இறைவனில் உண்மையான வாழ்வு

 இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 17. டிசம்பர் 13, 1986. மகளே, என் பொறியில் உன்னை நான் சிக்க வைத்துவிட்டேன் என்று உணர்கிறாயா? நேசமிக்கவளே, நான் உன்னை நேசிக்கிறேன், அஞ்சாதே; நான் உன்னை சிக்க வைத்துவிட்டேன் என்று நீ அஞ்சுகிறாய்! உண்மைதான், இதை நான் என் நண்பர்களிடம் கூறினேன். 'பொறி' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தினேன். எனக்குத் தெரியும், நீ என்னை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்; நீர் கோபமாய் இருக்கிறீரா? இல்லை, நான் கோபமாக இல்லை; நான் வெளிப்படையாக இருக்கலாமா? இரு; நான் உம்மை நேசிக்க வேண்டும் என்று நீர் விரும்பினீரா? விரும்பினேன்; நீர் உம் குறிக்கோளை அடைந்துவிட்டீரா? அடைந்துவிட்டேன்; நீர் என்னை வசீகரித்துவிட்டீர், நான் அதை விரும்புகிறேன்! இந்த முறையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இவ்வளவு நேர்ப்படையாக இல்லாமல் இருந்திருக்கலாம். நீ கற்றுக் கொள்கிறாய்; என்னிடமிருந்து உணவு உட்கொள், ஆசீர்வதிக்கப்பட்டவளாய் இரு; நானும் உம்மை ஆசீர்வதிப்பது சாத்தியமா? சாத்தியம்தான்; அப்படியானால், இயேசு கிறிஸ்துவே என் ஆசீர்களைப் பெற்றுக் கொள்ளும்! நான் உன்னை நேசிக்கிறேன்; என் சுமைதாங்கியாக இருக்கும்படி நான் உன்னை வளர்த்து வந்திருக்கிறேன்; நீ என்னை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், நீ என் சுமைதாங்கியாக இருக்கப் போவதால், நீ பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன், ஏனெனில் நான் பரிசுத்தராய் இருக்கிறேன், நீ என்னைப் பின்செல்லவும், எனக்காக வேலை செய்யவும் சித்தமாய் இருக்கிறாய், பரிசுத்தமாய் இருப்பது பற்றி அச்சப்படாதே; ஏன் இதற்கு இவ்வளவு அதிகமாய் பயப்படுகிறாய்? நீர் கோபமாய் இருக்கிறீரா? இல்லை, நான் கோபமாக இல்லை; பரிசுத்தமாய் இருப்பது என்பது மாசற்றவளாய் இருப்பதும், என்னில் வசிப்பதும் ஆகும்; பரிசுத்தமாய் இருப்பது என்பது என்னை நேசித்தபடி என்னைப் பின்செல்வதாகும்; பரிசுத்தமாய் இருப்பது என்பது நான் இருப்பது போல் இருப்பதாகும்; உனக்கு சம்மதமெனில், பரிசுத்தமாய் இருக்க நான் உனக்குக் கற்பிப்பேன்; நான் உம்மை நேசிப்பதால், நீர் விரும்புகிறபடி செய்ய நான் சித்தமாய் இருக்கிறேன்; அப்படியானால், மகளே, நான் உனக்குக் கற்பிப்பேன்; எனக்கு அருகில் தங்கியிரு, அப்போது நீ கற்றுக் கொள்வாய்; என்னை நம்பு, என்னில் விசுவாசம் கொண்டிரு, உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று நான் சொல்வதை நம்பு, நீ கற்றுக் கொள்வாய், சமாதானமாய் போ, என்னால் நேசிக்கப்படுவதை உணர்வாயாக; டிசம்பர் 14, 1986. நானே உன்னைத் தேற்றுகிறவர்; இயேசுவே, இந்த வழிகாட்டுதலால் என்ன நன்மை, இது எதற்காக என்று என்னிடம் சொல்லும். இந்த வழிகாட்டுதல் அநேகரை என்னிடம் அழைத்து வரும்; என்னிடம் திரும்பி வந்து என் வார்த்தையை வாசிக்கும்படி இது என் குழந்தைகளுக்குப் புது உற்சாகம் அளிக்கும்; நானே உன்னை என்னிடம் அழைக்கிற உன் நல்ல மேய்ப்பராய் இருக்கிறேன்; என்னைப் பார், மகளே, என்னை நம்பு, என்னைப் பார்; நான் என் முகத்தை உனக்கு வெளிப்படுத்தி இருக்கிறேன்; நிச்சயமற்றிருப்பதாக உணராதே, என்னை விசுவாசி; நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? என் செயல்களைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? நீ வாழும் யுகத்தின் தீமை உன்னை அழித்துவிட அனுமதியாதே; மகளே, நீ இருப்பது