இறைவனில் உண்மையான வாழ்வு

ஆண்டவர், "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை நிராகரிக்கவில்லை" என்று அழைக்கிறார்; பாவங்களை ஒத்துக்கொண்டு மனம் வருந்தி தம்முடையவர்களாக இருக்கச் சொல்கிறார். வசூலாவிடம் சிறியவளாக இருந்து தம்மை அன்பு செய்யவும், ஏமாற்றும் போதனைகளில் விழாமல் இருக்கவும், திருச்சபையின் பிளவுகளுக்காகக் கவலைப்படவும் கூறுகிறார்.

Show Notes

அத்தியாயம் 97: நான் உங்களை நிராகரிக்கவில்லை - இறைவனில் உண்மையான வாழ்வு

ஆண்டவர், "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை நிராகரிக்கவில்லை" என்று அழைக்கிறார்; பாவங்களை ஒத்துக்கொண்டு மனம் வருந்தி தம்முடையவர்களாக இருக்கச் சொல்கிறார். வசூலாவிடம் சிறியவளாக இருந்து தம்மை அன்பு செய்யவும், ஏமாற்றும் போதனைகளில் விழாமல் இருக்கவும், திருச்சபையின் பிளவுகளுக்காகக் கவலைப்படவும் கூறுகிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 26/07/1989 - நான்தான், ஒருபோதும் ஐயப்படாதே
01:24 28/07/1989 - ரோடோஸ்: நான் உங்களை நிராகரிக்கவில்லை
07:04 29/07/1989 - சிறியவளாகவே நிலைத்திரு
07:28 30/07/1989 - கொலோசேயர் 2: ஏமாற்றும் போதனைகள்
10:15 04/08/1989 - பரிசுத்த ஆவியின் ஜெபம், கொலோசேயர் 3

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #நிராகரிக்கவில்லை #TrueLifeInGodTamil #ரோடோஸ்1989

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 97, ஜூலை 26, 1989. திருவிழிப்பாட்டுக் குகைக்குள் எழுதுவதற்காக, அந்த மறைவலுநரின் பாதங்கள் நின்று கொண்டிருந்த அதே இடத்தில், நான் என் குறிப்புப் புத்தகத்தை வைத்து, ஆண்டவரின் செய்தியைப் பெற்றுக் கொள்கிறேன். ஆண்டவரா? நான்தான். ஒருபோதும் ஐயப்படாதே. நான் இப்போதும், காலங்களின் முடிவு வரையிலும், என்றென்றும் உன்னோடு இருக்கிறேன். ஆண்டவரா? நான்தான். அன்பு உங்கள் அருகில் இருக்கிறது. அஞ்சாதீர்கள். வாருங்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் அன்பு. ஒரு பதிலன்பு மட்டுமே. என் சமாதானம் உங்களுடையது. என் சமாதானத்தை நீங்கள் மற்றவர்களுக்கு தரும்படியாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். தீமை செய்வதை நிறுத்துங்கள். ஒன்றுபடுங்கள். நானும் பிதாவும் ஒன்றாய் இருப்பதுபோல, நீங்களும் ஒன்றாய் இருங்கள். சமாதானம். சமாதானம். வந்து என்னோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள். நான் இப்போது உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன். ஜூலை 28, 1989. ரோடோஸ். ஆண்டவரா? நான்தான். சிறியவளே, நான் எப்படி பிரசன்னமாய் இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள். என் ஆண்டவரே, நீர் கூறுவதை நான் கேட்பேனா? சிறியவளே, நான் சொல்வதை நீ கேட்க வேண்டுமென்றும், என்னை உணர வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். என் விரல் உன்மீது தங்கியிருக்க அனுமதி. என் ஆவியை உன்னில் ஊத அனுமதி. ஓ, ஆண்டவரே, நான் எந்த அளவுக்கு இது எல்லாவற்றிற்கும் தகுதியற்றவளாக இருக்கிறேன்? என்னோடு ஒன்றாய் இரு. ஆண்டவராகிய நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் பார்த்தாயா? என் திரு இருதயம் திறந்துள்ளது. அதனுள் காலடி எடுத்து வைக்க