இறைவனில் உண்மையான வாழ்வு

ஆண்டவர் தம் திருச்சபையை மீண்டும் கட்டி எழுப்புவேன் என்கிறார். தம் மேய்ப்பர்களாலும் இந்தத் தலைமுறையின் இறைமறுப்பாலும் தம் இதயம் காயப்படுவதை அவர் காட்டுகிறார். இது இரக்கத்தின் காலம் என்று கூறி, இடைவிடாமல் ஜெபிக்கவும், மனம் வருந்தவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 96: என் பரிசுத்த இதயத்தின் காயங்களை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்

ஆண்டவர் தம் திருச்சபையை மீண்டும் கட்டி எழுப்புவேன் என்கிறார். தம் மேய்ப்பர்களாலும் இந்தத் தலைமுறையின் இறைமறுப்பாலும் தம் இதயம் காயப்படுவதை அவர் காட்டுகிறார். இது இரக்கத்தின் காலம் என்று கூறி, இடைவிடாமல் ஜெபிக்கவும், மனம் வருந்தவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 09/07/1989 - திருச்சபையை மீண்டும் கட்டுவேன்
08:37 15/07/1989 - இயேசுவின் திரு இருதய ஜெபம்
10:38 17/07/1989 - மேய்ப்பர்களால் ஏற்படும் காயங்கள்
17:10 19/07/1989 - என் திரு இருதயத்தை உன் இல்லமாக்கு
19:04 25/07/1989 - பாத்மோஸ் தீவில் இறைவார்த்தை
20:37 பாத்மோஸ் கிரேக்க இளைஞர் குழுவுக்கு செய்தி

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #திருஇருதயம் #இரக்கத்தின்காலம் #பாத்மோஸ்

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 96. ஜூலை 9, 1989. ஆண்டவர் தாம் ஜெருசலேமை மீண்டும் கட்டி எழுப்பப் போவதாக கூறி, வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை எனக்கு வாசிக்க தந்தார். ஆண்டவரா? நான்தான். நீ வாசித்துள்ளது அனைத்தும் நிறைவேறும். என் திருச்சபையை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன். இன்று என் திருச்சபை சிதைவடைந்துள்ளது. அது பயங்கரமான அழிவின் நிலையில் உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு மனிதனும் என் சட்டத்தை அனுசரிக்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. அவர்களுடைய இதயங்களில் இப்போது நான் விதைத்துக் கொண்டிருக்கிற அன்பின் விதைகளின் பலனாக, அவர்கள் என் சட்டத்தை தங்கள் இதயத்தினுள் ஆழமாக எடுத்துச் செல்வார்கள். அவர்கள் உன்னதரின் சாட்சிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் என் மக்களாக இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாக இருப்பேன். நேரடியாக என் உதடுகளிலிருந்து அவர்கள் அறிவைக் கற்றுக் கொள்வார்கள். நான் அவர்களுடைய குருவாக இருப்பேன். அவர்கள் என் மாணவர்களாக இருப்பார்கள். அதன்பின் நான் ஒழுங்கை ஏற்படுத்துவேன். அது ஒருபோதும் அழியாது. அவர்கள் எல்லோரும், எந்தத் தகுதியும் இல்லாதவர்களும் கூட, என் திருப்பெயரைக் கொண்டு என்னை அறிந்து கொள்வார்கள். ஏனெனில் நானே அளவற்ற இரக்கமும் மன்னிப்பும் தயவுமாக இருக்கிறேன். ஆம், என் தேவாலயத்தின் சுவர்கள் மீண்டும் ஒவ்வொரு அடுக்காக, ஒவ்வொரு செங்கல்லாக