இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் திரும்பி வருதல் திடீரென நிகழும் என்றும், விழிப்பாயிருந்து மனஸ்தாபப்பட்டு பரிசுத்த இருதயத்தோடு தம்மை எதிர்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். தம்மிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார். வசுலாவிடம், அவளுடைய பலவீனம் காந்தம் போல் தம்மை ஈர்க்கிறது என்கிறார்.

Show Notes

அத்தியாயம் 79: பலவீனமான நிலை எப்போதும் என்னை காந்தம் போல ஈர்க்கிறது - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் திரும்பி வருதல் திடீரென நிகழும் என்றும், விழிப்பாயிருந்து மனஸ்தாபப்பட்டு பரிசுத்த இருதயத்தோடு தம்மை எதிர்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். தம்மிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார். வசுலாவிடம், அவளுடைய பலவீனம் காந்தம் போல் தம்மை ஈர்க்கிறது என்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 10/10/1988 - என் திரும்பி வருதல் திடீரென நிகழும்
05:34 11/10/1988 - வனாந்தரத்திலும் நான் அருகில் இருக்கிறேன்
10:59 13/10/1988 - நித்தியத்திலிருந்தே நான் உன்னை நேசிக்கிறேன்
12:10 14/10/1988 - உன் பலத்தை மட்டுமே கேட்கிறேன்
13:59 15/10/1988 - பலவீனம் என்னை காந்தம் போல் ஈர்க்கிறது

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #பலவீனமும்காந்தமும் #இயேசுவின்திரும்புதல் #TrueLifeInGod79

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 79. அக்டோபர் 10, 1988 இயேசுவா? நான்தான்; ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. மகளே, நீ எனக்கு தந்து கொண்டிருக்கிற இந்த விசுவாசத்திற்காக நான் உன்னை நேசிக்கிறேன்; கவலைப்படாதே, என் மீது சாய்ந்து கொண்டு, என் இருதயம், உங்கள் எல்லோரையும் தேடுவதும், உங்களை நேசிப்பதும், ஆனால் பலரால் தண்டிக்கப்படுவதுமான இந்த இருதயம் சொல்வதைக் கேள்; மகளே, நான் என் பலத்தை உனக்குத் தரும்படி அடிக்கடி என்னிடம் ஜெபி; நான் எப்போதும் என் பலத்தை உனக்குத் தருவேன்; என் திரும்பி வருதலுக்கான ஜெபமாகிய இந்த ஜெபத்தை என்னோடு சேர்ந்து ஜெபி; இந்த வனாந்தரத்திலிருந்து நாங்கள் எழுப்பும் எங்கள் துயரமுள்ள கூக்குரல்களைக் கேட்டருளும்; எங்கள் தாகத்தை உணரும், எங்கள் மீது இரக்கமாயிரும், எங்களிடம் திரும்பி வாரும், வந்து சகல தீமையையும் துடைத்தகற்றி, அதன் இடத்தை அன்பால் நிரப்பும், ஆமென். இந்த ஜெபத்திற்கு, அன்பாகிய நான் உங்களிடம் அன்பாகவே திரும்பி வருவேன் என்று உங்களுக்குப் பதிலளிப்பதை நீங்கள் கேட்பீர்கள்; என் அன்புக்குரியவர்களே, இன்னும் கொஞ்ச காலத்திற்கு மட்டும் பொறுமையாய் இருங்கள், நான் உங்களிடம் திரும்பி வருவேன்; விழிப்பாய் இருங்கள், உங்களையே காத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் என் திரும்பி வருதல் திடீரென நிகழும்; ஆகவே, ஆயுத்தமாய் இருங்கள், மனஸ்தாபப்படுங்கள், உங்கள் ஆண்டவராகிய