இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 67. ஏப்ரல் 11, 1988 ஆண்டவரே, உம் கண்களில் நானே அனைவரிலும் சிறியவள் என்பதால், ஆண்டவரே, என் மீது பரிவிரக்கம் காட்டும், நீர் விரும்பினால், எஞ்சியுள்ள ரொட்டித் துண்டுகளைக் கொண்டாவது என்னைப் போஷித்தருளும்; புனித மாமரியே, என்னை நிந்தித்து ஒதுக்காதீர்கள்; தயவுசெய்து இரக்கம் காட்டும், எஞ்சியுள்ள ஒரு சில ரொட்டித் துண்டுகளை ஆண்டவர் என்னிடம் வீசெயறிவாராக, தயவுசெய்து என்னை உயிரோடு காப்பாற்றும்! ஆமென். வா, என் அப்பத்தைப் பெற்றுக்கொள்; நான் உன்னை மறுக்கமாட்டேன்! என் சொந்தக் கரத்தால், நான் உனக்கு உணவு ஊட்டுவேன்; வசுலா, நான் உணவூட்டுவேன், உன்னை அழகுபடுத்துவேன்; என்னை மகிழ்வி, என்னை ஸ்துதித்துப் போற்று! ஆண்டவர் ஸ்துதிக்கப்படுவாராக! வா, எழுது, எழுது; காயின் தன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டான்; இந்த முறை அவன் தன் சகோதரனைக் கொல்லமாட்டான், நான் அவனை ஒளித்து வைப்பேன்; நான் அவனுக்கு வியப்பூட்டுவேன்; அவனுடைய திட்டத்தைக் குலைத்து, அவனை நிர்வாணியாக விட்டுவிடும்படி நான் ஒரு திருடனைப் போல அவனுடைய அறைக்குள் நுழைகிறேன் என்பதைப் பற்றி அவன் கொஞ்சமே அறிந்திருக்கிறான்; குறிப்பு: இயேசு இப்போது இப்படிச் செய்து கொண்டிருக்கிறாரா? காயின், மனஸ்தாபத்தோடு என்னிடம் திரும்பி வரும்வரை அவன் நிர்வாணியாகவே நிலைத்திருப்பான்; இந்த வேளைக்காக ஜெபி; கெஞ்சுதல்களையும், மன்றாட்டுகளையும், அச்சத்தையும் எழுப்பவிருக்கும் இந்த வேளைக்காக; இது நீதியின் வேளையாக இருக்கும்; என் குழந்தாய், ஆசீர்வதிக்கப்படுவாயாக; உன் பரிசுத்த தந்தையாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; நான் பரிசுத்த தமத் திரித்துவமாய் இருக்கிறேன், நீ நன்றாகப் பகுத்துணர்ந்திருக்கிறாய்! இதை எழுது; நான் உன் பரிசுத்த தந்தையாக இருக்கிறேன் என்று இயேசு சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரே ஆள் மூன்று ஆட்களாகத் தோன்றுவது போன்ற அலங்காரப் படங்களைப் போல ஒரு மும்மடங்கு இயேசுவை நான் பகுத்துணர்ந்தேன்; ஒருவரில் இருந்து வெளிப்படுகிற இன்னொருவர், ஒரே விதமான மூவர்; மூவரும் ஒன்றானவர்கள். நான் பரிசுத்த தமத் திரித்துவமாக, ஒருவரில் அனைவருமாக இருக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; குழந்தாய், வா, நான் ஆழமான பரம இரகசியங்களுக்குள் உன்னை நடத்துவேன், எல்லாம் என் மகிமைக்காகவே; என் கரத்தைப் பிடித்துக்கொள், நாமே உன்னைச் சிருஷ்டித்தவர்; நாங்கள் நாம்? ஆம், ஆண்டவரே! ஏப்ரல் 12, 1988 நேற்று முதல், பலவீனமான தருணங்களில் சாத்தான் இதை அனுகூலமாக்கிக் கொண்டு என்னைத் தாக்கி, என் ஆன்மாவைக் கிளர்ச்சியுற்றதாக ஆக்கினான். உடனடியாக இயேசு எங்கள் பந்தங்களை இறுகச் செய்வதை நான் உணர்ந்தேன்; அவை உண்மையான மெல்லிய கயிறுகளைப் போலத் தோன்றுகின்றன. இந்த கட்டுகள் அதிக இறுக்கமாக இருப்பதால், அவருடைய முழு கரத்தையும் நான் உணர்ந்தேன். நாங்கள் ஒருவிதமான சயாமிஸ் இரட்டையர்கள் என்பது போல நான் உணர்ந்தேன். அவர் கவலையோடும் ஏக்கத்தோடும் எனக்கு எதிரில் நின்று முன்னோக்கி சாய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்; நான் தேற்றப்பட்டதாக உணர்ந்தேன். நான் உன் அருகில் இருக்கிறேன்; வா, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; என் வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; என் கண்கள் ஒருபோதும், குறிப்பாக பலவீனத்தின் இந்தக் கணங்களிலும், உன்னை விட்டு விலகுவதில்லை; நான் நம் கட்டுகளை இறுக்குகிறேன்; வசுலா, நினைத்துப் பார்; நான் இன்னும் உங்கள் மத்தியில் இருக்கிறேன் என்று உலகம் காணும்படியாக, நான் உன்னைக் குணமாக்கினேன்; வசுலா, நான் உன்னைப் பயன்படுத்துவதற்காக உன்னைக் குணமாக்கினேன்; குறிப்பு: இயேசுவின் குரல் தொனி துயரமானதாக மாறியது. என் கரங்களுக்கு வெளியே, ஆம், என் கரங்களுக்கு வெளியே உலகத்திற்குள், என் வலையாக உன்னை வீசினேன்; மகளே, இந்த முறையில் உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; அவ்வப்போது நான் என் வலையை உள்ளே இழுக்கிறேன், என் வலை கொஞ்சம் மீன்பாட்டோடு வருவதைக் கண்டு நான் மகிழ்கிறேன்; ஆம், என் ஆவல்களைத் தேடு; நீ புரிந்துகொள்வாய்; உலகத்தின் மத்தியில் வாழ்வது கடுமையானது என்று எனக்குத் தெரியும், ஏனெனில் நீ உலகத்திற்குச் சொந்தமானவள் அல்ல; நான் உன் ஆதித் துவக்கங்களையும், ஆதியில் நீ யாருக்குச் சொந்தமாய் இருந்தாய் என்பதையும் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன், ஆனால் தீயவன் இவ்வளவு காலமாக உன்னை ஏமாற்றிக் கொண்டிருந்தான்; நீ எனக்குச் சொந்தமாய் இருந்தாய்; நீ என்னிடமிருந்து வருகிறாய், நீ என் வித்தாய் இருந்த ஆபேலைப் போல எனக்குச் சொந்தமானவள்; உன்னை உலகத்தில் கொண்டிருக்கும்போது, உலகம் தங்களுக்குச் சொந்தமானவளாக உன்னை அடையாளம் காணவில்லை, இதன் காரணமாக, அவர்கள் உன்னை கண்ணியில் சிக்க வைக்க முயல்வார்கள்; அவர்கள் உன்னை நிந்தித்து, நீ மனச்சோர்வடையச் செய்வார்கள்; காலத்திற்கு முன்பாகவே நீ ஆயத்தப்பட்டு இருக்கும்படியாகவும், உனக்கு முன் கிடைக்கிற இந்த எல்லாத் துன்பச் சோதனைகளையும் நீ தாங்கிக்கொள்ள உனக்கு உதவும்படியாகவும், நான் இந்த எல்லாக் காரியங்களையும் உனக்கு வெளிப்படுத்தினேன்; உன் சிலுவையை நான் உனக்குக் காட்டியிருக்கிறேன்; ஆனாலும் நான் அதை உன்னோடு பகிர்ந்து கொண்டு, உன்னோடு இருக்கிறேன், என்னில் நீ உன் இளைப்பாற்றியைக் கண்டடைவாய்; மகளே, தைரியம் கொள்; நீ களைப்பாய் இருக்கும்போது என் மீது சாய்ந்து கொள், நான் உன்னை இளைப்பாற்றுவேன்; நான் உன்னைத் தேற்றுவேன்; வா, என்னைப் பார்த்துப் புன்னகை செய்; நான் உனக்குக் கற்பித்துக் கொண்டு வருவதை மறந்து விடாதே; என் பிரசன்னத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகம் கொள்ளாதே; மகளே, என் அரசைப் பரப்பு; நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்; எது உமக்கு அதிக மகிமை தரும், எனக்காக