இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் சிலுவையை அரவணைத்து, திருச்சபை ஒன்றுபட ஜெபிக்கச் சொல்கிறார். தம் அன்பை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். வசுலாவிடம், நாளைய கவலையை விட்டு, ஒவ்வொரு அடிக்கும் முதலில் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்கவும், தானாகத் திட்டம் வகுக்காதிருக்கவும் கூறுகிறார்.

Show Notes

அத்தியாயம் 84: உங்கள் விருப்பப்படி திட்டமிட வேண்டாம் - இறைவனில் உண்மையான வாழ்வு

இயேசு தம் சிலுவையை அரவணைத்து, திருச்சபை ஒன்றுபட ஜெபிக்கச் சொல்கிறார். தம் அன்பை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். வசுலாவிடம், நாளைய கவலையை விட்டு, ஒவ்வொரு அடிக்கும் முதலில் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்கவும், தானாகத் திட்டம் வகுக்காதிருக்கவும் கூறுகிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:16 20/12/1988 - என் சிலுவையை அரவணைத்துக்கொள்
07:10 21/12/1988 - என் அன்பு புரிந்து கொள்ளப்படவில்லை
09:15 24/12/1988 - கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள்
11:03 26/12/1988 - என்னிடம் ஆசீர்வாதம் கேள்
12:27 27/12/1988 - நீயாக எந்தத் திட்டமும் வகுக்காதே
15:55 28/12/1988 - ஜெபக்குழுவிற்கான செய்தி

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #ஒன்றிப்புக்காகஜெபம் #திட்டமிடவேண்டாம் #TrueLifeInGod84

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 84. டிசம்பர் 20, 1988 ஆண்டவரா? நான்தான்; ஓ, இறைவா. குறிப்பு: இயேசு மிகுந்த ஆவலோடும், அன்போடும், "நான்தான்" என்று பதிலளித்தார். வசுலா, என் சிலுவையை அரவணைத்துக்கொள்! அதை என்னோடு பகிர்ந்து கொள்; என் சிலுவை, என் ஆளுகைக்குள் உன்னை வழிநடத்தும், என் புனித இதயத்தில் தங்கியிரு, அதன் உள்ளாழங்களுக்குள் தவழ்ந்து செல், அங்கே நீ சமாதானத்தைக் கண்டடைவாய்; என் குழந்தாய், என்னைக் கைவிட்டு விட்டவர்களும், உலக செல்வங்களால் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டவர்களுமாகிய உன் சகோதரர்களுக்காக ஜெபி, என் சிலுவைக்குப் பயப்படுகிற, இழக்கப்படும் ஆன்மாக்களுக்காக ஜெபி... என் குழந்தாய், என் திருச்சபை ஒன்றுபட்டு ஒன்றாய் இருக்கும்படி அதற்காக ஜெபி; ஆண்டவராகிய நானே இந்த ஒன்றிப்பை ஆசிக்கிறேன் என்பதை ஒவ்வொரு குருவும் புரிந்து கொள்ள வேண்டும்; என்னிடமிருந்து பிரிவு எதுவும் வராது, அது என் எதிரியிடம் இருந்தே வருகிறது; என் அரசு ஒன்றாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்க வேண்டும்; ஆண்டவரா? நான்தான்; ஆண்டவரே, நீர் எனக்கு தந்து கொண்டிருக்கிற உம் வெளிப்படுத்துதலில் ஒரு சில பக்கங்களை வாசித்த சில கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருக்கள், ஒன்றிப்பைப் பற்றி ஒத்துக் கொள்வதில்லை, இது பாப்பரசரோடு ஒன்றிப்பதைப் பற்றியது என்பதை அவர்கள் வாசித்தவுடன், இது அவர்களுக்கு ஒவ்வாததாகி விடுகிறது, இந்த வெளிப்பாடு பசாசுக்குரியது என்று அவர்கள் சொல்கிறார்கள். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த ஒரு பெண்மணி, இந்த வெளிப்பாட்டை நல்ல மனதுடன் வாசித்த பிறகு, ஒரு கத்தோலிக்கக் கோவிலுக்குச் சென்றார். அவருடைய ஆன்ம குரு இதைப்பற்றி கேள்விப்பட்டவுடன், இந்த வெளிப்பாடு சாத்தானிடமிருந்து வருகிறது என்று அவர் தீர்ப்பிட்டார், அதன்பின், அவர் அந்தப் பெண்மணியை சபையிலிருந்து விலக்கிவிட்டார்! ஆனால் பல கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பொதுநிலையினர் மனதாயிருக்கிறார்கள், ஏனெனில், உம் வெளிப்பாட்டை வாசிக்கும்போது, அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், நீர் அதை விரும்புகிறீர் என்பதை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள், ஆனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருக்கள் கோபவெறி கொள்கிறார்களே? என் குழந்தாய், எனக்கு இதெல்லாம் தெரியாதா? என் எண்ணங்கள் அவர்களுடைய எண்ணங்கள் அல்ல, என் வழிகள் அவர்களுடைய வழிகள் அல்ல, அவர்கள் தங்கள் பாவங்களை என்மீது சுமத்திக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இனியும் எதையும் தெளிவாகக் காண்பதில்லை... ஒன்றிப்பு மேலிருந்து வரும், ஏனெனில் இப்போது உள்ளபடி, நீங்கள் மொத்தமாகப் பிளவுபட்டிருக்கிறீர்கள், என் தெய்வீக சாயலின்படி நீங்கள் வாழவில்லை; நீங்கள் என் சட்டத்திற்குக் கீழ்படியவில்லை; உங்கள் பிரிவு கெடுத்துக் கொண்டிருக்கிறது; அது பரவிக் கொண்டிருக்கிறது, உங்கள் பிரிவு எப்போதும் நிலைத்திருக்கும்; நான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காத வரையில் அது வெற்றி கொள்ளப்படாது; அன்பு, உங்கள் மத்தியில் இல்லாதிருக்கும்போது, உங்களால் ஒன்றிக்க முடியும் என்று நீங்கள் எப்படி நம்ப முடியும்? உங்களில் பலர் அசைக்க முடியாதவர்களாகவும், இரும்புத் தடிகளைப் போல் இறுக்கமானவர்களாகவும் இருக்கிறீர்கள்! ஆனால் நான் உங்கள் எல்லோரையும் வளைப்பேன், நான் உங்களை ஒன்றிணைப்பேன்! அன்பிற்குரியவர்களே, நான் இந்த வனாந்தரத்தை ஒரு ஏரியாகவும், இந்த வறண்ட நிலத்தை ஒரு நீரோடையாகவும் மாற்றுவேன், அதன்பின், நான் உங்கள் அனைவரையும் இந்தப் புதிய பூமியில் வைப்பேன், என் அரசு மோட்சத்தில் உள்ளபடியே பூமியின் மீதும் இருக்கும்; என் அரசு வரும்; ஓ! இந்தப் புதிய யுகத்திற்காக நான் இப்போது எவ்வளவு ஏங்குகிறேன்! என் பரிசுத்த பெயரின் கீழ் முழு ஒன்றிப்பில் நீங்கள் எல்லோரும் வாழ்வீர்கள், ஜீவியத்தின் உன்னத ஆதாரமாக இருக்கும் நான் உங்கள் அனைவரையும் ஒரே பரிசுத்த மக்களினமான மறுபிறப்படையச் செய்வேன்; மேலிருந்து என் தெய்வீகச் சாயல் உங்கள் மீது ஒரு கண்ணாடியைப் போலப் பிரதிபலிக்கும், பரிசுத்தர்களில் எல்லாம் அதிபரிசுத்தராகிய நான் மீண்டும் உங்களை ஸ்தாபித்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்; வேதாகமங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன; ஞானம் காத்திருக்காது; அது நிலத்தை உழுகிற ஒருவனைப் போலும், விதை விதைக்கிறவனைப் போலும் என் மக்களைப் பண்படுத்தும்; அது பூமியின் வறட்சியை வயல் வெளிகளாகப் பண்படுத்தும்; நான் அதை உழுது, அதன் வயல்களை சமாதானம் மற்றும் அன்பின் வயல்களாக மாற்றுவேன்; நான் இவ்வுலகின் ஒளியாயிருக்கிறேன், நீங்கள் இருளில் மூடப்பட்டிருப்பதை