போலவே தொடர்ந்து இரு; குறிப்பு: எதையும் எளிதாக நம்பக்கூடியவளாக, இத்தகைய மனிதர்கள் நம் வட்டாரத்தில் 'கள்ளங்கபடம் இல்லாதவர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். நீ ஏற்கனவே விழிப்பாய் இருக்கிறாய் என்றும், என் ஒளியில் தங்கியிருக்கிறாய் என்றும் உன்னை நம்பச் செய்ய அவர்களை அனுமதியாதே; என் அருகிலேயே தங்கியிரு; இயேசுவே, அவர்கள் இதைச் செய்ய முயற்சி செய்தால், தயவுசெய்து நீர் அவர்களைத் தடுத்து நிறுத்துவீரா? அப்படியே செய்வேன்; யாரும் உன்னை அழிக்க நான் அனுமதிக்க மாட்டேன்; கேட்க செவியுள்ளவர்கள் எல்லோரும் கேட்பீர்களாக, காலம் அண்மையில் இருப்பதால் விழிப்பாய் இருங்கள்; டிசம்பர் 15, 1986. மகளே, எல்லா ஞானமும் என்னிடமிருந்தே வருகிறது; உனக்கு ஞானம் வேண்டுமா? ஆம், ஆண்டவரே! நான் உனக்கு ஞானத்தைத் தரப்போகிறேன்; நீ ஞானத்தை அடைந்து கொள்வாய். நானே சர்வ வல்லவரான ஆண்டவர்; நான் உனக்குக் கற்பிப்பேன்; என்னோடு இணைந்திரு; அப்போது நீ கற்றுக் கொள்வாய்; என்னில் விசுவாசம் கொண்டிரு; மகளே, என் குழந்தைகளை எழுப்பு; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கடவுளாகிய நான் ஆசீர்வதிப்பதால் சமாதானத்தில் வாழு; நிறைவு அடையும்போது நீ அநேகராய் இருப்பாய்; குறிப்பு: பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கும்போது என் சாட்சியம் அநேகரைக் கடவுளிடம் இழுக்கும். நாங்கள் பலுகிப் பெருகுவோம் என்பதுதான் இதன் பொருள். சமாதானமாய்ப் போ; டிசம்பர் 16, 1986. நீர் எனக்குத் தருவதாகக் கூறியது என்னவென்று புரிந்துகொள்ள எனக்கு ஒரு நாள் பிடித்தது. நீர் எனக்குத் தருவதாகக் கூறியதைப் பற்றி சிந்திக்காமலே அதை ஏற்றுக்கொண்டதற்காக என்னை நானே வியந்து கொண்டேன்! நான் உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், ஆண்டவரே. சமாதானம் உன்னோடு இருப்பதாக, அதன் முக்கியத்துவத்தை நீ உணர்கிறாயா? மெதுவாக! ஆம்; ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு வரப் பிரசாதத்திற்கு நான் தகுதியானவள் அல்ல. நீ ஞானத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்; ஆனாலும் அதைரியப்படாதே; அதை சம்பாதித்துக் கொள்ள நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ என் ஒளியில் இருக்கிறாய்; என் ஒளியில் இருந்து கொண்டு நீ கற்றுக் கொள்வாயாக; என் குரலைக் கவனி; என்னை அடையாளம் கண்டுகொள்ள முயற்சி செய்; நானே இயேசு கிறிஸ்து; நானே உன் போதகர்; பரிசுத்த ஆவியானவரின் வழியாக செயலாற்ற நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; என்னை நேசிக்க நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; நீ என்னைப் புரிந்துகொள்ள உதவுமாறு என் செயல்களை உன்மீது பொழிந்திருக்கிறேன்; நானே உன் பலம்; என் குழந்தாய், உன்னை தங்கள் அடக்குமுறையால் அடக்க முயலப்போகும் பலரை வெற்றிகொள்ள உனக்கு பலம் தரப்படும்; கடவுள் துயரமாய் இருப்பதாகத் தோன்றினார். இது என்னைப் பயப்படுத்தியது. ஏனெனில் கடவுளின் குரல் திடீரென கடுமையானதாகவும் துயரமானதாகவும் மாறியது. ஏன்? ஏன்? ஏனா? ஏனெனில் இந்த விதத்திலும் நான் வேலை செய்கிறேன் என்பதை பலர் நம்பாதிருக்கிறார்கள்; சிலர் என்னை நம்புவதே இல்லை; மகளே, நான் உன்னை எச்சரிக்க வேண்டியுள்ளது; குறிப்பு: கடவுள் தந்தைக்குரிய மிகுந்த பாசத்தோடும் அன்னியோனியமாகவும் பேசினார்; என்னை நம்புவதில் செவிடர்களாகவும், குருடர்களாகவும், மூடிய உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதனால் நீ ஆயுத்தமாய் இருக்கவும்; இந்த மக்களைப் பற்றி அறிந்திருக்கவும் நான் இதை சொல்கிறேன்; தங்கள் செயலை நியாயப்படுத்த அவர்கள் விரும்புவார்கள்; இது நான் அல்ல என்றும், இதெல்லாம் உன் மனதிலிருந்தே வருகிறது என்றும் அவர்கள் உன்னிடம் சொல்வார்கள்; நஞ்சுள்ள சிந்தனைகளை அவர்கள் உனக்கு ஊட்டுவார்கள்; குறிப்பு: ஏறத்தாழ ஒரு வார காலத்தில் நிறைவேறிய முன்னறிவிப்பு; நீ செய்வது தவறு என்று உனக்கு காட்டுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்; நீ செய்வது தவறு என்று நிரூபிக்க தங்கள் கொள்கைகளை நீ வாசிக்கும்படி செய்வார்கள்; ஆகவே, மகளே, நான் உன்னை எச்சரிக்கிறேன்; மனிதர் உன்னை அதைரியப்படுத்திவிட அனுமதியாதே; நீ வாழும் இந்த காலம் உன்னை அழித்துவிட அனுமதிக்காதே; ஆண்டவரே, நீர் உம் கரத்தைக் கொண்டு என்னைக் காக்காவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? நான் எப்போதும் உன் அருகில் இருப்பேன்; கைவிடப்பட்டிருப்பதாக உணராதே; பலமாய் இருப்பதற்கு நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ உன்னை அடக்குவோர் அனைவரையும் மேற்கொள்வாய்; நான் உன்னை ஆயித்தம் செய்து கொண்டிருக்கிறேன்; நீ நிறைவடையும்படி நான் உனக்கு உணவூட்டுவேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு; என்னில் தங்கியிரு. இயேசு கிறிஸ்து; இறைவனில் உண்மையான வாழ்வு. குறிப்பேடு 1 முதல் 6 வரை. 1987. ஜனவரி 8, 1987. வசுலா, உனக்கு சமாதானம் உண்டாவதாக; நான்தான் இயேசு. வசுலா, என்னிடம் வா; வந்து என் இதயத்தின் நடுவில் வாழ்வாயாக; உமக்கு நான் வேண்டுமா, இயேசுவே? ஓ, வேண்டும்! நான் ஆவலோடு உன்னைத் தேடுகிறேன்; நான் உன்னை வசீகரிக்க விரும்புகிறேன்! ஆனால் நான் எதற்கும் தகுதியானவள் அல்ல. நீ இருக்கிறபடியே நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, என் மணவாளியாக இரு; என்னால் எப்படி முடியும்! நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, எப்படி உம் மணவாளியாக இருப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அன்பே, என் மணவாளியாக இருக்க நான் உனக்கு கற்றுத் தருவேன்; ஆண்டவரே, இதற்கான ஒரு அடையாளம் என்னிடம் இருக்கிறதா? நீ என் சிலுவையைச் சுமந்து கொள்ள நான் உன்னை அனுமதிப்பேன். என் சிலுவை சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும் கூக்குரலிடுகிறது; இயேசுவே, நான் உம்மை மகிழ்விக்க விரும்புகிறேன். என்னை விட்டு ஒருபோதும் அகலாதிருப்பதன் மூலம் எனக்கு மகிழ்ச்சி கொடு; என்னை நேசிப்பதன் மூலம் எனக்கு மகிழ்ச்சி கொடு; என் குழந்தைகளை விழித்தெழ செய்வதன் மூலம் எனக்கு மகிழ்ச்சி கொடு; இதெல்லாவற்றிற்கும், குறிப்பாக அந்த கடைசி காரியத்திற்கும் எனக்கு உமது பலம் தேவை! என்னைப் பார்; நான் அவரைப் பார்த்தேன்; அவர் ஒரு ஒளிவட்டத்தைப் போல பலத்தை ஒளியாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்; நானே பலமாக இருக்கிறேன். நான் உனக்கு உதவி செய்வேன்; ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு; நீர் என்னைக் கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறீரா? நான் இதை முன்பு கேட்டதே இல்லை; உன்னால் நேசிக்கப்படுவதாக உணர்கிற எல்லா நேரங்களிலும் நான் உன்னைக் கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; நீர் காணக்கூடியவராகத் தோன்றுவதைக் காண நான் விரும்புகிறேன்; கேள், அது உனக்குத் தரப்படும்; என்னில் உன் விசுவாசத்தை அதிகரி; இங்கே இருக்கிற ஒரு கத்தோலிக்க