இயேசு தம் திருச்சபை, பிதாவும் தாமும் ஒன்றாயிருப்பது போல, ஒன்றுபட வேண்டும் என்று கேட்கிறார். தாம் இரக்கமுள்ளவர் என்றும், அன்பினால் எச்சரிக்கிறார் என்றும் கூறி, தம்மிடம் வந்து சமாதானம் செய்துகொள்ள அழைக்கிறார். இதயத்திலிருந்து ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கேட்கிறார்.
வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org
அத்தியாயம் 83. டிசம்பர் 3, 1988 டிசம்பர் 16, ஜெபக்கூட்டத்திற்காகத் தரப்பட்ட செய்தி, என் ஆண்டவரா? நான் உம்மை நேசிக்கிறேன், உம்மோடு இருக்க நான் ஆசிக்கிறேன், உம்மோடு இருந்து, இவ்வளவு அருகில் உம்மை உணரும் இந்தக் கொடையை, இந்த வரப்பிரசாதத்தை, எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி. எனக்குக் கற்பிப்பதற்காகவும், உம்மிடம் என்னை உயர்த்துவதற்காகவும் உமக்கு நன்றி. நம் இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. நம் ஆண்டவர் போற்றப்படுவாராக. நம் ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. ஆண்டவரா? நான்தான்; குழந்தைக்குரிய விசுவாசத்தைக் கொண்டு விசுவசிப்பதன் மூலம் என் புனித இதயத்தை மகிழ்வி; நான் ஏன் உன்னைத் தேர்ந்துகொண்டு, என்னிடம் உன்னை உயர்த்தினேன் என்று அறியத் தேடாதே... ஏன், யார் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல், வருவதை அப்படியே ஏற்றுக்கொள்; எந்தக் கேள்வியும் எழுப்பாதே, நான் உனக்குத் தந்திருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; ஆ என் குழந்தாய்! நான் பல ஆண்டுகளாக உன் கதவுகளுக்குப் பின்னால் இருந்தேன்! ஆண்டவரே, என்னை மன்னியும். நான் உன்னை மன்னித்துவிட்டேன்; நான் உன்னைக் கடிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது கடந்த காலத்திற்குரிய காரியம்; என் புனித இதயம் கொண்டிருக்கிற மகிழ்ச்சியை உனக்குக் காட்ட மட்டும் நான் விரும்புகிறேன், ஏனெனில் நான் இப்போது மீண்டும் உன்னோடு இருக்கிறேன்; என்னைப் பெற்றுக் கொள்ளும்படி நான் உன்னை உருவாக்கியிருக்கிறேன்; எனவே, என் புனித இதயத்தை மகிழ்வி, என் குழந்தைகளை ஏற்றுக்கொள்; அவர்களைக் ஏற்றுக்கொள்ளும்போது நீ என்னையே ஏற்றுக்கொள்கிறாய்; நான் உன் வாசற்படி வரைக்கும் இவ்வளவு தூரம் அவர்களை அழைத்து வருகிறேன்; உன் நேரத்தை அர்ப்பணி; அவர்களுக்கு என் சமாதானம் தேவையாய் இருக்கிறது; அவர்கள் ஊக்குவிக்கப்படுவது தேவையாய் இருக்கிறது, அன்யோனியமாக என்னை நெருங்கி வர அவர்களை ஊக்கப்படுத்து, ஆனாலும், நான் பரிசுத்தர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்; ஆண்டவரே, இந்த கூட்டங்களை நடத்துவது உம் விருப்பமா? அது என் சித்தம்; என்னோடு ஒட்டிக்கொள், நான் உன்னை வழிநடத்தவிடு; உன்னை என்னிடம் விட்டுவிடு; இயேசுவாகிய நான் உன் முன்னால் இருக்கிறேன்; ஆண்டவரே, இதெல்லாம் சரியானதுதான் இல்லையா? இந்தக் கூட்டங்களில் செய்திகளை வாசிப்பது? அன்பிற்குரியவளே, நீ என்னை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாய்; நான் உமக்கு நன்றி கூறுகிறேன், என் ஆண்டவரே! நான் உன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறவாதே, என்னை நம்பு; என்னை நேசிப்பவர்கள் தங்கள் பங்கிற்கு