இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 14. ஜனவரி 29, 1987. நான் யாவே, உன் பரலோகப் பிதா, பரலோகத்தையும் பூமியையும் படைத்தவர்; மகளே, சிறியவளே, எனக்கு மிகவும் பிரியமானவளே, நான் உன்னை அன்பு செய்கிறேன், என் செய்தியை நிறைவேற்று; பயப்படாதே, நான் எப்போதும் உன் அருகில் இருக்கிறேன்; போய் என் வார்த்தையை அறிவி, மணுக்குழு முழுவதற்கும் என் செய்தியை வழங்கு. பயப்படாதே, நான் ஜெபத்தில் உன் வாயைத் திறப்பேன்; நான் புத்தியின் ஆவியால் உன்னை நிரப்புவேன்; நீ பகலும் இரவும் உழைப்பாய், ஆனால் அது வீணாய்ப் போகாது. அன்புக்குரியவளே, என் செய்தியை ஏற்றுக்கொள், நீ என்னோடு நடப்பாய், நான் உன் வழிகாட்டியாக இருப்பேன்; கவலைப்படாதே, ஏனெனில் நான் உரிய காலத்தில் உன்னுடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வேன்; பிற்பாடு இயேசு பேசினார். இது நான்தான், இயேசு; வா, வசுலா; எல்லா செய்திகளும் என் பிதாவாலும் என்னாலும் தரப்படுகின்றன. என் வார்த்தைகளை நிறைவேற்று; பயப்படாதே; நான் உன்னோடு தங்கியிருப்பேன்; நான் உனக்குக் கற்பிப்பேன்; நான் உன் உரிமைச் சொத்தாக இருப்பேன்; வா, நாம் சேர்ந்து போவோம்; அன்புக்குரியவளே, என்னைப் பின் செல், நான் இயேசு கிறிஸ்து. இயேசுவே, நான் என்னையும் அறியாமல் உம்மை நோகச் செய்கிறேனா? தவறு செய்யும் இந்த மனநிலை என்னிடமிருக்கிறது; மகளே, என்னை கைவிடுவதாய் இருந்தால் என்னை துயரப்படுத்துவாய். நீ செய்வதுபோல் என்னை அன்பு செய்வது என்னை அக்களிக்கச் செய்கிறது. உனக்கு புரியவில்லையா? வசுலா, நீ என்னை விட்டுச் செல்வதால் நான் நோகடிக்கப்படுவேன். இயேசுவாகிய நான் என்னை அன்பு செய்ய உனக்குக் கற்றுத்தந்திருக்கிறேன்; இயேசுவே, இதிலெல்லாம் இருப்பவர் நீர்தான் என்பதற்கு என்ன சாட்சியம் இருக்கிறது? உன்னையே பார், நீதான் அந்த சாட்சியம்; நீயே என் அன்பின் சாட்சியம்; வசுலா, என்னோடு இருக்கும்படியாக, ஒன்றுமில்லாமையிலிருந்து நான் உன்னை எழுப்பினேன். ஆகவே, உன்னைத் தேற்றுபவரிடம் வா. என்னை நெருங்கி வா. எனக்கு பயப்படாதே. நீ என் மகன்களையும், மகள்களையும் தொலைவிலிருந்து என்னிடம் திரும்ப அழைத்து வரும்படியாக நான் உன்னை உருவாக்குவேன். என் பெயரைத் தாங்கி இருந்தாலும் என்னை கைவிட்டு விட்டவர்களில் பலர் இப்போது நான் உன்னை சுவிகார மகளாக ஏற்றுக்கொள்வது போலவே என்னால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். ஆகவே, உன்னையே உன் இருதயத்திற்குள் திணித்துக்கொள். வசுலா, எந்த நேரமும் நான் உன்னுடைய இதயத்தை உணர்கிறேன். நான் அதில் எப்போதும் என் தலையை சாய்க்கக்கூடிய ஒரு மென்மையான இடத்தை நான் கண்டுபிடிக்கிறேன்; எனக்கு ஓய்வளிப்பதில் உன்னை நான் சார்ந்திருக்க முடியும் என நான் உணர்கிறேன்; இயேசுவாகிய நான் உன்னை அன்பு செய்கிறேன்; உன் துன்பங்கள் என் துன்பங்களாக இருக்கின்றன என்பதை