இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவிடம், விரைவில் இந்தத் தீமை எல்லாம் தம் அன்பின் நெருப்பால் முடிவுக்கு வரும் என்றும், புதிய வானகமும் புதிய பூமியும் வாக்குறுதியாக இருக்கின்றன என்றும் கூறுகிறார். தைரியம் கொள்ளவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், தம்மிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைக்கவும் அழைக்கிறார். கஷ்டங்களிலும் தம் பலம் தாங்கும் என்கிறார்.

Show Notes

அத்தியாயம் 100: இந்த எல்லா அக்கிரமமும் விரைவில் முடிவுக்கு வரும் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு வசுலாவிடம், விரைவில் இந்தத் தீமை எல்லாம் தம் அன்பின் நெருப்பால் முடிவுக்கு வரும் என்றும், புதிய வானகமும் புதிய பூமியும் வாக்குறுதியாக இருக்கின்றன என்றும் கூறுகிறார். தைரியம் கொள்ளவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், தம்மிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைக்கவும் அழைக்கிறார். கஷ்டங்களிலும் தம் பலம் தாங்கும் என்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 06/09/1989 - தைரியம் கொள்; தீமை விரைவில் முடியும்
06:37 13/09/1989 - என் கரங்களில் விட்டுவிடு
17:01 14/09/1989 - திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள்
22:37 15/09/1989 - எனக்குப் பிரமாணிக்கமாயிரு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #அன்பின்நெருப்பு #புதியவானகம் #TrueLifeInGod100

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 100. செப்டம்பர் 6, 1989 ஆண்டவரா? நான்தான்; நான் உன் முன் நிற்கிறேன்; என் வசுலா, இந்த அருளை உணர்ந்துகொள்; நம்பு, ஆம், குழந்தைக்குரிய விசுவாசத்தில் நம்பு, ஏனெனில் என்னையும், தந்தையையும் மகிழ்விப்பது இதுவே; நீ எழுத விரும்புகிறாயா? சரிதானே? நான் எழுத மறந்துவிட்டேன் என்பதை உணர்கிறேன். என் சிலுவையைப் பற்றியா? ஆம், ஆண்டவரே. அப்படியானால் இப்போது எழுது; என் இறைவா, உமக்கு நன்றி. பிற்பாடு, ஒரு பரம இரகசிய முறையில், தம் சிலுவையை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற பிறகு, இரவில் வெகுநேரம் வரை துயரங்களின் மழையை நான் என் மீது பெற்றுக் கொண்டது போல் இருந்தது. அது உலகம் தன் பாவங்களோடு, எல்லா வகையான பாவங்களோடும், என் மீது அழுத்துவது போல் இருந்தது. திடீரென, இந்த வாதைக்கு நடுவே, நான் ஜெத்சமெனியில் இயேசுவை நினைவு கூர்ந்தேன்; நான் கசந்து அழுதேன். மறுபுறத்தில், ஒரு குறுகிய நேரத்திற்கு என்றாலும், இயேசுவை அவருடைய பாரத்திலிருந்து விடுவித்ததற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன். இயேசு பிற்பாடு வந்து, தம் சிலுவையை எடுத்துக்கொண்டார். அன்புக்குரியவளே, நான் அதை இப்போது உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்; கவனி, கேள்; என் மீது பக்தியோடு வாழ முயன்றவனும், ஒருபோதும் தாக்கப்படாதவனும், துன்புறுத்தப்படாதவனுமாகிய யாரைப் பற்றியாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? இல்லை