வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 26. மார்ச் 19, 1987. நான் இங்கே இருக்கிறேன், இது நான்தான், இயேசு; வசுலா, உன்னை என்னிடம் உயர்த்து; நீ உத்தமமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; என்னை மகிழ்ச்சிப்படுத்து, உத்தமமானவளாக இரு; உத்தமமானவளாக இருக்க நீ மனதாய் இருக்கிறாயா? நான் பேச்சுற்றவளாக இருந்தேன். நீ அப்படி இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் உன்னிடம் தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், வசுலா; ஆனால் ஆண்டவரே, உத்தமமாக இருப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றது. நான் இருக்கிற இருப்பில், நல்லவளாய் இருப்பதற்கு அருகில் இருப்பதே எனக்கு சற்று பெரிய காரியம் தான். வசுலா, உத்தமமாய் இருக்க நான் உனக்குக் கற்பிப்பேன்; அது இயலாத காரியம் அல்ல என்று உண்மையாகவே நான் உனக்கு சொல்கிறேன்; ஆனால் நான் உன்னை வார்த்தெடுக்க நீ என்னை அனுமதிக்க வேண்டும்; உன்னை முழுமையாக என்னிடம் கையளித்து விடு, நீ எப்படி இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேனோ, அப்படியே உன்னை உருவாக்குவேன்; இயேசுவே, என்னால் எப்போதாயினும் அப்படி ஆக முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் வார்த்தெடுக்கப்பட கடினமானவள். அது ஒரு பாறையை வார்த்தெடுக்க முயல்வது போல் இருக்கும். வசுலா, ஆ, வசுலா, நீ என்னை நம்பவில்லையா? நான் சர்வேசுரன், பாறைகளையும் கூட நான் விரும்புகிற எந்த வடிவத்திலும் வார்த்தெடுக்க என்னால் முடியும்; நான் ஏன் உன்னை தேர்ந்துகொண்டேன் என்பது உனக்கு தெரியுமா? ஆம், ஆண்டவரே, இதோ, இன்னும் ஒரு காரணம்; நீ பலவீனமானவள் என்பதால்தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்; உன் பலவீனம் என்னை வசீகரிக்கிறது; குழந்தாய், வந்து என் இருதயத்தை உணர்ந்து பார்; என் இருதயம் நேசிக்கப்பட ஆசிக்கிறது; வந்து உன் மனதால் என் இருதயத்தை உணர்ந்து பார்; வசுலா, நீ தயாராய் இருக்கிறாயா? என்னை உணர்ந்து பார்; நான் அச்சத்தாலும், ஆச்சரியத்தாலும் கல்லாய் உறைந்து போனேன். என்னை வேதனைப்படுத்தாதே, வந்து என்னை உணர்ந்து பார்; நீ என்னை உணர்ந்து பார்ப்பதில்லை; குறிப்பு: அவருடைய அன்பை உணர்தல் என்னும் அர்த்தத்தில். இல்லை, நான் உம்மை உணர்ந்து பார்த்ததில்லை; அதைச் செய்ய எனக்குத் தைரியம் இருந்ததில்லை. உன் பிரச்சனையை என்னிடம் சொல்வாயா? அது இப்போது இன்னும் மோசமாகிறது. ஏன்? நான் மிகவும் தகுதியற்றவளாக உணர்ந்ததால், தர்ம சங்கடமாக உணர்ந்தேன். என் தர்ம சங்கடம் காரணமாக, உம்மை எதிர்கொள்ள நான் சங்கடமாக உணர்கிறேன். வசுலா, ஏன்? என்னை வேதனைப்படுத்தாதே, உன் பிரச்சனையை என்னிடம் சொல்; உம் இருதயத்தை தொட எனக்கு சங்கடமாக இருந்தது. ஆரோக்கியத்தோடு இருக்கிற ஒருவரை தொட வரும் ஒரு குஷ்டரோகியைப் போல நான் என்னைக் கண்டேன், உம்மை நெருங்கி வர நான் யார்? நீ தர்ம சங்கடமாக உணரும் ஒவ்வொரு