இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவன் தம் பிள்ளைகளை நோக்கிக் குனிந்து வந்து, "ஆண்டவர் எங்களை மறந்துவிட்டார் என்று சொல்லாதீர்கள்" என்கிறார். தம்மிடம் வந்து பருகவும் உண்ணவும் அனைவரையும் அழைக்கிறார். அன்னையின் செய்தி இயேசுவை இதயத்தில் வைத்துக்கொண்டு, அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கச் சொல்கிறது.

Show Notes

அத்தியாயம் 101: "இறைவன் எங்களை மறந்துவிட்டார்" என்று சொல்லாதீர்கள் - இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவன் தம் பிள்ளைகளை நோக்கிக் குனிந்து வந்து, "ஆண்டவர் எங்களை மறந்துவிட்டார் என்று சொல்லாதீர்கள்" என்கிறார். தம்மிடம் வந்து பருகவும் உண்ணவும் அனைவரையும் அழைக்கிறார். அன்னையின் செய்தி இயேசுவை இதயத்தில் வைத்துக்கொண்டு, அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கச் சொல்கிறது.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 20/09/1989 - ஆண்டவர் எங்களை மறந்துவிட்டார் என்று சொல்லாதீர
16:09 22/09/1989 - நம் பரிசுத்த அன்னையின் செய்தி

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #ஆண்டவர்மறக்கவில்லை #உயிருள்ளதண்ணீர் #அன்னையின்செய்தி

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 101. செப்டம்பர் 20, 1989. என் ஆண்டவரும் இரட்சகருமானவரா? நான்தான். நான் என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன், என் ரசூலா. நான் சொல்வதைக் கேட்டு எழுது. நான் உன்னை என் அருகில் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். நீ தயாராய் இருக்கிறாயா? ஒரு குழந்தை தன் தந்தையை நெருங்கி வருவது போல் என்னிடம் வா. அன்புக்குரியவர்களே, உங்கள் இறைவனாகிய என்னை மிகுந்த தயவிரக்கமுள்ள பரிசுத்த தோழனாக என்னைப் பாருங்கள். நான் பரலோகங்களின் மகிமையில் என் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறேன் என்றாலும், அதே சமயத்தில் நீங்கள் அனைவரும் என்னை உணரவும், நான் சொல்வதைக் கேட்கவும், என்னைப் புரிந்துகொள்ளவும், இதன் மூலம் உங்கள் கடவுளாகிய என்னை அறிந்துகொள்ளவும் நான் என் தெய்வீகத்தில் பூமியை நோக்கி இவ்வளவு தூரம் குனிந்து வருகிறேன். ஆம், நான் உங்கள் ஆன்மாவை என்னிடம் உயர்த்தவும், என் ஒளியில் உங்களை உயிர்ப்பிக்கவும், என் சிங்காசனத்திலிருந்து உங்களை நோக்கி இவ்வளவு தூரம் குனிகிறேன். அன்புக்குரியவர்களே, உங்களிடம் குறைவுபடுகிற அனைத்தையும் மிக அபரிதமாக உங்களுக்குத் தர விரும்புபவருமான உங்கள் மணவாளராக என்னைப் பாருங்கள். உங்கள் துக்கப் புலம்பலையும், உங்கள் நாடுகளை மூடியுள்ள அடக்கத் துயில்களையும் நான் அகற்றுவேன். உங்கள் கன்னங்களிலிருந்து உங்கள் கண்ணீர்களை நான் துடைத்து உங்களைத் தேற்றுவேன். ஒரு நித்திய அன்பைக் கொண்டு நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். மிகுந்த தயவன்பின் காரணமாக நான் உங்கள் பழைய நிலையில் உங்களை மீண்டும் ஸ்தாபிப்பேன். உங்கள் மணவாளராகிய நான் என்னிடமுள்ள எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். இங்கே