இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 69. மே 7, 1988 புனித மாமரி. வசுலா! ஓநாய்களின் கோப வெறியுள்ள வார்த்தைகள் உன் ஆன்மாவைக் காயப்படுத்தும் போது, நான் எப்போதும் உனக்கு ஆறுதலளிப்பேன்; என் திருமகனின் தாகத்தைத் தணி; அன்பிற்காக அவர் கொண்டுள்ள அடங்காத தாகத்தைத் தணிப்பாயாக; நாம் பிதாவிடம் ஜெபிப்போம்; இரக்கத்தின் பிதாவே, அடியேன் உன் திருப்பாதங்களில் விழுந்து உம்மை ஆராதிக்கிறேன், உம்மில் என் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வைக்கிறேன், அளவற்ற விதமாக உம்மை நேசிக்கிறேன்; ஆமென்; நான் திரும்பிச் சொன்னேன். உங்களுக்கு நன்றி, புனித மாமரியே; உங்கள் மேல் சாய்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். அன்பிற்குரியவளே, என் திருமகனும் நானும் ஒருபோதும் உன்னை விட்டு விலக மாட்டோம்; என் திருமகன் சொல்வதைக் கேள்; ஆன்மாவே, இயேசுவாகிய நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்! ஆண்டவரே, நாங்கள் என்ன செய்வோம்? இப்போது மேற்கொண்டு எங்களுக்கு ஆண்டவர் தரும் உத்தரவுகள் என்ன என்ற பொருளில் நான் இப்படிக் கேட்டேன். அனைத்தும் என்னால் செய்யப்படும்; நானே ஏக, பரிசுத்த மாசற்ற திருச்சபையாக இருக்கிறேன்; இந்த ஐக்கியத்திற்காக ஜெபி; என் அன்பிற்குரியவர்களாகிய மறுதலிக்கிற ஆன்மாக்களுக்காக ஜெபி; நான் உன்னை நேசிக்கிறேன்; நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்; குறிப்பு: இயேசுவின் குரல் இந்த இடத்தில் மிக மென்மையாகவும், அந்நியோனியமாகவும் இருந்தது......... பேய்ப் பசிக்கொண்ட ஓநாய்களால் உன் இதயம் வேதனைப்படுத்தப்படும்போது, என்னிடம் வா; அந்த மறைபோதகக் குரு காட்டுமிராண்டித்தனமாகவும், திரும்பத் திரும்பவும் என் முதுகில் கசையால் அடித்துக் கொண்டிருக்கிறார்; நான் கேட்க விரும்புகிறேன்; ஒரு பலிச்செயலை நிறைவேற்றுவதன் மூலம் அந்தக் குருவின் தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய அவர் மனதாய் இருக்கிறாரா? தவறு செய்த இந்த ஆட்டிற்காக ஜெபி; அவருக்காக ஜெபி; என் அன்பிற்குரியவளே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், உரொட்டியும், தண்ணீரும் மட்டும் உண்டு உபவாசம் இருப்பதன் மூலம் பரிகாரம் செய்; உன் இரட்சகரின் துன்பங்களைத் தணிக்க நீ விரும்புகிறாயா? அன்பிற்குரிய ஆன்மாவே, நான் உன்னை நேசிக்கிறேன்; வசுலா, நான் சொல்வதைக் கேள்; என் அரசு உங்கள் நடுவில் உள்ளது; என் இதயத்தின் இராயப்பன், என் ஆட்டுக்குட்டிகளின் இராயப்பன்; நான் அவருக்குக் கொடுத்த பரிசுத்த பெயர் இதுதான்; என் ஆட்டுக்குட்டிகளின் இராயப்பன், ஆனால் காயின்கள் அவரைப் பதவி இறக்கம் செய்துவிட்டார்கள், நான் எந்த மகுடத்தைக் கொண்டு அவரை மகிமைப்படுத்தினேனோ, அந்த மகுடத்தை அவரிடமிருந்து திருடிக்கொண்டார்கள்; ஆண்டவராகிய நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் என் ஆன்மாவுக்கு மிகப் பிரியமானவர்; திருடப்பட்ட இந்த