ஆண்டவரே, அவர்களில் சிலர் மறைசாட்சிகளாக இறந்தும் போனார்கள். ஆம், சிறியவளே, ஆக, இறைவாக்குகளில் சொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுவதை இப்போது நீ பார்க்கிறாய்; இன்றுவரை, என் வாயினின்று வந்து, என் செய்தியைத் தரும்படி தன் குரலை உயர்த்தும் எவனும், காயீன்களால் துன்புறுத்தப்படுவது பற்றி நிச்சயமாயிருக்கிறான்; நான் அவர்களை அழைக்கிறேன், ஆனால் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்; நான் அழைக்கிறேன், ஆனால் அதை கவனிப்பவன் யாருமில்லை; அவர்கள் என் எச்சரிக்கைகள் அனைத்தையும் அலட்சியம் செய்கிறார்கள், வாக்குறுதியை ஏளனம் செய்கிறார்கள்; "உங்கள் நாட்களில் நான் மனுக்குலத்தின் மீது என் ஆவியைப் பொழிவேன்" என்று நான் சொல்லவில்லையா? என் சட்டங்கள் நேரடியாக உங்கள் இதயங்களுக்குள் வைப்பேன் என்றும், உங்கள் மனங்களின் மீது அவற்றை எழுதுவேன் என்றும் நான் சொல்லவில்லையா? மனித முயற்சியால் எந்த ஒரு இறைவாக்கும் வருவதில்லை; அது எப்படி வர முடியும்? என் வார்த்தை என் பரிசுத்த ஆவியானவரால் தரப்படுகிறது, அதன் மூலம், அது மனிதர்கள் என்னைப் பற்றிப் பேசும்படிச் செய்கிறது; ஆண்டவராகிய நான் புதிய வானங்களையும் புதிய பூமியையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறேன்; என் வசுலா, நான் இதற்கு முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்! ஆனால் மக்கள் உன் நாட்களில் சுயநலமிக்கவர்களாகவும், பரிசுத்த வேதத்தை அனுசரியாதவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் இருக்கிறார்கள், கடவுளுக்கு மேலாகத் தங்கள் சொந்த இன்பத்தைத் தேர்ந்துகொள்கிறார்கள், ஆனால் நாட்கள் பறந்தோடிக்கொண்டிருக்கின்றன, விரைவில் இந்த எல்லாத் தீமையும் முடிவுக்கு வந்துவிடும், அது என் அன்பின் நெருப்பால் அடித்துச் செல்லப்பட்டு சுத்தமாக்கப்பட்டுவிடும்; ஆகவே, சிறியவளே, தைரியம் கொள்; கஷ்டங்கள் எப்போதும் இருக்கும் என்றாலும், என் பலம் எப்போதும் உன்னைத் தாங்கும்; விரைவில் என் புதிய வானகங்களை நீ காண்பாய்; ஒரு புதிய பூமியின் மீது நீ வாழ்வாய்; ஏனெனில் என் வாக்குறுதி விரைவில் நிறைவேற இருக்கிறது, என் திருச்சபையின் புதுப்பித்தல் தன் வழியில் வந்து கொண்டிருக்கிறது; ஏற்கனவே நீ அதன் பிறப்பின் வேதனைத் துடிப்புகளின் தொடக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய், ஆகவே, என் அன்புக்குரியவர்களே, என் பெயரைத் தாங்கியுள்ளவர்களே, என் சந்ததியராக இருப்பவர்களே, தைரியம் கொள்ளுங்கள்; அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்; என் வார்த்தை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது; நான் உங்களோடு இருப்பேன் என்றும், உங்கள் நடுவே வாழ்வேன் என்றும் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் நேரடியாக என்னிடமிருந்து உண்பீர்கள், நான் உங்களுக்கு வாழ்வின் கிணற்றிலிருந்து தண்ணீர் தருவேன்; தாகமாய் இருக்கும் எவனுக்கும் இலவசமாக அதைத் தருவேன்; என் நெருப்பு ஏற்கனவே மோட்சத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறது, அது