மற்றவர்களும் என்னை நேசிக்கும்படி, அவர்களை என்னிடம் கொண்டு வரும்படி, என் அன்பில் வளர கற்றுக்கொள்வார்கள்; என் புனித இருதயம் அன்பால் பற்றி எரிகிறது, அது தன் உள்ளாழங்களில் உங்கள் எல்லோரையும் ஈர்த்துக் கொள்ள எவ்வளவோ ஆவலாக இருக்கிறது; நான் அன்பிற்காகத் தாகமாய் இருக்கிறேன்; நான் உங்களிடம் தேடுவதெல்லாம் அன்பு மட்டுமே, ஏனெனில் அன்பே புண்ணிய மரத்தின் வேராய் இருக்கிறது; என்னோடு இன்னும் ஒன்றித்திராத அனைவரும் என்னிடம் வாருங்கள், வாருங்கள், வந்து என்னோடு ஒப்புறவாகி, என் சொந்த சமாதானத்தைக் கொண்டிருங்கள்; குறிப்பு: அருளப்பர் 14 ஆம் அதிகாரம் 27 ஆம் வசனத்தைக் காண்க. வந்து, என் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இன்னும் என்னைப் புரிந்து கொள்ளாதவர்கள் வந்து, என்னோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள், வந்து அன்போடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்; உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான், நீங்கள் என் ஒளியின் குழந்தைகளாக வேண்டும் என்று விரும்புகிறேன்; ஆம், என்னை கனப்படுத்துகிற என் சமாதானம் மற்றும் அன்பின் சீடர்களாக; ஓ, ஆண்டவரே! மற்ற எல்லாக் காலங்களையும் போல, இப்போதும் சிலர் துன்புறுத்தப்படுவார்கள்! என் குழந்தாய், எனக்குத் தெரியும்; இன்னும் மூடியிருக்கிற இருதயங்களைக் கொண்டுள்ளவர்களும், தங்கள் இருதயத்தால் அன்றி, தங்கள் அறிவால் எதையும் தீர்மானிப்பவர்களுமாகிய மனிதர்களால் சிலர் துன்புறுத்தப்படுவார்கள்; ஆனாலும், என் வரப்பிரசாதத்தால், நான் இவர்களில் பலரையும் கூட, என் புனித இதயத்தினுள் ஈர்த்துக் கொள்வேன்; சிறு மலர்களே, தைரியம் கொள்ளுங்கள், நான் உங்கள் அருகில் இருக்கிறேன், என் கண்கள் உங்கள் மீது இருக்கின்றன, எனவே, அஞ்சாதீர்கள்; என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தி வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவ வேண்டும் என்பது என் ஆசை, ஆகவே, என்னில் விசுவாசம் கொள்ளுங்கள்; நான் உங்கள் யுகத்திற்கென அதை இரகசியமாக ஆயத்தம் செய்து வந்திருக்கிறேன்; என் திருச்சபை ஒன்றுபட வேண்டும் என்று நான் என் செய்தியில் கேட்கிறேன், ஏனெனில் பிதாவும் நானும் ஒன்றாய் இருப்பது போல, என் திருச்சபையும் ஒன்றாய் இருக்க வேண்டும், அனைவரும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே கிடைக்குள் இருக்க வேண்டும்; நான் இராயப்பரை உங்கள் பாதுகாவலராகவும், என் மறு வருகை வரையிலும் உண்மையில் உங்களைக் காக்கும்படியாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; ஆனால் மனிதர்கள் எனக்கு கீழ்படியவில்லை, அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள், தங்கள் சொந்த சட்டங்களைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்; நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இராயப்பரை, என் ஆட்டுக்குட்டிகளின் இராயப்பரை, இப்போது இரண்டாம் அருள் சின்னப்பராக இருக்கும் இராயப்பரை எதிர்க்கிறவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்... ஏனெனில் அவர் என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவராகவும், என் ஆன்மாவின் அன்பிற்குரியவராகவும் இருக்கிறார்....... அன்பிற்குரியவர்களே, நீங்கள் சமீபத்தில் பிளவுபட்டுப் போனபோது, என்னில் ஒரு