இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவன் தம் வார்த்தையைத் தடுக்க முடியாது என்றும், தம் ஆவியை மனிதகுலம் மீது தொடர்ந்து பொழிவதாகவும் கூறுகிறார். "உங்கள் இருதயங்களை எனக்குத் திறங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்" என்று அழைக்கிறார். சுத்திகர நாட்கள் அண்மையில் உள்ளன; விழிப்பாயிருந்து ஜெபிக்கவும் கேட்கிறார்.

Show Notes

அத்தியாயம் 87: எண்ணற்ற முறைகள் நான் தெய்வநம்பிக்கையற்றவர்களை அழைப்பேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவன் தம் வார்த்தையைத் தடுக்க முடியாது என்றும், தம் ஆவியை மனிதகுலம் மீது தொடர்ந்து பொழிவதாகவும் கூறுகிறார். "உங்கள் இருதயங்களை எனக்குத் திறங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்" என்று அழைக்கிறார். சுத்திகர நாட்கள் அண்மையில் உள்ளன; விழிப்பாயிருந்து ஜெபிக்கவும் கேட்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:17 15/02/1989 - என் வார்த்தை எங்கும் அறிவிக்கப்படும்
07:20 20/02/1989 - என்னிடம் திரும்பி வாருங்கள்
15:41 26/02/1989 - என் மீது ஆசை கொள்; இறந்தோரை எழுப்புவேன்

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #சுத்திகரநாட்கள் #காலங்களின்அடையாளங்கள் #திரும்பிவாருங்கள்

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 87. பிப்ரவரி 15, 1989. என் வசுலா, ஒருபோதும் அதைரியப்படாதே, ஏனெனில் நான் உன் முன் நிற்கிறேன்; நீ என்னை யாருடன் ஒப்பிட முடியும்? நானே தொடக்கமும், முடிவும், நித்தியமானவருமாக இருக்கிறேன், ஏனெனில் நான் இருக்கிறேன், நான் இருந்தேன், நான் இனி என்றென்றும், எக்காலமும் இருப்பேன்; என் வார்த்தை இந்த விதானத்தைச் சுற்றிலும் எங்கும் அறிவிக்கப்படும்; என் வார்த்தையை உதைப்பவர்கள், தாங்கள் ஒரு தாற்றுக்கோலை உதைப்பதைக் கண்டுபிடிப்பார்கள்; உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் துன்புறுத்துவவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் எழுவார்கள்; அவர்கள் மனிதகுலம் முழுவதிடமிருந்தும் என் வழியைத் தடுத்துவிட, பிரம்மாண்டமாக கருங்கற்பாளங்களைப் போல் ஒரு வேலியை உருவாக்குவார்கள்; ஆதியிலிருந்தே அவர்கள் இருதயமற்றவர்கள், தற்பெருமையும், வஞ்சகமும் நிறைந்த, நாசப்படுத்தும் வனாந்தரம் என்று நான் அறிந்திருந்தேன்; அவர்களது படைகள் அனைத்தும் வீணாக எழும்; என் மூச்சின் ஒரே வீச்சில், நான் அவர்களை என் வல்லமையால் அடித்து வீழ்த்தி, அவர்களைப் பெருக்கித் தள்ளுவேன்; நானே உன் ஆண்டவர், உன் பரிசுத்தர், என் வார்த்தை அறிவிக்கப்படும்படி, அரசர்களையும், அரசுகளையும் வீசியெறிந்தவராக நான் அறியப்பட்டிருக்கிறேன்; என் வல்லமையால் நான் அரியணைகளை அகற்றி, அதிகாரமுள்ளவர்கள் என்று தங்களையே அழைத்துக் கொள்பவர்களை வெட்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறேன்; இப்போதும் அப்படியே நடக்கும்; நான் எல்லாக் கண்களும் காண, அவர்களது ஆடைகளை