குருவானவரிடம் நான் எழுதியவைகளைக் காட்ட நான் முடிவு செய்தேன். அவர் அது பசாசு என்றும், நான் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்தார். இயேசு அவரிடம் தம்மோடு சேர்ந்து சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையை சுமக்க அவர் விரும்புகிறாரா என்று கேட்டிருந்தார். நான் இதை அவரிடம் சொன்னேன். அது தீமையானது என்று அவர் சொன்னார். அவர் புனித மைக்கேல் ஜெபத்தையும், புனித பெர்னார்டின் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபத்தையும், இயேசுவின் திரு இருதயத்தின் மீது நம்பிக்கையின் நவநாளையும் நான் வாசிக்கும்படி அவர் என்னிடம் தந்தார். பின்வரும் நாட்களில் இந்த ஜெபங்களை வாசிக்கும்படியும், அதன்பின் என்ன நிகழ்கிறது என்று காணும்படியும் அவர் என்னிடம் கூறினார். குறிப்பு: இந்த குருவானவர் நான் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே, நான் அவருக்குக் கீழ்படிந்தேன். ஆனால் நான் பென்சிலை எடுத்தபோது, கடவுள் என் கரத்தை மீண்டும் பயன்படுத்தினார். நானும் அப்படியே செய்தேன். நான் என் கரத்தை எழுத விட்டுவிட்டேன். அப்போது அது இப்படி எழுதியது: "யாவே ஆகிய நானே உன்னை வழிநடத்துகிறேன்." தொடர்ச்சியாக நான்கு நாட்கள், ஆண்டவராகிய இயேசுவே, குருவானரின் விருப்பத்தை நான் செய்துவிட்டேன். ஜெபித்த பிறகு அந்த ஐந்து வார்த்தைகளும் வெளிவர அனுமதித்தது தவிர, மற்றபடி நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன். நான் குருவானவருக்குக் கீழ்படிவதற்காக நீர் எழுதுவதைத் தடுத்துவிட்டேன். ஆண்டவரே, என்ன நடக்கும் என்றும், இவ்வளவு அதிகமான துன்பங்களை அவர் எனக்குத் தருவார் என்றும் நீர் அறிந்திருந்தும், நீர் என்னை ஏன் அவரிடம் கேட்கச் சொன்னீர் என்று நான் கேட்க விரும்புகிறேன். மகளே, நான் உன்னோடு இருக்கிறேன்; அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் அவரிடம் கேட்கச் சொன்னேன்; அவர் என் செல்வ வளங்களை புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நானே அளவற்ற செல்வமாக இருக்கிறேன்! இயேசுவாகிய நான் என் குழந்தைகளுக்காக இந்த வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்; வசுலா, உன்னை வழிநடத்திக் கொண்டிருப்பவர் நான்தான்; என்னால் தரப்படுகிற ஆசீர்வாதங்களைப் புறக்கணிக்காதே; என் செய்திகள் சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும் கூக்குரலிடுகின்றன; என் குழந்தைகள் என் தேவாலயங்களை நிரப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்கள் என்னிடம் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் இந்த இருண்ட உலகத்தின் மீது ஒளிவீச வருகிறேன்; அவர்களுக்கு மீண்டும் உற்சாகம் ஊட்டி என் வார்த்தை உயிருள்ளது என்று அவர்களுக்கு சொல்ல நான் விரும்புகிறேன்; அவர்கள் ஒதுக்கி வைத்துவிட்ட என் வார்த்தையை அவர்கள் நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் அவர்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்; அவர்களுடைய இருதயங்களை தூண்டி எழுப்ப நான் விரும்புகிறேன்; நான் அவர்களை நேசித்தது போல, அவர்களும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன்; நான் உம்மை நேசிக்கிறேன், மகனே. வசுலாவைத் தடுக்க முயல்வதன் மூலம் நீர் விரும்பாமலே என் திருச்சபையை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறீர் என்பதைப் புரிந்து கொள்ளும்; நான்தான் நீர் நேசிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; நல்ல