பகுதி கிழித்தகற்றப்பட்டது; ஆம், அவர்கள் என் உடலிலிருந்து ஒரு பகுதியை பிய்த்தகற்றி விட்டார்கள் என்பதை உணரவில்லை; ஓ, என் அன்பிற்குரியவர்களே... எனக்கு இது தகுதியானதா?... ஏன் என் இதயத்தைக் கிழிக்கிறீர்கள்?... ஏன் உங்கள் கடவுளின் இதயத்தைக் கிழிக்கிறீர்கள்?... ஏன் என் கண்களை இன்னும் அதிகமான இரத்தக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள்?... குறிப்பு: இயேசுவின் சித்திரம் அதீத துன்பத்தில் இருப்பதாகத் தோன்றியது. அவருடைய கண்கள் இரத்தத்தால் நிரம்பி இருந்தன. சுற்றிலும் இரத்தப் பெருக்குகள் இருந்தன. நான் என் சொந்த நண்பர்களால் முடமாக்கப்பட்டுவிட்ட ஒரு பிச்சைக்காரனைப் போலவே உங்களிடம் இரந்து கேட்கிறேன், நீங்கள் எல்லோரும் இராயப்பரிடம் திரும்பி வந்து, பிதாவும், நானும் ஒன்றாயிருப்பது போல, நீங்களும் ஒன்றாயிருங்கள்; என் தாயை மறுதலிப்பவர்கள் அனைவரையும் கூட. குறிப்பு: புரொட்டஸ்டன்ட் சபையினர். தங்கள் செவிகளைத் திறந்து கேட்கும்படி நான் அழைக்கிறேன், என் தாய் விண்ணக அரசியாக இருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் பெயரின்படி, கடவுளின் தாயாராக இருக்கிறார்கள்; அறியாதிருந்தவர்களை நான் குற்றம் சொல்லவில்லை, உங்களை உண்மையிடம் திரும்பக் கூட்டி வர மட்டுமே நான் முயற்சி செய்கிறேன்; இந்த உலகத்தின் மனம் திரும்புதலுக்காகவும் நான் அழைப்பு விடுக்கிறேன்; என் சர்வ வல்லமையை மறந்து போய்விட்டவர்கள் என்னைத் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்றும் நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்; நீங்கள் காலங்களின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், இதன் காரணமாக என் அடையாளங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை நான் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்... வேதாகமங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன... நான் சமாதானமும் அன்புமாக இருக்கிறேன்; உங்கள் ஆண்டவராகிய இயேசுவாகிய நான் எப்போதும் இரக்கமுள்ளவராக இருக்கிறேன், ஆம், என் இரக்கம் பெரிதானது; என் இரக்கத்தில் விசுவாசம் கொள்ளுங்கள் என்றாலும், நான் நீதியின் கடவுளாகவும் இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்; நான் பூமிக்கு அனுப்பும் சுத்திகரத்திற்கு அன்பே காரணமாக இருக்கும்; இதற்கு கடவுளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் என்று பெயரிட்டு அழைப்பதன் மூலம் அதைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் அல்லது தவறான விளக்கம் தராதீர்கள்; நான் உங்களை அச்சுறுத்தவில்லை, நான் அன்பின் காரணமாக உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன்; தன் குழந்தையை எச்சரிக்கிற ஒரு தந்தையைப் போலவும், அவனோடு விவாதித்து அவனது உணர்தல்களுக்குத் திரும்பக் கூட்டி வர முயற்சி செய்பவனைப் போலவும், நானும் உங்களோடு வாதிட்டு, உங்களில் சிலர் எவ்வளவு தவறாகவும், தவறாக வழிநடத்தப்பட்டும் இருக்கிறீர்கள் என்றும், பாவம் என் ஒளியை எப்படித் தடுத்துவிட