இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 61. பிப்ரவரி 1, 1988 வசுலா, என் மகளான ரஷ்யாவின் அர்ப்பணத்தை நான் மிக அநேக தடவைகள் கேட்டுவிட்டேன்; அவளுடைய அர்ப்பணத்தை நான் மன்றாடிக் கேட்டுவிட்டேன்; வசுலா, இன்று அவள் ஒளியைக் கண்டுகொண்ட நாளாகும்; குறிப்பு: இந்த ஆண்டு. அவள் தன் ஆயிரமாவது வருட நினைவைக் கொண்டாடிக் கொண்டிருப்பாள்; வசுலா, உன் சகோதரி இறந்துவிட்டாள், குறிப்பு: ரஷ்யா. என்றாலும், ஆண்டவர் இப்போது அவள் அருகில் இருக்கிறார், அவர் அவளை உயிர்ப்பிப்பார், நேசமானவர் நேசிக்கப்படாதவளை நேசிப்பார்; அவள் அவரை நோக்கி, "நீரே என் இறைவனும், என் மீட்பருமாய் இருக்கிறீர்!" என்று கூக்குரலிடுவான். இந்தக் கூக்குரலைக் கேட்டு, பசாசுக்கள் அலறியோடும்; அவை பயந்து ஓடிப்போகும்; ஏனெனில் இந்த நாடு ஒன்றுபட்டு, கடவுளின் மிகப் பிரமாணிக்கமுள்ள ஊழியனாகும்; கடவுளின் பலத்தால் குணமாக்கப்பட்டும், உயிர்ப்பிக்கப்பட்டும், அவளது நிலையான பரிசுத்தத்தனத்தைக் கொண்டு, எல்லாம் வல்லவருக்கு அவள் காட்டும் பக்திச் செயல்களைக் கொண்டு, அவளது அண்டை நாடுகள் எல்லோரையும் ஈர்க்கும்; ரஷ்யா கடவுளின் மகிமையின் அடையாளமாகவும், கடவுளின் இரக்கம் மற்றும் அன்பின் மகிமையின் அடையாளமாகவும் இருக்கும்; எங்கள் செவிகளுக்கு மிக இனிமையான அவளுடைய பாடல்களும், சங்கீதங்களும், அவளது அழகான அசைவுகளோடு சேர்ந்து, தூபப் புகை போல மோட்சத்தை நோக்கி எழும்; நேசமானவர் ஆயிரம் வருடங்களுக்கு முன் அவளை உயிர்ப்பித்தது போல, மீண்டும் அவளை உயிர்ப்பிப்பார்; குறிப்பு: இங்கே மரியாயின் செய்தி முடிகிறது. நானே உயிர்ப்பாகிய ஆண்டவர்; நான் ரஷ்யாவை உயிர்ப்பிக்கும்போது, அவள் என் கொடைகளை திரும்பப் பெற்றுக் கொள்வாள், அவள் அன்பால் மீண்டும் என் வீட்டை அலங்கரிப்பாள், நான் அவளை மீண்டும் என்னோடு இணைத்துக் கொள்வேன்; நான் அவளுக்கு என் அப்பத்தையும், என் திராட்சை இரசத்தையும் தருவேன், அவள் என் உணவை மறுதலிக்க மாட்டாள்; அவள் நான் தருவதை ஏற்றுக்கொண்டு, என் அப்பத்தை உண்டு, என் திராட்சை இரசத்தைப் பருகி, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, என்னைப் போற்றி ஸ்துதிப்பாள்; நான் என் மகிமையால் அவளை உடுத்துவேன்; நான் மகத்துவமுள்ள முறையில் அவளை அலங்கரிப்பேன்; நான் என் சொந்த நீரூற்றுகளிலிருந்து அவளுக்கு நீர் பாய்ச்சுவேன்; அவளுடைய களஞ்சியங்களை நான் மீண்டும் நிரப்புவேன்; என் கண்கள் அவள் மீது இருக்கின்றன, ஆ, வசுலா, சற்று பொறுத்திருந்து பார்! குறிப்பு: தம்மிடம் மறைவான காரியங்கள் ஏராளமாக இருக்கிறது. அவை விரைவில் வெளியாக்கப்படும் என்று தொணியில் இயேசு பேசினார். அவர் மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருப்பதாகத் தோன்றினார். மகளே, இராயப்பன், என் இராயப்பன், உன் சகோதரியைச் சந்திப்பதைக் காண