நீங்கள் விரும்பினால், உங்களை அலங்கரிப்பதற்கு என்னுடைய அனைத்திலும் விளையேறப்பெற்ற அணிகலன்களை, என் சிலுவையை நான் இங்கே வைத்திருக்கிறேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். என் சமாதானம், அன்பு மற்றும் நீதியின் சிலுவையை என்னோடு பகிர்ந்து கொள்ள நீங்கள் மனதாய் இருக்கிறீர்களா? ஆயத்தமாய் இருக்கிறீர்களா? உங்கள் மீட்பராகிய என்னைப் பாருங்கள். என்னோடு இணைந்து கொள்ளும் அனைவரையும் நான் காப்பாற்றுகிறேன். என்னை மன்றாடும் அனைவருக்கும் நான் பதிலளிக்கிறேன். உங்கள் அனைவரையும் நான் தயவிரக்கத்தோடு பார்க்கிறேன். ஏனெனில் நீங்கள் எல்லோரும் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றும், சோதிப்பவனால் நீங்கள் எவ்வளவு எளிதாக சோதிக்கப்படுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். என் அளவற்ற அன்பின் காரணமாக, மிகத் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள இந்த அன்பினால் நான் உங்கள் அனைவரையும் மீட்டு இரட்சித்திருக்கிறேன். நானே அன்பு. என்னில் வாழும் எவனும் உண்மையில் வாழ்கிறான். நான் வாழ்வின் மரத்தின் வேரும், வாழ்வின் ஆதாரமுமாக இருக்கிறேன். வாழ்வின் மரத்தின் கனியும், என் நித்திய கிணறுகளிலிருந்து எடுத்த உயிருள்ள தண்ணீரும் என்னிடம் உண்டு. ஆகவே என்னிடம் வாருங்கள். வந்து திருப்தியடையும் வரை உண்டு பருகுங்கள். வந்து உண்ணுங்கள். தாகமாய் இருக்கிற நீங்கள் அனைவரும் என் உயிருள்ள தண்ணீரிலிருந்து பருகுங்கள். நான் ஒருபோதும் உங்களை மறுதளிக்க மாட்டேன். இறைவனாகிய நான் உண்மையான உணவை, உங்கள் வறுமைப்பட்ட ஆத்துமம் உயிரோடு இருக்கும்படி உங்களில் எப்போதும் நிலைத்திருக்கும் உணவை உங்களுக்கு பழக்கப்படுத்துவேன். உங்கள் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. தீயாய்ப் பொசுக்கும் காற்றுகள் உங்கள் தொண்டைகளைக் காய்ந்து போகச் செய்துவிட்டன. ஆனால் உங்கள் மீட்பராகிய நான் மேலிருந்து இந்த எல்லா அக்கிரமங்களையும் பார்க்கிறேன். ஆகவே ஆண்டவர் எங்களை மறந்துவிட்டார் என்று சொல்லாதீர்கள். நான் முழு பிரமாணிக்கமுள்ளவர். மகிழ்விக்கப்பட்டுள்ள உங்களுக்கான என் அன்பு உங்களை இரட்சிக்கிறது. நான் ஒருபோதும் என் திருமுகத்தை உங்களிடமிருந்து திருப்பிக் கொள்ள மாட்டேன். ஓன் ஆக்லோ, ஓம் கா, எல் நேயோ ரிமா. ரிமா காரா, நேத்ராஹா. ஊனு ஆமென் ரிமா. குறிப்பு: நான் திடீரென எனக்குத் தெரியாத ஒரு மொழியைக் கேட்டேன். நான் மனிதத்தன்மை என்று எடுத்துக் கொள்கிறேன். எழுது: நான் இறந்தவர்களைக் கொண்ட உங்கள் நாடுகளில் சமாதானத்தையும் அன்பையும் பரப்புவேன். என் சமாதானத்தையும் அன்பையும் சுற்றுப்புறமெங்கும் அன்பில்லாமல் இருக்கிற எல்லா நாடுகளிலும் பரப்ப நான் எண்ணியிருக்கிறேன். முழு அநீதியையும் வெளித்தள்ளவும் நான் எண்ணியிருக்கிறேன். இந்த இறந்த யுகம் உயிர்ப்பிக்கப்பட்டு, நான் அதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிற புதிய பூமிக்குள் என்னைப் பின்தொடரும். புதிய வானகங்களின் கீழ் அது என்னை மகிமைப்படுத்தும். இரவு பகல் முழுவதும் அது