இயேசு தம் சிறு குழந்தைகளைத் தூக்கிச் சுமந்து தம் வழியில் நடத்த விரும்புவதாகவும், இடைவிடாமல் ஜெபித்து விழிப்பாயிருக்கும்படியும் கூறுகிறார். பழிச்சொற்களுக்கு அஞ்சாமல் துன்புறுத்துவோரை ஆசீர்வதித்து மன்னிக்கும்படி வசுலாவிடம் சொல்கிறார். ஆண்டவர் நல்லவர்; அவருடைய அன்பும் பிரமாணிக்கமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 91. ஏப்ரல் 5, 1989 என் இயேசுவா? நான்தான்; ஆ, நீ உன் சித்தத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தபடி, என்னிடம் வரும் இந்தத் தருணங்களில் நான் எவ்வளவு அகமகிழ்கிறேன்! என்னோடு தங்கியிரு, நான் என் குழந்தைகளுக்கு எழுதுவேன்; 1989, ஏப்ரல் 21 அன்று நடக்கும் மறு ஒன்றிப்புக் கூட்டத்திற்கான செய்தியை இயேசு எழுதுவார். குறிப்பு: இயேசு வேதாகமங்களில் இருந்து அவற்றை வாசிக்கும்படி என்னிடம் கூறினார்: எபேசியர் 4 ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 17 தொடங்கி 32 வரை, மற்றும் 5 ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 1 முதல் 20 வரை. சமாதானம் உன்னோடிருப்பதாக, நான் ஆண்டவர், நானே வார்த்தை, நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்; என் சிறு குழந்தைகளே, என் பிரசன்னத்தை உணருங்கள்; நீங்கள் அனைவரும் ஒரே கூட்டமாக ஒன்று கூடியிருப்பதைக் காண்பதில் என் திரு இருதயம் அக்களிக்கிறது; குறிப்பு: இங்கு இயேசு உரோமமைக் கத்தோலிக்கர்கள் முதல் ஆர்த்தடாக்ஸ் அபினியர் வரையிலான அனைத்து கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிறார். பரிசுத்தத்தனத்தின் வழியில் உங்களை முன்னேற்ற நான் விரும்புகிறேன்; இன்னும் என் பாதைக்குள் ஊடுருவி வராதவர்களை நான் பின்தங்க விட்டு விடமாட்டேன்; நான் திரும்பிப் போய் அவர்களைத் தேடிப் பார்ப்பேன்; உங்கள் ஒவ்வொருவரையும் நான் தூக்கியெடுத்து, என் நீதி மற்றும் பரிசுத்தத்தனத்தின் பாதையை உங்களுக்குக் காட்டுவேன்; உங்களைத் தூக்கி, சுமந்து செல்வேன்; ஒரு பரிவுள்ள தந்தையைப் போல, நான் உங்களை மேலே உயர்த்தி, என் கட்டளைகளை உங்களுக்குக் கற்பிப்பேன்; நான் என் அன்பின் ஆவியைக் கொண்டு, உங்களை வளமாக்குவேன்; அன்பின் குருவாகிய நான் என்னை முழுமையாக அன்பு செய்யவும், நான் உங்களை அன்பு செய்வதுபோல, நீங்கள் ஒருவரையொருவர் அன்பு செய்யவும் உங்களுக்குக் கற்பிப்பேன்; இது என்னை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியாக இருக்கும்; உங்கள் அனைவரையும், இன்னும் தனியாக நடக்கத் தெரியாத என் சிறு குழந்தைகளாகவே நான் பார்க்கிறேன்; நீங்கள் பிடித்துக்கொள்ள நான் என் இரு கரங்களையும் தருவேன்; நீங்கள் உங்கள் சிறிய கரங்களை என் கரங்களில் வைப்பீர்கள், நீங்களும் நானும் சேர்ந்து முன்னோக்கி ஒரு சில அடிகள் எடுத்து வைப்போம்... நான் ஏற்கனவே எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பு: இயேசு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றினார். நான் உங்களை முன்னேற்றுவேன், நீங்கள் உங்களை முழுமையாக எனக்குத் திறக்க மனதாயிருக்கிறீர்கள் என்றால், நான் உங்கள் ஆன்மாவை அழகுபடுத்தி, உத்தமத்தனத்திற்குள் அதை நடத்திச் செல்வேன்; என் சட்டங்களை உங்களுக்குக் கற்பிக்க என்னை