மகுடம் அவரிடம் திரும்பி வரும்; என் திருச்சரீரத்தை விழுங்கிய போலியான அரசுகளை, மிதக்கும் அரசுகளை, வேர்கள் இல்லாத அரசுகளை நான் தூக்கி எறிவேன்; இந்தப் போலியான அரசுகளை நான் மாற்றிவிட்டு, என் ஒளியில் என் உண்மையான அரசை ஒரு தீப்பந்தத்தைப் போல் உயர்த்துவேன், இராயப்பரை அரியணையில் மீண்டும் அமர்த்தி, அவருடைய ஆசனத்தை அவரிடம் மீண்டும் கொடுப்பேன்; அவருடைய கரத்தில் ஓர் இரும்புச் செங்கோலை நான் தருவேன், அதில், மேய்ப்பராக அரசாளும் அதிகாரத்தை நான் அவருக்குத் தருவேன்; சிதறடிக்கப்பட்ட என் ஆட்டுக்குட்டிகளை நான் ஒன்று கூட்டுவேன், குறிப்பு: ஆட்டுக்குட்டிகளை ஒன்றாகக் கூட்டி, ஆட்டுப்பட்டிக்குள் தள்ளிக் கொண்டிருந்த வானதூதர்களின் காட்சி ஒன்றை நான் கண்டேன். இதை நான் செய்துவிட்டபோது, என் கரங்களால் இந்த கிடையைச் சுற்றி அணைத்துக் கொள்வேன், அதன்பின் யாரும்! யாரும்! தீயவனும் கூட, ஒரே ஒரு ஆட்டுக்குட்டியையும் கூட, இந்தப் பட்டியிலிருந்து திருட முடியாது; என் மேற்போர்வையை நான் அவர்களுக்கு மேலாகப் பரப்பி, என் கதகதப்பில் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, அவர்களைப் பாதுகாப்பேன்; நான் பூமியின் மீது, உடலோடு இருந்தபோது, இராயப்பனிடம் தந்ததை மீண்டும் அவரிடம் தருவேன்; எந்த மனிதனும் என் சித்தத்தின் எல்லைகளை மீற முடியாதிருப்பான், ஏனெனில் இப்போதுள்ள எல்லாம் உன் செயலாக இருக்கிறது, என்னுடையதாக இல்லை; நான் எனக்கு எதிரான இராஜரீக ஒழுங்கினத்தையும், கலகத்தையும் நான் அருவருக்கிறேன்; வசுலா! மண ஒப்பந்தமானவளே, சகோதரர்களே! நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும், ஆண்டவராகிய நான் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் தேடுகிற ஆண்டவராகிய நான் திடீரென்று என் ஆலயத்திற்குள் வருவேன்; நான் உங்கள் கதவண்டையில் இருந்து தட்டிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்னை உள்ளே அனுமதிப்பீர்களா? என்னோடு, நான் என் மீட்பின் திட்டத்தை எடுத்து வருகிறேன்; என் ஏட்டுச் சுருள் எழுதப்பட்டுவிட்டது, அது உட்கொள்ளப்படுவதற்குத் தயாராக இருக்கிறது; இராயப்பரின் ஆசனம் கணப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய விதத்தில், அதைக் கணப்படுத்தும்படி, நான் என் சமாதானம் மற்றும் அன்பின் திட்டத்தைச் செயல்படுத்தினேன் என்பது குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டும்; அவருடைய மேய்ப்பனுக்குரிய மகுடத்தை அவருக்குத் திருப்பித் தரும்படி நான் வருகிறேன்; இராயப்பரை அணுகி வாருங்கள்..... உங்கள் ஆண்டவரை அணுகி வாருங்கள்; ஆண்டவரே, உமக்கு நன்றி. எழுதுவதில் சோர்ந்து போகாதே; நாங்கள், நாம்? ஆம், ஆண்டவரே, நாங்கள் நாம். மே 10, 1988 என் ஆண்டவரா? நான்தான்; என் மீது முழுவதுமாகச் சாய்ந்துகொள்; நான் உன் சமாதானமாக இருக்கிறேன்; வா, சோதனைக்கு உன்னைக் கையளித்து விடாதே; என் வழிகளை நினைவுபடுத்திக் கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்; ஜெபி, ஜெபி, ஜெபி; உன் உதடுகளிலிருந்து