கட்டி எழுப்பப்படும். அனைத்தும் என் சொந்த கரத்தால் மீண்டும் கட்டப்படும். அதன்பின் நான் இறந்தவர்களைத் தேடி ஒவ்வொரு தெருமுனைக்கும் செல்வேன். அவர்கள் என் புதிய ஒளிப்பெருக்கிகளாக ஆகும்படி, நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராக உயிரோடு எழுப்புவேன். நான் அவர்களை உங்கள் முன் தேவ ஊழியம் செய்யும்படி என் ஆவியானவரோடு அனுப்புவேன். உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவர் யார் என்று அவர்களிடம் நீங்கள் கேட்கும்போது, அதிகாரத்தாலேயே தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்று அவர்கள் பதில் சொல்வார்கள். நீங்களோ, என் அன்புக்குரியவர்களே, இந்த வனாந்தரத்தில் துன்புறுகிற நீங்கள், நீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும், ஒருபோதும் வற்றாத நீரூற்றைப் போலவும் ஆவீர்கள். அன்பு உங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் என்னை வாழ்த்தி, ஸ்துதித்து, என்னை மகிமைப்படுத்தி, என் புதிய பரிசுத்த திருப்பெயரின் கீழ் ஒன்றாக இணைந்திருக்கிற என் சொந்த மக்களால் சூழப்பட்டிருப்பேன். கழகம் நின்றுபோய் தன் முடிவை அடைந்திருக்கும். என் வார்த்தையால் குத்தி ஊடுருவப்பட்டு, அது இனி மீண்டும் உயிர் பெற முடியாதபடி அது இறந்திருக்கும். என் ஒளியில் உங்களை பலப்படுத்தி, தீயவனின் கைகளிலிருந்து உங்களை விடுவிப்பதே என் நோக்கம். குறிப்பு: திடீரென நெருப்பாலான சுத்திகரம் என் நினைவுக்கு வந்தது. என்னை அன்பு செய்கிற எனக்காக பலியாகிறவர்கள் நிமித்தமாக மட்டுமே நான் என் நெருப்பை குறைத்துக் கொள்வேன். அன்புக்குரியவர்களே, உங்கள் நிமித்தமாக என் கரம் உங்களுக்கு சொல்லப்பட்டபடி அதே கடுமையுடன் விழாது. உங்கள் யுகத்தின் குற்றம் இன்னும் பெரிதாகவும், அதன் பாவங்கள் எண்ணற்றவையாகவும் இருக்கின்றன. அதன் அக்கிரமம் எவ்வளவு கடுமையானதாக இருக்கிறது என்றால், உங்கள் மரங்கள் பெரும்பாலும் கனி தராது. திராட்சை கொடிகளில் கனிகளைக் காணவில்லை என்று ஆச்சரியப்படுகிறீர்களா? பசுமையான இலைகளை இன்னும் காண முடியவில்லையா? அவை பூப்பூப்பதில்லை. எந்த ஒரு இனிய நறுமணத்தையும் வெளியிடுவதில்லை என்று வியக்கிறீர்களா? அது ஏனெனில் என் எதிரிகள் என் தோட்டத்தில் உள்ள மரங்களின் மீது எஞ்சியிருந்த ஒரு சில கனிகளையும் கூட இல்லாமல் போக செய்யும்படியாக என் தோட்டத்திற்கு நீர் தரும் என் நீரூற்றுக்களை நஞ்சாக்கி விட்டார்கள். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா மலர்களையும் அழிப்பதை நான் கண்டிருக்கிறேன். விரியன் பாம்புகளைப் போல வஞ்சகமும் கெடுமதியும் உள்ளவர்களாக அவர்கள் என் ஆலயத்திற்குள் இரவில் வந்து, எந்த பயமுமின்றி தங்கள் வெறுப்புக்குரிய நாட்டங்களை வெளிப்படுத்துகிறார்கள். தீய மனிதர்கள் தீமை செய்வதில் கொண்டுள்ள உற்சாகம் எப்படிப்பட்டதெனில், எவனும் தீமை செய்வதை விட்டுவிடுவதில்லை.