அனுமதியுங்கள்; என் கட்டளைகளை அனுசரிப்பது எப்படியென்று நான் உங்களுக்கு விளக்கிக் கூறுவேன்; நான் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் புண்ணியத்தின் கதவுகளைத் திறப்பேன்; ஆம், நானே என் சொந்தக் கரத்தால், என் கனிகளை உங்கள் வாயில் வைப்பேன்; என்னோடு ஒட்டிக்கொள்ளுங்கள், கடும் கோபம் அவிழ்த்து விடப்பட்டிருக்கிற இந்தக் கடின காலங்களில் நான் உங்களைக் காப்பாற்றுவேன்; அநேகர் தங்கள் வலக்கரம் எது, இடக்கரம் எது என்று தெரியாமல், குழப்பநிலைக்குள் விழும் இக்காலங்களில் நான் உங்களை காப்பாற்றுவேன்; இன்று, முன் எப்போதையும் விட, தீயவனும் பசாசுக்களும் உங்கள் அனைவரையும் ஏமாற்றும்படி இந்தப் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றித் திரிகின்றன, நீங்கள் விழுவதற்காக உங்களுக்கென வலைகளை விரித்து வைக்கின்றன; இடைவிடாமல் ஜெபியுங்கள் என்று உங்களிடம் நான் கேட்பதற்கு இதுவே காரணம்; நீங்கள் உறங்கிக் கொண்டிருப்பதை என் எதிரி காண அனுமதியாதீர்கள்; இந்நாட்களில் விழிப்பாயிருங்கள்; உங்களில் வெறுமையான ஒரு மூளை இருப்பதை அவன் கண்டுபிடிக்கவும் அவனை அனுமதியாதீர்கள், என் வார்த்தையையும், என் அன்பையும், என் சமாதானத்தையும், என் புண்ணியங்களையும் கொண்டு உங்களை நிரப்பிக்கொள்ளுங்கள், அடிக்கடி வந்து மாசற்றத்தனத்துடன் அந்தச் சிறிய வெண்ணிற அப்பத்தில் என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அப்போது நீங்கள் சோதனையில் விழமாட்டீர்கள்; இடைவிடாமல் ஜெபியுங்கள்; உங்கள் தேவைகளை உங்களை விடவும் நான் அதிகமாக அறிந்திருக்கிறேன், நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே அவற்றை அறிந்திருக்கிறேன்; உங்கள் இதயத்தை நான் அறிவேன்; முடிந்தபோதெல்லாம் என்னை சந்தித்து ஜெபியுங்கள், பரிகாரம் செய்யவும், இந்த பூமியில் குறைவுபடும் ஜெபங்களுக்கு ஈடு செய்யவும் ஜெபியுங்கள்; உங்கள் ஜெபங்களே உங்கள் கவசமாக இருக்கட்டும், அவை உங்களைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிற தீமை அனைத்திலும் இருந்து உங்களை மூடிப் பாதுகாப்பதாக, அன்பைக் கொண்டு பசாசை ஆயுதமற்றுப் போகச் செய்யுங்கள்; உங்கள் சமாதானத்தை அனைவரும் காணுமாறு, அது உங்கள் நெற்றிகளின் மீது எழுதப்பட்டிருப்பதாக; என் அருகில் நின்று போரிடும்படி உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நீங்கள் ஓர் ஆயுதமாக்கிக் கொள்ள வேண்டும், குறிப்பு: உரோமை 6 ஆம் அதிகாரம், இறைவார்த்தை 14. அப்போது பாவம் மேற்கொண்டு உங்கள் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தாது; என் வார்த்தை உங்கள் விளக்காய் இருக்கட்டும்; என் அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தி இருதயங்களை அடைந்து அவற்றை மனந்திருப்பும்படி, இந்தப் பூகோளத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதைப் பரப்புங்கள்; என்னை இன்னும் அறியாமல் இருப்போரே, வந்து என் திரு இருதயம் எப்பேர்ப்பட்ட அன்பின் சூளையாக இருக்கிறது என்று காணுங்கள்; வந்து என் திரு இருதயத்தை அன்பின் சுவாலைகளில் உணர்ந்து பாருங்கள், அப்படி நீங்கள் செய்யும்போது, உங்கள் இதயம் அச்சத்தால் முடக்கப்பட்டு, அன்பில்லாமையால் வறண்டு