என் மாபெரும் அன்பால் உங்களை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது; நான் இந்த சுட்டெரிக்கும் நெருப்பை ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்பி, உங்கள் கொடிய தன்மையை அன்பாக மாற்றுவேன், கல்லாகிப் போன உங்கள் இதயங்களை நான் வசீகரிப்பேன், அவற்றை பற்றியெரியச் செய்வேன், உங்கள் மந்த நிலையை உங்கள் இறைவனாகிய என் மீது உள்ள பக்தியார்வமாக மாற்றுவேன்; என் நெருப்பின் இந்தப் பரிசுத்தமான நேரம் பற்றியெரியும் ஒரு சூளையைப் போல் உங்கள் மத்தியில் பரவும், நீங்கள் என் அன்பின் நெருப்பால், என் பரிசுத்த ஆவியின் நெருப்பால் நிரப்பப்படுவீர்கள்; முதல் பெந்தகோஸ்தே நாளுக்கு இணையாக, நான் உங்களைப் புதுப்பிப்பேன், என் உண்மை, ஒருமைப்பாடு, நீதி, சமாதானம், அன்பு ஆகியவற்றின் அரசை விரிவுபடுத்துவேன்; ஆகவே, அக்களியுங்கள்! என் அன்புக்குரியவர்களே, உங்கள் முழு இதயத்தோடும் அகமகிழுங்கள்; நான் வந்து, நீங்கள் சிதறடிக்கப்பட்டதற்கும், உங்கள் வீழ்ச்சிக்குமுரிய காரணங்களில் ஒன்றாக, உங்கள் நடுவே இருக்கிற அகங்காரமும், பெருமையும் உள்ளவர்கள் அனைவரையும் நான் அகற்றி விடுவேன்; என் ஆவியை நெறித்து விடுபவர்கள் என் சுவாசத்தால் நசுக்கப்படுவார்கள்; நீங்கள் என் அன்பின் நெருப்பால் சுத்திகரிக்கப்படுவீர்கள்; மகளே, என்னை அன்பு செய், என்னை ஆராதி, என்னை மகிழ்வி; அன்பு உன்னை அன்பு செய்கிறது; என் குழந்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; ஆண்டவரே, நாங்கள், நாம்? என் குழந்தாய், நாங்கள், நாம், வா; செப்டம்பர் 13, 1989 என் ஆண்டவரே, என்னைத் துன்புறுத்தவோர் என்னைச் சூழ்ந்து நெருக்குகிறார்கள், நான் நசுக்கப்படுவதைக் காண்பதில் அவர்கள் உறுதியாய் இருக்கிறார்கள், என் ஜெபத்திற்கு செவிசாய்த்தருளும், கர்வமுள்ள வார்த்தைகளிலிருந்தும், பொய் சொல்லும் நாவுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும், என் பாதுகாவலரே, உம் புனித இருதயத்தில் நான் தஞ்சமடைய என்னை அனுமதியும். என் குழந்தாய், எல்லாவற்றையும் என் கரங்களில் விட்டுவிடு; உன்னைக் குற்றஞ்சாட்டுவோர் உண்மையில் என்னை குற்றஞ்சாட்டுபவர்களாக இருக்கிறார்கள், உனக்குத் தீர்ப்பிடுவோர் என்னைத் தீர்ப்புடுவோராகவும், உன்னைத் துன்புறுத்துவோர் என்னைத் துன்புறுத்துவோராகவும் இருக்கிறார்கள்; என் குழந்தைகள் அறிவின்மையால் அழிந்து போகிறார்கள், என்றாலும் அறிவு மேலிருந்து சுதந்திரமாகத் தரப்படும்போது, அவர்கள் அதை மறுதலிக்கிறார்கள்; ஆனால் ஆண்டவரே, நீர் உம் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியை உமக்குத் திறப்பாகவும், உமக்குக் கீழ்படிய மனதுள்ளவர்களாகவும் இருக்கிற ஆன்மாக்களின் வழியாக எப்போது வேண்டுமானாலும் பரப்ப முடியுமே, நான் திடீரென என் உள்ளங்கைகளில் வேதனையை உணர்ந்தேன். மலரே, உன் வேதனைகள் கண்களுக்கு மறைவானவை; கேள், என் தெய்வீக வேலைகள் இந்த பூமியை மூடிக்கொள்ளும், அவை இந்த பூமியை மூடிக்கொள்ளும்படி நான் பார்த்துக் கொள்வேன், என் திட்டத்தில் தலையிட எந்த மனிதனாலும் இயலாதிருக்கும்; மலரே, உறுதியாயிரு, ஏனெனில் இது