உச்சரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் தூபத்தைப் போல மேலெழுந்து, விண்ணகத்தைச் சென்றடைகிற ஒரு ஜெபமாக இருப்பதாக; என்னோடு இடைவிடாத பந்தங்களில் நிலைத்திரு; உன் மனதை என்னிடம் உயர்த்து; என்னைப் பற்றி மட்டுமே நினை; நீ கொண்டிருக்கிற நன்மையான அனைத்தும் என்னிடமிருந்தே வருகிறது; நானே உன்னை உயிர்ப்பித்தேன்; இதை எழுது; இயேசு என் அருகில் அமர்ந்து, தம் கரத்தை என் தோளின் மீது வைத்திருந்தார். நான் உன்னை உருவாக்கி இருக்கிறேன், நான் என் கரங்களால் உன்னைச் சுற்றி வளைத்துக் கொள்வேன்; மலரே, என்னிடம் பேசு, நீ என்னோடு நீ செய்யும் உரையாடல்களைக் குறைத்துவிட்டாய்; நான் உனக்கு எல்லாவற்றையும் தந்து கொண்டிருக்கிறேன், என் பணிகளை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன், ஆகவே, நீயும் அதையே உன் பரிசுத்த தோழரும், உன் மணவாளருமாகிய எனக்குச் செய்; நான் உன் அன்றாட செயல்பாடுகளை உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! என் வசுலா, உன் உதடுகள் எந்த வார்த்தையையாவது உச்சரிக்கும்படி திறக்கும்போது, அவை பரிசுத்த வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கட்டும், அவை ஜெபங்களை உச்சரிக்கட்டும்; இடைவிடாத ஜெபத்தில் இரு; ஆண்டவரே, இது எப்படிச் சாத்தியம்? நான் உனக்குச் சொல்வேன்; உன் மனநிலையும், உன் எண்ணங்களும், உன் விருப்பங்களும், உன் தியானங்களும், உன் சிந்தனைகளும், உன் ஊழியங்களும், உன் தேவைகளும் எல்லாமும்! அவை ஒரு ஜெபமாக இருக்கட்டும்; என் பிம்பமாக; உனக்குத் தரப்படும் ஒவ்வொரு வாய்ப்பும் உனக்குள் ஒரு பரிசுத்தத் தனத்தை, என்னால் உனக்குத் தரப்பட்டதும், ஆனால் அது எப்படிப் பயன்படுத்துவது என்று ஆன்மாக்கள் மறந்துவிட்டதுமான இந்தப் பரிசுத்தத் தனத்தை உனக்குள் உயிர் பெறச் செய்ய வேண்டும்; நான் இந்தக் கொடையை ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தந்திருக்கிறேன்; இப்போது உங்கள் அனைவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கிற இந்த வரப்பிரசாதத்திற்கு நான் உயிர் ஊட்டுவேன்; நான் பரிசுத்தத் தனத்தை நேசிக்கிறேன்; ஆண்டவரே, அப்போது நீர் உம் வரப்பிரசாதத்தைக் கொண்டு என்னைப் பரிசுத்தமாக்குவீரா? என் அன்பிற்குரியவளே, நான் உன்னைப் பரிசுத்தமாக்குவேன், ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவின் காரியத்திலும் இதுவே என் ஆசையாக இருக்கிறது; ஆண்டவராகிய நான் உனக்காக இந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; நீ மௌனத்தில் உன் கடவுளாகிய என்னை ஆராதிப்பாய்; குறிப்பு: கடவுள் எனக்குத் தியானத்தின் வரப்பிரசாதத்தைத் தந்திருக்கிறார். இதனுடன் நான் தனியாய் இருப்பது அவசியமாய் இருக்கிறது... நானும், எனக்காக வாழும் நீயும் தனிமைப்படுத்தப்பட்டு; என் படைப்பை இந்த மகிழ்ச்சியை அனுபவி, என்னை நேசி, என் படைப்பில் என்னைப் பார்; என் படைப்பை நேசி; வசுலா; இயேசு