தடவையும் நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்; குறிப்பு: எனது தகுதியின்மையை நான் புரிந்து கொண்டேன் என்பது பற்றி அவர் மகிழ்ச்சி அடைந்தார் என்பதைப் பிற்பாடு புரிந்து கொண்டேன். மகளே, நாம் நித்தியத்திற்கும் இணைக்கப்பட்டிருப்பதாலும், நீ என்னுடையவளாக இருப்பதாலும், உன் இதயத்திற்குள் ஆழமாக ஊடுருவ என்னை நான் அனுமதிப்பேன்; என்னை நீ ஞான விவாகம் செய்து கொள்வது என்னை மகிமைப்படுத்துகிறது; உன்னைச் சுத்திகரிக்கிறது; நாம் இணைந்திருக்கிறோம்; ஆம், ஆண்டவரே. ஆனால் நீர் எதனோடு இணைந்திருக்கிறீர் என்று பாரும்! நான் உன்னை நேசிக்கிறேன், இப்போது வந்து என் மீது சாய்ந்து கொள்; வசுலா, என் இருதயத்தை உணர்ந்து பார்; பிற்பாடு; நான் அவருடைய இருதயத்தை உணர்ந்தேன், அது மிக வெப்பமாக இருந்தது, நேசிக்கப்பட வேண்டும் என்ற ஆசையால் அது துடித்துக் கொண்டிருந்தது. என் இருதயத்தை உணர்வதற்கு நீ சங்கடப்படத் தேவையில்லை, இதை உன்னிடம் கேட்கிற நான் உன் கடவுளாய் இருக்கிறேன்; நான் விரும்புகிறபடி உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; உன்னை முத்தமிட என்னை அனுமதி; என்னைப் பாவத்தில் விழச்செய்ய முயல்கிற தீமைதான் அது என்று எண்ணி நான் சந்தேக வசப்பட்டேன். நானே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; பயப்படாதே; நான் இன்னும் கவனமாக இருந்தேன். என்னை சுற்றிலும் தீமையை நான் உணரவில்லை என்றாலும், இன்னும் நான் சந்தேகப்பட்டேன். பயப்படாதே; என்னை "விடுவித்து கொள்ள" என்னால் முடியவில்லை, மீண்டும் இந்த "குஷ்டரோகி" உணர்வு என் மீது வந்தது. நான் அசையவில்லை. நான் எவ்வளவு அதிகமாக உன்னை நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாயா? ஆம், அறிவேன், இயேசுவே. அப்படி இருக்க, நீ ஏன் என் முத்தத்தை ஏற்க மறுக்கிறாய்? குறிப்பு: வெகு காலத்திற்குப் பிறகு, ஒரு சில வருடங்களுக்குப் பின், இயேசுவை நான் அதிகமாக அறிந்து கொண்ட போதுதான், புனித ஜெர்த்ரூத் மற்றும் பிற புனிதர்களைப் போல தம்மோடு அன்யோனியமாக இருக்க இயேசு எனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏனெனில் உம்மிடமிருந்து ஒரு முத்தத்தைப் பெற்றுக்கொள்ள நான் தகுதியற்றவள். வசுலா, எனக்கு எதையும் மறுக்காதே என்று நான் முன்பே உனக்குச் சொல்லவில்லையா? நீ எனக்கு என்ன பதில் அளித்திருக்கிறாய்? உமக்கு எதையும் நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன் என்று. ஆம், அப்படி இருக்க, என் முத்தத்தை ஏன் மறுக்கிறாய்? வசுலா, என்னை ஒருபோதும் மறுக்காதே; நான் உன்னிடம் எதையாவது கேட்கிறேன் என்றால், அது நேசத்தின் காரணமாகவே, உன்னை முத்தமிட என்னை அனுமதி, இதைச் செய்ய என்னை அனுமதி! இப்போது என்னை நீ அனுமதிப்பாயா? என்னிடம் வந்து, என் முத்தத்தை உன் நெற்றியின் மீது ஒரு பரலோக முத்தத்தை உணர்ந்து பார், நீ தயாராய் இருக்கிறாயா? குறிப்பு: இயேசு என் நெற்றியில் முத்தமிட்டார். அவர் என்னை பரவசமான