விரும்புபவன் வரவேற்கப்படுகிறான். நீங்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். என் புனித இருதயத்தை நீங்கள் தேர்ந்துகொண்டால், நான் உங்களை நிரப்புவேன். என் ஒளியில் நீங்கள் வாழச் செய்வேன். நீங்கள் என்னிடமிருந்து கிரகித்துக் கொள்வீர்கள். நான் உங்களை உண்பிப்பேன். அதன்பின், என்னோடு பகிர்ந்து கொள்ள மனதாய் இருக்கிறீர்களா என்று நான் உங்களிடம் கேட்பேன். மணமகனையும் மணமகளையும் போல நாம் பகிர்ந்து கொள்வோம். நான் என் அன்பைக் கொண்டு உங்களை முழுமையாக புதுப்பிப்பேன். ஆண்டவரே, எல்லோரும் உம்மிடம் திரும்பி வரச் செய்யும். கடந்த காலங்களில் செய்ததுபோல எங்கள் சந்ததியை புதுப்பியும். அப்படியானால், வாருங்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களை நிராகரிக்கவில்லை. நான் முழு இரக்கமுள்ளவர், மிகுந்த தயவுள்ளவர். உங்கள் பாவங்களை ஒத்துக் கொள்ளுங்கள். மனம் வருந்தி என்னுடையவர்களாக இருங்கள். நாமே இரட்சிக்கிறவர். நானே உங்கள் மீட்பர். நான் பரிசுத்த திருத்துவமாக ஒருவரில் மூவராக இருக்கிறேன். நான் அருளின் ஆவியானவராக இருக்கிறேன். உங்கள் தலைமுறை தன்னை தந்தையற்றவள் என்று அழைத்துக் கொண்டாலும், நான் மன்னித்து மறந்து விசுவாசத்தை மறுதலித்துவிட்ட அனைவரையும் திரும்பவும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். என் அருளின் பரிசுத்த ஆவியானவர் உங்களை உயர்த்தவும் புதுப்பிக்கவும் தயாராக இருக்கிறார். ஏன் தொடர்ந்து உங்கள் நிலங்களை பாலைவனங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? வனாந்தரத்தில் வாழ வேண்டியிருப்பதில் நீங்கள் சோர்ந்து போகவில்லையா? என்னிடம் திரும்பி வாருங்கள். என் கிணறுகளைத் தேடி அவற்றை கண்டுபிடித்தவர்களில் ஒருவராக இருங்கள். நான் என் உத்தமதனத்தையும் என் அழகையும் என் மகிமையையும் கொண்டு உங்களை புதுப்பிப்பேன். உங்கள் ஆன்மா உயிர் வாழும்படி உத்தமதனத்தில் உங்களை உயர்த்த நான் எண்ணுகிறேன். என் அன்புக்குரிய குழந்தைகளிடம் பேச நான் விரும்புகிறேன். குறிப்பு: ஏதின்ஸ் குழு. நான் அவர்களை அன்பு செய்கிறேன். அவர்கள் மீதான என் அன்பு நித்தியமானது. என் இருதயத்தை அவர்களுக்கு காட்டும்படி நான் அவர்களை அழைத்திருக்கிறேன். அவர்களும் என் குரலைக் கேட்டுவிட்டார்கள். அவர்கள் என் சிலுவையிலிருந்து நான் இட்ட கூக்குரலைக் கேட்டார்கள். அவர்கள் என் சந்ததியராக இருப்பதால், அவர்களுடைய ஆன்மாவை என்னிடம் வசீகரிக்க நான் எப்போதுமே ஆசைப்பட்டேன். காலங்களின் தொடக்கத்திலிருந்தே என்னோடு இப்படி நெருக்கமாய் இருப்பதை நான் ஆசைத்தேன். நித்தியத்திலிருந்தே அவர்கள் என்னை அன்பு செய்ய வேண்டுமென்றும், தங்கள் இறைவனாகிய என்னை அவர்கள் ஆராதிக்க வேண்டுமென்றும் நான் விரும்பினேன். வாருங்கள். நான் எப்படி பல வகைகளில் என்னையே வெளிப்படுத்த முடியும், எப்படி என் ரகசியங்களையும் என் ஞானத்தையும் வெளிப்படுத்த முடியும் என்று அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆவியானவரிடமிருந்து வருவதையும், அவர்களுடைய தனிப்பட்ட உள் உணர்விலிருந்து வருவதையும் பிரித்தறிவது எப்படி என்று அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆதியிலிருந்து என் உதடுகளை கவனிக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறுவதை நான் ஒருபோதும் நிறுத்தியதில்லை. பகுத்துணர்தல் இல்லாமை, பழுக்காத