வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 28. மார்ச் 30, 1987. இது நான்தான், இயேசு கிறிஸ்து; எல்லா வெளிப்பாடுகளும் என்னிடமிருந்தே வருகின்றன; என்னிடமிருந்து உறிஞ்சிப் பருகு; ஒரு மலர் என்னிடமிருந்து உறிஞ்சிப் பருகியபடி என் அருகில் வளர்ந்து கொண்டிருக்கிறது; என் மலரே, நீ வளரும்போது உறிஞ்சிப் பருகு, என்னிடமிருந்து கிரகித்துக் கொள்; வா, நான் உன்னை நேசிக்கிறேன்; இயேசுவே, உம்மிடம் பேசும்போது நான் பயன்படுத்துகிற மொழியை நீர் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இது மிகுந்த மரியாதைக்குறைவாக தோன்றுகிறது. இது என் அன்றாட மொழி, ஆனால் எனக்கு வேறு மொழிகள் தெரியாது. துறவிகள், கன்னியர்கள் ஆகியவர்களின் நூல்களை வாசிக்கும் போது, அவர்கள் உம்மோடு பேசும் விதம் மிக வித்தியாசமாக இருக்கிறது. ஒருவேளை அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கலாமோ? கொச்சையாகப் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஒருவேளை என் இதயம் பேசுவதாக இருக்கலாம். வசுலா, நான் உன் அறியாமையை மன்னிக்கிறேன்; நான் உனக்குக் கற்பிப்பேன்; நீ கற்றுக்கொண்டு வருகிறாய்; நீ எவ்வளவு பரிதாபமானவள் என்பதை உணர்ந்து வருகிறாய்; இருந்தாலும், நான் உன்னை நேசிக்கிறேன்; பரிதாபத்திற்குரிய நிலை என்னை ஈர்க்கிறது, ஏனெனில் என் இரக்கத்தை உனக்குத் தர என்னால் முடியும்; என் இனிமையை உலகிற்குக் காட்டுவதற்காக நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் தகுதிகளுக்காக அன்றி, என் தீய குணங்களுக்காகவே நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர் என்பதால் நான் பெருமை பாராட்டவில்லை. அநேகமாக, நான் 'நவீன உலகப்' பெரும்பகுதியின் பிரதிநிதியாக இருக்கலாம். நான் யூதாசைப் போல உணர்கிறேன்.... லோ;
குறிப்பு: லோ எபிரேய மொழியில் 'இல்லை'. வசுலா, நீ யூதாசைப் போல் இல்லை; நீ ஆதரவற்றவள், அறியாதவள், வாக்கு கெட்டாத அளவுக்கு பரிதாபமானவள்; நான் அர்ச்சித்த என் நேசத்துக்குரியவள் நீ; நம் ஐக்கியத்தைப் பாதுகாக்க உன்னால் இயலாது இருந்தது என்பதால் நான் அதன் மீது அக்கறை எடுத்துக் கொண்டேன்; உன்னை உருவாக்குவதே என் ஆசை; நான் உன்னிடம் என் மணவாளியாக இருக்கும்படி கேட்டு, உன்னை என்னோடு இணைத்துக் கொண்டேன்; இயேசுவே, கன்னியாஸ்திரிகள் உண்மையாகவே உம்மை 'மணம் செய்து கொள்கிறார்கள்' என்று நான் இப்போது அறிந்து கொண்டேன். ஆம், அவர்கள் என்னிடம் வந்து, என் மணவாளிகள் ஆகிறார்கள்; நான் அவர்களில் இன்பம் காண்கிறேன்! நீயோ என் மணவாளியாக இருக்க முடியும் என்பதையும், என்னோடு இணைந்திருக்க முடியும் என்பதையும் அறியாதிருந்தாய், ஆகவே, நம் ஐக்கியத்தைப் பற்றி நானே அக்கறை எடுத்துக் கொண்டேன், பார்த்தாயா? நான் உன் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, நம் திருமணத்தை அச்சுத்திருக்கிறேன்; என்னோடு வேலை செய், நான் பரிசுத்தர் என்பதை நினைவில் வை; ஒருபோதும் இதை மறக்காதே; ஏப்ரல் 3, 1987. நான் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்; நாம் இணைந்திருக்கிறோம் என்பதை நினைவில் வை; நான் யாவே, நான் உன்னை நேசிக்கிறேன்; நானும் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே! என்னிடமிருந்து உணவருந்து; நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; பூமியின் மீது என் இராஜ்ஜியம் பரலோகத்தில் இருப்பது போலவே இருக்கும் என்று