வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 68. ஏப்ரல் 27, 1988 இந்நாட்களில் சாத்தான் இடைவிடாமல் என்னை தாக்கிக் கொண்டே இருக்கிறான்; இந்த வழிபாட்டினால் எந்தப் பலனும் கிடைக்காது என்று என் காதில் சொல்லிக் கொண்டே இருக்கிறான், அது ஏற்கனவே எனக்குச் செய்திருப்பதும், இன்னும் செய்து கொண்டிருப்பதுமாகிய எல்லா நன்மைகளையும் நான் மறக்கும்படி செய்கிறான். என் நிதர்சன உணர்வை நான் மறக்கும்படி அவன் செய்கிறான்; என் நம்பிக்கையை அவன் அகற்றிவிட்டான், அதை தூரமாக எறிந்துவிட்டான். நான் ஆண்டவர் மீது கொண்டுள்ள பெரும் அன்பு கறைபட்டதாகத் தோன்றும்படி, அந்த அன்பை அவன் திரையிட்டு மறைத்தான். அவன் உலகத்தின் தோற்றங்களையும், அது எவ்வளவு நிஜமானது என்றும், ஆனால் ஆன்ம உலகம் எவ்வளவு போலியானது என்றும் எனக்குக் காட்டினான். அவன் எனக்குக் கடும் வேதனைகளைத் தந்து, என் சிந்தனைகளைக் கலக்கி, என்னைக் குழப்பினான். ஆண்டவர் என்னை எச்சரித்திருந்தார். அவருடைய வெளிப்பாடு எவ்வளவு அதிகமாக வளர்கிறதோ, அவ்வளவுக்கு எல்லாவற்றையும் நிறுத்துவதற்கான சாத்தானின் முயற்சிகளும் அதிகரிக்கும். இது சாத்தான் தான் என்று நான் அறிவேன். ஏனெனில் என் ஆன்மா ஆறுதலற்றதாகவும், நம்பிக்கையற்றதாகவும் இருக்கும்படி அவன் செய்கிறான். ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! புனித மிக்கேலின் ஜெபத்தையும், நம் பரிசுத்த மாதாவின் ஜெபத்தையும் நான் வாசித்த பிறகு, புனித மிக்கேல் ஆண்டவரை ஸ்துதித்தார். மலரே, என்னில் விசுவாசம் கொள், ஜெபி; வசுலா, என் வசுலா, உலகத்தார் தங்கள் கண்களைத் திறக்கும்படியாகவும், தங்கள் செவிகளால் கேட்கும்படியாகவும், உலகத்திற்காக ஜெபி; நீதி வெற்றிபெறும்; வக்கிரமுள்ள படைப்பே! உன் பாவங்களோடு ஒப்பிடும்போது, சொதோமின் பாவங்கள் குறைந்த அளவு வக்கிரம் உள்ளதாகத் தோன்றும்; அதன் பாவங்கள் பெரியவையேதான், ஆனால் உன்னுடைய பாவங்கள் நித்தியத்தையே ஊடுருவி விட்டன! கரபந்தால் புதைக்கப்படக்கூடாது; கரபந்தாலின் வரப்பிரசாதங்கள் மீண்டும் வாழும்! இயேசுவே, ஓ இயேசுவே! நான் உம்மோடு மீண்டும் ஒன்றிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்! வா, இயேசுவாகிய நான் ஒருபோதும் உன்னைக் கைவிட்டதில்லை, இந்தத் துன்பச் சோதனைகளை ஏற்றுக்கொள்; எல்லாமே என்னிடமிருந்து தான் வருகிறது; வசுலா, சாத்தான் உன்னை துரத்திக் கொண்டிருக்கிறான், ஆகவே, உறங்கிவிடாதே; உறங்குவது உன்னைச் சோதனைக்குள் இட்டுச் செல்கிறது; நீ விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால், சாத்தானுக்கு அதிக எளிதாக இரையாகுகிறாய்; ஆகவே, எச்சரிக்கையாயிரு, உன்னையே காத்துக்கொள்;- நீ விழிப்போடு இருக்கும்போது, என் பிரசன்னத்தை உணர்கிறாய்; என் பிரசன்னத்தை நினைவில் வை; இந்த நாட்களில் நான் சாத்தானால் தாக்கப்பட்டபோதெல்லாம், உலுக்கி விழுக்க செய்வது இயேசுவின் வழக்கமாய் இருந்தது. ஏப்ரல் 30, 1988 இயேசுவா? நான்தான்; நானே வெளிப்பாடுகள்; நான் உன்மேல் என் வார்த்தைகளைச் செதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற வசுலா, என்னைப் புரிந்து கொள்ளும்படி என்னோடு ஒன்றுபடு; படைப்பே, நான் பைத்தியமாகும் அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்; நீயோ, என்னிடமிருந்து விலகிவிட்டாய்; நம்பிக்கைத் துரோகம் என் தேவாலயப் பலிபீடப் பகுதிக்குள் நுழைந்து, சிதறடித்தலைப் பிறப்பித்துவிட்டது; வசுலா, அன்புக்குரியவளே, என்னை முழுமையாகப் பகுத்துணர முயற்சி செய்; பிற்பாடு: இயேசுவா? நான்தான்; இயேசுவின் பிரசன்னம் மிகவும் உயிரோட்டம் உள்ளதாக இருந்தது; நான் ஏதோ ஒரு மூடுபணியிலிருந்து வெளியே வந்து, கடந்த சில நாட்களை விட, நன்றாக அவரைக் காண்பது போலவும், உணர்வது போலவும் இருந்தது. இந்தக் கடந்த நாட்களில், சாத்தான் என்னைக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தான்; இந்நேரம், இயேசு மீண்டும் தம் உடலோடு பூமியின் மீது இருப்பது போல, அல்லது இயேசு இவ்வுலகில் இருந்த நாட்களுக்கு, நான் காலத்தில் பின்னோக்கிப் போய்விட்டது போலத் தோன்றுகிறது. எல்லாமே உயிருள்ளதாக இருக்கிறது. இது அற்புதமாக இருக்கிறது! வசுலா, நான் விரும்புவது எல்லாம் அன்புதான்; எளிய குழந்தைகளுக்கு இந்தக் காரியங்களைக் கற்பித்து, அறிஞர்களிடமிருந்தும், ஞானிகளிடமிருந்தும் அவற்றை மறைப்பதற்காக கடவுளுக்கு மகிமை உண்டாவதாக; இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இயேசுவின் அழகிய தலை மேல்நோக்கித் திரும்பி இருந்தது. நான் இதையெல்லாம் மனித அறிவால் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை என்பது பற்றி, இயேசு மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக உணர்ந்தார். நாம் கண்ணோடித்தனமாகவும், கள்ளங்கபடம் இல்லாமலும் விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நானே ஆல்ஃபாவும் ஒமேகாவுமாக, தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்; நான் அவரது பிரசன்னத்தை மிக ஆழமாக உணர்ந்தேன். கடவுளின் 'அதிர்வுகள்' என் முழு உடலையும், ஆன்மாவையும் 'அதிரச்' செய்து கொண்டிருந்தன. இதை வார்த்தைகளில் எழுதுவது கடினம். அதே வேளையில், அவருடைய சமாதானம் என்னைச் சூழ்ந்திருந்தது; இதெல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு ஓர் அற்புதமான உணர்வைத் தருகிறது. நான் அன்பின் கடல் ஒன்றில் மூழ்கிவிட்டது போல இருந்தது. நான் ஊடுருவி காணப்படக்கூடியவளாக உணர்ந்தேன். எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றால், மகிழ்ச்சியின் கண்ணீர்கள் என் கன்னங்களில் வழிந்திறங்கின. என் பிரசன்னத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படாதே; வசுலா, இப்போது என் அருகில் நிலைத்திரு; ஜெபி, நான் உன் ஜெபத்தைக் கேட்பேன்; இயேசு எந்த நிலையில் என்னை வைத்தாரோ, அதையே அவர் குறிப்பிட்டார். நான் ஜெபித்தேன். நான் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டேன்; நான் பரலோக மந்திரத்தை ஜெபித்தேன், ஆனால் மிக மெதுவாக, என் இருதயத்தைக் கொண்டு ஜெபித்தேன். ஜெபிக்கும் போது, நான் இருந்த