நினைவில் வை; இன்று என் மீது சாய்ந்து கொள். உன் அன்பையெல்லாம் எனக்குக் கொடு; எனக்கு ஆறுதல் தேவைப்படுகிறது; இயேசு என்னிடமிருந்து ஆறுதலைத் தேடுகிறார் என்பதைப் பற்றி நான் அதிர்ந்து போனேன். நான் எப்படி உமக்கு ஆறுதல் தர முடியும், ஆண்டவரே? அந்த மென்மையான இடத்தின் மீது இளைப்பாற என்னை அனுமதிப்பதன் மூலம். இன்று நான் அன்பு செய்பவரும் மீண்டும் என்னை நோகச் செய்பவருமான ஒருவர் என்னோடிருக்கிறார். உன் ஆறுதலால் என்னை நிரப்பு... நான் எப்படி உமக்கு ஆறுதல் தர முடியும், ஆண்டவரே? மீண்டும் என் சிலுவையை உன் மீது வைக்க என்னை அனுமதி; என் சுமையிலிருந்து என்னை விடுவி. நான் ஓய்வெடுக்க விடு. எனக்காக நீ அதைச் சுமந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நான் உன்னை நம்புகிறேன்; மகளே, முன்னொரு நாள் என்னை நீ மறுதலித்தது போல மீண்டும் ஒருபோதும் என்னை மறுதலிக்காதே! குறிப்பு: நான் என் தூதரை அழைத்துவிட்டு இயேசுவை புறக்கணித்திருந்தேன். என்னை மன்னியும், நான் எவ்வளவு தகுதியற்றவளாக உணர்ந்தேன் என்றால், உம் ஊழியரை அழைக்கவும், உம்மை மறுக்கவும் நான் சோதிக்கப்பட்டேன். மீண்டும் நான் அப்படிச் செய்யவே மாட்டேன்; மகளே, எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் அனைவருக்காகவும் நான் என்னுடைய உயிரைக் கையளிக்கவில்லையா? இங்கே, இப்போது நான் எனது சிலுவையை உன்னிடம் ஒப்படைக்கிறேன்; விரைவில் என்னுடைய சிலுவை எவ்வளவு பாரமானது என்பதை நீ உணர்ந்து கொள்வாய்; பிற்பாடு நான் திரும்பி வந்து உன்னை விடுவிப்பேன்; நீயும் நானும் சேர்ந்து பணியாற்றப் போகும் விதம் இதுதான். நாம் இம்முறையில் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். ஜனவரி 30, 1987. தந்தாய், தீமையிலிருந்து நீர் என்னை விடுவித்ததற்காக உமக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். என் இரட்சகரே, நீர் பரலோகத்திலிருந்து இவ்வளவு தூரம் என்னிடம் இறங்கி வந்திருந்தும், நான் போதுமான அளவுக்கு உமக்கு ஒருபோதும் நன்றி செலுத்தியதே இல்லை. எக்காலத்திலும் நீர் என் பாதுகாவலராகவும், என் இரட்சகராகவும் இருந்திருக்கிறீர். நான் தீமையால் சூழப்பட்டிருந்தபோது என் ஆன்மா துன்புற்றது. சாத்தான் என்னைப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு தாக்கியபோது, நீர் பொறுமையாக இருக்கவில்லை. நீர் என்னைக் காப்பாற்ற ஓடி வந்தீர். பசாசுக்கள் என்னைக் கொள்வதற்காக என்னைச் சுற்றிலும் இருந்தன. என் ஆன்மா, உம்முடைய முற்காலச் செயல்பாடுகளை நினைவு கூர்ந்து உம்மை கூவியழைத்தது. நீர் தயவு நிரம்பியவராக இறங்கி வந்து, அவற்றின் பிடிகளிலிருந்து என் ஆன்மாவை விடுவித்தீர். நீர் வாழ்த்தப் பெறுவீராக. உம்முடைய திருப்பெயர் மகிமைப்படுத்தப்படுவதாக. எல்லா ஞானமும் என்னிடமிருந்தே வருகிறது. உன்னுடைய கடும் துன்ப நாட்களில் நான் உன் கூக்குரலைக் கேட்டு