நான் எவ்வளவு ஏங்குகிறேன்....... ஆண்டவரே, அங்கு போகும்படி அவரை ஊக்கப்படுத்தும். ஆண்டவரே, இது உம் சித்தம் என்றால், அவருடைய வழியைத் திறந்தருளும். வா, நான் அநேக இதயங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்; வசுலா, என் தந்தையின் உபகாரத்தைப் பெற்றுக் கொள்ள ஜெபி; நான் என் திருச்சபையை மீண்டும் ஸ்தாபிப்பேன்; விசுவாசமற்றவர்களுக்கு, ஐயோ கேடு! வசுலா, உயரமான மரங்களின் வளர்ச்சியைத் தாமதிக்கச் செய்பவரும், குட்டையான மரங்களை வளரச் செய்பவரும் நானே என்பதை நான் உனக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்; இப்போது வா, நாங்கள், ஆம்; குறிப்பு: நான் திடீரென அவர் கைப்பிடியுள்ள நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர் தம் கரத்தால் எங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தபோது, நான் அவருடைய அழகிய முகத்தைக் கண்டேன். நான் அவரை சரியாக காண்கிறேன் என்பதை இந்த ஆம் சுட்டிக்காட்டியது. நாம், ஆம்; குறிப்பு: இந்த மற்றொரு ஆம், இயேசுவின் அருகில் புனித மாமரியை நான் கண்டு, புன்னகைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியது. ஆம், வசுலா, ஒருபோதும் சந்தேகப்படாதே; உன் ஆன்மாவின் கண்களைக் கொண்டு எங்களைக் காண நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; நான் உன் போதகராக இருக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; ஒருபோதும் சந்தேகப்படாதே; பிப்ரவரி 2, 1988 மலரே, சமாதானம் உன்னோடு இருப்பதாக. இது உன் மீட்பராகிய இயேசுவாகிய நான்தான். அன்பு, இழிநிலையின் மத்தியில், இழிநிலையில் உன்னை கண்டடைந்துள்ளது. அன்புக்குரியவளே, ஆண்டவராகிய நான் என் தெய்வீக கரங்களை உன்மீது வைத்து உன்னை அலங்கரித்திருக்கிறேன். நீ என்னைக் காண்பது என்னை மகிமைப்படுத்துகிறது. குறிப்பு: நான் அவருடைய படத்தைப் பார்த்தேன். இயேசுவே, நான் இழிநிலையில் இருந்ததற்காக என்னையே வெறுக்கிறேன். வசுலா, நீ என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய்? குறிப்பு: இயேசு அதிர்ச்சி அடைந்தார். நான் எப்படி உன்னோடு இணைந்திருக்கிறேன் என்பதை நீ மறந்துவிட்டது போலத் தோன்றுகிறாய்; நீ சொல்கிற காரியத்தைப் பற்றி எச்சரிக்கையாய் இரு; நினைவில் வை, நாங்கள், நாம்? ஓ, இயேசுவே, உம் பொறுமை பெரியது..... நான் உன்னை நேசிக்கிறேன்; வா, என் தாயார் சொல்வதைக் கேள், வசுலா, குறிப்பு: புனித மாமரி. நான் எவ்வளவாக உன்னை நேசிக்கிறேன், தோ ஸபிட்டி மௌ ஸே சிட்டாய், இ போர்தாஸ் ஈனே யோர்தானிடேஸ் யியா சேனா பெத்தி மௌ குறிப்பு: நான் நம் பரிசுத்த அன்னையிடம் ஒரு கேள்வி கேட்டேன். தோ நோரிடோரோ மெட்டா டி தேபித்தேறி ப்ரோக்ஷி. குறிப்பு: கிரேக்க மொழியில் உள்ள இந்த பகுதியின் மொழிபெயர்ப்பு: என் இல்லத்திற்கு