நாம் காணும்போதெல்லாம், எப்போதும் உங்கள் மீது இறங்கி வருவேன்; ஆண்டவரே, கேட்க மறுப்பவர்களும், நீர் உம்மை இப்படி, என் வழியாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பாதவர்களுமாகிய சில தேவ ஊழியர்கள் இருக்கிறார்கள். இயேசுவாகிய நீர் எங்களுக்கு எல்லா உண்மையையும் கொண்டு வந்துவிட்டீர் என்றும், தங்களுக்கு பரிசுத்த வேதாகமத்தைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்த வேலைகள் எல்லாம் போலியானவை என்று அவர்கள் சொல்கிறார்கள். பிதா, என் பெயரால் அனுப்பவிருக்கும் தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அனைத்தையும் கற்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார் என்று நான் உங்கள் அனைவருக்கும் சொல்லியிருக்கிறேன்; நான் எந்த ஒரு புது விசுவாசக் கொள்கையையும் உங்களுக்குத் தரவில்லை, நான் உண்மையைப் பற்றி மட்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன், வழிதவறிப் போனவர்களை மீண்டும் நிறை உண்மையை நோக்கி அழைத்து வருகிறேன்; ஆண்டவராகிய நான் நினைவுபடுத்துதல்களைக் கொண்டு உங்களை எப்போதும் தூண்டிக் கொண்டே இருப்பேன், தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவியானவர், என் வார்த்தையை நினைவுபடுத்துபவராக எப்போதும் உங்கள் நடுவே இருப்பார்; ஆகவே, என் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசும்போது அதிசயப்படாதீர்கள்; இந்த நினைவுபடுத்தல்கள் உங்களை மனந்திரும்பி, என் வழிகளை உங்களுக்கு நினைவுபடுத்தும்படி என் வரப்பிரசாதத்தால் தரப்படுகின்றன; மலரே, வா, என்னை நீ காணும்போது, என்னை நோக்கிப் புன்னகை செய்; ஆ, ஆண்டவரே! உம் திருப்பெயர் வாழ்த்தப்படுவதாக. உமது போதனைகளுக்காக உமக்கு நன்றி. குழந்தாய், ஞானம் உனக்குப் போதிக்கும்; நாங்கள், நாம்? என்றென்றும் நித்தியமாகவும்! டிசம்பர் 21, 1988 ஆண்டவரே, சிலர் உம் செய்தியில் உள்ள உமது அன்பைத் தவறாக புரிந்து கொண்டு, அதை உணர்ச்சிப்பூர்வமான அன்புடன் ஒப்பிடும்போது, அது உம்மை அநேகமாக துயரப்படுத்தியிருக்க வேண்டும்! சில முறையீடுகளை, சில குறிப்பிட்ட மனிதர்களிடமிருந்து ஓரிரண்டு முறையீடுகளைக் கேட்டிருந்தேன். ஆண்டவரா? நான்தான்; இந்த யுகத்தில் என் அன்பு மதிக்கப்படவில்லை, புரிந்து கொள்ளப்படவுமில்லை; நான் என் குழந்தைகளை எவ்வளவு அதிகமாக அன்பு செய்கிறேன் என்பதை நீ அறிவாய், குறிப்பு: இயேசு என்னை நோக்கி திரும்பி, என்னை எதிர்கொண்டபடியே இதைச் சொன்னார். நான் பித்தாகும் அளவுக்கு அவர்களை நேசிக்கிறேன்! ஆனால் உன் யுகத்தின் பாவங்கள் எவ்வளவு கடுமையானவையாகவும், மிகப் பெரியதானவையாகவும் இருக்கின்றன என்றால், அது இனியும் உன் இறைவனாகிய என்னை அடையாளம் கண்டுகொள்வதில்லை! அவர்களுக்காக நான் செலுத்தியுள்ள பிணைத்தொகையை அவர்கள் மறந்துவிட்டார்களா? நான் அவமானப்படுத்தப்பட்டேன், வதைக்கப்பட்டேன், வாதிக்கப்பட்டேன், மனமுவந்து அனைத்திலும் அதிக வேதனையான மரணத்தை அனுபவித்தேன், இவையெல்லாம் அன்பினால் செய்தேன்; அப்படியிருக்க, கோடிக்கணக்கான தடவைகள் நான் உங்களை நேசிக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லாதிருக்க என்னால் எப்படி