இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 16. மே 29,1987 "நேசமே, மனந்திரும்பு; படைப்பே, என்னை வாழ்த்திப் போற்று; நீ கேட்பதில் விசுவாசம் கொள்;" என் பாவங்களை மன்னிக்கும்படி நான் அவரிடம் கேட்டிருந்தேன், "நீ கேட்பதில் விசுவாசம் கொள்" என்று கடவுள் சொன்னபோதுதான், என் பாவங்களை மன்னிக்கும்படி என் உதடுகளிலிருந்து மட்டுமே வார்த்தைகள் வந்தன, உள்ளத்திலிருந்து அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவற்றை நான் மன்னிக்கிறேன்; என்னை நேசி, என்னைக் கனப்படுத்து, என்னை மகிமைப்படுத்தி, என்னை நேசி; நான் மீண்டும் அவரிடம் கேட்டேன், அவரை வாழ்த்தி ஸ்துதித்தேன். படைப்பே, நான் கடவுள், என் சிலுவைப் பாதையின் ஸ்தலங்களில் இரு; ஒவ்வொரு ஸ்தலத்திலும் என்னை மட்டும் ஆசித்துத் தேடு; நான் ஒவ்வொரு ஸ்தலத்திலும் நிற்கிறேன்; நான் என் சிலுவைப் பாதையின் ஸ்தலங்களில் இருப்பேன்; நீ அங்கே இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என் ஸ்தலங்களில் நீ முழந்தாளிட வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஆண்டவரே, நீர் சொல்வது எனக்குத் தெரியவில்லை! எந்த ஸ்தலங்கள்? குறிப்பு: ஆர்த்தடாக்ஸ் சபையினரான நாங்கள் சிலுவைப் பாதை சொல்வதில்லை. அங்கே நான் உனக்காகக் காத்திருப்பேன்; நான் உன்னிடம் கேட்பதை ஆராய்ந்து பார்; என் பலிப்பொருளாக இருக்க உனக்கு உதவுமாறு நான் உன்னைச் சுத்திகரிப்பேன்; என்னை ஆசி, என் அடங்காத தாகத்தைத் தணி; என் பற்றியெரியும் நேசத் தீயைத் திருப்திப்படுத்து; உன் தேவனாகிய என்னைத் திருப்திப்படுத்து; எனக்கு முழு விசுவாசத்தைத் தருவதன் மூலம் நீ எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காணுமாறு உன் முகத்திரையை நான் முழுவதுமாக உயர்த்துவேன்; உனக்கு முன் என்னைக் கண்ட மற்றவர்களிடமிருந்து என் அழகைப் பற்றி நீ நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? நம்பு, முழுமையாக நம்பு; உன் பிதாவை இன்னும் நெருங்கி வா; நான் உன் முகத்திரையை முழுவதுமாக உயர்த்துவேன்; மகளே, உன்னை நான் என் மண்டபத்திற்குள் கொண்டுவரவில்லையா? ஆம், ஆண்டவரே. அப்படியானால் என்னில் விசுவாசம் கொள்; மனிதர்கள் என்னிடமிருந்து உன்னைத் துரத்திவிட அனுமதியாதே; நானே இந்தப் பரிசை உனக்குத் தந்திருக்கிறேன், ஆகவே என்னை வந்தடைய அதைப் பயன்படுத்திக்கொள்; நேசத்திற்குப் பயப்படாதே, நாம் சர்வ வல்லபர்; என் சர்வ வல்லபத்தில் விசுவாசம் கொள்; மகளே, நீ என் மண்டபத்தில் இருக்க வேண்டுமென நான் ஆசித்தேன்; அப்படியிருக்க, நீ அங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்று நான் எவ்வளவு அதிகமாக ஆசிக்காதிருப்பேன்; என் தேவனே, என் தவறால் நம் பிணைப்பு அறுந்து விடலாம். நம் பிணைப்புகளை நீ மறந்துவிட்டாயா? நான் உன் மணவாளர்; நீ என் வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்; நான் உனக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறேன்; நான் என் ஒளியால் உன்னைச் சூழ்ந்து