வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 47. செப்டம்பர் 24, 1987 நான் புனித மாமரியை என் அருகில் உணர்ந்தேன். வசுலா, ஆம், இது நான்தான், உன் மாதா; நான் கரப்பந்தாளில் என் பிள்ளைகளுக்குக் காட்சி தந்திருக்கிறேன்; அவர்கள் என்னைக் காணவும், கேட்கவும் நான் அனுமதித்தேன்; நான் அவர்களுக்குக் காட்சி அளித்திருக்கிறேன், அவர்களும் இதை அறிந்திருக்கிறார்கள்; நீ அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; புனித மாமரியே, உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள். வசுலா, நான் உன்னை வழிநடத்துவேன்; உங்களுக்கு நன்றி. நான் அதிசயித்தேன், பிற்பாடு என்னைச் சுற்றி நான் தூபத்தின் நறுமணத்தை முகர்ந்தேன். நான்தான் இயேசு, நான் உன்னை ஆசீர்வதித்தேன், என் தூபத்தைக் கொண்டு உன்னை மனம் கமழச் செய்தேன்; திருச்சபை உயிர்பெறும்! நாம் ஒன்றாயிருக்கிறோம்; நான் என் திருச்சபையை ஒன்றுபடுத்தும்போது, மேலும் காத்துக் கொண்டிருக்க மாட்டேன்; என் ஆன்மா உனக்காக எப்படி ஏங்குகிறது என்று உன்னால் உணர முடிகிறதா? அன்பே, நான் உன்னை எடுத்துக் கொள்வேன், நான் உன்னை நேசிக்கிறேன்; இதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்கு மேல் நான் இந்த பூமிக்கு சொந்தமானவள் அல்ல. பூமி உண்மையாகவே எனக்கு பரதேசமாக இருக்கிறது என்று நான் உணர்கிறேன். நேசமே, இந்த பரதேசத்தில் உன்னை வைத்திருப்பது என்னையும் துன்பப்படுத்துகிறது, ஆனாலும் இதெல்லாம் வீணாய்ப் போகாது; என் படைப்பை நான் நேசிக்கிறேன், நீ என் படைப்பை என்னிடம் திரும்பக் கொண்டுவர வேண்டும்; உன்னை கீழே பூமியில் கண்டு நான் துன்பப்படுகிறேன்; எனக்காக வாழ், மகளே, நான் எப்படி என்னையே பலியாக்கினேன் என்பதை நீ நினைவு கூற வேண்டும்; நீயும் உன் தந்தையாகிய எனக்காக இதையே செய்வாயா? என்னை உமக்கும், எந்த ஒரு தியாகத்திற்கும் தகுதியுள்ளவளாக்கும், ஆண்டவரே. அன்பே, ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; வா, இவையெல்லாம் வீணாய்ப் போகாது; செப்டம்பர் 25, 1987 இன்று காலையில் நான் தூப மணம் மீண்டும் கமிழ்வதை உணர்ந்தேன். அவர் அந்த குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டிருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன். என் மீதமே, நான் உன்னிடம் கேட்பதெல்லாம் நேசம் மட்டுமே; என்னை நேசி; என் வார்த்தைகளைப் பரப்பு, அவை; "ஆண்டவராகிய நான், கரப்பந்தாளின் என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறேன்; நான் அவர்களை நேசிக்கிறேன்;" நேசமே, அவர்களை ஒன்று கூட்டு, அவர்களை ஒன்றாக இணை; வரவிருக்கிற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள், அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி; நான் உனக்கு முன்பாக இருக்கிறேன்; சரி, ஆண்டவரே. உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, உம்முடைய