இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 16. நவம்பர் 9, 1986 உனக்கு சமாதானம் உண்டாவதாக; இயேசு கிறிஸ்துவாகிய நான் இங்கே இருக்கிறேன்; நான் உனக்கு முன்பாக இருக்கிறேன், நான் உன் போதகராக இருக்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன்; என்னையே நான் பலியாக்கியதால் தீமை வெல்லப்பட்டது; தூங்கிவிடாதே, நான் விரைவில் உன்னிடம் வருவேன்; நானே வெளிப்பாடுகளாக இருக்கிறேன்; பேசவிருக்கும் செய்திகள் என்னிடம் இருக்கின்றன; வசுலா, என் சிலுவை மரணத்தைப் பற்றி என்னிடம் பேசு; நான் என்ன சொல்வேன்? நான் அதற்கு முன்பாக நடந்தது பற்றி சிந்திப்பேனா, அல்லது அது நடந்தபோதா? அதற்கு முன்பாக நடந்தது பற்றி; இயேசு தாம் கசையால் அடிப்பட்ட காட்சியை எனக்குக் காட்டினார். அவர்கள் என்னை கசைகளால் அடித்து, என் மீது துப்பினார்கள், என் தலையில் பலமுறை ஓங்கி அடித்தார்கள்; இதனால் எனக்குத் தலை சுற்றியது; நான் மூச்சுச் திணறி, வேதனையால் புலம்பிக்கொண்டு, தரையில் விழும்படி வயிற்றில் உதைத்தார்கள்; அவர்கள் முறை வைத்து, என்னை உதைத்துப் பரிகசித்தார்கள்; நான் வலியால் கதறினேன்; நான் உருக்குலைந்து போனேன்; என் உடலும் உள்ளமும் உடைந்து போயின; கசையடிகளால் பீய்ந்து போயிருந்த என் சதையானது உடல் முழுவதும் தொங்கிக் கொண்டிருந்தது; என் கால்கள் என்னைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இருந்ததால், அவர்களில் ஒருவன் என்னைத் தர தரவென்று இழுத்துக்கொண்டு போனான்; அதன்பின் அவர்கள் தங்கள் ஆடை ஒன்றை எனக்கு உடுத்தினார்கள்; அவர்கள் என்னை முன்னோக்கி முரட்டுத்தனமாகப் பிடித்திழுத்து, மீண்டும் என்னை அடித்தார்கள், என் முகத்திற்கு குறுக்காக என்னை அடித்து, தொகுப்பாசிரியர் குறிப்பு: குறுத்தெலும்பு எனப்படும் உறுதியான சவ்வுதான் உடைந்தது, எலும்பு அல்ல. டியூரின் துகில் வல்லுனர்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள். என் மூக்கை உடைத்து, என்னை இம்சித்தார்கள்; அவர்களுடைய அவமானப்படுத்தும் வார்த்தைகளை நான் கேட்டேன்; மகளே, அவர்களுடைய குரல்கள் கடும் வெறுப்போடும், பரிகாசத்தோடும் எதிரொலித்து, என் கிண்ணத்தை மேலும் நிரப்பின, "தங்கள் அரசர் எங்களோடு இருக்கும்போது, உன் நண்பர்கள் எங்கே ஒன்று கூடியிருக்கிறார்கள்? எல்லா யூதர்களும் இவர்களைப் போலவே துரோகிகளாகத்தான் இருக்கிறார்களா? அவர்களுடைய அரசரைப் பாருங்கள்!" என்று அவர்கள் சொன்னதை நான் கேட்டேன்; மகளே, பின்னப்பட்ட ஒரு முள்முடியை அவர்கள் எனக்குச் சூட்டினார்கள்; "உன்னை வாழ்த்துவதற்கு உன் யூதர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீ அரசன் அல்லவா? ஓர் அரசனைப் போல பாவனை செய்ய உன்னால் முடியாதா? சிரி! அழாதே, நீ அரசன் அல்லவா? ஆகவே, ஓர் அரசனைப் போல நடந்துகொள்;" அவர்கள் கயிறுகளால் என் பாதங்களைக் கட்டி, என் சிலுவை இருந்த இடத்திற்கு நடந்து போகும்படி என்னிடம் கூறினார்கள்; மகளே, அவர்கள் என் பாதங்களைக் கட்டியிருந்ததால், என்னால் நடக்க முடியவில்லை; ஆகவே, அவர்கள் என்னை முரட்டுத்தனமாகத் தரையில் தள்ளி, என் தலைமுடியைப் பிடித்து, என் சிலுவையை நோக்கி