உரிந்து, அவர்களை நிர்வாணமாக்குவேன்; என் கோபத்தை நீண்ட காலமாக நான் அடக்கி வைத்துவிட்டேன், தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி வந்து, மனந்திரும்பி, மனஸ்தாபப்படும்படி, ஆண்டவராகிய நான் இன்று அவர்களை அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்; என் ஆவி தொடர்ந்து மனிதகுலத்தின் மீது பொழிந்து கொண்டேயிருக்கும், அதை அழித்துவிட அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும், எந்த மனிதனும் அதை நசுக்குவதில் வெற்றி பெற மாட்டான்; என் ஆவியை மிதிப்பவனுக்கு ஐயோ கேடு! பிரமாணிக்கமற்றவர்களும், வெளிவேடக்காரர்களும் என் சுவாசத்தால் துடைத்தகற்றப்படுவார்கள்; என் நீதி அவர்கள் மீது விழாதபடி நான் எப்படி அதை நிறுத்தி வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால், தொடர்ந்து ஜெபிப்பதையும், மனம் வருந்துவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்தவே மாட்டார்கள்; ஒன்றிணையுங்கள், பிதாவும், நானும் ஒருவராயிருப்பது போல், நீங்களும் இப்போது ஒன்றாய் இருங்கள் என்று அவர்களிடம் சொல்பவர் யார் என்றும், நான் அவர்களுக்கு என்ன தருகிறேன் என்றும் அவர்கள் அறிவார்களானால்! ஆனால் அவர்கள் கேட்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை; நான் அவர்களை எச்சரித்துவிட்டேன், ஆனால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை, நம்பவுமில்லை; காலம் அண்மையில் உள்ளது; முன் எப்போதையும் விட அதிக அண்மையிலுள்ளது, அழைப்பின் காலம் இப்போது இங்கே இருக்கிறது என்று முற்றிலும் அதிகாரப்பூர்வமாக நான் உங்களுக்குக் கூறுகிறேன்; இந்த வேளையைப் பற்றி நான் உங்களை எச்சரித்ததேயில்லை என்று எவனும் சொல்ல முடியாது, இறந்தவர்களும் கூட என் கூக்குரலைக் கேட்டு பரபரப்படைந்தார்கள்... அவர்களும் கூட! குறிப்பு: கடவுளின் குரல் மிகத் துயரமாக இருந்தது. ஆண்டவராகிய நான் உங்கள் நடுவில் இறந்தோரை உயிரோடு எழுப்பிக் கொண்டிருக்கிறேன்; ஆம்! இந்தப் பிணங்களில் குறிப்பு: புதிதாக மனந்திரும்பப்பட்டவர்கள். ஒவ்வொன்றையும் நான் உயிரோடு எழுப்புவேன், ஏனெனில் என் கூக்குரல் அவர்களால் கேட்கப்பட்டது; நான் இந்தப் பிணங்களிலிருந்து உயிருள்ள ஒளித்தூண்களை உண்டாக்குவேன்; அவற்றில் சிலவற்றை என் திருச்சபையின் பலத்த தூண்களாக நிறுவுவேன், இவர்கள் ஒவ்வொருவருடைய வலக்கையிலும் நான் என் ஏட்டுச் சுருளையும் இடது கையில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி என் விளக்கையும் வைப்பேன்; ஒரு சீடனுடைய நாவை நான் அவர்களுக்குத் தந்து, உங்களுக்கு முன்பாக அவர்கள் தேவ ஊழியத்தை நிறைவேற்றச் செய்வேன்; எல்லா மக்களினங்களும் தங்கள் முழுமையான ஒழுங்கு நிலையைக் காணச் செய்வேன், அவர்கள் பூமியின் கடைக்கோடிகளுக்கும் சத்தியத்தை அறிவிப்பார்கள்; பூமியானது புதியனவற்றை முளைப்பிப்பது போல, ஒரு தோட்டம் விதைகளை முளைத்தெழச் செய்வது போல, ஆண்டவராகிய நானும் இந்தப் பிணங்களுக்கு மீண்டும் உயிரளிப்பேன் என்று