என்னைப் போற்றித் துதிக்கும். என் அருளின் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக அடுத்தடுத்து எப்படி திராட்சைத் தோட்டங்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார், அவற்றை எப்படி மென்மையாகவும் மிக அதிக அன்போடும் ஒவ்வொரு நாட்டிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார் என்றும் நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? உங்கள் பரிசுத்த மாதாவும் நானும் எப்படி உங்கள் மீது எங்கள் கரங்களை விரித்து, எங்கள் ஆசீர்வாதங்களால் உங்களை மூடியிருக்கிறோம் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? நாங்கள் உங்களுக்காக திராட்சைத் தோட்டங்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறோம். அவற்றை நாங்கள் பெருக செய்வோம். அவை ஒரு பெரும் திரளானக் கூட்டத்திற்கு உணவளிக்கப் போதுமான கனிகளை விளைவிக்கும். என் அருளின் ஆவி அழகிய கொடிகளை வீசுகிற ஒரு திராட்சைச் செடியைப் போல் இருக்கிறது. என் மலர்கள் அன்பு மற்றும் சமாதானத்தின் கனிகளைத் தாங்குகின்றன. என்னை ஆசிக்கிற நீங்கள் என்னை அணுகி, உங்களுக்குத் திருப்திப்படும் வரை என் கனிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் என் நினைவுகள் தேனினும் இனிமையானவை. என்னை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வது தேன் அடையையும் விட இனிமையானது. என்னை உண்பவர்கள் இன்னும் பசியாய் இருப்பார்கள். என்னைப் பருகுபவர்கள் இன்னும் தாகம் கொள்வார்கள். நான் சொல்வதைக் கேட்பவர்கள் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாக மாட்டார்கள். என்னைக் கொண்டு தங்கள் காரியங்களைச் செய்பவர்கள் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டார்கள். குறிப்பு: சீராக் ஆகமம் 24ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 17 தொடங்கி 22 வரை. வரவிருக்கும் நாட்களில் மொட்டுவிட்டு மலர்ந்து உலகம் முழுவதையும் கனிகளால் நிரப்புகிற கொடிகளை வெளியிடுவேன் என்று நான் சொல்லவில்லையா? இந்தக் கனிகள் என் ஒளியால் அதிகரிக்கும். மோட்சம் உங்கள் மீது தனது பணியைப் பொழிந்து, உங்கள் வறண்ட தொண்டைகளுக்கு புத்துணர்வு தரும். நான் என் மக்கள் மீது இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பொழிந்து கொண்டிருக்கிறேன். என் சிறியவர்களே, என்னால் நேசிக்கப்படுவதை உணருங்கள். அன்பு உங்களை அன்பு செய்கிறது. அது என் அன்பின் பெருமூச்சை உங்கள் நெற்றிகளில் வீசி, உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறது. ஒன்றாயிருங்கள். குறிப்பு: வாழ்வின் மரத்தின் ஓர் அந்தரங்கத் தோற்றம். என் ஆண்டவரே, வாழ்வின் மரத்தின் வேரும், தன்னிலே அன்புமானவரே, உம்முடைய கனிகளிலிருந்து எங்களுக்கு ஒரு நித்திய வாழ்வைத் தந்து கொண்டிருக்கிற நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஒருபோதும் வாடாத அல்லது காயாத உம் இலைகள் தூய வெண்பொன்னால் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து ஓர் உயிரோட்டமுள்ள ஒளி பாய்ந்து