என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்; என் வேதனை தாங்க முடியாததாக இருந்தது, கசையடிகளால் தொங்கிக் கொண்டிருந்த என் சதைப் பகுதிகள் பீய்த்தெடுக்கப்பட்டன; அவர்கள் என் பாதங்களைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து, எழுந்து என் சுமையைத் தூக்கி, என் தோள்களின் மீது வைத்துக்கொள்ளுமாறு கூறி என்னை உதைத்தார்கள்; என் சிலுவை எங்கே இருந்தது என்று என்னால் காண முடியவில்லை, ஏனெனில் என் தலையில் ஊடுருவியிருந்த முட்களில் இருந்து என் முகத்தில் வடிந்து கொண்டிருந்த என் இரத்தத்தால் என் கண்கள் நிரப்பப்பட்டிருந்தன; ஆகவே, அவர்கள் என் சிலுவையைத் தூக்கி, அதை என் தோள்களின் மீது சுமத்தி, மதில் வாயில்களை நோக்கி என்னைத் தள்ளினார்கள்; ஓ மகளே, நான் சுமக்க வேண்டியிருந்த என் சிலுவை எவ்வளவு பாரமாக இருந்தது! பின்னால் இருந்து கசையடிகளால் நடத்தப்பட்டு, வாயில்களை நோக்கி நான் சென்ற பாதையை உணர்வுகளால் மட்டுமே நான் பின்பற்றினேன், என் கண்களைச் சுட்டெரித்த என் இரத்தத்தின் வழியாக என் பாதையைப் பார்க்க நான் முயன்றேன்; அப்போது யாரோ என் முகத்தைத் துடைப்பதை நான் உணர்ந்தேன்; கடும் வேதனையில் இருந்த பெண்கள் முன்னே வந்து என் வீங்கிய முகத்தைக் கழுவினார்கள், அவர்கள் அழுது புலம்புவதை நான் கேட்டேன், அவர்கள் இருப்பதை நான் உணர்ந்தேன், "ஆசீர்வதிக்கப்படுவீர்களாக, என் இரத்தம் மனுக்குலத்தின் சகல பாவங்களையும் கழுவிப் போக்கும்; என் மகள்களே, உங்கள் இரட்சணியத்தின் நேரம் வந்துவிட்டது" என்ற வார்த்தைகளை நான் உச்சரித்தேன்; நான் என்னையே மேல்நோக்கி இழுத்துக்கொண்டேன், மக்கள் கூட்டமோ வன்மையுள்ளதாக மாறியது; என்னைச் சுற்றிலும் எந்த நண்பனையும் என்னால் காண முடியவில்லை; என்னைத் தேற்ற யாரும் இருக்கவில்லை; என் கடும் வேதனை அதிகரிப்பதாகத் தோன்றியது, நான் தரையில் விழுந்தேன்; சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே நான் இறந்து விடலாம் என்று அஞ்சியவர்களாக, போர் வீரர்கள் சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனுக்கு, என் சிலுவையைச் சுமந்து வரும்படி ஆணையிட்டார்கள்; மகளே, அவர்கள் தங்கள் கருணையினாலோ அல்லது தயவிரக்கத்தினாலோ அவ்வாறு செய்யவில்லை; என்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் வரை என் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தார்கள்; மலைமீது வந்து சேர்ந்ததும், அவர்கள் என்னைத் தரையில் தள்ளி, என் ஆடைகளை உரிந்து, எல்லா கண்களும் என்னைக் காணும்படி என்னை நிர்வாணப்படுத்தினார்கள். என் காயங்கள் மீண்டும் திறந்தன; என் இரத்தம் தரைமீது வழிந்தோடியது; போர் சேவகர் எனக்குப் பிச்சுக் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கத் தந்தார்கள், நானோ அதை மறுத்துவிட்டேன்; ஏனெனில் என் உள் ஆழத்தில் என் எதிரிகளால் எனக்குத் தரப்பட்ட கசப்பை நான் ஏற்கனவே கொண்டிருந்தேன்; அவர்கள் விரைவாக முதலில் என் மணிக்கட்டுகளை சிலுவையில் அறைந்தார்கள்; ஆணிகள் என் சிலுவையில் இறுகிய பிறகு, அவர்கள் என் நொறுக்கப்பட்ட சரீரத்தை நீட்டி விரித்து, மிகுந்த வன்மையோடு என் பாதங்களைத் துளைத்தார்கள்; மகளே, ஓ மகளே, என்ன