உன்னைத் தூக்கி என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். யாவேயாகிய நான் உன் மீட்பராக இருக்கிறேன். மகளே, நீ என்னை உன் தேவையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். என் இரக்கத்தைப் பற்றி உனக்கு நினைவுறுத்த நான் விரும்பினேன். மகளே, உன் ஆன்மா மரணத்திற்கு நெருக்கமாக இருந்து கொண்டிருந்தது. எல்லா தீமையும் உன்னை சூழ்ந்திருந்தது. உன்னை தாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பு: இது கடவுள் எனக்கென திட்டங்களை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து சாத்தான் என்னைத் தாக்கியபோது நிகழ்ந்தது; அவன் தன் பசாசுகளோடு சேர்ந்து என்னைக் கொல்ல விரும்பினான். நான் கடவுளை நோக்கிக் கூவி அழைக்கும்படியாகவும், அவருடைய தேவையை உணரும்படியாகவும், என்னை அவரிடம் கையளித்து விடும்படியாகவும் அவர் இது நிகழ அனுமதித்தார். அவர்கள் உன்னை புறக்கணித்தார்கள். தங்கள் விளையாட்டுப் பொருளாக உன்னை ஆக்கிக் கொண்டு உன் உயிரைப் பறித்துவிடவும், என் திட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டபோது உன்னை விழுங்கிவிடவும் அவர்கள் முயன்றார்கள். உன்னைச் சூறையாடிக் கொண்டிருந்த கோப வெறிக்கு நடுவே நான் பூமியினின்று உன் மன்றாட்டைக் கேட்டேன். அதை மறுத்து தள்ள என்னால் எப்படி முடியும்? இனியும் நீ தீமையால் சூழப்பட்டிருந்ததைக் காண என்னால் முடியாதிருந்தது. குறிப்பு: நான் பசாசுக்களால் எவ்வளவு வன்மையோடு தாக்கப்பட்டேன் என்றால், நான் என் சம்மண சானவரைக் கூவி அழைத்தேன். அவர் எனக்குச் சொல்ல முடிந்ததெல்லாம்; "ஜெபி" என்பதுதான். என் தூதரும் இந்தப் போரில் பங்குகொண்டு, என்னை காத்துக்கொள்ள உதவி செய்து கொண்டிருந்தார். நான் உன்னிடம் விரைந்தோடி வந்து உன்னுடைய உதவியற்ற ஆன்மாவை என் கரங்களில் பொதிந்து கொண்டு என் தயாளத்தில் உன்னை என்னிடம் தூக்கிக் கொண்டேன். என் ஒளி உன் மீது சுடர்ந்தபோது நான் உன்னை உயிர்ப்பித்தேன்; மகளே, நீ முழுமையாக புரிந்து கொள்ளும்படி நான் செய்வேன்; நான் உன் இறைவன். நீ என் கண்களில் விளையேறப் பெற்றவளாய் இருக்கிறாய் என்பதால் நான் உன் ஆன்மாவைப் பாதுகாப்பேன். நான் உன் முதல் தந்தையாக இருக்கிறேன். இதைப்பற்றி நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்லவில்லையா? நீண்ட காலத்திற்கு முன்பே இதை உனக்கு நான் வெளிப்படுத்தவில்லையா? நான் தேர்ந்து கொண்டவளாகிய மகளே, அஞ்சாதே; யாவேயாகிய நான் மனித இனத்திற்கு என் இரக்கத்தைக் காட்டுவேன். பலரை குணமாக்குவேன். யாவேயாகிய நான் நீ பிறப்பதற்கு முன்பாகவே என் சுமைதாங்கியாக உன்னை நியமித்திருக்கிறேன்; நீ என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியை சுமக்க வேண்டியவளாக இருக்கிறாய். பலர் என்னில் உண்மையான ஒரு புனித வாழ்வை வாழக் கற்றுக்கொள்வார்கள்; நான் உனக்கு உதவி செய்வேன். என்னை