என்னை ஒரு பரிசுத்த இருதயத்தோடு எதிர்கொள்ளுங்கள், பூமியின் மீதுள்ள நிழல்கள் உங்களை அச்சுறுத்தாது; இருளின் நேரம் உங்களை பயங்கரத்திற்கு உள்ளாக்காது; இந்த ஆபத்தான அமைதியின் நேரத்தில் நீங்கள் மனக்குழப்பத்தையோ, கடும் வேதனையையோ உணர மாட்டீர்கள்; ஆகவே, நான் சொல்வதைக் கேளுங்கள், என் வார்த்தைகளைக் கேளுங்கள், இந்த இருளின் நேரம் என் படைப்பு முழுவதன் மீதும் இறங்குகிற இவ்வேளையில் அவை உங்களுக்கு ஆறுதலாய் இருக்கும்; இந்த வேளை உங்களிடமிருந்து இப்போது தொலைவில் இல்லை என்று நான் அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன்; அன்பாய் இருக்கிற நான் என்னை நேசிக்கிற அனைவரையும் என் அருகில் ஈர்த்துக் கொள்வேன், அவர்களுடைய அச்சத்தை நான் தணிப்பேன்; என் அன்பால் அவர்களை நிரப்பி, என் இதயத்தைக் கொண்டு அவர்களைத் தேற்றுவேன், அவர்கள் என்னில் தங்கள் புகழிடத்தைக் கண்டுகொள்வார்கள்; அந்தோ! தயாராக இல்லாதவர்களுக்கும், ஒருபோதும் என்னை நேசித்திராதவர்களுக்கும் என்ன நிகழும்! அவர்கள் தங்கள் சொந்தத் தீமையில் சாவார்கள், தங்கள் பாவத்தின் பாரத்தால் மூச்சடைந்தவர்களாக புழுதியில் கிடப்பார்கள்! ஏனெனில் அவர்கள் இரண்டாவது பறவை நாகத்தின், அதாவது கருப்பு மேலாடைகளை அணிகிற, ஒளிக்கு எதிராய் இருக்கிற பறவை நாகத்தின் உதவியுடன் என் புனிதப் பெயரைக் களங்கப்படுத்தி விட்டார்கள்; ஓ, படைப்பே! உணர்வற்ற மனங்களோடு கூடிய படைப்பே! குறிப்பு: இறைவன் மிகத் துயரமாய் இருப்பதாகவும், தாம் தண்டிக்க வேண்டும் என்பது பற்றி கிட்டத்தட்ட தயக்கம் உள்ளவராகவும் தோன்றினார். நான் உன்னைப் பார்த்து எவ்வளவு பரிதாபப்படுகிறேன்; ஒரே ஒரு கனிவுள்ள பார்வையை மட்டும் என் மீது வீசு, அப்போது நான் உன்னை விடுவிப்பேன்; உன் பிறப்பின் நேரத்திலிருந்து நீ கடவுளற்றவனாக இருந்ததை நான் அறிந்திருந்தேன்; இன்னமும் கூட உன் பாவங்களை மறக்கவும், உன்னோடு காரியங்களைப் பேசவும் நான் மனதாய் இருக்கிறேன்; உன் தொப்புள் கொடி இன்னும் என்னோடு இணைந்துள்ளது; நீ தவறாக வழிநடத்தப்பட்டாய் என்றும், நீ பாவம் செய்வதை நிறுத்தி விடுவாய் என்றும் என்னிடம் சொல்வாய் என்றால், இதைப்பற்றி மட்டும் நீ என்னிடம் சொல்வாய் என்றால், அன்பாய் இருக்கிற நான் உன்னை மீட்பேன்; என் குழந்தாய், என் மன்னிப்புக்கு நான் முன்னதாகவே உத்தரவாதமளிக்கிறேன்; இனியும் என் கோபத்தைத் தூண்டாதே, என்னிடம் திரும்பி வா, நான் உண்மையாகவே என் சமாதானத்தை உனக்குத் தருவேன்; வா, மகளே, உன் கரத்தைப் பயன்படுத்த என்னை அனுமதித்ததற்காக நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்! ஓ, மகளே, உன்னில் நான் மிகப் பிரியமாய் இருக்கிறேன், என்னை எப்போதும் அழை, உன் அன்பால் என்னை வருடி சீராட்டு, என்னை மகிழ்வி; என் வேதனைகளைத் தணி, என்னை நேசிப்பதன் மூலம் என் கோபத்தை அமர்த்து; மலரே, உன் ஒன்றுமில்லாமையின் காரணமாக என் மண்டபத்தில் இருக்க