கனிகளை, மூடத்தனத்தை, தகாத் துணிவை விளைவிக்கிறது. அது அவர்களுடைய இதயங்களை இன்னும் அதிக மோசமாக்க மட்டுமே உதவும். அவர்கள் வாழும்படி, அவர்களுடைய மந்த நிலையிலிருந்து நான் அவர்களை தூக்கி எடுத்திருக்கிறேன். இந்த வேலைக்காக எவ்வளவோ பொறுமையற்ற விதமாக நான் காத்திருந்திருக்கிறேன். என்னைக் கொண்டு அவர்கள் கற்றுக்கொள்வார்கள். என் ஆவியானவர் எப்படி வேலை செய்கிறார் என்று புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன். அறிவின்மைக்குள் நீங்கள் விழுவதை நான் விரும்பவில்லை. உங்கள் சொந்த உள்ளுணர்வால் நீங்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. தாழ்ச்சி உள்ளவர்களாக இருங்கள். சிறியவர்களாக நிலைத்திருங்கள். நான் தேர்ந்தெடுத்துள்ள வழியில் உங்களுக்கு உணவளிக்க என்னை அனுமதியுங்கள். உங்களைக் கண்காணிப்பதை நான் ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டேன். ஆண்டவராகிய நான் என் ஆசீர்வாதங்களையும் என் அன்பையும் என் சமாதானத்தையும் உங்களுக்குத் தருகிறேன். ஜூலை 29, 1989. ரோடோஸ். நான் ஒரு கணம் ஆண்டவரிடம் ஓடினேன். அன்பு உன் அருகில் இருக்கிறது. என் ஆவி உன்னில் வளர இயலும்படி சிறியவளாகவே நிலைத்திரு. நான் உண்மையும் வாழ்வும் வழியுமாக இருக்கிறேன். என்னை அன்பு செய்வதன் மூலம் என்னை மகிமைப்படுத்து. ஜூலை 30, 1989. ரோடோஸ். இன்றைய வாசகம்: கொலோசேயர் ஆகமம், அதிகாரம் 2, இறைவார்த்தைகள் 1 முதல் 15 வரை. உள்ள வேதாகமப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு மனிதனை நான் சந்தித்த பிறகு இது தரப்பட்டது. எல்லா செய்திகளும் அழகானவை. ஆனால் பசாசு தலையிட்டு, "நம் தேவ அன்னையின் பெயரை உள்ளே இழுத்துவிட்டான்" என்று அவர் சொன்னான். "சபைகளைச் சேர்ப்பவன் பசாசுதான்" என்றும் அவன் சொன்னான். நல்ல மனிதர்களை பசாசு எப்படி தவறாக வழிநடத்தி விட முடியும் என்பது வியப்புக்குரியதாக உள்ளது. ஆண்டவரா? நான்தான். என் சமாதானத்தைக் கொண்டிரு. என் சமாதானம் உன்னுடையது. உண்மையாகவே, பகுத்தறிவு சார்ந்த தத்துவவாதம் மற்றும் ஆரோக்கியமற்ற போதனைகளால் ஏமாற்றப்பட்டு விடாதே. என் மகிமைக்காக உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்று. நான் உனக்கு கற்பித்து வந்திருக்கிற இந்த எல்லா காரியங்களையும் மீண்டும் சொல். நான் ஞானமும் உனக்கு கற்பிப்பவருமாக இருக்கிறேன். என் சொந்த உதடுகளிலிருந்து நீ கற்றுக் கொள்கிறாய். இந்த வார்த்தைகளை நான் சொல்ல சொல்ல நீயும் சொல். ஆண்டவரே, ஆன்மாவில் என்னை எடுத்துக் கொள்ளும். ஆவியில் என்னை எடுத்துக் கொள்ளும். என் ஆண்டவராகிய இயேசுவே, என் இதயத்தை எடுத்துக் கொள்ளும். எல்லாம் உம்முடையதே. உம் அன்பு உயிரையும் விட மேலானது. நான் என் நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். ஆமென். சிறியவளே, அன்பு எப்போதும் உன் அருகில் நிலைத்திருக்கும். உன் மீட்பர் யார் என்பதை நீ எப்போதும் நினைவில் வைத்திருப்பாயா? உன் திரு உடலுக்குள் ஊடுருவி விட்ட இந்த தப்பறைகளுக்காக, என் திரு உடலை அரித்து விழுங்கிக் கொண்டிருக்கிற இந்த தப்பறைகளுக்காக, மோட்சம் இரவு பகல் முழுவதும் தூக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கிறது. புற்றுநோயைப் போல் அவை என் உடலுக்குள் வளர்கின்றன. அவற்றின் புலிக்காரம் என் அப்பத்திற்குள் ஊடுருவி