இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 18. ஜனவரி 23, 1987 ஓ, வசுலா, நான் எவ்வளவோ உன்னை நேசிக்கிறேன்; என்னிடம் வா, நானே உன் நித்தியப் பிதா, நான் என் குழந்தைகளின் பேரில் கொண்டுள்ள நேசத்தை உணர்ந்து பார்; என்னை நேசிக்கும்படி நானே உன்னை வழிநடத்தினேன்; உனக்கு வழிகாட்டியவர் நான்தான்; நானே நேசத்தின் தேவன், சமாதானத்தின் தேவன், இரக்கத்தின் தேவன், நான் சாந்தமுள்ளவன், நானே நல்ல ஆயன், நானே மன்னிக்கிற தந்தை, உனக்கு உதவி செய்யாமல், நீ காணாமல் போவதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பேன்? உங்கள் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன்; நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக தன் உயிரையே தருவான்; நான் மன்னிப்பின் உறைவிடமாக இருக்கிறேன்; நான் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டேன்; பிற்பாடு: இயேசுவே, நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்? வசுலா, நீ எழுதுவதை நிறுத்திவிட்டாலும், நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை வழிநடத்துவேன்; இந்த முறையில் நீ என்னைச் சந்திக்குமாறும், உனக்குக் கற்பிக்குமாறும் இந்த சிறப்பு வரத்தை நான் உனக்குத் தந்தேன்; நீ எனக்காக வேலை செய்ய விரும்புகிறாயா என்று நான் உன்னிடம் கேட்டிருக்கிறேன்; உன் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது; வசுலா, நீ தயங்கும்போது அது எனக்குப் பிடித்திருக்கிறது; தீர்மானிப்பதற்கு முன் சிந்திக்கும்படி நீ கற்றுக்கொள்ளத் தொடங்குகிறாய்; நான் உன் போதகர், என் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்; தன் வீண் பெருமையை ஆன்மாக்களுக்கு உணவாக அளிப்பதன் மூலம் ஆன்மாக்களை அழிக்கத் தேடுகிற தீமையை நீ எப்போதும் அறிந்திருக்குமாறு நான் உன்னை வழிநடத்துகிறேன்; தீமை எவ்வளவு வஞ்சகம் உள்ளது என்பதை நீ புரிந்துகொள்ளும்படி நான் உனக்குக் கற்பிக்கிறேன்; இதை ஏற்றுக்கொள்ள நான் உனக்கு கற்பிப்பேன்; தாழ்ச்சியோடு இருக்கவும், உனக்கு நீயே நேர்மையாய் இருக்கவும், எனக்கு பிரமாணிக்கமாய் இருக்கவும் நான் உனக்குக் கற்பிப்பேன்; தாழ்ச்சியால் நான் உன்னை உண்பிப்பேன்; மற்றவர்களை விட நான் உனக்கு அதிகமான சலுகை காட்டவில்லை என்பதை நான் உனக்கு நினைவுபடுத்துகிறேன்; உன் ஆத்துமம் சுத்திகரிக்கப்படவும், வளர்ச்சி அடையவும் நான் வழிகாட்டுகிறேன்; என் மற்ற குழந்தைகளை விட உன்னை அதிகமாக நான் நேசிப்பதால் இந்தத் தனிப்பட்ட வரத்தை உனக்குத் தந்தேன் என்று ஒரு கணம் கூட நினைக்காதே; உன்னையும் அவசர தேவையில் உள்ளவர்களையும் போஷிக்கும்படியாகவே இந்த வரத்தை நான் உனக்குத் தந்தேன்; நானே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, தன் மந்தையை விழிப்போடு பாதுகாக்கிற நல்ல ஆயன்; என்னிடம் திரும்பி வரும் வழியை உனக்குக் காண்பிக்க நான் வருகிறேன்; உன் மீது ஒளிவீசவும், உனக்கு நம்பிக்கை தரவும் நான் வருகிறேன்; வசுலா, நீ பிறப்பதற்கு முன்பே நான் உன்னை மதிப்பிட்டு விட்டேன் என்பது உண்மை; என் செய்தியை