என்னைப் பார்த்தார். சற்று நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, அவர் தம்முடைய கரங்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார். தமது முழங்கைகளை முழங்கால்களின் மீது வைத்திருந்தார். அவருடைய கரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவருடைய திருமுகம் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய தலைமுடி நீளமாகவும், தொளதொளப்பாகவும், சிவப்புப் பிரதிபலிப்புகளோடு கூடிய மிக மெல்லிய செஸ்ட்நட் பழுப்பு நிறத்தோடும் இருக்கிறது. வசுலா? சொல்லும், ஆண்டவரே. உன் இதயத்தை எனக்குத் தா, நான் அதை என் திரு இதயத்தின் உள்ளாழங்களில் வைப்பேன்; என் திரு இதயத்திற்குள் பிரவேசி... இங்கு பிரவேசி; இயேசு தம் ஆட்காட்டி விரலால் தமது திரு இதயத்தைச் சுட்டிக்காட்டினார். ஓ, வா! நீ பிறந்ததிலிருந்தே நான் உன்னை எப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறேன்! நான் உனக்கென ஓரிடத்தை ஏற்பாடு செய்திருக்கிறேன், வசுலா! வசுலா! ஆண்டவரே, நான் என் இதயத்தை ஏற்கனவே உம்மிடம் தந்துவிட்டேன். என் வாழ்வு, முழுவதும் உம்முடையதே! ஆ, வசுலா, முயற்சி செய்து என் திரு சித்தத்தைப் பகுத்துணர்ந்துகொள்; என் இதயத் துடிப்புகளைக் கேள்; ஒவ்வொரு துடிப்பும் உனக்கான அழைப்பாக இருக்கிறது; நீ ஏன் என்னைத் தடுக்கிறாய்? ஆண்டவரே? நான்தான்; ஆண்டவரே, நான் உம் காதில் ஒரு காரியம் சொல்லட்டுமா? நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; இங்கே நான் இயேசுவிடம் ஒரு காரியத்தைச் சொன்னேன். என் திரு இதயத்திற்குள் புகுந்து, அங்கே இளைப்பாறு, இங்கே இயேசுவிடம் வேறொரு காரியத்தைப் பற்றிக் கேட்டேன். ஆம், அது அப்படியே இருக்கட்டும்; நான் உன்னை நேசிக்கிறேன்; ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். பிற்பாடு: சில குறிப்பிட்ட மனிதர்கள் புனித மாமரியைக் கடவுளின் தாய் என்று ஏற்க மறுக்கிறார்கள் என்பதில் நான் எப்போதும் மிக வருத்தமாக உணர்கிறேன். நான் இது பற்றி மிக அதிகமாகத் துயரப்பட்டு, அவர்களுக்காக அழுதேன். அவர்களைத் தேற்ற நான் விரும்பினேன். அப்போது சாத்தான் என்னைத் தாக்கினான். வசுலா, உன் கண்ணீர் துளிகளை சேமித்து வைத்துக்கொள், அந்த மறைசாட்சிகள் என்று சொல்லப்படுகிற எல்லோரையும் நான் வெறுக்கிறேன்...... போ! சாத்தானே போ! சாத்தானே, என் பின்னாலே போ! ...ஆண்டவராகிய இயேசுவா? நான்தான்; பசாசு உன்னையும், நான் உனக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த வழிகளையும் பசாசு எப்படி நிந்தித்து வெறிக்கிறது என்று அவ்வப்போது நான் உனக்குக் காட்டுவேன்; என் அன்னைக்காக நீ அன்போடு கண்ணீர் சிந்துகிறாய் என்றால், அது பசாசைக் கோப வெறிகொள்ளச் செய்கிறது; என் இல்லத்தில் வாழ்பவர்களும், உன் பரிசுத்த அன்னையைக் கடவுளின் தாய் என்றும், மோட்ச இராக்கினி என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தவர்களும் பேரு