என் சித்தம்; நான் விரும்புகிறபடி உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன் மீது கொண்டுள்ள அன்பின் மேன்மை காரணமாக, என் கசப்புள்ள கிண்ணத்திலிருந்து பருக நான் உன்னை அனுமதிக்கிறேன்; நான் உன் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு மேலானதாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக அதிலிருந்து பருக நான் உன்னை அனுமதிப்பேன்; நான் உன் மணவாளராகவும் இருப்பதால், அனைத்திலும் அதிக விலைமதிப்புள்ள என் ஆபரணங்களை உனக்குத் தந்தேன்; என் சிலுவையையும், என் ஆணிகளையும், என் முள்முடியையும் நான் உன் பொறுப்பில் விடவில்லையா? நான் எப்படி உன்னை அன்பு செய்கிறேன் என்று நீ காணவில்லையா? என் வழிகள் உன் வழிகள் அல்ல, நான் உன் ஆன்மாவை சுத்திகரித்து, அதை உத்தம தனத்திற்குள்ளும், அர்ச்சிப்பின் சாலைக்குள்ளும் இட்டுச் செல்கிறேன்; என் மணவாளியே, என் அணிகலன்களால் உன்னை அலங்கரிக்க என்னை அனுமதி, என் திருப்பாடுகளை உனக்குக் காண்பிக்க என்னை அனுமதி; சுயத்தைத் துறத்தல் உன்னை உத்தமத் தனத்திற்கு இட்டுச் செல்லும்; ஆகவே, உன் ஆன்மாவுக்கு மிகச் சிறந்ததைச் செய்ய சுதந்திரம் உள்ளவனாய் இருக்க என்னை அனுமதி; இதை நினைவில் இருத்து, நீ என் வார்த்தைகளையும், என் வழிகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை என்றாலும், இயேசு என்றால் மீட்பர் என்பதை நினைவில் வை; ஆண்டவரே, தனி வெளிப்பாடுகள் அனைத்தையும் ஏற்க மறுபவர்கள் பரிசுத்த வேதாகமம் மட்டுமே உண்மையான வெளிப்பாடு என்று வாதிடுகிறார்கள். இதை நாங்கள் அனைவரும் அறிவோம், ஆனால் என் ஆண்டவரே, இது பற்றி நீர் என்ன சொல்கிறீர்? பரிசுத்த வேதாகமம் உண்மையாகவே, உண்மையான வெளிப்பாடாக இருக்கிறது, ஆனால் நான் இல்லாமல் போய்விடவில்லை; பார், நானே வார்த்தை, நான் ஆவியில் செயல்படுபவராக இருக்கிறேன்; என் பரிந்து பேசுபவர், பலர் மறக்க, அல்லது அலட்சியம் செய்ய விரும்புகிற என் உண்மையின் ஆவியானவர், உங்கள் அனைவரோடும் இருக்கிறார், ஏனெனில் ஆவியானவர் உங்களுக்குச் சொல்லும் அனைத்தும் என்னுடையதிலிருந்து எடுக்கப்படுகிறது; அவர் என் வார்த்தையின் நினைவூட்டுதலாக, உங்கள் மனதின் தூண்டுதலாக இருக்கிறார்; என் குழந்தாய், இதனால்தான் நான் தொடர்ந்து அதே உண்மைகளை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறேன்; நான் ஏன் தொடர்ந்து நினைவுபடுத்துவவரை கொண்டு உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்; என் உண்மையின் பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக் கொள்ளுங்கள்; நான் என் வார்த்தையை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வருகிறேன், என் நாள் வரும் முன் மனம் வருந்தும்படி உங்களை அழைக்க நான் வருகிறேன்; குழந்தாய், அன்பிற்காக அன்பைக் கொண்டு நற்செய்தியை அறிவி, நான் உன் அருகில் இருக்கிறேன், ஒருபோதும் அஞ்சாதே; திருச்சபை புத்துயிர் கொள்ளும், ஏனெனில் அன்பே வாழ்வின் மரத்தின் வேராக இருக்கிறது, அது உங்கள் நடுவில் இருக்கிறது; நான் இறந்து கொண்டிருக்கிற இந்த சந்ததிக்கு, என் மரத்தின் கனியை உணவாகத் தருவேன், அதை