நான் சொல்லியிருக்கிறேன்; எல்லாத் தீமைகளையும் நான் வேரறுப்பேன், என் பிரமாணிக்கமுள்ள சீடர்களை நான் வலுப்படுத்துவேன்; நான் யாவே, என் வார்த்தை நிலையானது; அஞ்சாதே, சிறியவளே, ஏனெனில் வழிநடத்துபவர் நான்தான்; நானே மகா உன்னதர்; நான் என் அப்பத்தை மனுக்குலம் முழுவதற்கும் வழங்கி, அதன் மூலம் அவர்களுடைய பசியை ஆற்றுவேன், குறிப்பு: அவரது வார்த்தை, அவரது செய்தி. அதுமட்டுமன்றி, அவர்கள் எனக்குப் பதில் நேசம் காட்ட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்; நான் நேசத்திற்காகத் தாகமாய் இருக்கிறேன்; அவர்களிடம் கூறு, என் உதடுகள் தாகத்தால் எப்படி காய்ந்து வெடித்துள்ளன என்பதை அவர்கள் அறிந்திருக்கட்டும்; நான் அவரைப் பகுத்துணர்ந்தேன். அவருடைய பிரசன்னம் தெளிவாய் இருந்தது. அவருடைய உதடுகள் காய்ந்தும், வெடிப்புற்றும், குப்புளங்கள் உள்ளதாகவும் இருந்தன. அவரது வாய் காய்ந்திருந்தாலும், அவருடைய நாக்கு வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாதிருந்ததாலும், பேசுவதில் அவருக்கு சிரமம் இருந்தது. நாட்கணக்கில் தண்ணீரற்ற ஒரு பாலைவனத்திலிருந்து வந்திருப்பவர் போல அவர் தோன்றினார். அது ஒரு பரிதாபத்திற்குரிய காட்சியாக இருந்தது. ஏப்ரல் 4, 1987. ஸ்விட்சர்லாந்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மக்களையும் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் நான் கவனித்தேன். அநேகர் எல்லா இடங்களிலும் உள்ளது போல, அன்றாட பிரச்சனைகளோடு இருக்கிறார்கள், சிலர் மற்றவர்களை விட அதிக பிரச்சனைகளைக் கொண்டிருக்கிறார்கள்; அநேகர் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும், போராடுபவர்களாகவும் தோன்றினார்கள். கடவுள் என்னை நெருங்கி வருவதற்கு முன் இதை நான் ஒருபோதும் கவனித்ததில்லை. ஆம், வசுலா, நீ எல்லோரையும் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; நீ அவர்கள் சொல்கிற எல்லாவற்றையும் கவனிக்கவும், கேட்கவும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என் ஆட்டுக்குட்டிகள் பேசுவதைக் கேட்பதும், அவற்றைக் கவனிப்பதும் எனக்கு வேதனை தருகிறது; நான் அவர்களைத் தேற்றுபவராக இருக்கும்போது, அவர்கள் ஏன் என்னை மறந்துவிட்டார்கள்? என்னால் அவர்களைத் தேற்ற முடியும், அவர்கள் என்னிடம் திரும்பி வர முடியும்; இங்கே பேசுவது யாவேயா, இயேசுவா என்று நான் வியந்து கொண்டிருந்தேன். வசுலா, நான் ஒருவரே! வசுலா, நான் உனக்கு உயிரைத் தந்த கடவுள்; நான் என் வார்த்தையை ஸ்தாபித்தேன்; நான் மாமிசத்தில் பூமிக்கு வந்தேன்; நான் ஒருவராய் இருக்கிறேன்; ஆசீர்வதிக்கிறேன், வசுலா, பரிசுத்த தமத்திருத்துவம் ஒன்றாய் இருக்கிறது, நான் ஒருவராய் இருக்கிறேன்; குறிப்பு: பொருண்மையில் ஒருமை. இதைப்பற்றி குருக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் நீ கற்றுக்கொள்வாய்; பிற்பாடு: மகளே, உலகம் என்னிடம் எவ்வளவு அசட்டைத்தனம் உள்ளதாக ஆயுள்ளது என்பதை நீ புரிந்து கொள்ளும்போது, என் கசப்பை நீ புரிந்து கொள்வாய்; என் இரக்கத்தின் கிண்ணம் நிரம்பியுள்ளது, என் நீதியின் கிண்ணமும் நிரம்பியுள்ளது; அவர்கள் என்னை வேதனைப்படுத்துகிறார்கள், என்னை கசப்புள்ளவராக்குகிறார்கள், புரட்சிகளை உருவாக்குகிறார்கள்; குறிப்பு: வேதத்தில் தோன்றியுள்ள புரட்சிகள் என்று நான் நினைக்கிறேன். எனக்கும் என் சட்டத்திற்கும் எதிராக கலகம் செய்கிறார்கள்; நான் அதே உயிருள்ள