போயிருந்தாலும், நான் என் அன்பின் சுவாலையைக் கொண்டு உங்கள் இதயத்தை உயிருள்ள தீப்பந்தமாக மாற்றுவேன்; அன்புக்குரியவர்களே, என் ஆன்மாவின் பேறுபெற்றவர்களே, உங்களில் சிலர் இன்னும் என்னை எதிர்த்துக் கொண்டிருப்பதை நான் காணும்போது, என் இதயம் எவ்வளவு வேதனைப்படுகிறது... பாருங்கள், நான் எப்போதாவது பிரமாணிக்க மற்றவராய் இருந்ததாக அறியப்பட்டிருக்கிறேனா? நான் முழுப் பிரமாணிக்கமுள்ளவர், நான் ஒருபோதும் உங்களை மறுதலிப்பதோ, அல்லது துயர காலங்களில் உங்களைக் கைவிடுவதோ இல்லை; நான் உங்களை ஒருபோதும் கைவிட்டதில்லை; தனக்கு மண ஒப்பந்தமான இளம் கன்னியைப் பின்தொடரும் இளைஞனைப் போல, நான் உங்களைத் தேடி வருவேன்; ஏனெனில் நான் மேலிருந்து பேரன்போடு உங்களை உற்று நோக்குகிற உங்கள் பிரமாணிக்கமுள்ள கடவுளாக இருக்கிறேன்; என்னிடம் வந்து உங்கள் துன்பங்களை அன்போடு எனக்கு ஒப்புக்கொடுங்கள்; நானும் நீங்களும், நீங்களும் நானும், அந்த துன்பங்களைப் பகிர்ந்து கொள்வோம்; என் மகள்களே, மகன்களே, நீங்களும் நானும் சேர்ந்து பரலோக மந்திரம் சொல்வோமா? நீங்கள் அதை ஜெபிப்பதற்கு முன் ஞானவிதமாய் உங்களை ஒடுக்கி, உங்கள் இதயத்திலிருந்து மெதுவாக ஜெபியுங்கள்; இந்த ஜெபம் பிதாவை வந்தடையும், நீங்கள் சொல்வதைத் தியானியுங்கள்; ஜெபியுங்கள், நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்... என் இராச்சியம் வரும், என் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படும்; நான் இப்போதுள்ள இருளை அகற்றி, அதன் இடத்தில் ஒளியை வைப்பேன்; நான் தீமையின் இடத்தில் அன்பையும், இந்த மந்த புத்தியின் இடத்தில் உங்கள் காலடிகளை வழிநடத்தும் உயிருள்ள ஒளியை வைப்பேன்; நான் உங்களைக் கைவிடமாட்டேன்; உங்கள் புண்களை ஆற்றி, என் கனிவுள்ள பாசத்தைக் கொண்டு உங்கள் கரங்களைச் சுத்தம் செய்வேன்; ஆகவே என்னிடம் வந்து, என்னை அன்பு செய்யுங்கள்; உங்கள் அன்பு என் நீதியின் தீச்சுவாலையை அணைப்பதாக, உங்கள் இதயங்களில் இருந்து வரும் உங்கள் ஜெபங்கள் என் காயங்களின் வேதனையைத் தணிப்பனவாக, உங்கள் ஜெபங்கள் தூபத்தைப் போல மோட்சத்தில் எழுந்து வந்து, என்னை மகிமைப்படுத்தி, போற்றித் துதிப்பதாக; என் திராட்சைத் தோட்டம் கனி தரவிடாமல் அதை அழிக்கும்படியாக இரவில் வரும் மற்றவர்களின் பாவங்களைத் திருத்துங்கள்; நன்மை செய்யுங்கள், தீமை செய்வதை நிறுத்துங்கள்; நீங்கள் என்ன செய்தாலும், அதை என் மகிமைக்கென செய்யுங்கள்; அன்புக்குரிய ஆன்மாக்களே, வாருங்கள் வந்து என்னோடு என் சிலுவையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; என் சிலுவை அன்பிற்காகவும், சமாதானத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும் கதறுகிறது; அன்பில் ஒன்றுபட்டவர்களாக, நாம், நீங்களும் நானும், நானும் நீங்களும், ஒன்று சேர்ந்து அதைச் சுமப்போம்; உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் உங்கள் அனைவருக்கும் என் ஆசீர்வாதங்களைத் தருகிறேன்; ஒன்றாய் இருங்கள்; பிற்பாடு: மலரே, நான் என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன், உன்மீது என் ஆவி இருக்கிறது; ஆதியிலும் பழைய காலங்களிலும் இருந்தது போல, உங்கள் மத்தியில் அன்பாயிருப்பவரைக் கொண்டு நான் திரும்பி