மகிழ்ச்சியான நிலை காரணமாக, என் கண்ணீர் நிற்கவே இல்லை. வா, நானும் நீயும், நீயும் நானும், எப்போதும் என்றென்றும் ஒன்றாக; ஆன்மாவே, இயேசுவாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நாங்கள், நாம்; பிற்பாடு: வசுலா, உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; ஆ, வசுலா, எத்தனை தடவைகள் நான் உனக்காக அஞ்சினேன்; சாத்தான் உன்னை வெறுக்கிறான், என் திட்டங்களைக் குலைத்துவிட, அவன் தீர்மானித்திருக்கிறான்; அவனுடைய கடும் கோபத்தில், அவன் உன் கடும் துன்பங்கள் அனைத்தையும் உருவாக்குகிறான்; அவன் உன்னிடம் பொய் சொல்கிறான், உன்னை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கும்படி, உன்னைக் குற்றம் சாட்டுகிறான்; மகளே, நான் அவனுடைய தாக்குதல்களைப் பற்றி முன்பே உன்னை எச்சரித்திருந்தேன்; ஆசீர்வதிக்கப்பட்டவளே, சாத்தானுக்கு இடம் கொடாதே; என்னோடு உன்னை ஒன்றித்துக்கொள்; எல்லாச் சோதனைகளையும் மேற்கொள்ள, நான் உனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்; வசுலா, நீ உறங்கிவிட்டால், சாத்தான் அதிக எளிதாக உன்னை நெருங்குகிறான் என்பதை நினைவில் கொள்; ஆகவே, குழந்தாய், எச்சரிக்கையாய் இரு, எப்பொழுதும் விழிப்பாய் இரு; உன்னைக் காத்துக்கொள்; ஆண்டவரே, ஜெபிப்பதன் மூலமாகவா? ஆம், ஜெபிப்பதன் மூலமாக; ஜெபி, ஜெபி, ஜெபி; ஜெபம் சாத்தானைத் தூர விலக்குகிறது என்று நான் புரிந்து கொள்ளும்படி இயேசு செய்தார். அவரை சென்றடைகிற ஜெபங்கள். மே 1, 1988 வசுலா, என் குரலைக் கேள், என்னோடு ஒன்றாகு; என் பூரணத்துவத்தைப் பற்றித் தியானி; குறிப்பு: நான் கடவுளின் சர்வ வல்லமையையும், கடவுளின் நித்தியத்தையும் தியானிக்க வேண்டும். உன் மனதை என்னிடம் எழுப்பு, உன் வீடு என் பரிசுத்த இதயத்தில் இருக்கிறது; என் பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தூண்டி எழுப்பினார்; மகளே, நீ பகுத்துணர்ந்தது எல்லாமே சரிதான்; என் பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தூண்டி எழுப்பினார் என்று இயேசு சொல்லிக் கொண்டிருந்தபோது, நான் முதலில் சில பிணங்களுக்கு மேலே ஒரு புறா சிறகடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தப் பிணங்களுக்கு மத்தியில் நானும் கிடந்தேன். அதன்பின், மோட்சத்திலிருந்து ஓர் ஒளிக்கற்றை என் மீது விழுந்து என்னை உயிரோடு எழுப்பியது. வசுலா, என் பணிகளைத் தொடர்ந்து செய்ய நீ மனதாய் இருக்கிறாயா? ஓ, நிச்சயமாக, ஆண்டவரே! நீர் இன்னும் என்னைத் தேடுகிறீர் என்றால், ஆண்டவரே, என் இயலாமையை நினைவில் வைத்து, எனக்கு உதவும். என்னிடம் நீர் இவ்வளவு அதிகப் பொறுமையோடு இருப்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நான் தகுதி பெறாத உமது கொடைகளை என் மீது பொழிந்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, சாகும் அளவுக்கு நான் உம்மை நேசிக்கிறேன். மகளே, நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை ஆசீர்வதிக்கிறேன்; என் இந்தப் பணிகள் மனிதரால் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட என்னுடைய பல மறைவான பணிகளைத் தெளிவுபடுத்தும்; என்னால் குணப்படுத்தப்பட்டவளே, உயிர்ப்பிக்கப்பட்டவளே, என் இதயத்திற்குள் இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்ல உன்னால் முடியும்படி சிறியவளாகவே நிலைத்திரு; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள் நாம். மே 2, 1988 மீண்டும், நான் எழுத அழைக்கப்படுகையில், இந்த முறையில், அதாவது அவருடைய பிரசன்னத்தில், கர்த்தர் கற்பித்த ஜெபத்தை ஜெபிக்கும்படி ஆண்டவர் என்னிடம் கேட்டார். நான் மறுபடியும், மிக மெதுவாக ஜெபித்தேன், அவர் தலை அசைத்துக் கொண்டிருந்து, அது என் இதயத்திலிருந்து வருகையில், அதை தாம் கேட்டுக் கொண்டிருப்பதை நான் புரிந்து கொள்ளும்படி செய்து கொண்டிருந்தார் என்று தோன்றியது. நாங்கள் எதிரெதிராக இருந்தோம். இயேசு இந்த விதமான ஜெபித்தலை மிக அதிகமாக அங்கீகரிக்கிறார். ஆம், வசுலா, இந்த முறையில் ஜெபிப்பதன் மூலம் என்னைத் திருப்திப்படுத்து; அன்புடன் ஜெபி; ஜெபித்தபோது நான் முழந்தாளிட்டேன் என்பதையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். எனக்கு மண ஒப்பந்தமானவளே, நான் தாயோடும், என் சம்மனசுகளோடும் இணைந்து உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்; நாங்கள் எல்லோரும் உன் அருகில் இருக்கிறோம்; என் ஆண்டவரே, பாசாசுக்கு எதிராக நீர் எனக்குத் தந்து கொண்டிருக்கிற பாதுகாவலுக்காக உமக்கு நன்றி. மே 4, 1988 நான் பரிசுத்த ஜெபமாலையின் ஒரு பகுதியை ஜெபித்தேன். நான் அதை சரியான முறையில் ஜெபிக்காமல் இருக்கலாம். ஆனாலும் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதன்பின் நாம் ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிற மூன்று ஜெபங்கள். எல்லோரும் அவற்றை அறிந்து கொள்ளும்படி, நான் அவற்றை எழுதி வைக்கப் போகிறேன். இயேசுவா? நான்தான்; என் சமாதானத்தைக் கொண்டிரு; இது ஆண்டவராகிய நான்தான், அஞ்சாதே; குறிப்பு: பசாசு இயேசுவைப் போல பாசாங்கு செய்து கொண்டு, இயேசுவுக்குப் பதிலாக எனக்குத் தோன்றக்கூடும் என்று நான் அடிக்கடி பயப்படுகிறேன். அப்படி அது செய்தபோதெல்லாம் நான் விரைவாகவே அதைக் கண்டுபிடித்து விடுகிறேன். அதன்பின் அவன் ஓடிப்போகிறான். ஓ, ஆண்டவரே, நான் இன்னும் என்ன செய்ய முடியும்? நான் இறைவனைத் திருப்தி படுத்த விரும்புகிறேன். என்னை வழிபடு! என்னை நேசி! மெத்தியூகோரியேவிலுள்ள என் சிலுவை உயிரோடும், தீச்சுவாலைகளோடும் இருக்கிறது; என் தெய்வீகப் பணிகளின் அன்புறவின் பேழையாக இருக்கிற என் அன்னையின் வழியாக என் வரப்பிரசாதங்களைத் தந்து நான் இந்தப் பிரதேசத்தை ஆசீர்வதித்திருக்கிறேன்; குறிப்பு: மெத்தியூகோரியே என்பது யுகோஸ்லாவியாவில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே 20 வயதிற்கு உட்பட்ட சில இளைஞர், இளம்பெண்களுக்கு புனித மாமரி இந்நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக, கடவுள் ஒரு மலை மீதிருக்கும் ஒரு மிகப்பெரிய