உனக்கு வாக்களிக்கிறேன், என் சொந்த வாயினின்று அவர்கள் மீது என் புதிய பெயரை நான் வழங்குவேன்; குழந்தாய், வா, என்னோடு இரு; உன் தந்தையின் கரங்களில் தங்கியிரு; நாங்கள், நாம்? ஆண்டவரே, என்றென்றும் எக்காலமும். என் பெயரை ஒப்பமிடு; சரி; பிற்பாடு: ஆண்டவரே, உம்மிடமிருந்து தனிப்பட்ட செய்திகளைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இப்போது மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளில் சில மிகவும் உலகத்தன்மையாய் இருக்கின்றன. அவர்களில் சிலர் மோட்சத்திற்கு தாங்கள் தகவல் அனுப்பும் தகவல் மேசையாக என்னைப் பார்க்கிறார்கள். வசுலா, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நான் பதிலளித்துவிட்டேன்; அவை பரிசுத்த வேதாகமங்களிலும், இந்தச் செய்தியிலும் காணப்பட வேண்டும்; ஆண்டவரே, ஆயினும் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட என்னை அனுமதியும். தாராளமாகச் சொல், நான் சொன்னேன். மண ஒப்பந்தமானவளே, என் பரிசுத்தத்தனத்திற்குத் தகுதியற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமாட்டேன்; நான் தாழ்ச்சியுள்ளவர்களை அழைப்பேன், இறந்தவர்களை எழுப்புவேன், பலவீனமுள்ளவர்களை உற்சாகப்படுத்துவேன், பாவியைத் தேடிச் செல்வேன்; எண்ணற்ற தடவை கடவுளற்றவர்களை நான் அழைப்பேன்; நீ இவற்றை அழைக்கிறபடி, இப்போதிலிருந்து இவை தனிப்பட்ட செய்திகளாக இருக்கும்; எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; இப்போது போல விவேகமுள்ளவளாயிரு, எப்போதும் வந்து முதலில் என்னைக் கலந்தாலோசி; ஆண்டவரே, நீர் சில சமயங்களில் ஒரு தனிப்பட்ட செய்தியை யாரும் கேட்காமலே, இது போன்ற ஒன்றை எனக்குத் தருகிறீர். நானே தேர்வு செய்வேன், முடிவு செய்வேன்; நான் உன்னை வழிநடத்துவேன், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் உன் காதில் கிசுகிசுப்பேன்; வா, நாங்கள், நாம்; பிப்ரவரி 20, 1989 இன்று எங்கள் குழுவின் ஜெபம், மற்றும் பரிசுத்த வேதாகமங்கள், செய்திகள் வாசித்தல் ஆகியவற்றிற்கான கூட்டத்திற்கான நாள். இயேசுவா? நான்தான்; அன்பே, என் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்று; நான் முழு நேரமும் உன்னோடு இருக்கிறேன்; வா, நாம் சேர்ந்து வேலை செய்வோம், நாங்கள், நாம்; பிற்பாடு: நான் உன் இறைவனாகிய ஆண்டவர்; நான் அரசராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக உன்னைப் படைத்தவருமாய் இருக்கிறேன்; நான் இணை யாருமற்ற கடவுளாயிருக்கிறேன்; நான் பரிசுத்தர்களில் அதிபரிசுத்தராய் இருக்கிறேன்; ஒவ்வொரு பரலோக சபையையும் சேர்ந்த எண்ணற்ற தேவதூதர்கள் என் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து, இடைவிடாமல் என்னை ஆராதிக்கிறார்கள்; என்னை யாருடன் நீ ஒப்பிட முடியும்? பரலோகம் முழுவதும் என் மகத்துவத்தை நாள் முழுவதும் போற்றி ஸ்துதிக்கிறது; நான் கெரூபிம்களின் மீது என் அரியாசனத்தை அமைத்திருக்கிறேன், மகத்துவத்தையும், வல்லமையையும் ஆடையாக