பெற்றவர்கள்; அன்பிற்குரியவளே, வா, நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; குறிப்பு: இயேசு எழுந்து நின்று என் தலைமீது தம் கரத்தை வைத்து என்னை ஆசீர்வதித்தார். என் வசுலா, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்; இயேசுவே, நான் உம்மை வாழ்த்துகிறேன். நான் அவருடைய பரிசுத்த தலையைத் தொட்டேன். எனக்குக் கற்பிப்பதற்காக உமக்கு நன்றி. வா, நினைவில் வை, நாம் பகிர்ந்து கொள்வோம்! நாங்கள், நாம்! குறிப்பு: ஓர் ஆசிரியரைப் போல தம் விரலை நீட்டியபடி, அவர் "நினைவில் வை" என்றார். ஆம், ஆண்டவரே, நாங்கள் நாம். மே 12, 1988 ஆண்டவரா? நான்தான்; வசுலா, சந்தேகப்படாதே; அனைத்தும் என்னிடமிருந்தே வருகிறது; எழுது; இயேசு அவருடைய பிரசன்னத்தில் நான் உணரும் அதிர்வைக் குறிப்பிடுகிறார். இயேசு மீண்டும் எனக்குத் தாம் சிலுவையில் அறையப்பட்ட காட்சிகளைத் தந்தார், எப்படித் தமது ஒவ்வொரு துளி இரத்தத்தையும் அவர் நமக்காக பூமியின் மீது சிந்தினார் என்பதை எனக்குக் காட்டினார். அவர் சிலுவையின் மீது தமது மரண அவஸ்தையின் திருமுகத்தை எனக்குக் காட்டினார், அது புண்பட்டும், கறுத்தும், நீலம் பாரித்தும், வியர்வையாலும், இரத்தத்தாலும் மூடப்பட்டும் இருந்தது, அவருடைய தலைமுடி இரத்தத்தால் கற்றைகளாக ஒட்டிக் கொண்டிருந்தது. அவருடைய கண்கள், அவருடைய ஊடுருவப்பட்ட நெற்றியிலிருந்து வடியும், அவரது இரத்தத்தால் நிறைந்திருந்தன. இதெல்லாம் எனக்காக, நமக்காக. பலிபீடமே! என் திருச்சபை முழுமை பெறுவதற்காக, உன் தீச்சுவாலை எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்! சேர்ந்து வாருங்கள்; என் பிரசன்னத்தை உணருங்கள்; மே 16, 1988 இயேசுவா? நான்தான்; வா, என் போதனைகளை உன் மனதில் வைத்துக்கொள்; நான் உன் தெய்வீக ஆசிரியராக, நீ எழுத வேண்டியவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; வசுலா, இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில், மனிதருக்கும் மிகவும் மறைபொருளானவையும், அவர்களால் ஆழம் காண முடியாதவையுமான என் தெய்வீகப் பணிகளில் பலவற்றை நான் உனக்குக் கற்பித்திருக்கிறேன்; என் குழந்தாய், இந்தத் தெய்வீகப் பணிகள் மனித புத்திக்கு எட்டாதவை; பல ஆன்மாக்கள் என் பணிகளோடு ஒத்துழைப்பதில்லை, ஏனெனில் இந்த ஆன்மாக்கள் அரிதாகத்தான் மாற விரும்புகின்றன; ஆண்டவரே, "மாற்றம்" என்று எதைக் குறிப்பிடுகிறீர்? இந்த ஆன்மாக்கள் உலகத்திலும், உலகத்தன்மையான காரியங்களிலும் பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தங்களை ஆன்ம தன்மை உள்ளவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், குறிப்பு: ஒன்று கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 14 ஆம் வசனம். ஆன்ம தன்மையற்ற மனிதன் யாரெனில் கடவுளின் ஆவியைச் சேர்ந்த எதையும் ஏற்றுக் கொள்ளாதவனே; அவன் அனைத்தையும் அபத்தமானதாகக் காண்கிறான்..... கடவுளின் இயல்புக்கு மேற்பட்ட இரக்கச் செயல்கள் அனைத்தையும் மறுதலிப்பவன் ஆன்ம தன்மை உள்ளவனாக