விசுவாசத்தில்தான் இதை நீர் செய்து கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்; ஆனால் சவுலிடம் அவர் சரி என்று நம்பியது தவறு என்றும், அவர் என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார் என்றும் நான் சொல்வதற்கு முன் அவரும் இப்படித்தான் இருந்தார்; இயேசுவாகிய நான் என் மகளுக்குத் தந்த தனிப்பட்ட வரம் தீமையிடமிருந்து வருகிறது என்று நீர் நம்புகிறீர்; என்னை நம்பும், மகனே, அச்சத்திற்கு உள்ளாகி இருப்பதாக உணராதேயும், ஏனெனில் வசுலா என்னிடமிருந்து கற்றுக்கொள்ள செய்வது என் சித்தமே என்று நான் மீண்டும் உமக்கு சொல்கிறேன்; அவள் இப்பொழுது செழித்து வளர்கிறாள்; பிற்பாடு அவளது கனிகள் அநேக இழக்கப்பட்ட ஆடுகளைப் போஷிக்கும்; மகனே, நீர் இதை ஒருநாள் புரிந்து கொள்வீர்; குறிப்பு: நிறைவேறிய தீர்க்கதரிசனம், இயேசு கிறிஸ்துவாகிய நான் உம்மை நேசிக்கிறேன்; இந்த குரு இதை வாசித்த பிறகு, இது தீமை என்றும், பேய்த் தூண்டுதல் என்றும் சொல்லி என்னைக் குற்றஞ் சாட்டினார்; எனக்கு தெரியும், நான் சொல்வதை அப்படியே அவரிடம் சொல், "பேய் தூண்டுதல்கள் முட்டாள்களுக்குரியவை; தேவ ஏவுதல்கள் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்குரியவை. பேய் தூண்டுதல்கள் கனி தருவதில்லை. தேவ ஏவுதல்கள் நற்கனிகளை தந்து அநேகரை போஷிக்கின்றன." உன் தைரியத்தை மீண்டும் பெற்றுக்கொள், மகளே, ஞானம் என் பிள்ளைகளை விழித்தெழச் செய்கிறது; கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; ஜனவரி 21, 1987. இந்த குரு எனக்கு நிறைய துன்பங்கள் தந்தார். 16 ஆம் தேதி, கடவுள் என்னிடம் முன்னுரைத்தது போலவே, இதன் தீமையை நிரூபிக்கும்படி அவர் எல்லாவிதமான கொள்கைகளும் அடங்கிய சிறு வெளியீடுகளை எனக்கு அனுப்பினார். கடவுள் முன்னுரைத்தது போலவே, அவர் ஆழ்மனது, ஆவியுலகம், சாத்தானியல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு கோட்பாட்டை எனக்கு அனுப்பினார். அத்துடன் என் எழுத்துக்களை அழித்து விடும்படியும், என் நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும், மக்களை எச்சரிக்கும்படியும், இதையெல்லாம் தீயவனிடமிருந்து வந்தவை என்று எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். நான் அந்த ஜெபங்களை ஜெபிக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்துக்கு கீழ்படிந்தேன் என்றும், முடிவை அறியும்படி நான் எழுதவில்லை என்றும் அவரிடம் கூறினேன். ஆனாலும் நான் சொன்னதை அவர் நம்பியதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்த எழுத்துக்கள் கடவுளிடமிருந்து வந்தவை என்று நம்புபவரும் என்னை ஆதரிப்பவருமாகிய இன்னொரு குருவிடம் இந்த எழுத்துக்கள் சாத்தானியத் தன்மை உள்ளவை என்றும், அவர் என்னிடம் கேட்டுக்கொண்டபடி அந்த மூன்று ஜெபங்களையும் நான் வாசிப்பது கூட இல்லை என்றும் கூறினார். வேறு அநேக குருக்களையும் அவர் எச்சரித்தார். ஆகவே என்னை ஆதரிக்கிற குரு என்னுடைய கடைசி இரண்டு குறிப்புப் புத்தகங்களை அவர் வாசிக்க தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். மறுநாள், அவருடைய கருத்துப்படி என்னை தொடர்ந்து எழுதும்படி என்னிடம் கூறினார். இருந்தாலும், இது தீமையானது என்று நம்புகிற குருவைப் பற்றி நான் அறிவேன். திருச்சபையின் மீதுள்ள நேசத்தினாலும், திருச்சபையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவுமே இதை