ஒவ்வொரு ஆன்மாவும் தன் மீது பசியும் தாகமும் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புவதாகக் கூறுகிறார். அன்பு இல்லாதபோது சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமக்கு என்ன பயன் என்று அவர் கேட்கிறார். வசுலாவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று சொல்லி, இதய எளிமையில் தம்மைத் தேடும்படி அழைக்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 95. ஜூலை 4, 1989 என் ஆண்டவரா? நான்தான்; ஒவ்வொரு கூட்டத்தின்போதும் உன்னை ஞான ஒடுக்கம் செய்; ஞான ஒடுக்கம் செய், பயப்படாதே; என் போதனைகள் ஆரோக்கியமானவை, உன் ஆன்மாவிற்குக் கற்பிக்க என்னை அனுமதி; என் தெய்வீகத் திட்டத்தைத் தொடர என்னை அனுமதி; நான் விரும்புவதெல்லாம் உன் சித்தம் மட்டுமே; குறிப்பு: "நான் விரும்புவதெல்லாம் உன் சித்தமே" என்று கூறியபடி இயேசு என்னை நோக்கித் தம் கரங்களை விரித்திருந்ததை நான் எனக்குள் கண்டேன். நான் என் சமாதானத்தை, என் அன்பை நித்தியத்திற்கும் உனக்குத் தருகிறேன்; நான் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்; என் குழந்தாய், சமாதானம்; என் தாய் சொல்வதைக் கேள்; சரி ஆண்டவரே. நம் பரிசுத்த அன்னையாகிய புனித மாமரி. வசுலா, உன் ஆன்மா இயேசுவின் புனித இருதயத்தில் இளைப்பாறட்டும்; மற்ற எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடு; வா, நான் என் செய்தியை உனக்குச் சொல்வேன்; குறிப்பு: ஃப்ரீபர்க்கிற்காக, 1989 ஜூலை 14 அன்று நடக்க இருந்த எங்கள் ஜெப மறு உணர்ச்சிப்பு கூட்டத்திற்கான செய்தி. சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் உங்கள் மீது என் கரத்தை விரித்து, உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தபடி, இந்தக் கூட்டத்தில் உள்ள உங்கள் அனைவரோடும் இருக்கிறேன்; ஞானத்தின் வார்த்தைகளுக்கு செவிகொடு; ஆண்டவர் தேடுவதெல்லாம் உன் இதயமே, அதை அவருக்கு மறுக்காதே; நீ உன் இதயத்தை அவருக்குத் தருவாய் என்றால், அவர் உன்னை வழிநடத்தி, உன் இல்லமும் உன் ஆன்மாவின் இல்லமுமாகிய அவருடைய திரு இருதயத்திற்குள் உன்னை அழைத்துச் செல்லும்படி, உனக்கு தம் அன்பின் கொடையைத் தருவார்; ஆண்டவரிடம் திரும்பி வந்து, உன் சித்தத்தை அவருக்கு ஒப்புக்கொடு; உன்னதரிடம் திரும்பி வா, அவர் தம் அன்பைக் கொண்டு உனக்கு நறுமணமூட்டுவார்; நான் இன்று உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும்படி, உங்களை அழைக்கிறேன்; எங்கள் அழைப்புகள் இந்த இருண்ட உலகம் முழுவதிலும் இருக்கின்றன, உங்கள் காலம் என்னவாக ஆகியுள்ளதோ, அந்தத் துன்பமும், கடும் வேதனையும் நிறைந்துள்ள இந்த உலகம் முழுவதிலும், எங்கள் அழைப்புகள் இருக்கின்றன; இயேசுவும் நானும் உலகின் பல பாகங்களில் பல்வேறு வழிகளில் ஏன் உங்களை வற்புறுத்துகிறோம், மனம் திரும்பும்படி ஏன் உங்களை கூவி அழைக்கிறோம் என்பதை தியானிக்கும்படி ஒவ்வொரு ஆன்மாவையும் நான் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்; நாங்கள் வழி தவறிப்போன பெற்றோர்களைப் போல, நாங்கள் எவ்வளவோ அதிகமாக நேசிக்கிற குழந்தைகளாகிய உங்களை வந்தடையவும், உங்களை எச்சரிக்கவும் எல்லா வழிகளிலும் முயல்கிறோம்; எங்கள் எச்சரிப்புகளையும், அழைப்புகளையும் உங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்; மனம் வருந்துங்கள், உங்கள் இதயத்தைக் கொண்டு ஜெபியுங்கள், ஆண்டவரிடம் அன்புடன் வாருங்கள், வந்து ஆண்டவரை ஆராதியுங்கள்; அவர் உங்களுக்குத் தந்து கொண்டிருக்கிற அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவருடைய இருதயத்தை மகிழ்வியுங்கள், நீங்கள் எல்லோரும் திருமணி ஆராதனைக்கு வருவதை அவர் காணட்டும்; அன்பு அன்பை ஆசிக்கிறது, அன்பு உங்கள் இதயத்தைத் தேடுகிறது; ஆகவே, அன்பிடம் வாருங்கள், பதிலன்புக்காக உங்களை நோக்கிக் கூக்குரலிடுகிற பரிசுத்தரிடம் வாருங்கள்; நான் உங்களை நேசிக்கிற உங்கள் பரிசுத்த தாயாக இருக்கிறேன், இதில் எந்த சந்தேகமும் கொள்ளாதீர்கள்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஆமென்; புனித மிக்கேல் எங்களுக்கு ஒரு செய்தி தருகிறார். நான் புனித மிக்கேல்; பாதுகாப்பாகவும், தீயவனுக்கு எதிராக உங்களைக் காப்பாற்றும்படியும் நீங்கள் யாரிடம் ஜெபிக்கிறீர்களோ, அந்த புனித மிக்கேல்; பயப்படாதீர்கள், உங்கள் கஷ்டங்கள் இந்த ஜெபத்தால் தணிக்கப்படும்; காட்சி காண்பவர்களிடம், காட்சிகள் காணாதீர்கள் என்றும், இறைவாக்கினர்களிடம் நாங்கள் உண்மையில் தான் இருக்கிறோம் என்பதால், எங்களுக்கு இறைவாக்கு சொல்ல வேண்டாம் என்றும் சொல்வதன் மூலம், உங்கள் முன்னோர்களைப் போல, பரிசுத்தரின் செய்திகளை ஏற்றுக் கொள்வோரை மூச்சுத் திணறடிக்காதீர்கள்; அதற்குப் பதிலாக உங்கள் கண்களை உயர்த்தி, சுற்றிலும் பாருங்கள்; எல்லோரும் ஒன்றாகக் கூடி, இறைவனிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்; உங்கள் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், உங்கள் புதல்வியர் அன்போடு சுமந்து வரப்படுகிறார்கள், ஏனெனில் ஆண்டவர்தாமே இதை அறிவித்திருக்கிறார்; "உங்கள் காலத்தின் மீது இரவு ஆதிக்கம் செலுத்தினாலும், என் ஒளி அதை ஊடுருவி, இந்த பூமியை மூடிக்கொள்ளும், மக்களினத்தார் அனைவரும் என்னிடம் வருவர், நான் மீண்டும் என் மந்தையை என் திருப்பெயரின் கீழ் ஒரே பரிசுத்த கிடைக்குள் ஒன்று கூட்டுவேன்;" ஓ, ஆண்டவரின் குழந்தைகளே, ஜெபியுங்கள், குழந்தையின் வாயினின்றும், தாழ்மையுள்ளவர்களின் வாய்களினின்றும் வருவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் தம் மக்களை மீண்டும் சீர்படுத்த ஆண்டவரை அனுமதியுங்கள்; அஞ்சாதீர்கள், மீட்பு அண்மையில் உள்ளது, அது உங்கள் வாசல்களின் அருகிலேயே உள்ளது; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே நான் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; ஆமென்; வசுலா, உன்னைப் பயன்படுத்த ஆண்டவரை அனுமதி; ஆண்டவருக்காக ஏங்கு; அவரை அன்பு செய், ஏனெனில் அவர் அனைவரிலும் அதிகமாக தயவிரக்கமுள்ளவர்; பிற்பாடு, இன்னும் இறைவனுக்காகத் தாகம் கொண்டவளாக, பத்து நொடிகள் தான் நீடிக்கிறது என்றாலும், அவர் எனக்குத் தந்துள்ள இந்த தனிப்பட்ட வழியில் நான் அவரிடம் வருகிறேன். எனக்கு அன்யோனியத்தின் ஒரு பரிமாற்றம், என் இரட்சகருடன் ஒரு உரையாடல் மட்டும்தான் தேவைப்பட்டது. ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்... நான்தான்; மலரே, என்னை அன்பு செய்; என்னை மகிழ்வி; நெருங்கி வா, நான் உன் அருகில் இருக்கிறேன்; ஜூலை 5, 1989 என் ஆண்டவரா? நான்தான்; சமாதானம் உன்னோடு இருப்பதாக; ஆண்டவரே, சில சமயங்களில் இது கடினமாய் இருக்கிறது. என் வசுலா, ஒரு பாலைவனத்தில் வாழ்வது கடினமாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனாலும் என் கண்கள் எப்படி ஒருபோதும் உன்னை விட்டு விலகுவதில்லை என்பதை நினைவில் கொள்; என் மீது சாய்ந்துகொள்; என் வார்த்தைகள் கடந்த காலத்திலிருந்து மாறுபடுவதில்லை; நான் மனந்திரும்பும்படி ஒவ்வொரு தலைமுறையையும் அழைத்துக் கொண்டே இருப்பதை ஒருபோதும் நிறுத்தியதில்லை; மிகுந்த அன்போடும், பரிதாப உணர்வோடும் நான் எப்போதும் என் கரத்தை நீ பிடித்துக் கொள்ளும்படி நீட்டியபடி இருப்பேன்; என் அன்பின் வேலைகளைத் தொடர்ந்து செய்ய நீ மனதாய் இருக்கிறாயா? ஆம், ஆண்டவரே, இதுதான் உன் விருப்பம் என்றால் நான் மனதாய் இருக்கிறேன். இது என் விருப்பம்தான், பூமியின் மீதுள்ள ஒவ்வொரு ஆன்மாவையும் அழகுபடுத்துவதே என் விருப்பம், என் அப்பத்தை ஒவ்வொருவரும் சுவைக்க அனுமதிப்பதே என் விருப்பம்; நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன்; உங்களை இலவசமாக நிரப்புவதே என் விருப்பம்; கடவுளற்றவர்களை தங்கள் புலன்களுக்குத் திரும்பக் கொண்டு வருவதே என் விருப்பம்; என் வசுலா, என் இருதயத்தை உணர்ந்து பார்; இந்த இருண்ட யுகத்தில் நிகழ்வது போல, அது இவ்வளவு அதிகமாக முன் ஒருபோதும் கிழிக்கப்பட்டு, வேதனைப்பட்டதேயில்லை; ஓ, என் தேவனே... இருந்தும், இவ்வளவு அதிகமான ஆன்மாக்கள் நித்திய நெருப்புகளை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் காண்பது எனக்கு இன்னும் எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது... புரிந்துகொள், என் குழந்தாய், உன் துன்பம் என்னுடையதோடு ஒப்பிடும்போது எப்படி ஒன்றும் இன்மையாக இருக்கிறது; உன்னில் நான் இளைப்பாற அனுமதி; சமாதானத்தில் இரு; ஜூலை 6, 1989 ஆண்டவரே, இந்த கடந்த நாட்களில் நிச்சயமாக நீர் உம் திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டீர், முன்பு நான் உணர்ந்த அளவுக்கு உம் ஒளியை உணரவில்லை, ஏன் என்னைக் கைவிடுகிறீர்? ஆண்டவரா? நான்தான்; ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே; நான் உன் மீட்பர், பரிசுத்தர்; உன் மீதான என் அன்பு பெரிதாய் இருக்கிறது, உன் ஆன்மாவுக்கு நன்மையானதை நான் உனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறேன்; உன்னை வடிவமைப்பவர் நான்தான், நான் உன்னைக் கைவிடுகிறேன் என்று நினைக்காதே; துயரம் கொள்ளாதே; நீ வீணில் உழைக்கவில்லை; என் வசுலா, கேள், நான் உன்னை அன்பு செய்கிறேன், என் அப்பத்தைக் கொண்டு உன்னை உண்பிப்பதை நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன்; நான் சொல்வதைக் கேள்; நான் மிகுந்த பரிதாப உணர்வின் காரணமாக, இந்தத் தலைமுறைக்காக ஒர் இன்பமான திராட்சைத் தோட்டத்தை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்; நான் அழகிய குருத்துக்களை வெளியிடும் ஒரு திராட்சைச் செடியைப் போலிருக்கிறேன்; குறிப்பு: சீராக் ஆகமம் 24 ஆம் அதிகாரம் 17 ஆம் இறைவார்த்தை. என் மலர்கள் அன்பு மற்றும் சமாதானத்தின் கனிகளைத் தருகின்றன என்னை ஆசிப்பவர்களே, என்னை நெருங்கி வந்து என் கனிகளால் நிரப்பப்படுங்கள்; குறிப்பு: சீராக் ஆகமம் 24 ஆம் அதிகாரம் இறைவார்த்தைகள் 18 மற்றும் 19. என்னை உண்பவர்கள் இன்னும் பசியாயிருப்பார்கள், என்னைப் பருகுபவர்கள் இன்னும் தாகமாயிருப்பார்கள்; குறிப்பு: சீராக் ஆகமம் 24 ஆம் அதிகாரம் 21 ஆம் இறைவார்த்தை. ஆ, மகளே, எனக்காக ஒவ்வொரு ஆன்மாவும் பசி தாகம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எவ்வளவு விரும்புகிறேன்! திருச்சபை இப்போது இருப்பது போல சிதைவில் இருந்திருக்காது, ஏனெனில் அன்பு இல்லாதபோது, அவர்களுடைய சம்ப்ரதாயங்களாலும், சடங்குகளாலும் எனக்கு என்ன பயன்? ஒரு மரம் வேரில்லாமல் பிழைத்திருக்க முடியுமா? என் திருச்சபையின் வேர் அன்புதான்; அப்படி இருக்க, அன்பு இல்லை என்றால் என் திருச்சபை எப்படி பிழைத்திருக்க முடியும்? இயேசுவே, நான் உமக்கு ஆறுதல் தர விரும்புகிறேன்; உன் அன்பைக் கொண்டு என் தலைக்கு ஓய்வு கொடு; என்னை நேசித்து, உன்னில் நான் இளைப்பாற என்னை அனுமதி; என் தேவ நற்கருணைப் பேழை அருகில் உங்கள் அனைவரையும் நான் காண்பேன் என்பதில் நான் ஆழமாக மகிழ்ச்சியுறுகிறேன்; குறிப்பு: ஆராதனை நேரத்தில் இருக்கப்போகிறவர்களை இயேசு இப்படிக் குறிப்பிட்டார். அன்பு உங்களை அன்பு செய்கிறது; நானே ஆண்டவர், ஆகவே, பாதுகாப்பாக உணருங்கள்; ஜூலை 7, 1989 நீர் என் கடவுளாக இருப்பதால், உமக்குக் கீழ்ப்படிய எனக்குக் கற்றுத் தாரும். நீரே எனக்குக் கற்பிப்பவராக இருப்பதால், என் ஆவி என்னைக் கைவிடுகிறது, இந்த அந்நிய நாட்டில் நான் ஆறுதலற்றவளாக உணர்கிறேன். ஆண்டவரே, என் வேண்டுதல்களை கேட்டருளும். எங்கே இருக்கிறீர்? மலரே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் உன் அருகில் இருக்கிறேன்; இப்போதிலிருந்து, நீ என்னில் அதிக விசுவாசம் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்; நான் உனக்குக் கற்பிப்பவர் அல்லவா? அப்படியிருக்க, நீ எதற்காகக் கவலைப்பட வேண்டும்? சமாதானமாயிரு, நானே மன்னிப்பு; எனக்குப் பிரமாணிக்கமாயிரு, மற்றதை என்னிடம் விட்டுவிடு; நான் உனக்கு என் அப்பத்தையோ, என் அன்பையோ தர ஒருபோதும் மறுக்க மாட்டேன்; ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுங்கள்; அடிக்கடி என்னிடம் குறைந்தது ஒரு கண நேரமாவது ஜெபி; நான் எப்போதும் உனக்கு முன் இருக்கிறேன்; உன்னை வழிநடத்தும் ஒரே ஒருவர் நானே; ஆகவே, உன் கரம் என் கரத்தில் இருப்பதால் நம்பிக்கையோடு இரு; நீ வறியவள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நானே அளவற்ற செல்வம் அல்லவா? நீ கவலைப்பட வேண்டியதில்லை; ஏனெனில் உனக்குத் தேவையானதைத் தருபவர் நானே; உன்னை நான் இருளில் விட்டு விடுவேன் என்று ஒரு வினாடி கூட நினைக்காதே; நான் உன் விளக்கை எண்ணெயால் நிரப்புவேன்; உனக்கு உணவளிப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்; சிறியவளே, நான் உன்னைப் பராமரித்துக் கொண்டிருக்கிறேன்; இடைவிடாமல் ஜெபி, இறுதிவரை நானே உனக்குக் கற்பிப்பவராக இருக்க என்னை அனுமதி; உன் அன்பைக் கொண்டு என்னைச் சீராட்டு, உன் ஜெபங்களால் என்னை அலங்கரி, உன் எளிமையைக் கொண்டு என்னை வசீகரி; என்னைத் தேடு; இதய எளிமையில் நீ என்னைக் காண்பாய்; என் மீது ஆசை கொள்; எனக்காகத் தாகம் கொள், அன்புக்காக, அன்போடு நற்செய்தி அறிவிப்பதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; என் திரு இருதயத்தில் தங்கியிரு; என் திரு இருதயம் உன் ஆன்மாவில் குறைவுபடுவதையெல்லாம் உனக்குத் தரும்; நானே அன்பின் ஆதாரமாக இருப்பதால், இந்த அன்பை நான் ஆசிக்கிறேன்; அன்பு உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறது; ஜூலை 8, 1989 ஆண்டவரே, என் ஆன்மாவில் ஞானமும், நிலைத்திருக்கும் வரமும், பக்தி, ஆர்வமும், பொறுமையும் குறைவுபடுகிறது. தொடர்ந்து செயல்பட எனக்கு உம் பலம் தேவை. ஆனாலும் நான் உம்மைக் கைவிடுகிறேன். நான் உம்மிடமிருந்து நழுவுகிறேன் என்று மட்டுமே நான் சொல்ல வேண்டியுள்ளது என்று எனக்கு தெரியும். உடனே உம் அன்பு என்னை தாங்கிக் கொள்ள வருகிறது. உமது கரம் என்னை தூக்க வருகிறது. ஆண்டவரே? நான்தான்; ஒருபோதும் ஐயப்படாதே, நான் ஆண்டவரும் உன் அடைக்கலமுமாய் இருக்கிறேன்; ஆபத்துக்களின் காலங்களில் உனக்கு நான் தேவைப்படும்போது, என் திருப்பெயரைக் கூவியழை, நான் உன்னைக் காப்பாற்ற ஓடி வருவேன், அன்புக்குரியவளே, என்னோடு ஒட்டிக்கொள், ஏனெனில் நான் உன்னைப் பாதுகாக்கும் இறைவனாக இருக்கிறேன்; என்னை மன்றாடும் அனைவருக்கும் நான் பதிலளிக்கிறேன்; என்னை நம்பு, நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்; என் மீது சாய்ந்துகொள், என் தோள் நீ தலைசாய்க்கும் இடமாக இருக்கட்டும், என் திரு இதயம் உன் இல்லமாக இருக்கட்டும், நீ ஒருபோதும் கைவிடப்பட்டவளாக இருக்க மாட்டாய்; என் அளவற்ற இரக்கத்தில் நான் உன்னை என்னிடம் தூக்கிக் கொள்ளவில்லையா? உன்மீது ஆசீர்வாதங்களை பெரும் மழைபோல் நான் பொழியவில்லையா? ஆகவே, எழுந்திரு; அச்சப்படாதே; நீ பலவீனமான இதயம் உள்ளவள் என்று எனக்குத் தெரியும்; ஆனால் நான் என்னை ஒடுக்குபவர்களை எதிர்கொள்வதற்கான என் பலத்தை உனக்குத் தருவேன்; அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்ச்சி அடைவார்கள்; யாரும் உன்னை தொடமாட்டான்; ஏனெனில் நானே உன் புகலிடமாக இருக்கிறேன்; இந்த அந்நிய நாட்டின் ஊடாகக் கடந்து போகும்போது நீ பயப்படத் தேவையில்லை, தீயவனிடமிருந்து உன்னை நான் எப்படி மீட்டு இரட்சித்தேன் என்பதை நினைவில் கொள்; நான் உன் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறேன்; நான் இறுதிவரை எப்போதும் உன்னோடு பகிர்ந்து கொள்வேன்; ஆகவே, வந்து