வருகிறது. நான் உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன். உம்மை விசுவசிக்கிறேன். உம்மை நேசிக்கிறேன். தயவுசெய்து உம்மை ஆராதியாதவர்களையும், நம்பாதவர்களையும், விசுவசியாதவர்களையும், நேசியாதவர்களையும் மன்னித்தருளும். இம்மானுவேலே, எங்களைப் பராமரித்தருளும். நான் உம்மை, நான் உம்மை வாழ்த்துகிறேன். இரவுகளில் என் ஆலோசனையாளராய் இருப்பவரும், முடிவில்லாத ஜெபங்களால் என்னை நிரப்புபவரும், என் மீதிருந்து ஜெபித்துக் கொண்டிருப்பவருமாகிய உம்மை நான் வாழ்த்துகிறேன். நீர் என் ஆன்மாவைக் கைவிட மாட்டீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில் நீர் உமது வாழ்வின் பாதையை எங்களுக்கு வெளிப்படுத்துகிறீர். எங்கள் கை உம் கரத்தில் உள்ளது. உம் அன்பில் எங்களை இரட்சியும். ஆண்டவரே, புதிய வானகங்களையும், புதிய வையகத்தையும் காண முடியும் என்ற எங்கள் நம்பிக்கைக்கு நீரே ஆதாரமாக இருக்கிறீர். நானே வாழ்வின் மரத்தின் வேராக இருக்கிறேன். என்னிடமிருந்து நித்திய வாழ்வு பாய்ந்து வருகிறது. மலரே, வேதாகமத்தை வாசி. ஒரு குறிப்பின்றி நான் தன்னிச்சையாக பரிசுத்த வேதாகமத்தைத் திறக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். அப்போது நான் வாசிக்க வேண்டுமென அவர் விரும்பும் பகுதியையே நான் திறப்பேன். நான் இசையாஸ் 40ஆம் அதிகாரம், இறைவார்த்தை 9ஐ திறக்கிறேன். இதை வாசித்துவிட்டு எழுது: சீயோனுக்கு நற்செய்தி அறிவிக்கும் தூதனே, நீ உயர்ந்த மலை மீது ஏறு. ஜெருசலேமுக்கு நற்செய்தி அறிவிக்கும் நீ உரத்த குரலில் கூக்குரலிடு. அச்சமின்றி கூக்குரலிடு. யூதாவின் நகரங்களுக்கு, இதோ உங்கள் இறைவன் என்று சொல். உங்கள் புதிய ஜெருசலேம் அண்மையில் உள்ளது. கடவுளாகிய நான் பிணங்களின் மீது கால் இடறியபடி இந்த யுகத்தில் இறங்கி வருகிறேன். நான் பயந்து கொண்டிருந்த அனைத்தும் உண்மையாகிவிட்டது. நான் இறங்கி வந்தும் விசுவாசத்தையோ, நம்பிக்கையையோ, அன்பையோ காணவில்லை. என் பசும்புல் வெளிகளில் புல் மேய்ந்து கொண்டிருக்கும்படி நான் விட்டுச் சென்ற என் ஆட்டுக்குட்டிகள் பட்டினிக்கிடந்து மெலிந்து புலம்புதலுக்குரியவையாக இருப்பதை நான் காண்கிறேன். இடிபாடுகளுக்குள் வாழ்ந்து கொண்டு அவை ஏதாவது தங்கும் இடமும், உணவும் கிடைக்குமா என்று தேடுகின்றன. ஆனால் எதுவும் அவற்றுக்கு கிடைப்பதில்லை. ஒரு ரொட்டித் துண்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவை ஒவ்வொரு கல்லாக நகர்த்திப் பார்க்கின்றன. அல்லது தாங்கள் விதைக்க ஒரு விதை கிடைக்குமா என்று பார்க்கின்றன. ஆனால் தங்களைக் கொட்டி நஞ்சால் தங்களை நிரப்பத் தயாராக இருக்கிற தேல்களைத் தான் அவை காண்கின்றன. அவை ஊரூராகத் தேடினாலும் முன்பு ஒரு பெரிய நகரமாய் இருந்ததன் எச்சங்களை மட்டும்தான் காண்கின்றன. ஆம், நான் ஜெருசலேமைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு சிலரே நான் சொல்வதைக் கேட்கத் தயாராய் இருக்கிறார்கள். நான் என் ஆயர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறேன். ஆனால் மிகச் சிலர் மட்டுமே என் குரலைக் கேட்கிறார்கள். அவர்கள் செத்த