தீர்மானியும், ஆமென். நம் பரிசுத்த மாதா. வசுலா, நீ ஆண்டவருக்கு இந்த சுதந்திரத்தைத் தருவதால், அவர் உன்னைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார் என்பதை அறிந்துகொள்; அவரை விடச் சிறந்த ஒரு வழிகாட்டியை நீ கொண்டிருக்க முடியாது; ஞானம் உனக்குப் போதிக்கும்; இளக்கமுள்ளவளாக இரு, எல்லாவற்றையும் அவருடைய கரங்களில் விட்டுவிடு; அது ஆண்டவரை மகிழ்விக்கிறது; முழுவதுமாகக் கடவுளின் மீது சாய்ந்து கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆசீர்வதிக்கப்படுவாயாக; புனித மாமரியே, நான் உங்களை வாழ்த்துகிறேன். நாங்கள், நாம்? ஆம், நாங்கள், நாம். ஏப்ரல் 18, 1988 நான் இயேசுவைப் பற்றி மட்டுமே நினைத்தேன். நான்தான், ஆன்மாவே, சமாதானம் உன்னோடு இருப்பதாக; நான் உனக்குத் தந்துள்ளதை அறுவடை செய்; என் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடு, எனக்கு எதிராகக் கலகம் செய்வதை நிறுத்தும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு; அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க, அவர்களுக்குக் கற்றுக்கொடு; ஆன்மாக்களின் மீட்பிற்காக ஜெபி, சபைகளின் உலக ஆணையத்திற்காக ஜெபி, மாபெரும் திரும்பி வருதலுக்காக ஜெபி; உன் யுகம் இறந்துவிட்டது, உன் யுகத்தின் புதுப்பித்தலுக்காக, அதன் மறுபிறப்பிற்காக, ஒரு புதிய யுகத்திற்காக ஜெபி; என் அன்பிற்குரிய ஜோஹான்னஸ், குறிப்பு: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர். என் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலின் பேரில் தொடங்கிய காரியத்திற்காக ஜெபி; குறிப்பு: அவர் ஐக்கியத்திற்காகவும், இரண்டாவதாகிய ஒரு பெந்தேகோஸ்தைக்காகவும் ஜெபித்துக் கொண்டிருந்தார். என் திருச்சபை ஒன்றாக, என்னால் புதுப்பிக்கப்பட்டதாக, பல ஆன்மாக்களை மீண்டும் என் கரங்களுக்குள் இழுத்து வருவதாக இருக்கும்! என் ஆடுகள் எல்லாம் வழிதவறிப் போய்விட்டன, சாத்தான் தன் கடும் கோபத்தை உங்கள் மத்தியில் கொண்டுவந்து, உங்களைப் பிரித்து, பிளவுபடச் செய்து, சிதறடித்து, உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறான்....... இராயப்பா! ஓ இராயப்பா, காலங்களின் முடிவை அடையாளம் கண்டுகொள், உங்களில் பெரும்பாலானோர் காலங்களை அடையாளம் காண முடியாதிருப்பது எப்படி நிகழ்கிறது? சாத்தானின் இரக்கைகளின் கீழ் அவனால் நிழலிடப்பட்டவர்களாக நீங்கள் இருப்பதால், உங்களில் பலரைச் சாத்தான் உண்மையிலிருந்து விலக்கிவிட்டான்! இராயப்பா, என் கரத்தைப் பிடித்துக்கொள்; நான் உன்னை வழிநடத்துவேன்; என் கூக்குரலைக் கேள்; உன் கீழைச் சகோதரர்களை ஒன்று கூட்டு; என் கூரையின் கீழ் என்னைச் சந்திக்குமாறு அவர்களைக் கூப்பிடு; உன் கீழைச் சகோதரர்களை என் ஸ்தாபனத்திற்குள் ஒன்று கூட்டு; எனக்கு முன்பாக அவர்களை அழை இந்த ஒருமைப்பாட்டை நான் எவ்வளவாக விரும்புகிறேன்! இராயப்பா? இராயப்பா, நான் சொல்வதை நீ கேட்கிறாய் என்றால், நான் எல்லா மக்களினங்களையும் என் கூரையின் கீழ் அழைப்பேன்; நான் அவர்களை