உன் இதயச் சுமையை என்னிடம் இறக்கிவை, நானும், நீயும் ஒன்றாகச் சேர்ந்து; மகளே, உன் தரப்பில் தகுதி என்று எதுவுமின்றி நான் எப்படி உன் ஆன்மாவை வழிநடத்துகிறேன் என்பதைப் புரிந்துகொள்; நான் தருவதெல்லாம் இலவசமாகவேத் தரப்படுகிறது, என்னோடு இணைந்து ஒன்றாயிரு, நான் உனக்கு என் சமாதானத்தைத் தருவேன்; இனி பாவம் செய்யாதே; ஆல்பாவும், ஒமேகாவுமா? நான்தான்; இறைவனுக்கு மகிமை உண்டாகுக; நம் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! மலரே, இதை நினைவில் வைத்துக்கொள், என்னை காணும்போது என்னை நோக்கி புன்னகை செய்; நான் அன்பாக இருக்கிறேன், நான் உன் பக்கத்தில் இருக்கிறேன்; நான் உனக்குக் கற்பிப்பவராக இருக்க அனுமதி; என் மகன்களும், மகள்களும் என்னால் கற்பிக்கப்படுவார்கள் என்றும், அன்பு உங்களுக்குக் கற்பிப்பவராக இருக்கும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது; உன் ஆசிரியரும் எல்லா உரையாடல்களும் ஞானத்திலிருந்தே வரும்; உன்னை இறுதிவரை வழிநடத்த போவது நான்தான்; நான் என் மீட்பரை தேடினேன், ஆனால் அவரைக் காணவில்லை என்று சொல்லி இந்த வனாந்தரத்தில் இன்னும் தவறு செய்து கொண்டிருப்பவர்களே, வாருங்கள்; என் அன்புக்குரியவர்களே, சுய ஆர்வமின்றி என்னை நேசிப்பதன் மூலம் இருதய பரிசுத்தத்தில் என்னை கண்டுபிடிங்கள்; உங்களிடம் நான் ஆசிக்கும் கையளித்தலில் பரிசுத்த தனத்தில் என்னைக் கண்டுபிடிங்கள்; என் கட்டளைகளை கடைபிடிப்பதன் மூலம் என்னைக் கண்டுபிடிங்கள்; தீமையின் இடத்தில் அன்பை வைப்பதன் மூலம் என்னைக் கண்டுபிடிங்கள்; இதய எளிமையில் என்னை கண்டுபிடிங்கள். இனி பாவம் செய்யாதீர்கள்; தீமை செய்வதை நிறுத்துங்கள்; நன்மை செய்ய கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; இந்த வனாந்தரமும், இந்த வறட்சியும் அக்களிப்பானவாக உங்கள் வெதுவெதுப்பு உக்கிரமுள்ள தீச்சுவாலையாக மாறட்டும்; உங்கள் மந்த நிலையை விட்டு விலகி, அதன் இடத்தைப் பக்தி ஆர்வத்தைக் கொண்டு நிரப்புங்கள்; நான் என் மீட்பரைத் தேடினேன்; அவரைக் கண்டுகொண்டேன்; அவர் முழு நேரமும் என் அருகில்தான் இருந்தார்; ஆனால் என் இருளில் நான் அவரைக் காணத் தவறிவிட்டேன்; ஓ, இறைவனுக்கு மகிமை உண்டாக! நம் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக; நான் எப்படி இவ்வளவு குருடாக இருக்க முடிந்தது என்று சொல்லக்கூடியவர்களாக நீங்கள் இருக்கும்படி இந்த எல்லா காரியங்களையும் செய்யுங்கள்; அப்போது நீங்கள் வாழும்படியாக என் கொள்கைகளை அனுசரிக்கவும், அவற்றை மதித்து போற்றவும்; நான் உங்களுக்கு நினைவுபடுத்துவேன்; என் ஆண்டவரே, இப்போது இந்த வனாந்தரத்தை பெருக்கெடுத்தோடும் ஊற்றுகளாக மாற்றப் போகிறீர் என்பதற்காக உமக்கு நன்றி. என் போதகங்களை நினைவில் கொள்; வா, என் பிரசன்னத்தை எக்காலமும் நினைவில் வை; அன்பு உன்னை அன்பு செய்கிறது; குறிப்பு: திடீரென்று நான் என் வீட்டு வேலையை நினைத்துக் கொண்டேன். நாம் பகிர்ந்து கொள்வோமா? சரி, ஆண்டவரே! அப்படியானால் நாம் அன்புடன் பகிர்ந்து கொள்வோம்; என்னோடு ஒன்றாய் இரு;