மனுக்குலம் முழுவதற்கும் வெளிப்படுத்தும் என் பணிப்பெண்ணாக உன்னை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன்; முன்பே என் மணவாளியாக இருக்கும்படி உன்னிடம் நான் கேட்டதால் நீ தயங்குகிறாயா? ஆம், ஆண்டவரே, நீ ஏற்கனவே இதை ஏற்றுக்கொண்டது நினைவிருக்கிறதா? எனக்குத் தெரியும், இயேசுவே, ஆனாலும் மீண்டும் இதை யோசிக்கும் போது என்னால் முடியவில்லை. நான் இதை விரும்பவில்லை என்பதாலல்ல, மாறாக, உம் மணவாளியாக இருக்க நான் தகுதியற்றவள். இதன் மதிப்பை உணராமல் எப்படிச் சர்வசாதாரணமாக இதை நான் ஏற்றுக்கொண்டிருக்க முடியும்! வசுலா, எனக்கு நீ தகுதியுள்ளவளாக இருக்க உனக்குக் கற்றுத் தர என்னால் முடியும்; நான் தகுதியுள்ளவள் என்றே வைத்துக்கொண்டாலும் அது போதாது. ஏன்? ஏனெனில் இது வெறுமனே, தகுதியுள்ளவளாக இருப்பதல்ல, அதைவிட மேலானது. எனக்குத் தெரியும், தகுதியுள்ளவளாக இருப்பது போதாது, ஆனாலும் தகுதியும் பரிசுத்தமும் உள்ளவளாக இருக்க நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ அதை உழைத்து சம்பாதித்துக்கொள்ள வேண்டும்; வா, நான் உனக்கு உதவுவேன்; நீ என் மணவாளியாக, செம்மைப்படுத்தப்பட வேண்டிய மணவாளியாக நீ இருக்கப்போகிறாய்; நான் உன்னை நேசிப்பதால் நீ இருக்கிறபடியே உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்; ஆனாலும் நீ எப்படி இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேனோ, அப்படி நான் உன்னை உருவாக்க நீ என்னை அனுமதிக்க வேண்டும்; நீ வளரும்படி நான் உன்னை போஷிப்பேன்; ஏராளமான தகவலைத் தந்து தீமை எப்படி வேலை செய்கிறது என்று நான் உனக்கு வெளிப்படுத்தி இருக்கிறேன்; அவற்றைக் கவனமுடன் வாசித்து நீ எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்; உன்னை பலவீனமானவளாக, கண்ணிகளுக்குள் விழக்கூடியவளாக நான் காணும் ஒவ்வொரு தடவையும் உன்னைக் காப்பாற்ற நான் துரிதமாய் வருகிறேன்; என் வழிகாட்டுதலை தவத்தின் சிகிச்சை என்று எடுத்துக்கொள்ளாதே; நீ விழுந்து விடாதபடி நான் உன்னை வழிநடத்துகிறேன்; நான் உன்னை இழக்க விரும்பவில்லை; உன் ஜெபங்களில் என்னை மன்றாடு; அதிகமாக ஜெபி; ஜனவரி 24, 1987 வசுலா, வசுலா, சிறியவளே, என் பரிசுத்த இருயத்தின் நேசமே, அஞ்சாதே; நான் உன்னை நேசிக்கிறேன்; மகளே, நீயாகவே என்னை நேசிக்க உன்னால் முடிந்ததா? இல்லை, இயேசுவே. நான் உன்னை அணுகி வந்து உன்னை ஒளிர்வித்ததால், நீ என்னை நேசிக்கக் கற்றுக்கொண்டாய்; உன்னை விழித்தெழச் செய்ததன் மூலம் நான் உன்னை மனம் மாற்றினேன்; வசுலா, நான் ஏன் உன்னை நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? இல்லை, இயேசுவே, எனக்கு தெரியாது; அப்படியானால் நான் அதை உனக்குச் சொல்கிறேன்; நீ ஆதரவற்றவளாகவும், பரிதாபத்துக்குரியவளாகவும், குற்றம் உள்ளவளாகவும் இருப்பதால் நான் உன்னை நேசிக்கிறேன்; குழந்தைகள் என் பலவீனமாக இருக்கிறார்கள்; தங்களை உருவாக்க அவர்கள் என்னை அனுமதிப்பதால் நான் அவர்களை நேசிக்கிறேன்; வசுலா, வந்து என் பரிசுத்த இருதயத்தில் குடியிரு; அங்கே அதன் உள்ளாழங்களில் நீ சமாதானத்தைக் கண்டடைவாய்; உங்கள் எல்லோர் பேரிலும் எனக்குள்ள