வரும் வரையிலும், என் திருச்சபையைப் புதுப்பிப்பாயாக; அன்போடும், சமாதானத்தோடும் இறந்தோரை எழுப்பு, ஆவிகளின் இந்த தேசம் ஒரு புதிய வாழ்வைப் பிறப்பிப்பதாக; ஆ, அன்பிற்குரியவளே! என்னுடைய இந்த மகிமையான நாளுக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன்! பிற்பாடு: நம் பரிசுத்த அன்னை மறு ஒன்றிப்பிற்கான தன் செய்தியை தருகிறார்கள். என் குழந்தாய், உனக்கு ஞானத்தை தருவதற்காக ஆண்டவரைப் போற்று; ஆண்டவர் தம் இரக்கத்திற்காகவும், தம் அன்பிற்காகவும் என்னோடு தம் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் போற்றப்படுவாராக! என் சிறிய ஆன்மாக்களுக்காக இதோ என் செய்தி; குழந்தைகளே, சமாதானம் உங்களோடு இருப்பதாக; அன்புக்குரியவர்களே, எளிமையில் கடவுளை அணுகுங்கள்; ஆண்டவரைச் சோதியாதவர்களே அவரைக் கண்டுபிடிப்பார்கள் என்பதால், எளிமையில் அவரை அணுகிச் செல்லுங்கள்; அவர் தாழ்ச்சி உள்ளவருக்கும், தம்மை நம்பாமல் இராதவர்களுக்கும் தம்மைக் காண்பிக்கிறார்; என் குழந்தைகளே, சோதனைக்கு உள்ளாகிற சர்வ வல்லமை மூடர்களைக் குழப்புகிறது; இல்லை, தந்திரமுள்ள ஆன்மாவுக்குள் ஞானம் ஒருபோதும் நுழையாது; ஆகவே, ஆண்டவருக்கு உங்கள் இதயங்களைத் திறந்து, இதய எளிமையில் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அவர் மீது சாய்ந்து கொள்ள உங்களையே அனுமதியுங்கள்; ஏனெனில், அப்போது நீங்கள் ஞானத்தின் மீது சாய்ந்து கொண்டிருப்பீர்கள்; ஜெபிப்பதன் மூலம் ஆண்டவரில் உங்கள் விசுவாசத்தை அதிகரியுங்கள்; விசுவாசம் கொண்டிருப்பது ஆண்டவரிடமிருந்து தரப்படும் ஒரு அருட்கொடையாகவும் இருக்கிறது; என் அன்பிற்குரியவர்களே, என் மாசற்ற இருதயத்திற்குள் வாருங்கள், நான் உங்களை இளைப்பாற்றுவேன்; துன்பப்படுகிறவர்களே, வேதனையில் இருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், துன்பப்படும் தன் குழந்தையைத் தேற்றும் எந்த ஒரு தாயையும் போல, உங்கள் தாயாகிய நான் உங்களைத் தேற்றுவேன்; நான் இன்னும் அதிகம் செய்வேன்; நான் பிதாவிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன்; உங்களை ஒருபோதும் கைவிடமாட்டேன்; வந்து எங்கள் இருதயங்களில் தஞ்சமடையுங்கள்; எங்கள் இதயங்களை இப்போது இறுக்குகிற இந்த முள் வளையம் தன் முட்களை இழந்து, இளம் மொட்டுக்களைப் பிறப்பிப்பதாக, இந்த மொட்டுக்கள் மலர்களாக மலர்வனவாக; இறைவனில் விசுவாசம் கொள்ளுங்கள், அவரை நம்புங்கள்; பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன், ஆமென்; இதோ, புனித மிக்கேல்; கடவுளின் குழந்தைகளே, சாத்தான் சொல்வதைக் கவனிக்காதீர்கள், அவனோடு உரையாடவும் செய்யாதீர்கள்; பொய் சொல்லுவது என்பது பசாசோடு உரையாடுவதாகும்; உங்களில் கோபத்தைக் குவித்து வைப்பது என்பது, பசாசுக்கு ஒரு பிடிமானதைத் தருவதாகும்; உங்கள் நாவு உங்கள் வீழ்ச்சிகளுக்குக் காரணமாக இருக்க அனுமதியாதீர்கள்; என்னிடம் ஜெபியுங்கள், நான் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன்; கடவுளிலும், அவருடைய அளவற்ற இரக்கத்திலும் நம்பிக்கை வையுங்கள்; நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஏப்ரல் 11, 1989 இன்று நிஜமான கலாபனை தொடங்குகிறது. இந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் உயிர்ப்பு