ஆனால் ஆண்டவரே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறீர் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே. அவர்கள் என் சட்டத்திற்கு எதிராக கழகம் செய்கிற கழகக்காரர்கள். அவர்களைப் பற்றியே பரிசுத்த வேதாகமம். அவர்கள் கரிசனையின்றி என் மக்களின் காயங்களை கட்டுகிறார்கள். சமாதானம், சமாதானம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை. அவர்களிடம் வெட்கமோ அன்போ இல்லை. அவர்கள் இதயமற்றவர்கள் என்று சொல்கிறது. ஆனால் நான் என் சுவாசத்தின் ஒரே வீச்சைக் கொண்டு இந்த கழகக்காரர்களை வீசியெறிவேன். பொய்மையின் உயர் ஆசனங்களில் தங்களையே அமர்த்திக் கொண்டுள்ள காயின்கள் அனைவரையும் நான் சிதறடிப்பேன். அவர்களுடைய சிம்மாசனங்களால் எனக்கு என்ன பயன்? நான் அவர்களை எச்சரித்து வந்திருக்கிறேன். எவ்வளவு அதிகமாக நான் அவர்களை எச்சரித்தேனோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் கேட்க மறுக்கிறார்கள். மனம் திரும்பி என்னிடம் திரும்பி வராதபடி இப்படி செய்தார்கள். இந்த காயின்கள் பல பத்தாண்டுகளாக விசுவாச மறுதலிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தீச்செயல்களின் மீது தாங்கள் கொண்டுள்ள பிடியை ஒருபோதும் விடுவதில்லை. அவர்கள் கற்பனைத் தோற்றங்களோடும் பொய்மையோடும் ஒட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் என் பக்தியுள்ள மக்களையும், என் ராயப்பருக்கு பிரமாணிக்கமாக நிலைத்திருப்பவர்களையும் ஏறி மிதிக்கிறார்கள். ஆம், இன்னும் அவரில் விசுவாசம் கொள்ளும் அனைவரையும் அவர்கள் ஏழனம் செய்கிறார்கள். இந்த காயின்கள் என் திருச்சபைக்கு எந்த அளவுக்கு தீங்கு செய்கிறார்கள் என்றால், அவர்கள் என் கண்களை பகலும் இரவும் எப்போதும் அழுது கொண்டிருக்கிற ஒரு கண்ணீர் ஊற்றாக மாற்றிவிட்டார்கள். என் இறைவா, என்ன ஒரு வேதனையை எனக்கு தருகிறீர்! உம் நியமங்கள் மிக அற்புதமானவை. யாராய் இருந்தாலும், ஏன் இதை உமக்கு செய்ய வேண்டும்? உம் கட்டளைகளே என் நித்திய தந்தை வழி சொத்தாக இருக்கின்றன. ஓ, ஆண்டவரே, மிகுந்த அன்பும் கனிவும் உள்ளவரே, மற்றவர்கள் உம் சட்டத்தை அவமதிப்பதால் என் கண்களும் கண்ணீரால் பெருக்கெடுக்கின்றன. குறிப்பு: சங்கீதம் 119 ஆம் அதிகாரம், இறைவார்த்தை 136. இதனால்தான் நீங்கள் பலவீனர்கள் என்றும், தகுதியற்றவர்கள் என்றும், இழிவானவர்கள் என்றும், மூடர்கள் என்றும் அழைக்கிற இதே மனிதர்களை நான் உங்களிடம் அனுப்புகிறேன். குறிப்பு: நம் தலைமுறை, நம் காலகட்டம். உங்களையே ஞானிகள் என்று அழைத்துக் கொள்கிற உங்கள் அனைவரையும் வெட்கத்துக்கு உள்ளாக்க நான் நினைக்கிறேன். நீங்கள் அறியாத விதத்தில் பிடிக்கப்படுவீர்கள். ஏனெனில் உங்கள் சொந்த பெயர் என்னவென்றும், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கூட நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் நான் உங்களுக்கு கலக்கம் வருவிக்க எண்ணுகிறேன். அன்புக்குரியவளே, இப்போது ஓய்வெடு. உன்னோடு இன்னும் சற்று அதிக நேரம் செலவிடலாம் என்று நான் நம்புகிறேன். எல்லா ஆபத்துகளுக்கும் விழிப்பாய் இரு. விசுவாசத்தில் உறுதியாய் இரு. நீ செய்வதெல்லாம் அன்புடன் செய்யப்படட்டும். நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். நாங்கள் நாம். நித்தியத்திற்கும் என் ஆண்டவரே. வா, உன் இல்லமாகிய என் திருவிருதயத்தில் ஓய்வெடு. ஜூலை 15, 