இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 53. நவம்பர் 14, 1987 இயேசுவே, நீர் எனக்குத் தந்துள்ள இந்த வழியில் நான் உம்மிடம் வரும்போதும் நீர் மகிழ்ச்சியாய் இருக்கிறீரா? இருக்கிறேன், எப்படி மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பேன்? என் வசுலா, நீ என்னிடம் வா, உன் இதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ என்னிடம் சொல்லாமல் இருக்கிறாய்; வசுலா, நான் உன் இதயத்தை உணர்கிறேன், அது துயரத்தாலும் வேதனையாலும் நிரம்பியுள்ளது; ஏன் என்று அறிய விரும்புகிறாயா? நேசம் துன்புறுவதால் நீ துன்புறுகிறாய்; நான் துன்புறும்போது, நீயும் துன்புறுகிறாய்; எல்லாச் சமயங்களிலும் என்னில் ஒரு பாகமாக இருக்கும் வரப்பிரசாதத்தை நான் உனக்குத் தந்திருக்கிறேன்; நீ என் பிரதிபலிப்பாக இருக்கிறாய், நான் உணர்வதையே நீயும் உணர்கிறாய்; நான் என்னை உணர உன்னை அனுமதிக்கிறேன், ஆத்துமங்கள் என்னை புதிதாகக் குத்தித் துளைத்துக் கொண்டிருக்கின்றன; என் கொடிய வேதனை தன் உச்சத்தை எட்டியிருந்தது. நான் என் கண்ணீர்த் துளிகளைச் சேமித்து வைக்க வேண்டியிருக்கிறது, ஆனாலும் என்னால் முடியவில்லை. மகளே, என் கண்கள் வறண்டு விட்டன என்று நினைக்கிறாயா? குறிப்பு: நான் நிமிர்ந்து பார்த்தேன், ஏனெனில் இயேசுவின் குரல் கடும் அவஸ்தையால் நடுங்கியது. அவருடைய கண்கள் நிரம்பி இருந்தன. அவருடைய கண்களைச் சுற்றி கண்ணீர் துளிகளின் ஈரம் இருந்தது. அவை உன் கண்களைப் போலவே நிரம்புகின்றன, நான் துன்புறுகிறேன்.... என் கண்களும் ஈரமாய் இருக்கின்றன; ஓ, வசுலா! என் மலரே, மகளே, இப்போது நீ எவ்வளவு நன்றாக என்னைப் புரிந்துகொள்கிறாய்; நாம் சேர்ந்து கண்ணீர் சிந்துகிறோம், சேர்ந்து துன்புறுகிறோம், சேர்ந்து என் சிலுவையை சுமக்கிறோம், குறிப்பு: இயேசு இதை மிக வேகமாக சொல்லி நான் எழுதச் செய்தார். என் இருதயம் மிக அநேக ஆத்துமங்களால் காயப்படுத்தப்படுகிறது. அவர்கள் என்னை கசந்து போகச் செய்கிறார்கள். ஓ, வசுலா, உன் கண்ணீர்த் துளிகள் என் கண்ணீர்த் துளிகளாக இருக்கின்றன; இதோ, என் சிலுவையைச் சுமந்துகொள், என் ஆணிகளையும் எடுத்துக்கொள்; என்னை ஓய்வெடுக்க அனுமதிப்பாயா? ஆம், இயேசுவே. என் ஆத்துமம் இந்த அளவு துயரத்தையும் பெரும் வேதனையையும் ஒருபோதும் எட்டியதில்லை. வசுலா, ஓ வசுலா, இதை உனக்குச் சொல்வதில் நான் எவ்வளவு அச்சப்படுகிறேன், இருந்தாலும், நான் உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கிறது; என் முள்முடியை அணிந்துகொள், அப்போது நீ என்னை புரிந்துகொள்வாய்; ஆண்டவரே, எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். நான் ஏளனம் செய்யப்படுவேனா? மறுதலிக்கப்படுவேனா? ஆன்மாக்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள், என் இரக்கமுள்ள செய்தியை விசுவசிக்க