விழா அன்று, நான் அவருடைய திருப்பாடுகளை உணர்வேன் என்று நான் புரிந்து கொள்ளும்படி இயேசு செய்தார். நாம் நம் உயிர்ப்பு விழாவுக்கு மிக அண்மையில் இருக்கிறோம். ஆண்டவரே, ஒரு போலி இறைவாக்கினள் என்று பலர் என்னைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக என்னதான் போலியாக இருந்தாலும், சாட்சியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், இந்தச் செய்தி தெய்வீகமானது அல்ல என்று சொல்ல, அவர்களால் முடியும்படி இப்படிச் செய்கிறார்கள். ஏற்கனவே பல பொய் சாட்சிகள் இருக்கிறார்கள். மற்றொரு அருங்குடை இயக்கத்தை அழிக்கும்படி பசாசால் பயன்படுத்தப்படும் ஆயுதம் என்று நான் குற்றஞ்சாட்டப்படுகிறேன். என்னைப் பற்றிக்கொள்; என் குழந்தாய், சமாதானம், எனக்கு எதையும் மறக்காதே; நாங்கள் இருவரும் உன்னுடன் இருக்கிறோம்; குறிப்பு: நம் பரிசுத்த அன்னையும் இயேசுவும். இது சாத்தானின் புகை என்பதை நினைவில் வைத்துக்கொள், என்னை நம்பு, புகை எப்போதும் நீடித்திருப்பதில்லை; அது காற்றில் கரைந்து, மறைந்து போகிறது; வசுலா, உன் இறைவனாகிய நான், நீ மோட்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அன்பைக் கொண்டு உன்னை அன்பு செய்கிறேன்; என் குழந்தாய், உன்னைப் பற்றிச் சொல்லப்படும் எல்லா அவதூறுகளுக்காகவும், அவர்கள் உன்னைப் பற்றிச் சொல்கிற போலியான குற்றச்சாட்டுகளுக்காகவும் ஆசீர்வதிக்கப்படுவாயாக; மகிழ்ச்சியாயிரு; ஏனெனில், பரலோகத்தில் உனக்குரிய கைம்மாறு மிகுதியாயிருக்கும்; இப்போது என்னை நம்புகிறாயா? நான் துன்புறுத்தப்பட்டது போல், நீயும் துன்புறுத்தப்பட போகிறாய் என்று நான் எத்தனை தடவைகள் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? என் செய்தி இதயங்களை வசீகரிக்கும், ஆனால், இதையும் மீறி சிலர் என் செய்தியை கண்டனம் செய்வதால், என்னையே கண்டனம் செய்கிறார்கள் என்பதை அறியாமல், உனக்கு எதிராகத் திரும்புவார்கள்; உன்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காக, அவர்கள் உன்னை அலசி ஆராய்வார்கள் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? நான் அனுப்பி இருக்கிற மற்றவர்களுக்கு, அவர்கள் செய்துள்ளது போல? உன்னைத் துன்புறுத்துவோரை ஆசீர்வதி, உன்னைக் குற்றம் சாட்டுபவர்களுக்காக ஜெபி; அவர்கள் அனைவரையும் உன் முழு இதயத்தோடு மன்னிப்பாயாக, என் வசுலா, நானே அன்பாக இருக்கிறேன் என்பதைக் கற்றுக்கொள்; என்னை நேசி, மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு எனக்கு இந்த அன்பு தேவையாயிருக்கிறது; நான் உன்னை அன்பு செய்வது போல், நீயும் என் சகோதரர்களை அன்பு செய்; ஆனால், ஆண்டவரே, சிலர் முற்றிலும் குருடாக்கப்பட்டிருக்கிறார்களே! சிறியவளே, என்னை நம்பு, என் ஒளியைக் கொண்டு, பலரை நான் ஒளிர்விப்பேன், பலர் மீது ஒளிவீசுவேன்; என் ஆன்மாவால் ஆசீர்வதிக்கப்பட்டவளே, குறிப்பு: கடவுளின் திருவாயினின்று இந்த வார்த்தைகளை நான் கேட்கும்போது, அப்படியே உருகிப் போகிறேன். இந்தக் கூடாரம் முன் எப்போதையும் விட அதிகமாக என்னை மூடுவதை நான் உணரும்படி, அவருடைய மகத்துவம் செய்கிறது. நான் இருக்கும் இந்தப் பரதேச வாழ்வு முடிவற்றதாக இருப்பதாக