விருப்பங்களும் நிறைவேறுவனவாக. வா, என்னை உணர்ந்துகொள்; நாம் அனைத்தையும் பகிர்ந்துகொள்வோம்; செப்டம்பர் 26, 1987 வசுலா, நாம் சாத்தானின் நெருப்புக்கு அருகில் இருப்பவளும், எனக்கு பிரியமானவளுமான ஒரு ஆத்துமத்தை விடுவிப்போம்; அவள் தனக்கென சாத்தான் ஆடி வரும் அருவருப்புக்குரிய அவனது விளையாட்டைப் புரிந்து கொள்ளவில்லை; இந்த ஆத்துமம் யார், ஆண்டவரே? என் மணவாளிகளில் ஒருத்தி; ஒரு கன்னிகா ஸ்திரீயா? ஆம், ஒரு கன்னிகா ஸ்திரீதான், அவள் தன் வீண் பெருமையால் மேற்கொள்ளப்பட்டு என்னை உதாசீனம் செய்துவிட்டாள்; நேசமே, உன் நேசத்தைக் கொண்டு அவளை என்னிடம் திரும்பக் கொண்டு வா; நான் அவளை நேசிக்கிறேன்; என்னை நேசி, அப்போது அவள் விடுவிக்கப்படுவாள்; வசுலா, எனது பணிகள் உனக்கும், இன்னும் அநேகருக்கும் பரம இரகசியமானவை, என்றாலும் என்னை நம்பு, நான் இயேசுவாகவும், ஞானமாகவும் இருக்கிறேன்; இப்போது நீ என்னை வாழ்த்தி ஸ்துதிப்பாய்; என்னை உணருவாய், அது என்னை மகிமைப்படுத்துகிறது; என் திட்டத்தின்படியே அனைத்தும் நடைபெறும்; இயேசுவே! இம்முறையில் உம்மோடு இருப்பது எவ்வளவோ அற்புதமானதாய் இருக்கிறது! வசுலா, இது அற்புதமானது, அதிசயமானது! வசுலா, நான் எப்போதாவது உன்னைக் கைவிடுவேனா? குறிப்பு: அவர் இதை சொல்லும் ஒவ்வொரு முறையும் நான் கிட்டத்தட்ட இறந்து போகிறேன். கடவுள் மட்டுமே இந்தத் துணியில் பேச முடியும். என்னை நேசி, என் மட்டில் பனிக்குளிர்ச்சி உள்ளவியாக மாறிவிட்ட இதயங்களோடு இருப்பவர்களுக்காகப் பரிகாரம் செய்; பலிபீடமே! எனக்காக வாழு, என்னுடையதிலிருந்து உன் தீச்சுவாலைகளை பற்ற வைத்துக்கொள், பலிபீடமே, நான் உன்னை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை ஒருபோதும் மறக்காதே; தொடர்ந்து எரிந்து கொண்டிரு; இதயங்களை தூண்டி எழுப்பு; என் தாகத்தைத் தணிப்பாயாக; நேசமுள்ள இயேசுவே, என்னை உம் அருகில் வைத்துக்கொள்ளும், ஏனெனில் நீர் இல்லையெனில் நான் அழிந்து போவேன். என் அருகிலேயே நீ இருந்து கொள்வாய், நம் பிணைப்புகளை நீ மறந்துவிட்டாயா? நீ நித்திய பந்தங்களால் என்னோடு பிணைக்கப்பட்டிருக்கிறாய்; பூஜ்யங்களில் எல்லாம் பூஜ்யமும், உம்மை மறுதலித்தவளுமாகிய என்னை பராமரிப்பதற்காக, ஆண்டவரே, உமக்கு நன்றி. இராயப்பனாலும் கூட நான் மறுதலிக்கப்பட்டிருக்கிறேன், ஆனாலும் அவன் மீதுதான் என் திருச்சபையின் முதல் அஸ்திவாரங்களை நான் இட்டேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? நான் உன்னை வாக்கு கெட்டாத விதமாக நேசிக்கிற உன் ஆண்டவராய் இருக்கிறேன், ஆத்துமமே, உன் மீது நான் என் வார்த்தைகளைச் செதுக்கி வைத்திருக்கிறேன்; நான் உன் பலமாய் இருக்கிறேன்; இப்போதும் என்றென்றும் என்னை உன் இதயத்தில் வைத்துக்கொள்; வைத்துக்கொள்வேன், ஆண்டவரே. நான் உமக்கு பிரமாணிக்கமாக இருப்பேன். வா, இந்த நாளை நாம் பகிர்ந்து கொள்வோம்; என் தோழியாக இரு; செப்டம்பர் 