மறுப்பதன் மூலம் வற்புறுத்தப்பட்டு, தங்கள் எதிர்ப்புணர்வு மற்றும் குற்றத்தை ஒப்புக்கொள்ள, தங்களுக்குள்ள பயத்தால் தூண்டப்பட்டு, அவர்கள் பாவம் செய்வார்கள்; குறிப்பு: இந்தப் பகுதியை நான் புரிந்துகொள்ளும்படி இயேசு என்னை ஒளிர்வித்தார். இது யாரைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியும். இது திருச்சபைக்குள் வெகு ஆழமாகச் செல்கிறது. இதோ, என் மகுடத்தை அணிந்துகொள்; அவர் அதை என் தலைமீது வைத்தார். நீ என்னை மகிமைப்படுத்துவாய்; கவனி, காலம் வரும், உண்மையில், காலம் வந்துவிட்டது, அப்போது என் தானியங்களை வெகு அபரிதமாக தூவும்படி நான் உனக்கு உத்தரவுகள் தருவேன்; அன்பு தன் எண்ணங்களை நிறைவேற்ற உனக்குக் கற்பிக்கும்; வசுலா, வெற்றி பெறுவதை உறுதிப்படுத்து; மகளே, என்னை மகிழ்வி, இப்போது போல எனக்கு எதிரே இரு; நான் இரத்தம் வடிக்கும் என் இருதயத்தை நீ உணர அனுமதித்திருக்கிறேன், என் இரத்தம் உன் இதயத்தின் மீது சொட்டச் செய்திருக்கிறேன்; என் கிண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள நான் உன்னை அனுமதிக்கிறேன்; உன் தலையைச் சுற்றி நான் என் மகுடத்தால் அலங்கரித்திருக்கிறேன், என் சிலுவையை உன்மீது வைத்திருக்கிறேன், என் ஆணிகளை நான் உனக்குத் தருகிறேன்; ஒரு மணவாளர் இதற்கு மேல் என்ன தர முடியும்? நான் உனக்குத் தந்துள்ள எல்லாமும் என் மிக விலையேறப்பெற்ற ஆபரணங்களாக இருக்கின்றன; என் நேசமே, இப்போது நீ என்னைப் புரிந்துகொண்டிருப்பதால், இரத்தம் சிந்துகிற என் சரீரத்தின் உள் ஆழங்களுக்குள் செல்ல நீ சித்தமாய் இருக்கிறாயா? ஆம், ஆண்டவரே, என்னை அங்கே கூட்டிச் செல்லும். மகளே, அப்படியானால் நாம் புறப்படுவோம், என்னைப் பிடித்துக்கொள். என்னை வாழ்த்து; நான் ஆண்டவரை வாழ்த்தினேன். வா, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; உன் கண்களைத் தாழ்த்து; இயேசு என்னை ஆசீர்வதித்தார். என்னை அப்பா என்று கூப்பிடு, இப்போது அதன் அர்த்தம் என்னவென்று உனக்குத் தெரியும்; குறிப்பு: புனித சின்னப்பர் எழுதுகிறார், ரோமியர் எட்டாம் அதிகாரம் 14 மற்றும் 15 ஆம் வசனம். "கடவுளின் ஆவியானவரால் இயக்கப்படுகிறவர்களே, கடவுளின் மக்கள், மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாக, கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள்." அதனால் நாம் "அப்பா, தந்தையை" என்று அழைக்கிறோம். "அப்பா" என்பது அரைமொழி வார்த்தை. "தந்தை" என்பது அதன் அர்த்தம். இயேசு மார்க் 14 ஆம் அதிகாரத்தில் 36 ஆம் வசனத்தில் இதே விதமாக பிதாவைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஆம், நான் எவ்வளவாக உன்னை நேசிக்கிறேன்! என் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருத்தியை நான் கொண்டிருக்கும்படியாகவும் நான் உன்னை படைத்தேன். வசுலா, நீ என்னை அறிந்துகொள்வாய்; உன் தந்தை