நான் உணர்கிறேன். என் திருப்பாடுகளை நீ மறந்துவிட்டாயா? அன்பின் காரணமாக நான் துன்பப்பட்டேன்; இப்போது என்னுடன் ஒன்றாயிரு; என் திருப்பாடுகளில் நான் பருகிய அதே கிண்ணத்தை நீயும் சுவை பார்க்க வேண்டும் என்பதற்காக, உள்ளபடியே எல்லாவற்றையும் வர அனுமதித்தவர் நான்தான்; குறிப்பு: இயேசு எனக்கு ஏதோ ஒரு விருந்தளித்துக் கொண்டிருப்பது போல, அவருடைய தொனி இருந்தது! தம்முடைய கிண்ணத்தை எனக்கு அவர் தந்திருப்பது பற்றி நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். சிறிய ஆன்மாக்களை உருவாக்கவும், என் திருப்பாடுகளின் சிறிய பிம்பங்களைப் போல, அவர்கள் தோன்றும்படி செய்யவும், நான் அவர்களை உயர்த்துகிறேன்; மற்றொரு பாடுபட்ட சுரூபமாக, என் திவ்விய கரங்களால் உருவாக்கப்படும்படி, இதயத்தையும் ஆன்மாவையும் எனக்குக் கையளித்திருக்கிற நீ பேறுபெற்றவள்; ஆன்மாவே, களிகூரு! என் பரிசைப் பெற்றுக் கொண்டு, களிகூர்ந்து மகிழ்ச்சியாயிரு! ஆனாலும் சிறியவளே, நீ வாழ்கிற இதே ஆகாயத்தின் கீழ், சூறையாடுகிற ஓநாய்களும் ஆட்டுத்தோலின் கீழ் மறைந்து வாழ்கின்றன என்பதை நினைவில் கொள்; அவர்கள்தான் நான் யாரைப் பற்றி உன்னை எச்சரித்துக் கொண்டிருக்கிறேனோ, அந்த போலி இறைவாக்கினர்கள்; இந்த மக்களைப் பற்றி, அதுவும் இந்த முறை விவிலியத்திலிருந்து எனக்கு ஒரு பதில் கூறும்படி நான் ஆண்டவரிடம் கேட்டேன். நான் வேதாகமத்தை திறந்தபோது, என் விரல் எரேமியா 23 ஆம் அதிகாரம், இறைவார்த்தை பத்தில் தொடங்கும் பகுதியில் நின்றது. இந்த பகுதி போலி இறைவாக்கினர்களைப் பற்றிப் பேசுகிறது. என்னை குற்றம் சாட்டுபவர்களில் ஒருவர் ஒரு போலி இறைவாக்கினர். அன்புக்குரியவளே, அஞ்சாதே, நான் உன் முன்னால் இருக்கிறேன்; அவர்கள் உன்னைப் பற்றி எல்லாவிதமான அவதூறுகளையும் பேசுகிறார்கள் என்பது பற்றி மகிழ்ச்சியாயிரு; என் கண்கள் இந்த மக்களைக் கண்காணிக்கின்றன, அவர்களுடைய நாவுகள் சொல்வதை நான் கேட்கிறேன், அவர்களுடைய இதயத்தை நான் உணர்கிறேன். ஆம், ஆனால் நீர் என்னோடு இருக்கிறீர், நான் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. தைரியம் கொள்; தொடர்ந்து செல்வதற்கு நான் உனக்கு என் பலத்தைத் தருவேன்; நாங்கள், நாம்? என்றென்றும் எக்காலமும் இந்த எல்லா துன்புறுத்தல்களும் போதாது என்பது போல, எங்கள் கூட்டங்களுக்காக நாங்கள் வாடகைக்கு பிடித்திருந்த பெரிய மண்டபம் எங்களுக்கு மறுக்கப்பட்டது. நாங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே அதை முன்பதிவு செய்து வைத்திருந்தும் கூட, சர்வசாதாரணமாக அது எங்களுக்கு மறுக்கப்பட்டது! தங்கள் இடத்தில் மதம் சார்ந்த செயல்பாடுகள் எதையும் தாங்கள் விரும்பவில்லை என அவர்கள் சொன்னார்கள்; அங்கே 200 பேர் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்க யாருமே நாங்கள் வருவதை விரும்பவில்லை. இது நடந்தது எங்கள் மறு ஒன்றிப்பு கூட்டத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருந்தபோது, ஆனால் ஆண்டவர் எங்கள் உதவிக்கு வந்தார். தம் ஆலயத்தில் நாங்கள் இருப்பதை அவர் சாத்தியமாக்கினார். கப்புச்சின் சபையினருக்குச் சொந்தமான ஒரு சிறு ஆலயம். ஆம், அவருடைய மகத்துவமானது சகோதரர்கள் அனைவரிலும் அதிகம் தாழ்ச்சி உள்ளவர்களும், அதிக