கடவுள்தான், ஆனால் என் மக்களோ அச்சமற்றவர்களாக ஆகி இருக்கிறார்கள், அவர்கள் எனக்கு சவால் விடுகிறார்கள், என் கோபத்தைத் தூண்டுகிறார்கள்! அவர்களைப் படைத்தது எனக்கு இன்பமாக இருந்தது, அவர்கள் ஏன் எனக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் யாரிடம் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறார்கள்? நான் துன்பப்படுகிறேன்; தாங்கள் எதை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்? என் சரீரம் சோர்ந்தும், காயப்பட்டும் இருக்கிறது, குறிப்பு: திருச்சபை. என் சரீரத்திற்கு இளைப்பாற்றியும், வேதனை தணிக்கப்படுவதும் அவசியமாய் இருக்கிறது; நீர் திருச்சபையைக் குறிப்பிடுகிறீரா, ஆண்டவரே? ஆம், திருச்சபையே என் சரீரம்; வசுலா, என் திருச்சபையை உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்; என் குருக்கள் அனைவரையும் ஒரு போர் படையைப் போல, இரட்சனியத்தின் போர்ப் படை போல ஒன்றிணைக்க நான் விரும்புகிறேன்; என் ஆடுகள் சிதறடிக்கப்படுகின்றன, எல்லா குருக்களும் ஒன்றிணைய வேண்டும்; என் சர்வேசுவரா, நான் தனிப்பட்ட முறையில் கிரேக்க ஆர்த்தராக்ஸ் சபையில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன். என் ஆண்டவரே, நீர் யாரைக் குறிப்பிடுகிறீர், கத்தோலிக்கரையா, ப்ரோடெஸ்டன்ட்டினரையா, அல்லது சபை பிரிவுகளையா? அல்லது மற்ற மதங்களையா? இதை நான் உம்மிடம் கேட்க துணிகிறேன் என்றால், பிரிவினை இருக்கிறது என்பதாலேயே. ஓ, வசுலா, நான் ஒன்றாய் இருக்கிறேன்; கடவுளாகிய நான் ஒருவராய் இருக்கிறேன்; என் குழந்தைகள் எல்லோரும் என் கரத்தால் படைக்கப்பட்டவர்களே, என் குழந்தைகள் எல்லோரும் ஏன் சிதறுண்டு இருக்கிறார்கள்? நான் ஒருமைப்பாட்டை ஆசிக்கிறேன், குறிப்பு: ஒருமைப்பாடு. கடவுளின் ஆசைகள் என்ன என்பதை நானாக விளங்கிக் கொள்ளத் துணியவில்லை. நான் புரிந்து கொண்டேன். என் குழந்தைகள் விசுவாசத்தில் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் ஒரே சர்வேசுவரன், தமத்திருத்துவம் ஒன்றாய் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! பரிசுத்த ஆவியானவரும், பரிசுத்த பிதாவும், சுதனாகிய இயேசு கிறிஸ்துவும், இந்த மூவருமே ஒரே சர்வேசுவரன்; குறிப்பு: ஒரே இறைவன். வசுலா, என்னோடு இணைந்திரு, என்னிடமிருந்து கற்றுக்கொள்; என் தேவனே, ஒளியைப் பற்றி என்ன சொல்கிறீர்? நானே ஒளி, நான் ஒருவரே; குறிப்பு: ஒரே இறைவன்.
ஏப்ரல் 5, 1987.
வசுலா, நான் அளவற்ற விதமாக உன்னை நேசிக்கிறேன்; நான் என் இருதயத்தை நீ உணர அனுமதிப்பதன் மூலம் என் நேசத்தை நீ உணர அனுமதிப்பேன்;
நான் என் கையை அவரது மார்பின் மீது வைத்து, அவருடைய இருதயம் துடிப்பதை உணர்ந்தேன். என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ஒரு ஆத்துமத்திற்கான அழைப்பாக இருக்கிறது;என் அன்புக்குரியவர்கள், நான் சொல்வதைக் கேட்டு, என்னை அணுகி வரவேண்டும் என நான் ஏங்குகிறேன்; வசுலா, இன்று ஒரு ஆன்மாவைக் குணப்படுத்த உன் நேசத்தின் சாரத்தை என்னிடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்; நான் அதை உணர்ந்திருந்தேன்... படைப்பே, என் ஒளியில் வாழு; குறிப்பு: ஆண்டவர் பேசிய தொனி கண்டிப்புள்ளதாக இருந்தது. நான் உம்மை நேசிக்கிறேன், ஆண்டவரே. பெண்ணே, என்னில் வாழு; குறிப்பு: ஆண்டவர் பேசிய தொனி மென்மையானதாக மாறியது. உம்மை அதிகமாக நேசிக்க எனக்கு கற்றுத் தாரும். நேசமே, வா, என் இருதயத்தில் நான் உன்னை ஒளித்துக் கொள்ள