மனநிலையில் விட்டுச் சென்றார். என்னால் அந்த நிலையை விவரிக்க இயலவில்லை. அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு நான் வெறுமையாகவும், தெளிவான கண்ணாடியை போல் ஊடுருவி காணப்படக்கூடியவளாகவும் உணர்ந்தேன். அவர் அப்படிப்பட்ட அற்புதமான ஆன்ம சமாதான உணர்வை எனக்குத் தந்தார். என் சுவாசக் காற்று என் நுரையீரல்கள் வழியாக என் உடல் முழுவதிலும் பரவுவது போலவும், இவ்வாறு நான் காற்றாகவே இருப்பது போலவும் உணர்ந்தேன். நான் உன்னை நேசிக்கிறேன்; மார்ச் 20, 1987. வசுலா, நான் உன்னிடம் ஒன்று சொல்ல விடு; முடிவு வரை என்னை நேசி, ஏனெனில் முடிவு இனிமையானதாக இருக்கும், நான் உன்னோடு இருப்பேன்; நீர் எவ்வளவு அதிகமாக துன்பப்பட்டிருக்க வேண்டும்! என் துன்பங்கள் வீணானவை அல்ல; நான் தீமையிலிருந்து உன்னை விடுவித்திருக்கிறேன்; நீர் சில சமயங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். என் நேசத்துக்குரியவர்களுக்கு மத்தியில் இருக்கும்போது, நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; அவர்கள் உம்மை மகிழ்விக்கிறார்களா? ஆம், அவர்கள் என் துயரங்களை மாற்றுகிறார்கள்; நாங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உம்மோடு இருக்கும்படி இருக்கவில்லை என்பது பரிதாபம்தான். நான் இன்னும் உங்கள் மத்தியில் இருக்கிறேன், மகளே; இயேசுவே, நீர் நேற்று மாலையில் என்னை முத்தமிட்டதிலிருந்து இன்று முழுவதும் நான் உம்மில் "கரைந்து விட்டதாகவும்", ஒளி ஊடுருவக் கூடியவள் போலவும், அற்புதமான அளவுக்கு சமாதானம் நிறைந்தவளாகவும் உணர்கிறேன்! நான் உள்ளீடற்றவளாக இருப்பது போல இருக்கிறது... வசுலா, நானே சமாதானம்; நான் எப்போதும் உனக்கு என் சமாதானத்தைத் தருகிறேன்; உன் முழு சுயத்தையும் என்னோடு முழுமையாக இணைத்துக்கொள், நான் எனக்குள் உன்னைக் கரைத்து விடுவேன்; ஆ, வசுலா, எப்போதும் எனக்குள் வந்து என் சமாதானத்தை உணர்ந்து பார்; நான் உன்னை உருவாக்கும்படி என்னை அனுமதிக்க இன்னும் சித்தமாய் இருக்கிறாயா? ஆம், இயேசுவே, எப்போதும். சரி, உன்னிடம் நான் விரும்பிய எதையும் செய்ய என்னைச் சுதந்திரமாக விடு; என் விருப்பங்களுக்கு மட்டுமே ஏற்ற விதத்தில், ஒரு மாசற்ற, அர்ப்பணமுள்ள படைப்பாக நான் உன்னை வார்த்தெடுப்பேன்; என் விருப்பங்களுக்கென்று மட்டும் நீ என் பலத்தைக் கொண்டு துன்ப சோதனைகளைத் தாங்கிக் கொள்ளப் போகிறாய்; என் வார்த்தை ஒரு சிறு நீரோடையைப் போல் இருக்கும், அது வழிந்து வரும், பின் வேகம் பெறும், இறுதியாக அது வெளியே பாய்ந்து, ஒரு பெரும் கடலாக, சமாதானம் மற்றும் நேசத்தின் பெரும் கடலாக மாறும்; பிற்பாடு: வசுலா, நீ ஏன் ஒருபோதும் என்னைப் புகழ்வதில்லை? நானே இருளிலிருந்து உன்னை இரட்சித்த ஆண்டவர்; நீ யார் என்பதை உணர்ந்துகொள்; மிகவும் பரிதாபத்துக்குரியவர்களில் ஒருத்தி, நீ இதுவரை அவர்கள் எல்லோரிலும் அதிக மோசமானவளாய் இருக்கிறாய்; நான் பெருமூச்சு விட்டேன். எப்படி இருந்தாலும், நான் உன்னை நேசிக்கிறேன்; உன்னை