நீ தேவைப்படுகிறாய், என் குழந்தாய், அதன் கதவுகள் உனக்காக விரியத் திறந்திருக்கின்றன. பிப்ரவரி பிப்ரவரி 3, 1988 வசுலா, நீ இந்த முறையில் என்னிடம் வரும்போது, நான் எவ்வளவு மிக அதிகமாக உன்னை நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? நீ இழிந்தவளாகவும், உன் முழங்கால்களில் நின்றபடியும் என்னிடம் வருகிறாய்; நீ உன் இதயத்தை என்னிடம் திறந்து காட்டுகிறாய்; என் மகளே, உன் கண்ணீர்த் துளிகள், என் மீதுள்ள அன்பு மற்றும் ஏக்கத்தினால் நீ வடிக்கும் கண்ணீர்த் துளிகள், என் காயங்களின் வேதனையைத் தணிக்கும் தைலமாக இருக்கின்றன; ஓ, மகளே, என் வெள்ளைப் போளமே, என் மீதமே, நான் உன்னை எவ்வளவாக நேசிக்கிறேன்! எனக்கு மண ஒப்பந்தமானவளே, உன் பெருமூச்சுகள் எனக்கு ஒரு கோடி அன்பின் வார்த்தைகளைப் போல் ஒலிக்கின்றன; என் மலரே, என் கரத்தால் அர்ச்சிக்கப்பட்டவளே, அவநம்பிக்கை கொள்ளாதே; ஆபேல் இந்த முறை நசுக்கப்பட மாட்டார்..... ஆபேல் உயிர் வாழ்வார்; ஆம்! உன் இதயத்தில் எனக்காக ஒரு மோட்சத்தை உருவாக்கு; நான் களைத்திருக்கிறேன், நான் இளைப்பாற வேண்டி இருக்கிறது; மலரே, எனக்கு மணமூட்டு; உன் அன்பைக் கொண்டு என் வேதனையைத் தணி; சிறியவளே, நான் அழகில் உன்னை உடுத்துவேன்; உன் பாவங்களை மன்னிப்பேன், உன் பழைய ஆடைகள் இனி இருக்காது; மலரே, நீ அலங்கரிக்கப்படுவாய்; நான் முழுவதுமாக உன்னைப் புதுப்பிப்பேன்; வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; என் வரப்பிரசாதம் உன்மீது இருக்கிறது; இதோ, என் கரத்தைப் பற்றிக்கொள்; நான் உன்னை வழிநடத்துகிறேன்; புனித மாமரி, ஓ வசுலா, மின் ஆம் பிவாலஸ் சேசிட்டாவோ தாசிஸ் மோனோ இயா தோ கிறிஸ்து தோ போத்திரி தவ் இனே லேகிலோ மேதஸ் ஆமார்த்தியேஸ் தவ் காஸ்மோ, ஆப்தோ இனேதோ தெலேபேத்தியோ தவ் மினிமா, ஏயான் தோ ஆர்னி தவ்ன் தவிசோ தோ கேரி தவ் நாபசி அப்பானோ தவுஸ் தின் தாப்பரேசோ அலோனாத்தோ கிராஸ்டிசோ எகிவாரினி அப்ரேயோ Τὴν τὰ περίσσω ἀλλ' ὀνάτω κράστησο வசுலா தகானோ தோ தாவ் மாமாவ் இஓரா பிளிஷ்ஷிஷி. குறிப்பு: இந்தக் கிரேக்கப் பகுதியின் மொழிபெயர்ப்பு; ஓ, வசுலா, சந்தேகப்படாதே; நான் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறேன்; நீ கிறிஸ்துவுக்காக மட்டுமே உயிர் வாழ்வாய்; அவருடைய கிண்ணம் உலகத்தின் பாவங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது; இந்த செய்தி அவருடைய கடைசி எச்சரிக்கையாகும்; அவர்கள் இதை மறுதலித்துவிட்டால், அவர் கரம் அவர்கள் மேல் விழ, நான் விட்டுவிடுவேன்; இனிமேலும் அதைத் தடுத்துக் கொண்டிருக்க என்னால் இயலாது-- அது பாரமாகிவிட்டது; வசுலா, நான் விரைவில் என் புதுமையைச் செய்வேன் - காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்களில், நம் பரிசுத்த மாதா எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் "தாய் என்ற" வார்த்தையை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் கவனித்தேன். அவர்கள் எல்லோருக்கும் தாயாக இருக்கிறார்கள் என்று எனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் கற்றுக்கொண்ட மற்றொரு காரியம், இயேசுவும் நம் அன்னையும் பிரிக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆகும். இயேசு எங்கே இருக்கிறாரோ, அங்கே நம் அன்னையும் இருக்கிறார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றிணைந்தும், ஒன்றாகவும் இருக்கின்றன. நம் அன்னை காலங்களின் முடிவைப் பற்றிப் பேசும்போது, அதை நாம் ஒரு காலகட்டத்தின் முடிவு என்றே புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தத் தற்காலம், தீமையான, விசுவாசத்தை மறுதலிக்கிற காலமாக இருக்கிறது. ஆகவே, கடவுள் தலையிடுகிறார். மனம் திரும்புதல் அண்மையில் உள்ளது; குறிப்பு: வேறு வார்த்தைகளில், திருச்சபையின் புதுப்பித்தல். கடவுளின் அரசு உங்கள் எல்லோர் மத்தியிலும் உள்ளது; காலங்களின் முடிவை மனதில் கொள்ளுங்கள்; அவருடைய செய்தி எப்படி அவருடைய திரு உடலைக் குணப்படுத்தி, அதை ஒன்றிணைக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்; இயேசுவின் மீட்புத் திட்டம் எப்படி கோடிக்கணக்கான ஆன்மாக்களை மீட்டு இரட்சிக்கும் என்பதை மனதில் இருத்துங்கள்; அவருடைய சமாதானம் மற்றும் அன்பின் செய்தி எங்கள் குழந்தைகளைத் திரும்பவும் அன்பிடம் ஈர்க்கும்; அவர்கள் இயேசுவின் அப்பத்தைச் சுவைத்தவுடன், இயேசு அவர்களை மனம் திருப்புகிறார், அது அன்பின் கனியாக இருக்கிறது; அன்பு உங்கள் எல்லோரையும் மீண்டும் ஸ்தாபிக்கும், அன்பும் இரக்கமும் சாத்தானின் அவபக்தியின் வலைகளின் சிக்கல்களில் இருந்து உங்களைப் பிரித்தெடுக்கும்; அன்பிற்குரியவளே, வந்து கடவுளின் சித்தத்தைச் செய்; நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; என்னை நினைவில் வைத்திருப்பதற்காக நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இதை நீ எனக்காகச் செய்வாயா? என் சமாதானத்தைக் கொண்டிரு; குறிப்பு: மாலையில் என் மீது உடல் ரீதியான காயங்களை உண்டாக்க பசாசு அனுமதிக்கப்பட்டிருந்தால், அவன் என்னைக் கொன்றிருப்பான். அவன் என்னை வெறுத்தபடி, என் ஆன்மாவை மீண்டும் வாதித்துக் கொண்டிருந்தான். பிப்ரவரி 4, 1988 இயேசு இன்று காலையில் மிகவும் தெளிவாக உணரப்படக்கூடியவராக இருக்கிறார். சில சமயங்களில் இதெல்லாமே தவறானதாக இருக்கக்கூடும் என்றும், நான் அவரைக் காண்பதில்லை, மாறாக, வெறுமனே அவரைக் காண்பதாக நினைக்கிறேன் என்றும் நான் மிகவும் பயப்படுகிறேன். ஆனாலும், இது போன்ற சமயங்களில் இதெல்லாமே மிகத் துல்லியமானவை என்று நான் நம்பும்படி அவர் செய்கிறார். இயேசுவே, இது உண்மையாகவே