அச்சித்து, அவர்கள் எல்லோரையும் புதுப்பிப்பேன்; நான் பரலோகத்திலிருந்து என் நீதியின் பனித்துளியை மழையைப் போலப் பொழிவேன்; என் தோட்டம் அழகுபெறும்; நான் உங்கள் சேமிப்பறைகளை என் சேமிப்பறைகளைக் கொண்டு நிரப்புவேன்; இராயப்பா, என் குரலைக் கேள்; என் அரசு உன் வாசல்களின் அருகிலேயே இருக்கிறது; என் அரசு உங்கள் நடுவில் இருக்கிறது, அதை நீங்கள் அடையாளம் காணாமல் போவது எப்படி? இராயப்பா, தனக்கு எதிராகப் பிரிந்திருக்கிற எந்த அரசும் நொறுங்கிப் போகும் என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? என் இல்லம் பிரிவுபட்டிருக்கிறது, இன்று அது சிதிலங்களாகக் கிடக்கிறது; அன்பிற்குரியவனே, என் இரட்சணியத் திட்டத்தை அவர்களிடம் கூறு; இராயப்பா, என் குழந்தைகளை விடுவி; உங்கள் அனைவரோடும் சமாதானம் இருப்பதாக; இயேசுவே, என் இறைவா, ஆர்த்தடாக்ஸ் பிதாப் பிதாவை நீர் அழைக்கிறீரா? ஆண்டவரே, நீர் அழைக்க விரும்புவது அவரைத்தானா? ஆம், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், எல்லா மக்களினங்களையும் ஒன்றிணைப்பதும், அவர்கள் எல்லோரையும், என் ஒளியின் கீழ், என் இறக்கைகளின் கீழ் ஒன்று கூட்டுவதும் தான் என் திட்டம்; விழிப்பாய் இருக்கிற ஒரே ஆயனால், என் பாதுகாவலின் கீழ் அனைவரும் ஒரே மந்தையாக ஒன்று கூட்டப்படுவது; உன்னை ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும், உன் துன்ப வேலைகளில் உன்னிடம் வருவேன் என்றும் நான் வாக்களித்திருக்கிறேன்; மலரே, என் வாக்குறுதியை நான் காப்பாற்றுகிறேன்; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், உங்கள் இருதயங்கள் திறந்து, என்னைப் பற்றிக் கொள்வதற்காக நான் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்; கலகத்தின் காலத்தில் நடப்பது போல, உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்; உங்கள் இதயங்களைத் திறங்கள், நான் உங்கள் வாசல்களின் அருகிலேயே இருக்கிறேன்! ஞானம் உங்களுக்குப் போதிக்கும்; என் சமாதானத்தைக் கொண்டிருங்கள்; இறைவனுக்கு மகிமை உண்டாவதாக! ஆண்டவர் சுதிக்கப்படுவாராக! உம்முடைய ராஜ்ஜியம் வருக! என் வசுலா, நான் உன்னைப் போஷிப்பேன்; நாங்கள் நாம்? என்றென்றும், என்றென்றும்; ஏப்ரல் 19, 1988 தந்தாய், நாங்கள் உம் திருப்பெயரின் கீழ் ஒரே விசுவாசத்தோடும், ஒரே ஞானஸ்நானத்தோடும் ஒன்றாக இணைந்திருப்போமாக; இயேசு, எங்கள் தந்தையோடு ஒரே பொருளாய் இருப்பது போல, நாங்களும் உம்மில் ஒன்றாய் இருப்போமாக, நீர் எங்களுக்குத் தந்துள்ள உம் திருப்பெயரில் எங்களை வைத்துக்கொள்ளும். ஆமென். பார், நீங்கள் ஒரே பீடத்தைச் சுற்றி ஒன்று கூடி இருக்கும்போதும், அதே திருப்பீடத்தைச் சுற்றி இருந்து நீங்கள் என்னைப் புகழ்ந்து போற்றும்போதும், உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டும், உங்கள் கலகத்திற்காக மனஸ்தாபப்பட்டுக் கொண்டும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை நினைத்துக்கொண்டும், நான் உங்களை