விடுவித்ததற்காக என்னை ஸ்துதித்து போற்று, வசுலா; என்ன சொல்வதென்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் தயங்கினேன். இப்படிச் சொல்; என் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்முடைய அபரிதமான நேசம் மற்றும் இரக்கத்தின் வழியாகவே நீர் எனக்கு ஒளியைக் காட்டினீர்; உம்முடைய திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக; ஆமென்; நான் அவருடைய வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னேன். மார்ச் 21, 1987. இது நான்தான், இயேசு; வசுலா, உன் மனதால் என்னைப் பகுத்தறிய நீ பயிற்சி செய்வாயா, அன்பே? குறிப்பு: தாம் எனக்குத் தந்த அரூபிகளைத் தேர்ந்து தெளியும் வரத்தை நான் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்பினார். வசுலா, என்னைப் பார்; நான் பார்த்தேன். ஆம், சரிதான்; நீர் உம் கரங்களை எழுது மேஜையின் மீது வைத்திருக்கிறீரா? வைத்திருக்கிறேன்; இப்போது உம் கரங்களைக் குறுக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறீரா? கட்டிக் கொண்டிருக்கிறேன்; இப்போது நீர் உம் ஒரு கரத்தை உயர்த்துகிறீர். உம் கரம் உம்முடைய கன்னத்தை எட்டுகிறது, உம் சுட்டு விரல் உமது கன்னத்தின் மேல் இருக்கிறது. மற்றொரு கரம் அது இருக்கிற இடத்திலேயே இருக்கிறதா? நீர் சிந்திப்பது போல? ஆம்! நான் என் பிரசன்னத்தை வலியுறுத்துகிறேன்; வசுலா, என்னைப் பார்; நீர் ஒரு புத்தகம் வைத்திருக்கிறீரா? உம்முடைய வலக் கரத்தால் இடது பக்க மேற்போர்வைக்குள் இருந்து வெளியே எடுத்தது? ஆம், நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன்; அது மிகப் பெரியதாக இல்லை. மிகச்சரி, நீ நன்றாகப் பகுத்து உணர்கிறாய், வசுலா; உள்பக்கம் பார்த்து, அது என்ன சொல்கிறது என்று வாசி; நான் முயற்சி செய்கிறேன், ஆனால் எனக்கு இதில் அவ்வளவு திறமை இல்லை. அது சொல்கிறது.... என் பீடம் நீயே; என்னால் முடியாது, இயேசுவே; மீதமுள்ளதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! மறுபடியும் முயற்சி செய், என் பீடம் இது, அதன் மீது நான்... என்னால் காண முடியவில்லை. நான் தவறாக வாசிக்கிறேன் என்று நினைக்கிறேன்! சிறியவளே, நான் இல்லாமல் நீ என்ன செய்வாய்? நீ இன்னும் அதிகமாக உன் ஆன்மாவை என்னிடம் உயர்த்த வேண்டும்; வசுலா, நான் உனக்கு உதவி செய்வேன்; உன்னை என்னிடம் முழுமையாகக் கையளித்துவிடு, ஒருபோதும் அதைரியப்படாதே; நான் என் புத்தகத்தோடு பிற்பாடு திரும்பி வருவேன்; நான் அதைரியப்பட்டதாக உணர்ந்தேன். என் ஆன்மாவை போதிய அளவு உயர்த்தாமல் இருந்து அவருக்கு ஏமாற்றம் வருவித்தேன் என்று நம்பினேன். என்னை விட்டுவிட்டு வேறொரு ஆன்மாவை அவர் தெரிந்து கொள்வார் என்று எண்ணும் அளவுக்கு சென்றேன். அவரது பொறுமைக்கும் எல்லைகள் உண்டு என்று நினைத்தேன்! வசுலா, உனக்குப் பதிலாக வேறு யாரையும் நான் தேர்ந்துகொள்வேன் என்று நீ ஒருபோதும் நம்பக்கூடாது; நீ என்னை நம்புகிறாயா? வா, நாம் மறுமுறை முயற்சி