அணிந்திருக்கிறேன்; நானே வார்த்தை, மெய்யான ஒளி; இருந்தும், நான் மிக தயவிரக்கத்தினால், என் அரசத்துவம் முழுமையிலும், என் மகத்துவம் முழுமையிலும் இறங்கி வந்து உங்களை எட்டும்படி குனிகிறேன்; என்னிடமிருந்து மிக அதிகமான நன்மைகளைப் பெற்ற மக்களினமாகிய உங்களிடம் வருகிறேன், அன்புக்குரியவர்களே, உங்களிடம் நான் வருகிறேன்; உங்கள் முன் வெறுங்காலோடும், ஒரு பிச்சைக்காரனைப் போலவும் நான் நிற்கிறேன்; என் கரம் உங்களை நோக்கி விரிக்கப்பட்டுள்ளது; அன்பு, சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை நான் உங்களிடம் இரந்து கேட்கிறேன்; என் கூக்குரலை நீங்கள் கேட்பீர்களா? அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு நான் காயப்படுத்தப்படுகிறேன்; என் காயங்கள் பொய்சாட்சிகளாலும், அக்கிரமங்களாலும், பாவத்தின் மீதுள்ள பெரும் ஈர்ப்பாலும் இடைவிடாமல் அதிகரிக்கப்படுகின்றன; இன்னும் எவ்வளவு காலம் என் படைப்பு தொடர்ந்து கடவுளற்றதாகவும், தீயதாகவும் இருக்கும்? என் கட்டளைகளை அலட்சியம் செய்பவர்களிடம் நான் கேட்கிறேன்; பொதுத் தீர்வையின் நாளில் என்ன செய்வீர்கள்? உதவிக்கு யாரிடம் ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே விட்டு வைப்பீர்கள்? குறிப்பு: இசையாஸ் பத்தாம் அதிகாரம், மூன்றாம் இறைவார்த்தை. என் அளவற்ற இரக்கத்தாலும், உங்கள் மீது நான் கொண்ட பெரும் பரிதாப உணர்வாலும், நான் ஆகாயங்களை அடையாளங்களால் நிரப்பியிருக்கிறேன்; இடைவிடாமல் என் ஆவியை மனிதகுலம் முழுவதன் மீதும் பொழிந்து கொண்டேயிருக்கிறேன்; என் இளைஞர்களுக்குக் காட்சிகள் தருகிறேன், உங்களுக்கு அடையாளங்களையும், அருள் வரங்களையும் பொழிகிறேன்; நான் இந்தப் பசித்த தலைமுறைக்காக என் விண்ணகக் கிடங்குகளைத் திறந்திருக்கிறேன்; பார்த்தீர்களா? நீங்கள் உங்கள் இதயம் திருப்தி அடையும் வரை உண்பீர்கள்; உங்கள் வயிறார உண்பீர்கள்; மறைநூல்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன; காலங்களின் முடிவு பற்றிய அடையாளங்களை நான் உங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறேன்; ஆயினும் எனக்குரியவர்களில் மிக அதிகமானோர் இந்த அடையாளங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்... காலங்களைக் கண்டுபிடிக்க உங்களால் முடியாமல் போவது எப்படி? ஆனால் இப்போது, என் குழந்தைகளில் பெரும்பாலானோர் என்னிடமிருந்து திரும்பிக் கொண்டார்கள் என்றாலும், அவர்கள் என்னைக் கைவிட்டு விட்டார்கள் என்றாலும், நான் முடிவில்லாத அன்போடு, ஒருபோதும் சோர்வடையாமல் அவர்களைத் தேடிச் செல்வேன்; நான் ஒருபோதும் கைவிடமாட்டேன், அவர்கள் ஒவ்வொருவரையும் நான் திரும்பத் திரும்ப அழைக்கிறேன், உங்கள் முழு இருதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள், உபவாசம் செய்து, மனம் வருந்துங்கள், உங்கள் இருதயங்களை எனக்குத் திறங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்; உங்கள் தந்தையாகிய என்னிடம் திரும்பி வாருங்கள்; ஒரு தந்தை