வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 12. ஜனவரி 1, 1987. நள்ளிரவுக்குச் சற்றுப் பிறகு. இறைவனாகிய நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன்; என் மீதான உங்கள் அன்பை அதிகரியுங்கள்; பிற்பாடு; சமாதானம் உன்னோடு இருப்பதாக; இறைவனாகிய நான் இங்கே இருக்கிறேன்; இப்போது உன் அன்பை எனக்கு ஒப்புக்கொடுத்து, நான் அக்களிக்க அனுமதி; யாவேயாகிய நான் உன்னில் இன்பம் காண்கிறேன்; ஆண்டவரே, பழைய ஏற்பாட்டில் உள்ளது போல, நீர் எப்போதும் யாரையாவது உம் தூதராய் இருக்கும்படி தேர்ந்தெடுக்கிறீரா? எப்போதும் எங்களோடு பேசுவீரா? இதோ என் பதில்: யாவே, சாபாவோத்தாகிய நான் எப்போதும் உன்னைக் கண்டுபிடிப்பேன். என் பொருட்டு, என் பொருட்டு மட்டுமே நான் செயல்பட்டிருக்கிறேன்; இனியும் செயல்படுவேன். நான் என்றென்றும் துக்கப்பட வேண்டுமா? உன்னைக் கண்டுபிடிக்கும் இந்த வழி என் வழிகளில் ஒன்றாகும். நாம் 1987-ல் இருக்கிறோம்; சிலர் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் பரிசுத்த வேதாகமத்தை ஆராய வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள். திருச்சபைச் சார்ந்த இந்தச் செய்திகள் ஒரு நினைவூட்டுதலாகும்; ஏனெனில் என் இருதயத்தில் இரக்கத்தின் நாள் ஒன்று இருந்தது. என் இரட்சணிய உதவியின் வேலை இதோ இருக்கிறது: எல்லாவற்றுக்கும் மேலாக, நான் தந்தை அல்லவா? நான் என் வித்துக்களின் இரட்சணியமாக இல்லையா? நான் உங்கள் ஒவ்வொருவர் மீதும் என் கண்களை பதித்திருக்கிறேன்; என் பார்வை காணப்படாததாக எதுவும் கடந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்காது; என் வார்த்தை வாசிக்கப்பட வேண்டியது என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்; என் வார்த்தை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; நான் எல்லாம் வல்ல இறைவனாக இருக்கிறேன்; நான் விரும்பும் போதெல்லாம் வெளியே அடியெடுத்து வைக்க நான் சுதந்திரமுள்ளவராக இருக்கிறேன்; மகளே, நீ 1987-ல் இருப்பது என்னிடம் ஏதேனும் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்று நீ ஏன் நினைத்தாய்? உங்கள் காலம் என்னில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. கேள், எனக்கு ஓராயிரம் ஆண்டுகள் நேற்றைய தினமாக இருக்கின்றன; என் வாசல் எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும்... என் தெரிவின் மகளே, நான் மீண்டும் உன்னை அழைப்பேன் என்பதை மனதில் இருத்திக்கொள்; ஏன், நீ வித்தியாசமானவள் என்று நினைத்தாயா? அல்லது நான் இப்போது பேசுவது போல உண்மையில் ஒருபோதும் பேசியதில்லை என்று நினைத்தாயா? யாவேயாகிய நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; நான் உன் வறுமையின் மீது என் கண்களைப் பதித்திருக்கிறேன்; ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த