சிலுவையின் காட்சியைத் தந்து கொண்டிருந்தார். இந்தச் சிலுவை தீச்சுவாலைகளால் சூழப்பட்டிருந்தது, ஆனாலும் அது தீப்பிடித்திருப்பது போலவோ, எரிந்து கொண்டிருப்பது போலவோ அல்ல, மாறாக அந்த நெருப்பு அதனுள்ளிருந்து ஒரு சிலுவை வடிவமாக வெளிவந்தது. ஒரு பிரகாசமான சுட்டெரிக்காத நெருப்பு. நான் சொல்வதைக் கேள்; இன்னும் சிறிது காலத்தில் அவிசுவாசிகளின் முழங்கால் அந்த மலையின் மீது மடங்கும்படி நான் செய்வேன்; என் பரிசுத்த சிலுவை ஓர் உயிருள்ள தீச்சுவாலையோடு உயிருடன் இருக்கிறது; குறிப்பு: இது மெத்தியூகோரியேவில் உள்ள வாக்களிக்கப்பட்ட அடையாளங்களில் ஒன்றாக இருக்குமா என்று நான் வியந்து கொண்டிருக்கிறேன். இங்கே இந்த நெருப்பு எதைக் குறிக்கிறது என்று நான் ஆண்டவரிடம் கேட்டேன், அவர் வாழ்வை என்று என்னிடம் சொன்னார். வசுலா, காலம் அண்மையில் இருக்கிறது, முன் எப்போதையும் விட அது மிக அண்மையில் இருக்கிறது! ஓ, என் அன்புக்குரியவர்களே, வாருங்கள்! என்னிடம் வாருங்கள்! குறிப்பு: இயேசு திடீரென்று தம் இதயத்திலிருந்து இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கூக்குரலிட்டார். நான் வழியும் உண்மையும், வாழ்வுமாக இருக்கிறேன்; இப்போது நேரம் இருக்கும்போதே என்னிடம் வந்துவிடுங்கள்; புல் இன்னும் பசுமையாய் இருக்கும்போதும், மரங்கள் பூத்துக் கொண்டிருக்கும் போதும் வாருங்கள்; ஓ, வந்துவிடுங்கள்! குறிப்பு: நம் மீட்பராகிய இயேசு இரந்து மன்றாடிக் கொண்டிருந்தார். நான் அளவுக்கு அதிகமாக உங்களை நேசிக்கிறேன்; உன் கொடிய தன்மையையும், உன் தீய செயல்களையும் மீறி நான் எப்போதும் உன்னை நேசித்து வந்திருக்கிறேன்; படைப்பே, ஏன் உங்களையே நீங்கள் மனமுவந்து சாத்தானின் பாதங்களில் வீழ்த்துகிறீர்கள்? படைப்பே, வசந்த காலத் தென்றல் இன்னும் வீசிக் கொண்டிருக்கையிலும், உங்கள் மனம் திரும்புதலுக்கு இன்னும் நேரம் இருக்கிறபோதும் என்னிடம் திரும்பி வாருங்கள்; ஆ, வசுலா, காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது, குறிப்பு: இயேசு இந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தபோது, ஓர் உள்ளார்ந்த காட்சியில் நான் ஓர் உஷ்ணமான, ஆபத்தான, விஷமுள்ள, பலத்த காற்று நம் மீதும், இயற்கையின் மீதும் வீசி, தான் சென்ற பாதையில் மரணத்தை மட்டுமே விட்டுச் சென்றதை நான் கண்டேன். அது தொட்ட அனைத்தும் இறந்ததாக விடப்பட்டது. வரவிருப்பது உங்களுக்கு வெகு அருகில் இருக்கிறது! உயிருள்ளதாக இருக்கிற இந்த வார்த்தை, குறிப்பு: இந்த வார்த்தைகளை சொன்னபோது இயேசு அதிசயித்தார். என் வார்த்தையைத் தங்களால் புதைத்துவிட முடியும் என்று மனிதர்கள் எப்படி நினைக்க முடியும்? விசுவாசம் ஓர் அருவருப்பான, முடமான மிருகத்தைப் போலத் தோன்றும் அளவுக்கு உருக்குளைக்கப்பட்டுவிட்டது; குறிப்பு: ஓர் அருவருப்பான, உருச் சிதைந்த, சிறிய, கருத்த மிருகத்தை நான் பார்த்தேன். அப்படித்தான் அது தோன்றும்படி அவர்கள் செய்துவிட்டார்கள், தெய்வீகமானதும், உயிருள்ளதுமாகிய எல்லாமே இன்று இந்த விதத்தில் உருக்குலைக்கப்பட்டுவிட்டது, அவர்கள் அதனிடமிருந்து நீங்கள் ஓடிப்போகும்படியும், அதற்குப் பயப்படும்படியும் செய்துவிட்டார்கள்; உங்கள் இறைவன் மௌனமாகவும், இறந்தவராகவும் இருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? நான் உயிருள்ளவனாக இருக்கிறேன், உயிருள்ளவனாக நான் செயல்படுவேன்; திருச்சபையின் அதிகாரிகள் ஒரே விதமாக உன்னை மறுதலிப்பார்கள்; தங்களிடம் எல்லா வல்லமையும், அதிகாரமும் இருப்பதாக பரிசேயர்கள் நம்பியதால், நான் அவர்களால் மறுதலிக்கப்பட்டேன், மேலிருந்து வல்லமையும், அதிகாரமும் தங்களுக்குத் தரப்படாதிருந்தால், தங்களால் எதையும் செய்ய முடியாது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்; இப்போது காயின்களின் இந்த மகன்களும், நான் அவர்களுக்கு வல்லமையும், அதிகாரமும் தரவில்லை என்றால், அவர்களால் எதையும் செய்ய முடியாது என்பதை எப்போதும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்; நானே அதிகாரமாக இருக்கிறேன், எப்போதுமே அதிகாரமாக இருந்தேன், நித்தியத்திற்கும் அப்படியே இருப்பேன்; இப்போது உள்ளபடியே என் தேவ பராமரிப்பின் பணிகளை மறுதலிக்கிறவர்கள், குறிப்பு: இந்த செய்திகளும் மற்றவையும் தங்கள் கண்களை மறைக்கிற அவர்களுடைய வீண் பெருமையால் குருடாக்கப்படுகிறார்கள்; அவர்கள் அந்தத் தவறை மீண்டும் செய்கிற அதே பழைய குருட்டு வழிகாட்டிகள் தான்; வெளிப்புறத்தில் சுத்தமாகவும், பளபளப்பாக்கப்பட்டதாகவும், ஆனால் உட்புறத்திலோ, எல்லாச் சீர்கேடும் இறந்த மனிதரின் எலும்புகளும் நிறைந்துள்ளவர்கள் அவர்கள்; என்னை மகிழ்விக்கிற குழந்தைக்குரிய விசுவாசத்தைக் குறிப்பதும், என்னால் தரப்படுவதுமாகிய ஓர் இடைவாரை நீங்கள் உங்கள் இடைகளைச் சுற்றி அணிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்; நீர் வெற்றுக் கால்களோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; துறவிகளைப் போல் இருங்கள்; என் பழைய ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆண்டவரே, அவை என்ன? என் ஆடைகள் எளிமையானவை; குறிப்பு: இயேசு உவமைகளில் பேசிக் கொண்டிருந்தார். நானோ அதை வார்த்தைக்கு வார்த்தையாக புரிந்து கொண்டேன். அன்பிற்குரிய ஆண்டவரே, நாங்கள் ஒரு பிரிவினர் என்று அவர்கள் நினைக்கக்கூடும்! ஆ, வசுலா! நீ எவ்வளவு கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறாய்! மகளே, என் பழைய ஆடைகளை அணிதல் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதைப் பற்றி நான் உனக்குச் சொல்லி, தெளிவுபடுத்துவேன்; இன்றைய இந்தப் பகுத்தறிதலை நீ அடைந்து கொள்கிறாய் என்பதற்காக நான் உன்னை நேசிக்கிறேன்; என் தெய்வீக அன்பைப் பற்றி ஒருபோதும் சந்தேகப்படாதே; என் பிரசன்னத்தை நினைவில் கொண்டிரு; சரி, ஆண்டவரே, ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி. இங்குள்ள இந்த ஜெபம், நாம் அனுதினமும் ஜெபிக்க வேண்டும் என்று இயேசு பரிந்துரைக்கிற ஜெபங்களில் ஒன்றாகும்; குறிப்பு: நாம் சொல்ல வேண்டுமென இயேசு பரிந்துரைக்கிற நான்காவதான