நேசிப்பது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டும் இருக்கும்போதும், நான் எத்தகைய மகிழ்ச்சியைக் கொண்டிருப்பேன் என்று பார்; குழந்தைகளே, உத்தமமானவர்களாக இருங்கள்! ஏப்ரல் 20, 1988 ஆண்டவரே, நீர் என்னுடைய பாடுபட்ட சுரூபத்தை முத்தமிட்டு, அதை ஆசீர்வதித்துள்ளது போல, என் சகோதரியின் பாடுபட்ட சுரூபத்தையும் ஆசீர்வதித்துத் தர முடியுமா என்று அவள் கேட்டாள். என் சமாதானத்தைக் கொண்டிரு; நான் உன்னை நேசிக்கிறேன்; நீ என்னை முழுமையாகப் பகுத்துணர வேண்டுமென நான் விரும்புகிறேன், என்னைப் பகுத்துணரு; ஆம், நான் உன் அருகில் அமர்ந்திருக்கிறேன்; இப்போது நான் எங்கே இருக்கிறேன் என்பதை நீ அறிந்திருப்பதால், யான்னுலா உனக்குத் தந்திருக்கிற பதக்கத்தையும், பாடுபட்ட சுரூபங்களையும் என் உதடுகளிடம் உயர்த்து; நான் அவற்றை முத்தமிட்டு, ஆசீர்வதிப்பேன்; இதைச் செய், ஆம், வசுலா, சந்தேகப்படாதே, எழுது; குறிப்பு: நான் ஒவ்வொரு பொருளாக உயர்த்த, இயேசு அவை ஒவ்வொன்றையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தார். நான் இதை உனக்குச் சொல்கிறேன்; யார் தங்கள் பாடுபட்ட சுரூபங்களையும், பதக்கங்களையும் நான் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்பினாலும், ஆண்டவராகிய நான் மன உவப்போடு அதைச் செய்வேன், வா, சந்தேகப்படாதே; ஓ, ஆண்டவரே, இதையெல்லாம் புரிந்து கொள்ள எனக்கு உதவும்! வெறுமனே, நம்ப மட்டும் செய்; எளிமையானவளாக இரு; ஒரு குழந்தையைப் போல் இரு; நான் உன்னை நேசிக்கிறேன்; பிற்பாடு: வசுலா, நானே தனியாக என் தோட்டத்தைப் பரிமளிக்கச் செய்வேன், ஆம், என் திருச்சபையைத் தன்னந்தனியாக புதுப்பிக்க என்னால் முடியும்; நான் என்னிலேயே போதுமானவராக இருக்கிறேன்; நான் எல்லாம் வல்லவர்; உன்னிடமிருந்து நான் கேட்பதெல்லாம் அன்பு மட்டுமே; என்னை நேசித்து, இந்தக் காரியங்களை உன்னோடு பகிர்ந்து கொள்ள என்னை அனுமதி; ஓ ஆண்டவரே, நான் மட்டற்ற விதமாக உம்மை நேசிக்கிறேன். மலரே, நீ புரிந்து கொள்ளவில்லையா? நீ கவனிக்கவில்லையா? வா, நான் உனக்குச் சொல்வேன்; காலங்களின் தொடக்கத்திலிருந்தே, நான் என்னைப் பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு மக்கள் இனங்களுக்கு என்னைக் காண்பித்து வந்திருக்கிறேன்; வசுலா, உன் காலம் மட்டும் மேற்கொண்டு என் அடையாளங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி? நான் என்னையும் என் அடையாளங்களையும் வெளிப்படுத்துவதை முடித்துக் கொள்வேன் என்று நான் எப்போதாவது சொல்லியிருக்கிறேனா? உன் காலம் இறந்துவிட்டது, தங்கள் சொந்த விரலைக் கொண்டே அவர்கள் தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்... நான் ஆண்டவர்களின் ஆண்டவர், உயிருள்ள இறைவன்; நான் மௌனமாய் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஏன்? நான் இறந்தவனாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஏன்? வசுலா, என் படைப்பு எப்படி ஆகி இருக்கிறது என்று நான் உனக்குக் காட்டியிருக்கிறேன், இப்போதும் காட்டிக் கொண்டிருக்கிறேன்; என்னோடு கட்டுண்டிருப்பதால், நீ என்னோடு சேர்த்து இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள்; நான் என்னோடு உன்னை இழுத்துக்கொண்டு, இந்த வனாந்தரத்தைக் கடந்தபடி இருந்ததும், இருந்திருப்பதும், இனி எஞ்சி இருப்பதுமான எல்லாவற்றையும் உனக்குச் சுட்டிக்காட்டுகிறேன்; நான் அந்த முட்புதர்களைக் கழித்துக் குறைக்கிறேன்; அந்த முட்கள் உனக்குத் தீங்கு செய்யாதபடி அவற்றை வெட்டுகிறேன்; ஏனெனில் அவை உன்னைத் தொடுமானால், உன்னைக் குத்தித் துளைத்து, இரண்டாகக் கிழித்து, சிறு சிறு துண்டுகளாகச் சிதைத்துவிடும்; நான் உன்னோடு இருந்து, நீ கடந்து செல்லும் பாதையைத் திறந்து, அதைச் சுத்தமாக்குகிறேன்; என் குழந்தாய், நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன், அந்த முட்கள் உன்னைப் பற்றிப் பிடுங்குவதையோ, நம் வழியில் உன்னைக் குத்திக் காயப்படுத்தி சாகடிப்பதையோ நான் விரும்பவில்லை! அவை உன்னை வெறுமனே நெருங்கி வருவதும் கூட, உன்னை முழுமையான அவஸ்தைக்கு உள்ளாக்கிவிடும் என்பது எனக்குத் தெரியும்; என் வசுலா, இதையெல்லாம் நான் பார்க்கிறேன்; என் இதயம் ஆழமாகக் காயப்பட்டுள்ளது; ஆனால், அன்புக்குரியவளே, இந்த எல்லாப் பரித்யாகங்களும் வீணாய்ப் போகாது; ஆ, ஆன்மாவே, நான் உன்னை எவ்வளவாக நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவன் கண்டடைவான்; தட்டு, நான் கதவைத் திறப்பேன்; வா, நான் என் பிரசன்னத்தைப் பற்றி உனக்கு நினைப்பூட்டுவேன்; ஏப்ரல் 25, 1988 நான் வழக்கம் போல மூன்று ஜெபங்களையும் வாசித்துவிட்டேன், இரண்டு தடவை, கடவுளுக்கு மகிமை உண்டாவதாக என்ற ஜெபமும் சொல்லப்பட்டது. என் கடவுளே, இது உண்மையாகவே நீர்தானா? நான்தான்; மகளே, நான் உன் மீது பொழிகிற என் கொடைகளை ஆழங்கான உன்னால் இயலாதிருந்தும், நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன்; எனக்காக ஜீவி; என்னை முதலாவதாகக் கொண்டிரு; வசுலா, என் வீடு சிதைவுற்று இருக்கிறது; அது மீண்டும் கட்டப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்; அதை எப்படி செய்வது என்று நான் உனக்குக் காட்டுவேன்; அன்பு, அன்பை விரும்புகிறது; இப்போது போல என்னிடம் பேசு; என்னை உணர்ந்து பார்; நான் உன் அருகில் இருக்கிறேன்; தயக்கமின்றி என்னிடம் வா; உன் இருதயத்தை எனக்குத் திற, ஒரு நண்பனைப் போல, உன் தந்தையைப் போல என்னை நடத்து, ஆனாலும், நான் பரிசுத்தரும், உன் இறைவனுமாக இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறவாதே; அவர்களுடைய இருதயங்களில் இருந்து வருகிற குடும்பப்பாங்கான வார்த்தைகள், அவர்களுடைய உதடுகளில் இருந்து வருகிற ஆடம்பரமான வார்த்தைகளை விட அதிக இனிமையாய் இருக்கின்றன என்று அவர்களிடம் சொல்; ஓர் அந்நியனைப் போல என்னை நடத்தாதே; ஆண்டவராகிய நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; ஏப்ரல் 26, 1988 நேற்று நான் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பது