27, 1987 மீண்டும் நரகம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது போல் இருந்தது. பாசாசு கடும் கோபம் கொண்டான். அவன் என் ஆன்மாவை எந்த அளவுக்கு பாதித்தான் என்றால், நான் இல்லாமல் தொடர்ந்து செல்லும்படி ஆண்டவரிடம் கேட்டுக்கொள்ளும் நிலையில் நான் இருந்ததைக் கண்டேன். நான் எப்போதும் அவரை நேசிப்பேன் என்றும், ஆனால் தொடர்ந்து செயல்பட என்னில் பலமேதும் மீதமில்லை என்றும் நான் அவரிடம் கூறினேன். உடனடியாக நான் என் வார்த்தைகளுக்காக வருந்தினேன். அதன்பின் நான் ஆண்டவரிடம் என் தகுதியின்மையின் காரணமாக என்னை விட்டு விலகும்படி கேட்டேன். என் ஓய்வின்போது ஒரு கரடு முரடான சாலையில் நான் விழுந்து கிடக்கக் கண்டேன். என் அருகில் இயேசுவின் வெற்று பாதங்கள் இருந்தன. அவர் குனிந்து என்னை மீண்டும் தூக்கினார். அதன்பின் எனக்கு முன்னால் சுமார் 100 படிகள் உள்ள ஒரு பெரிய படிக்கட்டை நான் கண்டேன். அதன் முச்சியில் புனிதர்கள் நின்று கொண்டு மேலே ஏறி வரும்படி என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பி பரிட்சயமான ஒரு உருவத்தைக் கண்டேன். ஒரு குருவானவர். அவர் மகிழ்ச்சியான குணம் உள்ளவராக இருந்தார். என்னோடு இத்தாளிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் தந்தை பியோ என்று நான் அடையாளம் கண்டுகொண்டேன்! புனித பிரான்சிஸ் அசிசியாரையும் அவர் அருகில் நான் கண்டேன். புனித பிரான்சிஸ் என்னை நெருங்கி வந்தார். அவர்கள் எல்லோரும் தொடர்ந்து செயல்படுமாறு என்னை உற்சாகப்படுத்தினர். இயேசுவா? நான்தான் வசுலா, அஞ்சாதே; இயேசுவே, நான் பலவீனமாக இருப்பதற்காக என்னை மன்னியும். உன் பலவீனம் என் பலத்தால் நிர்மூலமாக்கப்படும்; இயோ சோனோ கோன் தே, பாத்ரே பியோ; நான் உன்னோடு இருக்கிறேன்; என் தேவனே, இது நிகழ்ந்து கொண்டிருக்கிறதா? ஆம், அவர் என்னோடு இருக்கிறார், வசுலா, என்னால் புனிதராக்கப்பட்டார்; நானும் என் திருமாதாவும் எல்லா புனிதர்களும் உன்னோடு இருக்கிறோம்; பிற்பாடு, அருங்கொடைக் கூட்டத்திற்குப் பிறகு, என் அறியாமையால் அங்கே என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நான் அமைதிக்காக இயங்கினேன். நான் குற்றம் உள்ளவளாக, அறியாமையினால் மிகக் குற்றம் உள்ளவளாக உணர்ந்தேன். வசுலா, கவலைப்படாதே; ஒவ்வொரு மனிதனும் என்னை மகிமைப்படுத்துவதற்கும், போற்றி ஸ்துதிப்பதற்குமாக தனக்கென ஒரு சொந்த வழியைக் கொண்டிருக்கிறான்; நான் உனக்கு இந்த வழியைத் தந்திருக்கிறேன்; குறிப்பு: எழுதுவதில். நானும் நீயும், நீயும் நானும், நீ மௌனத்தில் என்னை வழிபட வேண்டுமென நான் சில மாதங்கள் முன்பே உனக்குக் கற்பித்திருக்கிறேன் என்பதை நினைவில் வை; மே 31, 1987. உன் பக்கத்தில் நான் நிற்கிறேன்; என்னால் திடமான விதத்தில் அவரைத் தொட முடிந்த அளவில் எனக்கு மிகப் பக்கத்தில் நான் அவரை உணர்ந்தேன். என் ஆன்மா மறுபடியும் மகிழ்ச்சி