முடியும் என்று உங்களுக்குக் காட்டவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்; நான் உங்களை எழுப்ப வருகிறேன், ஏனெனில் உங்களில் பலர் அளவற்ற இரக்கத்தின் காரணமாக, மரித்தோரை உயிர்ப்பிக்கும்படி உங்கள் அனைவரிடமும் வருகிறேன்; நான் உங்கள் அனைவர் மீதும் கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக, மனம் திரும்பி, உங்கள் வாழ்வுகளை மாற்றி, பரிசுத்தமாய் இருக்கும்படி உங்களிடம் கேட்க வருகிறேன்; பரிசுத்தத்தில் வாழுங்கள், ஏனெனில் நான் பரிசுத்தராக இருக்கிறேன்; நீங்கள் சமாதானத்தில் இருக்கும்படியாகவும், இந்தச் சமாதானத்தை உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கொடுக்கும்படியாகவும், நான் என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன்; இப்போது வாருங்கள், இந்த வருடத்தின் முடிவில் ஜெபத்தில் உங்களை ஒருமுகப்படுத்துங்கள்; உங்கள் ஆண்டவராகிய நான் உங்களை நேசிப்பது போல, நீங்களும் வந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்; டிசம்பர் 7, 1988 குழுவுக்கான செய்தி: புனித மாமரி: என் வசுலா, என் சமாதானத்தைக் கொண்டிரு; அன்புக்குரிய குழந்தைகளே, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்; நான் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிற வறட்சியின் காரணமாக, உங்களைப் போலவே துன்புறுகிற உங்கள் பரிசுத்த அன்னையாக இருக்கிறேன்; அதைறியப்படாதீர்கள், நான் உங்கள் அருகில் இருக்கிறேன்; இயேசுவின் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியைப் பரப்பும்படி நான் உங்களை ஊக்கவிப்பேன்; இதோ, இந்தப் பலவீனமான கருவியின் வழியாக, இயேசுவே உருவாக்கிய ஒரு மெல்லிய மலரின் வழியாக, அவர் தமது செய்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்; ஆனால் திருச்சபையின் பல ஞானக் கடவுளின் அளவற்ற செல்வத்தை அவர்கள் புரிந்து கொள்வது போலத் தோன்றவில்லை! பாவிகள் அதை நம்பி மனந்திரும்பினார்கள் என்பதை அவர்கள் காண்பார்கள் என்றாலும், இந்த ஞான அதிகாரிகளில் பலர் அதை நம்ப, கடவுளின் அளவற்ற செல்வத்தை அவர்கள் புரிந்து கொள்வது போலத் தோன்றவில்லை! இந்த ஞான அதிகாரிகளுக்கு முன், இந்தப் பாவிகள் விண்ணரசிற்குள் நுழைவார்கள்; என் அன்பிற்குரியவர்களே, அஞ்சாதீர்கள்; உங்கள் பரிசுத்த அன்னையாகிய நான் நடந்து கொண்டிருக்கிற எல்லாவற்றையும் காண்கிறேன், நான் உங்களை எப்போதும் ஊக்கப்படுத்துவேன்; நான் எப்போதும் உங்களைத் தேற்றுவேன், விசுவாசத்தோடு இருங்கள். இயேசுவின் மீது எப்போதும் சாய்ந்திருங்கள்; வசுலா, என் குழந்தாய், மக்கள் உன்னை வசிக்கூறித் துன்புறுத்தி, இயேசுவின் நிமித்தமாக உனக்கு எதிராக இல்லாதது, பொல்லாதது எல்லாம் பேசும்போது, நீ பேறு பெற்றவள்; அகமகிழ்ந்து களிகூறு; ஏனெனில் விண்ணகத்தில் உன் கைம்மாறு மிகுதியாக இருக்கும்; என் குழந்தாய், உனக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் இப்படித்தான் துன்புறுத்தினார்கள்; குறிப்பு: மத்தேயு ஐந்தாம் அதிகாரம், இறைவார்த்தைகள் 11 மற்றும் 12 ஐ காண்க. கடவுளின் தற்போதைய அடையாளங்களையும் வெளிப்படுத்தல்களையும் விசுவாசிக்கிற தேவ ஊழியர்கள் பலர் இருக்கிறார்கள், என்றாலும், தாங்கள் துன்புறுத்தப்படுவது பற்றிய பயத்தின் காரணமாக, அவர்கள் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்கிறார்கள்; இந்தத் தேவ ஊழியர்கள் ஜெபிக்க, ஜெபிக்க, ஜெபிக்க வேண்டும், இயேசுவின் புனித இதயத்திடம் தைரியத்தைக் கேட்க வேண்டும்; இயேசு அவர்களுக்கு தைரியம் கொடுப்பார்; நான் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உங்களை ஆசீர்வதிப்பதோடு, இந்த என் செய்தியை முடிக்கிறேன்; இயேசு: வசுலா, என் செய்தியைத் தொகுத்தெடு, இந்த செய்தியை நம்மிடம் வந்த எல்லோருக்கும் தர நான் ஆசிக்கிறேன்; ஆ ஆ என் குழந்தாய், அவர்கள் என் புனித இதயத்தை உணர்வார்களாக; என் ஐந்து காயங்கள், அவர்கள் அனைவரும் அவற்றினுள் வரும்படியாகவும், வந்து என் வேதனைகளை பகிர்ந்து கொள்ளும்படியாகவும் திறந்திருக்கின்றன! அன்பிற்குரியவர்களே, இயேசுவாகிய நான், உங்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த மக்களினங்களுக்கும், என் சமாதானம் மற்றும் அன்பின் பரிசுத்தச் செய்தியைத் தரும்படி, இந்த பலவீனமான கருவியின் வழியாக என்னையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; அரசரும், அனைவருக்கும் மேலானவருமான நான், என் சிறு மலர்களாகிய உங்களை வந்தடையும்படி, இவ்வளவு தூரம் உங்களை நோக்கிக் குனிகிறேன்; என் அளவற்ற அன்பின் காரணமாகவும், என் மற்றற்ற இரக்கத்தின் காரணமாகவும், நான் என் சமாதானத்தையும், என் அன்பையும் உங்களுக்குத் தரும்படி வருகிறேன்; நானே உலகின் ஒளி, நான் இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இருண்ட உலகில் ஒளிவீச வருகிறேன்; சிறு மலர்களே, உங்களுக்கு என் ஒளி தேவையாய் இருக்கிறது; வாழ்வதற்கு ஒளியும், சூரியக் கதிர்களும் தேவைப்படுகிற எந்த ஒரு மலரையும் போல, அன்பிற்காகவும், அன்பிலும் வாழ, உங்களுக்கும் என் அன்பின் ஒளிக்கதிர்கள் தேவைப்படுகின்றன, ஏனெனில் என் வரப்பிரசாதத்தின் செல்வ வளங்கள் இப்படிப்பட்டவையாக இருக்கின்றன; படைப்பே, நான் பித்தாகும் அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்! உங்கள் ஜெபங்களையும், உங்கள் தவச் செயல்களையும், அன்பின் செயல்களையும் தொடர்ந்து செய்யுங்கள், ஏனெனில் இந்த எல்லாச் செயல்களும் என் காயங்களுக்கு ஒரு தைலமாக இருக்கின்றன; நான் உங்களை அன்பு செய்கிறேன், நான் உங்கள் மீது கொண்டுள்ள இந்த அன்பின் காரணமாக, இப்போது வனாந்தரமாக ஆகியுள்ள உங்கள் யுகத்தில், புதிய தானியக்கதிர்கள், சமாதானம் மற்றும் அன்பின் தானியக்கதிர்கள் முழைக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்; நான் இறந்தோரை உயிர்ப்பித்து, என் திருப்பெயரைத் துதித்து, என்னை மகிமைப்படுத்துகிற என் பக்தியுள்ள ஊழியர்களாக அவர்களை மாற்றும்படி நான் அவர்கள் மத்தியில் இறங்கி வருவேன்; சிறு மலர்களே, நாட்கள் மிக அருகில் இருக்கின்றன, நான் எதைப்பற்றி உங்களிடம் சொல்லி வந்திருக்கிறேனோ, அந்த நாட்கள், ஒரு புதிய மண்ணகம் மற்றும் மேலிருந்து இறங்கவிருக்கும் அன்பின் யுகத்தின் நாட்கள்; இதெல்லாம் நிகழும்; இவ்வாறு வேதாகமங்கள் நிறைவேற்றப்படுகின்றன; அன்புக்குரியவர்களே, என் ஒளியின் குழந்தைகளே, ஒன்றித்திருங்கள், எப்போதும் என் அருகில் இருங்கள், என்னோடு