கொள்வேன்; உன் பலவீனத்தின் மீது நான் விழிப்பாய் இருப்பேன்; உன் நிர்பாக்கியத்தின் காரணமாக உன்னை ஒரு குழந்தையைப் போல் நான் நடத்துவேன்; உனக்காக நான் என்னதான் செய்ய மாட்டேன்! நீ என்னோடு மகிழ்ச்சியாய் இருக்கிறாயா, வசுலா? ஆம், ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்படுவீராக, ஏனெனில் எனக்கு மகிழ்ச்சி தருகிறவர் நீர்தான்; நீரே என் புன்னகை. உன் சந்தேகங்களையும் மீறி என்னை நேசி; ஆண்டவரே? வா, நீ பலவீனமானவள், நான் உன்னைப் பலப்படுத்துவேன்; என் செய்திக்காக நீ பலமுள்ளவளாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; குறிப்பு: உண்மையான அப்போஸ்தல ஊழியம் இன்னும் தொடங்கவில்லை. நான் உன் கண்களை மூடியுள்ள திரையை முழுமையாக அகற்றி, நீ என்னை தெளிவாகக் காணச் செய்ய வேண்டுமென விரும்புகிறாயா? அதுதான் உன் விருப்பம் என்றால் நான் அதையே விரும்புவேன். என்னை நோக்கி இன்னும் ஒரு சில அடிகள் நீ வரவேண்டியுள்ளது; நீ ஏறத்தாழ வந்து சேர்ந்து விட்டாய்! நான் உன் கண்களின் திரையை அகற்றுவேன்; நீ உன் முன்பாக, உன் இரட்சகரைக் காண்பாய்! என் ஐந்து காயங்களையும் நீ ஊடுருவும்படி, அவை உனக்குத் திறந்திருக்கும்; என் துயரங்களைச் சுவைக்க நான் உன்னை அனுமதிப்பேன்; அந்தக் கணத்திற்காக நான் ஏங்குகிறேன்; நேச வார்த்தைகளால் என்னை நிரப்பு; வசுலா, நீ என்னோடு பந்தமாக்கப்பட்டிருக்கிறாய், என்றாலும், நீ அதிக சுதந்திரமுள்ளவளாக உணர்ந்ததில்லையா? நீ என் பிரசன்னத்தை உணரும்போதும், என்னைக் காணும்போதும் என்னை நோக்கிப் புன்சிரி; உன் திறமையும் ஞானமும் எவ்வளவென்று நான் முழுமையாக அறிவேன்; என்னோடு ஒரு வெறுமையை, ஒரு பூஜ்ஜியத்தைக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்; வா, என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதே, நான் ஓர் ஒன்றுமில்லாமையைக் கொண்டிருப்பேனா, அல்லது யாராவது ஒரு போட்டியாளரைக் கொண்டிருப்பேனா? உண்மைதான், எந்தவித தயக்கமுமில்லாமல், என் வார்த்தைகளையும் என் ஆசைகளையும் பூமியின் மீது அனுப்ப நான் ஓர் ஒன்றுமில்லாமையைத்தான் தேர்ந்தெடுப்பேன்; ஆண்டவரே, நீர் எனக்கு மிக அதிகமாகத் தந்திருக்கிறீர், நான் மிக அதிகமாக கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்! வசுலா, எனக்குக் கொடுக்க உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? நான் தயங்கிக் கொண்டிருக்கிறேன், நான் எதைத்தான் கொடுக்க முடியும்? நிச்சயமாக, எனக்குக் கொடுக்க உன்னிடம் ஏதோ இருக்கிறது! எனக்குத் தர உன்னிடம் எதுவுமே இல்லை என்றாலும் கூட, நான் உன்னை நேசிக்கிறேன்; ஒருவேளை உமக்குக் கொடுக்க என்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறதா? எனக்கு அது தேவையா இல்லையா என்று உனக்கு நீயே கேட்டுக் கொள்கிறாயா? நான் சுயநிறைவுள்ளவர்; எனக்கு நானே