அடைந்தது, சமாதானத்தில் இருந்தது. சிறியவளே, நான் உன் மணவாளர் அல்லவா? அப்படி இருக்க, நீ தேற்றப்பட வேண்டி இருக்கும்போது நான் உன்னை தேற்றமாட்டேனா? என்னிடம் வா, நான் உன் சுமைகளை அகற்றுவேன், என்னிடம் வா, நான் உன்னைத் தேற்றுவேன்! என்னில் நம்பிக்கை கொண்டிரு, மகளே, நானே உன் ஆன்ம இயக்குனராக இருக்கிறேன்; நானே உன் மணவாளராக இருக்கிறேன்; நானே உன்னை எல்லோரிலும் அதிகமாக நேசிப்பவராக இருக்கிறேன்; நான் உன்னைப் படைத்தவராகவும், கடவுளாகவும் இருக்கிறேன்; வந்து, என் கரங்களில் விழுந்து, என் கதகதப்பை உணர்வாயாக; இயேசுவின் ஆத்துமத்தை முழு இணக்க நிலையிலும், சமாதானத்திலும் விட்டுச் சென்றார். செப்டம்பர் 28, 1987 இயேசு என்னை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைப் போலவே நானும் அவரை சந்திக்க மிக ஆவலாக இருந்தேன். என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றாய் இருந்து யுகங்கள் கடந்து விட்டது போல தோன்றியது. ஓ, வா அன்பே! இம்முறையில் உன்னை சந்திப்பதற்காக, இந்த கணத்திற்காக நான் எவ்வளவோ பொறுமையின்றி காத்துக் கொண்டிருக்கிறேன்! வசுலா, நானும் நீயும் இணைந்து கரபந்தாலை அர்ச்சிப்போம்; ஏனெனில் நானும் என் திருமாதாவும் அங்கே காட்சி அளித்ததால், அது பரிசுத்தமானது; குறிப்பு: நான் அங்கே போக திட்டமிடாமலே அதுவும் நடந்தது. இயல்பான விதத்தில் இது நடந்தது. ஆண்டவரே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. வசுலா, பயந்த சுபாவம் உள்ளவளாய் இருப்பது ஒரு பாவம் அல்ல என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்; குறிப்பு: பயந்தவளாக இருப்பது ஒரு பாவமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். திடீரென்று என் ஆன்மா அவருக்காக ஏங்கியது. சிறியவளே, என்னைப் பார்; எனக்காக ஏங்குவது என்னை மகிமைப்படுத்துகிறது; எனக்காக ஏங்கு; நான் உனக்காக என் இரத்தத்தை விலையாகக் கொடுத்தேன்; வசுலா, ஒரு ஆன்ம இயக்குனருக்காக ஏன் தேடிக் கொண்டிருக்கிறாய்? எனக்குத் தெரியவில்லை. என்னைக் கொண்டு நீ கற்றுக்கொள்வாய், ஏனெனில் நானே ஞானமும், உண்மையுமாக இருக்கிறேன்; என்னிடம் வா, நான் உனக்குப் போதிப்பேன்; வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நான் என் திருச்சபையை புதுப்பிக்கப் போகிறேன் என்று அவரிடம் சொல்; குறிப்பு: அவரிடம், இவர் அந்த அருங்குடை குரு. இவர் இந்த இடத்திற்குப் புதியவர். இப்போதுதான் மாற்றலாகி வந்துள்ளார். நான் என் திருச்சபையைப் உயிர்ப்பிப்பேன்; என்னோடு வேலை செய்யும்படி நான் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; வசுலா, அவரைச் சந்தித்துப் பேசு; என்னை வருடிச் சீராட்டு, என்னை மகிமைப்படுத்தும்படி நான் உனக்குக் கற்றுக் கொடுத்ததை செய்வதன் மூலம் என்னை வருடிச் சீராட்டு; குறிப்பு: புனித அடக்கத்துகிலின் படத்தின் மீது. வசுலா, என்னை நேசி; ஏனெனில் தேவ நீதி பாவிகளைத் தாக்க