1989. வாரும் என் ஆண்டவரே, என்னை உயர்த்தும். உம்மை சந்திக்க என்னை அனுமதியும். உம் ஒளி என் மீது ஒளிவீசுவதாக. நான் வாழும் இந்த வனாந்தரத்தில் என்னை துன்புறுத்துவோரின் சுருக்க கண்ணிகளின் நெருக்கம் தளர்வதாக தோன்றவில்லை என்றாலும், உம் விதிகளை மறவாதிருக்க நான் முயல்கிறேன். ஆனாலும், என் இதயத்தில் உம் பிரசன்னத்தை நினைவில் கொண்டு நான் தைரியம் கொள்கிறேன். பரிசுத்தரே, அதிபரிசுத்தரே, உம் பிரசன்னத்தில் நான் அக்களிக்கிறேன். என் திரு இருதயத்தின் வசூலா, என்னை அன்பு செய். என்னை அன்பு செய்யாதவர்களுக்காக பரிகாரம் செய். என் திரு இருதயத்தை மகிழ்ச்சிப்படுத்து. இந்த சிறிய ஜெபத்தை கற்றுக்கொள். ஓ, இயேசுவின் திரு இருதயமே, என் ஆன்மாவை புதுப்பியும். நான் வாழும்படியாக, உம் திரு இருதயத்திற்குள் என் இதயத்தை மறைத்துக் கொள்ளும். ஆமென். இந்த ஜெபத்தை என் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடு. மகளே, உன் கடும் உழைப்பு வீணாய் போகாது. ஆ, என் மீதமே ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தாதே. என்னை பார்த்துக் கொண்டிருப்பதை ஒருபோதும் நிறுத்தாதே. என் மீது உன் கண்களை பதித்துக்கொள். உன் மனதில் எப்போதும் நான் இருக்கும்படி பார்த்துக்கொள். ஏனெனில் நாம் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். என் குழந்தாய், உன்னை துன்புறுத்துவோர் என்னையும் துன்புறுத்துவோராய் இருக்கிறார்கள். இவர்கள் என் திராட்சைத் தோட்டத்தை அழிக்கும்படி அதனுள் இரவில் வருபவர்கள். ஆனாலும், அஞ்சாதே. திருட்டுத்தனமாய் வருகிற இவர்களுக்கு எதிராக விழிப்போடு இருக்கிற காவல்காரனைப் போல் நான் இருக்கிறேன். என் திராட்சைத் தோட்டத்தின் கனிகளைத் தொட எந்த மனிதனையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஜூலை 17, 1989. ஆண்டவரா, என் குழந்தாய், நான் சொல்வதைக் கேட்டு எழுது. நானே என் மந்தையின் மாபெரும் மேய்ப்பராக இருக்கிறேன். நான் என் மந்தையை பராமரிக்கும்படி என் மேய்ப்பர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். ஆனால் என் தோழர்களில் பலர் திறமையின்மையின் ஆடையை அணிந்து கொண்டு, இழக்கப்பட்ட ஆடுகளைப் பற்றி கவலைப்படாமலும், வழிதப்பிப்போன ஆடுகளை ஆட்டுக்கிடைக்கு திரும்பக் கொண்டு வராமலும் இருக்கிறார்கள். என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களே, எனக்கு மிகப்பெரிய துயரங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். என் திரு உடலில் உள்ள மிக ஆழமான காயங்கள் நான் அவர்களுக்கு தந்திருந்த கைக்கோள்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவர்களுடைய சொந்த கரத்தாலேயே நான் அடையாளம் காண முடியாத அளவுக்கு காயப்படுத்தப்படுகிறேன். நான் இடைவிடாமல் என் முதுகில் கசையால் அடிக்கப்படுகிறேன். என்னுடைய திருவுடல் முழுவதும் வழியால் நடுங்குகிறது. வறண்டு வெடித்துள்ள என் உதடுகள் நடுங்குகின்றன. அச்சமின்றி அவர்கள் சமாதானத்திற்காக கூச்சலிடுகிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை. ஏனெனில் பகுத்தறிவு வாதத்தாலும், கீழ்படிதலாலும், வீண் பெருமையாலும் கைப்பற்றப்படவும், கெடுக்கப்படவும் தங்களை அனுமதித்து விட்டார்கள். எத்தகைய துயரத்தை அவர்கள் எனக்கு தருகிறார்கள்? எத்தகைய காயங்களை என் மீது அவர்கள் உண்டாக்குகிறார்கள்? ஆண்டவரே, இது ஏன் சிலருக்கு மிக கடினமாய் இருக்கிறது? பொய்மையின் செங்கோலை