போதுமானவர்; இருந்தாலும் நான் உமக்கு எதையாவது தந்துதான் ஆகவேண்டும் என நீர் விரும்புகிறீரா? விரும்புகிறேன்; ஆனால் நான் எதைத் தந்தாலும் அது உன் கண்களில் நல்லதாக இருக்காதே! ஏன்? ஏனெனில் நீர் உத்தமமானவர். நான் அதைப் பெற்றுக் கொள்வேன், அது தீமையாகவே இருந்தாலும், அதை நான் நன்மையாக மாற்றுவேன்! நான் தெய்வீகமாக இருக்கிறேன்; அப்படியானால் உமக்குத் தர என்னிடம் நல்லது ஏதாவது இருக்கிறதா? இருக்கிறது; ஆயினும் நன்மையானதெல்லாம் என்னிடமிருந்தே வருகிறது; நானே அதை உனக்குத் தந்தேன், நன்மையான எல்லாமும் என்னிடமிருந்தே வருகிறது; நான் சற்று ஏமாற்றம் அடைகிறேன் என்னால் அவரை மகிழ்விக்க இயலாது. அப்படியானால் உமக்குத் தர எனக்குச் சொந்தமான எதுவும் என்னிடம் இல்லை. இல்லை; உன்னிடம் உள்ளதும் நல்லதுமாகிய எல்லாமும் நானே உனக்குத் தந்திருக்கிறேன்; ஒருவேளை ஒரு நல்ல ஓவியம்; அதை உமக்கு ஒப்புக்கொடுக்கலாமா?! குறிப்பு: நான் என் கைப்பட வரைந்த ஓவியங்கள். வசுலா, உன் ஓவியங்களா? இந்தக் கலையின் கொடையை நானே உன்மீது பொழியவில்லையா? இதுவும் என்னிடமிருந்தே வந்ததல்லவா? அப்படியானால் நான் எதைத்தான் உமக்கு ஒப்புக்கொடுக்க முடியும்? அன்பை; என்னை ஆராதி; என்னை ஆராதி; எனக்கு உன்னைக் கையளிப்பதில், உன் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடு, நீ எனக்கு ஒப்புக்கொடுக்கக்கூடிய அனைத்திலும் அழகிய காணிக்கை அதுதான்; நான் உம்மை நேசிக்கிறேன் என்றும், என்னை நான் உமக்கு கையளித்திருக்கிறேன் என்றும் உமக்குத் தெரியுமே, ஆண்டவரே! சிறியவளே, இதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! மே 29, 1987 நான் அவரது சிலுவையை திடீரென என்மீது உணர்ந்தேன், என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று நான் நினைத்தேன். தூக்கு! என் சிலுவையைத் தூக்கு! என்னோடு கடுமையாக முயற்சி செய்! சேர்ந்து... சேர்ந்து... நான் உன்னை நேசிக்கிறேன், என் சிலுவையைத் தூக்கு! நான் இப்போது உன்னில் இளைப்பாற வேண்டும்; பிற்பாடு: அருங்கொடைக் குழுவைச் சந்திப்பதற்கு முன். என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயா? என் கரத்தைப் பிடித்துக்கொள்; நான் உன்னைப் பாதுகாத்து வழிநடத்துவேன்; அன்று மாலையில் நான் மறுபடியும் தூபத்தின் மணத்தை முகர்ந்தேன். என் பிரசன்னத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே; கடவுளை ஏற்றுக்கொள்ள மறுக்கிற இளைஞனின் குருட்டுத்தன்மையை நீக்க உதவுமாறும், அவனைச் சூழ்ந்திருக்கிற தீய ஆவிகளைத் துரத்துமாறும் நான் இயேசுவிடம் கேட்டேன்; இது, அருங்கொடை இயக்கத்தில் இருந்தபோது நான் அறிந்திருந்த ஓர் இளைஞனின் பிரச்சனையாகும். என்னை மகிழ்ச்சியால் நிரப்பு, நீ விரும்புகிற எல்லாவற்றிற்காகவும் என்னைக் கூப்பிடு; வசுலா, அவனுடைய சகோதரரை அவனுக்கு நினைவுபடுத்து; அவனை நேசிப்பவரும், அவன் மீது அக்கறை எடுத்துக் கொள்பவருமான அவனுடைய