பற்றி நான் என் சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த உரையாடலின் வேகத்தில், 'ஓ பாபாஸ், மௌ இப்பேனா'..... அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 'நான் என்ன செய்ய வேண்டும் என்று நம் தந்தை சொல்லுகிறார் என்றால்........' என்று நான் சொல்லிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். கடவுளை மிகவும் இயல்பான விதத்தில் கிரேக்க மொழியில் 'தந்தை' என்று நான் அழைப்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக அப்படிப் பேசுவதை நிறுத்திவிட்டேன்; ஏனெனில் என் சகோதரி ஆச்சரியத்தில் வாயை அகலத் திறந்தபடி என்னைப் பார்ப்பதை நான் கண்டேன். நான் என் வாயில் என் கையை வைத்தேன், நான் கடவுளை தந்தை என்று அழைக்கும் எண்ணம் இல்லாமலே, அப்படி அவரை அழைத்து, அவரைப் பற்றிப் பேசினேன் என்று அவளுக்கு விளக்கிச் சொன்னேன். ஏனெனில் மிக அடிக்கடி அவருக்கு மிக மிக நெருக்கமாக நான் இருப்பதை உணர்கிறேன், மிகப் பல தடவைகள் எனக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன என்று நான் சொல்கிறேன்; ஒன்று இங்கே பூமியின் மீது எனக்குத் தரப்பட்ட ஒன்று, ஆனால் மேலே என் உண்மையான, நிஜமான பரிசுத்த திருக்குடும்பம் வசிக்கிறது. சிறியவளே, என் மேலங்கியின் பாதுகாப்பில்; தங்கியிரு; என் அருகில் இருக்கும்போது, நீ சாத்தானின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறாய்; வா, அவன் தன் முயற்சிகளை இருமடங்காக்கிக் கொண்டிருக்கிறான், எல்லாவிதமான கன்னிகளையும் இட்டு வைக்கிறான்; என் குழந்தாய், அவன் உன்னைத் துரத்தி வருகிறான்; திட்டங்கள் வகுத்தபடி, வரவிருக்கிற எல்லாவற்றையும் பற்றி, அவன் முற்றிலும் வெறி பிடித்தவனாக இருக்கிறான்; என் குழந்தாய், நீ உன் ஜெபங்களை இருமடங்காக்கும்படி, நான் இதை உனக்குச் சொல்கிறேன்; ஆண்டவரே, நான் உபவாசம் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா? ஆண்டவரே, அது எனக்கு உதவுமா? நீ உபவாசம் இருப்பாயா? நீர் விரும்பினால்..... நான் விரும்புகிறேன்; வா, நான் இதில் உனக்கு உதவி செய்வேன்; வசுலா, நீ என்னை பாபா என்று அழைத்தபோது, நான் இந்த வார்த்தையை ஓர் ஆபரணத்தைப் போல் ஏற்றுக்கொண்டேன்; குறிப்பு: கிரேக்க மொழியில்; அப்பா என்று பொருள். சிறியவளே, எளிமையால் நான் எவ்வளவாக ஈர்க்கப்படுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா? ஆம், நான் வெறுங்காலோடு இருப்பவள் என்று உனக்குப் பெயரிட்டுள்ளேன், ஏனெனில் உன் இதயத்தில் நீ அப்படித்தான் இருக்கிறாய்; நான் சொல்வதைக் கேள்; நான் என் ஒளியில் உன்னைப் படைத்தேன்; நான் என் மோட்ச மண்டபத்தில் உன்னை ஏற்றுக்கொண்டேன்; நான் என் சமாதானத்தையும், என் சிலுவையையும், என் அன்பையும் பகிர்ந்து கொள்ளும்படி உன்னை வரவேற்றேன்; நீ என் அரசை விரிவடையச் செய்கிற ஒரு நிலத்தில், நான் சீக்கிரத்தில் உன்னை வழிநடத்துவேன்; காலம் வரும்போது, நான் உனக்கு அறிவுரை தந்து, உனக்குக் கற்பிப்பேன்;