நாட்டில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று இயேசு ஒருமுறை எங்களுக்குச் சொன்னார். பலர் உம்முடைய செய்தி தாங்குபவளாக என்னை ஏற்க மாட்டார்கள். உம்முடைய தூதர்களில் பெரும்பாலானவர்கள் மூடர்களாக நடத்தப்பட்டார்கள், அல்லது அவர்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லப்பட்டது; அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மகளே, சமாதானத்தில் வாழு; என் மீது சாய்ந்துகொள்; இறைவனாகிய நான் உன் பலமாக இருக்கிறேன்; என்னோடு நீ அச்சப்படத் தேவையில்லை; நான் உனக்கு உதவி செய்வேன்; நீ எப்போதும் செய்வது போல, என்னை அன்பு செய்; என் ஆவியானவர் உங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பார்; மகளே, நான் உன்னை அன்பு செய்கிறேன்; என் ஆசீர்வாதங்களைக் கொண்டிரு. ஜனவரி 2, 1987. நான் இங்கே இருக்கிறேன்; சிறியவர்கள் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது; மகளே, நான் உன்னை அன்பு செய்கிறேன்; காத்திரு, அப்போது காண்பாய்; ஒருநாள் என் நித்திய ஒளியில் நீ தங்கி வசிப்பாய்; ஜனவரி 5, 1987. சமாதானம் உன்னோடு இருப்பதாக; மகளே, நீ எனக்குச் சொந்தமானவள்; என்னை மகிமைப்படுத்து; என் திருப்பெயருக்கு ஓர் அணிகலனாக இரு; இன்னும் என்னை அறியாமல் இருப்பவர்களுக்கு என்னை அறிவி... மகிழ்ச்சியாக இரு; ஏனெனில் நான் உன்னை அன்பு செய்கிறேன்; வசுலா, இப்போது நீ எனக்காகப் பணி செய்து கொண்டிருப்பதால், என் குழந்தைகளை ஆசீர்வதி; என் குழந்தைகளை நீ ஆசீர்வதிப்பாயா? ஆசீர்வதி; மகளே, நான் உன்னிடம் கேட்கிறேன்; இதை நான் எப்படிச் செய்வேன், ஆண்டவரே? அவர்களை ஆசீர்வதி; இது என் ஜெபத்தில் செய்யப்படுகிறதா? ஆம், நீ இதை உன் ஜெபங்களில் கேட்கலாம்... இதைச் செய், இதைச் செய். குறிப்பு: நான் தயங்கினேன்; இதை நான் முன் ஒருபோதும் செய்ததில்லை; ஆகவே நான் முயன்றேன். நான் அறிந்திருந்த அனைவரையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு ஆசீர்வதிக்கும்படி நான் கடவுளிடம் ஜெபித்தேன். நல்லது; இதுதான் அதற்கான வழி. இறைவனாகிய நான் நீ குறிப்பிட்ட அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; யாவேயாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன்; ஜனவரி 6, 1987. மேகம் கரைந்து மறைந்து போவது போல், என் இதயத்தை மூடியிருந்த கடினமான. மேலோடு உடைந்து சிதறி, மறைந்து கொண்டிருந்தது. ஆண்டவரே, எனக்கு என்ன நடக்கிறது? என் இதயம் திறப்பாக்கப்பட்டு, மிகுந்த உணர்வுள்ளதாக ஆகி இருக்கும் இந்நேரத்தில், நீர் ஏன் உம் இலக்காக என்னைத் தேர்ந்துகொண்டீர்? என்னால் காண முடிகிறது! முன்பு நான் குருடாய் இருந்தேன்; ஆனால் இப்போது துன்பப்படுவோர் அனைவரையும் என்னால் காண முடிகிறது, என்னைச் சுற்றியுள்ள நிர்ப்பாக்கியத்தை என்னால் காண முடிகிறது, ஓ இறைவா! மகளே, சமாதானம் உன்னோடு