நான் உன்னை அனுமதிப்பேன், ஆகவே, ஒன்றுமில்லாமையாகவே நிலைத்திரு; நான் என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன்; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே. என் பிரசன்னம் பரிசுத்தமானது; அக்டோபர் 11, 1988 சமாதானம் உன்னோடு இருப்பதாக; இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. இந்த வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்தே என் திருச்சபை சிதைந்து போயிருக்கிறது என்றும், இந்தச் சிறையினுள் விரியன் பாம்புகள் கூடு கட்டியுள்ளன, அவை அதன் உள்ளாளங்களுக்குள் தங்கள் வீடுகளை அமைத்துள்ளன என்றும் நான் உனக்குச் சொல்லி வந்திருக்கிறேன்; ஆ, வசுலா!! குறிப்பு: இறைவன் துன்பமும் வேதனையும் நிரம்பியவராக உரத்தக் கூக்குரலிட்டு அழைத்தார். நான் எப்படித் துன்புறுகிறேன்... நான் வந்து, என் திருவருட்சாதனங்கள் அனைத்திலும் மிகச் சிறந்ததின் மீது முழுவதுமாக ஊர்ந்து கொண்டிருக்கிற இந்தப் பாம்பின் கூடுகளைக் கலைத்து, மீண்டும் என் திருச்சபையிலிருந்து அவைகளை வெளியே விரட்டி அடிப்பேன்... என் குழந்தாய், இந்த நாசமாக்குகிற வனாந்தரத்தில் வாழ்வதும், அதனால் சூழப்பட்டிருப்பதும் கடினமானதாகவும், கடும் அச்சந்தருவதாகவும் இருக்கிறது, என்றாலும், நான் என்னை நேசிக்கிறவர்களும், என் திருப்பெயரை அன்போடு வழிபடுபவர்களுமாகிய அனைவருக்கும் அருகில் இருக்கிறேன்; வழிபடுபவர்களுமாகிய அனைவருக்கும் அருகில் இருக்கிறேன்; என் விண்ணக வேலைகளை மிதித்துச் செல்கிற அனைவருக்கும் நானே அளவற்ற செல்வமாக இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்; என் படைப்பு கலகத்திற்குள் விழுவதை நான் காணும்போதெல்லாம், நான் எப்போதும் என் வார்த்தைகளைச் சுமந்திருக்கிற தூதர்களை அனுப்புகிறேன்; ஏனெனில் கலகம் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற நிலத்தைப் பாலைவனங்களாக மாற்றி விடுகிறது; உங்கள் முன்னோர் கலகம் செய்தார்கள் என்றாலும், நான் என்னால் தெரிந்து கொள்ளப்பட்ட சம்மணசுக்களிடம் பேசி, என் செய்திகளை அவர்களுக்குத் தருகிறேன் என்பதை சந்தேகிக்கிற உங்கள் தலைமுறையின் சந்தேகங்களைப் போல, அவர்களுடைய சந்தேகங்கள் ஒருபோதும் கடுமையானவையாக இருந்ததில்லை; இன்று, என் குழந்தாய், என்னில் விசுவாசம் கொண்டிருப்பதாக பெருமை அடித்துக் கொள்பவர்களும், ஆனால் உங்கள் நாட்களில் நான் உங்களுக்குத் தருவதும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருவதுமான என் தெய்வீக வேலைகள் அனைத்தையும் ஏற்க மறுப்பவர்களுமாகிய தேவ ஊழியர்களை என் திருச்சபையில் நான் கொண்டிருக்கிறேன்! அவர்களுடைய வறட்சி அவர்களைத் தண்டனைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கிறது, தீர்வையின் நாளில், நான் அவர்களைக் கடுமையாக நடுத்தீர்ப்பேன்! இந்த மக்கள் வேதாகமங்களிடம் திரும்பிச் சென்று, என் ஆவி எப்படி வேலை செய்கிறது என்றும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு நான் தரும் கொடைகளை நான் எப்படி ஆசீர்வதிக்கிறேன் என்பதையும் அவர்கள் வாசித்தறிய வேண்டும்; அவை அனைத்தும் என்னிடமிருந்தே வருகின்றன; குறிப்பு: இயேசு ஒன்று கொரிந்தியர் 12 ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனம் முதல் 11 ஆம் வசனம் வரை உள்ள வேதாகம பகுதியைக் குறித்துக் கொள்ளும்படி என்னிடம் கேட்டார். என் குழந்தாய், நீயும் நானும், நானும் நீயும், இந்த வனாந்தரத்தைப் பகுத்தறிவு வாதத்தாலும், விசுவாசக் குறைவாலும், அன்பின்மையாலும், உடல் இச்சையாலும், உலக இன்பப் பற்றாலும், வீண் பெருமையாலும், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிற அனைத்தின் மீதமுள்ள எரிச்சலுள்ள வெறுப்பாலும் விளைந்துள்ள இந்த ஆபத்தான வனாந்தரத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்; கேட்க மறுக்கும் அவர்களுடைய பிடிவாத குணம் அவர்களைத் தண்டனை தீர்ப்பிடுகிறது; என் பரிசுத்த ஆவியின் வேலைகளை மறுதலிக்கும் எவனும் என்னையே மறுதலிக்கிறான்; ஏனெனில் பரிசுத்த ஆவியானவரும், நானும் ஒன்றாய் ஒரே பொருளாய் இருக்கிறோம்!... குறிப்பு: தேவ சாராம்சத்தின் ஒருமைப்பாட்டில். இந்த மக்கள் இந்தப் பாலைவனத்தை வளர்க்கிறார்கள், அதில் எதுவுமே வளராதிருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்; அவர்கள் ஒரு மலரைக் கண்டால், ஒன்றில் அதை மிதித்து நசுக்குகிறார்கள், அல்லது அதை வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார்கள், அது வாடிப்போய் விடும்படி அதற்கு அவர்கள் ஒருபோதும் நீர் ஊற்றுவதில்லை, இவ்வாறு அதை அழித்து விடுகிறார்கள்... என் நீதியின் கிண்ணம் விளிம்பு வரை நிரம்பிவிட்டது, ஏற்கனவே அவர்கள் என் நீதியின் முதல் துளிகள் தங்கள் மீது இருப்பதை உணர்கிறார்கள்; இந்த மக்களிடமும், குறிப்பாக எனக்கு ஊழியம் செய்தலும், இன்னும் பரிசுத்த ஆவியின் வேலைகளை மறுப்பவர்களிடமும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் ஒளிவிக்கப்படுமாறும், இன்னும் அதிக பலமான விசுவாசத்திற்காகவும் ஜெபிக்கும்படியாக மட்டுமே; என் குழந்தாய், வா; என் பரிசுத்தப் பிரசன்னத்தை நினைவு கூறுவதன் மூலம் எப்போதும் என்னை மகிழ்வி; நாங்கள் நாம், ஆண்டவரே, நான் உன்னை நேசிக்கிறேன்; ஆம், நாங்கள், நாம்; நாங்கள், நாம்; ஆம், புனித அன்னையே. அக்டோபர் 13, 1988 என் இறைவனா, நான்தான்; நித்தியத்திலிருந்தே நான் உன்னை நேசித்து வந்திருக்கிறேன்; நித்தியத்திலிருந்தே நீ என்னை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்பி வந்திருக்கிறேன்; நான் அன்பின் ஆவியானவராக இருக்கிறேன்; என் அன்பு உன்னில் பிரதிபலிக்கும்படி உன் ஆன்மாவை எனக்குத் திறப்பாக வைத்திரு, எனக்கு எதிரே இருக்கிற ஒரு கண்ணாடியைப் போல் இரு; என் வசுலா, நான் கடுமையுள்ள ஒரு கடவுள் அல்ல, நான் மென்மையானவர், என்னை நிந்தித்து வெறுப்பவர்களையும் கூட நேசிக்கிறவர்; என் மலரே, உன்மீது நான் எவ்வளவு