நேசப்பற்றுதலை நீ அங்கே உணர்வாய்; நான் அவர்கள் பேரில் கொண்டுள்ள நேசத்தைப் பற்றி அவர்களிடம் சொல்ல உன்னால் இயலும்; இதோ! கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், நீ எனக்கு அதிகம் அதிகம் நெருக்கமாய் வருகிறாய்! ஜனவரி 30, 1987 சமாதானம் உன்னோடு இருப்பதாக; நீ பலவீனமாக உணரும் ஒவ்வொரு முறையும், என்னிடம் வா; நான் உனக்குப் பலம் தருவேன்; வசுலா, நான் ஏன் உன்னைத் தேர்ந்து கொண்டேன் என்பதை நீ அறிவாயா? இல்லை, எனக்குத் தெரியாது, இயேசுவே, அப்படியானால் நான் அதை உனக்குச் சொல்கிறேன்; நீ ஆதரவற்றவளாகவும், அந்நாள் வரை நான் அறிந்த எந்த மனிதனையும் விட அதிக பரிதாபத்துக்குரியவளாகவும் இருந்ததால்தான் நான் உன்னைத் தேர்ந்து கொண்டேன்; பரிதாப நிலை என்னை ஈர்க்கிறது; ஏனெனில் என்னால் உன்னைத் தேற்ற முடியும்; நீ ஆதரவற்றவளாகவும், குறைவுள்ளவளாகவும், எந்த மொழியிலும் புலமை பெற முடியாதவளாகவும் இருக்கிறாய்; ஆண்டவரே, நான் அவ்வளவு மோசமானவள் என்றால், இந்த வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ள நீர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்? நான் உனக்கு முன்னமே சொல்லவில்லையா? குழந்தைகள் என் பலவீனமாக இருக்கிறார்கள், ஏனெனில் தங்களை உருவாக்க அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள்; தானாகவே வளர முடியாத ஒரு பலவீனமுள்ள மலரும் வனாந்தரத்தின் மத்தியில் நான் கண்டெடுத்து, என் பேரின்பங்களின் தோட்டத்தில் நட்டு வைத்து என் ஒளியின் கீழ் வளர அனுமதித்த மலருமாகிய உன் வழியாக என் நேசத்தை வெளிப்படுத்தவே நான் உன்னைத் தேர்ந்து கொண்டிருக்கிறேன்; உன்னிடம் நான் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; என்னை நேசித்து, எனக்குப் பிரமாணிக்கமாய் இரு; நான் உன்னிடமிருந்து பிரமாணிக்கத்தை விரும்புகிறேன்; உன் இருதயத்தில் நீ கொண்டுள்ள நேசத்தின் ஒவ்வொரு துளியும் என் இருதயத்தை நிரப்ப வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் நேசத்திற்காகத் தாகமாய் இருக்கிறேன்; ஏனெனில் நான் நேசத்தின் எஜமானராக இருக்கிறேன்; ஆகவே நான் உன்னிடம் கேட்பதெல்லாம் என்னை நேசிக்கும்படியாக மட்டுமே; நீ யாரையாவது நேசிக்கும் போது, உன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவரோடு இருக்க வேண்டும் என்று ஏங்குகிறாய் அல்லவா? ஆம், அது உண்மைதான். ஆகவே உன்னை முழுவதுமாக எனக்குக் கொடுப்பதை விட அதிக இயல்பானது என்ன இருக்கிறது? வா, என்னிடம் வா. நானே உன் தந்தையாக இருக்கிறேன்; குறிப்பு: இசை ஒன்பதாம் அதிகாரம் ஐந்தாவது வசனம். நான் இன்றி நீ ஆதரவற்றவளாகவும், தனியாக விடப்படும் போது பரிதாபத்திற்கு உரியவளாகவும், தனிமையில் பலவீனமாகவும் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்; உன் வழியாக என் செய்தியை நான் வழங்கும்படி உன்னை உருவாக்க என்னை அனுமதி; ஓ, மகளே, நீ எவ்வளவு அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.. எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்குத் தெரியும். வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்.; சந்தேகம் கொள்ளாதே; உன் கேள்விக்கு