முடியும்? அதன் ஆழத்தையும், மேன்மையையும் நீங்கள் புரிந்து கொள்ளச் செய்யும்படி, உங்கள் இருதயத்தில் என் வார்த்தைகள் ஊடுருவும் வரைக்கும் என் எண்ணத்தை நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பேன்! இப்போதும் கூட நான் தாராளமான முறையில் என் திருப்பாடுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க தயாராக இருக்கிறேன்; ஓ படைப்பே! எவ்வளவு அதிகமான துன்பத்தை நீ எனக்குத் தருகிறாய்! உன்மீது எனக்குள்ள அன்பு அளவற்றது; முயற்சி செய்து இந்த அன்பை நீ புரிந்துகொள்; டிசம்பர் 24, 1988 கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள். இயேசுவா? அன்புக்குரியவளே, நான்தான்; இன்று உமது பிறப்புக்கு முந்தினம். அன்புக்குரியவரே, பரிசுத்தர்களில் அதிபரிசுத்தரே! ஆண்டவரே, நான் மிக மிக அதிகமாக அக்களிக்கிறேன், நம் ஆண்டவர் போற்றப்படுவாராக! ஓ இறைவா, உம் பரிசுத்த தனத்தில் என்னை கரைத்துவிடும், பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என எனக்குக் காட்டும். நித்தியமானவரே, என்னைச் சுத்திகரித்து, உம் மாசற்ற தனத்தில் என்னை கரைத்துவிடும். அன்புக்குரியவரே, உம் குழந்தைகளாகிய எங்களை அர்ச்சித்து, ஒரே தேவ நற்கருணைப் பேழையைச் சூழ்ந்திருந்து, உம்மை மகிமைப்படுத்திக் கொண்டும், போற்றி ஸ்துதித்துக் கொண்டும் இருக்கும் ஒரே கிடைக்குள் எங்கள் அனைவரையும் ஒன்றித்தருளும். உண்மையை எங்களுக்குக் காட்டும்படி, எங்கள் அனைவர் மீதும் உமது உண்மையின் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வர அனுமதித்தருளும். இந்த இருளில், உமது ஒளி எங்கள் வழிகாட்டியாக இருக்கச் செய்யும், உண்மையில், எங்களை வழிநடத்தி, நீர் மீண்டும் வரும் வரையிலும், ஒரே ஆயனின் கீழ் எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாரும். ஆண்டவரே, வாரும்! ஆ, அன்புக்குரிய ஆன்மாவே, நான் ஒரே கிடைக்குள் உங்கள் அனைவரையும் ஒன்றுக் கூட்டுவேன், என் சொந்தக் கரங்கள் உங்கள் வேலியாகவும், என் புனித இதயம் உங்கள் இல்லமாகவும் இருக்கும்; அன்பு, அன்பாகவே திரும்பி வரும்; ஆம், என் அன்புக்குரியவர்களே, என் மறு வருகைக்காக ஜெபியுங்கள்; நான் அன்பாயிருக்கிறேன், நான் வாழ்வின் உந்நத ஆதாரமாக இருக்கிறேன், ஆகவே, உங்கள் மீட்பராகிய என்னிடம் வாருங்கள், வாருங்கள்... சரி, ஆண்டவரே. டிசம்பர் 26, 1988 இயேசுவே! யாரும் உம்மிடம் நேரடியாகவே ஆசீர்வாதங்களைக் கேட்க முடியும் என்பதை நான் இன்று முழுமையாகப் புரிந்து கொண்டேன். அதாவது, என்னை ஆசீர்வதிக்கும்படி உம்மிடம் என்னால் கேட்க முடியும். எங்களுக்காக அல்ல, மாறாக, மற்றவர்களுக்காகத்தான் உம்மிடம் ஆசீர்வாதங்களைக் கேட்க முடியும் என்று நான் நினைத்தேன்! நீ பரிதாபமானவள் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்... வசுலா, நான் கோடிக்கணக்கான தடவைகள் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன், நீ கவனித்ததில்லையா? நீ ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை என்ற போதும், நான் உன்னை ஆசீர்வதித்தேன்; குழந்தாய், உன் அறியாமை இடைவிடாமல் என்னைக் குழப்புகிறது; உன் உதவியற்ற நிலை இன்னும் அதிக ஆவலோடு உன்னிடம் விரைந்து வந்து, என் இதயத்திடம் நான் உன்னை இழுத்துக் கொள்ளச் செய்கிறது; நான் குழந்தைகளை அன்பு செய்கிறேன்; நான் உன் எஜமானராகவும், உன்னை வழிநடத்துவவராகவும் நிலைத்திருக்கும்படி என்னைச் சுதந்திரமாக விடு; என் அதிகாரத்தை முழுமையாகச் சார்ந்திரு, ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம் நீ அப்போது என் கரங்களில் உன்னையே முழுமையாக கையளித்து, அதன் மூலம் என் சித்தத்தைச் செய்கிறாய்; டிசம்பர் 27, 1988 இயேசுவா? நான்தான்! ஆ, நான் உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; என் செய்தியைப் பரப்புவதன் மூலம் என்னை மகிமைப்படுத்து; வசுலா, கூட்டங்களில் என் அன்பைக் காட்டு, அடுத்து நிகழ இருப்பதைக் காண என் தோளுக்கு மேல் ஏறிட்டுப் பார்க்காதே; குறிப்பு: அடுத்த கூட்டத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு, இன்றைய நாள் உனக்கு என்ன தருகிறது என்பதை மட்டும் பார்; ஆண்டவரே, திட்டமிடுவது தவறா? நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் சொல்லியிருக்கிறேன்; கவலைப்படாதே, என்னை நம்பு; உன்னில் என் உயிர் மூச்சை ஊத நீ எனக்கு இடம் தருவதன் மூலம், என் வேலையைச் செய்ய சுதந்திரமானவனாக நான் உணர்வேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; உன்னிடம் உள்ள அனைத்தும் என்னிடமிருந்தே வருகிறது என்பதையும், இது என் வேலையே இன்றி உன் வேலை அல்ல என்பதையும் நீ ஒருநாள் முழுமையாகப் புரிந்து கொள்வாய் என்று நான் விரும்புகிறேன்; என்னாலன்றி கண்ணிமைக்கக் கூட உன்னால் இயலாது, ஆகவே, உன்னை என்னிடம் விட்டுவிடு; உன் கற்பனை உன்னை ஏமாற்ற விடாதே; நான் உன்னை அன்பு செய்கிறேன், நீ விழுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்; வேறு எதையும் இன்றி என்னை மட்டும் நேசிப்பாயாக; உன்னிடம் இருப்பதையும், நான் உனக்குத் தருகிற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்; மக்களின் புறணிக்கு செவி கொடாதே; என்னைச் சார்ந்திரு, ஏனெனில், இது என் வேலை; கற்பனை எப்போதும் உன்னைத் தவறாக வழிநடத்துகிறது; காரியங்கள் தாங்களாகவே நிகழ்கிறபடியே நிகழட்டும், நான் செயல்படும் விதம் இதுதான்; காரியங்களை, நிகழ்வுகளைப் பிடித்துத் தள்ளாதே; உந்தித் தள்ளுவதன் மூலம், நீ என்னையும் வெளியே தள்ளுகிறாய்; ஆகவே, ஒன்றுமில்லாமையாகவே தங்கியிரு, அப்படியே நிலைத்திரு, எல்லாம் என்னிடமிருந்தே வரட்டும்; ஆண்டவரே, இறை ஏவுதலுக்கும், என் கற்பனைக்கும் இடையுள்ள வித்தியாசத்தை நான் எப்படி அறிய முடியும்? அது கடினமானது. அன்புக்குரியவளே, இதை நான் உனக்குச் சொல்கிறேன்; நீ எடுத்து வைக்க விரும்புகிற ஒவ்வொரு அடியிலும், முதலில் என்னிடம் வா; வந்து என் ஆலோசனையைக் கேள்; ஆலோசனை மற்றும் அறிவுரையின் பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபி; ஒவ்வொரு அடி என்று நான் சொல்லும்போது, நீ தொடங்க விரும்புகிற எல்லாவற்றையும் நான் குறிப்பிடுகிறேன், அந்த ஒவ்வொரு முறையும் நீ முதலில் என்னிடம் வா, நான் உன்னை வழிநடத்துவேன்; நீயாகவே ஒருபோதும் எந்தத் திட்டமும் வகுக்காதே; வசுலா, பகுத்தறிவுக்காக ஜெபி; அவசரப்படாதே, நீ பிறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே நான் என் திட்டங்களை வகுத்துவிட்டேன்; மகளே, உலகத்திற்கு என் செய்தியை அறிவிக்கவும், அதைப் பரப்பவும் நான் உன்னை ஏற்படுத்தியிருக்கிறேன், ஆனாலும், அவர்களை நீ நம்ப வைக்க வேண்டும் என்று நான் உன்னிடம் கேட்கவில்லை என்பதை நினைவில் வை; கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்; ஆகவே, மலரே, என் எல்லாப் போதனைகளையும் நினைவில் வைத்திரு; நாங்கள், நாம். ஆம்? என் ஆண்டவரே. டிசம்பர் 28, 1988 ஜெபக்குழுவிற்கான செய்தி. நானே ஆண்டவர்; என் மலர்களே, சமாதானத்தில் இருங்கள், ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய நான் சமாதானமாக இருக்கிறேன்; என் அன்பிற்குரிய படைப்பே, நான் உன்னை எவ்வளவாக அன்பு செய்கிறேன்! நீ எனக்கு விளையேறப்பெற்றதாக இருக்கிறாய்; மலர்கள் என்று நான் பெயரிட்டுள்ள நீங்கள், வளருங்கள், என் தெய்வீக ஒளியில் வளருங்கள்; இன்னும் என் ஒளியைக் காணாதிருக்கும் உங்கள் சகோதரர்களுக்காக ஜெபியுங்கள்; அவர்களுடைய மனம் திரும்புதலுக்காக ஜெபியுங்கள்; மலர்களே! உங்களுக்கு நீர் பாய்ச்ச நான் எண்ணுகிறேன்; ஆம்! என் சிற்றாறு ஒர் ஆறாக மாறும், என் ஆறு, சமாதானம் மற்றும் அன்பின் பெரும் கடலாகப் பெருகும்; என் ஒளியை எல்லாவிடங்களுக்கும் அனுப்புவேன் என்றும், 'அனைத்து எதிர்கால சந்ததிகளுக்கும் ஒரு தந்தை வழி சொத்தாக, இறைவாக்கைப் போல, நான் என் போதகத்தைப் பொழிவேன்' என்றும் நான் சொல்லியிருக்கிறேன்; குறிப்பு: சீராக் 24 ஆம் அதிகாரம், இறைவார்த்தை 33. நான் உங்களைத் தேற்றுகிறவராகவும், அனைவரிலும் அதிகமாக உங்களை நேசிப்பவருமாக இருக்கிறேன்; மலர்களே, நீங்கள் இருளின் காலம் ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்; இந்த இருள் துன்பங்களையும், பேரிடர்களையும், வறட்சியையும் மட்டுமே கொண்டு வருகிறது; இக்காலங்களில் பலர் தெய்வீகத்தைப் பற்றிய உணர்வை இழந்து, தங்கள் விருப்பப்படி வாழ்வார்கள் என்றும், தீமையிலிருந்து நன்மையை பிரித்தறிய முடியாதவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது; மலர்களே, ஓர் ஆன்மா உலக ஆதாயத்தைக் கொண்டு தன்னை நிரப்பி, உலகம் தனக்குத் தருவதோடு தன்னை இணைத்துக் கொள்ளும்போது, அது இருளால் தான் நிரப்பப்பட தன்னை அனுமதித்து விட்டது, இவ்வாறு பரிசுத்தத்தனத்திற்கோ இடமில்லாமல் செய்துவிட்டது, அதில் என் ஆவி வளர இடமில்லை, உண்மைக்கு இடமில்லை, என் ஒளிக்கு இடமில்லை; அது இருளில் வாழ்கிறது; அதனால்தான் இந்த இளம் தலைமுறையில் பெரும் பகுதியிடம் ஆன்மீகம் குறைவுபடுகிறது, அது என் வார்த்தையைக் கேட்கவும், என்னைக் கடவுளாக ஒப்புக்கொள்ளவும் மறுக்கிறது; அவர்கள் தங்களை இழிவுபடுத்துகிற ஆசாபாசங்களின் பின்னால் ஓடுகிறார்கள், ஏனெனில், அவர்கள் தெய்வீக உண்மையைக் கைவிட்டு விட்டார்கள், உலகத்தன்மையான நோக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்; என் மலர்களே, உங்களில் ஒருவனே கூட இந்த இருளில் நடப்பதையும், களையாத ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதையும் கண்டு, உங்களில் எவ்வளவு அதிகமானோர் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன்! ஆனாலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆண்டவராகிய நான் அவர்களுடைய கதவுக்கு வெளியே இருக்கிறேன்; அவர்கள் என் குரலைக் கேட்கும் வரை, அவர்களுடைய கதவைத் தட்டியபடி நான் அங்கேயே எப்போதும் இருப்பேன்; கதவைத் தட்டுவதில் நான் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன், நான் ஒருபோதும் அவர்களைக் கைவிடவே மாட்டேன்! ஒரு நித்திய அன்பால், எவ்வளவோ அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிற இந்த அன்பால், நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்வேன்! உங்கள் எல்லாப் பிரச்சனைகளோடும் என்னிடம் வந்து, அவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு, ஓய்வெடுங்கள்; வந்து என் மீது சாய்ந்து கொள்ளுங்கள்; நான் உங்களைத் தேற்றுகிறவர், நான் உங்களுக்கு என் சமாதானத்தைத் தந்து, உங்களைத் தேற்றுவேன்; உங்கள் கனிவுமிக்க மீட்பரிடம் வாருங்கள், நான் உங்கள் காயங்களைக் குணமாக்குவேன்; என்னிடம் மன்றாடுவதிலும், என்னிடம் ஜெபிப்பதிலும் ஒருபோதும் சோர்ந்து போகாதீர்கள்; நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன்; நான் உங்களை அன்பு செய்கிறேன், உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன், நான் உங்கள் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதிக்கிறேன்; பிற்பாடு, நம் பரிசுத்த அன்னை: குழந்தைகளே, இயேசுவை நெருங்கி வாருங்கள், அவர் தம் சிலுவையில் இருந்து உங்கள் அனைவரையும் அழைக்கிறார்; இயேசு உங்களை அன்பு செய்கிற அளவுக்கு நீங்கள் ஒருவரையொருவர் அன்பு செய்வதன் மூலம் அவரை மகிழ்வியுங்கள்; ஏனெனில், திருச்சட்டம் முழுவதும் ஒரே ஒரு கட்டளையில் சுருக்கப்பட்டுள்ளது; 'உன்னைப்போல் உன் அயலானை அன்பு செய்;' குறிப்பு: கலாத்தியர் ஐந்தாம் அதிகாரம், இறைவார்த்தை 14. அவருடைய இதயத்தில் சமாதானத்தையும், அன்பையும் கண்டடையுங்கள், அவருடைய சமாதானத்தையும் அன்பையும் எடுத்து, அதை உங்கள் மத்தியில் பரப்புங்கள்; அவருடைய தெய்வீக அன்பைக் கொண்டு, உலகம் முழுவதும் நனையுங்கள்; என் திருமகன் உங்களுக்குத் தருகிற இந்த மகிழ்ச்சியைக் கொண்டு, உங்கள் ஆன்மாவை நிரப்புங்கள்; சிறியவர்களே, ஜெபியுங்கள், ஜெபியுங்கள், உங்கள் இறைவனோடு உரையாடுங்கள், பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவோடு இடையறாத தொடர்பில் இருங்கள்; பக்தியார்வத்தோடு ஜெபியுங்கள், உங்கள் ஜெபங்கள் அவரை வந்தடையட்டும்; அன்போடு ஜெபியுங்கள், அவர் உங்கள் ஜெபங்களை உணரச் செய்யுங்கள்; ஓ குழந்தைகளே, நான் எவ்வளவாக உங்களை நேசிக்கிறேன்! நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன், நீங்கள் இந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது, நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் உங்கள் இல்லங்களுக்குள் நுழையும் போது, நான் உங்களோடு இருப்பேன்; நாங்கள் எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறோம், என்றென்றும் அப்படியே இருப்போம்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; நாங்கள், நாம்; தமது ஜெபக்கூட்டத்தில் கலாத்தியர் ஐந்து, மற்றும் ஆறாம் அதிகாரங்களை வாசிக்கும்படி ஆண்டவர் என்னிடம் கேட்டார், நானும் அவற்றை வாசிப்பேன்.