மகிமைப்படுத்து. மகளே, நான் உனக்கு தொடர்ந்து கற்பிப்பேன்; உன் குற்றத்திலிருந்து நான் உன்னைக் குணப்படுத்துவேன். நீ என்றென்றும் தங்கி வசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிற என் இருதயத்திலிருந்து என் சமாதானத்தை நான் உனக்குத் தருவேன். யாவேயாகிய நான் இறுதிவரை உன்னை வழிநடத்துவேன். நான் உன்னை அன்பு செய்கிறேன். ஒருபோதும் இதை மறக்காதே. நான் ஞானமாக இருக்கிறேன். எல்லா ஞானமும் என்னிடமிருந்தே வருகிறது. ஜனவரி 31, 1987. இயேசுவா? நான்தான். நான் இதோ இருக்கிறேன். இயேசுவாகிய நான் உன் ஆசிரியரும், உன் மணவாளரும், உன் இறைவனுமாக இருக்கிறேன். வசுலா, இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் பிதா தம் செய்திகளைச் சுமப்பவளாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நான் உன் ஒன்றுமில்லாமையில் உன்னிடம் வந்து என் இருதயத்தை உனக்கு வெளிப்படுத்தி உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன்; தம்முடைய முழுமையான இராஜரீகத்தில் என் பிதா உன் கவனத்தை ஈர்க்கும்படி தம் ஊழியனான தானியேலிடம் உன்னைக் கையளித்தார். குறிப்பு: என் காவல் தூதர். அவர் எங்களிடம் உன்னைக் கொண்டு வரும்படி உன்னை இருகப் பற்றியிருந்த இந்தக் காலகட்டத்தில் நீ தாக்கப்பட்டாய்; குறிப்பு: பரிசுத்த தமத் திருத்துவம். பசாசு என் திட்டங்களை அறிந்து, உன்னை அதைரியப்படுத்த முயன்றது; தொடக்கத்தில் என் மீது உனக்கு அன்பு ஏதுமில்லை; என்றாலும், இக்காலம் முழுவதும் நான் உன் அருகிலிருந்து நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நீ குளிர்ச்சியாயும் என்னிடம் அசட்டைத்தனம் உள்ளவளாகவும் இருந்தாய்; அகாலமான துக்கப் புலம்பலால் பாதிக்கப்பட்டு, என் இருதயம் துயரத்தால் வேதனைக்குள்ளானது. எங்கள் சொந்த குழந்தை எப்படி இந்த அளவுக்கு எங்கள் சாயலை கெடுத்து வீழ்ச்சி அடைய முடிந்தது? நீ மீண்டும் நேராகப் பார்க்கும்படியாக நாங்கள். குறிப்பு: பரிசுத்த தமத் திருத்துவம். இன்னொன்னு இருக்கு. உன் கழகத்துக்குரிய உச்சமான தண்டனையை உனக்குத் தர வேண்டி இருந்தது; குறிப்பு: சாத்தான் என்னைத் தாக்க அவர் அனுமதித்தார். நீ பாவம் செய்தாய், என்றாலும் இன்னும் எங்களுடையவளாக இருந்தாய்; அதன்பின் உன் கடுமையான துன்பத்தின் மத்தியில், நான் உன் மன்றாட்டைக் கேட்டேன்; உன் ஆண்டவராகிய நான் உன் அடைக்கலமாக இருக்க முடியும் என்பதை நீ உணரத் தொடங்கி இருந்தாய். நீ என்னை நோக்கி திரும்பி உன்னை எனக்கு கையளிக்க செய்யுமாறு நீ எழுதுவதை நிறுத்தும்படி நான் உனக்கு உத்தரவிட வேண்டி இருந்தது. ஆம், நான் மோட்சத்தின் கதவுகளை மூடினேன். நான் என் நீதியின் சுவாசத்தால் உன்னைச் சுழற்றி அடித்தேன். நீ உண்மையாகவே மனஸ்தாபப்படும்படியாக, நான் உன்னைச் சுழற்றி அடித்தேன். நான் உனக்குத் தேவையானவர் என்பதை நீ உணர வேண்டும் என்று நான் விரும்பினேன். நீ என்னை அன்பு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். மரணத்தின் தொடுதலை நீ உணரச் செய்தேன். ஆயினும், நீ நினைவு கூர்கிறபடி உன்னையே எனக்குக் கையளிக்கும்படி நான் செய்தேன்; அதன்பின் உன் கடும் துன்பத்தின் ஒரு பகுதியாக இருந்த உன் காயங்களைக் குணப்படுத்த நான் என் தூதர் தானியேலை உன்னிடம் மீண்டும் அனுப்பினேன்; உன்னை எங்களிடம் கொண்டு வருவது தானியேலின் வேலையாக இருந்தது. உன்னை அழைத்தவர் நானே. அன்பையும் கனிவையும் கொண்டு உன்னைப் பேணி நீ மீண்டும் நலம் பெற செய்தவர் நானே. நான் என் அழகால் உன்னை வசீகரித்தேன். நீ ஒரு கனிதரும் மரமாக இருக்கும்படி நான் உன்னை குணமாக்கினேன். நான் கல்வி அறிவுகளையும் பகுத்துணர்தலையும் உன்மீது மழையாகப் பொழிந்து என் செய்திகளை உனக்கு எழுதத் தந்தேன். நான் என் திருமுகத்தை உங்கள் அனைவருக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஞானமானது தன் ஆதாரங்களை நீதிமான்களுக்கு மட்டுமன்றி நீதியற்றவர்களுக்கும் கூட வழங்கிக் கொண்டிருக்கிறது. நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன். ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், என் ஆவியில் வளருங்கள். கேதுரு மரங்களைப் போல வளர்ந்து உங்கள் கிளைகளை எங்கும் பரப்புங்கள். கொடிய மூடத்தனமுள்ள வாழ்வு நடத்தும் அனைவரையும் என்னிடம் திரும்ப அழைத்து வரும்படி என் செய்திகளை சுமப்பவளாக நான் உன்னை உயர்த்தி இருக்கிறேன். நான் என் இறக்கைகளின் மீது உன்னை சுமந்தபடி என் வான் மண்டலத்தை சுற்றி வருவேன். மூடுபணியைப் போல சிகரங்கள் முதல் பேராளங்கள் வரை பூமியை மூடி கடல்களுக்கு குறுக்காக உன்னை நான் சுமந்து செல்வேன். நானும் நீயும் என் செய்தியை கொண்டு உலகம் முழுவதையும் மூடுவோம். வசுலா, எழுதப்பட்டுள்ளதை முயற்சி செய்து பகுத்துணர்ந்துகொள். நான் உன் பலமாக இருக்கிறேன். ஆகவே, அஞ்சாதே. நான் உனக்கு தந்து கொண்டிருக்கிற எல்லா வெளிப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வரும். நான் உன்னைத் தாங்கும் ஆதாரமாக இருக்கிறேன். நான் உன்னை அன்பு செய்கிறேன். என் போதனைகளை ஏற்றுக்கொள். நீ என்னை பின் செல்பவளாக இருக்கும்படி நான் உனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறேன். போதனை என்னிடமிருந்து வருகிறது. ஞானம் வாழ்வை நேசிக்கிறது. அது தன் கை வேலைகளை எளியவர்களோடு பகிர்ந்து கொள்கிறது. நான் என்றென்றும் பாய்கிற அந்த நித்திய நதியை அபரிதமாக உனக்கு தருவேன். அதன்பின் நிலத்தில் விழும் ஒரு காளை பனித்துளியாக நான் உன்னை மக்களினம் முழுவதினிடமும் அனுப்புவேன். உன்னை என் கொடையாக நான் அவர்களுக்கு தந்து இவ்வாறு அவர்கள் என்னை அதிகமாக புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுவேன். ஏனெனில் இதுவே என் திருச்சித்தமாக இருக்கிறது; மகளே, இந்த நாளுக்காக நான் எவ்வளவோ ஏங்குகிறேன்!