தன் குழந்தைகளை நடத்துவது போல, மனம் வருந்தி என்னிடம் திரும்பி வருபவர்களை நான் கனிவோடும் அன்போடும் நடத்துவேன்; ஏனெனில் நான் பலவீனர்களிடம் மிகுந்த தயவும், கனிவும் உள்ளவராகவும், பரிதாபத்திற்குரியவர்களிடம் மிகுந்த தயவிரக்கமும் உள்ளவராகவும் இருக்கிறேன்; நான் பரிதாப இரக்கம் நிறைந்தவராகவும், அன்பும் தயவும் நிறைந்தவராகவும் இருக்கிறேன்; ஓ, அன்புக்குரிய ஆன்மாக்களே, மேலிருந்து நான் இடும் கூக்குரலைக் கேளுங்கள்; என் தெய்வீக அன்பிலிருந்து உங்கள் இருதயங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்; உங்கள் இருதயங்களை நிரப்புங்கள், ஒருவரையொருவர் மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; ஒருவரையொருவர் தீர்ப்பிடாதீர்கள்! ஒருவரையொருவர் மன்னிப்பதன் மூலம், நீங்கள் ஒருமைப்பாட்டின் பாதையில் நுழையத் தொடங்குவீர்கள்; உங்கள் அயலானைத் தீர்ப்பிடாமல் இருப்பதன் மூலம், நீங்கள் உண்மையாகவே என்னுடையவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; என் ஆட்டுக்குட்டிகளே, உங்கள் இறைவனாகிய நான் உங்களில் அக்களிக்க என்னை அனுமதியுங்கள்; நான் உங்களுக்கு என் சமாதானத்தைத் தருகிறேன், என் சமாதானத்தை எடுத்துக்கொண்டு, மற்றவர்களோடு அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; என் அன்பை எடுத்துக்கொண்டு, அது மலர் மாலைகளைப் போல் உங்களைச் சுற்றியிருக்க விடுங்கள்; என் திரு இருதயத்தின் குழந்தைகளே, இதை உங்களுக்குச் சொல்ல நான் எவ்வளவு அஞ்சுகிறேன், இருந்தாலும் நான் உங்களை உண்மையில் வைத்திருக்க வேண்டும்; உங்களிடம் நான் செய்யும் மன்றாட்டுக்களை மீறி, என் எல்லா எச்சரிக்கைகளையும் மீறி, பலர் பாவம் செய்வதைத் தொடர்வார்கள், அவர்கள் தங்கள் ஆன்மாவின் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்; ஒரு கலக யுகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் நாட்களில், இந்த மக்கள், தங்கள் வேதத்தை நிந்தித்து வெறுப்பார்கள், தேவ வாக்குறுதியை ஏளனம் செய்வார்கள்; இந்த மக்கள், தங்கள் இருதயத்தில் கடினப்பட்டவர்களாக, கேட்க மறுப்பார்கள்; சுத்திகர நாளுக்கு முந்திய கடைசி நாட்களில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்; இரவும் பகலும் விழிப்பாயிருங்கள்; ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள்; சுத்திகர நாட்கள் மிக அண்மையில் உள்ளன என்று நான் அதிகாரப்பூர்வமாக உங்களுக்குச் சொல்கிறேன்; நான் முடிவில்லாத அன்பைக் கொண்டு உங்களை அன்பு செய்கிறேன்; இந்த அளவற்ற அன்பின் காரணமாக, உங்களை எச்சரிக்கும்படியாக, நான் இந்தப் பூமியின் பல பகுதிகளில் இறங்கி வருகிறேன்; இந்த எச்சரிப்புகளை அச்சுறுத்தல்கள் என்று என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்; நான் பரிசுத்தராக இருக்கிறேன், என் சாயலின் படி உருவாக்கப்பட்டவர்களாகிய நீங்களும் பரிசுத்தமாக வாழ வேண்டுமென என்று ஆசிக்கிறேன்; காலங்களின் தொடக்கத்திலிருந்தே நான் பரிசுத்தர் என்று உங்களிடம் சொல்வதற்காக நான் புனிதர்களையும் இறைவாக்கினர்களையும் எழுப்பி வந்திருக்கிறேன்; இந்த என் சுத்திகர நாளுக்காக நான் உங்கள் அனைவரையும் தயார் செய்திருக்கிறேன்; அந்நாளில் என் நெருப்பின் ஆவி உங்கள் மீது உந்தித் தள்ளப்பட்டு, எல்லாத் தீமையையும் சுத்திகரிக்கும்; அது பரிசுத்தமற்ற எல்லாவற்றையும் சுத்திகரித்துவிடும்; இந்நாளுக்காகத் தயாராக இருங்கள், என் கூக்குரலைக் கேளுங்கள், என் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள்; ஞானமுள்ளவன் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்வானாக; என்னிடம் திரும்பி வாருங்கள், திரும்பி வாருங்கள், நான் உங்கள் புகலிடமாக இருக்கிறேன், அடையாளங்களைக் கண்டுபிடிங்கள், காலங்களின் முடிவின் அடையாளங்களைக் கண்டுபிடிங்கள், உங்கள் செவிகளை மூடிக்கொள்ளாதீர்கள், உங்கள் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள், காலங்களை அடையாளம் காணுங்கள்... ஆண்டவராகிய நானே உங்கள் புகலிடம் என்பதை நினைவில் வையுங்கள்; அன்புக்குரிய ஆன்மாக்களே, நிலையாயிருங்கள்; நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன், உங்கள் அன்புக்குரியவர்களை ஆசீர்வதிக்கிறேன்; பிப்ரவரி 26, 1989 ஆண்டவரா? நான்தான்; என் சமாதானத்தைக் கொண்டிரு; மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நான் உனக்கு போதித்துக் கொண்டு வருகிறேன், இல்லையா? ஆம், ஆண்டவரே, நீர் போதித்து வந்திருக்கிறீர். ஆகவே, நான் இப்போது உன்னைக் கைவிடமாட்டேன் என நம்பிக்கை கொள்; ஓ ஆம்! நீ என்னோடு இணைக்கப்பட்டிருக்கிறாய், என் பந்தங்கள் நித்திய பந்தங்களாக இருக்கின்றன, நானும் நீயும், நீயும் நானும், என்றென்றும் அன்பின் ஐக்கியத்தில்; ஓ ஆம், குறிப்பு: நான் திடீரென என் விண்ணகத் தந்தை மீது மிகுந்த ஏக்கம் கொண்டேன், அவரோடு இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டேன்; ஒரு அனாதை போல, ஒரு விதவையைப் போல நான் உணர்ந்தேன். கடவுளின் மீதான இந்த ஆசை மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. என் மீது ஆசை கொள், நீ என் அருளின் கீழ் இருக்கிறாய்; உன் இறைவனாகிய என் மீது ஆசை கொள், உன் தந்தையாகிய என் மீது ஆசை கொள்; நீ உலகத்திற்கு சொந்தமானவள் அல்ல என்பதை நான் உணரட்டும்; மலரே, என்னை மகிழ்வி, என் ஒளியைத் தேடி என்னை நோக்கித் திரும்பு; தன் அழகைப் பாதுகாக்கும்படி தோட்டக்காரன் தேவைப்படுகிற ஒரு மலரைப் போல, என் மீது தாகமாய் இரு; என்னை உன் தேவையாகக் கொள்; என் ஒளியை உன் தேவையாகக் கொள்; என் நீரூற்றுகளை உன் தேவையாகக் கொள்; அன்புக்குரியவளே, வளர்வாய், உன் விசுவாசத்தில் வளர்வாய்; வா, அடுத்த கூட்டத்தை நீ வாசிக்க வேண்டிய விவிலியப் பகுதியை நான் உன் காதுக்குள் கிசுகிசுப்பேன்; என் மீது சாய்ந்துகொள், நான் உன்னைத் தாங்கிக் கொள்வேன்; நீ ஒன்றுமில்லாமை என்பதை நினைவில் கொள், உன் ஒன்றுமில்லாமையில் எல்லாமுமாக இருக்க என்னை அனுமதி; நான் எப்போதுமே