இறைவனில் உண்மையான வாழ்வு


“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 13. ஜனவரி 19, 1987. நான் இதோ இருக்கிறேன். நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; சிறியவளே, என் போதனைகளை உனக்கு உணவாகத் தர என்னை அனுமதி; என் ஞானத்தைக் கொண்டு உன்னைப் போஷிக்க என்னை அனுமதி; சிறியவளே, நற்கணிகளைத் தரும்படி நீ வளர வேண்டும்; பலருக்கு உணவளிக்க உன்னால் இயலும்படி நீ கனிகள் நிரம்பியவளாக ஆக வேண்டும்; நான் உனக்குத் தருகிற வேலையில் நிலையாகவும், விழிப்பாகவும் இருக்க நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ உன் வேலையை முடிக்கும் வரையிலும், உன் கண்களை என் மீது நீ பதித்து வைத்திருக்கும்படி நான் செய்வேன்; நீ என் முற்றங்களில் நுழையவும், உன் அரசரின் ஊழியத்தில் இருக்கவும் நான் உன்னை அனுமதித்திருக்கிறேன்; அவர் உனக்கு அனைத்தையும் கற்பிப்பார். என் பழமொழிகளின் மறைவான பொருளை நீ அவர்களுக்குக் கூறும்படி, உன் கிளைகள் ஒவ்வொரு நாட்டின் மீதும் படரும்; குறிப்பு: கிளைகள். அவற்றின் கீழ் என் குழந்தைகள் முகாமிட்டு புகலிடம் பெறுவார்கள்; எழுந்து என்னை மகிமைப்படுத்து; நான் உன்னை பலமாகக் கட்டுவேன்; இயேசுவாகிய நான் கடல்களை விட அகன்ற போதனைகளைக் கொண்டு உனக்குப் போதிப்பேன். நான் போதகத்தைத் தீர்க்கதரிசனத்தைப் போல உன் மீது பொழிவேன்; ஞானத்திடமிருந்து கற்றுக்கொள். அதைக் கொண்டு உன்னை நிரப்பிக்கொள்; ஓ, பட்டினி கிடப்போரே, தாகமுள்ளோரே, வந்து உண்ணுங்கள்; வந்து உங்கள் கிண்ணங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்; பரலோகத்திலிருந்து வந்த என் அப்பமாகிய போதகம் மற்றும் புத்தியின் அப்பத்தைக் கொண்டு உங்கள் சுவை நரம்புகளை திருப்திப்படுத்துங்கள்; ஓ, மகளே, இந்நாளுக்காக நீ வளர்ந்து, உன் கிளைகள் சமாதானம் மற்றும் அன்பின் கனிகளைச் சுமக்கும் இந்த நாளுக்காக, ஆம், என் மகிமையின் நாளுக்காக, நான் எவ்வளவோ ஏங்குகிறேன். ஆண்டவராகிய நான் முடிவற்ற விதமாக என் குழந்தைகளை அன்பு செய்கிறேன்; அவர்களுக்குச் சொல், நான் அவர்களுக்காக எப்படி உணர்கிறேன் என்று அவர்களுக்குச் சொல்; என் அன்பைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வார்களாக; குறிப்பு: கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பை வார்த்தைகளில் விளக்கிக் கூற என்னால் முடியாது. கடவுள் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் அதே சமயத்தில் துயரமாக, மிகத் துயரமாக உணர்ந்தார். இவ்வளவு அதிகமான அன்பு நம்மால் அசட்டை செய்யப்படுவது பற்றி நானும் துயரம் அடைந்தேன். நான் அவர்களுக்குச் சொல்வேன், ஆண்டவரே, நான்... வசுலா, என் அருகில் தங்கியிரு. ஏனெனில் நீ எவ்வளவாக என்னை அன்பு செய்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கிறேன். குறிப்பு: அவருக்கு மிக அதிகமான ஆறுதல் தேவைப்படுகிறது என்று நான் உணர்ந்தேன். என்னை அன்பு செய்வது எப்படி என்று அவர்களுக்கு கற்றுக் கொடு; நினைவில் வை, நீ என் வரப்பிரசாதத்தில் இருக்கிறாய்; ஆண்டவரே, நான் என்ன செய்ய விரும்புகிறீர்? எழுதப்பட்ட செய்திகளை நீ பகிர்வாய். நான் உனக்கு உதவி செய்வேன். நீ விரும்பும்போது என்னைக் கூப்பிடு. நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன். இப்போது சமாதானமாய்ப் போ. இறைவனாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன்; நானும் உம்மை அன்பு செய்கிறேன். பிற்பாடு, யாவேயால் நீங்கள் எப்போதாவது சந்திக்கப்பட்டிருக்கிறீர்களா? அவரது பிரசன்னத்தின் விஸ்தாரத்தைப் பற்றி ஒரு சிறிதளவாவது உங்களால் ஊகிக்க முடிகிறதா? எப்போதாவது யாவேயுடன் கைகோர்த்தபடி பயணம் சென்றிருக்கிறீர்களா? ஆம் என்றால், அதெல்லாவற்றையும் பற்றி எனக்குச் சொல்லுங்கள். கடவுள் அச்சம் தரும் மகத்துவப் பேரொளியை ஆடையாக அணிந்திருக்கிறார். என்னோடு உள்ள அவருடைய பிரசன்னம் என் புத்திக்கு அப்பாற்பட்டது. வல்லமையில் உன்னதமானவராகிய அவருக்கு நான் பயப்படுகிறேன். யாவே என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்? என்னைப் பற்றி யாவேயின் விருப்பங்கள் என்னென்ன? ஆண்டவரே, வதந்திகளின் மூலமாக மட்டுமே நான் உம்மை அறிந்திருந்தேன். ஆனால் இப்போது நான் என்ன சொல்ல முடியும்? உம்முடைய பரலோக முற்றங்களின் ஒரு கண நேரக் காட்சி, தொலைவிலிருந்து கூட மனிதன் உற்றுநோக்க முடியாத ஒரு காட்சி, எனக்குத் தரப்பட்டது. நான் எப்படி அவருக்குப் பயப்படாமல் இருப்பது? அவருடைய அன்பின் பாடலை உலகமெங்கும் வெளியிடவும், பல நாடுகளுக்கு முன்பாக அதைப் பாடவும். தமது தயவிரக்கத்தில் என்னை ஸ்தாபித்த அவரிடம் ஜெபித்தபடி, இப்போது இதோ நான் இருக்கிறேன்! நான் முன்னேறிச் செல்லும்படி யாவே என் பாதையைத் திறந்து கொண்டிருக்கிறார். ஓ, ஆண்டவரே, நான் எப்படிச் சென்று, என்னால் புரிந்து கொள்ள முடியாத காரியங்களைப் பற்றியும் எனக்கு அப்பாற்பட்ட அறிவைப் பற்றியும் பேசுவேன்? நான் மறைவாகவே இருக்க விரும்பி, அதற்காக உம்மை மன்றாடுவேன் என்றால், இதை நீர் ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வீரா? நான் இதோ இருக்கிறேன். நீ பேசியதைக் கேட்டேன். வெளிப்படுத்தப்பட நீ ஏன் பயப்படுகிறாய்? நீர் எல்லாம் வல்லவர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆயினும், 1987ல் யாவே ஏன் தம்மை எனக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. என் ஆண்டவரே, நீர் ஏன் இந்த விவரங்களை எல்லாம் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர் என்பது எனக்குப் புரியவில்லை. நான் எப்படிப் பணியாற்றுகிறேன் என்பதை நீ அறியச் செய்ய