நேரடியாக அவர்களுடைய வாய்க்குள் வைப்பேன்; என் எழுதுபலகையாக உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; என்னிடமிருந்து உணவு உட்கொள்; வா, நாங்கள், நாம்? ஆம், நான் உன் தாயோடு இருக்கிறேன்; நான் உங்களை நேசிக்கிறேன், அகாப்பா - மெ; ஜெபியுங்கள்; குறிப்பு: கிரேக்க மொழியில் "என்னை அன்பு செய்" என்பது பொருள். வசுலா, என்னை மகிழ்வி, அடிக்கடி, உன் அன்றாட வேலைக்கு மத்தியில் என்னிடம் வா; நான் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தாலும், இரண்டு நிமிடத்திற்காவது நம் ஆண்டவரோடு ஒன்றாயிருப்பதற்காக அடிக்கடி வருகிறேன், கடவுள் மீதுள்ள ஏக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது... என்னை மகிழ்வி, நீ என்னோடு ஒன்றித்திருக்கிறாய் என்று எனக்குக் காட்டு; நான் உனக்காக செலுத்திய பிணைத்தொகையை நினைத்துப் பார், ஆகவே, எந்நேரமும் என்னிடம் வந்து என்னோடு பேசு, சிறியவளாகவே நிலைத்திரு; நான் அன்பின் காரணமாக, எப்படி ஒவ்வொரு ஆன்மாவையும் என்னிடம் அழைப்பேன் என்பதைப் புரிந்துகொள்; உன் ஞானிகளின் இதயம் துக்கப் புலம்பலின் இல்லத்தில் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; அவர்கள் தங்கள் மாபெரும் இருத்தல் என்று சொல்லப்படும் நிலையில் என் வல்லமையையும் என் தெய்வீகத்தையும் மறக்க எத்தனிக்கிறார்கள்; அவர்களது சீர்கெட்ட நிலை அவர்களைக் குருடாக்கிறது; அது சாத்தான் அவர்களோடு பேசும்படி அவனுக்குத் திறப்பாயிருக்கிற ஓரிடத்தில் அவர்களை வைக்கிறது, ஏனெனில் அவர்கள் அன்பிற்குத் தங்கள் இதயத்தை மூடிக்கொண்டார்கள், அவர்களது மனமும், இதயமும் என் ஆன்ம உலகத்தை விட பகுத்தறிவு சார்ந்த உலகத்திற்கு அதிக நெருக்கமாக இருக்கின்றன; இந்தக் கொள்ளை நோய் என் திருச்சபைக்குள் ஊடுருவி விட்டது; என் ஆயர்களில் பலர் நான் உங்களுக்குத் தந்திருக்கிற அந்த உவமையில் உள்ள காகங்களைப் போல் இருக்கிறார்கள்; என் திருச்சபையிலுள்ள மிக அதிகமான இணக்கமற்ற நிலைக்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள்; அவர்களுடைய பேச்சுகளிலும், மறையுரைகளிலும் ஆன்மீகமும், என் வார்த்தைக்கும் கட்டளைக்கும் பிரமாணிக்கமும் இல்லை; அவர்கள் என் முன்னிலையில் என் பரம இரகசியங்களை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் தேவ பக்தியை அவமதிக்கிறார்கள்; அவர்களுடைய முன்னோனாகிய காயீனால் செய்யப்பட்ட செயல்கள் நினைவிருக்கிறதா? அவர்கள் அவனுடைய பேச்சு வழக்கை ஏற்றுக்கொண்டார்கள், புண்ணியத்திற்குப் பதிலாக துர்க்குணத்திற்கும், பரிசுத்தத்திற்கு எதிராக ஒழுங்கீனத்திற்கும் ஊழியம் செய்கிறார்கள், அவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பாவ அடிமைத்தனத்திற்குக் கையளித்து விட்டார்கள்; இந்தக் காயீன்கள் பாவத்திற்கு உயிருள்ளவர்களாகவும், ஆனால் என் உண்மையின் ஆவிக்கு உயிரற்றவர்களாகவும் இருக்கிறார்கள்; என் நாள் வரும்போது, அவர்கள் எனக்குப் பதில் சொல்லவும், தங்கள் மேய்ப்பரின் பாரம்பரியங்களைக் காத்துக் கொள்ளாமல் இருந்ததற்காக எனக்குக் கணக்கு ஒப்பிக்கவும் வேண்டியிருக்கும்; இன்று அவர்களுடைய