இருக்க முடியாது. தங்கள் சரீரக் கண்களால் காண்பவையும், தங்கள் உடலால் தொடுபவையுமான காரியங்களோடு அவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால், அவர்கள் ஆன்ம தன்மை உள்ளவர்களாக இல்லை; அவர்கள் பிடிவாதம் உள்ளவர்கள், ஞான சுறுசுறுப்பற்ற வாழ்வு நடத்துபவர்கள்; அவர்களுடைய இதயங்களுக்குள் நான் என் தெய்வீகத்தை ஊற்ற அனுமதிக்கும்படி அவை திறக்காது; குறிப்பு: நம் பரிசுத்த அன்னையின் காட்சிகளின் மீது போர்ப் பிரகடனம் செய்த கரபந்தால், மெட்யுகோரே ஆயர்களைப் போன்ற குருத்துவ ஆன்மாக்கள். ஆம், என் ஒளியில் தங்கியிராதபடி அவர்களைத் தடுக்கிற பல அம்சங்கள் உள்ளன; நான் பின்வரும் மிக முக்கியமான வார்த்தைகளை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், இனியும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பேன்; 'இறையரசை ஒரு சிறு குழந்தையைப் போல் ஏற்றுக் கொள்ளாதவன், அதில் நுழைய மாட்டான்;' மாசற்றவராக இருங்கள்; குழந்தைக்குரிய விசுவாசத்தோடு விசுவாசியுங்கள், அப்போது என் தெய்வீக ஒளி உங்களைச் சூழ்ந்து கொள்ளும், நீங்கள் ஒரு மலரைப் போல சூரியனை எதிர்கொண்டு திறந்து, என் ஒளி உங்களில் பொழியப்பட அனுமதிப்பீர்கள்; என் பிரியமுள்ள குழந்தைகளே, நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; குறிப்பு: மனித இயல்புக்கு மேற்பட்ட அணுகுதல்கள் எதைக் கண்டும் நாம் வியப்படையக்கூடாது. அவை தேவதைக் கதைகள் அல்ல. நான் முடிவற்ற விதமாக உங்களை நேசிக்கிறேன்; இயேசுவே, நீர் எங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்டே இருப்பீரா? நான் சொல்ல வேண்டியிருப்பதெல்லாம் எழுதப்படும்; நான் எப்போதும் உங்கள் அருகிலிருந்து, உங்களை நேசித்துக் கொண்டும், உங்களுக்குக் கற்பித்துக் கொண்டும் இருக்கிறேன்; கேட்க செவியுள்ளவர்கள், கேட்கட்டும்; இந்தக் கருவியின் மூலமாக என்னையே வெளிப்படுத்துபவர் உங்கள் ஆண்டவராகிய இயேசுவாகிய நான்தான்; நான் ஒருபோதும் உங்களைக் கைவிட்டதில்லை; இயேசு என்னைப் பார்த்தார். வசுலா, நீ முன்னேற, நான் உனக்குக் கற்பிப்பேன்; பிற்பாடு: இயேசுவா? நான்தான்; பரிசுத்த வேதாகமத்தை இன்னும் புரிந்து கொள்ளாதவர்களும், அதன் மிக அநேக பகுதிகளுக்குத் தவறாக அர்த்தம் கற்பிப்பவர்களுமாகிய எல்லா ஆன்மாக்களுக்காகவும் ஜெபி; அவர்கள் உங்களுக்கு ஞான வெளிச்சம் தரக்கூடிய வேதாகமப் பகுதிகளை முழுமையாக வெட்டி அகற்றி விடுகிறார்கள், உங்களை ஒளிர்விக்கக்கூடிய வளமிக்க அம்சங்களை அழித்து விடுகிறார்கள்; கேட்டு புரிந்து கொள்ள முயலுங்கள்; ஒரு காலத்தில் விதைப்பவன் ஒருவன் ஒரு மிகப்பெரிய வயலை விதைப்புக்கு ஆயத்தம் செய்தான்; அவன் மிகச்சிறந்த கோதுமையை அறுவடை செய்ய விரும்பி, மிகச்சிறந்த தானியத்தை விதைப்பதற்குத் தேர்ந்து கொண்டான்! தானியம் முற்றி அறுவடைக்குத் தயாரான போது-- அது எப்படிப்பட்ட செழிப்பான அறுவடையாக இருந்தது-- அவனது எதிரி காக்கைக் கூட்டம் ஒன்றை அவனுடைய வயலின் மீது பறக்கும்படி