இருக்கும் நேரத்தில், அன்பு அதை விலக்கி விடுகிறது; பிற்பாடு: வசுலா, நான் உன்னை விடுவித்திருப்பதில் நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? ஆம் என், தேவனே. நான் உம்மோடு இருப்பதில் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். உம்மோடு இணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். உன்னோடு நான் அன்பால் கட்டப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது நம்புகிறாயா? ஆண்டவரே, இப்போது நம்புகிறேன். சிறியவளே, என்னை வாழ்த்து; நான் உம்மை வாழ்த்துகிறேன், இயேசுவே. நான் உம்மை நேசிக்கிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன். வசுலா, உங்கள் எல்லோர் பேரிலும் நான் கொண்டுள்ள அன்பு உங்களில் இருக்கும்படியாகவும், அதன் மூலம் நான் உங்களில் இருக்கும்படியாகவும், நான் உங்களுக்கு தந்து கொண்டிருக்கும் இனி தொடர்ந்து தரவிருக்கும் அடையாளங்களைப் பற்றி நீ அறிவாயா? ஆனால் என் குருத்துவ ஆன்மாக்களில் பலர் மனிதர்களின் முன்னிலையில் என்னை மறுதலித்து விட்டார்கள்; ஆண்டவரே, எப்படி? என் அடையாளங்களை மறுதலிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் கடவுளாகிய என்னை மறுதலித்து விட்டார்கள்; மனிதர்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவன் என் சமணசுகளின் முன்பாக மறுதலிக்கப்படுவான் என்று நான் சொல்லவில்லையா? நான் தொடர்ந்து என் திருப்பயிரை நீங்கள் அறிய செய்வேன் என சொல்லவில்லையா? அப்படி இருக்க, நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்பதையும், உங்களால் மிகக் குறைவாக மதிக்கப்படும் அடையாளங்களையும் புதுமைகளையும் என் இரக்கத்தாலேயே நான் உங்களுக்கு தருகிறேன் என்பதையும் அவர்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள்? ஏனெனில், மகளே, இதை நான் உனக்கு சொல்வேன்; அவர்கள் அறிவின் திறவுகோலை எடுத்துக் கொண்டார்கள்; தாங்களும் உள்ளே நுழைந்ததில்லை; நுழைய விரும்புபவர்களையும் அவர்கள் உள்ளே அனுமதித்ததில்லை; என் கடவுளே, நீர் மிகக் கோபமாக இருக்கிறீர். ஆண்டவரே! வசுலா, என்னை மகிமைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது; விழிப்பாய் இரு; என் அருகிலேயே தங்கியிரு; சிறியவளே, நான் உன்னை நேசிக்கிறேன்; என்னோடு ஒன்றாய் இரு; சரி, ஆண்டவரே. நாம், நாங்கள்? ஆம், நாம். வா; செப்டம்பர் 29, 1987 என்கடவுளே, உம் குருத்துவ ஆன்மாக்களில் சிலரைப் பற்றி நீர் துயரப்படுபவராக தோன்றுகிறீர். வசுலா, அவர்கள் ஏராளமான ஆன்மாக்களுக்கு பொறுப்பானவர்கள்; தாங்கள் விழுவது மட்டுமல்ல, மாறாக தங்களோடு அவர்கள் இன்னும் ஏராளமான ஆன்மாக்களையும் இழுத்துச் செல்கிறார்கள்; ஆனால், ஆண்டவரே, உம்மை நேசிப்போரும், உம் விருப்பப்படி உழைப்பவர்களுமாகிய பல நல்ல குருக்களும் இருக்க வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட சில குருக்களை தெரியும். ஆ வசுலா, பலர் என் போதனைகளை பின்பற்றுகிறார்கள்; தங்களை பலியாக்குகிறார்கள்; தாழ்ச்சியோடு வாழ்கிறார்கள்; ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்; என் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கிறார்கள்; என் ஆன்மாவின் நேசமாக பூமியின் உப்பாக இருக்கிறார்கள்; அவர்கள் என் ஆபேல்களாக இருக்கிறார்கள்; அவர்கள் என் காயங்களுக்கு தைலமாக இருக்கிறார்கள்; என் வேதனையை குறைக்கிறார்கள்; ஆனால், நான் துயரப்படும் விதமாக அவர்கள் மத்தியில் காயின்களும் இருக்கிறார்கள், என் திருவுடலுக்கு அம்புகளாக, வஞ்சகர்களாக, வீண் பெருமையால் குருடாக்கப்பட்டவர்களாக, கொடியவர்களாக, வெறுக்கத்தக்க நாட்டங்கள் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் என் தலையில் முட்களாக இருக்கிறார்கள்; அவர்களுடைய பாவங்கள் எண்ணற்றவையாக இருக்கின்றன; வெளியேடம், அவர்களது எஜமானனாக இருக்கிறது; அவர்களை நோக்கியே என் தேவ நீதி கோபத்தோடு வெடிக்கிறது; மகளே, என் கரத்தை பிடித்துக்கொள்; எனக்கு அருகிலேயே இருந்து கொள்; நான் உனக்கு அந்த முட்களை சுட்டிக்காட்டுவேன், நான் தெய்வீக வலிமையுடன் என் உடலின் உள் ஆழங்களுக்குள் உன்னை நடத்திச் செல்வேன்; ஈட்டியின் கூர்முனையை நீ அடையாளம் கண்டுகொள்ள நான் உன்னை அனுமதிப்பேன்; வசுலா, காயன்களை நான் தப்பவிடமாட்டேன்! ஏனெனில் எனக்கு கையளிப்பதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது? அவர்களது கரங்கள் வெறுமையாய் இருக்கின்றன; என் ஆட்டுக்குட்டிகளுக்கு தர அவற்றில் ஒன்றுமில்லை; அவர்கள் வெளியிடங்களில் தங்களைக் காட்ட விரும்புகிறார்கள்; பாசாங்குள்ள விதத்தில் தாங்கள் வாழ்த்தப்படுவதை அவர்கள் நேசிக்கிறார்கள்; அவர்கள் தன் சாரத்தை இழந்துவிட்ட உப்பை போன்றவர்கள்; மகளே, நான் உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன்; அவர்கள் இன்றைய பரிசேயர்களாக இருக்கிறார்கள்; கடவுளே, இது பயங்கரமானது. வசுலா, இந்த காரணத்தினால் இதுவரை மறைவாய் இருந்துள்ளது எல்லாமும் வெளிச்சத்திற்கு வரும், மூடப்பட்டிருந்தது எல்லாம் திறக்கப்படும், ஏனெனில் இதுவே என் சித்தம்; இப்போது வா, என் பிரசன்னத்தை மறக்காதே; மறக்க மாட்டேன், ஆண்டவரே. என் பரிசுத்த தந்தையாகவும், பரிசுத்த நண்பராகவும், சகோதரராகவும் நான் உம்மை பார்க்கிறேன். புனித மாமரியை நான் என் பரிசுத்த தாயாராக பார்க்கிறேன். நீங்கள் என் பரிசுத்த குடும்பமாக இருக்கிறீர்கள். என்னால் எப்படி உங்களை மறக்க முடியும்? நேசமே, நான் உன் மணவாளரும் கூட, இந்த விதமாகத்தான் நீ நேசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், இருந்தாலும், நாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை ஒருபோதும் மறக்காமலும் எங்களை மதித்துப் போற்றியபடியும் எங்களை அன்யோனியமாக நேசி; நான் உன் கடவுள், விழிப்பாய் இரு; சரி, ஆண்டவரே. நாம் போவோம்; போவோம்.