உன் விளக்கில் எண்ணெய் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்; அது காய்ந்து போக ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்; உன் சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்; உன்னை நான் ஒருபோதும் இருளில் விட்டுவிடமாட்டேன்; சமாதானத்தில் என் வழிகாட்டுதல் இருக்கும், ஆகவே, ஒருபோதும் உன் பார்வையிலிருந்து என்னை நீ விலக்கி விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்; ஆண்டவரா? நான்தான்; நான் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? தைரியமாகக் கேள்; ஆண்டவரே, நீர் என்னை இறந்தோரிலிருந்து உயிர்ப்பித்தீர் அல்லவா? நானே உன்னை உயிர்ப்பித்திருக்கிறேன்; ஆண்டவரும், மீட்பருமானவரே, நீர் மிக அபரிவிதமாக எனக்கு உணவளித்து வருகிறீர், எனக்குத் தீமை நேரிடாதபடி அல்லும் பகலும் என்னைக் கண்காணித்து வருகிறீர்; என்னைத் துன்புறுத்துபவர்களால் நான் மிதிக்கப்பட இருக்கும்போது, நீர் என்னை உம்மிடம் உயர்த்துகிறீர், நீரே என் காவலராகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும், மணவாளராகவும், தூய தோழராகவும் இருக்கிறீர்; நீர் மிகவும் கனிந்த அன்புள்ள இறைவனாக இருக்கிறீர்; ஆண்டவரே, இதை நான் உம்மிடம் கேட்க என்னை அனுமதியும்: நீர் உம் ஆவியை என் மீது பொழிந்திருக்கிறீரே, என் சகோதரர்கள் மீதும் உம் ஆவியைப் பொழிந்தருள மாட்டீரா? நீர் இறந்தோர் நடுவில் என்னைத் தேடிக் கண்டுபிடித்து உயிர்ப்பித்திருக்கிறீரே, இறந்தோரில் எஞ்சியவர்களையும் நீர் எழுப்ப மாட்டீரா? என் வசுலா, நான் இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; ஏற்கனவே அந்தப் பிரேதங்களைச் சுற்றிலும் நான் இருக்கிறேன், ஏனெனில் அவர்கள் தங்களைச் சுற்றி முன் ஒருபோதும் கூறப்படாத ஒன்றைக் காண்பார்கள்; முன் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒன்றைக் காண்பார்கள்; என் அழகைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிராதவர்கள் ஒளியாகிய என்னைக் காண்பார்கள்; என் அழகைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிராதவர்கள் புரிந்து கொள்வார்கள், அவர்கள் மனந்திருப்பப்படுவார்கள்; அவர்கள் உங்கள் இளைஞர்களை என்னிடம் திரும்பக் கொண்டு வரும்படி என் வார்த்தையின் புதுப் பாத்திரங்களாக இருப்பார்கள்; ஆம், அந்நியர்களே, என் திருச்சபையை திரும்பக் கட்டுவார்கள்; அவர்கள் பண்டைய சிதைவுகளை மீண்டும் கட்டியெழுப்புவார்கள்; இப்போது பயனற்றதாய்க் கிடப்பதை எழுப்புவார்கள், இப்போது சிதைந்து கிடக்கும் எல்லாவற்றையும் மீண்டும் புதுப்பிப்பார்கள்; நீ காணவில்லையா? ஆண்டவரே, உன் திருச்சபையின் மிகப்பெரும் நாசத்தின் சிதைவுகளோடு ஒப்பிடும்போது, அவர்கள் மிகக் குறைவாக மட்டுமே இருக்கிறார்கள். நான் அவர்களைப் பெருகச் செய்வேன், பொறுத்திருந்து பார்; அன்பு, அன்பாகவே திரும்பி வரும்; நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்; இப்போது வா, என்னில் ஓய்வெடு, நாங்கள், நாம்? என்றென்றும்!