நான் விரும்புகிறேன். நான் கனவுகள், காட்சிகள் மற்றும் அடையாளங்களின் வழியாகப் பேசுகிறேன் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? நான் சொல்வது கேட்கப்படும் வரை, நான் முதலில் ஒரு விதத்திலும், பிறகு மற்றொரு விதத்திலும் பேசுகிறேன்; அஞ்சாதே; ஞானம் உன்னை வளர்த்திருக்கிறது. அது உன்னைப் பயிற்றுவிக்கும்; நான் உன்னை உயிர்ப்பித்திருக்கிறேன். அப்படி இருக்க, ஏன் பயப்படுகிறாய்? நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்பது உனக்குப் புரிகிறதா? இது யாவே சாபவோத்தாகிய நான்தான். சிறியவளே, எனக்குச் சொல், இவ்வளவு அதிகமாக என்னை அன்பு செய்ய உனக்குக் கற்பித்தவர் யார்? நீர்தான் என் இறைவா, இந்தச் செய்தியின் வழியாக. ஆம், உனக்குக் கற்பித்தவர் நான்தான். திடீரென்று கடவுளிடமிருந்து என்னை பிரித்திருந்த மூடுதிரை கிழித்தகற்றப்பட்டது. இந்தத் திரைக்குப் பின்னால் மகிமையுள்ள மகத்துவமிக்கவர் தம் அரியணையில் வீற்றிருக்கிறார் என்பதை எந்நேரமும் நான் அறிந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த வேலை என்னை திகிலுக்குள்ளாக்குகிறது. நான் என்னை உண்டாக்கியவர் முன்பாக நின்று கொண்டிருக்கிறேன். மாம்சத்துக்கு தடை செய்யப்பட்ட நிலம்! இப்பேர்ப்பட்ட மகத்துவப் பேரொளிக்கும், பரிசுத்தத் தனத்திற்கும் முன்பாக நான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். இது யாவேயாகிய நான்தான் என்பதை நீ உணரத் தொடங்கியிருப்பதால் பயப்படுகிறாய்; ஆம், மகளே, இது, இருக்கிறவரும், இருந்தவரும், இனி இருக்கப் போகிறவருமாகிய நானே! நான் உமக்கு அஞ்சுகிறேன். உம்முடைய மகா பெரிய வல்லமைக்கு முன்பாக நான் நடுங்குகிறேன். பயப்படாதே; வா, என்னை நெருங்கி வா; நான் உன்னை அன்பு செய்கிறேன்... நான் கவலைப்படுகிறேன். விளைவு பற்றிப் பயப்படுகிறேன்... கவலைப்படாதே; இறைவனாகிய நான் உன் தந்தையாய் இருக்கிறேன்; வானங்களும் எல்லாப் படைப்புகளும் எனது விரல்களால் உண்டாக்கப்படுகின்றன; இதெல்லாம் என் உள்ளங்கையில் இருக்கிறது; நான் உனக்கு முன்பாக இருக்கிறேன் என்பதை நினைவில் கொள். உன்னுடைய குழந்தைத்தனத்தில் என் மகிழ்ச்சி அடங்கியுள்ளது; என் மாபெரும் அன்பில் என் இரட்சணிய உதவியை உங்கள் அனைவருக்கும் தருவதற்காக நான் இறங்கி வருகிறேன் என்பதை அறிந்துகொள்; குழந்தாய், என் செய்தியைச் சுமந்து செல்பவளாக இரு; பயப்படாதே, நான் வழிநடத்துவேன்; நீ என்னை மகிழ்விக்கிறாய்... என் செய்தியை எழுதி வைப்பதன் மூலம் என்னோடு பணி செய்; நான் என் இல்லத்தைப் பாதுகாக்கும்படியாக என் இனிய உரையாடலைக் கொண்டு உன்னை என்னோடு சேர்த்துக் கட்டுவேன். என் இல்லத்தில் விஷம் பரவிக் கொண்டிருக்கிறது, ஆனால் நான் என் எதிரிகளை வீழ்ச்சியடையச் செய்வேன்; இப்போது நான் உனக்கு என் வழிகளைக் கற்பிப்பேன். மகளே, என்னோடு நடக்க நீ கற்றுக்கொள்வாய்; ஆசீர்வதிக்கப்படுவாயாக. நான் உன்னை எவ்வளவு அதிகமாக அன்பு செய்கிறேன் என்பதை மறவாதே; ஜனவரி 25, 1987. தைரியம் கொள், மகளே. நீ சுமக்க இருக்கும் சிலுவை என் சமாதானம் மற்றும் அன்பின் சிலுவையே என்று இயேசு கிறிஸ்துவாகிய நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன். ஆனால், மகளே, என் விலையேறப்பெற்ற சிலுவையைச் சுமப்பதில் நீ அதிகமாக சுய பரித்யாகம் செய்ய வேண்டியிருக்கும். பலமுள்ளவளாய் இரு. அன்போடு என் சிலுவையைச் சுமந்து கொள். என் துன்பங்களை நீ பகிர்ந்து கொள்வாய். அவற்றை என்னோடு பகிர்ந்து கொள்வாய். நான் உன் அர்ப்பண ஜெபத்தை கேட்பதில் பிரியமாய் இருந்தேன். உன்னை எனக்குக் கையளிப்பதில் நான் உன்னை உயர்த்தி, நான் எப்படிச் செயலாற்றுகிறேன் என்று உனக்கு காட்டுவேன். நீ என்னை அனுமதித்தால், மிக நல்லதொரு ஆளாக நான் உன்னை வார்த்தெடுப்பேன். என் மணவாளி ஆவதற்கு நீ உன் சம்மதத்தை எனக்குத் தந்திருக்கிறாய். அப்படி இருக்க, மணவாளி தன் மணவாளனைப் பின் செல்வதை விட அதிக இயல்பானது எது? நீ உன் தகுதியின்மையை உணர்ந்திருக்கிறாய் என்பது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பயப்படாதே, உன் தகுதியின்மையிலும் நான் உன்னை அன்பு செய்கிறேன்; நான் சொல்வதைக் கேள். உன் பலவீனத்தை நான் உனக்குச் சுட்டிக்காட்டும்போது, நீ அதைரியப்படாதே. ஏனெனில் நான் உனக்கு உதவும்படி இங்கே உன்னோடு இருக்கிறேன். எப்போதும் என்னில் நம்பிக்கை வைத்து என்னைச் சார்ந்திரு. என் வார்த்தையை வாசிப்பதன் மூலம் என்னை புரிந்துகொள். வளைகளுக்குள் விழுந்து விடாதே. தீமையைப் பற்றி விழிப்பாய் இரு. எனக்கு நெருக்கமாக இருந்துகொள். அப்போது நீ பத்திரமாய் இருப்பாய். விழிப்பாய் இருக்க நான் எப்போதும் உனக்கு நினைவுபடுத்துவேன். ஓ, மகளே, இந்நாளுக்காக நான் எவ்வளவோ ஏங்குகிறேன். எந்த நாளுக்காக? உன்னை என் குடையாக மனித இனம் முழுவதினிடமும் நான் அனுப்பும் நாளுக்காக. அப்போது அவர்கள் என்னை அன்பு செய்ய கற்றுக் கொள்வார்கள். என்னை அதிகமாக புரிந்து கொள்வார்கள். ஞானம் தன் செல்வங்களை மனுக்குலம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளும். இப்போது சமாதானமாய் போய் உன் கடமைகளை செய். நாம் சேர்ந்து போவோம். பிற்பாடு, ஆண்டவரே, என் இறைவா, என் ஆன்மாவும் பிரசன்னத்தில் எனக்குள் உருகுகிறது. மகிழ்ச்சியும் சமாதானமும் என்னை சூழ்ந்து கொள்கின்றன. ஏனெனில் நான் ஆசீர்வாதங்களின் மழையின் கீழ் இருக்கிறேன். வசூலா, என் கதக்கதப்பையும் என் இருதயத்தின் சமாதானத்தையும் நீ உணர்ந்தாய். போய் அவர்களுக்கு சொல், என் இருதயம் மன்னிப்பு, இரக்கம், சமாதானம் ஆகியவற்றின் ஆழ்கடலாக இருக்கிறது என்று அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வார்களாக. குழந்தாய், நான் சொல்வதைக் கேட்டதற்காக