யார் என்பதை நீ அறிந்துகொள்வாய்; மலரே, மிகப் பிரியமான மகளே, நான் என் படைப்பை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது அறியப்பட்டிருப்பதாக; குறிப்பு: இங்கே கடவுள் தம் மற்ற படைப்புகளை விட அதிகமாக என்னை நேசிக்கவில்லை. மாறாக, ஓர் உதாரணமாக மட்டும், அவர் என் மீது எவ்வளவு அதிக அன்பு வைத்திருக்கிறார் என்று நான் அறிந்துகொள்ளச் செய்தார். வசுலா, நீ விரும்பும் போதெல்லாம் என்னை அழைக்கும் இந்த வல்லமையுள்ள வரப்பிரசாதத்தை நான் உனக்குத் தந்தது ஏன் என்று உனக்குத் தெரியுமா? ஆண்டவரே, நீர் ஏற்கனவே எனக்குச் சொல்லியிருக்கிற காரணங்களுக்காக. இன்னும் ஒரு காரணம் இருக்கிறது; தயவுசெய்து அதை எழுதாதீர். நீர் சொன்னதை நான் கேட்டுவிட்டேன். ஆம், நான் சொன்னதை நீ கேட்டுவிட்டாய்; ஆனால், ஆண்டவரே, 'இது' உம்மிடமிருந்து வருகிறது, என்னிடமிருந்து அல்ல. மலரே, தேர்ந்துகொள்வதற்கு நான் முழு சுதந்திரத்தை உனக்குத் தந்திருக்கிறேன் என்பதை மறவாதே; ஆம், அன்பிற்குரியவரே, ஆனாலும் புரிந்துகொண்டு, தேர்வு செய்ய எங்களுக்கு உதவுகிற எங்கள் அறிவு என்னும் வரப்பிரசாதத்தையும் நீர் எங்களுக்குத் தந்திருக்கிறீர்; இதை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறீர்; குறிப்பு: இந்த இடத்தில் சற்று அமைதி நிலவியது. ஆம், நான் உன்னை நேசிக்கிறேன்; வா, நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. ஆம், ஆண்டவரே. நான் திடீரென ஆண்டவர், புனித மாமரி, மற்றும் எல்லாப் புனிதர்களின் தேவையை உணர்ந்தேன். அதன்பின், பெரும் வல்லமையோடு புனித மாமரி தோன்றினார்கள். காலம் பறந்து கொண்டிருக்கிறது, இயேசு உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்; என் பிரியமுள்ள மகளே, என் சமாதானத்தைக் கொண்டிரு; அஞ்சாதே, இயேசு உன்னோடு இருக்கிறார், இயேசு உன் வழிகாட்டியாக இருக்கிறார்; என் வசுலா, எப்போதும் அவரை நேசி; நீ ஏராளமாகப் பரிகாரம் செய்கிறாய்; இயேசுவின் தைலமாக இரு, அவரை மகிழ்வி; உன் பரிசுத்தத் தாயாராகிய நான் உனக்கு உதவுவேன், அஞ்சாதே, தொடர்ந்து செல்; நீ சரியான பாதையில் இருக்கிறாய்; நான் உன்னை நேசிக்கிறேன்; புனித மாமரியே, நான் உங்களை நேசிக்கிறேன். கடவுள் எனக்காகப் பாதையைத் திறக்காமல் என்னால் விரைந்து செல்ல முடியாது. அதன்பின் நான் அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவரோடு தொடர்ந்து போவேன். நான் அவரை நம்புகிறேன். நான் அவரை சார்ந்திருக்கிறேன். அன்புள்ள தாயாரே, நீங்கள் என் ஆதரவாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி எனக்கு உதவ வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நீ என்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்வாய், நான் உனக்கு உதவுவேன்; உங்களுக்கு நன்றி. நான் உங்களை வாழ்த்துகிறேன். நவம்பர் 16, 1987 நேசமே, இந்நாட்களில் நம்ப கடினமாய் இருக்கிற ஒரு காரியத்தை நான் செய்வேன், நான் செய்யவிருக்கும் காரியம் என் செய்தியை உறுதிப்படுத்தும்; பயப்படாதே; என் கடவுளே, நீர் இவ்வளவு சாதாரணமாக எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னோடு தொடர்பு கொள்கிறீர் என்பதை நம்புவது ஏற்கனவே பலருக்குக் கடினமாக இருக்கிறது. என் புதுமைகளை விசுவசி, என்னை விசுவசி; நவம்பர் 18, 1987 என் கடவுளே, நீர் உன் ரகசிய விருப்பத்தை எனக்கு வெளிப்படுத்திய நாள் முதல், நான் பயப்படுகிறேன், தொடர்ந்து வேலை செய்ய நான் பயப்படுகிறேன். என் முன்னே இருக்கிற பிரச்சனையை நான் உணர்ந்து பயப்படுகிறேன். இது ஜெருசலேமில் நுழையும் முன்பு நீர் இருந்தது போல் இருக்கிறது. என் முன்னே என்ன பிரச்சனை இருக்கிறது என்று உமக்கு தெரியும். என் செய்தி என் வார்த்தையை நிறைவேற்றுகிறது; நீ தொடர்ந்து வேலை செய்ய வேண்டும், நீ மறுதலிக்கப்பட்டாலும், மறுதலிக்கப்படவில்லை என்றாலும், நீ உன் வேலையை நிறைவேற்றுவாய்; நான் உனக்கு முன்பாக இருக்கிறேன்; சிறியவளே, நான் முழுமையாகத் தோன்றும்படி நீ ஒன்றுமில்லாமையாக இரு; நீ எவ்வளவு குறைவாய் இருக்கிறாயோ, அவ்வளவுக்கு நான் அதிகமாக இருக்கிறேன்; என்னை தொடர்ந்து செல்லவிடு, செயல்படுபவரும் பேசுபவருமாக என்னை இருக்கவிடு; ஆம், சிறியவளே, அவர்கள் ஒன்றுபடுவதற்கு வளைய வேண்டும், குறிப்பு: பல்வேறு சபைகள். நான் தாழ்ச்சியோடு வெறுங்காலோடு வருவேன். நான் ஆயுதங்கள் தரித்து வரமாட்டேன்; நான் இராயப்பனிடம் என் ஆடுகளைத் திரும்பக் கொண்டு வருவேன்; நான் அவர்களை ஒன்று கூட்டுவேன், இராயப்பன் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பான்; ஆண்டவராகிய நான் பேசிவிட்டேன், என் அன்பர்களே, என்னை நம்புங்கள்; நான் என் முழு இருதயத்தோடும் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நவம்பர் 21, 1987 வசுலா, சிதறிப்போன என் ஆடுகளை நான் இராயப்பனிடம் கொண்டு வருவேன்; ஆண்டவராகிய நான் உங்கள் எல்லோருக்கும் இதற்கு உத்தரவாதம் தருகிறேன்! திடீரென்று ஆண்டவர் இன்னும் பிரிந்திருக்கிற ஆடுகளின் காட்சியை மற்றொரு மந்தையை எனக்குக் காட்டினார். அதன்பின் எல்லாம் இணைக்கப்பட்டன. மலரே, என் மாபெரும் அடையாளத்திற்கு பிறகு இது வரும்! தந்தாய், என் பொறுமையின்மையை மன்னியும். நான் உம்மை போல பொறுமையாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது! என் கரத்தால் உயர்த்தப்பட்டவளாகிய சிறியவளே, என் வரப்பிரசாத நீர் நிலைகளில் இருந்து முகந்து உன் இதயத்தை நிரப்பு; மற்ற இதயங்களையும் நிரப்ப உன்னால் இயலுமாறு, உன் இதயத்தை அதில் ஊறப்போடு; ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நான் உனக்குக் காட்சிகளைத் தருவேன், மனிதருடைய இதயங்களைப் பகுத்துணரும்படியும், அவற்றை வாசிக்கும்படியும், உன் பார்வையை நான் வளப்படுத்துகிறேன்; என் முழு அன்புக்குரியவளே, நான் இந்த வரப்பிரசாதத்தை உனக்குத் தருகிறேன், ஆனால் உனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் என் விருப்பங்கள் நிறைவேறவும், என் மகிமைக்காகவும் மட்டுமே நீ அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்; இயேசுவே, முழு அன்புக்குரியவரே, என் தேவனே, உம் அருகில் நான் இருக்கும்படி உம் கொடைகளைப் பொழிவதை ஒருபோதும் நிறுத்திக் கொள்ளாதவரே, நான் பூஜ்ஜியமாக இருக்கிறேன். இருந்தாலும், நீர் மிக அநேக கொடைகளை என் மீது பொழிகிறீர். அப்படி இருக்க, உம்மை ஆராதித்து வணங்கி, உம் கண்களில் உண்மையாகவே பிரியமுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு நீர் என்னதான் செய்ய மாட்டீர்? என்னதான் அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பீர்? ஆம், பார் வசுலா, இப்போது நீ என்னை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்வதாகத் தோன்றுகிறாய்; என் படைப்புகளில் எல்லாம் மிக இழிந்தவளாகிய உனக்கே நான் தருகிறேன் என்றால், உண்மையாகவே என் வரப்பிரசாதங்களுக்குத் தகுதி உள்ளவர்களாக இருப்பவர்களுக்கும், என்னை ஆராதித்து வணங்குபவர்களுக்கும், எனக்காகப் பலியாகிறவர்களுக்கும் நான் என்னதான் தரமாட்டேன்! அன்புக்குரியவர்களே, கேளுங்கள், நான் தருவேன், நீங்கள் கேட்பதை விசுவாசத்தோடு கேளுங்கள், தண்ணீரின் மீது நடந்தபோது, தன் விசுவாசத்தை இழந்து போன இராயப்பனைப் போல் இருக்காதீர்கள்; என்னில் விசுவாசம் கொண்டிருங்கள்! விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள், விசுவாசியுங்கள்! நவம்பர் 22, 1987 வசுலா, காற்று வீசுகிறது, அது நாளுக்கு நாள் அதிக பலம் அடைகிறது; வனாந்தரமாகிவிட்ட என் படைப்பின் மீது அது வீசி, பாலைவன மணலை, எஞ்சி இருக்கிற சிறிய, வளமான நிலத்திற்குக் கொண்டு வருகிறது; அந்தப் பாலைவன மணல் ஏற்கனவே வளமான நிலத்தின் ஒரு பகுதியை மூடிவிட்டது, அதற்கு மேலாக ஒரு மூடுதிரையைப் போல் பரவியுள்ளது, சிறியவளே, நாம் அவசரப்படவில்லை என்றால், விரைவில் வனாந்தரத்தைத் தவிர வேறு எதுவும் எஞ்சி இருக்காது; ஆண்டவரே, தயவுசெய்து பொறுமையாயிரும், ஏனெனில் நான் மெதுவாகவே கற்றுக் கொள்கிறேன். மலரே, நான் எவ்வளவு அதிக காலம் உன் கதவுக்கு வெளியே இருந்தேன் என்பதை நினைவு கூர்கிறாயா? இந்த எல்லா வருடங்களும் நான் பொறுமையாக இருக்கவில்லையா? இயேசுவே, எல்லா வருடங்களிலும் நான் ஏன் நீர் சொல்வதை கேட்காமல் இருந்தேன்? ஏனெனில் நீ உலகத்தால் ஏமாற்றப்பட்டாய், தொடக்கத்திலிருந்தே நீ எனக்குச் சொந்தமாய் இருந்தாய், ஆனாலும், உலகம் உன்னை ஏமாற்றியது, நீ அவர்களுக்குச் சொந்தமானவள் என்று நம்பும்படி அது உன்னை சம்மதிக்கச் செய்தது, நம்பிக்கை துரோகியும், வஞ்சகனுமாகிய சாத்தான் இப்படித்தான் இருக்கிறான்; இன்று