வார்த்தைகளால் நிரம்பியிருப்பதைக் கண்டு நான் மூச்சுத்திணறுகிறேன். கழுத்து நெறிக்கப்படுகிறேன். நான் சொல்வதைக் கேள்: மகளே, நான் நீதிக்காக உழைக்கும்படி உன்னை அழைத்திருக்கிறேன். நான் உன்னைக் கைப்பிடித்து எடுத்து நீ சாட்சியாய் இருக்கும்படியாக உன்னை உருவாக்கினேன். நான் உனக்கு உண்மையைக் காட்டியுள்ளேன். நீ பாறையாய் இருக்கிறாய். இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாசல்கள் அதன் மீது வெற்றிக்கொள்ளா. வானகத்தின் திறவுகோள்களை நான் உனக்குத் தருவேன். மன்னகத்தில் நீ எதைக் கட்டுவாயோ அது விண்ணகத்திலும் கட்டப்பட்டிருக்கும். மன்னகத்தில் நீ எதைக் கட்டவிழ்ப்பாயோ அது மன்னகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். குறிப்பு: மத்தேயு 16ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 18 மற்றும் 19. இன்று நான் யாரிடம் ஒருகாலத்தில் சொன்னேனோ அந்த ராயப்பரின் ஆசனத்தில் அமர நான் யாரைத் தேர்ந்தெடுத்திருந்தேன் என்பதை உன் கண்கள் காணும்படி அவற்றை மூடியிருந்த திரையை நான் அகற்றினேன். நானே இவருக்கு இந்த அதிகாரத்தைத் தந்திருந்தேன். நீங்களோ அவரைத் துரத்திவிட முயல்கிறீர்கள். அவருடைய ஆயனுக்குரிய கோளைத் திருடிவிட்டு அதன் மூலம் பொய்மை மற்றும் துர்க்குணத்தின் செங்கோலைக் கொண்டு நீங்களே அரசாளலாம் என்று எண்ணுகிறீர்கள். ராயப்பா, என் ஆட்டுக்குட்டிகளின் ராயப்பா, என் அன்புக்குரிய மேய்ப்பனே, இந்த நன்றியற்ற, பிரமாணிக்கமற்ற தலைமுறைக்காக உன் இதயம் எப்படி கிளிபட்டு ரத்தத்தை ஆறாக சிந்துகிறது என்பதை நான் அறிவேன். அவர்கள் எப்படி உன் கண்களைக் கண்ணீர் ஊற்றுகளாக மாற்றிவிட்டார்கள் என்பதை நான் அறிவேன். உன் எத்தனை சகோதரர்கள் உன்னிடமிருந்து திரும்பிக் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். என் அன்புக்குரியவனே, ஒன்றும் அறியாதவர்களும் ஒன்றையும் உணராதவர்களுமாகிய இந்த ஆயர்கள் எல்லோரும் தங்கள் சொந்த பாதையில் போகிறார்கள். ஒவ்வொருவரும் தன் சொந்த விருப்பத்தின்படி நடந்து ஞானத்திற்குப் பதிலாக மடமைக்கும், தரித்திரத்திற்குப் பதிலாக சரீர இச்சைக்கும், கீழ்படிதலுக்குப் பதிலாக கீழ்படியாமைக்கும் ஊழியம் செய்கிறார்கள். என் சிலுவையிலிருந்து நான் உலகத்தில் வசிப்போர் அனைவரையும் உற்றுநோக்குகிறேன். பல நாடுகளை நிரப்பியுள்ள மக்களே, நான் உங்களிடம் சொல்கிறேன், விரைவில் அந்த நேரம் உங்களோடு இருக்கும். எனக்குரிய அந்தக் காலம் வந்துவிட்டது. பிரமாணிக்கமற்ற ஆயர்களே, பிரமாணிக்கமின்மையால் எனக்கு எதிராகப் பாவம் செய்யும் ஆயர்களே, சமாதானமே இல்லாதபோது சமாதானம் என்று கூக்குரலிடுபவர்களே, நீங்கள் உங்கள் இரவுகளை அழுதபடி கழிப்பதற்கு முன் இன்னும் அதிக காலம் செல்லாது. வேறொரு திசையில் விலகிச் சென்றுவிட்ட நீங்கள் அனைவரும் ராயப்பரிடம் திரும்புங்கள். எனக்கு ஊழியம் செய்யுங்கள். ஏன் அசுத்தத்தனத்திற்கு ஊழியம் செய்கிறீர்களா? என்னுடையவர்களாக இருங்கள். கழகக்காரனுடையவர்களாக இராதீர்கள். ஏன் அந்தக் கழகக்காரனுக்கு ஊழியம் செய்ய இவ்வளவு விருப்பமுள்ளவராக இருக்கிறீர்கள்? அந்நியர்களும் கூட, இவர்களும் கூட