அதிக அன்பு கொண்டிருக்கிறேன் என்று நீ புரிந்து கொள்ள தொடங்கியதிலிருந்து, இந்த அன்பின் குறைபாட்டால் அன்பு எப்படித் துன்புறுகிறது என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஆம், ஆண்டவரே, நான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன். அப்படியானால், என்னிடம் வந்து என்னைத் தேற்று; என்னைக் கைவிடாதே, உன்னால் எனக்கு ஆறுதல் தர முடியும்; ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு; அக்டோபர் 14, 1988 ஆண்டவரே, உன் பலத்தை மட்டுமே நான் உம்மிடம் கேட்கிறேன்; உம்மை அதிகமாகவும், நீர் விரும்பும் விதமாகவும் நேசிக்க எனக்கு அதிக விசுவாசம் தேவை; நீர் எனக்குத் தந்துள்ள பணியை நிறைவேற்றவும், அதன் மூலம் உமது திருப்பெயரை மீண்டும் மகிமைப்படுத்தவும், எனக்கு நீடித்து நிலைத்தலும், நம்பிக்கையும் தேவை. என் ஆவல்களுக்காகவும், என் மகிமைகளுக்காகவும், உன் ஆன்மாவின் இன்னும் மேலான உத்தமத்தனத்திற்காகவும் கூட, நான் இந்தக் காரியங்களை எல்லாம் உனக்குத் தருவேன்; ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நீ என்னோடு பகிர்ந்து கொள்கிற இந்த வேலைக்காக, பசாசு உன்னை எவ்வளவு வெறுக்கிறது என்பதைப் புரிந்துகொள்; நீ உன் அன்பைக் கொண்டு என்னை மகிமைப்படுத்துகிறாய், ஆன்மாக்களை என்னிடம் இருப்பதன் மூலம், நீ என்னை மகிமைப்படுத்துகிறாய்; முன்பு ஒருமுறை அவனால் 'புழு' என்று அழைக்கப்பட்ட நீ, என்னை மகிமைப்படுத்திக் கொண்டும், குறிப்பு: மார்ச் 7, 1987 ஆம் தேதியின் செய்தியை காண்க. அவனை நோகடித்துக் கொண்டும் இருக்கிறாய், ஏனெனில், நீ எவ்வளவு அதிகம் சிறியவளாகவும், முக்கியத்துவமற்றவளாகவும் இருக்கிறாயோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் நோகடிக்கப்பட்டவன் ஆகிறான்; அவன் எவ்வளவு ஆடம்பரம் உள்ளவன் என்பதும், எவ்வளவு வீணானவன் என்பதும் உனக்கு நினைவிருக்கிறதா?! ஆம், என் ஆண்டவரே, நான் உன்னை நேசிக்கிறேன், எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறேன்; எப்போதும் என்னிடம் வா, நான் என் சமாதானத்தை ஒருபோதும் உனக்கு மறுக்க மாட்டேன், அன்பு உன்னை நேசிக்கிறது; நம் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக. அக்டோபர் 15, 1988 ஆண்டவரா? நான்தான்; நித்தியத்திலிருந்தே உன்னுடையதைப் போன்ற ஒரு பலவீனத்தை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை, அது திகைப்பூட்டுவதாக இருக்கிறது... குறிப்பு: இதற்குக் காரணம் மீண்டும் சந்தேகங்களின் அச்சம் தரும் அலைதான். இங்கு நான் கடவுளை பேச்சற்றவளாக செய்திருந்தேன். குழந்தாய், உனக்கு நான் தேவை, உன் பலவீனம் அளவற்ற பலமாய் இருக்கிற என்னை ஈர்க்கிறது, உன் பலவீனம் என்னை வசீகரிக்கிறது, பலவீனம் எப்போதும் காந்தத்தைப் போல் என்னை ஈர்க்கிறது; என் இதயத் துடிப்புகளைக் கேள்; நான் இயேசு, என் புனித இதயம் உன் இல்லமாக இருக்கிறது; மகளே, என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உனக்கு