செய்வோம்; இப்போது நீ செய்தது போல, உன் மனதைக் கொண்டு என்னைப் பகுத்தறிய முயற்சி செய்; உன் சுயம் முழுவதும் என்னுள் ஊடுருவி, எனக்குள் முழுமையாகக் கரைந்து போவதாக; என்னை நேசி. மற்றவர்களுக்காகப் பரிகாரம் செய்; உயர்த்து, உன் ஆன்மாவை உயர்த்த, நான் உனக்குக் கற்பிப்பேன்; நாம் போகலாம்; மார்ச் 22, 1987. தெளிந்த அமைதியை நான் நேசிக்கிறேன்; நீ அமெரிக்கையோடும் அவசரமின்றியும் வேலை செய்வாய்; நான் என் புத்தகத்துடன் திரும்பி வந்திருக்கிறேன்; இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது? நான் ஒரு சில ஆத்துமங்களின் பெயர்களை இதில் எழுதியிருக்கிறேன்; என் தீச்சுவாலையை, நேசத்தின் தீச்சுவாலையை உயிர்ப்பிக்க வேண்டியுள்ள ஆத்துமங்கள்; நான் உனக்குச் சுட்டிக் காட்டுகிற இடத்தை வாசிப்பாயா? சரி, ஆண்டவரே. என்னால் வாசிக்க முடியாத அந்தச் சிறு புத்தகத்தைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், அதன் உறை மென்மையாகவும், பொன்னால் ஆனதாகவும் இருக்கிறது. ஆம், அதன் உறை பொன்னாலானதுதான்; அதன் உள்ளே பார்த்து நான் உன்னை என் பலிபீடமாக்குவேன்; அதன் மீது என் இருதயத்தின் பற்றி எரியும் ஆசைகளை நான் வைப்பேன்; என் தீச்சுவாலை உனக்குள் உயிர் வாழும், என் இருதயத்திலிருந்து பெற்றுக்கொண்டு உன் இருதயத்தை நிரப்பு; ஆண்டவராகிய நான் என் தீச்சுவாலையை என்றென்றும் நித்தியமாகவும் பற்றி எரிவதாக காத்துக்கொள்வேன்; இப்போது என் புத்தகத்தை நீ முத்தமிடுவாயா, மகளே? நான் அப்படியே செய்தேன். நான் உனக்குச் சொல்கிறேன்; என்னிடம் ஒரு கேள்வி இருந்தது. இது என் தெரிந்து கொள்ளப்பட்ட ஆத்துமங்களுக்கான ஞான வழிகாட்டுதல்; இப்போது நீ அறிந்திருக்கிறாய்; பிற்பாடு, நிச்சயமின்மை மற்றும் சந்தேகத்தின் அலை என்னை மூடியது. வசுலா, அஞ்சாதே; இது நான்தான், இயேசு; கேள், நேசமே, எல்லா வழிகாட்டுதல்களும் அதன் துன்பங்களையும் கொண்டுள்ளன. உன்னில் நிச்சயமின்மை இருக்கிறது; அது நீ துன்புறும்படி செய்கிறது; துன்பம் உன் ஆன்மாவை சுத்திகரிக்கிறது என்று நான் சொல்லவில்லையா? அதை ஏற்றுக்கொள், உனக்கு எது எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததோ, அதை நான் உனக்குச் செய்ய என்னைச் சுதந்திரமாக விடு; நான் உன்னில் செயல்படவிடு, நீ மனதாய் இருக்கிறாயா? இது நீர்தான் என்றால் நான் அதைச் செய்வேன், இயேசுவே. நான் உன் இரட்சகராகிய இயேசு! நாம் சேர்ந்து துன்புறுவோம், நாம் சேர்ந்து பாடுபடுவோம், இங்கே, என் மீது சாய்ந்து கொள்; வா, நாம் போய், ஒன்றாக வாசிப்போம்; பிற்பாடு: நான் இங்கே இருக்கிறேன்; எனக்காக வாழு; என்னை நேசிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; வா, எல்லாமே என் நேசம் மற்றும் சமாதானத்தின் விருப்பங்களுக்காகத்தான்; என்னை ஒருபோதும் மறுதலிக்காதே; தீமை என் திட்டங்களைத் தடை செய்யும்படி இடையூறு செய்ய முயலும், ஆனாலும் நான் வெற்றி பெறுவேன், ஆகவே என்னைச் சார்ந்திரு; ஆனால், ஆண்டவரே, சில