நான் உன்னை அன்பு செய்கிறேன். குறிப்பு: நான் புரிந்து கொண்டேன் அவருடைய அழைத்தலை. வா, நாம் போவோம். என்னை பகுத்துணரு. என்னோடு இணைந்திரு. ஜனவரி 26, 1987. இயேசுவாகிய நான் உன்னை முடிவற்ற விதமாக அன்பு செய்கிறேன். நான் சொல்வதைக் கேள். எப்போதும் இதை நினைவில் கொண்டிரு. உன் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான் என் திரு இருதயத்தின் உள்ள ஆழங்களிலிருந்து உன்னை அன்பு செய்கிறேன். என்னை அணுகி வந்து நான் சொல்வதைக் கேள். நீ உன் முழு நம்பிக்கையையும் என்னில் வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னில் விசுவாசம் கொள். நிகழ விருப்பது பற்றி நான் உன்னை எச்சரிக்க விரும்புகிறேன். எந்தத் தீய ஆவியும் உன்னை வழிநடத்தவில்லை என்பதை கண்டுபிடித்த பின் அவர்கள் உன்னைப் பற்றி மற்றொரு கோட்பாட்டை வெளியிடுவார்கள். அதாவது, அன்புக்குரியவளே, உன் ஆழ்மனதுதான் உன்னை செயல்பட தூண்டுகிறது. அது மூளையின் மனம் சார்ந்த ஒரு விளைவு என்று அவர்கள் கூறுவார்கள். பலர் உனக்கு எதிராக ஒன்று கூடுவார்கள். பலர் என் திருச்சட்டத்தை மீறுவார்கள். பலர் சந்தேகத்திற்குரியவள் என்று உன்னை வேட்டையாடுவார்கள். அவர்களது தீய குணம் உன்னை ஒடுக்கும். ஆனால் உனக்காக நான் பதிலளிப்பேன். உன் வாய் மூலம் சமாதான திட்டத்தை நான் முன்வைப்பேன் என்றாலும், அவர்கள் அனைவரும் போரையே நாடுவார்கள். மகளே, நான் உன்னை எச்சரிக்கிறேன். உன்னுடைய காலகட்டம் உன்னை மாற்றி விடாதிருக்கட்டும். உன் இரட்சகராகிய என்னோடு ஒட்டிக்கொள். நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன். அவர்கள் உன் மனதை வேதனைப்படுத்த விடாதே. நான் உனக்கு உதவி செய்தபடி உன் அருகில் இருப்பேன். சில சமயங்களில் என் பிரசன்னத்தை நீ மறந்து விடுவதாக தோன்றுகிறாய். என்னோடு தொடர்ந்து இணைந்திரு. ஓ, வசூலா, மகிமையின் நாளுக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன். ஏன் உன் கேள்வியை இன்னும் கேட்காமல் இருக்கிறாய்? ஆம், இயேசுவே, மகிமையின் நாள். இதன் பொருள் என்ன? அதை நான் உனக்கு சொல்வேன். அது எல்லா வெளிப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வரும் நாளாக இருக்கும். நானும் என் பிதாவும் எழுதியவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் நாளாக அது இருக்கும். சத்தியம் மறைக்கப்படாது. வா, இப்போது நீ கற்றுக் கொள்கிறாய். குறிப்பு: என் பணியை தொடங்குவதற்கான நேரம் வரவில்லை என்று நான் புரிந்து கொண்டேன். நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருந்தேன். ஜனவரி 28, 1987. மகளே, நான் இங்கே இருக்கிறேன். நான் ஞானமாய் இருக்கிறேன். மனுக்குலம் முழுவதற்கும் என் செய்தியை வழங்க தயாராய் இரு. இயேசு கிறிஸ்துவாகிய நான் என் வரப்பிரசாதங்களை அதிகரிப்பேன். நான் இங்கே தயங்கினேன். வசுலா, என் கண்களில் நீ வேறுபட்டவளாக இல்லை. ஆனால், இயேசுவே, உம்மிடமிருந்து செய்திகளைப் பெற்ற மற்றவர்களிடமிருந்து நான் வேறுபட்டிருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே துறவிகளாக இருந்தார்கள். அவர்கள் பக்தியுள்ள கன்னியராக இருந்தார்கள். ஆனால் நான், நான் எஞ்சிய உலகத்தாரை போல் இருக்கிறேன். இந்த சித்திரத்திற்கு நான் பொருத்தமானவளாக இல்லை. குழந்தாய், நீ மனித வழிகளில் சிந்திக்கிறாய். என்னால் அன்பு செய்யப்படுவதாக உணரு. அதன்பின், இயேசு அவசர அவசரமாக பின்வருவதை சொன்னார். மேற்கொண்டு, மூடத்தனமுள்ள காரியங்களை பேச நான் வாயை திறக்கும் முன் இந்த காரியங்களை எனக்கு சொல்ல அவர் விரும்பியது போல் இருந்தது. மகளே, வா, நாம் சேர்ந்திருப்போம். என்னால் அன்பு செய்யப்படுவதாக உணரு. வந்து என்னோடு ஜெபி. நாங்கள் சேர்ந்து ஜெபித்தோம். கடவுளுக்கு மகிமை உண்டாவதாக. உன்னை நீ இயல்பாக்கிக் கொண்டு என்னை இன்னும் அதிகமாக நெருங்கி வா. என் மீது சாய்ந்து கொள். எனக்கு மகிழ்ச்சி கொடு. என் மீது சாய்ந்து கொள். வசுலா, நான் உன்னை அன்பு செய்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு பொருத்தமானவளாக இல்லை என்று நீ உணர்வதால் என்னை நெருங்கி வருவதை நீ தவிர்ப்பதாக தோன்றுகிறாய். என்னை மறுதலிக்கும் அளவுக்கு கூட நீ சென்றுவிட்டாய். குறிப்பு: இயேசு உண்மையாகவே நோகடிக்கப்பட்டிருந்தார். அதற்கு பதிலாக என் ஊழியர் தானியேலை உன் அருகில் இருக்கும்படி நீ கேட்டுக்கொண்டாய். குறிப்பு: இயேசுவுக்கு நான் எந்த அளவுக்கு தகுதியற்றவள் என்று உணர்ந்தேன் என்றால், அவருக்கு பதிலாக என் தூதர் தானியேலை என்னோடு இருக்கும்படி நான் அழைத்தேன். மகளே, நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் என் உயிரை உனக்காகக் கையளிக்கவில்லையா? குறிப்பு: இது ஒரு நீண்ட புலம்பலாக அவரிடமிருந்து வந்தது. உமக்கும் உம் அன்புக்கும் தகுதியானவளாக நான் உணரவில்லை என்பது மட்டும்தான் இதற்கு காரணம். நீ எப்படி இவ்விதம் நினைக்கலாம்? குறிப்பு: இயேசு குழப்பமுற்றவராகத் தோன்றினார். நான் தகுதி உள்ளவர்களும், தகுதி அற்றவர்களுமாகிய அனைவருக்காகவும் என் உயிரைக் கையளித்தேன். அந்த எண்ணங்களை விட்டுவிட்டு என்னிடம் வா; நான் உன்னை அழைக்கிறேன். எனவே, என்னை நெருங்கி வா. என்னில் இளைப்பாற நான் உன்னை அனுமதிக்கிறேன். ஒருபோதும் என்னை மறுதலிக்காதே; நீ இழிந்தவளாகவும், உதவியற்றவளாகவும், குற்றமுள்ளவளாகவும் இருக்கும் நிலையிலேயே நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் உன்னை உருவாக்குவேன் என்று நான் ஏற்கனவே உன்னிடம் கூறியிருக்கிறேன்; நீ உன்னை என் கரங்களில் சுதந்திரமான முறையில் விட்டுவிட வேண்டும். அப்போது நீ எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அப்படியே