சகோதரர் நானே; நான் இருக்கிறேன் என்பதை அவனுக்கு நினைவுபடுத்து; உன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் அவனை நேசிக்கிறேன்; நான் அவனுக்காக மரித்தேன்; சிறியவளே, இதை நீ எனக்காகச் செய்வாயா? என் மீட்பின் அன்பில் விசுவாசம் கொள்; மே 31, 1987 ஞாயிற்றுக்கிழமை. வசுலா, வந்து என்னை உட்கொள், குறிப்பு: திவ்ய நன்மை வாங்குவதற்கான அழைப்பு. நான் அங்கே இருப்பேன்; என்னை மகிழ்வி; வந்து என்னைப் பார்; நீ என்னுடையவள் என்று சொல்; என்னை அதைக் கேட்கவிடு! நான் உம்முடையவள், இயேசுவே; நான் உம்மை நேசிக்கிறேன். வசுலா, பல வருடங்களாக இந்த வார்த்தைகளுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்! இப்போது நீ என்னுடையவளாய் இருப்பதால், என்னை நேசி; நீர் விரும்பியபடி நான் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத் தாரும். என்னை நம்பு; நான் கற்றுத் தருவேன்; பிற்பாடு: என் கரம் எப்படி நகர்கிறது என்பது என்னை இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது... இயேசுவே, அது உமக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும்; நான் எல்லாம் வல்லவர் அல்லவா? வசுலா, என்னைப் போல சமாதானத்தோடு இரு; மௌனமாயிரு, மன அமைதியோடு இரு; எழுதிக் கொண்டிருக்கையில் இரு தடவைகள் என் மகனால் எனக்கு இடையூறு வந்தது, அவன் உள்ளே வருவதும், கதவை அறைந்து சாத்துவதுமாக இருந்தான்; நான் கலக்கமடைந்தேன்! அளவுக்கதிகமான சத்தம். என்னை நேசி; எனக்கு பதில் சொல்! நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே! எனக்குப் பதில்: ஒருபோதும் யாரையும் தேர்ந்து கொள்ளாதே; என்னை முதலாவதாகக் கொண்டிரு; முதன்முதலாக என்னைப் பார்; என்னையே பார்த்துக் கொண்டிரு; ஒரு கண்ணாடியைப் போல், என் பிரதிபலிப்பாக இரு, மற்றவர்களை அன்றி என்னை மட்டுமே தேடு; உன் முந்தின வாழ்வின் பழைய பழக்கங்களை ஒருபோதும் தேடாதே; நான் பரிசுத்தரும் ஆண்டவருமாய் இருக்கிறேன்; நானும் நீயும் இப்போது ஒன்றாய் இருக்கிறோம்; உன்னை எனக்காக மட்டும், நித்தியத்திற்கும் நான் கொண்டிருப்பதையே குறிப்பிடுகிறேன்; உன்னைத் தாழ்த்து என்னிடமிருந்து கற்றுக்கொள்; என்னை மட்டும் விரும்பு, எனக்காக சுவாசி, இப்போது வலமோ இடமோ திரும்பாமல் நேராகவே செல்; நேசமே, உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; என்னைப் பிடித்துக்கொள்; வார்த்தைகளில் உன் எளிமையைக் கொண்டு என்னை பரவசப்படுத்து; எளிமை என்னை வசீகரிக்கிறது; உன் வார்த்தைகளை என்னிடம் கூறு, நான் அவற்றை மறுபடியும் கேட்கட்டும். "இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்; என் மகிழ்ச்சியும் என் சுவாசமும் என் இளைப்பாற்றியும் என் பார்வையும் என் புன்னகையும் நீரே" என்று என்னிடம் சொல்; மகளே, சிந்திக்கவும் தியானிக்கவும் உனக்கு மேலும் நேரம் தரப்பட்டால் நீ இன்னும் அதிகமாக என்னை மகிழ்விப்பாய்; இப்போதிலிருந்து நீ மௌனத்தில் என்னைத் தேடுவாய், முழுமையான மௌனத்தில் என்னை நேசிப்பாய்; மௌனமாக ஜெபிப்பாய், என் ஞான உலகத்தில் அமைதியில் பிரவேசிப்பாய்; குறிப்பு: இடைவிடாத ஜெபம். இப்போது எனக்கு வெகுமதி கொடு; நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை எனக்குத் தருவதன் மூலம் என்னைக் கனப்படுத்து; எனக்குத் துயரம் தராதே; என்னுடையவளாக இரு; நேசமே, பேசு! மௌனத்தில் எப்படிப் பேசுவது, ஆண்டவரே? மௌனமாக என்னைப் பார்த்தபடி, எந்த வகையான இடையூறுமில்லாமல் மௌனத்தில் என்னைத் தேடியபடி நீ அப்படியே அசையாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; எந்த ஒரு இடையூறும் இல்லாமலா? எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல்தான்; ஆழ்ந்த அமைதியை விரும்பு; இயேசுவே, குடும்ப வாழ்வில் இந்த அமைதியை என்னால் எப்படிக் காண முடியும்? அதற்கு ஏறக்குறைய சாத்தியமேயில்லை! நான் அதை உனக்குத் தருவேன்; வசுலா, நான் உன்மீது பரிதாபப்படுகிறேன்! என் எஞ்சிய பாகமே, என் நறுமணமே, என் நேசமே, உனக்காக நான் என்னதான் செய்யமாட்டேன்! என் இருதயம் உன் நிர்பாக்கியத்தின் மீதும் உன் வீழ்ச்சிகளின் மீதும் தயவிரக்கத்தினால் நிறைந்துள்ளது; ஆண்டவராகிய நான் உனக்கு உதவுவேன் - ஒருபோதும் கைவிடப்பட்டதாகவோ அல்லது நேசிக்கப்படாமல் இருப்பதாகவோ உணராதே; நீ நேசிக்கப்படாமல் இருப்பதாக உணர்ந்தபோது என் உணர்வுகள் எவ்வாறு இருந்ததென உனக்குத் தெரியுமா? எங்கே? என் ஆலயத்தில்; குறிப்பு: சில சமயங்களில் இயேசு மனிதர்களை மறுதலிக்கிறார்; அவர்களுக்குக் கதவை மூட அவரால் முடியும் என்று எனக்குச் சொல்லப்பட்ட பிறகு, ஒரு குருவோடு நான் செய்த விவாதத்தின் போது, இயேசு மறுத்துத் தள்ளிய ஒரு கானானேயப் பெண் பற்றிய வேதாகமப் பகுதியை வாசிக்கும்படி அந்தக் குரு என்னிடம் தந்தார்; ஆனால் இயேசு அவளை மறுதலிக்காமல், அவள் தன் விசுவாசத்தை வெளிப்படுத்துமாறு அவளைப் பரிசோதித்தார்- எனக்கு இந்தப் பகுதியைக் காட்டியவர் அதை முழுவதுமாக வாசிக்க எனக்கு அனுமதிக்கவில்லை. அதனால் இது எனக்குத் தெரியாமல் இருந்தது; நான் கோவிலுக்குச் சென்று நன்மை வாங்கினேன்; ஆகவே எங்கள் ஒப்பந்தத்தின்படி, கத்தோலிக்கத் திருச்சபையின் எல்லாச் சட்டங்களையும் மீறி எனக்கு அனுமதிக்கப்படாத ஒன்றை அனுமதி இல்லாமல் நான் பெற்றுக் கொண்டேன் என்றும், அது மிகவும் தீமையானது என்றும் உணர்ந்தேன்; மறு ஞாயிறன்று நான் கோவிலுக்குச் சென்றேன்; நான் அங்கே விரும்பப்படாதவள் என்று உணர்ந்தவளாக, பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமான வாசல் பக்கத்தில் நின்று கொண்டேன்; நான் தீயவள் என்றும், கடவுள் என் மீது மிகவும் கோபமாய் இருக்கிறார் என்றும் நான் நம்பியதால், திவ்விய நன்மை வாங்க மற்றவர்களோடு நான் முன்னே செல்லவில்லை, அப்படி சென்றால் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுவேன் என்று நான் அஞ்சினேன்; இல்லை ஆண்டவரே. நான் மறுபடியும் முழுவதுமாக