காரியங்களைப் பற்றி நான் முறையிடலாமா? என்னிடம் இயல்பா இரு, வசுலா; என்னை தொந்தரவு செய்வது என்னதென்று நான் உம்மிடம் சொல்ல விரும்புகிறேன், அநேகமாக நான் சொல்கிற, அல்லது நினைக்கிற எல்லாமும் தவறாகவே இருக்கிறது. ஆகவே நான் என்ன செய்தாலும் தவறாகவே இருக்கும். எனக்கு உண்மையான ஆதரவு எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதாவது உம்மிடமிருந்து நான் பெற்றுக் கொள்கிற செய்திகளை எழுதியபடி நான் இங்கே இருக்கிறேன். இப்போது மற்றவர்களும் வெளிப்படையாக நான் கொண்டிருந்ததையே கொண்டிருந்தார்கள். மற்ற மனிதர்களுக்கும் வழிகாட்டுதல்கள் அல்லது செய்திகள் உம்மிடமிருந்து வந்துள்ளன. ஆனால் இந்த மக்கள் பெரும்பாலும் துறவர மடங்களில் அல்லது கன்னியர் மடங்களில் இருந்தார்கள். அவர்கள் துறவரத்தாராலும் குருக்களாலும் ஆயர்களாலும் சூழப்பட்டிருந்தார்கள். நெருங்கி வரும் இந்த சுபாவத்திற்கு மேற்பட்ட காரியம் அவர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருந்தபோது, அவர்கள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டார்கள். நெருக்கமாக கவனிக்கப்பட்டார்கள். அப்போது தங்கள் எழுத்துக்களை சபைத் தலைவர்களுக்கும் அங்கிருந்து ஆயிருக்கும், அதன்பின் பாப்பரசருக்கும் தருவது அவர்களுக்கு எளிதாய் இருந்தது. அவர்கள் எல்லோரும் அதை உம்மிடமிருந்து வருவதாக ஏற்றுக்கொண்டார்கள். நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனாலும் தாங்கள் மிக நன்றாக அறிந்திருந்த தங்கள் வட்டாரங்களில் ஒன்றிலிருந்து அதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு அதிக எளிதாய் இருந்தது. அது அப்படியே அல்லது குறைந்தது, அதில் ஒரு பகுதி தொகுத்து எழுதப்பட்டது. அவை அங்கீகரிக்கப்பட்டன. குறிப்பு: இவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். ஏனெனில் தேவ வார்த்தை பாரமாக இருக்கக்கூடும். அதன்பின் இதோ, நான் இருக்கிறேன். நான் குருக்களை அணுகி இருக்கிறேன். அவர்கள் கத்தோலிக்கர்களாக இருக்க நேர்ந்துள்ளது. ஞானஸ்நானத்தினால் கிரேக்க ஆர்த்தராக்ஸ் சபையினராக இருக்கிற எனக்கு அவர்கள் யார் என்பது பற்றிக் கவலை இல்லை. நான் கத்தோலிக்க பெண்ணாய் இருந்து அவர்கள் ப்ரோடெஸ்டன்ட்டினராக இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஏனெனில் நாங்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அநேக குருக்கள் இப்போது அதைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய பதில் நடவடிக்கையையும் இரவும் பகலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. அவர்களில் ஒருவர் இந்நாள் வரைக்கும் இது தீமை என்றே சொல்லி வருகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு அரூபியால் நான் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால் நான் பேய் பிடித்தவளாக இருக்கிறேன். ஆனாலும் என்னை ஆட்கொண்டுள்ளவர் சர்வ வல்லப தேவனாகிய நீர்தான் என்று எனக்குத் தெரியும். ஓரளவு மட்டும் வாசித்துவிட்டு அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். தமது முடிவை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. நான் பேய் பிடித்தவள் அல்ல என்பதை அவர் அறிந்து கொள்ளும்போது, அது என் ஆழ்மனதின் வேலை என்று அவர் சொல்வார். உம்மைத் தவிர வேறு எது வேண்டுமானாலும், அதன்பின் மற்றொரு குருவின் பதில் என்னவெனில், "ஆம், தொடர்ந்து எழுது, ஏனெனில் இது தெய்வீகமானது, கடவுளிடமிருந்து வருவது" என்பதுதான். ஆக, இது கடவுளின் வார்த்தைகள் என்று அவர் நம்புகிறார். ஆனாலும் என்னிடம் கேட்கவோ அல்லது கண்டுபிடிக்கவோ கூட முடியாத அளவுக்கு அவர் எப்போதும் வேலைகளில் மும்மரமாய் இருக்கிறார். இதுதான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கடவுள் ஒரு செய்தியைக் கூற முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று அவர் நம்புகிறார் என்றால், அதன்பின் ஏன் அது பற்றி அவர் அதிகமாக கவலைப்படுவதில்லை? அது என்னவென்று அவர் ஏன் கண்டுபிடிப்பதில்லை? மூன்றாவதாக, ஒரு குருவுக்கு இது அறிவிக்கப்பட்டது. அவர் கடமை உணர்வோடு, அவ்வப்போது தம் கைக்கடிகாரத்தை பார்த்தபடி நான் சொன்னதைக் கேட்டார். அதன்பின், நல்லது, தொடர்ந்து எழுது. இது அற்புதமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுது என்று கூறினார். எந்த நேரமும் மீண்டும் வந்து அது பற்றி பேசும்படி நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் மறுபடியும் அவரை நான் பார்க்கவே இல்லை. அதன்பின் மற்றொரு குருவுக்கு இது அறிவிக்கப்பட்டது. அவர் ஒன்று இரண்டு பக்கங்கள் மட்டும் வாசித்துவிட்டு, நான் இதில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கத்தோலிக்கர்களாகிய நாங்கள் தீமை இந்த வழியிலும் செயல்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். குறிப்பு: இருக்கலாம், ஆனால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு? மக்களினங்கள் கடவுளிடம் திரும்பி வரும் வரையிலுமா? ஏனெனில் மக்களினங்கள் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டன. இதுவே ஆரம்பமாக இருக்கிறது. இது தீமை என்று நான் சொல்லவில்லை. மாறாக, கவனமாய் இருக்கும்படி எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்று அவர் சொல்லிவிட்டார். நியாயம் தான் என்று நான் சொன்னேன். ஆனாலும் எல்லோரும் ஒரு காரியத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அதாவது, இது சுபாவத்துக்கு மேலானது என்று ஒப்புக்கொள்கிறார்கள். அப்படி இருக்க, இதைப் புரிந்து கொள்ளவும் தெளிவுபடுத்தவும், அவர்கள் ஏன் இதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் கடவுளைத் தேடும் மக்கள். இது தீமை என்று கூறிய முதல் குரு, அதன்பின் என்னிடம்; கடவுள் செய்திகளைத் தருகிறார். அவை நிறைய உள்ளன. இத்தகைய செய்திகளோடு உள்ள நூல்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இது மிகப் பொதுவானதுதான்; சுபாவத்திற்கு மேலான