அவர் செய்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர் மேலும் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் என்னையும் காப்பாற்ற விரும்புகிறார். ஏனெனில் இது தீமை என்று அவர் நம்புகிறார். ஒருநாள் அவர் இதைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். நான் புனித மாமரியிடம் ஜெபிக்கிறேன். நான் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறேன்? ஓ, மகளே, உனக்காக நான் அதிகமாக வேதனைப்படுகிறேன்; மற்றவர்கள் கடவுளை நேசிக்க வேண்டும் என்று நான் ஆசித்து, அதற்காக இந்தச் செய்தியை அவர்களுக்குக் காட்டுகிறேன் என்றால், அப்போது நான் தவறு செய்கிறேனா? இல்லை, நீ தவறானது எதையும் செய்யவில்லை; நான் வியாகுலங்களின் மாதாவாகிய மாமரி; நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; எங்களோடு இரு; ஆறுதலுக்காக எங்களிடம் வா! அவர்கள் எங்கள் செல்வங்களை புரிந்து கொள்வதில்லை; அவர்கள் நித்தியத்திற்கும் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டுள்ளனர்; நாங்கள் அவர்களுக்கு கொடுத்த பல அடையாளங்களில் ஒன்றாக நீ இருக்கிறாய்; ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதாக தெரியவில்லை; கடவுள் தம் அழைப்பைக் கேட்கும்படி உன்னை ஊக்குவித்தார்; வசுலா, நீ ஒர் ஆன்மாவைக் கடவுளின் அருகில் கொண்டுவரும் ஒவ்வொரு தடவையும் கடவுள் உன்னில் அகமகிழ்கிறார்; என் திருமகன் இயேசுவும் நானும் எப்போதும் உன் அருகில் இருக்கிறோம். தீமை உன்னிடம் கடும் கோபமாக இருக்கிறது என்பதால் கவனமாய் இரு; தீமை உன்னை அதைரியப்படுத்த விரும்புகிறது; உன்னைத் திசை திருப்பி விடும்படி தவறான வார்த்தைகளைச் சேர்ப்பதுதான் அவர்கள் உனக்கு எதிராக போராடும் முறையாக இருக்கிறது; இதை எப்போதும் நினைவில் வை; இதை ஒரு நாளும் மறவாதே; இதுவே உனக்கு எதிரான தீமையின் ஆயுதமாக இருக்கிறது; நான் உன் அருகில் இருந்து உன்னை பாதுகாக்கிறேன்; தீமையை அடையாளம் கண்டுகொள்ள என்னால் முடியுமா? என்னை நம்பு என்று நான் எப்போதும் உனக்கு சொல்வேன்; இயேசு தம்மை அடையாளம் கண்டுகொள்ள உன்னை பயிற்றுவித்திருக்கிறார்; நான் ஏன் தாக்கப்படுகிறேன்? என் குழந்தாய், நான் இதை உனக்கு விளக்கிச் சொல்கிறேன்; அன்பே, நீ ஹாதேஸுக்கு குறிப்பு உத்தரிக்கிற ஸ்தலம் பரிகாரத் துன்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாய் என்பதைப் புரிந்துகொள்; கடவுள் பேரில் உனக்குள்ள நேசம் வழி தவறிப்போன அநேக ஆத்துமங்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறது; குறிப்பு: கடவுளிடம் நாம் செய்யும் ஜெபங்களும் நம் இறை அன்பும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து ஆன்மாக்களை விடுவிக்க கடவுளால் பயன்படுத்தப்படுகின்றன. அதே வேளையில், நம் இறை அன்பு பூமியின் மீது வழி தவறிப்போன ஆன்மாக்களை இரட்சிக்கும்படி அவர்களுக்கு அவர் வரப்பிரசாதங்களை தரும்படி செய்கிறது. அதனால்தான் நீ தாக்கப்படுகிறாய்; நான் உன்னைப் பாதுகாத்தபடி உன் அருகில் இருக்கிறேன்; தவறான வார்த்தைகள் உனக்கு ஏன் வருகின்றன என என்பதை புரிந்து கொள்ளும்படியாகவே இதை நான் இப்போது உனக்குக் கூறினேன்; இயேசுவின் பெயரிலும், உன் பரிசுத்த தந்தையின் பெயரிலும், உனக்குள்ள நேசத்தைக் கொண்டு ஆத்துமங்களை குணப்படுத்தி வருகிறாய்; இந்த விதத்திலும் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேனா? ஆம், நீ உன் நேசத்தால் அவர்களை குணமாக்கிக் கொண்டிருக்கிறாய்; மனிதர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உன்னை நீ கையளிக்கும்படி உன் மீது