வேதனை, எவ்வளவு என் ஆன்மாவின் அவஸ்தை! என்னை நேசித்தவர்களால் கைவிடப்பட்டதும், நான் என் திருச்சபையை யார் மீது ஸ்தாபிக்க இருந்தேனோ, அந்த இராயப்பனால் மறுதலிக்கப்பட்டதும், என் மீதமுள்ள நண்பர்களால் மறுதலிக்கப்பட்டதும், தன்னந்தனியனாக விடப்பட்டதும், என் எதிரிகளிடம் கையளிக்கப்பட்டதும், என் ஆன்மாவுக்கு எப்பேர்ப்பட்ட வாதை! என் ஆன்மா துக்கத்தினால் நிரப்பப்பட்டிருந்ததால் நான் அழுதேன்; போர் சேவகர்கள் என் சிலுவையை நிலத்தில் ஊன்றி, குழியில் அதை நிறுத்தினார்கள்; நான் மிக அரிதாக என் பார்வை அனுமதித்த அளவிலேயே மக்கள் கூட்டங்களைக் கண்டேன்; என் வீங்கிய கண்களால், நான் உலகத்தைக் கவனித்தேன்; என்னை பரிகசித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு நண்பனையும் நான் காணவில்லை; எனக்கு ஆறுதல் தர அங்கே யாருமில்லை; "என் சர்வேசரா! என் சர்வேசரா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?" என்னை நேசித்த அனைவராலும் நான் கைவிடப்பட்டேன்; என் பார்வை என் திருத்தாயின் மீது விழுந்தது; நான் அவர்களைப் பார்த்தேன். "அம்மா, என் நேசத்திற்குரிய குழந்தைகள் உங்கள் குழந்தைகளாகவும் இருக்கும்படி நான் அவர்களை உங்களிடம் தருகிறேன், நீங்கள் அவர்களுக்குத் தாயாக இருக்க வேண்டும்" என்று எங்கள் உள்ளங்கள் மௌனமாகப் பேசிக்கொண்டன; எல்லாம் நிறைவேறிக் கொண்டிருந்தது, இரட்சணியம் அண்மையில் இருந்தது; வானங்கள் திறக்கப்படுவதையும், ஒவ்வொரு சம்மணசும் நேராக நிற்பதையும் நான் கண்டேன்; எல்லோரும் மௌனமாக நின்றார்கள், "என் தந்தையே, உமது கரங்களில் என் ஆவியைக் கையளிக்கிறேன்; நான் இப்போது உம்மோடு இருக்கிறேன்," இயேசு கிறிஸ்துவாகிய நான், என் மரண அவஸ்தையை எழுதும்படி உனக்குச் சொன்னேன்; என் சிலுவையைச் சுமந்து கொள்; குறிப்பு: 1986 அக்டோபர் 23 ஆம் நாளில் தமது சிலுவையைச் சுமப்பது பற்றி இயேசு முதல் தடவையாகப் பேசினார். வசுலா, எனக்காக அதைச் சுமந்து கொள்; என் சிலுவை சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும் கூக்குரல் இடுகிறது. நான் உனக்கு வழிகாட்டுவேன்; ஏனெனில், மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; டிசம்பர் 4, 1986 இது எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி நான் இன்னமும் பெருவியப்படைகிறேன். பெரும் சந்தேகங்களைக் கொண்டிருக்கிறேன். இது எப்படி நிகழ முடிந்தது? நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், என் எழுதும் கரத்தை கட்டுப்படுத்த என்னால் எப்படி முடியாமல் இருக்கிறது? வேறொரு விசையால் நான் பயன்படுத்துவது போல் உள்ளது. ஆனாலும், நான் உள்ளதை உள்ளபடியே உணர்கிறேன். அதனால்தான் நான் சந்தேகப்படுகிறேன். இருந்தாலும், இது நடந்து கொண்டிருக்கிறது. நான் குழப்பமடைந்திருக்கிறேன்... நான் இங்கே இருக்கிறேன்; இது இயேசுவாகிய நான்தான்; மகளே, நீ அரூபியாக இருக்கிறாய், நானும் அரூபியாகவும், குறிப்பு: இது அவருடைய மகிமையுள்ள திரு சரீரத்தையோ, என் உடலையோ மறுக்கவில்லை... பரிசுத்தவராகவும் இருக்கிறேன்; நான் உன்னில் வாழ்கிறேன், நீ என்னில் வாழ்கிறாய்; என்னில் நிலைத்திரு; இயேசுவாகிய நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்; என் ஒளியில் இரு, ஏனெனில், நானே ஒளியாய் இருக்கிறேன்; என் வழியாகவே நீ அறிவைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறாய்; சரி, இது நீர்தான் என்று நான் ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டீர். உம்முடைய இரண்டு குறிக்கோள்களை நீர் அடைந்து விட்டீர்; நான் உம்மை நேசிக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று, இந்த விதத்தில் நீர் என்னை சந்திக்கிறீர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது. நீர் என்னை வசீகரித்து விட்டீர். நான் இந்த உலகத்தில் உள்ளவர்களை விட அதிகமாக புத்தி பேதலித்தவளோ, அல்லது மனநல மருத்துவரையும் விட சித்தக் கோளாறு உள்ளவளோ அல்ல. இது பசாசுகளிடமிருந்து வரவில்லை என்பது எனக்கு தெரியும். ஏனெனில், அவற்றால் தாக்கப்படும்போது ஒருவன் எப்படி உணர்கிறான் என்பதை நான் அறிவேன். அவன் அமைதியை கெடுக்கும் வாதைகளின் உணர்வை வெளிப்படுத்துவான். குறிப்பு: நான் எழுதுவதை நிறுத்தும்படி முன்பு நான் தாக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது. நான் உம்மிடமிருந்து முற்றிலுமாக தூரமாய் இருந்ததால், நான் உம் அழைத்தல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நீர்தான் அதை சித்தம் கொண்டீர். என் தேவனே! நான் வருந்தவில்லை. நான் இப்போது வசீகரிக்கப்பட்டிருப்பதால், எப்படி நான் வருந்த முடியும்? குழந்தாய், என்னோடு இருக்க உனக்கு உதவும்படி நான் உன்னை உயர்த்தினேன்; என்னை நேசிக்க உனக்குக் கற்பித்தேன்; இந்த முறையில் என்னோடு இருப்பதில் மகிழ்ச்சியாயிருக்கிறாயா? ஓ, நிச்சயமாக! நான் என் இருதயத்தின் மையத்திலிருந்து நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; டிசம்பர் 8, 1986

உன் ஒளியில் நான் இருக்க முடியுமா? நீ என் ஒளியில் இருக்கிறாய்; நான் இயேசு, உன் இரட்சகர்; மகளே, என் சிலுவையை அணிந்து கொள்வது என்பதற்கு, குறிப்பு: கழுத்தைச் சுற்றி அணியும் சிலுவையை இயேசு குறிப்பிட்டார். என் துன்பங்களை உன்னோடு சுமந்து கொள்வது என்பது பொருள்; டிசம்பர் 10, 1986. நீ என்னைப் பின்பற்றுவாயா? வழிதவறிப் போகாதே, ஒரு பரிசுத்த வாழ்வு நடத்து; இயேசுவே, நான் இருப்பது போலவே இருக்க முடியாதா? குறிப்பு: ஒரு பகட்டான வாழ்வு நடத்திக்கொண்டே சீடராய் இருக்கவும் முயல்வது. நான் சொல்வதைக் கவனி; திருச்சபையைத் தேர்ந்து கொள்ளாத பரிசுத்த பிரமாணத்தின் ஒரு ஆளை எனக்குக் காட்டு! பாதி புனிதமாக இருந்த ஒரு ஆளை எனக்குக் காட்டு!.. அப்படி யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. இல்லை, அப்படி யாரும் இருந்ததில்லை; இயேசு, நான் ஏதோ சொல்லப்போவதைக் கேட்க காத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றினார். நான் "முழுவதையும்" கேட்க வேண்டும் என்று விரும்புகிறீரா? ஆம், விரும்புகிறேன், அஞ்சாதே; மகளே. எதைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நான் பெருமூச்சு விட்டு இருக்க வேண்டும். நான் இப்படியே இருந்துவிட்டால் என்ன நேரும்? நீ இப்படியே இருந்தாலும், உன்னை என்னிடம் அழைப்பதை நான் நிறுத்த மாட்டேன் என்பதை நீ உணர்ந்து கொள்வாய்! நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கேட்கலாம்; நான் மாற வேண்டுமென நிஜமாகவே எதிர்பார்க்கிறீரா? ஆம், எதிர்பார்க்கிறேன்! நான் மாறுவதால் ஏதாவது வித்தியாசம் இருக்குமா, அதாவது, நீர் சொல்வது போல பரிசுத்தமாக மாறுவதால்? ஆம், வித்தியாசம் இருக்கிறது; என்னிடம் திரும்பி, என்னோடு நிலைத்திரு; இப்போதே எதிர்காலத்தை உம்மால் காண முடிகிறதா? நேசத்துக்குரியவளே, காண முடிகிறது; நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கேட்கலாம்; நீர் எதிர்காலத்தைக் காண்பதால், நான் ஒரு காரியத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன், எனக்கு பதில் சொல்ல நீர் விரும்பவில்லை என்றால், வெறுமனே ஒரு இருதயத்தை வரைந்து காட்டும்- நான் கடைசியில் உம்மை ஏமாற்றி விடுவேனா? இல்லை, நீ என்னை ஏமாற்ற மாட்டாய்; நான் நிம்மதி அடைந்தேன்.... நீர் எப்படி உணர்வீர்? ஆண்டவராகிய நான் மகிமைப்படுத்தப்படுவதாக உணர்வேன்; நீர் அப்படி உணர்வீரா? உணர்வேன்; பயப்படாதே, பரிசுத்தமாய் இருக்க ஏன் அஞ்சுகிறாய்? நீ என் அழைத்தலின் தொடக்கத்தில் இருக்கிறாய் என்பதை நினைவில் வை; இதற்கு உண்மையில் என்ன அர்த்தம்? நான் சொல்வது என்னவெனில், நீ இன்னும் என்னிடமிருந்து கற்றுக் கொள்கிறாய்; நான் உனக்குக் கற்பிப்பேன்; என் செயல்களை உனக்குக் காட்டுவேன்; நான் இன்னும் என் அழைப்பின் தொடக்கத்தில் தான் இருக்கிறேன்; பிற்பாடு, நான் எப்படி செயல்படுகிறேன் என்பதை நீ கண்டுபிடிப்பாய்; பிற்பாடு, குறிக்கப்பட்ட நேரத்தில் சமாதானத்தைக் கண்டடையும்படி நான் உன்னை அழைப்பேன்; சமாதானம் என்பதன் பொருள் என்ன என்பதை நீ முழுமையாக அறிந்திருக்கிறாயா? உண்மையில், அது எனக்குத் தெரியாது. சமாதானம் என்பதன் பொருள் மரணமாக இருக்கலாம், திருச்சபையாக இருக்கலாம். எனக்கு சரியாகத் தெரியவில்லை... நானே சமாதானம்; நான் இங்கே உன் அருகில் இருக்கிறேன்; என் வலது கரம் உன் எழுதும் கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது; என் இடது கரம் உன் இடது தோளின் மீது இருக்கிறது; நான் இங்கே பிரசன்னமாய் இருக்கிறேன், நீ என்னை உணர்கிறாய்; மகளே, நான் உன் போதகராக இருக்கிறேன்; என்னோடு நட! என்னோடு வேலை செய்! ஏனெனில், நான் என் பணிப்பெண்ணாக உன்னை நியமித்திருக்கிறேன்; மனிதர்கள் உன்னை அதைரியப்படுத்த அனுமதிக்காதே; அவர்களில் பலர் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில், இருள் அவர்களுடைய உள்ளங்களை மூடி, அவர்களுடைய புரிந்து கொள்ளும் திறனை வேரோடு அழித்திருக்கலாம்; சமாதானமாய் இரு, சர்வேசரனாகிய நான் உன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்; மகளே, தைரியமாய் இரு; டிசம்பர்11, 1986 மகளே,நீ பரிசுத்தமாக இருக்க சித்தமாய் இருக்கிறாயா? பயப்படாதே; இயேசு, முந்தைய செய்தியின் அதே காரியத்திற்குத் திரும்பவும் வருகிறார். பரிசுத்தமாக இருப்பது என்பதன் மிகச் சரியான அர்த்தம் என்ன? பரிசுத்தமாக இருப்பது என்றால், மாசற்றவளாகவும், எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவளாகவும் இருப்பது; பரிசுத்தமாய் இருப்பது என்றால், அன்போடு எனக்காக