டு எழுது; ஓ, படைப்பே! என் வித்தே! நான் உன் பரிசுத்தர், ஆனால் நீயோ என்னைத் தண்டனைத் தீர்ப்பிடுகிறாய்; நான் நித்தியத்திலிருந்தே உங்களை நேசித்திருக்கிறேன், ஆனால் நீங்களோ என்னை நிந்தித்து வெறுக்கிறீர்கள்; நான் மரணத்திலிருந்து உங்களை விடுவித்தேன், ஆனால் நீங்களோ என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்; நான் என் அப்பத்தைக் கொண்டு உங்களுக்கு உணவளித்து, என் திராட்சை இரசத்தைக் கொண்டு உங்களை நிரப்புகிறேன், நீங்களோ உங்கள் தீமையைக் கொண்டு என்னை நோகச் செய்கிறீர்கள்; நான் நேசத்திற்காகத் தாகமாய் இருக்கிறேன், ஆனால் நீங்களோ என் தாகத்தில் என்னைக் கைவிடுகிறீர்கள்; நீங்கள் களைப்பாய் இருப்பதைக் காணும்போது, என் இருதயத்தில் வைத்து உங்களை இளைப்பாற்ற நான் உங்களை வரவேற்கிறேன், ஆனால் நீங்களோ என்னை மறுதலிக்கிறீர்கள்; நான் உங்களுக்காக என் இருதயத்தைத் திறந்து, நீங்கள் உங்கள் கொடுந்தன்மையில் எப்படி அதைக் காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டுகிறேன், நீங்களோ மீண்டும் மீண்டும் அதை கத்தியால் குத்தி, அதைத் துளைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்; நான் உங்களை வரவேற்கவும், உங்களை அரவணைத்துக் கொள்ளவும் என் கரங்களை விரிக்கிறேன், ஆனால் நீங்களோ உங்கள் முதுகுகளை எனக்குக் காட்டியபடி திரும்பிக் கொள்கிறீர்கள்; கனிவு நிரம்பியவராக, நான் உங்களை உஷ்ணப்படுத்தும்படி என் புனித இதயத்தைத் திறக்கிறேன், ஆனாலும் நான் உங்களிடம் வரும்போது... நீங்கள் என் முகத்திற்கு நேராக உங்கள் கதவை மூடிக்கொண்டு, வெளியே குளிரில் என்னை விட்டு விடுகிறீர்கள்; ஒரு பிச்சைக்காரனைப் போல, நான் உங்களை உயர்த்தவும், உங்களைக் குணப்படுத்தவும், என் கரங்களை உங்களை நோக்கி விரித்தபடி நாள் முழுவதும் உங்களை அழைக்கிறேன், ஆனால் நீங்களோ அதற்குப் பதிலாக, என் தாயை அலட்சியம் செய்து, என்னை மறுதலிக்கிறீர்கள்; என் கண்களும், என் தாயாரின் கண்களும் துன்பத்தால் தேய்ந்து போய்விட்டன; என் உடல் தனது காயங்களால், அடையாளம் காண முடியாத அளவுக்கு வேதனைக்குள்ளாய் இருக்கிறது; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் சமாதானமும், அன்புமே, ஆனால் நீங்களோ என் வேண்டுகோள்களைக் கேட்க மறுக்கிறீர்கள்... நான் என் சொந்த மக்களிடம் முதலில் வந்தேன், ஆனால் மீண்டும் அவர்களாலேயே நான் மறுதலிக்கப்படுகிறேன், நிந்திக்கப்படுகிறேன், துன்புறுத்தப்படுகிறேன்; நீங்கள் தொடர்ந்து என்னைத் தாக்கினீர்கள், ஒரு கோமாளியைப் போல என்னை நடத்தினீர்கள், என்னைக் காட்டிக் கொடுத்தீர்கள்!... குறிப்பு: இயேசுவின் குரல் கசப்பு நிரம்பியதாக இருந்தது. உங்கள் துரோகத்தால் என் கண்களில் உள்ள இறுதித் துளி கண்ணீரையும் நான் சிந்திவிட்டேன், உங்கள் கெடுமதி