நீர்தானா? நான்தான்; நான் உனக்குக் கற்பித்தபடியே நீ என்னைக் கண்டாய்; நான் என் இதயத்தை உனக்குக் காட்டுவேன்; நீ காண்பதையும், என் பிரசன்னத்தில் நீ உணர்வதையும் எழுது; நான் கடவுளின் பிரசன்னத்தில் மகிழ்ச்சியுற்றவளாக இருக்கிற இந்தக் கணங்களில், இந்த நேரம் ஒருபோதும் முடியவே கூடாது என்று நான் நினைக்கிறேன், எனக்கு இதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை, என்னைச் சுற்றியுள்ள எல்லாமும் மிகவும் அர்த்தமற்றதாகவும், முக்கியத்துவமற்றதாகவும் ஆகிவிடுகிறது. கடவுளின் பிரசன்னம் வெறுமையாய் இருக்கிற ஒவ்வொரு மூளையையும் நிரப்புகிறது, அது என்னை நிரப்புகிறது. நான் முழுமை அடைந்தவளாக, நிறைவு பெற்றவளாக உணர்கிறேன். இயேசுவை நாம் அறிந்திருக்கிற விதத்தில் ஆடைகள் அணிந்தவராக நான் அவரைக் காண்கிறேன். என் காதுகள் அவருடைய அங்கியில் சரசரப்பின் இயல்பான ஒலியை, அவர் நடக்கும் ஒலியை, கிட்டத்தட்ட உணர முடிகிறது. இப்போது நான் என் சிறிய மேஜையின் அருகில் முழந்தாளிட்டு இருக்க, எனக்கு முன்னால் அவருடைய அடக்கத்துகிலின் படம் இருக்க, அதற்கு அடுத்து குழந்தை இயேசுவோடு இருக்கிற புனித மாமரியின் சொரூபம் ஒன்று இருக்க, அவர் என் இடது பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இயேசு என்னிடமிருந்து இரண்டு அடி தூரத்தில் இருக்கிறார். அவருடைய பரிசுத்த முகம் தன்னிலேயே அழகாக இருக்கிறது. அவர் தம்மைப் பார்க்கும்படி என்னிடம் கேட்டார். அவர் தம் திரு இருதயத்தை எனக்குக் காட்டினார். அவருடைய மார்பு முழுவதும் நேசத்தினால் கனன்று கொண்டும், பிரகாசித்துக் கொண்டும், சுடர் வீசிக் கொண்டும் இருந்தது. எல்லாம் சரியாக இருக்கிறது; நீ பகுத்துணர்வது எல்லாம் சரியாக இருக்கிறது; ஓ வசுலா, என் வசுலா, நான் எவ்வளவாக உன்னை நேசிக்கிறேன்; மிகப் பிரியமான ஆன்மாவே, நீ விரும்பும்போது என்னிடம் வரலாம்; நீ என் இதயத்தைப் பார்த்திருக்கிறாய்; நான் தொடக்கத்தில் இந்த ஜெபங்களைச் சிறிது காலமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நான் நிறுத்திவிட்டேன். புனித மாமரி அவற்றை தொடரும்படி எனக்கு நினைவுறுத்தினார்கள். அவர்கள் அதை எனக்கு நினைவுபடுத்திய நாளிலிருந்து நான் அதை ஒழுங்காகச் செய்து வருகிறேன். இங்கே இந்த மூன்று ஜெபங்களோடு ஒரு நாளில் எப்படி எழுதத் தொடங்குவது என்று இயேசு விளக்குகிறார். ஏனெனில் நான் எழுதும் ஒவ்வொரு தடவையும் அதற்கு முன்பாக நான் அவற்றை ஜெபிக்க வேண்டுமா என்பதில் நான் நிச்சயமற்றவளாக இருந்தேன். அது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகளாக இருக்கலாம். சில சமயங்களில் ஒரே ஒரு வார்த்தையாக மட்டும் இருக்கலாம். அல்லது ஒரு நாளைக்கு ஒரு தடவை எழுதத் தொடங்கும் விதமாக என்ற அர்த்தத்தில் அவர் சொல்லியிருக்கலாம். வசுலா, என் குழந்தைகளை ஒன்று கூட்டி, சிறிது