இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 65. மார்ச் 24, 1988 சமாதானம் உன்மீது இருப்பதாக; இது புனித மாமரி. நான் உன்னை நேசிக்கிறேன்; கடவுளை மகிமைப்படுத்து, ஆன்மாக்களின் இரட்சிப்பிற்காக ஜெபி; அவருடைய செய்தியைத் தாங்கிச் செல்பவளாக இருந்து, அவருடைய சித்தத்திற்குக் கீழ்படிவதன் மூலம் அவரை மகிமைப்படுத்து; ஆன்மாவே, அவர் உன்னைக் கனிவோடு நேசிக்கிறார்; எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; வந்து அவரிடம் இப்படிச் சொல்லி ஜெபிப்பாயாக; எல்லாம் வல்ல இறைவா, உம் ஊழியனுக்கு உம் வழிகளைக் கற்பித்தருளும்; தாழ்ச்சியையும், பொறுமையையும், அன்பையும் எனக்குக் கற்பித்தருளும்; உம் நீதி மற்றும் புண்ணியங்களின் பாதையில் என்னை வழிநடத்தும்; நான் என் சித்தத்தை உமக்கு ஒப்புக்கொடுத்து, என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன்; என் பாவங்களை மன்னியும் என்னைப் புதுப்பியும்; நீர் என்னை முழுமையாக பயன்படுத்தும்படியாக என்னைத் தகுதி உள்ளவளாக்கும், ஆமென்; ஆ வசுலா, நான் எப்போதும் உன்னைக் கவனித்துக் கொள்வேன், என் கரத்தைப் பிடித்துக்கொள்; திருச்சபை புத்துயிர் பெறும்; இறுதியில் எங்கள் இதயங்கள் வெற்றி பெறும்; குறிப்பு: இயேசுவின் இருதயமும், அவர்களுடைய இருதயமும். என் காட்சிகள் கடவுளின் பணிகளைச் செய்யும் ஆன்மாக்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தரப்படுபவை; அவை எங்களிடம் திரும்பி வருவதற்கான ஓர் அழைத்தல், ஓர் எச்சரிக்கை; இந்த ஆண்டு, நான் அநேகருக்குக் காட்சி தருவேன்; நான் காட்சிகள் தருவேன், காட்சி காண்பவர்கள் இருப்பார்கள்; பரிசுத்த திருச்சபை, கடவுளின் எல்லாக் கைவேலைகளும், அவநம்பிக்கையும், இழிஉணர்ச்சியும் இல்லாமலும், சந்தேகம் இல்லாமலும் வரவேற்கப்பட்ட அதன் தொடக்க நிலைக்கு திரும்பி வரும்படி ஜெபி; பரிசுத்த திருச்சபையின் விசுவாசம் கடந்த காலங்களில் இருந்தது போல மீண்டும் புதுப்பிக்கப்படும்; புதுமைகளிலும், காட்சிகளிலும், காட்சி தியானங்களிலும் விசுவாசம் கொள், ஏனெனில் இது ஒரு புதுப்பித்தலைக் கேட்டு, உங்களிடம் பேசுகிற கடவுளின் ஒரு வழியாக இருக்கிறது; புனித மாமரியே, உங்களுக்கு நன்றி. குறிப்பு: நமக்காக ஜெபிக்கும்படி நான் புனித மாமரியிடம் கேட்டேன். கவலைப்படாதே, நான் பகலிலும், இரவிலும் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்; இதோ இயேசு; வசுலா, நான்தான்; குறிப்பு: இயேசுவை நான் பகுத்துணர்ந்தேன்; ஆனால் நான் நிச்சயம் இல்லாமல் இருந்தேன். ஆன்மாவே, என்னைப் பார், நான் அவர்களில் பரிசுத்தத்தனம் எதையும் காணவில்லை; இயேசுவே, உம் இன்றைய பணிகளை மறுதலிக்கிறவர்களிலா? ஆம், ஒன்றுமில்லை, நான் என் சிலுவையிலிருந்து கூக்குரலிடும் ஒவ்வொரு தடவையும், அதே கணத்தில், எனக்குச் சொந்தமானவர்களில் யாராவது ஒருவன் சாத்தானுக்கு வழிவிடுவதை நான் காண்கிறேன்; வசுலா, என் சொந்தமே, என் குருவே, நான் உன்னை நேசிக்கிறேன்; குறிப்பு: 1 ராயபார் 2:9. இயேசுவே, பெண் குருக்கள் அனுமதிக்கப்படாதபோது, நீர் ஏன் என்னைக் குரு என்று அழைக்கிறீர்? ஆன்மாவே, நான் உன்னை அர்ச்சித்திருக்கிறேன்; ஆன்மாவே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; உன் ஆன்மாவை என் கண்கள் காண்கின்றன என்பதை, என் இருதயம் உன் ஆன்மாவை உணர்கிறது என்பதைப் புரிந்துகொள்; நான் உன் உடலை அல்ல, உன் ஆன்மாவை நேசிக்கிறேன்; உன் ஆன்மா உன் உடலுக்குள் இருக்கிறது; முயற்சி செய்து என் வார்த்தைகளைப் புரிந்துகொள், குறிப்பு: இந்தப் பகுதியை நாம் தவறாக புரிந்துகொள்வதை இறைவன் விரும்பவில்லை; நம் உடல் கடவுளின் தேவாலயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; இருந்தாலும், கடவுள் நம் ஆன்மாவில் வேலை செய்து அதை அலங்கரிக்கிறாரே தவிர நம் உடலை அல்ல. உன் கடவுளாகிய நான் அதைப் பார்க்கிற விதத்தில் பார்; முயற்சி செய்து என் வார்த்தையைப் புரிந்துகொள்; உன் கடவுளாகிய நான் அதை பார்க்கிற விதத்தில் அதைப் பார்; குறிப்பு: இந்த பகுதியை நாம் தவறாக புரிந்துகொள்வதை இறைவன் விரும்பவில்லை; நம் உடல் கடவுளின் தேவாலயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; இருந்தாலும், கடவுள் நம் ஆன்மாவில் வேலை செய்து அதை அலங்கரிக்கிறாரே தவிர நம் உடலை அல்ல. கடவுளுக்கு முக்கியமானது ஆன்மாதான்; ஒரு ஆன்மா மரணத்திற்கு பின் மோட்சத்திற்குப் போகிறது, அங்கே அதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை; எல்லா ஆன்மாக்களும் தேவதூதர்களைப் போல் இருக்கும்; இயேசு ஆன்மாவைத்தான் பார்க்கிறாரே தவிர, அதை சுமக்கிற உடலை அல்ல; இதனால் அவர் தாம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மத்தியில் வேற்றுமை பாராட்டுவதில்லை. நான் உன்னை நேசிக்கிறேன்; என் பாத சுவடுகளில் நட; வா, நாங்கள், நாம்; ஆம், ஆண்டவரே. மார்ச் 26, 1988 என் இறைவா, இப்போதெல்லாம் உன் தெய்வீக திருமுகத்தில் நின்று என் கண்களை விலக்க என்னால் முடிவதில்லை, என் கண்கள் முடிவற்ற ஆராதனை மணி வேளைகளில் உம் மீது பதிந்துள்ளன; என் மனம் அன்புக்குரிய தந்தையாகிய உம்மிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடியாது; என் மனம் உம்மில் உம்மோடு ஈர்க்கப்பட்டுள்ளது; நான் உமக்காக வாழ்கிறேன்; உமக்காக சுவாசிக்கிறேன்; என் மகிழ்ச்சியும் என் புன்னகையும் நீரே; நான் முடிவற்ற விதமாக உம்மை விசுவசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன்; உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். ஆமென். ஆன்மாவே, நான் உன்னை நேசிக்கிறேன்; சமாதானம் உன்மீது இருப்பதாக; என்னை ஆராதி; ஆசீர்வதிக்கப்பட்டவளாக இரு; உன் கடவுளாகிய என்னை எதிர்கொள்; என்னை மகிழ்ச்சிப்படுத்து! நான் இந்த நேரம் வரவேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன்; உன்னை என் அருகில் கொண்டு வருவதற்கு நான் மிக அதிகமாக ஏங்கி இருக்கிறேன்! ஆண்டவரே, உம் திருப்பெயர் ஸ்துதிக்கப்படுவதாக! என் பரிசுத்த இதயத்தின் ஆழங்களில், நான் உனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கிறேன்; உன் இல்லம் என் பரிசுத்த இதயத்தில் இருக்கிறது; வா! என்னிடம் வா; எனக்கு சுமார் 10 வயதாய் இருந்தபோது நான் கண்ட அதே காட்சியையும் "வா, என்னிடம் வா" என்ற வார்த்தைகளையும் இயேசு மறுபடியும் எனக்குத் தந்தார்; அதுதான் இயேசு எனக்கு விடுத்த முதல் அழைப்பாக இருந்தது. வா, நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, என்னைப் பற்றிக்கொள்; நான் உன்னை நடத்திச் செல்வேன்; நீ தொடக்கத்திலிருந்தே எனக்குச் சொந்தமாய் இருந்தாய்; மகளே, நீ என்னை நேசிக்கிறாயா? ஆண்டவரே, பைத்தியமாகும் அளவுக்கு. என்னை நேசிப்பது என்னை மகிமைப்படுத்துகிறது; உன்னைச் சுத்தமாக்குகிறது; என் பாதச் சுவடுகளைப் பின்பற்றி வா; அவை நீ இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிற இடத்திற்கு உன்னை அழைத்து வரும்; நாம் ஜெபிப்போம், பரிசுத்த ஆவியானவரே, எங்கள் மீது இறங்கி எங்களைப் புதுப்பித்தருளும்; உம் அன்பால் எங்கள் ஆன்மாவை நிரப்பும்; வதைக்கப்பட்டுள்ள எங்கள் ஆன்மாவில் இளைப்பாறி, எங்களுக்கு சமாதானத்தைத் தந்தருளும்; உம் இறக்கைகளால் எங்களை மூடி எல்லா தீமையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும்; எங்களைத் தாழ்த்தும் உம் ஆசைகளைக் காணவும்; அதன் மூலம் அவற்றை நிறைவேற்றவும்; எங்களால் இயலும்படியாக உம் ஒளியில் எங்களை வழிநடத்தும்; ஆமென்; மார்ச் 29, 1988 இயேசுவே, ஓ இயேசுவே, காட்சிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஏளனம் செய்கிற திருச்சபை அதிகாரிகளுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நாங்கள் ஆதரவற்றவர்கள். குறிப்பு: பெயத்ரிஷ்சும் நானும். உண்மையைத் தேடுங்கள்; காட்சிகளில் அல்ல என்ற இந்த மிக சமீபத்திய அறிக்கையைப் போன்ற அறிக்கைகளைப் பற்றி எங்களுக்கு எந்த அறிவும் இல்லை; இது ஒரு கத்தோலிக்க குருவால் என் தோழி பெயாத்ரீஸிடம் சொல்லப்பட்டது; அவள் எதுவும் சொல்ல முடியவில்லை, என்னாலும் எதுவும் சொல்ல முடிந்திருக்காது; ஆண்டவரே, நாங்கள் ஆதரவின்றி இருக்கிறோம்! மலரே, நானே உண்மை; என் வார்த்தையே உண்மை என்பதில் நான் உன்னை உறுதிப்படுத்துவேன், குறிப்பு: வேதாகமங்கள். ஆனால் எனக்குச் சொந்தமானவர்களில் பலர் என் வார்த்தைகளை மறந்துவிட்டார்கள்; இதயம் இறுகிப் போனவர்களாக, அவர்கள் இருளில் தேடுகிறார்கள்; மனிதகுலம் முழுவதன் மீதும் நான் என் ஆவியை ஊற்றுவேன் என்றும் என் குழந்தைகள் மீண்டும் இறைவாக்கு உரைப்பார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது, குறிப்பு: இயேசு மிக மிகக் கோபமாக இருந்தார்; கத்தியபடி; அந்நாளில் தேவாலயத்தில் தாம் பரிசேயரை நோக்கிக் கத்தியதை இயேசு எனக்கு நினைவுபடுத்தினார். நான் பலருக்கு கனவுகளையும் காட்சிகளையும் கொடுப்பேன்; மிகச் சிறியவர்களுக்கும் நான் அவற்றைக் கொடுப்பேன்; நான் உங்களுக்கு நம்பிக்கையைத் தந்து, வானத்திலும் பூமியிலும் அடையாளங்களைக் காட்டி உங்களை உற்சாகப்படுத்துவேன்; இவையே இன்றைய என் அடையாளங்களாக இருக்கும்! குறிப்பு: யோவேல் 3:1; அப்போஸ்தலர் 2:17-20. குழந்தையின் வாயினின்றும் நீங்கள் உண்மையைக் கேட்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்! ஆகவே என் இன்றைய தெய்வீகப் பணிகளை கண்டனம் செய்பவர்களிடம் நான் இப்படிச் சொல்கிறேன்; உங்கள் விசுவாச மறுதலிப்பு உங்களை கண்டனம் செய்து கொண்டிருக்கிறது!! குறிப்பு: இயேசு இன்னும் சத்தமாகக் கத்தியபடி மிகக் கடுங்கோபத்துடன் இருந்தார்! விசுவாசியாதவர்களும் என் தோட்டத்தைப் பாழாக்குபவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, மனம் திரும்புங்கள்! வா, குழந்தாய், நான் உன்னை நேசிக்கிறேன்; என் சமாதானத்தைக் கொண்டிரு; என்னிடமிருந்து வாங்கி உண்ணு, என்னைப் பற்றிக்கொள்; நான் உன் அருகில் இருக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! என் போதனைகளை அனுசரிக்கவும், அவற்றைப் பின்பற்றவும் முயற்சி செய்; ஆண்டவராகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நீ இருக்கும் இடத்தில் எல்லாம் நான் பிரசன்னமாய் இருக்கிறேன்; ஆகவே நீ என்னைக் காணும்போது என்னைப் பார்த்துப் புன்னகை செய்!... எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே; நீதி வெற்றிகொள்ளும், என் இல்லம் நேர்மையால் சூழப்பட்ட எளிமையைக் கொண்டு புதுப்பிக்கப்படும்; குழந்தாய், உன் மீது என் தேவ வார்த்தைகளைப் பதிக்க என்னை அனுமதி; நான் உன்னைக் கைவிடமாட்டேன்; என் இதயத்தில் இளைப்பாறு, உன் ஆண்டவர் உன் இருதயத்தில் இளைப்பாறுவாராக; இயேசுவே, உம் சித்தத்தைச் செய்ய எனக்கு பலமும், விசுவாசமும், அன்பும் தாரும். உமக்கு கீழ்படியவும், என்னையே தாழ்த்தவும் எனக்குக் கற்பியும், என்னை ஒடுக்குவோரை மன்னிக்கவும், தீமைக்குப் பிரதிபலனாக அன்பு செலுத்தவும் எனக்குக் கற்பியும். வசுலா, நான் உனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன்; ஆம், என்னைப் பார்த்துப் புன்னகை செய், குறிப்பு: நான் அவரைப் பார்த்து புன்னகைத்திருந்தேன். என் பிரசன்னத்தில் விசுவாசம் கொள்; எனக்குப் பிரமாணிக்கமாக இரு; என் பிரதிபலிப்பாக இரு; ஆம், வசுலா, என் திருவுடல் வலிக்கிறது; மிகச் சரியாக என் இதயத்தின் மையத்தில் ஈட்டி முனை இருக்கிறது; ஆண்டவரே, எங்கே? என் ஸ்தாபனத்தின் பலிபீடப் பகுதியிலும் அதன் உள்ளாழங்களிலும், என் பரிசுத்த இதயம் இரத்தம் வடித்துக் கொண்டிருக்கிறது; என் அவஸ்தையில் நான் அவர்களை எச்சரிக்க முயன்றேன்; மகளே, எழுந்திரு! திருச்சபைக்கு நீ தேவைப்படுகிறாய்; என் வீடு விசுவாச மறுதலிப்பாலும், அக்கிரமத்தாலும் இருளில் கிடக்கிறது; அவர்களுடைய பாவங்களின் காரணமாக என் மந்தை சிதறடிக்கப்பட்டுவிட்டது; ஆ, இராயப்பா!! என்று என் சிலுவையிலிருந்து நான் எப்படி கூக்குரலிடுகிறேன்? குறிப்பு: இராயப்பா என்பது ஒரு நீண்ட கூக்குரலாக இராயப்பா என்று அலறலாகச் சொல்லப்பட்டது. நீ எனக்குப் பிரமாணிக்கமாக நிலைத்திருந்தாய் என்று நான் அறிந்திருப்பதால் நான் உன்னிடம் வருகிறேன்; ஓ இராயப்பா, என் இதயத்தைப் பார்...... குறிப்பு: இது அதிகமாக ஒரு துன்பப் புடம்பலாகவே இருந்தது. அன்புள்ள ஆன்மாவே, என் கூக்குரல்களைக் கேள்; ஆண்டவராகிய நான் அந்த காயின்களில் அன்பை, பரிசுத்தத்தனத்தைக் காணவில்லை; அவர்கள் பலராக இருக்கிறார்கள்; அவர்கள் என் இல்லத்தைப் பாழ்படுத்தி விட்டார்கள்; அவர்களது கரங்கள் வெறுமையாக இருப்பதால், என் ஆட்டுக்குட்டிகள் எதை உண்டு பசியாறும்? அவர்கள் என் ஸ்தாபனத்தை ஒரு பாலைவனமாக்கி விட்டதால் என் ஆட்டுக்குட்டிகளுக்கு தர அவர்களிடம் ஏதுவும் இல்லை; இராயப்பா, ஜெபி; உன் கண்கள் மேலிருந்து இந்த வனாந்தரத்தைக் காணும்படி நான் உன்னை உயர்த்துவேன்; என் இதயத்தின் காயத்தினுள் நீ ஊடுருவ; நான் உன்னை அனுமதிப்பேன்; ஈட்டியின் முனையை நீ காண; நான் உன்னை அனுமதிப்பேன்; அதைக் காணும்போது உன் இதயம் வேதனையால் கதறும்; இராயப்பா, அதை வெளியே இழுக்கத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் நான் உனக்குத் தருவேன்; குறிப்பு: இயேசு கடும் அவஸ்தையில் இருந்தார்; என் பிரதிபலிப்பாக இரு என்று இயேசு சொன்னபோது ஒரு சில வரிகளுக்குப் பிறகு அந்நாளின் செய்தி முடிந்துவிட்டது என்று எண்ணி நான் எழுந்தேன்; ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு அழைப்பு இருக்கும்போது அல்லது வரும்போது இந்த விசேஷ தூண்டுதலை நான் பெற்றுக்கொண்டேன்; நான் என்னில் கடவுளின் அவஸ்தையை உணர்ந்தேன்; நான் உணர்ந்தது அவரிடமிருந்தே வந்தது என்பதை நான் அறிந்திருந்தேன்; ஏனெனில் அது என் உடல் வழியாகச் சென்று, என் மீது பிரதிபலித்தது; நான் அவருடைய கடும் வேதனையின் கதறலைக் கேட்டேன்; ஆகவே நான் வேகமாகத் திரும்பிச் சென்றேன்; என் கண்களில் இருந்த பல கண்ணீர்த் துளிகளால் என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை; இயேசு துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்; அவர் வேதனையில் இருந்தார்; இதைச் சொல்வதும் எழுதுவதும் அவரைப் புண்படுத்தியது; பிற்பாடு. வசுலா, இருளில் நடக்கிற ஆன்மாக்களால், கறைகளால் நிரம்பியுள்ள ஆன்மாக்களால், நான் அடையும் கடும் வேதனை என் இதயத்தைப் புண்ணாக்குகிறது; என் வசுலா, நான் அவளுடைய வாசலுக்கு வெளியே நின்று தட்டுகிறேன், ஆனால் அவள் திறக்க மறுக்கிறாள், அவளுடைய அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் அவளுடைய இரட்சகருக்கு இடமில்லை; அவளுடைய ஆன்மா இருளின் ஆழத்தில் அதிகம் அதிகமாக அமிழ்ந்து போகிறது; நான் அறிவு மற்றும் பகுத்தறிதலின் வரப்பிரசாதத்தை அவளுக்கு தந்திருக்கிறேன் என்றாலும், உள்ளே வர என்னை அவள் அனுமதிக்காத வரையிலும், மாறுவது அவளால் இயலாத காரியம்; நான் எதையும் கேட்கவில்லை; கொஞ்சம் அங்கீகாரத்தை கொஞ்சம் அன்பை மட்டுமே நான் கேட்கிறேன்; பார்த்தாயா, வசுலா? இயேசு துயரமாக இருந்தார்; அவளைப் படைப்பது எனக்கு ஒரு இன்பமாக இருந்தது, ஆனால் அவள் என்னை வெளியே விட்டு கதவை அடைத்திருப்பதால் இதையெல்லாம் அவள் அறிவாளா? ஆம், வசுலா; குறிப்பு: இயேசு இவ்வளவு துயரமாக இருப்பதைக் காண்பது என்னை அழச் செய்தது; என் வசுலா, என்னை நேசி; நீ என்னைத் தேற்றுகிறாய்; என் மீது அன்பில்லாதவர்களுக்கு நீ ஈடு செய்; இயேசு இப்போது ஒரு சில நாட்களாக எங்களோடு தங்கியிருக்கிற எங்கள் குடும்பத்தில் ஒருவரான ஒரு விருந்தாளியின் நிமித்தமாக இதை எழுதினார்; இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்டு அவற்றை வாசிக்கத் தரும்படி அவள் என்னிடம் கேட்டாள்; அக்டோபர் 1987 முதல் சில செய்திகளை அவள் வாசித்துவிட்டு, அதன்பின் அதை வைத்துவிட்டாள்; அதன்பின் கொட்டாவி விட்டபடி, நான் ஓய்வு பெறும் வயதை அடையும்போது என் ரோஜாத் தோட்டத்தையும், என் ஞான வாழ்வையும் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வேன்; ஆனால் இப்போது அல்ல என்று சொன்னாள்; தன் வினோதப் பிரியத்தைத் திருப்தி செய்யவும் இந்த எழுதும் நிகழ்வை கவனிக்கவும் ஏதுவாக, நான் எழுதும்போது அதைப் பார்க்க அனுமதிக்கும்படி அவள் கேட்டாள்; ஆனால் நான் அவளுடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டேன்; இதற்காக யாரையாவது கடவுளை அழைத்தால் தவிர யாரும் என்னை பார்ப்பதில்லை; இது இருமுறை நிகழ்ந்தது; ஒருமுறை ஒரு சிறப்பான தருணத்தில்; அதன்பின் டாக்காவில் உள்ள கத்தோலிக்க அருட்கொடை மையத்தில்; அது பரிசுத்தமானது; அதை வினோதப் பிரியத்தினால் அவமதிக்கக் கூடாது; மார்ச் 30, 1988 இன்று, சாத்தான் நம்பிக்கை இழக்கும் நிலையில் இருந்தான்; இந்தச் செய்திகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் நான் எழுதுவதையும் கடவுளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட வேண்டும் என்றும் என்னை சம்மதிக்கச் செய்ய அவன் மிகக் கடுமையாக முயன்றான்; நான் மீண்டும் திடப்படுத்தப்பட வேண்டிய தேவையில் இருந்தேன்; ஏனெனில் என் பலவீனம் என்னை அடிப்பகுதியை நோக்கி இழுத்தது; என் சந்தேகத்தின் பலவீனத்தை உணர்ந்தவளாக இறுதியில் கடவுள் என்னை குறித்து களைப்படைந்து, தம் பொறுமையை இழந்து விடுவார் என்றும் நான் பயப்படுகிறேன். மலரே, எனக்கு அஞ்சாதே, நான் உனக்கு தீங்கிழைக்கவோ, அல்லது உன்னை மறுதலிக்கவோ மாட்டேன். இப்போது என்னிடமிருந்து உன்னைத் தள்ளிவிடும்படியாகவோ உன்மீது எந்த கோபத்தையோ அல்லது கடுமையையோ காட்டும்படியாகவோ நான் உன்னை என்னை நோக்கி உயர்த்திக் கொண்டு வரவில்லை; நான் கனிவோடும், அன்போடும் உன்னை உருவாக்கி இருக்கிறேன்; நான் அன்போடு உன்னை வழிநடத்தி இருக்கிறேன், அன்போடு உன்னைப் போஷித்தேன்; நான் மென்மையாக உன்னோடு பணி செய்தேன்; எனக்கு அஞ்சாதே; வா, நான் சாந்தமும் மென்மையும் உள்ளவன் என்பதைக் கற்றுக்கொள்; ஆன்மாவே, சமாதானம் உன்மீது இருப்பதாக நான் உன்னை நேசிக்கிறேன்! ஆண்டவரே, உம் பொறுமைக்காகவும் என்னை காக்க நீர் ஓடி வருவதற்காகவும் உமக்கு நன்றி; ஆண்டவரே, நான் உம்மை வாழ்த்துகிறேன்; மார்ச் 31, 1988 வசுலா, இது ஆண்டவராகிய நான்தான் என்பதில் ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே; அஞ்சாதே; இது இயேசுவாகிய நான்தான்; இதெல்லாம் கடவுளிடமிருந்து வராதவையாக இருக்கலாம் என்ற பயத்தில் நான் கடும் அச்சவசப்பட்டேன்; ஆனால் அப்படி இருந்தால், இதெல்லாம் எப்படி எழுதப்பட்டன? நான் குழப்பமடைகிறேன்.... வசுலா, இது உன்னை இரட்சித்தவரும், மரித்தோரிடமிருந்து உன்னை எழுப்பியவருமாகிய இயேசுவாகிய நான்தான்; வா, அஞ்சாதே.... என் திருச்சபையை வளர்க்க நான் விரும்புகிறேன்; தப்பறை ஊடுருவி, அதன் மூலம் சத்தியத்தைக் குழப்பி உங்கள் மத்தியில் பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கிவிட்டது; உண்மையிலிருந்து நீங்கள் விலகிப் போகச் செய்துவிட்டது; என் திருச்சபைக்கு உயிரூட்டுதல் தேவைப்படுகிறது; என் ஆட்டுக்குட்டிகளுக்குத் தர தங்களிடம் எதுவும் இல்லாத குருக்களுக்காகவும், ஆயர்களுக்காகவும் கருதினாள்களுக்காகவும் ஜெபி, ஏனெனில் அவர்கள் விலகிச் சென்றதன் விளைவு இதுவே; அவர்கள் செயலற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்; இன்னும் அப்படியே இருக்கிறார்கள், என் ஆவல்களை ஒருபோதும் தேடாமல் தங்கள் ஆவல்களையே தேடுகிறார்கள்; அவர்கள் தங்களுக்குள் ஒரு பாலைவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்; அதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்; எந்த ஆட்டுக்குட்டியும் வனாந்தரமான இடத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை; ஆடுகளைப் பாதுகாக்க ஆயன் யாரும் இல்லாததால் இயல்பாகவே எந்த ஆட்டுக்குட்டியும் வழி தவறி அலைந்து கொண்டிருக்கும்; அவற்றை நேசி; அவற்றிற்கு அடைக்கலம் தந்து அவற்றிற்கு உணவளி; காலங்களின் தொடக்கத்திலிருந்தே அநேக அற்புதங்களை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்; அன்பிற்குரியவளே, உலகம் என் விண்ணகப் பணிகளை மறுதலித்து உன்னிடமிருந்து எல்லா நம்பிக்கைகளையும் அகற்றி, அதன் மூலம் என்னைத் தனிமைப்படுத்தி விட்டதால், இந்த மேய்ப்பர்களுக்கு எதிராக என் கோபம் பற்றி எரிகிறது; என் மகிமையை அவர்களுக்கு நான் வெளிப்படுத்தவிருக்கும் காலம் அண்மையில் உள்ளது; அது ஓர் அடையாளத்தினால், ஒரு மகத்துவமுள்ள அடையாளத்தால் காட்டப்படும்; அதன் மூலம் தாங்கள் எவ்வளவு தவறானவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்; பலர் விசுவசிக்கும்படியாக உனக்கு இந்த அடையாளம் தரப்படும்; ஜெபி; ஏனெனில் காலம் அண்மையில் உள்ளது; சமாதானம் மற்றும் அன்பின் மாபெரும் திரும்புதலுக்காக ஜெபி;