ஓர் அன்பின் பாடலாக இருக்கிறது; நான் இந்த உலகத்தோடு உன்னைப் பிணைத்திருந்த அடிமைத்தனத்தின் சங்கிலிகளை அவிழ்த்துவிட்டேன், இப்போது, நித்தியத்திலிருந்தே நான் விரும்பியது போல, உலகப் பற்று இல்லாதவளாக நிலைத்திரு, இத்தகைய பற்றின்மையை ஒவ்வொரு ஆன்மாவிடமிருந்தும் நான் விரும்புகிறேன்; உன் இரட்சகராகிய என்னைத் தவிர வேறு யார் இதைச் செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்; பாவ அடிமைத்தனத்திலிருந்து உன்னை மீட்டு இரட்சித்தவர் நானே, அதனால்தான் பசாசுகள் உன்னிடம் வன்மையுள்ளவையாக இருக்கின்றன, இந்த வாரத்தில் அவற்றின் நெருக்கமான பிரசன்னத்தை நீ உணர்ந்திருக்கிறாய்; உன்னை எனக்கு அர்ப்பணி, ஏனெனில், உன் அர்ப்பணமும், பிரமாணிக்கமும் என் புனித இதயத்தை, அன்பிற்காகவும், பிரமாணிக்கத்திற்காகவும் தாகமாய் இருக்கிற இந்த இதயத்தை, மகிழ்விக்கின்றன; அந்தக் குகையில் எங்களிடம் மேலேறி வா, அங்கே எங்களை மன்றாடு; குறிப்பு: லோன்ச் போன் எர்மிதாஜுக்கு மேலே உள்ள ஒரு குகை. சரி, இயேசுவே. சரி, புனித அன்னையே. என் புனித இதயத்தின் வசுலா, என்னால் நேசிக்கப்படுவதை உணர், உன் பரிசுத்த அன்னையால் நேசிக்கப்படுவதை உணர், இன்னும் சற்று அதிக காலம் மட்டும் உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; நாங்கள், நாம்; ஆம், ஆண்டவரே. ஆண்டவரா? நான்தான்; நான் உம்மீது கொண்டுள்ள இந்த அன்பும், உம்மை உணர எனக்குள்ள ஆவல் மிக்க ஆசையும், உம்மை இடையறாது என்னோடு கொண்டிருக்க எனக்குள்ள விருப்பமும், இன்னும் அதிகமாக உம்மை பெற்றுக்கொள்ள எப்போதும் நான் தாகமாய் இருப்பதும், உம்மைப் பற்றி மட்டுமே பகலும் இரவும் நினைத்துக் கொண்டிருப்பதும், சுருங்கச் சொல்வதானால், உமக்காக வாழ்வதும், சில சமயங்களில் என் ஊனக் கண்களால் உம்மைக் காண விரும்புவதும், இவை இன்னும் உம்மோடு இல்லாத உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுடையதைப் போல, உம்மைக் காண வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகளா? இவை குறிப்பு: வசுலாவின் உணர்வுகள். அவர்கள் குறிப்பு: உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள். அவர்கள் கொண்டுள்ள உணர்வுக்கு மிக அருகில் இருக்கின்றன; இருந்தாலும், அவர்களுடையது, அதிக ஆழமுள்ள, அதிகத் தெளிவான உணர்வுகளோடு இருக்கிறது; குறிப்பு: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் உணர்வுகள் அதிக ஆழமானவை. அப்படியானால், அது நிஜமாகவே பயங்கரமானதாக இருக்க வேண்டும்! ஆம், அவர்கள் மிக அதிகமாகத் துன்பப்படுகிறார்கள்; தாங்கள் பூமியின் மீது இருந்தபோது, அவர்கள் என்னை ஒருபோதும் நேசித்திருந்ததில்லை என்றால், அப்போது அவர்கள் என்னை நேசிக்கிற உத்தரிக்க ஸ்தலத்தில் கற்றுக் கொள்கிறார்கள், அங்கே அவர்கள் என் முகத்தைப் பார்ப்பதில்லை, இந்த ஆசையால் அவர்கள் பற்றி எரிகிறார்கள்; ஆம், என் ஆண்டவரே, உமக்கு நன்றி, என் ஆண்டவரே.