இருப்பதாக, உன் இதயத்தின் உணர்வுகளை உணர்வதில் நான் இன்பம் காண்கிறேன்! ஒவ்வொரு கடமையையும் நிறைவேற்றி, பணிபுரிய நான் உனக்கு உதவுவேன்; நான் உன் இதயத்தின் திரையை அகற்றிவிட்டேன்; அதைச் சுத்தமாகக் கழுவிவிட்டேன்; சமாதானமாய் போ; யாவே, சாபாவோத்தாகிய நான் உன் அருகில் இருக்கிறேன்; உன்னை அன்பு செய்கிறேன். ஜனவரி 7, 1987. சமாதானம் உன்னோடு இருப்பதாக; வசுலா, இயேசுவாகிய நான் இங்கே இருக்கிறேன்; இத்தனை அதிகமான ஆன்மாக்கள் இழக்கப்படுவதைக் கண்டு நான் எவ்வளவு அதிகமாகத் துன்பப்படுகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளச் செய்வேன்; நான் துன்புறுகிறேன்; தொடர்ந்து துன்புறுகிறேன்.... இயேசுவே, தீமை இல்லாமல் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! நீர் அதிக மகிழ்ச்சியாக உணர வேண்டுமென நான் விரும்புகிறேன்... நீரும் தீமை இல்லாமல் போக வேண்டுமென ஆசிக்கிறீரா? ஆம்! அன்புக்குரியவளே, போ என் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பு; தீமை அவர்களை வலையில் சிக்க வைத்துக் கொண்டிருப்பதை அவர்கள் புரிந்துகொள்வார்களாக; நான் போய் சாட்சியம் சொல்ல வேண்டும் என்று மீட்பர் கேட்கிறார் என்று நான் உணர்ந்தேன். எனக்கு உதவி செய்யும்; ஏனெனில் நான் மிகக் கொஞ்சமே அறிந்திருக்கிறேன். நான் உதவி செய்வேன், மகளே; நிரப்பப்படும்போது நீ பலராய் இருப்பாய். ஜனவரி 10, 1987. சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் சொல்வதைக் கேட்க நீ தயாராய் இருக்கிறாயா? நான் யாவே; கவலைப்படாதே; நான் உன்னை வழிநடத்துவேன்; நீ என்னைக் கைவிடமாட்டாய், ஏனெனில் நான் உனக்கு வழியைக் காட்டுவேன்; நான் என் வார்த்தைகளை உன் உதடுகளில் வைப்பேன்; நீ கவனிக்கவில்லையா? ஆம், நீர் கூறியுள்ளவற்றைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் நான் பேசும்போது, நீர் எனக்குத் தந்து கொண்டிருக்கிற அதே சொற்றொடர்களின் அமைப்பை நானும் கொண்டிருப்பதை நான் சில சமயங்களில் கண்டிருக்கிறேன். உன் பேச்சை நான் வளப்படுத்துவேன் என்று நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்; உன் பேச்சு என் பேச்சாக இருக்கும். இந்தச் சொற்றொடர் சற்றுப் புதிரானதாக இருந்தாலும், அதன் ஒளியை நான் புரிந்து கொள்ளும்படி ஆண்டவர் தம் ஒளியை என்னில் பொழிந்தார். அதன் பொருள்: "நான் என் ஆவியானவரையும் என் ஞானத்தையும் கொண்டு உன் ஆன்மாவை நிரப்பும்போது, நீ வெளியே போய் சாட்சியம் கூறுவாய்; நீ சாட்சியம் கூறுவதன் மூலம் பலர் மனம் திரும்புவார்கள்; இந்த மனம் திரும்பியவர்கள் மற்றவர்களை மனம் திருப்புவார்கள்" என்பதாகும்; நான் புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொண்டேன். ஆம், நீ கற்றுக்கொள்கிறாய்... நீ என் வாயினின்று வெளிப்படுவாய்; மகளே, நான் உனக்குத் தந்து கொண்டிருக்கும் அலுவலை நீ இன்னும் முழுமையாக உணர்ந்து கொண்டதாகத் தோன்றவில்லை. ஆம், ஆம், நான் உணர்ந்து கொள்ளவில்லை. நான் உணர்ந்து கொள்ளவில்லை என்று அஞ்சுகிறேன்.... நீ என்னிடம் உண்மையாயிருப்பது பற்றி நான் மகிழ்கிறேன்; என்றாலும், உன்னோடு இருப்பவர் எல்லாம் வல்ல இறைவன் என்பதை நீ மறந்துவிட்டதாகத் தோன்றுகிறாய்; நான் எல்லாம் வல்லவர்; ஞானத்தின் திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன்; நான் என் உள்ளங்கையில் பேரண்டம் முழுவதையும் வைத்திருக்கிறேன்; வானத்தையும் பூமியையும் மாற்றி அமைக்க என்னால் முடியும் என்று அறிந்திரு; குறிப்பு: கடவுள் புதிய வானங்களையும் புதிய வையகத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திருவழிப்பாடு 21 ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனம். முழு விசுவாசம் கொண்டிருப்பதுதான் எனக்குள்ள பிரச்சனை; நான் பலவீனமானவளாகவும், உதவியற்றவளாகவும், நீர் சொல்வது போல ஒன்றுமில்லாமையாகவும் இருக்கிறேன்; நானாக இல்லாததைத் தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை. மகளே, என்னைச் சார்ந்திரு; என் செயல்களை நீ மறந்துவிட்டாயா? யாராலும் என்னை எதிர்க்க முடியாது; வந்து என் அற்புதங்களை விவரித்துக் கூறு; வந்து உன் இதயத்தின் என் அற்புத செயல்களைப் பற்றித் தியானி. என் ஆண்டவரே, இதை உம்மிடம் கேட்க எனக்கு உரிமை இல்லை; என்றாலும் எங்கள் இதயங்களை ஆராய்ந்தறிய உம்மால் முடியும் என்பதால், இந்த இரகசியமும் உமக்கு மறைவாய் இருக்க முடியாது. "எதற்காக நான்? ஒரு ஒன்றுமில்லாமை. பரிசுத்த வேதத்தை அறியாதவள், உம்முடைய கைவேலைகளைப் பற்றி அறியாதவள், முற்றிலும் பலமற்றவள், ஒரு வெறுமை. அப்படியிருக்க நீர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்?" என்று நான் தொடர்ந்து என்னையே கேட்டுக்கொள்கிறேன். வசுலா, என் தயாளத்தை உங்கள் அனைவருக்கும் காட்டுவதற்காகவே என் குரலைக் கேட்க நான் உன்னைத் தேர்ந்துகொண்டேன்; குறிப்பு: மனித இனம். மாமிசத்திற்கு என் கைவேலையைக் காட்டும்படி ஒன்றுமில்லாமையிலிருந்து உன்னை எழுப்ப நான் விரும்பினேன்; பலர் உனக்கு எதிராகத் திரும்பி உன் எதிரிகளாக ஆனாலும், நீ வாடிப்போகமாட்டாய்; பொய் சாட்சிகள் உனக்கு எதிராக எழும்புவார்கள்; ஆனால் அவர்களுடைய இதயங்கள் தங்கள் கெடுமதியை பயன்படுத்த சதி செய்து கொண்டிருக்கும்போது, நான் என் ஆசீர்வாதங்களை உன்மீது பொழிந்து கொண்டிருப்பேன்; என் குழந்தாய், உன் கதறல்களுக்கு நான் செவிடாக இருக்க மாட்டேன்; நீ என் இல்லத்தை மகிமைப்படுத்துமாறு நான் உனக்கு போதித்திருக்கிறேன்; எனக்காக வேலை செய்ய விரும்புகிறாயா என்று நான் உன்னிடம் கேட்டிருக்கிறேன், இல்லையா? ஆம், கேட்டீர்; நான் சரி என்று சொன்னேன். நான் உனக்கு என் செய்தியை சுமந்து செல்பவள் என்று பெயரிட்டேன்; எல்லா