அனுப்பினான்; கடின உழைப்போடும், மிகுந்த அன்போடும், பரித்தியாகத்தோடும் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த வயல், நாடு முழுவதற்கும் உணவளிக்கக் கூடியதும், யாரையும் பசியாக இருக்க விடாததுமாகிய அறுவடைக்குத் தயாராய் இருந்த செழிப்பான அறுவடை! ஆனால், அவனது எதிரியால் அனுப்பப்பட்ட காகங்கள் அங்கும் இங்குமாக அறுவடைக்கான பயிரைப் பிடுங்கத் தொடங்கின, தங்களால் இயன்றவரை பயிரை விழுங்கின, சூறையாடின; விதைப்பவன் இதையெல்லாம் கண்டு, இந்தக் காகங்களை விரட்டும்படி தன் வேலையாட்களை அனுப்பியிராவிட்டால், அவை ஒட்டுமொத்த அறுவடையையும் நாசமாக்கி இருக்கும்; ஆண்டவரே, இப்போது இதை தயவுசெய்து விளக்கிச் சொல்வீரா? வா, விதைப்பவன் ஆண்டவராகிய நான்தான், அறுவடை, என் வார்த்தை, எதிரி, சாத்தான்; காகங்கள், சாத்தானால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள், இவை பல ஆண்டுகளாக, அவ்வப்போது என் வார்த்தையிலிருந்து முக்கியமான அம்சங்களைத் தின்று அழித்து வந்தன; ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகிய நான், அந்தக் காணாமல் போன அம்சங்களுக்கு, அவ்வப்போது உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்; நான் என் திருச்சபையை அழகுபடுத்தி, அதைச் சரி செய்வேன்; படைப்பே, நான் உன்னை நேசிக்கிறேன்; என் திருச்சபை முழுவதும் புதுப்பிக்கப்படும்; உங்களுக்கு திருப்பித் தரப்படுகிற வேதாகமப் பகுதிகள், அதை அலங்கரித்து முழுமைப்படுத்தும், ஆனால், முதலில் நான் இராயப்பனுக்கு, என் - ஆட்டுக்குட்டிகளின்- இராயப்பனுக்கு, முடிசூட்டுவேன்; நான் இந்தப் பெயரை அவருக்குத் தந்திருக்கிறேன், அவர் அதை எப்போதும் வைத்துக் கொள்வார்; நான் பூமியில் இருந்தபோது செய்தது போல, என் தேவாலயத்தில் நுழைந்து, என் நேர்மையின் இடைவாரால், அந்தப் போலிப் போதகர்கள் அனைவரையும் அடித்து விரட்டுவேன்; நான் வலிமையோடு உள்ளே நுழைந்து, பணத்தை ஆராதிப்போர் அனைவரையும் அப்புறப்படுத்துவேன்; புதிய ஜெருசலேம் ஒளியைக் காணத் தொடங்க இயலும்படியாக, நான் ஜெருசலேமுக்குள் நுழைவேன்; நான் அந்தத் தடைகளைப் பெருக்கித் தள்ளி, வழியைத் திறந்து வைப்பேன்; என் வசுலா, இது என் திருச்சபையின் பெரும் வெற்றியாக அறியப்படும்; அதன்பின், நான் ஒரு இருப்புச் செங்கோலை இராயப்பரின் கரங்களுக்குள் வைப்பேன், அவர் அதைக் கொண்டு என் ஆடுகளைப் பாதுகாப்பார்; அறியாதவர்களும், நமக்கு ஏன் ஒரு வழிகாட்டி தேவை? என்று இன்னும் கூட தங்களையே கேட்டுக்கொள்பவர்களுமாகிய மனிதர்களே, நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்; ஆயன் இல்லாத எந்த ஒரு ஆட்டு மந்தையையும் நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா அல்லது அறிந்திருக்கிறீர்களா? நான் உங்கள் விண்ணக மேய்ப்பராக இருக்கிறேன், நான் திரும்பி வரும் வரையில், என் ஆடுகளைக் கண்காணித்துக் கொள்ளும்படி, நான் இராயப்பரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; அவருக்குப் பொறுப்பைத் தந்திருக்கிறேன், அப்படி