உழைப்பது; பரிசுத்தமாய் இருப்பது என்றால், என்னை நேசித்து, என் அருகில் தங்கி இருப்பது, பரிசுத்தமாய் இருப்பது என்றால், திருச்சட்டத்திற்குக் கீழ்படிவது; பரிசுத்தமாய் இருப்பது என்றால், என்னைப்போல் இருப்பது; ஒருத்தி இதயத்தில் மட்டும் பரிசுத்தமாக இருக்க முடியுமா? ஆம்! பரிசுத்த உடுப்புகளை விட, இதயம் தான் அதிக முக்கியமானதா? ஆம், இதயம் தான் முக்கியமானது; என் அருகில் நிலைத்திரு, என் அருகில் நிலைத்திரு; குறிப்பு: என் அருகில் நிலைத்திரு என்பதற்கு, நான் அவர் மீது கருத்தாய் இருக்கவில்லை என்பது பொருள். நான் விரும்புவது போல, நீ என் அருகில் இல்லை! நீ என்னைத் தவிர்க்கிறாய் என்று நான் உணர்கிறேன்; இயேசு, மகிழ்ச்சியாக இல்லை.... நான் பரிசுத்தராக இருக்கிறேன், ஆகவே, நீயும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உமக்கு இன்னும் அருகில் இருக்க வேண்டும் என்று நான் உண்மையாகவே விரும்புகிறேன்! நீ உண்மையாகத்தான் இதைச் சொல்கிறாயா? உண்மையாகவே, நீ என்னைத் தேடுகிறாயா? என்னைக் கைவிட்டு விடாதீர்! நான் கைவிடமாட்டேன்! ஒருபோதும்? மகளே, ஒருபோதும் கைவிடமாட்டேன், அஞ்சாதே; துறவற அங்கி, உனக்குத் துயரம் தருகிறது என்று பயப்படுகிறாயா? குறிப்பு: துறவறக் கன்னிகையின் உடை. தொடர்ந்து பேசு, பதில் சொல்! நான் என் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டேன். நிஜமாகவே, நான் கன்னியர்களின் உடைகளை அணிய விரும்பவில்லை, நான் இருக்கிற விதமாகவே உம்மை அன்பு செய்கிறேன்... மகளே, கடைசியில் ஒரு வழியாக இதைச் சொல்ல உனக்குத் தைரியம் வந்திருக்கிறது! நீ உண்மையாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! கடவுளாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; இதற்கு மாறானதை நீ சொல்லி இருந்தால், என் முகத்திற்கு நேராக நீ பொய் சொல்லி இருந்திருப்பாய் என்பதை நீ உணர்கிறாய்; கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்று நான் உணர்ந்தேன், ஆனாலும், அவர் இந்த முடிவு பற்றி வருத்தமாயிருக்க வேண்டும். நான் வருந்தவில்லை! நான் சொல்வதைக் கேள்; நீ உன் உள்ளத்தில் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், துறவற அங்கி அணிவதில் அல்ல; முழுமையற்றது என்றால் என்ன? துறவற உடைகள் அணியாமல் இருப்பது அப்படி இருப்பதாகாதா? முழுமையற்றது என்பது மீண்டும் அதே அர்த்தத்தோடுதான் கூட்டு சேர்கிறது, பரிசுத்தமாயிருப்பதற்கு ஒருவருக்கு பரிசுத்த உடைகள் தேவையில்லை; உள்ளம் பரிசுத்தம் இல்லாமல் இருக்கும்போது, பரிசுத்த உடைகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அது உப்பு தன் சாரத்தை இழந்துவிட்டது போன்றது, நீ எனக்கு இன்னும் அருகில் இருக்குமாறு நான் உன்னிடம் வருகிறேன்; நான் உன்னை எனக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வருவேன்; என்னால் நேசிக்கப்படுவதை உணர்வாயாக என்னிடம் அஞ்சாதே, நானே சமாதானம்; இயேசுவாகிய நான் உனக்கு வழிகாட்டுகிறேன்; உன்னை வழிநடத்துகிறேன்; அதிகமாக ஜெபி; இம்முறையில் என்னோடு பணியாற்று; என்னில் உன் விசுவாசத்தை அதிகரி;என்னை உன் தேவையாகக் கொண்டிரு; காலம் சமீபத்தில் இருப்பதால், விழிப்பாய் இரு;