வழியில் நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. என்றாலும், பெரும்பாலும் தங்கள் வட்டாரங்களில் இவை பொதுவானவையே. இவை திரையிருதயத்தின் தெய்வீக வெளிப்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவை கடவுளிடமிருந்து வருகின்றன என்று மற்றொரு குரு கூறினார். அதன்பின், அவர் ஒரு வார்த்தை பாடுகள் தந்த காட்சி தியானி ஒருவரின் முகவரியை என்னிடம் தந்து, அவரை நான் கண்டுபிடித்து, அவரோடு பேசலாம் என்று கூறினார். நான் "அவர்களில் ஒருத்தியாக" இருந்தால், இதை நான் எளிதாக செய்திருப்பேன். நான் அவர்களது வட்டாரத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதும் என் தோற்றமும் இடிக்கிறது. நான் இயேசு; வசுலா, என் மீது சாய்ந்து இளைப்பாறு; யுகமே, ஓ யுகமே, என் வார்த்தைகளை ஒரு பார்வை பார்ப்பதற்கு முன்பே அதை மதிப்பிடுகிறாயா? வெளிப்பார்வைக்கு மட்டும் என்னை நீ மகிமைப்படுத்துகிறாயா? என்னை ஆதரிப்பதாகக் கூறி, விரும்பாமலே என்னைக் கேலி செய்கிறாயா? வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; அன்பே, என் மீது சாய்ந்து கொள்; ஆண்டவரே, இன்னும் வேறு காரியங்கள் உள்ளன. நான் என் சந்தேக உணர்வுகளை உமக்கு சொல்லும்போது அல்லது அவற்றை உமக்கு உணர்த்தும்போது, நான் சந்தேகப்படுவதால் உம்மை காயப்படுத்துகிறேன் என்பதில் மிகவும் நிச்சயமாய் இருக்கிறேன். நான் சந்தேகப்படவில்லை என்றாலும், இந்த வழிகாட்டுதலில் நீர் இல்லை என்றாலும், இதை நான் செய்வதால் நான் உம்மை காயப்படுத்துகிறேன். ஆகவே, நான் எதை செய்தாலும் உம்மைக் காயப்படுத்துகிறேன். இது நீர்தான் என்று நான் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் என்னதான் நினைத்தாலும், நான் உம்மை நோக செய்கிறேன். உம்மை நோக செய்கிறவர்களில் நானே கடைசியானவளாக இருக்க விரும்புவதால், இது என்னை துயரப்படுத்துகிறது. இதற்காகவும் நான் துன்பப்படுகிறேன். ஓ மகளே, துயரப்படாதே; நேசத்தினால் நான் காயப்படுத்தப்படுகிறேன் என்று ஒருபோதும் நம்பாதே; என்னிடமிருந்து உண்பது மட்டும்தான் நீ செய்ய வேண்டியது; நான் இயேசு, இயேசு கிறிஸ்து, என் அப்பத்தைத்தான் நீ உண்டு கொண்டிருக்கிறாய்; ஆன்மாவே, ஓ நேசத்திற்குரிய ஆன்மாவே, இதற்கு மேல் உன்னை நீயே வேதனைப்படுத்திக் கொள்ளாதே; என்னை நம்பு, பிரியமானவளே, என்னால் நேசிக்கப்படுவதை உணர்ந்து பார்; இவ்வளவு பலவீனமாய் இருப்பதற்காக என்னை மன்னியும்.... நான் முழுமையாக உன்னை மன்னிக்கிறேன்; நான் உன்னை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேன் என்பதை உணர்ந்து பார்; உன் பலவீனமே என்னை எல்லாவற்றையும் விட அதிகமாக ஈர்க்கிறது; உன் வாக்குக் கெட்டாத பலவீனம்! உன் இழிந்த தன்மை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது; ஓ, இங்கே என் இருதயத்தினுள் என்னிடம் வா; உன் ஆன்மா எனக்குள் முழுமையாக அளிக்கப்படுவதாக என் மோட்சமாய் இரு; நான் உன்னை நேசிக்கிறேன்; இப்போது என் சமாதானத்தைக் கொண்டிரு;