இருக்க, ஏன் இந்த சச்சரவுகள், இந்த எல்லாப் பயனற்ற வாதங்களும் எதற்காக? என் வார்த்தைகளை இன்னும் அறியாதிருக்கிற அனைவருக்கும், நீங்கள் வேதாகமங்களில் உள்ள அவற்றை வாசிக்கும்படி நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவை என் சீடனாகிய அருளப்பனின் சாட்சியத்தில் காணப்பட வேண்டும். குறிப்பு: அருளப்பர் 21 ஆம் அதிகாரம், வசனங்கள் 15 முதல் 17 வரை. அதன்பின், நான் என் திருச்சபையை ஒன்றிணைத்து, என் கரங்களைக் கொண்டு, அவற்றை ஒரே ஆட்டுப்பட்டியாக வளைத்துக் கொள்வேன்; இன்றோ, நீங்கள் மிக அநேக சபைகளை, பிளவுபட்ட பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு, எல்லோரும் சிதறிக் கிடக்கிறீர்கள்; என் திருவுடலை நீங்கள் துண்டு துண்டாகச் சிதைத்து விட்டீர்கள், இது இப்படி இருக்க முடியாது! குறிப்பு: இயேசு இந்த இடத்தில் மிக உறுதியாகப் பேசினார். நான் உங்கள் அனைவரையும் ஒன்றிணைப்பேன்; இயேசு இங்கே ரோம கத்தோலிக்கர்களையும், ஆர்த்தடாக்ஸ் மற்றும் ப்ரோடெஸ்டன்ட் சபையினரையும் மட்டுமின்றி, இவற்றிற்கு அப்பாற்பட்ட சபைகளையும், பிரிவுகளையும் கூட ஒன்று சேர்ப்பது பற்றிக் குறிப்பிடுகிறார். ஆண்டவர் இராயப்பரின் கீழ் நம்மை அழைப்பார். இதயத்தில் ஓர் ஒன்றிப்பு. அதன்பின், நானும் இராயப்பரும் சேர்ந்து வேலை செய்வோம்; நான் என் மறை தத்துவங்களை அவருக்குக் காட்டுவேன், நான் என் பரம இரகசியங்களை என் குழந்தைகளுக்குக் கற்பிக்க, அவருக்கு உதவும்படி, நான் அவற்றில் பலவற்றை அவருக்குக் காட்டுவேன், இந்தப் போதகத்தின் கீழ், நீங்கள் ஒரு புதிய விண்ணகத்தையும், ஒரு புதிய பூமியையும் காண்பீர்கள்; ஆண்டவராகிய நான், என் தேவாலயத்தின் மதில்களைப் புதுப்பிப்பேன்; ஆ, வசுலா, சரி செய்யப்பட வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது! உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி; சரி, ஆண்டவரே. சரி, ஆண்டவரே, தயவுசெய்து தேவையான பலத்தை எனக்குத் தாரும், ஆமென். என் விரல் என் பலிபீடத்தைப் பற்றி எரியச் செய்யும்படி, உன் இதயத்தின் மீது இருப்பதாக; இறைவனாகிய நான், உன் பூரண வெறுமையையும் மீறி, உன்னை நேசிக்கிறேன்; நீ உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலை, நான் எதற்காக உன்னை அனுப்பி இருக்கிறேனோ, அந்த அலுவலைச் செய்து முடிக்க, உனக்குத் தேவையான பலத்தை நான் உனக்குத் தருவேன்; அதைரியப்படாதே, பொறுமையாய் இரு; விரைவில், நீ என்னிடம், எங்களிடம், வீட்டுக்குத் திரும்பி வருவாய்; குறிப்பு: புனித மாமரியும் இயேசுவோடு இருந்தார்கள். எனக்கு 10 வயது ஆகி இருந்தபோது, நான் கண்ட காட்சியை அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்கள்; எங்கள் சமாதானத்தை பெற்றுக்கொள்; என் திருச்சபை உட்பட இருக்கிற புதுப்பித்தலுக்காக ஜெபி; ஆண்டவராகிய நான், உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்; நாங்கள், நாம்! ஆம், ஆண்டவரே, என்றென்றும் வா;