என்னை அனுமதி; குறிப்பு: ஆண்டவர் பேசிய துணி அன்பால் நிறைந்து மிகுந்த கனிவுள்ளதாக ஆகிவிட்டது. என்னோடு வேலை செய், எழுதுவதில் ஒருபோதும் சோர்ந்து போகாதே; என் பிரசன்னத்தை மறந்து போகாதே; ஏப்ரல் 6, 1987. உயர்ப்பு விழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன். வசுலா, என் வாதைகளுக்காக உன்னை ஆயத்தம் செய்; எனக்கு உன்னை அர்ப்பணி; நீ என் வேதனைகளை உணர்வாய்; என் சிலுவையில் அறையப்படுவதற்காக நான் உன்னை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்; நான் துன்பப்படுவேன், நீ என் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வாய், நேசமே, நீ என் கடும் வேதனையையும், என் காயங்களையும் உணர்வாய்; என்னோடு துன்பப்படுவாயா? குறிப்பு: உம் சித்தத்தை நான் செய்வேன். வா, நாம் ஒருவரில் மற்றவர் இளைப்பாறுவோம்;
ஏப்ரல் 7, 1987. முழு வழிகாட்டுதலும் என்னை நெருக்கிக் கொண்டிருப்பதாகவும், கடவுளின் வார்த்தை என் மீது பாரமாக அழுத்திக் கொண்டிருக்க, நான் தனியாக இருப்பதாகவும், அதை இறக்கி வைக்க எங்கும் இடமில்லாமல், என்ன செய்வதென்று தெரியாமல் நான் இருப்பதாகவும் உணர்ந்தேன்; சொல்ல முடியாத அளவுக்கு ஆதரவற்றவளாகவும், கைவிடப்பட்டவளாகவும், என் மீது இந்த பாரத்தோடு தனியாக இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். வசுலா, நான் எப்போதாவது உன்னைக் கைவிடுகிறேனா? நான் சர்வேசுவரன்; என் மீது சாய்ந்துகொள், என்னை நம்பு; ஆம், நான் நம்ப வேண்டும். ஆனால் இது என் சக்திக்கு மேற்பட்டதாக இருக்கிற சமயங்கள் இருக்கின்றன. என்னால் இதைத் தாங்க முடியவில்லை. நான் இதற்குப் பொறுப்புள்ளவளாக உணர்கிறேன். என் குழந்தாய், பொறுமையாய் இரு, என்னில் நம்பிக்கை வை, என்னிடம் வா, நான் உன்னைத் தேற்றுவேன்; பிதாவே, வாக்கு கிட்டாத விதமாக நான் உம்மை நேசிக்கிறேன். என்னைத் தேற்ற அவர் எப்படி மிக ஆயத்தமாக இருந்தார் என்பதை நான் உணர்ந்தேன். மகளே, நான் உன்னை நேசிக்கிறேன்; என் துன்பங்களை நீ உணருமாறு நான் செய்வேன்; நான் சிலுவையில் அறையப்படுவது அண்மையில் உள்ளது, அப்போது நான் உன்னிடம் வந்து, உனக்கு என் ஆணிகளையும், முள் முடியையும் தருவேன்; என் சிலுவையை நான் உனக்குத் தருவேன்; அன்பே, என்னோடு என் துன்பங்களைப் பகிர்ந்துகொள்; உன் ஆன்மா, நான் கொண்டிருந்த கடும் வேதனையை உணரும்; உன் கரங்களும் பாதங்களும் நான் உணர்ந்த மிகக் கொடூரமான வேதனைகளை உணரும்; வசுலா, நான் உன்னை நேசிக்கிறேன்; நீ என் மணவாளியாக இருப்பதால், நான் கொண்டுள்ள எல்லாவற்றையும் உன்னோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்; என்னை நம்பு, நான் உன்னோடு இருப்பேன்; வசுலா, பயப்படாதே, ஏனெனில் இயேசுவாகிய நான் உன்னோடு இருக்கிறேன்; வா, படிப்படியாக நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்வாய்; என் சமாதானத்தைக் கொண்டிரு; நேசமே, நான் உனக்காக ஓரிடத்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்; ஏப்ரல் 8, 1987. இன்று நான் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. ஆனாலும், கடவுளுக்கு எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை, ஆகவே, நான் விரைவாக இயேசுவிடம்: "ஒரு வார்த்தை, ஆண்டவரே, ஒரே ஒரு வார்த்தை" என்றேன். ஒரு வார்த்தையா, வசுலா? அன்பு, நான் உம்மை நேசிக்கிறேன்! ஒரு சிறு வாக்கியம் அல்லது அதுபோன்ற ஒன்று என்பதைத்தான் நான் ஒரு வார்த்தை என்றேன்...