இருங்கள், இழக்கப்படுகிற உங்கள் சகோதரர்களுக்காக ஜெபியுங்கள்; என் அடையாளங்களை மறுதலிப்பதன் மூலம் என் புனித இதயத்தைக் காயப்படுத்துகிற குருத்துவ ஆன்மாக்களுக்காக ஜெபியுங்கள்; என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியைப் பரப்புங்கள், எல்லா மக்களினங்களுக்கும் அதை அறிவியுங்கள்; தயாராய் இருக்கிற இந்த அறுவடையை பகிர்ந்தளிப்பதன் மூலம் என்னை மகிமைப்படுத்துங்கள், அது பலருக்கு உணவளிக்கும்; குறிப்பு: இந்தச் செய்திகள் என் கண்களும், உங்கள் பரிசுத்த அன்னையின் கண்களும் உங்கள் மீது இருக்கின்றன; நாங்கள் எங்கள் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறோம்; இந்த சமாதானத்தை எடுத்துக்கொண்டு, அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்; நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; டிசம்பர் 16, 1988 ஆண்டவரா? நான்தான்; இன்றைய மறு ஒன்றிப்பிற்கான என் செய்தி இதோ; நான் இதை என் மலர்களிடம் கேட்பேன்; என் மலர்களே, ஜெபிப்பது எப்படி என்று நீங்கள் எல்லோரும் கற்றுக்கொள்ளும்படி நான் உங்களிடம் கேட்பேன்; நீங்கள் ஜெபிக்கும் போது, உங்கள் இதயத்திலிருந்து ஜெபியுங்கள், உங்கள் உதடுகளிலிருந்து அல்லாமல், உங்கள் இதயங்களிலிருந்து வரும் ஜெபங்கள் எனக்குத் தேவை; வேகமாக ஜெபிக்காதீர்கள், உங்களையே ஒருமுகப்படுத்தி, என்னை உற்று நோக்கியபடி, இன்னும் மெதுவாக ஜெபியுங்கள்; நான் இங்கே இருக்கிறேன்; உங்கள் ஜெபங்கள் என்னை வந்தடையட்டும்; ஜெபத்தில் நிலையாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் மணிக்கணக்காக முழங்கால்களில் நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் இப்படிச் சொல்லவில்லை, இல்லை; மாறாக என் பிரசன்னத்தை நினைவு கூர்வதில், நீங்கள் இடைவிடாத ஜெபத்தில் இருப்பீர்கள்; உங்கள் மனங்கள் என்னை நோக்கி உயர்த்தப்படும்; நீங்கள் சொல்வது அல்லது செய்வது, அல்லது நினைப்பது ஆகிய அனைத்தும் எனக்காகவே இருக்கும்; எனக்கு பக்தியும், பிரமாணிக்கமும் தேவை; அளவற்ற விதமாக என்னை அன்பு செய்யுங்கள்; என்னை விரும்பித் தேடுங்கள்; நான் உங்கள் மீட்பரும், தேற்றுகிறவருமாய் இருக்கிறேன், ஆகவே, தயக்கமின்றி என்னிடம் வாருங்கள்; நான் உங்கள் அனைவரையும் தேற்றுவேன்; நான் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவேன், எனவே, உங்கள் ஜெபங்களையும், பரித் தியாகங்களையும் குறைத்துக் கொள்ளாதீர்கள், இடைவிடாமல் ஜெபத்தில் இருப்பதன் மூலம் அவற்றை அதிகரியுங்கள்; ஆண்டவராகிய நான் 1989-க்கென ஒரு விருது வாக்கியத்தை உங்களுக்குத் தருவதோடு என் செய்தியை முடிப்பேன்; பரிசுத்தமாக வாழுங்கள், தீமைக்குப் பதில் அன்பு செய்யுங்கள்; நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்; நான் சமாதானமும், அன்புமாக இருக்கிறேன், நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்; டிசம்பர் 17, 1988 எங்கள் மறு ஒன்றிப்பிற்குப் பிறகு: என் ஆண்டவரா? நான்தான்; மிகப் பலர் வந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், அங்கே 130 பேர் இருந்திருக்க வேண்டும்! வசுலா, நான் முன்பே சொல்லியிருக்கிறேன்; முழுமையாக, நீங்கள் பலராய் இருப்பீர்கள்; ஆண்டவரே, எப்படியே செயல் திட்டத்தின் காரணமாக அங்கே சில சச்சரவுகள் நிகழ்ந்தன என்பதை நீர் கவனித்திருக்க வேண்டுமே? இதையெல்லாம் நான் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்! குறிப்பு: இயேசு கொஞ்சமும் திருப்தி அடையவில்லை, உண்மையில், சில மனிதர்களால் அவர் நிலைகுலைந்திருந்தார். வசுலா,அங்கே எதிர் சக்திகள் இருக்கும், ஆனாலும், உன்னை மிதித்து நசுக்க நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன்; உன்னையே பிரித்தெடுத்துக் கொண்டு, என்னைச் சார்ந்திரு; இப்போது முதல் என் கூட்டங்களின் செயல் திட்டத்தை ஏற்பாடு செய்பவரும், உங்களுக்குத் தருபவரும் நான்தான்; என்ன செய்ய வேண்டும் என்று நான்தான் உங்களுக்குச் சொல்வேன்; நான் ஞானமாக இருக்கிறேன், ஞானத்திலிருந்து நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள்; எழுது; முதலில், புனித மிக்கேல் ஜெபத்தை ஜெபிப்பதன் மூலம் நீங்கள் செய்திருப்பது போல, என் கூட்டத்தை நீங்கள் நடத்த வேண்டிய இடத்தை அர்ச்சியுங்கள்; சமாதானம் உங்களோடு இருப்பதாக என்ற வார்த்தைகளைச் சொல்லி என் கூட்டத்தைத் தொடங்குங்கள்; என் சிறு மலர்களிடம், அவர்களுக்கு என் சமாதானத்தைத் தருபவர் ஆண்டவராகிய நானே என்றும், இந்த வார்த்தைகள் என் வாயினின்றே வருகின்றன என்று சொல்ல நினைவாயிரு; அதன்பின், நீங்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரை மன்றாடுவீர்கள்; நீங்கள் எல்லோரும் புனித மிக்கேல் ஜெபத்தை ஜெபிப்பீர்கள்; உங்கள் யுகத்திற்கு இந்த ஜெபம் மிக அவசரமாகத் தேவைப்படுகிறது; இந்தக் கடந்த கூட்டத்தில், யோவேல் மூன்றாம் அதிகாரம் ஒன்று முதல் ஐந்து முடிய உள்ள இறைவார்த்தைகளை வாசிக்கும்படி நான் உனக்குச் சுட்டிக்காட்டியது போலவே, பரிசுத்த விவிலியத்திலிருந்து எந்தப் பகுதியை வாசிப்பது என்று நான் எப்போதும் உனக்குக் குறித்துக் காட்டுவேன்; இம்முறையில், வாசிக்கப்பட வேண்டிய பகுதியையும் நான் உனக்குக் காட்டுவேன்; நீங்கள் அவற்றை வாசிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அதன்பின், நான் ஏன் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தேன் என்று அவர்களுக்குச் சொல்; இதைத் தொடர்ந்து, என் சமாதானம் மற்றும் அன்பின் செய்தியின் பகுதிகளை நீ அவர்களுக்கு வாசிக்க வேண்டும்; அவர்களுக்கு எந்தப் பகுதியை வாசிப்பது என்று நான் எப்படித் தெரிந்து கொள்வேன்? கவலைப்படாதே, நான் ஆலோசகரும், உன் வழிகாட்டியுமாக இல்லையா? ஆம், என் ஆண்டவரே, அவர்களுக்கு வாசித்துக் காட்டிய பிறகு, ஏதேனும் கேள்வி உள்ளதா என்று நீ அவர்களிடம் கேட்க வேண்டும்; இது வெளிப்படையான உரையாடலுக்கான நேரம்; சிறியவளே, நான் உன்னை ஏவித் தூண்டுவேன்; அதன்பின், அவை தொடர்பான என் செய்தியை அவர்களுக்கு நீ வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்களுக்கு அன்பைத் தருவதன் மூலம் என்னை மகிழ்வி, ஜெபமாலை ஜெபிப்பதோடு, கூட்டத்தை முடிப்பதன் மூலம் என்னை மகிழ்வி; யாராவது என்னோடு பேச விரும்பினால், நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அன்புக்குரியவளே, ஆம், அவர்களிடம் பேசு; என் ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு நன்றி.