ஒருமுறை பிடித்த பின், அதை விட்டு விலகுவது கடினமானது. அவர்களுடைய மனிதத்தன்மையான கொள்கைகளையும் ஒழுங்குகளையும் விட்டு விடுவது கடினமானது. தங்கள் சொந்த பேராசைக்கே மரிப்பது அவர்களுக்கு கடினமானது. சுய இழிவின் ஆடைகளை ஏற்றுக்கொள்வது கடினமானது. அவர்களிடம் நான் சொல்கிறேன், ஆயர்களே, ஊழையிடுங்கள், அலறுங்கள், மந்தையின் எஜமானர்களே, தரை மீது உருளுங்கள். ஏனெனில் உங்கள் படுகொலைகளுக்கான நேரம் வந்துவிட்டது. விதையடிக்கப்படாத மிகச் சிறந்த ஆட்டுக்கடாக்களைப் போல், நீங்கள் ஒருவர் பின் ஒருவராக விழுவீர்கள். என் நண்பர்களுக்குள் எல்லாம் மிகச் சிறந்த, மிக அழகிய தந்தை வழி சொத்தை நான் உங்களுக்கு தந்திருக்கிறேன். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நடுவில் உங்களுக்கு இடம் தந்திருந்தேன். என் இல்லத்தை நான் உங்களிடம் ஒப்படைத்தேன். ஆனால் நீங்கள் என் கட்டளைகளை கடைபிடிக்கவில்லை. விசுவாசத்தை மறுதலித்து விட்டீர்கள். நான் தீமை என கருதுவதை செய்தீர்கள். நான் உங்களை அழைத்தேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் எனக்கு கீழ்படியவில்லை. குறிப்பு: இது மிகுந்த மனக்கசப்போடு சொல்லப்பட்டது. ஆ, என் இறைவா, எங்கள் மீது இரக்கமாயிரும். இந்த மேய்ப்பர்களை அவர்களுடைய குற்றத்திலிருந்து கழுவி சுத்தமாக்கும். அவர்களுடைய பாவத்திலிருந்து அவர்களை சுத்திகரியும். என் சிறிய மணவாளியே, நான் என் துக்கத்தை உன்னோடு பகிர்ந்து கொள்ள அனுமதி. என் இறைவா, ஆண்டவரே, எப்போதும் மிகுந்த பரிவும் இரக்கமும் உள்ளவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். உமக்காக மட்டுமே நான் உயிர் வாழ்கிறேன். என் பார்வை வேறு யார் மீதும் இன்றி, உம் மீது மட்டுமே இருக்கிறது. நான் உம்மை ஆராதிக்கிறேன். ஆ, உன் அன்புள்ள வார்த்தைகள் என் நீதியை எவ்வளவாக சாந்தப்படுத்துகின்றன. அன்பின் ஒவ்வொரு துளியும் மதிப்புள்ளது. கணக்கற்ற ஆன்மாக்கள் அன்பால் காப்பாற்றப்பட முடியும். என் கற்பழகியாக உன்னை பயன்படுத்த என்னை அனுமதி. நான் என் திருக்காயங்களை உனக்கு காட்டும்படி உன்னிடம் வருகிறேன். ஒரு நண்பனைப் போல, என் திருக்காயங்களைப் பற்றி உன்னிடம் சொல்கிறேன். நான் என் திரு இருதயத்தின் காயங்களை உனக்கு காட்டுகிறேன். எங்கள் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. என் வசூலா, நான் இப்போது இரக்கத்தின் காலத்தில் இருக்கிறேன். என் அருளின் ஆவி எப்படி உங்கள் மீது பொழியப்படுகிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? நீங்கள் உங்கள் பாவங்களுக்கு மனம் வருந்த வேண்டியது இப்போதுதான். நீங்கள் உங்கள் வாழ்வை மாற்ற வேண்டியது இப்போதுதான். இடைவிடாமல் ஜெபியுங்கள். அன்புடன் ஜெபியுங்கள். கழகத்தில் பிடிவாதமாக நிலைத்திருக்காதீர்கள். ஏனெனில் நீதியின் பயங்கரமுள்ள நேரம் விரைவில் உங்களுடன் இருக்கும். அப்போது ஒரு நடுவராக என்னை எதிர்கொள்ள ஆயுத்தமாய் இருங்கள். என் மகள்களே, மகன்களே, வெகுகாலத்திற்கு முன் மரணத்தோடு உங்களை பிணைத்திருந்த சங்கிலியிலிருந்து நான் உங்களை விடுவித்தேன். மிகுந்த பரிவிரக்கத்தோடு நான் உங்களை திரும்ப எடுத்துக்கொண்டேன். தீயவனிடமிருந்து நான் உங்களை மீட்டு இரட்சித்தேன். உங்களுக்கு என் இருதயத்தை காட்டினேன். அது உங்கள் முன்னோர்களால் எப்படி குத்தி துளைக்கப்பட்டது என்று காட்டினேன். உங்களை விடுவிக்கும்படி நான் என்னை பலியாக்கினேன். உங்கள் யுகம் இடைவிடாமல் என் கோபத்தை தூண்டுகிறது. இருந்தாலும், என் மாபெரும் தயவிறக்கத்தில் என் அருளின் ஆவியானவர் என் கட்டளைகளை உங்களுக்கு நினைவுபடுத்த நான் அனுமதிக்கிறேன். இன்று என் இரக்கம் உலகின் ஒரு கோடி முனை முதல் மறுக்கோடி முனை வரைக்கும் எட்டுகிறது. என் இன்றைய இரக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தைக் கொண்டு ஜெபிக்கும்படி நான் அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கேட்கிறேன். உபவாசம் இருங்கள். மனம் வருந்துங்கள். ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள். உங்கள் உருமாற்றத்தின் வழியாக நான் என் மகிமையை காட்டும்படி முற்றிலும் புதியதொரு குழுவாக உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். ஜூலை 19, 1989. புனிதமானவரே, என் ஆன்மா உம் புனித இதயத்திற்காக ஏங்குகிறது. உம் புனித இருதயத்தில் வாழ்பவர்களும், நாள் முழுவதும் உம்மை ஆராதிக்கக் கூடியவர்களுமாகிய அனைவரும் பேரு பெற்றவர்கள். உம்மிடமிருந்து அருள் வரங்களை பெற்றுக் கொள்வோர் பேரு பெற்றவர்கள். இன்னும் இறந்து கிடப்பவர்கள் உம்மில் அக்களிக்கும் படியாக அவர்களுக்கு மீண்டும் உயிரளித்தருளும். அவர்களுக்கு உம் அன்பை காட்டும். அவர்கள் உமக்கு புதியதொரு அன்பின் பாடலை பாடும்படியாக உம் திரு இருதயத்தை அவர்களுக்கு காண்பித்தருளும். என் ஆன்மாவின் அன்புக்குரியவளே, என் கரத்தை பிடித்துக்கொண்டு ஞானம் உனக்கு போதித்த அனைத்தையும் மதிப்பிடு. நான் அன்பின் மொழியைக் கொண்டு உனக்கு கற்பித்திருக்கிறேன். என் குரலை பகுத்துணரவும் கேட்கவும் நான் உனக்கு கற்பித்துள்ளேன். உன் ஆண்டவராகிய என்னை எப்படி கண்டுபிடிப்பது என்று நான் உனக்கு கற்பித்துள்ளேன். உன் ஆன்மாவை நான் உயிர்ப்பித்துள்ளேன். என் அழகைப் பற்றியும் நானே அன்பின் பக்திக்குரிய ஆதாரம் என்பதையும் நான் உனக்கு நினைவுபடுத்தினேன். நித்தியத்திலிருந்தே நான் உன்னோடும், உன்னிலும், நீ என்னிலும் இருக்க நான் ஏங்கினேன். ஒருவேளை இப்போது நீ என்னுடைய அன்பை புரிந்து கொள்ள தொடங்குகிறாயா? உன் இறைவனாகிய நான் எவ்வளவு ஆவலாக இருக்கிறேன். அன்பிற்காக நான் எவ்வளவு தாகமாய் இருக்கிறேன் என்பதை, மலரே, நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உலக முடிவு வரையிலும் என்றென்றும் நான் உன்னோடு இருப்பேன். என் திரு இருதயத்தை உன் இல்லமாக்கிக்கொள். புறா தன் கூண்டைக் கொண்டிருப்பது போல, உன் திரு இருதயத்தை உன் இல்லடமாக்கிக்கொள். உங்கள் அனைவர் மீதும் நான் கொண்டுள்ள அன்பு நித்தியமானதாக இருக்கிறது. ஜூலை 25, 1989. புனித அருளப்பர் நாடு கடத்தப்பட்ட திருவிளைப்பாட்டு தீவாகிய பாத்மோஸ். நான் ஒரு வளமான நாட்டின் விளைச்சலையும் நற்காரியங்களையும் நீ அனுபவித்து மகிழும்படியாக இங்கு உன்னை கொண்டு வந்திருக்கிறேன். குறிப்பு: எரேமியா இரண்டாம் அதிகாரம், இறைவார்த்தை ஏழு. என் ஆண்டவரே, சாத்தியமானால், புனித அருளப்பர் உம் வார்த்தையை எங்கே பெற்றுக்கொண்டாரோ, அதே குகையில் நானும் உம் வார்த்தையை பெற்றுக்கொள்ளும் அருள் வரத்தை எனக்கு தரும்படி உம் அனுமதியை கேட்கிறேன். ஆண்டவரே, என் இதயத்தின் உள்ள ஆழங்களில் இருந்து நான் உம்மை கூவி அழைக்கிறேன். என் மன்றாட்டை தயவாய் கேட்டருளும். நான் உம் பதிலை சார்ந்திருக்கிறேன். ஆமென். உன் வேண்டுதல் தொடங்கியபோது, ஒரு வார்த்தை