சாத்தான் என்ற ஒருவன் இல்லை என்று என் படைப்பை நம்ப செய்வது அவனுடைய வேலையாக இருக்கிறது; இந்த முறையில் மனிதர்கள் அவனுக்கு பயப்படாத வகையில், ஆட்டுக்குட்டிகளைப் போல வேடமிட்டு அவன் வேலை செய்கிறான்; என் படைப்பு வலையிடப்பட்டு ஓநாயால் விழுங்கப்படுகிறது; இதுதான் இன்றைய அவனது திட்டமாக இருக்கிறது; நவம்பர் 23, 1987 லயோனில் இருந்தபோது, நான் ஒரு கத்தோலிக்க மறைவல்லுநரிடம் பேசியிருக்கிறேன். அவரும் அவர் மனைவியும் நான் இந்த உலகப் பற்று இல்லாதிருப்பதைக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எனக்கு பொறுப்புகள் இருக்கின்றன என்று அவர் கூறினார். நான் ஆம் என்றேன். ஆனாலும், நான் கடவுளை முதலில் வைக்கிறேன். அதன்பின் கடவுளே என் ஆத்துமத்தை உலகத்திலிருந்து பிரித்தெடுத்தார் என்பதையும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆபிரகாம் தன் சொந்த மகனை பலியிட தயாராக இருக்கவில்லையா? சிறியவளே, நான் பைத்தியமாகும் அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்; அன்புக்கு வரம்புகள் இல்லை, நீயும் பைத்தியமாகும் அளவுக்கு என்னை நேசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; உன் நேசத்தை அதிகரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; எந்தவிதமான வரம்புகளும் இன்றி நீ என்னை நேசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; நீ என் பேரில் கொண்டுள்ள பிரமாணிக்கத்தைப் பரிசோதிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்; குறிப்பு: ஆபிரகாமை அவர் சோதித்தது போல, நீ என்னைக் கனப்படுத்துவதைக் கேட்பதில் நான் பூரிப்படைகிறேன்; இப்போது நீ எனக்காகப் பலியாகிறாய், ஆனால் உன் பலியும் வீணாய்ப் போகாது; எதையும் ஒதுக்கி வைக்காமல் உன்னை முழுமையாக எனக்குக் கொடு; குழந்தாய், நான் விரும்புகிறபடி உன்னை நடத்த என்னை அனுமதித்து, எளிதில் விட்டுக்கொடுப்பவளாக இருந்து என்னை மகிழ்வி; ஆத்துமமே, ஒருபோதும் எனக்குப் பயப்படாதே, நான் அன்பாகவே இருக்கிறேன்; குறிப்பு: நம் ஆன்மாவை காயப்படுத்துகிற எதையும் கடவுள் ஒருபோதும் கேட்க மாட்டார் என்பது இதன் பொருள். ஆண்டவரே, நான் உம்மோடு இருக்க ஆசிக்கும் போதும், மரணம் ஒரு விடுதலையாக மட்டுமே இருக்கிறது என்று நான் சொல்லும்போதும், நான் சொல்வது யாருக்கும் புரியவில்லை. நேசமே, பரிசுத்தமாய் இரு, பரிசுத்தமாகவே நிலைத்திரு; தேவ சிநேகம் இன்னும் அதிக உயரத்திற்கு உன்னைத் தூக்கிச் செல்லும்; என் முழு நேசத்திற்குரியவளே, அஞ்சாதே; என் மீது சாய்ந்து கொள், உன் கடவுளாகிய என்னை உன் முழு ஆத்துமத்தோடும், இதயத்தோடும், உன் முழு மனதோடும், பலத்தோடும் நேசித்து, எனக்குப் பிரமாணிக்கமாக இரு; நான் உன் ஆத்துமத்தை பற்றிக் கொள்ளும்படி எப்படி உன்னை நோக்கி சாய்கிறேன் என்பதை நினைவு கூறுவாய்;