நான் பதில் அளிப்பேன்; தேர்ந்தெடுத்ததலின் மூலம் என் மணவாளிகளாக இருப்பவர்களை நான் தேர்ந்து கொள்வது மட்டுமல்ல, என்னை அறியாதவர்களிடமும் நான் வந்து அவர்களைத் தேர்ந்து கொள்கிறேன்; நான் வந்து ஒவ்வொரு கதவையும் தட்டுகிறேன்; தட்டிவிட்டு என் குரலோசை கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்; வசுலா, ஒவ்வொரு ஆன்மாவும் என்னை ஏற்றுக்கொள்ளவும், என்னை வரவேற்கவும் வேண்டும் என்று நான் ஏங்குகிறேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நீர் எப்போதுமே மகிழ்ச்சியை உணரும்படி செய்கிற துறவற ஆன்மாக்களின் மத்தியில் இருப்பதையே தேர்ந்து கொள்கிறீர் என்று நான் நினைத்தேன்; வசுலா, நான் என் மற்ற பிள்ளைகளை நேசிக்கிற அளவுக்குத்தான் என் துறவற ஆன்மாக்களையும், என் குருக்களையும், கன்னியர்களையும், நேசிக்கிறேன்; என்னைத் துன்புறுத்துவோரையும், பாவிகளையும், அனைவரையும் நான் நேசிக்கிறேன்; வசுலா, ஒவ்வொருவரும் யாராக இருக்கிறார்கள், தங்கள் வாழ்நாளில் அவர்கள் எவ்வளவு அதிகமான அறிவை சம்பாதித்திருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமலே நான் அவர்களை நெருங்கி வருகிறேன்; என் வல்லமையைக் கொண்டு மரித்தோரை உயிர்ப்பிக்க என்னால் முடியும்; இம்முறையில் என்னை சந்திப்பதற்கு நான் என் பலத்தை உனக்குத் தந்து கொண்டிருக்கிறேன்; ஏனெனில் நான் ஆண்டவராக இருக்கிறேன்; நீ எவ்வளவு சிறியவளாக இருக்கிறாயோ, அவ்வளவுக்கு என்னால் எளிதாக கையாளப்படக்கூடியவளாக இருக்கிறாய்; நான் என்னிலேயே நிறைவுள்ளவராக இருக்கிறேன் என்பதை நீ நன்றாக அறிவாய்; உன் குறைவுள்ள தன்மை என் நிறைவுள்ள தன்மையை மகிமைப்படுத்தும்; உன் பரிதாப நிலை என் பார்வையில் ஒரு பொருட்டே இல்லை; என் கரங்கள் உன்னை உருவாக்க உன்னை என்னிடம் விட்டுவிடு; அதிகாரம் உள்ள ஒருவர் எனக்கு அவசியமில்லை; ஏனெனில் என் அதிகாரம் தன்னிறைவுள்ளதாய் இருக்கிறது; என் இரக்கத்தைக் காண்பித்தபடி, சமாதானம் மற்றும் நேசத்திற்கான என் வேண்டுகோள் மனுக்குலம் முழுவதற்கும் உன் வழியாக வரும்; உன் வழியாக நான் என்னை வெளிப்படுத்துவேன்; என் குழந்தைகளிடம் ஏற்கனவே இராத எதையும் நான் கேட்கவில்லை; அவர்களிடம் குறைபாடுகளையும், பாவங்களையும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றால், அவர்கள் அவற்றை என்னிடம் தரட்டும்; நான் அவர்களைச் சுத்திகரிப்பேன்; நான் அவர்களுடைய சுமைகளை இறக்கி வைப்பேன்; அவர்களை மன்னிப்பேன்; அவர்களைக் குற்றஞ்சாட்ட மாட்டேன்; நான் அவர்களை நேசிக்க மட்டுமே செய்வேன்; தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பை மன்றாடியபடி என்னிடம் வருகிற எல்லோரையும் நான் நேசிக்கிறேன்; நான் இன்னும் அதிகமாக அவர்களை நேசிக்கிறேன்; கோடிக்கணக்கான தடவைகள் அவர்கள் விழுந்தாலும், நான் அவர்களை புறக்கணித்துத் தள்ள மாட்டேன்; அவர்களை மன்னித்து என் இரத்தத்தால் அவர்களுடைய அக்கிரமங்களை கழுவும்படி நான் அங்கே இருப்பேன்; அவர்களை மன்னிப்பதில் நான் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன்; ஏனெனில் நான் நேசத்தினுடையவும், இரக்கத்தினுடையவும் இறைவனாக இருக்கிறேன்; பலவீனர்கள் பேரில் நான் தயவிரக்கத்தால் நிறைந்திருக்கிறேன்; என் இருதயம் பரிசுத்தமுள்ளது; அது மன்னிப்பின் உறைவிடமாக இருக்கிறது, மகளே, இப்போதைக்கு இது போதும்; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நம்பு; வசுலா, நான் சொல்ல வேண்டி இருக்கிற எல்லாமும் எழுதப்படும்: பிற்பாடு: உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் நான் மகிழ்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? இயேசுவாகிய நான் என் இருதயத்தின் உள் ஆழங்களில் இருந்து உன்னை நேசிக்கிறேன்; நான் உன் பேரில் கொண்டுள்ள இந்த நேசத்தின் காரணமாக தீமை உனக்கு கண்ணிகள் இட்டு வைக்கிறது; உன்னை எச்சரிப்பதற்காக நான் உன் அருகில் இருப்பேன்; நான் விழ விரும்பவில்லை! நீ விழுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; நீ விழாதபடி உன்னைத் தாங்கிக்கொள்ள நான் உன் அருகில் இருப்பேன்; என் "உருவாக்கத்திற்கு" முன்பாக இந்தச் செய்திகள் ஏன் தரப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை; வசுலா, கடவுளாகிய நான் என் செய்திகளால் அநேகர் ஆதாயம் பெறும்படியாக அவற்றை உனக்குத் தந்தேன்; ஆன்மாக்கள் எனக்கு எவ்வளவு விலையேறப் பெற்றவர்கள் என்பதை மட்டும் நீ அறிவாயானால்! குறிப்பு: இறைவன் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை என்று தோன்றியது; உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன், உன் கேள்விக்கு நான் பதிலளிப்பேன்; நான் சொல்வதைக் கேள்; என் சமாதானம் மற்றும் நேசத்தின் செய்தியைத் தருவதற்காக உன்னிடம் நான் வந்திருக்கிறேன்; உன் வழியாக என் நேசப்பற்றுதலை வெளிப்படுத்தும்படியாகவும், என் திரு இருதயத்தின் செல்வ வளங்களை இன்னும் புரிந்து கொள்ளாதவர்களுக்குக் கற்பிக்கும்படியாகவும், என் அலுவலுக்குப் பொருத்தமற்ற, ஆதரவற்ற, கர்வமில்லாமல் சிறியவளாய் இருக்கிற ஒரு சாதாரண குழந்தையை, ஒரு ஒன்றுமில்லாமையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் போதகர்கள் பரலோகக் காரியத்தினின்று விலகி இருப்பதையும், என் ஆசீர்வாதங்களுக்கு அவர்கள் காட்டும் அசட்டைத்தனத்தையும் கண்டு நான் துன்பப்படுகிறேன்; ஏனெனில் தேவ வரம் என்பது ஓர் ஆசீர்வாதமாய் இருக்கிறது; அவர்களுடைய இதயங்கள் இப்படி முரடானவையாகவும், ஞான செவிட்டுத் தனத்திற்கும், ஞான வறட்சிக்கும் இட்டு செல்பவையாகவும் ஆகியுள்ளன; மீண்டும் ஒருமுறை சமாதானம் மற்றும் நேசத்திற்காக விண்ணப்பித்தபடி நான் வருகிறேன்; ஆனால் இன்னும் எத்தனை அதிகமான பேர் என்னை புறக்கணிப்பார்கள்? உங்களில் எத்தனை அதிகம் பேர் எனக்கு பதிலளிக்காமல் இருப்பார்கள்? உங்களில் எத்தனை பேர், குறிப்பாக என் போதகர்கள், என்னைத் தேடி வேறு திசையில் தங்கள் கண்களை திருப்பிக் கொள்வார்கள்? ஓ, அற்ப விசுவாசமுள்ள மனிதர்களே, நீங்கள் எவ்வளவு குறைவாக என்னை அறிந்திருக்கிறீர்கள்! நானே அளவற்ற செல்வந்தராய் இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? நான் பயன்படுத்துகிற கருவிகளின் வகைகளைக் கண்டு