காலத்திற்கு முன், நீ எழுதும்படி நான் சொன்ன செய்தியை வாசித்துக் காட்டு; குறிப்பு: அக்டோபர் 14, 1986 அன்று இயேசுவால் தரப்பட்ட செய்தி, பிப்ரவரி 21, 1988 கூட்டத்திற்காக இந்தச் செய்தி தரப்பட்டது. நீ அதை அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்கள் எல்லோருக்கும் மத்தியில் நான் இருக்கிறேன்; என் படைப்பே, நீ என்னுடையவன், நீ என் வித்தாக இருக்கிறாய்; அன்பிற்குரியவனே, நான் உன் இரட்சகராக இருக்கிறேன், நீ என்னிடம் திரும்பி வருவாயா, என் கரங்களில் வந்து விழுவாயா? நான் உன் பாவங்களை மன்னிப்பேன், என்னிடம் வந்து என் அப்பத்தை உட்கொள், வந்து என் திராட்சை ரசத்தைச் சுவைத்துப் பார்; நீ மனஸ்தாபப்பட்டால், நான் உன்னை மன்னிப்பேன்; என் இருதயத் துடிப்புகளைக் கேள்; ஒவ்வொரு துடிப்பும் ஓர் ஆன்மாவுக்கான அழைத்தலாக இருக்கிறது; வசுலா, என் முந்தின செய்தியையும் இந்த செய்தியையும் நீ அவர்களுக்கு வாசித்துக் காட்டுவாயா? ஆம், ஆண்டவரே, நான் வாசித்துக் காட்டுவேன். பிற்பாடு. ஒரு சிநேகிதியின் கடிதத்தையும் சபைகளும் மக்களும் வெளிப்பாடுகளைப் பற்றி ஏன் மிகுந்த சந்தேகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிற ஒரு செய்தித்தாள் துண்டையும் வாசித்த பிறகு, நிறைய வஞ்சகமான போலியான வெளிப்பாடுகள் இருக்கின்றன என்பதால், இந்த வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்வது திருச்சபையின் எந்த ஒரு அதிகாரிக்கும் மிகக் கடினமாகவே இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும், பாத்திமா புதுமையையும் கூட அவர்கள் எப்படி சந்தேகப்பட்டார்கள் என்பதை என்னால் மறக்க முடியாது. அவர்கள் இன்று கரபந்தாளை சந்தேக கண் கொண்டு பார்க்கிறார்கள். நாளை அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒருவேளை அப்போது மிகவும் தாமதமாகி இருக்கும். அறிவு வாதம் அளவுக்கு மீறி பலமிக்கதாக இருக்கிறது. தந்தாய், நான்..... குறிப்பு: நான் தயங்கிக் கொண்டிருந்தேன். அதைச் சொல்; பாப்பரசர் இதை மறுத்து விடுவார் என்ற பயம் எனக்கு இருக்கிறது. அவர் ஏன் என்னை நம்ப வேண்டும்? யாராய் இருந்தாலும் என்னை அவர்கள் ஏன் நம்ப வேண்டும்? இது மட்டும் அவர்களுக்கு நிகழ்ந்திருந்தால்! அப்போது மட்டும்தான்...... வசுலா, நான் என் அப்பத்தை உனக்குத் தந்தேன், என் தோட்டத்தின் கனியை நான் உனக்கு ஊட்டினேன்; என் சொந்தக் கரத்தினின்று நான் உனக்கு உண்ணத் தந்தேன்; ஓ, அன்புக்குரிய குழந்தாய், உன்னை மனம் திருப்பியவர் யார்? அது நான் அல்லவா? என்னை நேசிக்கும்படி உனக்கு கற்பித்தவர் யார்? அது நான் அல்லவா? உன்னை தேடி வந்து இறந்தவளாக, இறந்தோருக்கு மத்தியில் உன்னை கண்டுபிடித்து, உன்னை உயிர்ப்பிக்கும்படி குனிந்து உன்னை தூக்கியவர் யார்? அது நான் அல்லவா? உன்னை