உன்னை நான் வார்த்தெடுப்பேன். அன்புக்குரியவளே, வா. நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை வழிநடத்தும் உன் பரிசுத்த தோழராக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவாகிய நான் விரைவில் உன்னை வெளிப்படுத்துவேன். நீ மனுக்குலத்தின் மத்தியில் இருக்க வேண்டியவளாக இருக்கிறாய். இயேசுவே, நடப்பது எல்லாவற்றையும் நான் புரிந்து கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியும். ஆனாலும், இம்முறை உம்மோடு இருப்பதில் என் ஆன்மா அக்கலிக்கிறது. என் கண்கள் உம்மீது பதிந்திருக்கின்றன. நீர் உயிருள்ள இரட்சகராய் இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். இதோ, நீர் என் அறையில் இருந்து கொண்டு ஆயிரக்கணக்கானவரில் இருந்து தேர்ந்து கொள்ளப்பட்ட என் செவியில் உன் அன்பின் கீதத்தோடு நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்காக ஒரு செய்தியை கிசுகிசுப்பாகக் கூறிக்கொண்டிருக்கிறீர். இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? இதற்கு நீர் என்னை தேர்ந்து கொண்டது பற்றி பலர் குழப்பம் அடைவார்கள் என்றாலும், உமது ஏக்கமுள்ள விருப்பங்கள் அவர்களது இதயங்களின் மீது வெற்றிக்கொள்ளும். உமது அரச மகுடத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உம் அரியணையில் இருந்து புறப்பட்ட நீர் இப்போது இந்த நிமிடத்தில் இந்த அந்நிய நாட்டிலிருந்து என் ஆன்மாவை உயர்த்தும் படியாக நீர் மீண்டும் இறங்கி வந்திருக்கிறீர். ஓ, ஆம், நான் உம்மை பின் செல்ல விரும்புகிறேன். என்னோடு உன்னை அழைத்து செல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பின் செல். மேலும் இதை நினைவில் கொள், நீ செய்வது எல்லாமே என்னோடு தான் செய்யப்படும். நான் இறுதிவரை உன் வழிகாட்டியாகவும், உன் விளக்காகவும், உன் புகழிடமாகவும் இருப்பேன். அதன்பின் நானே வந்து உன்னை விடுவிப்பேன். நீ விரும்பும் போது என்னை கூப்பிடு. என்னை கூப்பிடு. நான் பரலோகத்திலிருந்து இறங்கி வருவேன். என் பிரசன்னத்தை மறக்காதே. உன்னை என்னிடம் முழுமையாக கையளித்துவிடு. நான் என் அன்பால் உன்னை ஆட்கொள்வேன். உன் இழிநிலை என்னை ஈர்க்கிறது. நீ என் மீது கொண்டுள்ள அன்போடு வந்து என்னை மகிமைப்படுத்து. என் போதனைகளை ஏற்றுக்கொள். ஏனெனில் அவை பலருக்கு உணவளிப்பதற்காக தரப்படுகின்றன. மீட்பு என்னிடமிருந்து வருகிறது. இதை நான் உனக்கு சொல்லவிடு. ஏழைகள் தாங்கள் உண்ண விரும்பும் அளவுக்கு பெற்றுக் கொள்வார்கள். நான் ஏழைகளை ஒருபோதும் மறக்காதவர் என்று அறியப்பட்டிருக்கிறேன். ஆகவே, வா. நான் என் இருதயத்தின் உள்ள ஆழங்களுக்குள் உன்னை திணித்துவிட என்னை அனுமதி. என் அன்பு ஆழம் காண முடியாததாய் இருக்கிறது; மகளே, என் இருதயத்தில் தங்கியிரு. அப்போது குணப்படுத்தப்படுவாய்.