வாய் அவற்றைத் தீர்ப்பிடுகிறது, அவர்களுடைய சொந்த உதடுகள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்; இது அவர்களுடைய விசுவாச மறுதலிப்பின் கனியாக இருக்கிறது; ஆனால் ஆண்டவரே, ஆபேலின் கூக்குரலைக் கேளும், எங்களைத் தூக்கிவிட யாருமின்றி நாங்கள் தன்னந்தனியாக இங்கே கிடக்க விட்டு விடாதேயும்! உம்முடைய இல்லம் சிதைந்துள்ளது, உம் இல்லம் எங்கள் புகலிடமாக இருக்கிறது, எங்களுக்கு வேறு போக்கிடமில்லை, ஆயிரக்கணக்கானவர்கள் அப்பமின்றி மடிவார்கள், நாங்கள் சிதைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எங்கள் குரல்களையும், உம் குழந்தைகளின் புலம்பல்களையும் கேளும், உம் ஆபேல் சொல்வதைக் கேளும்! என் குழந்தாய்! ஜெபித்துக் கொண்டேயிரு, ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதே, மகளே, நான் எதிர்பாராத விதமாக என் தேவாலயத்திற்குள் நுழைவேன் என்று உனக்கு வாக்களிக்கிறேன், எருசலேமை நோக்கி உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டு, "மீண்டும் கட்டப்படு!" என்று நான் சொல்வேன், தேவாலயத்தை நோக்கி "உன் அஸ்திவாரங்கள் இடப்படட்டும்" என்று சொல்வேன்; அது என் புதிய நகரமாக இருக்கும், என் ஆவியைக் கொண்டு உயிருள்ளதாயிருக்கும்; என் அன்புக்குரிய மீதமே, அன்பு உங்கள் அனைவர் நடுவிலும் தங்கும்; என் வாழ்வின் மரங்களால் நான் அதை நிரப்புவேன்; என் அன்பிற்குரியவர்களே, உங்களுக்குத் திருப்தியாகும் வரைக்கும் நீங்கள் உண்பீர்கள்; நானே உலகின் ஒளி, நானே உங்கள் மீது ஒளிவீசுபவர், விழிப்பாய் இருங்கள்; உறங்காதீர்கள், ஏனெனில் நாட்கள் எண்ணப்படுகின்றன; என் குழந்தாய், என் சமாதானத்தைக் கொண்டிரு; இயேசுவாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன், உனக்கும், இந்தப் பட்டினி கிடக்கிற தலைமுறைக்கும் உணவூட்ட என்னை அனுமதி; இப்போது என் திரு இருதயத்தில் ஓய்விடு; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; அன்பு உன் அருகில் இருக்கிறது; செப்டம்பர் 14, 1989 திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் வசுலா, அதிகமாக ஜெபி, என் அன்பில் ஒருபோதும் சந்தேகப்படாதே, என் சட்டத்தை எப்போதும் மதி; என் தாய்க்கு இடம் கொடு, உன் கரங்களுக்குள் அவர்களை ஏற்றுக்கொள்; என் தாயின் இல்லத்தில், என்னைக் கருத்தாங்கி அவர்களின் அறைக்குள் நான் உனக்காகக் காத்திருப்பேன்; சோர்ந்து போகாதே முயற்சியோடும், ஆவியின் பெரும் ஆர்வத்தோடும் எனக்காக வேலை செய்; அன்பிற்காக அன்போடு வேலை செய்; உன் இறைவனாகிய என்னை வழிபடு, கற்பிப்பது என்பது துன்பத்தின் வழியாகவே என்றாலும், நான் உனக்குக் கற்பிக்க என்னை அனுமதி; நான் என் திருப்பாடுகளை உனக்குத் தருகிறேன்; இப்போது உன் உதடுகள் பரிசுத்த தனத்தையும், நீதியையும் மட்டுமே உச்சரிக்க வேண்டும், அன்புக்குரியவளே, எனக்காக நீ என்னை உன் இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளால் அலங்கரிக்க வேண்டும்; என் சிலுவையை மலர் வளையங்களால் அலங்கரி; என் சிலுவையை உன்னில் உள்ள அன்பின் ஒவ்வொரு துளியைக் கொண்டும் அலங்கரி; இப்போது என்னை மகிழ்விக்க