ஒரு ஜெபத்திற்கு பிற்சேர்க்கை ஏயில் காண்க. இயேசுவின் திரு இருதயத்திற்கு நம்பிக்கையின் நவநாள், ஓ, ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, உம் மிகப் புனித இருதயத்திடம் இந்த வேண்டுதலைச் சமர்ப்பிக்கிறேன்.... இங்கு உங்கள் வேண்டுதலைக் குறிப்பிடவும். என்னைக் கண்ணோக்கிப் பாரும்; அதன்பின் உம் இருதயம் ஏவும் காரியத்தைச் செய்யும்....... உம் இருதயமே தீர்மானிக்கட்டும்...... நான் அதைச் சார்ந்திருக்கிறேன்...... நான் அதை நம்பி இருக்கிறேன்....... அதன் இரக்கத்திற்கு என்னைக் கையளிக்கிறேன்.... ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னைக் கைவிடமாட்டீர், என் இயேசுவின் திரு இருதயமே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்; இயேசுவின் திரு இருதயமே, நீர் என் பேரில் கொண்டுள்ள அன்பை நான் விசுவசிக்கிறேன்; இயேசுவின் திரு இருதயமே, உமது இராஜ்ஜியம் வருக; இயேசுவின் திரு இருதயமே, அநேக நன்மைகளை நான் உம்மிடம் கேட்டிருக்கிறேன்; ஆனாலும் இந்த உதவியை ஏக்கத்தோடு மன்றாடிக் கேட்கிறேன்; இதை எடுத்து உம் திரு இருதயத்தில் வைத்தருளும்; நித்தியப் பிதாவானவர், உம் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தால் அது நிரப்பப்பட்டிருப்பதைக் காணும்போது, அவர் அதைத் தர மறுக்க மாட்டார்; இயேசுவே, அது இனி என் ஜெபமாக இல்லாமல், உம் ஜெபமாகவே இருக்கும். இயேசுவின் திரு இருதயமே, நான் என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும், ஆமென். பின்வருவது, நாம் அன்றாடம் ஜெபிக்க வேண்டுமென இயேசு பரிந்துரைக்கிற இரண்டாவது ஜெபமாகும்; அர்ச். மிக்கேல், அதிதூதர் ஜெபம் அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும், பசாசின் துஷ்டத்தனத்திலும், கன்னிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும், இறைவன் அதனைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகிறேன், வானுலக சேனைக்கு அதிபதியாய் இருக்கிற நீரும், ஆன்மாக்களை அழிக்கும்படி உலகெங்கும் சுற்றித் திரியும் சாத்தானையும், மற்றும் பசாசுக்களையும் தேவ வல்லமை கொண்டு நரக பாதாளத்தில் தள்ளிவிடும். ஆமென். இது நாம் அனுதினமும் ஜெபிக்கும்படி இயேசு பரிந்துரைக்கிற மூன்றாவது ஜெபமாக இருக்கிறது; புனித பெர்னாடின் மிகவும் இரக்கமுள்ள தாயே, ஜெபம். மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடிவந்து, உமது உபகார சகாயங்களை இரந்து, உமது மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும், கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயவுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையில் ஏவப்பட்டு, நாங்கள் உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாய் இருக்கிற நாங்கள், உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு, உமது சமூகத்திலே நிற்கிறோம், அவதரித்த வார்த்தையானவரின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல், தயாபரியாய் கேட்டு தந்தருளும், தாயே, ஆமென்;