குணப்படுத்தி, பராமரித்து, மீண்டும் நலம் பெற செய்யும்படி என் வீட்டிற்கு உன்னை தூக்கி வந்தவர் யார், நான் அல்லவா? என் வழிகளை உனக்கு அனுதினமும் கற்பித்துக் கொண்டிருந்தவர் யார், நான் அல்லவா? இப்போது என் குழந்தைகளை மனந்திருப்பிக் கொண்டிருப்பவர் யார்? நான் அல்லவா? நான் உன் மீட்பராக இருக்கிறேன்; வசுலா, நீ இப்போது என்னில் ஒரு பகுதியாக இருக்கிறாய்; உன்னால் தனியாகப் பிழைத்திருக்க முடியாது, உனக்கு நான் தேவை; ஒரு கிளை தானாக கனி தர முடியாதது போலவும், கனி தருவதற்கு அது மரத்தோடு இணைந்திருக்க வேண்டி இருப்பது போலவும், நீயும் என்னோடு இருக்கிறாய்; உன் கனி என்னிடமிருந்து வருகிறது, என் கனி பலருக்கு உணவளிக்கிறது; என் கனி உன் சாட்சியமாக இருக்கிறது; குறிப்பு: இந்த செய்திகள் சந்தேகப்படுபவர்கள் உன் கனியைக் கொண்டு உனக்கு சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்; நல்ல மரம், நல்ல கனியைக் கொடுக்கும்; பசித்திருக்கிற என் குழந்தைகள், தங்கள் கண்களில் கண்ணீரோடு மனஸ்தாபப்பட்டு என்னிடம் திரும்பி வந்து என் கனியை சுவை பார்க்கும்போது, நான் மகிழ்ச்சியை உணர்கிறேன், நான் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளவனாக ஆகிவிடுகிறேன்! பசாசின் பிடியிலிருந்து நான் அவர்களைப் பிடுங்கி எடுக்கிறேன்; வசுலா, பொறுமையாய் இரு; என் வார்த்தை பாயும் சிற்றாறு போன்றது என்று நான் சொல்லியிருக்கிறேன். அதன்பின், ஒரு சிற்றாறு என்ற நிலையிலிருந்து அது ஒரு ஆறாக மாறிப், பெருக்கெடுத்துப் பாயத் தொடங்குகிறது, அதன்பின், என் வார்த்தை பொங்கிப் பாய்ந்து, ஒரு அகன்ற பெரும் கடலாக, அன்பின் பெரும் கடலாக மாறி, அன்பைக் கொண்டு உங்கள் இதயங்களை மூழ்கடிக்கும். அன்பானது, அன்பாகவே உங்கள் மத்தியில் இருக்கும்; வசுலா, நீ பலரால் மறுதலிக்கப்படுவாய் என்று நான் உன்னை எச்சரித்திருக்கிறேன்; குறிப்பு: 1987 அக்டோபர் 23 அன்றும் மற்ற பல்வேறு சமயங்களிலும் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்; நான் அநேகரால் மறுதலிக்கப்பட்டேன், அவர்களுடைய பிடிவாதமுள்ள எரிய தன்மை என்னை அழச் செய்தது! ஒருவர் ஒரு குழந்தையிடம் பேசுவது போல, இயேசு புன்னகித்தபடியும், அதே வேளையில் என்னை வற்புறுத்த முயன்றபடியும், அவருக்கும் அது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை எனக்குக் காட்டுமாறும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். வா, நீ கற்றுக்கொள்வாய்; நான் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்னை ஆதரித்துத் தாங்குவேன்; நான் இன்னும் அநேகரை மனந்திருப்புவேன்; நாங்கள், நாம்? என் பிரசன்னத்தை உணர்ந்து பார்; நீ அப்படி செய்யும்போது என்னை மகிழ்விக்கிறாய்; சரி, ஆண்டவரே, உம் ஆதரவுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே.