இறைவனில் உண்மையான வாழ்வு

 இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 38. ஜூன் 11, 1987. எங்களுடைய தட்டுமூட்ட ஜாமான்களில் பெரும் பகுதியை அனுப்பியாகிவிட்டது. நான் எழுதும்படி உட்கார நாட்காலிகள் தேட வேண்டியுள்ளது. பொருட்களைக் கட்டும் தொழிலாளர்கள் போன பிறகு, வீடே குளறுபடியாகக் கிடக்கிறது. காகிதக் குவியல்கள், இங்குமங்கும் காலணிகள், குப்பிகள், காகிதங்கள், இடைவார்கள் எல்லா எழுது மேசைகளின் மேலும் இருக்கின்றன. இருந்தாலும், பிரியாவிடைகளுக்காகத் தயாரிக்க வேண்டியிருந்த விருந்துகளுக்கு மத்தியிலும் ஒன்று 80 பேருக்கு, மற்றொன்று 30 பேருக்கு, கடவுளின் கரம் சிறிது நேரம் கூட என்னை விட்டு வைக்கவில்லை, ஒரு நாளுக்கு இரண்டு - மூன்று மணி நேரம் எழுத அவருக்காக ஒதுக்க எனக்கு எப்போதுமே நேரம் கிடைத்தது. அவர் நம்ப முடியாத பலத்தை எனக்குத் தருகிறார், நான் சிறிதளவு கூட சோர்வை உணர்வதில்லை. நான் அவருடைய சமாதானத்தில், முழு சமாதானத்தில் இருக்கிறேன். வசுலா, என் ஆன்மாவின் நேசமே, என் அருகில் தங்கியிரு, என்னைப் பார்த்துக் கொண்டே இரு, என் விரல் உன் இதயத்தை தொடவிடு; என் குழந்தாய், நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை மட்டும் நீ அறிந்தால்; நான் இறுதி வரைக்கும் உன்னை வழிநடத்துவேன்; எனக்காக அதிகமாகப் பரித்தியாகம் செய்; எனக்காகத் துன்பப்படுவாயா? ஆம், ஆண்டவரே, நீர் விரும்புகிறபடியே. அவர் இதை முன்பும் கேட்டிருந்தார், ஆனால் நான் பயந்தபடி தயங்கினேன். இப்போது அவர் மீண்டும் கேட்டார். வசுலா, நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்! ஒரு செம்மறிப் புருவையைப் போல, நீ உன்னை எனக்காகப் பலியாக்குவாயா? ஆண்டவரே, நீர் விரும்புகிறபடி செய்யும். எதுவும் வீணாய்ப் போகாது, எல்லாமே சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும் தான்; வசுலா, என் தாகம் மிகப் பெரியதாய் இருக்கிறது; நான் உன்னை வறண்ட நிலங்களுக்குள் நடத்திச் செல்வேன்; அங்கே உன் கண்கள் நீ ஒருபோதும் கண்டிராதவைகளைக் காணும்; என் இரத்தம் சிந்துகிற சரீரத்தின் உள்ளாளங்களுக்குள்ளேயே நான் உன்னைப் பரலோக வலிமையுடன் நடத்திச் செல்வேன்; என் சரீரத்தின் முட்களாக இருக்கிற குருக்களாகிய பாவிகள் எல்லோரையும் நான் என் விரலால் உனக்குச் சுட்டிக்காட்டுவேன்; நான் அவர்களைத் தண்டியாமல் விட்டுவிடமாட்டேன், நான் நலிந்து போய்விட்டேன், என் காயங்கள் முன் எப்போதையும் விட விரிந்தவையாக இருக்கின்றன, என் இரத்தம் பீறிட்டு வெளியேறுகிறது; நான் எனக்குச் சொந்தமானவர்களாலேயே, என் சொந்த, குருத்துவ ஆன்மாக்களாலேயே மறுபடியும் சிலுவையில் அறையப்படுகிறேன்! என் தேவனே, நீர் எனக்கு மிக அதிகமான வேதனையை தருகிறீர், அவர்கள் ஏன் இதை உமக்குச் செய்ய வேண்டும்? ஏன்? வசுலா, அவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்; நேசமே, உன் கடவுளோடு பிரயாசைப்படு, என் துன்பங்களை எதிர்கொள்ளவும், அவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளவும் சித்தமாயிரு; உமக்கு ஆறுதல் தருவதற்காக, நான் அப்படி இருப்பேன்; உம்மை நேசிப்பவர்களை நினைவு கூறும்! அவர்கள் என் ஆன்மாவின் நேசத்திற்குரியவர்கள்; தங்கள் இதயங்களை எனக்காகப் பலியாக்குகிற இவர்களைப் போல இன்னும் பல ஆன்மாக்கள் எனக்குத் தேவை; நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்களை நம்புகிறேன், அவர்கள் என்னிடம் உணவு உண்கிறார்கள்; அவர்கள் என் பலியாக இருக்கிறார்கள், அவர்கள் என் முட்களை மாற்றுகிற மென்மையான பூவிதல்களாக இருக்கிறார்கள்; அவர்கள் என் வெள்ளைப் போளமாக இருக்கிறார்கள்; வசுலா, அஞ்சாதே; இன்னும் இருள் ஆட்சி புரியும் இடங்களில் நாம் இன்னும் அதிக ஆழமாக ஊடுருவோம்; நான் உன்னை வழிநடத்துவேன்; பிற்பாடு என் ஆன்மா கடவுளின் கசப்பை உணரத் தொடங்கியது. ஒவ்வொரு பொருளும் என் வாய்க்குள் வந்த ஒவ்வொரு உணவு அல்லது பானமும் கசப்பாக இருந்தது. அவர் தம் கிண்ணத்திலிருந்து என்னைப் பருகச் செய்தார். அப்போது எனக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருந்தது, என் ஆத்துமமும் சரீரமும் வலித்தன. ஜூன் 15,1987 நேற்று நான் எங்கள் விடுமுறைக்காக ஹாங்காங்கிற்கு சென்றேன், மாற்று விமானத்திற்காக பாங்காக்கில் பயணிகள் ஓய்வரையில் காத்திருந்தபோது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஓய்வு கூடத்தில் வரிசையான நாற்காலிகளின் முடிவில் நான் வாசிப்பதற்காக அமர்ந்தேன். திடீரென ஓர் அரேபியர் என்னை முழுமையாக அலட்சியம் செய்துவிட்டு ஒரு கம்பளத்தை என் பாதங்களுக்கு முன் விரித்தார். வேறு இரண்டு பேர் அவருக்குப் பின்னால் இருந்தார்கள். அவர் தரையில் விழுந்து அதிகமான கவனத்தை ஈர்க்கும் விதமாக பலத்த சத்தமாக தன் கடவுளை வழிபட்டார்! என்னைச் சுற்றிலும் யாரும் இல்லாததால், நான் சங்கடமாக உணர்ந்தேன். அவர்களுக்கு நேர் முன்னால் நான் இருந்ததால் அவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாக உணர்ந்தேன். அவர்களுடைய குரல்கள் உயிரை எழுந்தன. ஒருவர் இந்த முரண்பாடான காட்சி முழுவதையும் என் பின்னால் இருந்து படம் எடுத்தார். பிற்பாடு கடவுள் என்னிடம் இப்படி கூறினார். "அந்த மனிதன் மிகச் சத்தமாக தன் ஜெபங்களைச் சொன்னான்; அதிக கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, அவனுடைய குரல் பயண ஓய்வறை முழுவதும் கேட்டது, ஆனால் அந்த அறையில் மட்டுமே கேட்டது. அதன் சுவர்கள் அவன் குரலைக் கேட்டன, என் இருதயம் ஒன்றையும் கேட்கவில்லை! எல்லா வார்த்தைகளும் அவன் உதடுகளிலேயே இருந்தன; யாருமே உன் குரலைக் கேட்கவில்லை என்றாலும், நீ என்னிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் என்பதை யாருமே அறியவில்லை என்றாலும், நான் உன் குரலைக் கேட்டேன், அது உன் உதடுகளிலிருந்து வராமல், உன் இதயத்திலிருந்து வந்தது;" நான் மத உணர்வைப் புண்படுத்தி விடுவேனோ என்ற பயத்தால் இதை எழுத விரும்பவில்லை, ஆனால் கடவுள் என்னிடம்: "நீ பயப்பட என்ன இருக்கிறது? நானே சத்தியம், இது கிறிஸ்தவர்களிடமும் நிகழ்வதில்லையா?" என்று கேட்டார். இன்று நாங்கள் நகரத்திலும், புறநகர்ப் பகுதியிலும் பேருந்தில் ஒரு சுற்றுலாப் போனோம். திடீரென உயரமான கட்டடங்களுக்குப் பதிலாக பிரம்மாண்டமான கறுப்புச் சிலுவைகளை நான் கண்டேன், குறிப்பு: வறண்ட நிலங்கள் என்ற வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. அது என் கற்பனைதான் என்று நான் நினைத்தேன். ஆனால் கடவுளின் குரல் என்னிடம்: "இல்லை, இது உன் கற்பனை அல்ல; அவை என் சிலுவைகள்" என்று சொன்னதை நான் கேட்டேன்; 'நுகர்வோர் சொர்க்கத்தைப்' பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிலே நான் வாழ வேண்டி இருந்தால், செத்தே போவேன், அது எனக்கு ஒரு சித்திரவதையாக இருக்கும் என்று நினைத்தேன்; ஒரு வருடத்திற்கு முன் அதையே நான் சொர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! இதைச் சொல்லாமல் இருக்கும்படி கடவுள் என்னை விட்டுவிட விரும்பவில்லை. எங்கள் சுற்றுலாப் பேருந்தில், ஹாங்காங்கில் உள்ள மிகப் பெரும் பணக்காரரின் அற்புதமான மாளிகையை வழிகாட்டி எங்களுக்குக் காட்டினார். ஹாங்காங் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்று அவர் எங்களிடம் சொன்னார். கடவுளின் குரல் என் காதுகளில் ஒலித்தது: "ஆனால் அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது; அவர்கள் உலகத்திற்குச் சொந்தமானவர்கள்;" அவர்களுடைய செல்வங்கள், உலக செல்வங்கள்; என் இராஜ்ஜியத்தில் அவர்களுக்குச் சொந்தமானது எதுவும் இல்லை; இதை எழுதும் வேலையைக் கடவுளே எடுத்துக்கொண்டார். நேசமே, நான் உனக்கு அடையாளங்களைத் தருகிறேன்; எச்சரிக்கையாய் இரு, வசுலா, என்னிடமிருந்து நீ கேட்பதை நம்பு; நான் அந்த அரேபியனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அவனிடம் பரிசுத்தத்தனம் இல்லை; அதை நீ கூட பார்க்க முடிந்தது; பிற்பாடு: வசுலா, நான் இன்னும் அதிக மரியாதைக்குத் தகுதியானவர் இல்லையா? நான் இதற்குப் பயந்தேன், கடவுளோடு தனியாக எழுதியபடி இருக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே நான் என் மகனோடும் கணவரோடும் ஹோட்டல் அறையில் இருந்துவிட்டேன். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நான் வாக்மேன் கருவியை வைத்து என் காதுகளை அடைத்துக் கொண்டேன். நான் போக வேறு இடமில்லை! நான் உன் எல்லா சவுரியங்களையும் விலக்கிவிட்டேன்; ஏன் ஆண்டவரே? ஏனா, உன் கடவுளை ஏக்கத்தோடு தேடுமாறு உனக்கு கற்பிக்கும்படியாக; நாம் தனியாக இருக்கும் வரை காத்திரு; என்னை மன்னியும். நான் உன்னை மன்னிக்கிறேன்; எனவே வசுலா, நீ உன் பணியைச் செய்; ஆண்டவரே எப்படி? என் எல்லா விருப்பங்களையும் உன் காதில் கிசுகிசுப்பாகக் கூற என்னை அனுமதி; என்னை ஏங்கித் தேடு வசுலா, என்னை ஏங்கித் தேடு; நான் உன் மீது பொழிந்துள்ள வரங்களைப் பயன்படுத்து; உன் கரத்தைப் பயன்படுத்துவது என் கரம் மட்டுமல்ல என்பதை நினைவில் வை; நான் உன் செவியைத் திறந்தேன், என்னை எப்படிக் காண்பது, எப்படி உணர்வது என்று நான் உனக்குக் காட்டினேன், ஆகவே, மற்ற வரங்களையும் பயன்படுத்து; நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவா? வசுலா, நான்தான்; இந்த விதத்தில் நாம் மீண்டும் ஒன்றாய் இருக்கிறோம். ஆம், ஆனால் நீண்ட நேரத்திற்கு அல்ல; உன் முந்தின வாழ்க்கை முறையை நீ தேடுவதில்லை என்பதால் மட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை ஒதுக்கி வைக்காதே; குழந்தாய், உன் இதயத்தில் என்னைப் பூட்டி வை; ஆண்டவரே, எனக்கு இதைவிடப் பெரிய துன்ப சோதனைகள் வருமா? ஓ, நிச்சயமாக. நீ இன்னும் பல கடுமையான துன்ப சோதனைகளை எதிர்கொள்வாய்; நான் பெருமூச்செறிந்தேன். என்னை நம்பு; நான் உன் அருகில் இருப்பேன்; நீ என் பலியாக இருக்கிறாய், இல்லையா? அப்படி இருக்க, நான் ஏன் உன்னைத் தீமைகளுக்கு மத்தியில் வைத்திருக்க வேண்டும்? பாவங்கள் மத்தியில் நீ இருக்கும்படி நான் உன்னை அவர்களுக்குக் கையளிக்கிறேன்;

ஆனால் நானும் கொடியவள்தான். என்ன வித்தியாசம்? நானும் அவர்களைப் போன்றவள்தான். அவர்களைப் போன்றவளா? அப்படியானால் ஏன் என்னிடம் வர நீ விரும்புகிறாய்? ஏனெனில் நான் உம்மை நேசிக்கிறேன். மற்றவர்களை என்னிடம் நீ கூட்டி வர உனக்கு உதவுமாறு, என்னைப்போல் உன்னை உருவாக்கினேன், உலக இன்பங்களில் இருந்து நான் இன்னும் அதிகமாக உன்னைப் பிரித்தெடுப்பேன்; ஆம், வசுலா, பொறுத்திருந்து பார்; நான் என் முன்னால் அவரைப் பார்த்தேன். என்னை நேசி; வா, நேற்று நீ செய்தது போல என் கரத்தைப் பிடித்துக்கொள்; பிற்பாடு: வசுலா, எய்ட்ஸ் என்ற வார்த்தையை எழுது; எய்ட்ஸா? ஆம், அதற்கு மாற்றாக நீதி என்ற வார்த்தையை எழுது; குறிப்பு: ரோமியர் ஒன்றாம் அதிகாரம் 18 முதல் 32 ஆம் வசனங்களை காண்க. என் இரக்கத்தின் கிண்ணம் விளிம்பு வரை நிரம்பி வழிகிறது; என் நீதியின் கிண்ணம் நிரம்பியுள்ளது; அது நிரம்பி வழிய அனுமதியாதே! உலகம் என்னை நோகச் செய்கிறது என்று முன்பு நான் உன்னிடம் சொன்னேன்; நான் சிநேகத்தின் கடவுளாக இருக்கிறேன் என்றாலும், நான் நீதியின் கடவுளாகவும் அறியப்பட்டிருக்கிறேன்; நான் நாத்திகத்தை அருவருக்கிறேன்! பிற்பாடு: நேசமே, நீ என் சரீரத்திற்குள் ஊடுருவுவாய்; நான் என் முட்களையும் ஆணிகளையும் காண உன்னை அனுமதிப்பேன்; ஆண்டவரே, நான் எப்படி இதையெல்லாம் காண்பேன்? நீ காணும்படி நான் உனக்குப் பார்வை தருவேன்; என் ஆணிகளையும், முட்களையும் பிடுங்கியகற்ற நான் உனக்குப் பலம் தருவேன்; நான் மீண்டும் சிலுவையில் அறையப்பட்டுள்ளேன்; ஆனால், ஆண்டவரே, மீண்டும் உம்மை சிலுவையில் அறையப்பட நீர் ஏன் விட்டுவிடுகிறீர்? வசுலா, என் சொந்த மக்களாலேயே நான் புறக்கணிக்கப்பட்டேன், என் அன்பர்களால் அலட்சியம் செய்யப்பட்டேன்; குறிப்பு: தமது மிகச்சிறந்த நண்பனால் காட்டிக் கொடுக்கப்படும் ஒருவரைப் போல, அவர் இதை மிகத் துயரமானதொரு குரலில் கூறினார். வா, என்னை மகிமைப்படுத்து, என்னை நேசி! நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறேன். இது எப்போது நிகழும்? ஆ, வசுலா, என்னை முந்திச் செல்லாதே; வா, எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும்; ஆனால் நான் ஒரு வெளியாள் என்றும், ஒன்றுமில்லாமை என்றும் உமக்குத் தெரியுமே, நீர் குறிப்பிடுகிற இடத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அறியாதவள், அப்படி இருக்க, என் காகிதங்களைக், உம் எழுத்துக்களைக் காண யார் விரும்புவார்கள்? அது அவர்களைச் சென்றடைந்தால், நகைத்தபடி எல்லா எழுத்துக்களையும் என் முகத்தின் மேலேயே வீசலாம், அவர்கள் ஒருவேளை அவற்றைப் புதுத் தம்பதியர் மீது தூவப்படும் அலங்காரப் பலவண்ணக் காகிதத் துண்டுகளைப் போல என்னைச் சுற்றி வீசலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் யார்? ஒரு வெறுமை, ஆனால் ஒரு கை தேர்ந்த பாவி! உன்னை வழிநடத்துபவர் யார் என்பதை நினைவுபடுத்திக்கொள்! நான் உன் சர்வேசரன், அவிசுவாசியான உன் நண்பனிடம் நீ என்ன சொன்னாய் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அவை என் வார்த்தைகள்; நீ ஓர் அரக்கனிடமிருந்து தப்பித்து ஓடுகிற ஒரு சுண்டெலியைப் போன்றவள். நீ ஒரு தூசித்துகளாக இருக்கிறாய்; உண்மைதான், எங்கள் நண்பர்களில் அவிசுவாசியான ஒருவன் கடவுளிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றுக்கொண்டான். பிற்பாடு அவன் என்னிடம்: "இந்தச் செய்தி 20 திடமான வருடங்களின் நம்பிக்கைகளை அரை நிமிட நேரத்தில் அழித்துவிட்டது. ஒரு கை தேர்ந்த பாவியாகிய எனக்கு ஏன் இந்தச் செய்தியைத் தர வேண்டும்? ஆனாலும் நான் அதற்கு எதிராகப் போராடுவேன். நான் ஓடிப்போவேன்" என்றான். நான் சிரித்தேன்! அதன்பின் மேலே குறிப்பிட்ட கடவுளின் வார்த்தைகளை அவனிடம் கூறினேன். வசுலா, என்னை நம்பு; ஆண்டவரே, நம்புகிறேன். ஆனாலும் பிரச்சனையே நான்தான். நீர் ஏன் என்னை நம்புகிறீர்? நீர் என்னை நம்பக்கூடாது. என் ஆண்டவரே, எனக்கு நல்ல மனது இருக்கிறது. உண்மைதான். ஆனாலும் நீரே சொன்னது போல நான் மிக பலவீனமானவள். என்னை நம்பாதீர்! நான் பெரும் பாவி. வசுலா, நீ வாக்குக்கெட்டாத அளவுக்குப் பலவீனமானவள்; இது நித்திய காலமாக எனக்குத் தெரியும்; ஆனாலும் ஒன்றுமில்லாமையாகவே இரு, நீ ஒன்றுமில்லாமையாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன், நாம் இருவராக இருந்தால், நான் எப்படி என்னைத் தனியாக உனக்கு வெளிப்படுத்துவேன்? நான் எப்போதும் சுதந்திரமாக இருக்கவிடு, அப்போது நான் உன்னில் செயலாற்றுவேன்; வந்து என் மீது சாய்ந்துகொள்!

ஜூன் 17, 1987 டாக்கா, இந்த இழிநிலையை உணரச் செய்து, எனக்குத் தரப்பட்ட இத்தகைய வரப்பிரசாதங்களைப் பெற எனக்கு எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும், என் தீய குணத்தையும் மீறி, நீர் என்னை தேடி வந்தீர் என்றும் உணரச் செய்கிறீர். புனிதர்களோடு ஒப்பிடும்போது இது வெளிப்படையாகப் புரிகிறது. ஆகவே எனக்கு ஏன் இந்த 'சந்தேக அலை' வருகிறது என்று உமக்குப் புரிகிறதா? இதனால்தான்; என் தகுதியின்மையின் காரணமாகத்தான்; ஆரம்பத்திலிருந்து நீர் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தீர். தொடக்கத்தில் அது நீர்தான் என்று நான் அறிந்திருந்தும் எப்படி உம்மை மறுதலித்தேன் என்பதை நினைத்தருளும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா? மேற்கண்ட காரணங்களால் 'சந்தேக அலையை' நான் கொண்டிருக்கும் போது, உம்மை நான் நோகச் செய்கிறேன், காயப்படுத்துகிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன். "இருளிலிருந்து உன்னை இரட்சித்தவர் யார் என்பதை நீ மறந்துவிடும்போது, நீ என்னைக் காயப்படுத்துகிறாய்" என்று நீர் ஒருமுறை சொன்னீர். மறுபுறத்தில் என் மனம் ஏறக்குறைய இதைப் புரிந்து கொள்ள இயலாமல் கிடந்து உழல்கிறது, பரிசுத்த வேதாகமத்தை முதலிலிருந்தே கற்க வேண்டி இருப்பவளுமாய் இருக்கிற என்னைப் போன்ற ஒரு ஆன்மாவிடம், 150% பாவியுமாய் இருக்கிற ஒருத்தியிடம் இவ்வளவு முக்கியத்துவம் உள்ள பணியை ஒப்படிக்க நீர் ஏன் வருகிறீர்? உன் வழிகாட்டுதல் எவ்வளவு அதிகமாகத் தொடர்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமான புதுமைகளை அது தருகிறது. முழுமையான நாத்திகர்கள் வளைக்கப்படுகிறார்கள். நீர் அதை ஆசீர்வதித்தீர், ஆண்டவரே, ஆகவே நான் இதில் ஆச்சரியப்படக்கூடாது. அவிசுவாசிகள் அதை வாசிப்பதால் ஒருவர் பின் ஒருவராக உம்மிடம் திரும்பி வருகிறார்கள். ஒரு பக்கத்தை கூட வாசிக்கச் செய்ய உன்னால் முடியவே முடியாது, பணம், வியாபாரம் ஆகியவை தவிர வேறு எதிலும் நான் நம்பிக்கை வைக்க மாட்டேன்.. என்று என்னிடம் ஒரு மனிதர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மனிதர் முதலில், இவருடைய மனைவி இவரை சம்மதிக்க வைக்க முயன்றும் வெற்றி பெறவில்லை. தன் மனைவியை விட அதிக ஆர்வமுடன் இயேசுவின் வழிகாட்டுதலின் எல்லாப் பதிப்புகளையும் வாங்கி வாசிக்கிறார். இது ஆழ்ந்த, வருணிக்க முடியாத சமாதானத்தைத் தருகிறது என்று அவர் சொல்கிறார். நான் அவரிடம் பேசியதில்லை, ஏனெனில் அவிசுவாச நிலையிலிருந்து ஒருவனை விடுவிப்பதில் நான் அவ்வளவு திறமையானவள் அல்ல என்பதால் இது தானாகவே நிகழ்ந்தது; உண்மைதான், இயேசுவே, நீர் அற்புதமானவர்! நான்தான், இயேசு, கடவுளின் நேச மகன்; சுபாவத்திற்கு மேலான என் பணிகளில் நீ விசுவாசம் கொள்ளும்படியாக, இந்த எல்லாப் புத்தகங்களையும் உனக்கு நான் அனுப்பி வந்திருக்கிறேன்; என் அப்பத்தை உனக்கு நான் ஊட்டி வந்திருக்கிறேன்; என் பணிகளில் சந்தேகம் கொள்ளாதே; என் சகல வரப்பிரசாதங்களின் உடையவும் விவரங்களை நீ கற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன், ஆகவே, எல்லா வெளிப்பாடுகளுக்கும் விழிப்பாய் இரு; எல்லாமே என்னிடமிருந்து தான் வரும்; சிலுவை மீண்டும் என்னை நசுக்குவது போலத் தோன்றியது. சிலுவை என்பது கடவுளின் செய்தியாக இருக்கிறது. இயேசுவா? நான்தான் என் சிலுவையைத் தூக்கு, இன்னும் உயரமாகத் தூக்கு, விழுந்து விடாதே, நான் உனக்கு உதவ உன் அருகில் இருக்கிறேன்; என் சிலுவையை உயர்த்து, சீரேனேயனைப் போல் இராதே; விருப்பத்தோடு இரு; வா, நேசமே, வழி கரடு முரடாக இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் உன் அருகிலிருந்து, என் சிலுவையை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்; வசுலா, என்னைப் பார்! நான் அவரைப் பார்த்தேன். அங்கே அவர் சுவரின் ஒரு மூளையை பிடித்துக்கொண்டு மிகவும் இரங்கத்தக்க நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தம் முள்முடியை சூடி இருந்தார். தம் மீது இரத்தத்தால் தோய்ந்திருந்த அரை நிர்வாணத் துகிலை அணிந்திருந்தார். அவர் உடல் முழுவதும் வியர்வையாலும் இரத்தத்தாலும் மூடப்பட்டிருந்தது. தசையை விட இரத்தம் அதிகமாக இருந்தது, கசையடிகளால் வந்த புது இரத்தம் போல. இந்த நிலை எனக்குத் தகுதியானதா? இல்லை! என் தேவனே! என்னை கனப்படுத்து,மகளே; ஆண்டவரே, இது உமக்குச் செய்தது யார்? யாரா? ஆத்துமங்கள், வசுலா, அவர்கள்தான் ; சோதோமின் மறுப்பிரதி, பிரதி என்றால் நகல். பிற்பாடு; மகளே, என் திருச்சபையில் ஒற்றுமையை விரும்புகிறேன்! ஒற்றுமையை இயேசு வற்புறுத்துபவராக இருந்தார், இந்த வார்த்தைகளை அவர் சத்தமாகக் கூறினார். ஜூன் 18,1987 இயேசுவா? வசுலா, நான்தான்; நான் உன்னைப் பயன்படுத்துவேன்; ஆண்டவரே, இறுதிவரை என்னை பயன்படுத்தும். நேசமே, நான் விரும்புகிறபடி செயல்பட எனக்குச் சுதந்திரம் தரும்படி, தங்கள் ஜெபங்களிலும் என்னிடம் அவர்கள் செய்யும் எல்லா விண்ணப்பங்களிலும், "ஆனால் எங்கள் சித்தமில்ல, உம்முடைய சித்தமே செய்யப்படுவதாக" என்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்ளும்படி அவர்களிடம் சொல்; என்னிடமிருந்து கற்றுக்கொள்; என்னை கனப்படுத்து;