உச்சரிக்கப்பட்டது. அது என்னவென்று நான் உனக்கு சொல்ல வந்திருக்கிறேன். நீ சிறப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதனாக இருக்கிறாய். குறிப்பு: தானியேல் ஆகமம், ஒன்பதாம் அதிகாரம், இறைவார்த்தை 23. ஆண்டவரே, இதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? நான் சொல்வதைக் கேள். நானே அவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி நீ எந்த நேரமானாலும் என் அருகில் வா. வார்த்தையாகிய நான் உங்களை மன்னித்து, உங்கள் அனைவரையும் என்னிடம் திரும்பக் கொண்டு வரும்படி உங்கள் மத்தியில் இறங்கி வருகிறேன். ஜெபிக்கவும், ஜெபமாலை சொல்ல கற்றுக்கொள்ளவும். பாத்மோஸ் தீவுக்கு வந்த கிரேக்க இளைஞர் குழுவுக்கு தரப்பட்ட செய்தி: சிலர் ஏதென்ஸில் இருந்தும், சிலர் ரோட்ஸில் இருந்தும் வந்திருந்தார்கள். எல்லோரும் பாத்மோஸுக்கு திருப்பயணமாக சேர்ந்து வந்திருந்தார்கள். எழுந்துருங்கள், அன்புக்குரியவர்களே! நான் உங்கள் இரட்சகர். சிலுவையில் அறையுண்டவர் உங்கள் மீட்பர். என் அன்பை உணருங்கள். உங்கள் நிமித்தமாக நான் அன்பை அதிகரிக்கவும், தீமையை குறைக்கவும் வந்திருக்கிறேன். உங்கள் ஆன்மாவில் குறைவுபடும் அனைத்தையும் அதற்கு தர நான் வந்திருக்கிறேன். சிறியவர்களே, அச்சப்படாதீர்கள். நான் எல்லாவற்றையும் அளவற்ற விதமாக கொண்டிருக்கவில்லையா? நான் உன்னதமானவராக இல்லையா? ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் தந்தையின் கரங்களில் இருக்கிறீர்கள். பரிசுத்த தமத் திருத்துவமாகிய நான் ஒரே இறைவனாக இருக்கிறேன். உங்களை முழுமையாக என் கரங்களுக்குள் கையளித்துவிட்டு, உங்கள் உயிருள்ள ஒளித்தூண்களாக மாற்ற என்னை அனுமதியுங்கள். என்னிடமுள்ள அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். நான் உங்களை அன்பு செய்கிறேன். அன்புக்குரியவர்களே, இந்த இருண்ட உலகில் வெளிச்சம் மினுமினுக்கிறது. ஏனெனில் தீயவன் இந்த உலகில் இப்போது எஞ்சியுள்ள சிறு ஒளியையும் அணைத்துக் கொண்டிருக்கிறான். உங்கள் தலைமுறை இரக்கமற்ற விதமாக தீமையை நன்மை என்றும், நன்மையை தீமை என்றும் அழைப்பதில் இன்பம் காண்கிறது. எந்த தயவிறக்கமும் இன்றி அவர்கள் இடைவிடாமல் என் பரிசுத்த திருப்பெயரை இழிவாக பேசுகிறார்கள். தீமையை காணவும், அவனுடைய பாதங்களில் முழங்காலிடவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இதையெல்லாம் காண்பதில் நான் எவ்வளவு துன்புறுகிறேன்! என் பரிசுத்த இருதயத்தை உணருங்கள். அது எப்படி கிழித்து புண்ணாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த இறந்துவிட்ட தலைமுறையினர் தங்களை மகிழ்ச்சியோடு கடவுளற்றவர்கள் என்று அழைத்துக் கொள்ளும்படியாகவும், நாங்கள் யாருக்கு சொந்தமானவர்கள் என்பது பற்றி நினைக்கத் தேவையில்லை. பாருங்கள், நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் வெளியே போய் ஒரு பாபியல் கோபுரத்தை கட்டுவோம். இதை நாம் முன்பே செய்திருக்கிறோம், அல்லவா? ஏன் கடவுளோடு இணைந்திருக்க வேண்டும்? அவருடைய சட்டத்தால் நமக்கு என்ன லாபம் என்று தாங்கள் சொல்லும்படியாகவும், என்னோடு அவர்களை இணைத்துள்ள தொப்புள் கொடியை வெட்டிவிட போராடுவதைக் கண்டு என் திரு இருதயம் எப்படி இரத்தம் சிந்துகிறது என்றும் உணருங்கள். அவர்கள் பிதாவையோ என்னையோ ஒருபோதும் அறியாதிருக்கிறார்கள் என்பதால்தான் இந்த எல்லா காரியங்களையும் செய்கிறார்கள். இந்த