அதிகாரம் செலுத்த மனிதர்களை அனுமதியாதே; எழுதுவதை நிறுத்தும்படி உனக்குச் சொல்லப்படும் ஒவ்வொரு முறையும் நீ எப்படி அறியாதவளாக இருந்தாய், எப்படி இருளில் வாழ்ந்து கொண்டிருந்தாய் என்பதை நினைத்துப் பார்; எங்கள் குழந்தைகளில் பலர் நாங்கள் தரும் அடையாளங்களை கண்டறிவதில்லை; கடவுள் தமது பணிப்பெண்ணாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; அவரை மகிழ்வி, அவர் சொல்வதைக் கேள்; புனித மரியாயே, நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. சமாதானம் உன்னோடு இருப்பதாக; இயேசுவா? நான்தான் வசுலா, நீ புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, என் குழந்தைகள் இவ்வளவு வறட்சியில் இருப்பதைக் கண்டு நான் எவ்வளவு துன்புறுகிறேன்; நான் அவர்கள் பேரில் கொண்டுள்ள நேசத்தை மறக்க அவர்களால் எப்படி முடிகிறது? அவர்களுக்காக நான் என் உயிரைக் கையளித்தேன்; நேசமே, என் அருகிலிருந்து என்னை உணர்வாயாக. உன்னை காப்பாற்றும்படி குறித்த நேரத்தில் நான் வருவேன்; ஆனால் முதலில் நீ செய்து முடிக்க வேண்டிய ஒரு வேலை இருக்கிறது. கடவுளாகிய நான் மனுக்குலம் முழுவதையும் ஆசீர்வதிக்கும்படி ஏற்கனவே ஞானத்தை வெளிப்படுத்தி விட்டேன்; ஓ, மகளே, நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை ஒருநாள் நீ முழுமையாக புரிந்து கொள்வாய்; அஞ்சாதே, ஏனெனில் கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; பிற்பாடு: மகளே, நான்தான் இயேசு, என்னோடு நீ எழுதும் ஒவ்வொரு தடவைக்கும் முன்பாக அந்த மூன்று ஜெபங்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஏனெனில் அவை தீமையைத் தூர அகற்றுகின்றன; அவை வல்லமையுள்ள ஜெபங்கள் என்பதை நம்பு; நீ இன்னும் எனக்காக வேலை செய்ய விரும்புகிறாயா? இயேசுவே, நான் இல்லை என்று சொன்னால் நீர் என்ன செய்வீர்? தேர்ந்தெடுக்க உனக்கு உரிமை உண்டு; அஞ்சாதே, நான் உனக்குத் தந்த தனிப்பட்ட வரத்தை எடுத்துக்கொள்ள மாட்டேன்; நான் எவ்வளவு அதிகமாக உன்னை நேசிக்கிறேன் என்று உனக்குச் சொல்லும்படி நான் எப்போதும் உன்னை சந்தித்துக் கொண்டே இருப்பேன்; இயேசுவே, நான் உமக்காக வேலை செய்யச் சித்தமாய் இருக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்; நான் ஏன் என் வார்த்தையை மாற்ற வேண்டும்? நான் சொன்னது உமக்கு நினைவிருக்கிறதா? மகளே, உன் பதிலைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் அருகில் நிலைத்திரு; நான் உன்னை வழிநடத்துவேன்; இயேசுவே, நான் உம்மை எப்போதாவது நோகச் செய்திருக்கிறேனா? ஆம், செய்திருக்கிறாய். இருளிலிருந்து உன்னைக் காப்பாற்ற நான் எப்படி வந்தேன் என்பதை நீ மறந்து போனபோது நான் நோகடிக்கப்பட்டேன்; ஆனாலும் நான் உன்னை மன்னித்து விட்டேன்; நீ என்னை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; நான் உன் மணவாளராக இருக்கிறேன்; இதை மறக்காதே. என் மணவாளியாக இருப்பதன் மூலம் நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மறக்காதே; வசுலா, நான் என் சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையைச் சோர்ந்து போன என் தோள்களில் சுமக்கிறேன்; என் நேசமே, சற்று நேரம் அதைச் சுமந்துகொள்; நான் அதை உன் தோள்களில் வைத்துவிட்டு என் சுமையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்; நான் என் சிலுவையை உன்மீது இறக்கி வைக்குமாறு நீ என் அருகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் எப்படி துன்புறுகிறேன் என்பதை நீ புரிந்து கொள்கிறாய் என்று