சிலுவையில் அறையப்பட்டதாகவும், காயப்படுத்தப்பட்டதாகவும், கசையடி பட்டதாகவும், துப்பப்பட்டதாகவும், மீண்டும் ஆணிகளால் அறையப்பட்டதாகவும் உணர்ந்தேன்; வசூலா, நான் எப்படி உன்னை நேசிக்கிறேன்; என் திருச்சபையை உயிர்ப்பிக்க எனக்கு உதவு; உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதிப்பதன் மூலம் எனக்கு உதவி செய்; தைரியமாயிரு, மகளே, தைரியமாயிரு; இயேசுவே, இதெல்லாம், அதாவது நான் நேசிக்கப்படவில்லையோ என்று எனக்குள் எழுந்த உணர்வு, உம்மைக் காயப்படுத்திவிடும் என்பதை நான் அறியாமல் இருந்தேன். இல்லை, என்னிடம் வருகிற யாரையும் ஒருபோதும் நான் மறுதலிப்பதில்லை என்பதும் உனக்குத் தெரியாதிருந்தது; நானே அன்பு, நீங்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அது பிரச்சனையில்லை; அன்பு எல்லோருக்கும் உரியது; ஜூன் 1, 1987 வசுலா, என் இரண்டு கரங்களிலும், இரண்டு பாதங்களிலும் காயங்கள் இருக்கின்றன; என் விலா திறந்திருக்கிறது; என் இருதயத்தைக் காட்டியபடி அது விரியத் திறந்திருக்கிறது; அவர்கள் என்னை மீண்டும் சிலுவையில் அறைகிறார்கள்; ஆண்டவரே, அவர்கள் என் திருச்சபையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஆண்டவரே, இது அவ்வளவு மோசமாக இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, தீமை அவர்களைக் குருடாக்கியுள்ளது; அன்பு அவர்களிடையே தொலைந்துவிட்டது; அவர்கள் உண்மையுள்ளவர்களாக இல்லை, அவர்கள் என் வார்த்தையின் பொருளைத் திரித்துவிட்டார்கள், என் சரீரத்தையும் கூட முடமாக்கிவிட்டார்கள்; என் நீதியின் கிண்ணம் நிரம்பியுள்ளது; அது நிரம்பி வழிந்துவிட விட்டுவிடாதீர்கள்; அவர்கள் என் சரீரத்தை மூச்சுத் திணறடிப்பதை நிறுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்; இயேசுவாகிய நான் நேசமாய் இருக்கிறேன்; ஒருவர் மீது மற்றவர் நஞ்சுள்ள அம்புகளை வீசுவதை நிறுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; அவர்களிடையே பரஸ்பர ஒன்றிப்பு நிலவினால், பழுதடைந்ததில் ஒரு பகுதி சீரடையும்; உண்மை தீமையின் முகத்திரையை கிழிக்கும், உண்மையில் எனக்கு ஒப்புக்கொடுக்க அவர்களிடம் ஒன்றுமில்லாதிருக்கும்போது, ஏன் இந்தச் சடங்குகள் எல்லாம்? புனிதத்தன்மையும், நேசமும், பிரமாணிக்கமும், தாழ்ச்சியும், பரிசுத்தத்தனமும் எனக்குத் தேவை; நான் ஆசிக்கிற எல்லாவற்றையும் என்னில் தேடு; நான் அதை உனக்குத் தருவேன்; நான் விரும்பும் காரியங்களைத் தேடு; உன் விருப்பங்களைத் தேடாதே; என்னை மகிமைப்படுத்து, என்னைக் கனப்படுத்து; வார்த்தைகள் போதாது, அன்பின் செயல்களும், ஒத்துழைப்பும் என் சரீரத்தை உயிர்ப்பிக்கும்; சகோதரர்களே! ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; ஓ, அன்பே, நான் எவ்வளவோ காரியங்களைச் சீர்படுத்த வேண்டி இருக்கிறது! வா, மகளே, என்னில் இளைப்பாறு; சமாதானம் உன்மீது இருப்பதாக; ஜூன் 2, 1987 பிற்பாடு என்னைச் சந்தி, தொடக்க அறிவுரைகளை நான் உனக்குத் தருவேன்; வசுலா, வரை, இந்தக் கோடுகளை ஒன்றிணை, இணைவதற்கு நீங்கள் எல்லோரும் வளைய வேண்டும்; நீங்கள் எல்லோரும் இளகுவதன் மூலம் வளைய சித்தமாயிருக்க வேண்டும்; நான் புரிந்து கொண்டேன். அவர் எனக்கு மூன்று இரும்புக் கம்பிகளின் ஒரு தெளிவான, எளிய காட்சியைத் தந்தார்; அவை நேராகவும், ஒன்றுக்கொன்று அருகாமையிலும் இருந்தன. "இவை வளையவில்லை என்றால், இவற்றின் தலைகள் எப்படி சந்திக்கும்?" என்றார் அவர் - குறிப்பு: தலைகள்; பிற்பாடு அந்தத் தலைகள் அதிகாரத்தை, தலைவர்களைக் குறிக்கின்றன என்று நான் புரிந்து கொண்டேன்; பிற்பாடு காலையில் நான் வெளியே போனேன்; எவ்வளவுக்கு அதிகமாக இந்தக் காட்சியைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேனோ, அவ்வளவுக்கு அந்த 'மலை' பெரிதாய்த் தோன்றியது; நான் முடங்கிப் போனேன்... இயேசுவா? நான்தான்; தைரியம் கொள், மாணவியே! உயர்த்து! ஒன்றாக இணைந்து... இணைந்து, என் சிலுவையைத் தூக்கு, இப்போது எழு! துயரப்படாதே; சேர்ந்து... சேர்ந்து... என் வசுலா, நாம் சேர்ந்து கடுமையாக உழைப்போம், நீ சோர்ந்திருக்கும்போது என் மீது சாய்ந்துகொள், நான் சோர்ந்திருக்கும்போது உன்மீது நான் சாய்ந்துகொள்ளவிடு; என்னைச் சந்தி, என் ஆசைகளை நிறைவேற்றுவோம்; இளகிய மெழுகைப் போல இரு, என் கரம் என் வார்த்தைகளை உன்மீது செதுக்குவதாக; சித்தமாயிரு, பயப்படாதே! நான் உன்னை நேசிக்கிறேன், நேசமே, வா! நேசம் உன்னைக் காயப்படுத்தாது; இந்தப் பணிக்கு நான் பயப்படுகிறேன்; குறிப்பு: இந்தச் செய்தியின் முடிவில் வசுலாவின் வார்த்தைகளைக் காண்க. வா, நாம் ஜெபிப்போம்; "ஓ, தந்தையே, இறுதி வரைக்கும் என்னோடிரும்; நான் பலவீனமானவள்; உம்மை மகிமைப்படுத்த எனக்கு உம் பலத்தைத் தாரும்; ஆமென்; நேசமே, வா; உன் அச்சங்களை விட்டுவிட்டு நான் சொல்வதைக் கேள்; உன் கடவுளுக்கு பணி செய்; நான் என் திருச்சபையை ஒன்றுபடுத்த விரும்புகிறேன்; வசுலா, நீ என்னை ஏற்றுக்கொள்ள; நான் உன்னைப் பயிற்றுவித்திருக்கிறேன், நேசமே, தைரியம் கொள்! உம் தைரியம் இருக்க வேண்டும். என்னிடம் தைரியமில்லை. நான் உன்னை ஊக்கப்படுத்தி, நீ என் மீது கொண்டுள்ள அன்பை என் மகிமைக்காக வெளிப்படுத்துவேன்; வசுலா, என் வார்த்தைகளை எழுதுவாயா, என்னிடமிருந்து உறிஞ்சிக் குடி; சௌரியத்தைத் தேடாதே; ஏழ்மையாயிரு; நான் பூமியின் மீது உடலோடு இருந்தபோது எப்படி இருந்தேனோ, அப்படியே இரு; என்னைக் கசையால் அடிப்பவர்களின் முரண்பாட்டையும், மேன்மைகளையும் நாம் இருவரும் உணரும்படியாக எளிமையாக இரு; முரண்பாட்டை நான் உணரவிடு! என் இருதயத்திடமிருந்து முகந்துகொள், என் திருச்சபையை அலங்கரி, என் சின்னஞ்சிறுமியே அப்போது நீ புரிந்துகொள்வாய்; இது என்ன பணி என்று நான் இப்போது உணர்ந்துகொள்ளத் தொடங்குவதாக நினைக்கிறேன்; அதனால்தான் நான் பயப்படுகிறேன்; இயேசு திருச்சபையில் எதையோ புரட்டிப் போடத் தொடங்குகிறார்...