தலைமுறையில் பெரும்பாலானவர்கள் பாகாலை வழிபடுவோராக இருக்கிறார்கள். ஆம், இவர்கள் பொய் தெய்வங்களை வழிபட்ட தங்கள் முன்னோர்களின் வழி தோன்றல்களாக இருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் ஆன்மாவை வறண்டு போக செய்வதே. ஏனெனில் அவர்கள் என்னோடு தங்களை இணைத்திருந்தும், அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவளித்ததுமான தொப்புள் கொடியை துண்டித்து விட்டார்கள். அவர்கள் மனம் முகந்து நித்திய நெருப்பை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் பரிசுத்த திருப்பெயரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே என் கோபத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். வாருங்கள், நான் உங்களை அழைத்திருக்கிறேன். நீங்கள் நான் சொன்னதைக் கேட்டிருக்கிறீர்கள். நான் உங்கள் ஆண்டவர். நீங்கள் என் மக்கள், என் சொந்த மக்கள். அன்போடும் சமாதானத்தோடும் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். பூமி இந்த தலைமுறையின் பாதங்களின் கீழ் கரைபடுத்தப்படுகிறது. இதனாலேயே என் சுத்திகரிக்கும் நெருப்பு கரைபட்டு போன மண்ணை சுத்தம் செய்யும்படி மேலிருந்து அவர்கள் மீது இறங்க இருக்கிறது. உங்கள் ஆன்மாவை என்னிடம் உயர்த்தி, என்னோடு ஒன்றாகுங்கள். என் சமாதானத்தைக் கொண்டிருங்கள். நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கும்படி நீங்கள் கொண்டு வந்திருக்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிறேன். என் பெருமூச்சு ஒவ்வொரு அடையாளத்தின் மீதும், வேத பொருள்கள் மீதும் இருக்கிறது. ஒன்றாய் இருங்கள். மேற்கண்ட செய்தி கப்பல் சம்பவத்திற்கு பிறகு தரப்பட்டது. ரோடு ஓசையில் இருந்து பாத்மோஸுக்கு கடற்பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒருவர் மதத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். 15 நிமிடங்களில், நாங்கள் மொத்தம் 12 பேரையும் சுற்றி ஒரு பெருங்கூட்டமான இளம் பருவத்தினர் கூடிவிட்டதை நாங்கள் கண்டோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் நார்த்திகர்கள். அவர்கள் எங்களோடு வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கடவுளின் வார்த்தையோடு போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வன்மையான தாக்குதலையும் கேலி பரியாசத்தையும் மீறி, அவர்களில் ஒருவர் அங்கேயே அப்போதே மனம் திரும்பினார். என் ஆண்டவரே, உம் பொறாமையுள்ள அன்பை அவர்கள் காணட்டும். நீரே, எங்கள் சமாதானமும் நம்பிக்கையுமாக இருக்கிறீர். உம் அன்புக்கோ, உம் இரக்கத்துக்கோ, நாங்கள் தகுதியற்றவர்கள். எங்களோடு இரு, ஏனெனில் நாங்கள் பலவீனர்கள், மலர்களைப் போல் எளிதில் துவண்டு போகிறவர்கள். எங்களுக்கு உணவளிக்க உம்முடைய உயிர்ச்சாறு எங்களுக்கு தேவை. நான் பரிசுத்தராய் இருப்பது போல, நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். என் வார்த்தையை வாசியுங்கள். எனக்காக, எனக்காக மட்டும் வாழுங்கள். தீமைக்கு அன்பால் பதிலளியுங்கள். திராட்சைச் செடியிலிருந்து முளைக்கும் கொடிகளைப் போல் இருங்கள். விரைவில் நீங்கள் மொட்டுவிட்டு மலர்வீர்கள். உலகத்தை கனிகளால் நிரப்புவீர்கள். என் சமாதானத்தைக் கொண்டிருங்கள். என் மார்பின் மீது தங்கியிருங்கள். என் திருப்பெயர் பரிசுத்தமானது. ஆகவே, பரிசுத்தமாய் இருக்க நினைவாய் இருங்கள். வாருங்கள்.