நான் அறிந்திருப்பதால், நீ என் அருகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் சிலுவையை நீ உணரும்போது, நீயும் துன்பப்படுவாய்; நான் உன் மணவாளராக இருக்கிறேன்; என் துன்பங்களையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்வேன்; என் சுமையிலிருந்து நீ என்னை விடுவிக்கும் போதெல்லாம், நான் இளைப்பாறுவதாக உணர்வேன்; அன்பே, நீ என்னை ஏற்றுக் கொள்வதற்கு முன், உன் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி, நான் முழு நேரமும் உன் அருகில் இருந்தேன்; நான் பலமுறை உன்னை அழைத்தேன், ஆனால் நீ என் பிரசன்னத்தை அறியாமல் இருந்தாய்; இப்போது இறுதியாக, நீ என் குரலைக் கேட்டு என்னிடம் வந்தாய். அப்படி இருக்க, ஏன் சந்தேகப்படுகிறாய்? அந்தக் குருவோடு நான் உரையாடிய பிறகு எனக்கு வந்த சந்தேகங்கள், நீ பலவீனமாகவும் சந்தேகம் உள்ளவளாகவும் இருக்கும் ஒவ்வொரு தடவையும், நான் இப்போது உனக்குக் கூறியுள்ள வார்த்தைகளை நினைவு கூர்வாயாக; என் சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையை சுமந்து கொண்டு, என்னை விட்டு விலகாமல் இரு; என்னிடம் வந்து என்னோடு ஜெபி; இயேசு என்னோடு ஜெபித்தார். அவர் ஜெபிக்கும் போது மேல்நோக்கிப் பார்த்தார். இயேசுவே, நான் உம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். உம் சிலுவையை சுமப்பதில் நான் உமக்கு உதவுவேன். உம் சுமையை இறக்கி வைப்பேன். நாம் அதைப் பகிர்ந்து கொள்ளலாம். மகளே, இதை நீ என்னிடம் சொல்வதைக் கேட்க, நான் எப்பொழுதும் எவ்வளவு அதிகமாக விரும்பினேன்; வா, நேசமே, நாம் நம் வழியில் தொடர்ந்து செல்வோம்; இயேசு மிகவும் பூரிப்பாக மகிழ்ச்சியாக இருந்தார். மறுநாள், இயேசு இடைவிடாமல் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதை நான் கேட்டேன். நான் படம் வரைந்து கொண்டிருந்தேன்; தூரிகைகளை வீசிவிட்டு, எழுந்து, எழுதும் மேஜையை நோக்கி ஓடினேன். வசுலா, வசுலா, வசுலா, இயேசுவாகிய நான் உன்னை அழைத்தேன்; ஓ, வசுலா, நான் உன்னை எவ்வளவோ நேசிக்கிறேன்; என்னை மகிமைப்படுத்து; எப்போதும் என்னோடு இரு; மிகுந்த பக்தி ஆர்வத்தோடு, நீ என்னை நேசிக்கும் ஒவ்வொரு தடவையும் நான் மகிமைப்படுத்துவதாக உணர்கிறேன்; இப்போது போலவே, நான் சொல்வதைக் கேட்டு, எப்போதும் என்னை மகிழ்ச்சிப்படுத்து; நான் விரைவில் உன்னோடு இருப்பேன் என்பதை நினைவில் வை; நேசமே, நான் விரைவில் உன்னை எனக்கு அருகில் அழைத்துக் கொள்ளப் போகிறேன்; ஏனென்றால், நீ ஒருபோதும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்; ஆனாலும், இப்போது நீ செய்வது போல, முதலில் என் செய்திகளை எல்லா இனத்தாருக்கும் அறிவிக்க வேண்டும்; அதன்பின், நான் விரைவில் உன்னை அழைத்துக் கொள்வேன்; இங்கே நான் இருக்கும் இடத்திற்கு, நான் உன்னை அழைத்துக் கொள்வேன்; அதன்பின், நீ என்றென்றைக்கும் என் அருகில் இருப்பாய்; இயேசு கிறிஸ்துவாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, இந்த வரப்பிரசாதத்தை நான் உனக்குத் தந்திருக்கிறேன்; நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன்; நான் கொடுத்ததை ஒருபோதும் திரும்பி எடுத்துக் கொள்ள மாட்டேன்; மகளே, என் திருச்சபைக்கு நீ புத்துயிர் அளிப்பாயா? ஓ, இயேசுவே, உமக்காக என்னால் செய்ய முடியாத ஒன்றை நீர் என்னிடம் கேட்கிறீர்! என்னை நம்பு! நான் உம்மோடு ஒட்டிக்கொண்டு, உம்மை முழுமையாகச் சார்ந்திருப்பேன்; நீரே என் போதகராக இருக்கிறீர்; என்னை மகிமைப்படுத்து, நான் உன்னை வழிநடத்துவேன்;