ஏழைகளுமான சகோதரர்களை தேர்ந்தெடுத்தது. இயேசுவின் செய்தியை துன்புறுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அடையாளமாக இது தரப்பட்டது. ஏப்ரல் 23, 1989 புனித மௌரீஸின் சிறிய ஆலயத்தில் எங்கள் ஜெபங்கள், செய்திகள் வாசித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறு ஒன்றிப்புக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த சிறிய ஆலயம் நிரம்பி இருந்தது. தம்முடைய திருப்பெயரால் நாங்கள் சந்திப்பதை எங்களுக்குத் தடை செய்யாதிருக்கும் என் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக. தகுதிகள் இல்லாதவர்களுக்கும் கூட, ஆண்டவர் நல்லவராய் இருக்கிறார். என் ஆண்டவரே, நீர் எங்கள் ஜெபங்களுக்கு செவிசாய்த்தீர். உமது அன்பிற்குரிய குழந்தைகள் உமக்கு ஒப்புக்கொடுத்த உபவாசங்களையும், பரித் தியாகங்களையும் ஏற்றுக் கொண்டீர். உம் திருப்பெயரை நான் வாழ்த்துகிறேன். உம் திருப்பெயரை நாங்கள் வாழ்த்துகிறோம். என் ஆண்டவர் நல்லவர், அவருடைய அன்பு என்றென்றும் உள்ளது. அவருடைய பிரமாணிக்கம் காலகாலமாய் நிலைத்திருக்கின்றது. குறிப்பு: சங்கீதம் அதிகாரம் 100, இறைவார்த்தை ஐந்து. நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்வோமாக. நான் உன்னை அன்பு செய்கிற ஆண்டவர்; உன்னைத் துன்புறுத்துவோருடைய கண்களுக்கு முன்பாக, நான் உனக்கு உணவூட்டுவேன்; ஆயனின் அழைப்பைக் கேட்டு, அதை அடையாளம் கண்டுகொண்ட நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக; எனக்குப் பரித் தியாகங்களை ஒப்புக்கொடுத்த, நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக; என்னோடு ஒன்றிக்கும் அனைவரையும் நான் காப்பாற்றுகிறேன்; என் கரங்கள் உங்கள் தொட்டிலாகவும், என் புனித இருதயம் உங்கள் புகலிடமாகவும் இருக்கிறது; நான் உங்கள் இறைவனாக இருக்கிறேன்; நீங்கள் என் மக்களாக இருக்கிறீர்கள்; களிகூருங்கள், அன்பர்களே, களிகூருங்கள், என் குரல் ஏன் இந்தப் பலவீனமுள்ள கருவியால் சுமந்து வரப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தேடாதீர்கள், மன எளிமையோடு நம்புங்கள்; என்னைச் சோதிப்பதைத் தவிருங்கள், மாசற்ற, பரிசுத்தமான குழந்தைகளைப் போல், என் கண்களில் எனக்கு உகந்தவர்களாக இருங்கள்; என் புனித இருதயத்தைப் பாருங்கள்; நான் உங்கள் அனைவருக்கும் என் திரு இருதயத்தை வெளிப்படுத்தியபடி, உங்கள் முன் இருக்கிறேன்; உங்கள் மீது எனக்குள்ள ஆவல் மிக்க அன்பை உணருங்கள்; என்னை எதிர்க்காதீர்கள், என் வேண்டுகோளை எதிர்க்காதீர்கள், என்னிடம் வாருங்கள், உங்களை என் திரு இருதயத்தின் ஆழங்களுக்குள் தள்ளிவிட என்னை அனுமதியுங்கள், என் திரு இருதயம் உங்கள் அடைக்கலமாக இருக்கட்டும்; என் அன்புக்குரியவர்களே, நான் எப்படி உங்களைக் காப்பாற்ற வராதிருப்பேன்? அன்பின் பக்திக்குரிய ஆதாரமாக இருக்கிற நான், எப்போதாவது உங்களைக் கைவிடுவேனா? உங்கள் துயரக் கூக்குரல் வானகங்கள் முழுவதும் எதிரொலித்தன, பூமியிலிருந்து வந்த உங்கள் வேண்டுகோளை நான் கேட்டேன்; இல்லை, அன்புக்குரியவர்களே, பயப்படாதீர்கள், என் கண்கள் எல்லாவற்றையும் காண்கின்றன, நான் எல்லாவற்றையும் கேட்கின்றேன்; நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நான் வழிநடத்தி, அதை ஆசீர்வதிப்பேன் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நான் உங்கள் அர்ப்பணமுள்ள தோட்டக்காரராக இருக்கிறேன்; என் திராட்சைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சப்படும், அது என் சொந்தக் கரத்தால் பராமரிக்கப்படும்; இரவில் திருடர்கள் என் திராட்சைத் தோட்டத்தினுள் புகுந்து விடாதபடி, நான் அதை காவல் காப்பேன்; வந்து என் திராட்சைத் தோட்டத்தைக் காண விரும்புவோர் அனைவரும் பகல் வெளிச்சத்தில் வாருங்கள், நரிகள் மட்டும்தான் இரவில் வரும்; ஆகவே, புத்தியுள்ள மனிதர்களைப் போல, விடியற்காலையில் எழுந்து, என் திராட்சைத் தோட்டத்தைக் காண வாருங்கள்; ஆண்டவராகிய நானே அதன் காவலராக இருக்கிறேன்; என் அளவற்ற அன்பின் காரணமாகவும், என் மிகுதியான தயவிரக்கத்தின் காரணமாகவும், நான் என் திராட்சைத் தோட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வருகிறேன்; மகிழ்ச்சியாயிருங்கள், வானகங்கள் உங்கள் ஸ்துதி புகழ்ச்சிகளைக் கேட்கட்டும்! அகமகிழுங்கள், ஆண்டவரின் மகிமையை ஆர்ப்பரித்துக் கொண்டாடுங்கள்; என் வார்த்தையைச் சுமந்து செல்லும் சிறு ஒலிப்பெருக்கியாக இருங்கள்; உறங்குகிறவர்கள் உங்கள் சத்தத்தில் விழித்துக் கொள்வார்களாக; சகல மக்களினங்களுக்கும் என் அன்பை அறிவியுங்கள், என்னிடமிருந்து விலகிப் போனவர்கள் திரும்பி வாருங்கள்; அவர்களுடைய இதயங்கள் வறண்டவையாகவும், அவர்களுடைய பாவங்கள் செந்தூரம் போல் சிவந்தும் இருந்தாலும், நான் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டேன்; என் மன்னிக்கிற இதயத்தின் செல்வ வளங்களை நான் அவர்களுக்குக் காட்டுவேன்; பாடி அக்களியுங்கள், ஏனெனில் நான் இறுதி வரைக்கும் உங்கள் நடுவில் நிலைத்திருப்பேன்; ஏப்ரல் 28, 1989 ஆண்டவரா? நான்தான்; நீர் உள்ளபடியே எங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கிற உம்முடைய அதிசயங்களுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன், நான் உமக்கு நன்றி கூறுகிறேன், உம்மை போற்றிப் புகழ்கிறேன், என் இதயம் அக்களிக்கிறது, உமது பரிசுத்தத் திருப்பெயரை மகிழ்விக்கிறது. நீர் என்னை பாதுகாக்கும் என் கவசமாக இருக்கிறீர், நீர் நீதியுள்ள நடுவராக இருக்கிறீர்; நான் என் சித்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் வசுலா, உன் சித்தத்தை எப்போதும் எனக்கு ஒப்புக்கொடு; எனக்கு ஊழியம் செய், என் எழுது பலகையாக இருக்க மனதாயிரு, உன் கரத்தை நான் பயன்படுத்த என்னை அனுமதி; எனக்கு எதையும் மறுக்காதே, நான் உன்னில் செயல்படுவேன்; உன்மீது என் பிடியை இறுக்க என்னை அனுமதி; மிகப்பிரியமான ஆன்மாவே, நான் இல்லாமல் நீ எவ்வளவு பயனற்றவளாக இருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள்; நான் ஞானமாக இருக்கிறேன்; என் செய்தி, உன் மரணத்திற்குப் பிறகும் பலரால் வாசிக்கப்படும்; அன்பையும், விசுவாசத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும்படி, அது இந்த பூமியின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும்; என் குழந்தாய், என்னை நம்பு, நான் உன் ஆசிரியர், உன் மீட்பர், உன் சமாதானம், உன் சிருஷ்டிகர், அனைவரிலும் அதிகமாக உன்னை அன்பு செய்பவர்