என் குரலைக் கேட்டு என் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு விட்டார்கள். என் கொள்கைகள் பரிசுத்தமானவை. நான் முழு அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் என்றென்றைக்கும் எக்காலத்திற்கும் பரிசுத்தர்களாக நிலைத்திருப்பார்கள். மகளே, என் வார்த்தையை வாசி. ஆண்டவர் எங்கே என்று எனக்கு சுட்டிக்காட்டினார். மீண்டும் மத்தேயு 5ஆம் அதிகாரம், இறைவார்த்தைகள் 18 மற்றும் 19ல். வாசித்து எழுது: உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் ஒழிந்துபோகும் முன் திருச்சட்டம் முழுமையாக நிறைவேறுமே தவிர அதன் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது. ஆகவே இக்கட்டளைகளில் மிகச் சிறியவற்றில் ஒன்றைக் கூட மீறி அவற்றைக் கடைப்பிடிக்கும்படி மற்றவர்களுக்குப் போதிப்பவன் பின்னரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றை அனுசரித்துப் போதிப்பவனோ பின்னரசில் பெரியவன் எனப்படுவான். குழந்தாய், இப்போது ஓய்வெடு. உன் குழந்தைக்குரிய விசுவாசத்தைக் கொண்டு என் ஆன்மாவை மகிழ்வி. வா, என்னில் ஓய்வெடு. ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். என்னை நேசி. நம் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக. செப்டம்பர் 22, 1989. நம் பரிசுத்த அன்னையின் செய்தி. அன்பு மகளே, அப்பா உங்கள் அனைவரையும் நேசிக்கிறார். ஆண்டவர் போற்றி ஸ்துதிக்கப்படுவாராக. இதை என் குழந்தைகளிடம் சொல். சமாதானம் உங்களோடு இருப்பதாக. என் மகன்களே, மகள்களே, இயேசு உங்கள் இதயத்தினுள் நுழைந்து உங்களை குணமாக்குமாறு உங்களையே திறக்க அனுமதியுங்கள். என் இன்றைய செய்தி உங்களுக்கு இயேசு யார் என்று நினைவுபடுத்தும். இயேசுவே பக்திக்குரிய அன்பின் ஆதாரமாக உலகின் ஒளியாக இருக்கிறார். உங்களை மீட்பதற்காக அவர் சிலுவையின் அவமானத்தை கருத்தில் கொள்ளாமல் அதை பொறுமையோடு தாங்கிக் கொண்டார். அவர் சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவர். வந்து அவரை உங்கள் கடவுள் என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஏனெனில் அவரை கடவுள் என்று ஒத்துக்கொள்வது உத்தமமான புண்ணியமாக இருக்கிறது. அவரை உணருங்கள். அவருடைய பரிசுத்த பிரசன்னத்தை உணருங்கள். உங்கள் மத்தியில் அவரை எப்படி மதித்துப் போற்றுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள், நாம் என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஜெபங்களின் நடுவே அவரை மறந்துவிடாதீர்கள். அவரை இடைவிடாமல் உங்கள் இதயத்தில் கொண்டிருங்கள். உங்கள் இதயத்தில் அவரை வைத்துப் பூட்டிக் கொள்ளுங்கள். எங்கள் செய்திகளை அச்சுறுத்தல்கள் என்று நினைக்காதீர்கள். எங்கள் செய்திகள் அன்பு மற்றும் சமாதானத்தின் செய்திகள். அவை கடவுளின் அளவற்ற இரக்கத்திலிருந்து வெளிவருகின்றன. இந்த காரியத்தை உச்சரிப்பதற்காகவும் உங்கள் உதடுகளைத் திறப்பதற்கு முன்பாக தியானிப்பதன் மூலம் கடவுளை மகிழ்வியுங்கள். உங்கள் உதடுகள் உங்களைத் தீர்ப்பிட