முயற்சி செய், நான் உனக்கு எவ்வளவோ அதிகமாகத் தந்திருக்கிறேன்! என்னை முதலாவதாகக் கொண்டிரு, இப்போது என்னை மகிழ்விக்கிற உன் பற்றுதலையும், பக்தியார்வத்தையும் நான் உணரவிடு; நான் உன் ஆசிரியர், என்னிடமிருந்து நீ கற்றுக்கொள்வாய்; வசுலா, ஜெபி, என் பலத்தைக் கேள், உன் பலவீனத்தைப் பயன்படுத்தி, உன்னைச் சோதிக்க சாத்தானை அனுமதியாதே; எழுதுவதில் சோர்ந்து போகாதே; என் கட்டளைகளை நினைவுகூர்ந்து அவற்றைப் பின்பற்று; வா, நான் உன் ஆன்மாவை குழப்புகிற அந்தக் காரியங்களைப் பற்றி உன்னை ஒளிர்விப்பேன், நான் உன் ஆன்ம இயக்குனர் இல்லையா? ஆகவே, என்னில் விசுவாசம் கொள், உன் அச்சத்திற்குரிய பலவீனத்திலும் கூட, நான் இந்த வெளிப்படுத்துதலை நிறைவு செய்யக்கூடியவராக இருப்பேன்; என் குழந்தாய், உன் வறுமையிலும், பலவீனத்திலும் உன்னைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், என் திருப்பெயர் இன்னும் அதிகமாக மகிமைப்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்; நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; வா, என்னை அன்பு செய்; இன்று நரகம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டருது போலிருந்தது. நான் பசாசால் இடைவிடாமல் தாக்கப்பட்டேன். நான் மற்றொரு துன்ப சோதனையைக் கடந்து சென்று கொண்டிருக்கிறேன், என் ஆன்மா வாதிக்கப்படுகிறது. பிற்பாடு மாலையில்; இயேசுவா? நான்தான்; என் சம்மனசே, அஞ்சாதே, காத்திருந்து, நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை மட்டும் பார்; இயேசுவாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன்; பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தரே, நான் உம்மை ஆராதிக்கிறேன். இன்னும் சற்றுப் பிற்பாடு; நான் மீண்டும் திடப்படுத்தப்படுவதற்காகவும், ஆறுதலுக்காகவும் இயேசுவிடம் திரும்பி வந்தேன். நான் தாக்கப்பட்டவளாகவும், பரிதாபத்திற்குரியவளாகவும் உணர்கிறேன், நான் தப்பறையில் இருக்கிறேன் என்று பயப்படுகிறேன்! என் ஆண்டவரே, தீமையிலிருந்தும் அவன் என் மீது தொடுக்கும் தாக்குதல்களில் இருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். சாத்தானின் வலைகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். என் ஆவி என்னை கைவிடுவதற்கு முன்வாரும்! மீண்டும் என் இரட்சகராயிரும், என் மகிழ்ச்சியை புதுப்பியும், என் ஆவி எப்போதும் திடமாயும், உமக்குக் கீழ்ப்படிய சித்தமாகவும் இருக்கச் செய்யும்; மீறுபவர்களுக்கு நான் உம்மிடம் வரும் வழியைக் கற்பிப்பேன், பாவிகள் உம்மிடம் திரும்பி வருவார்கள். குறிப்பு: சங்கீதம் 51வது அதிகாரம், இறைவார்த்தைகள் 12 மற்றும் 13. மலரே, என் சமாதானத்தைக் கொண்டிரு; என் வசுலா, நீ உறங்கிக் கொண்டிருப்பதை பசாசு காணாதபடி, ஜெபி; இடைவிடாமல் ஜெபி; குறிப்பு: நான் இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபிக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார் என்று நான் நினைத்தேன். என் கடும் சோர்வின் காரணமாக, அப்படிச் செய்ய முடியாதவளாக நான் இருந்திருப்பேன். "நான் உன் மீது