நித்தியத்தை முழுவதுமே ஊடுருவி, உங்கள் கெடுமதியைக் கண்டு பசாசுகளும் கூட வாய் பிளக்கச் செய்கிறீர்கள்; ஆ, வசுலா... நான் என் பரிதாப உணர்வாலும் பெரும் இரக்கத்தாலும் உங்களை எச்சரிக்குமாறும், மரணத்திலிருந்து உங்களை விடுவிக்குமாறும் வந்திருக்கிறேன்; நான் உன்னை என் சொந்த மக்களிடம் அனுப்பி இருக்கிறேன், ஆனால் அவர்களோ வெளிச்சத்திற்கு வந்து, தங்கள் குற்றத்தை வெளியாக்குவது பற்றிய பயத்தால் என் குரலை முடக்கினார்கள்; அவர்கள் என் குரலை முடக்குவதாலும், என் உண்மையின் ஆவியை வரவேற்காததாலும், நான் அந்நியர்களால் அவர்களுடைய பாவங்கள் வெளியாக்கப்படச் செய்வேன்; நான் உங்கள் வீடுகளின் கூரைகளின் மீது என் குரல் ஓர் எக்காலத்தைப் போல ஒலிக்கச் செய்வேன்... குறிப்பு: சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பின் துயரமாக. என்னை எப்போதும் அறியாத அந்நியர்களால் நான் வரவேற்கப்பட்டேன்; நான் அவர்களுடைய கதவுகளைத் தட்டினேன், நான் உள்ளே நுழைய அவர்கள் அனுமதித்தார்கள்; தங்கள் வறுமையையும் மீறி, அவர்கள் தங்கள் உணவைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள என்னை அனுமதித்தார்கள்; அவர்கள் தங்கள் வறுமையின் காரணமாக என்னைத் தேடவில்லை, ஆனாலும் அவர்கள் என்னைக் கண்டடைந்தார்கள்; நான் என் மிகச்சிறந்த நண்பர்களால் எனக்கு உண்டான காயங்களை அவர்களுக்குக் காட்டினேன், அவர்கள் என் காயங்களுக்கு முன்பாக முழந்தாளிட்டார்கள்; அவைகளைக் கொண்டு அவற்றின் ஆழத்தால் தாக்குண்டு, என் திருவுடலின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு மிராண்டித்தனத்தால் தாக்கப்பட்டு, அவர்களுடைய இதயங்கள் மெழுகைப் போல உருகின; என் குழந்தாய், அழாதே; என் குரல் அந்நியர்களால் சுமந்து செல்லப்படும்; நீ எதிரொலியைக் கேட்கும்போது, அது என்னிடமிருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்; என்னை ஒருபோதும் தேடிராத அந்நியர்களால் நான் உயர்த்தப்படுவேன்; என்னை ஒருபோதும் அறிந்திராதவர்களால் நான் மகிமைப்படுத்தப்படுவேன்; நான் அவர்களுடைய குருவாகி, அவர்களுக்குக் கற்பிப்பேன், அவர்களுடைய பாவங்களை நான் விலக்குவேன்; நான் அவர்களோடு வாதிடுவேன், அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள்; அவர்கள் என் காயங்களை குணமாக்குவார்கள்; நானே மேய்ப்பன், என் ஆட்டுக்குட்டிகள் தங்கள் ஆயர்களால் தாக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டிருப்பதால், நான் அவற்றை ஒன்று கூட்டுவேன்; ஓ, வசுலா, இதெல்லாம் இனி மிக விரைவில் நிறைவேற்றப்படும்; வா, என்னில் ஓய்வெடு; உன்னில் ஓய்வெடுக்க என்னை அனுமதி; அன்பில் கட்டுண்டவர்களாக, நாம் பகிர்ந்து கொள்வோம்; சரி, என் ஆண்டவரே. நாங்கள், நாம்; நித்தியத்திற்கும் ஆமென்.