ஏன் வியப்படைகிறீர்கள்? என் வல்லமை மேலானதாகவும், வரம்புக்கு உட்படாததாகவும் இருக்கிறது; பரிதாபமான ஆன்மாக்களின் வழியாக என் வார்த்தைகளை அறியப்படும்படி நான் செய்வேன்... வசுலா, இந்த வழிநடத்துதல் என்னிடமிருந்து தான் வருகிறது என்பதற்கு சாட்சியாக அநேகர் என்னிடம் ஓர் அடையாளம் கேட்பார்கள்; ஆனால் நான் அவர்களுக்கு தரும் அடையாளம் நீதான்; நான் உன்னை விழித்தெழச் செய்து, தீமையிலிருந்து உன்னை விடுவித்திருக்கிறேன்; நானே உன்னை வளர்த்து, என் இருதயத்திற்கு உன்னை உயர்த்தி, என் அநேக செயல்களை உன்மீது பொழிந்திருக்கிறேன்; நான் உனக்குத் தருவதை ஏற்றுக்கொள்; ஏனெனில் ஞானமே உன்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது; வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; சிறியவளே, நீ என்னுடையவள்; மகளே, அன்பை எனக்குக் கொடு; எனக்கு இளைப்பாற்றிக் கொடு; உன் இதயத்தில் என்னை இளைப்பாற விடு; என்னை ஏற்றுக்கொள்; வசுலா, என்னை மறுதலித்து விடாதே; வசுலா, நீ என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எத்தனை வருட காலமாக உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன் என்பது உனக்குத் தெரியுமா? நீ என் இருதயத்திடமிருந்து எவ்வளவு அந்நியமாகிப் போயிருந்தாய்; நான் அப்போது எப்படி உணர்ந்தேன் என்று எப்போதாவது உனக்குச் சொல்லியிருக்கிறேனா? எனக்கு உண்மையாகவே நினைவில்லை, இயேசுவே; நான் உனக்குச் சொல்கிறேன், நான் உன்னைப் பற்றி பயந்து கொண்டிருந்திருக்கிறேன்; நீ என்னை விட்டு அகன்று சென்றிருந்தாய். என் இருதயம் துக்கத்தால் மிகவும் நொந்து போயிருந்தது; வசுலா, என் நேசமே, என் வேண்டுகோளை எதிர்த்து நிற்க உன்னால் எப்படி முடிந்தது? உனக்காக பல ஆண்டுகள் நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்; வசுலா, என் அன்பை ஏற்றுக்கொள்; என் அன்பு உன்னைக் குணப்படுத்துகிறது; இயேசுவே, அது நான் உம்மை எதிர்ப்பது என்பதல்ல; பெறுவதை விட கொடுப்பதிலும், நேசிப்பதிலும் நான் அதிக வசதியாக உணர்ந்தேன்; நீர் என்னை அறிவீர் என்று நான் நினைக்கிறேன்; நான் துயரமாக உணர்ந்தேன்; ஏனெனில் நான் விரும்பாமலே இயேசுவை நான் காயப்படுத்திவிட்டேன்; இயேசு உடனடியாக இதை உணர்ந்தார்; என்னோடு வா; உனக்கு நான் சொல்ல விரும்புகிற ஒரு இரகசியம் இருக்கிறது; வசுலா, நான் ஏன் உன்னை நேசிக்கிறேன் என்பது உனக்கு தெரியுமா? ஆம், நீர் ஏற்கனவே எனக்குச் சொன்னீர். இன்னும் ஒரு காரணம் இருக்கிறது; நீ என் குழந்தைகளை நேசிக்கிறாய் என்பதால் நான் உன்னை நேசிக்கிறேன்; இப்போது எனக்கு இன்னும் அருகில் வா; உன் இதயத்தில் நுழைய என்னை அனுமதிப்பாயா? ஆம், அனுமதிப்பேன் இயேசுவே. என்னை நீ எவ்வளவு மகிழ்ச்சி அடையச் செய்தாய்; ஏனெனில் உன்னில் என்னால் இளைப்பாற முடியும் என்று நான் அறிந்திருக்கிறேன்; மறுபடியும் என்னை மறுதலிக்காதே; இருதயங்களில் நுழைவதற்காக மட்டுமே நான் ஏங்குகிறேன்; நீர் ஒருவேளை அங்கே கறைகளைக் காணலாம்... நான் காணுகிற எல்லா அசுத்தங்களையும் நானே கழுவி சுத்திகரிப்பேன், நேசத்துக்குரியவளே, என் இரத்தம் உன்னைச் சுத்திகரிக்கும்;