எப்படிப் பரிதாபப்படுகிறேன்!" என்று இயேசு சொன்னபோது, அவரது வார்த்தை அதீதமான அளவுக்கு பரிவுள்ளதாக இருந்தது. நான் உன் மீது எப்படிப் பரிதாபப்படுகிறேன்... என்னை அன்பு செய்வது என்பது எனக்கு எல்லாவற்றையும் தருவதாகும்; உன்னிடமுள்ள எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்; இயேசுவே, நீர் விரும்புகிற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். எனக்காக இன்னும் அதிக பரித்தியாகம் செய்ய நீ விரும்புகிறாயா? என் உடல் பலவீனமாய் இருந்தாலும், நான் சித்தமாயிருக்கிறேன். என் ஆண்டவரே, நீர் இதைச் செய்துதான் ஆகவேண்டுமென்றால், என்னை இழுத்துச் செல்லும்படி நான் உம்மிடம் கேட்டுக்கொண்டேன். தயவுசெய்து அதைச் செய்யும். ஆ, வசுலா, நீ மன உவப்போடு காரியங்களைச் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் மனதாய் இருக்கிறேன். அப்படியானால், என்னை அனுமதி... என்னை நீ தடுப்பதை நிறுத்த, என்னை அனுமதி; உன்னை என்னிடம் கையளித்துவிடு, அச்சம் கொள்ளாதே; என் குழந்தாய், சமாதானத்தோடு இரு, பசாசு உன்னை வெறுக்கிறது, அது தொடர்ந்து உன் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது; என் மீதுள்ள உன் பிடியை விட்டுவிடாதே, என்னை இறுக்கமாகப் பற்றிக்கொள்; செப்டம்பர் 15, 1989 அதன்பின் நான் ஓய்வெடுக்க படுக்கைக்குச் சென்றேன், மணி 11:00 ஐ தாண்டிவிட்டது. நான் ஜெபித்தேன், ஜெபித்தேன், உறக்கம் என்னும் இந்த அச்சத்திற்குரிய வார்த்தை என்னை மேற்கொள்ளும் முன், நான் பல தடவைகள் "கீரியே எலேயிஸோன்" ஆண்டவரே, இரக்கமாயிரும். "கிறீஸ்தே, எலேயிஸோன்" கிறீஸ்துவே, இரக்கமாயிரும் என்ற வார்த்தைகளை உச்சரிப்பதில் வெற்றி பெற்றேன், அப்போது திடீரென எனக்குள் ஒர் உரத்த குரல் கேட்டது, அது என்னைத் திடுக்கிட்டு, துள்ளி எழச் செய்தது; "நான் உனக்கு உதவி செய்வேன்!" என்று அது சொன்னது! இரவில் என்னுள் இருந்த அந்தக் குரல் பல தடவைகள் என்னோடு இடையறாத ஜெபத்தில் இருந்தது. சில சமயங்களில் நான் அந்தக் குரலின் சில ஜெப வார்த்தைகளைத் திரும்பச் சொன்னேன், என்றாலும் நான் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை. மறுநாள் காலையில்: வசுலா, நான் உன்னிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்; எனக்கு நீ அதிகம் தர மனதாய் இருக்கிறாயா? இயேசுவே, என்னிடமிருந்து நீர் விரும்புகிற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். உன் உயிரைக் கூடவா? என் உயிர் உம்முடையது. மலரே, அன்பினால் நீ துன்புறும்படி நான் செய்வேன்; நினைவில் கொள்; அர்ச்சிப்பு துன்பத்திலிருந்து வருகிறது; இப்போது வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை உனக்கு வாசித்துக் காட்ட என்னை அனுமதி; குறிப்பு: எபிரேயர் 31 ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஒன்று முதல் ஆறு வரை. எனக்குப் பிரமாணிக்கமாயிரு, நான் முழுப் பிரமாணிக்கமுள்ளவர், ஆகவே, என்னில் நம்பிக்கை கொள், என்னைத் தடுக்காதே, உன்னை முழுமையாக என்னிடம் கையளித்துவிடு, உன் ஆன்மாவுக்கு மிகச்சிறந்தது எதுவென எனக்குத் தெரியும்; நானே அன்பு;