அனுமதிக்காதீர்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் நீங்கள் பரிசுத்தத்தனமும், கீழ்படிதலும், மாசற்றத்தனமும் உள்ள கடவுளின் குழந்தைகள் என்பதை நிரூபிக்கட்டும். இன்று நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிற உங்களிடம் இந்த கேள்வியை நான் கேட்பேன். நீங்கள் உங்களை நேசிப்பது போல் உங்கள் அயலாரை நேசிக்கிறீர்களா? ஆண்டவரால் வழிநடத்தப்பட உங்களை நீங்கள் விட்டுக் கொடுப்பீர்கள் என்றால் உங்கள் பலவீனத்திலும் கூட உத்தமத்தனம் அடைய உங்களால் முடியும். ஒவ்வொரு நாளும் அவருக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். எந்த பயமும் இன்றி உங்கள் சித்தத்தை அவருக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களுடைய திறமை என்னவென்று அறிந்திருக்கிறார். உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் அவர் உங்களிடமிருந்து ஒருபோதும் கேட்கமாட்டார். ஜெபிப்பதன் மூலம் உங்கள் ஆன்மாவை உயர்த்துங்கள். பரிசுத்தத்தனத்தில் வளருங்கள். கடவுள் மிக அபரிமிதமான அளவில் உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிற அன்பில் வளருங்கள். கழகக்காரன் சொல்வதை ஒருபோதும் கவனிக்காதீர்கள். பசாசு உங்களை சோதிக்க அவனை அனுமதிக்காதவாறு உங்கள் இதயத்தில் வெற்றிடம் எதுவும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் மட்டுமே நிலைத்திருங்கள். இவையே உங்கள் இதயத்தை நிரப்பும் உங்கள் கனிகளாக இருக்கட்டும். உங்கள் ஆன்மாவில் குறைவுபடும் அனைத்தையும் அதற்கு தருவதற்காக கடவுள் உங்கள் நடுவில் இருக்கிறார். ஆண்டவரின் திராட்சைத் தோட்டங்கள் பெருகும். அவை ஆயிரக்கணக்கானோருக்கு உணவிட போதுமான கனிகளைத் தரும். சிருஷ்டிகர் அன்பின் புதிய யுகத்திற்குள் நீங்கள் நுழைவதற்காக உங்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். உங்கள் சிருஷ்டிகரை உங்கள் பரிசுத்த தோழராகவும், உங்கள் தந்தையாகவும், உங்கள் மனவாளராகவும், உங்கள் மீட்பராகவும், ஆலோசனையாளராகவும் பாருங்கள். அவருடைய இரக்கமுள்ள அழைத்தல்களுக்காக ஆண்டவரைப் போற்றுங்கள். ஏனெனில் நான் என் அழைத்தல்களை அதிகரிப்பேன். அவற்றை குறைத்துக் கொள்ள மாட்டேன். என் குழந்தைகளுக்கு என் சொந்த கரங்களால் உணவளிக்கும்படி நான் அவர்களை எனக்கு மிக அருகில் கொண்டுவருவேன். என் சட்டத்தை அவர்களுடைய இதயத்தில் வைப்பேன். அவர்கள் என் அன்பில் நிலைத்திருப்பார்கள். அதில் தஞ்சமடைவார்கள். நான் என்னிடம், உண்மையிடம் அவர்களைத் திருப்பி அழைத்து வருகையில் அவர்களைத் தீற்றுவேன். உண்மையான உணவுக்கு நான் அவர்களை பழக்கப்படுத்துவேன். ஆசீர்வாதங்கள் எதுவும் வரவேற்கப்படாமல் இருந்த நாட்கள் முடிந்து போகும். நான் மரித்தவர்களை மூடி இருக்கும் அடக்கத்துக் கிளை அகற்றி என் ஒளியைக் கொண்டு அவர்களை உயிர்ப்பிப்பேன் என்று அவர் சொல்கிறார். எங்கள் செய்திகளை தியானித்து அவற்றின்படி வாழுங்கள். பாதுகாப்பாக உணருங்கள். ஏனெனில் நாங்கள் உங்கள் அனைவரோடும் இருக்கிறோம். நான் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிக்கிறேன். ஜெபியுங்கள். நானும் உங்களோடு ஜெபிப்பேன். மகளே, வா.