நாடுகளும் என் வார்த்தைகளை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் உனக்கு கற்பித்து, நீ போக வேண்டிய வழியை உனக்கு கூறுவேன்; நீ வெளியே போய் என் வார்த்தை சமாதானத்திற்காகவும் அன்பிற்காகவும் கூக்குரலிடுகிறது என்று அவர்களுக்கு சொல்வாய்; என் வார்த்தை தெய்வீகமானது; நான் உங்கள் அனைவரையும் தெய்வீக மயமாக்க ஏங்குகிறேன். நீர் எனக்கு தந்து கொண்டிருக்கும் காரியத்தை பலர் புறக்கணித்து, அதன் மீது நிந்தையை குவித்து விடுவார்கள் என்றும் பயப்படுகிறேன். என்னில் நம்பிக்கை வை; ஏனெனில் நான் உன் இறைவன்; நான் உன்னை கண்காணிப்பேன்; என் விருப்பங்களின் காரியத்தில் நான் உன் ஆலோசகராக இருப்பேன்; வசுலா, என் வார்த்தை கேதுரு மரங்களைப் போல் உயரமாக வளரும். குறிப்பு: கடவுள் தம் செய்தியை குறிப்பிடுகிறார். அதன் கிளைகள் விரிக்கப்பட்ட கரங்களைப் போல பரவி பல நாடுகளை எட்டும்; அவை ஏழைகளுக்கு உணவிடும்; உங்கள் காயங்களையும் உங்கள் நோயாளிகளையும் குணமாக்கும்; உங்கள் கரைகளை சுத்திகரித்து, உங்கள் இழிந்த தன்மையை குணமாக்கி, உங்களை ஆற்றித் தேற்றி, என் நெஞ்சை நோக்கி உங்களை உயர்த்தி, உங்களை அன்பு செய்து, எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செய்வது என்றும், எப்படி என்னை அன்பு செய்வது என்றும் உங்களுக்கு மீண்டும் கற்பிக்கும்; என் கரங்கள் தீமையிலிருந்து உன்னை விடுவிக்கும்; ஏனெனில் அன்புக்குரியவளே, நீ முழுவதும் என்னுடையவள்; பார், உனக்கு மேலே பார்; என் படைப்பைப் பார்; எல்லா படைப்பும் என் திருச்சித்தத்திற்கு கீழ்படுகிறது. குறிப்பு: திடீரென கடவுள் நிறுத்திவிட்டு என்னை மீண்டும் பார்த்தார்; நான் காற்றைப் போல் உணர்ந்தேன்; அவருடைய பார்வை எவ்வளவு வல்லமை உள்ளதாக இருந்தது என்றால், அது நேராக எனக்குள் ஊடுருவி சென்றதாக நான் உணர்ந்தேன். சிறியவளே, நான் உன் வழியாக எப்படி பார்க்கிறேன்? குறிப்பு: கடவுள் சந்தோஷ உற்சாகமும் மகிழ்ச்சியும் உள்ளவராக தோன்றினார். அஞ்சாதே, என்னோடு ஒட்டிக்கொள்; என் படைப்பை ஒளிர்விக்கிற இந்த பிரகாசமான அலங்காரத்தை பார்த்தாயா? இது என் பல பரம ரகசியங்களில் ஒன்றே ஒன்றுதான்; அவற்றில் பல மறைவாகவே நிலைத்திருக்கின்றன; என் தெரிவின் மகளே, நான் என் திரு இருதயத்தின் பொக்கிஷங்களை உனக்கு வெளிப்படுத்துவேன்; ஞானத்திடமிருந்து நீ செழிப்புறுவாய்; சிறியவளே, நான் உன்னில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்; வா, நாம் கற்போம். குறிப்பு: நான் உண்மையாகவே அவருடைய மாணவியாக உணர்ந்தேன்; ஏனெனில் அவருடைய குரலின் தன்மையும் ஒளியும் மிக அதிகமாக ஒரு ஆசிரியருடையதைப் போல் இருந்தன. சாத்தானின் தாக்குதல்களையும் மீறி, நான் விரும்பும் அனைத்தையும் எழுத உன்னால் முடியும்; ஏனெனில் இதுவே என் சித்தம்; நான் யாராய் இருக்கிறேன் என்பதை நினைவு கூர்ந்து, என்னை போற்றித் துதிக்க கற்றுக்கொள்; ஞானம் என்னால் தரப்படுகிறது; ஞானம் உன் விசுவாசத்தை அதிகரிக்கிறது என்று அறிந்துகொள்; நீ என் ஆவியானவரில் உத்தமமானவளாக வளர்ச்சி பெற வேண்டுமென நான் விரும்புகிறேன்; கேதுரு மரங்களையும் சைப்ரஸ் மரங்களையும் போல உயரமாக வளரு; ஏனெனில் உன்னில் நான் பல வெளிப்பாடுகளை சுவாசமாக ஊதுவேன்; கேள், உன்னுடைய ஒவ்வொரு கிளையும் பூப்பூத்து, சமாதானம் மற்றும் அன்பின் கனிகளைத் தரும்; என் தயாரிப்பைக் கொண்டு உன் சேமிப்பு அறைகளை நிரப்ப நான் எண்ணுகிறேன்; உன் விண்ணப்பங்களை நான் கேட்டிருக்கிறேன்; ஆகவே, உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தர நான் சித்தமாய் இருக்கிறேன்; இப்போது நீ என் கொடையாக, அவர்கள் நடுவே இருக்கும்படியாக, நான் உன்னை அவர்களிடம் அனுப்புகிறேன்; நான் மனுக்குலம் முழுவதற்கும் உன்னை தருவேன்; நான் கல்வி அறிவையும் பகுத்துணர்தலையும் உன்மீது பொழிவேன்; நான் எல்லா நாடுகளுக்கும் உரிய என் செய்திகளை உன்னிடம் தருவேன்; அவளை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் அவள் என்னை சேர்ந்தவள்; எல்லா நாடுகளும் அவளால் பயனடைவனவாக; ஏனெனில் அவள் என் மக்களுக்கு பரலோகத்திலிருந்து வரும் அப்பத்தை தந்து, அவர்களை நிரப்புவாள்; அவள் என் அறிவைக் கொண்டு அவர்களை நிரப்புவாள்; என் மக்கள் தேற்றிறவைக் காணும்படி என் மீது சாய்ந்து கொள்வார்கள்; அவர்கள் என்னை வாழ்த்திப் போற்றுவார்கள்; ஓ, என் போதனைகளின் வழியாக. என்னை அடையாளம் காண வல்லவர்களாக இருப்பவர்களே, நீங்கள் இதயத்தில் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்வீர்கள்; பலர் தன் இறை மிருகத்தைப் பின்தொடரும் வேட்டைக்காரனைப் போல அவளை துரத்துவார்கள்; ஆனால் நான் அவளை காப்பாற்ற வருவேன்; மற்றவர்கள் அவள் சொல்வதைக் கேட்டு என் தேவாலயங்களில் தங்கள் நேரத்தைக் கழிப்பார்கள்; அவளோடு ஒன்றித்திருப்பவர்கள் பேறு பெற்றோர்; இறைவனாகிய நான் உங்கள் நடுவில் இருப்பேன்; நீங்கள் இந்த அடையாளத்தை அவள் மீது காண்பீர்கள்; ஏனெனில் அவள் என் இல்லத்தில் வளர்ந்து கொண்டிருப்பாள்; இதோ, விடியற்காலை நட்சத்திரம் விரைவில் காணப்பட இருக்கிறது. குறிப்பு: இயேசுவின் மறுவருகை. என்னை நீங்கள் அங்கீகரித்துக் கொள்வீர்கள் என்றால், என் தந்தை வழிச் சொத்து உங்களுக்கும் உரியது என்று உங்களுக்கு நினைவுபடுத்தும்படி நான் பரலோகத்திலிருந்து உங்களை அழைக்கிறேன்; இன்று எனக்கு சொந்தமானவர்களில் ஒருத்தியை நான் உங்களிடம் அனுப்புகிறேன்; அவளை பண்படுத்துவதில் நீங்கள் சிறிது காலமே உழைப்பீர்கள்; ஆனால் விரைவில் என் பயிர்களில் இருந்து நீங்கள் உணவு உண்பீர்கள்; அவளை விட்டு விலகும்போதோ, நீங்கள் அவளை இழந்து போவீர்கள்; அவளை தொந்தரவு செய்வீர்கள்; நானோ உங்களை வீசியெறிய அவளுக்கு பலம் தருவேன்; ஒழுக்கமற்றவர்களுக்கு அவள் எவ்வளவு கடுமையானவளாக இருப்பாள்; அவள் விரும்பும் எந்த நேரத்திலும் என்னை அழைக்க நான் அவளுக்கு பலம் தருகிறேன்; நீங்கள் அவளைப் பற்றிக் கொண்டதும் என்னிடமிருந்து கற்றுக்கொள்வீர்கள்; இன்றைய இருண்ட உலகத்தை ஒளிர்விப்பதற்காக என் ஞானம் முழுவதையும் இன்று உங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கிறேன்; இறைவனாகிய நான் உங்கள் அனைவர் மீதும் ஒளிவீச வருகிறேன்; முன் ஒருபோதும் இருந்திராத வகையில் என் திருமுகத்தை வெளிப்படுத்துகிறேன்; இவ்வாறு என்னை அதிகமாக புரிந்து கொள்ள நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்; ஆ, ஒவ்வொரு ஆன்மாவும் என்னைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளவாக ஏங்குகிறேன்; ஏனெனில் என்னைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வார்கள்; ஆனால் இப்போது தீமை அவர்களைப் பற்றிப் பிடித்திருக்கிறது; தீயவர்களாக இருக்கவும், தீமை என் வழிகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு கற்பிக்கிறது; தீமை அவர்களை குருடாக்கி, எல்லா வகையான ஆயுதங்களைக் கொண்டும் அவர்களை நிரப்பி, தன்னைப் போலாக அவர்களை தூண்டி இருக்கிறது; நான் அவர்களைப் பற்றி பயப்படுகிறேன்; ஏனெனில் அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; நான் அவர்களை அன்பு செய்கிறேன்; நான் என் தெய்வீக அன்பின் அடையாளங்களை அவர்களுக்குத் தந்து வந்திருக்கிறேன்; அவர்கள் பிரச்சனையில் இருக்கும்போது நான் அவர்களோடு இருக்கிறேன்; நான் எப்போதும் என் தயாளத்தால் அவர்களுடைய நிர்வாணத்தை மூடுகிறேன்; என் திருக்கரம் அவர்களை எட்டுவதற்காக நீட்டப்பட்டிருக்கிறது; ஆனால் அவர்கள் என்னைக் காண்பதாக தோன்றவே இல்லை; என்னை தந்தையாக ஏற்றுக் கொள்ளும்படி நான் அவர்களை அழைக்கிறேன்; ஆனால் அவர்கள் என்னைக் காண்பதாகவே தோன்றவில்லை; நான் சொல்வதை அவர்கள் கேட்பதாகவும் தோன்றவில்லை; இரக்கம் அவர்களுக்கு மேலாக குனிந்து நின்று, அவர்களுக்கு அடையாளங்களைத் தந்து கொண்டிருக்கிறது; ஆனால் அவர்கள் அவற்றை அடையாளம் காண்பதில்லை; இப்போது நான் என் பரிசாக உன்னை அவர்களிடம் அனுப்புகிறேன்; உங்களைப் பிரித்தே வைத்திருக்கிற எதிரியை அழிக்கும்படி அவர்களை ஒன்றாகத் திரட்டு; என் மக்களிடம் பேசி, அவர்களை என்னிடம் திரும்ப அழைத்து வரும்படியாக நான் உனக்கு பேச்சு வன்மையைத் தருகிறேன்; அவர்களுடைய சுவை நரம்புகள் என் மன்னாவின் சுவையை பகுத்துணர்வனவாக; அன்புக்குரியவளே, நீ என்னிடமிருந்து வருகிறாய்; நீ என்னை மயமைப்படுத்தும்படியாக நான் உன்மீது என் ஞானத்தைப் பொழிவேன்; எல்லாம் வல்ல இறைவா, அனைவருக்கும் தந்தாய்; இறுதியில் நான் உம்மை மகிமைப்படுத்துவேனா? மகளே, நான் மகிமைப்படுத்தப்படுவேன்; இறைவனாகிய நான் என் இலக்குகளை எப்போதும் வந்தடைகிறேன்; எப்போதும் இதை நினைவில் கொள்; உன் கால்களின் வேகம் என் கால்களின் வேகத்தைப் பின்பற்றும் என்றென்றும்;