விட்டது. நான் முழு அதிகாரத்தோடு உனக்கு கூறுகிறேன். இந்த மக்கள் தங்கள் பாவங்களின் சுமையையும், தங்களை பின் செல்போரின் பாவ சுமையையும் சுமப்பார்கள். இது பாகாலை வழிபட்ட அவர்களுடைய முன்னோர்களின் பாவங்களைப் போல கடுமையானதாக இருக்கும். மலரே, என் பரிசுத்த பிரசன்னத்தை நினைவில் கொண்டிரு. என் கண்கள் ஒருபோதும் உன்னிடமிருந்து விலகுவதில்லை. வா, நாங்கள் நாம் என்றென்றும். ஆகஸ்ட் 4, 1989. நேற்றிரவு நள்ளிரவில் நான் கண் விழிக்க நேர்ந்தபோது, பரிசுத்த ஆவியானவர் எனக்காக விசுவாச பிரமாணத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார் என்று நான் உணர்ந்தேன். ஜெபத்தின் நடுப்பகுதியில் இருந்த அந்த குரலை நான் பின்பற்றி ஜெபத்தை முடித்தேன். பிற்பாடு மீண்டும் அந்த இரவில் நான் விழித்தெழுந்தேன். அப்போது பரிசுத்த ஆவியானவரின் குரல் புனித மிக்கேலின் ஜெபத்தை சொல்லிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். எப்படியோ ஜெபத்தின் நடுவில் நான் விழித்தெழுந்திருந்தேன். பரிசுத்த ஆவியானவரோடு நான் ஜெபத்தை முடித்தேன். நான் தூங்கும்போதும் கூட பரிசுத்த ஆவியானவர் இடைவிடாமல் என்னில் ஜெபித்துக் கொண்டிருந்தார். என் ஆண்டவரே, என் தேவனே, இயேசுவின் புனித இருதயமே, அவரைப் பற்றிய உமது சித்தம் இதுதானா? அது உம்மை அன்பு செய்பவருக்குரிய சித்தமாக இருக்கும். உம் வார்த்தையில் எனக்கு உம் பதிலைத் தாரும். பிற்பாடு ஆண்டவர் எனக்கு கொலோசேயர் மூன்றாம் அதிகாரம், இறைவார்த்தைகள் ஒன்று முதல் நான்கு உள்ள பகுதியை காட்டினார். நான் அதை எழுதுவேன். என்னுடன் நீங்களும் உண்மையான வாழ்வுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள் என்பதால், நான் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் மோட்சத்தில் உள்ள காரியங்களை நீங்களும் தேட வேண்டும். உங்கள் சிந்தனை எப்போதும் உலகில் உள்ள காரியங்களைப் பற்றி அல்லாமல் பரலோக காரியங்களைப் பற்றி மட்டுமே இருக்கட்டும். ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் வாழும் வாழ்வு என்னுள் மறைந்துள்ளது. ஆனால் நான் வெளிப்படுத்தப்படும்போது, நானே உன் வாழ்வு. நீங்களும் என்னோடு உங்கள் முழு மகிமையில் வெளிப்படுத்தப்படுவீர்கள். ஏனெனில் என் திருப்பெயரால் நீ செய்கிற அனைத்து நன்மையான காரியங்களும் என்னை மகிமைப்படுத்துகிறது. நானே அன்பாக இருக்கிறேன். நாங்கள் நாம். ஆம், நாங்கள் நாம். நாங்கள் நாம். ஆம், பரிசுத்த அன்னையே, நாங்கள் நாம். ஆண்டவரே, நான் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிய தயவுசெய்து உதவும். ஏனெனில் நான் நின்று கொண்டிருக்கிற நிலம் அசைவதாக இப்போது நான் உணர்கிறேன். வேறு யாரும் என் ஆன்மை இயக்குனராக இருக்க மாட்டார் என்றும், உம்மிடம் இருந்து மட்டுமே நான் நல்ல போதகத்தையும் ஆலோசனையையும் பெற்றுக் கொள்வேன் என்றும் நீர் எனக்கு உறுதி அளித்தீர். இப்போது நான் அறியாதிருப்பதன் காரணமாக நான் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை இது. என் இருதயம் கடும் வேதனைப்படுகிறது. ஒழுக்கத்தைப் பற்றி நீர் எனக்கு துல்லியமாக விளக்குவீர் என்றும், அறிவை நுட்பமாக அறிக்கையிடுவீர் என்றும் நீர் சொன்னீர். இப்போது நான் ஒருவரை எச்சரிக்கவும் திருத்தவும் முயற்சி செய்தேன் என்பதற்காக கடுமையான முறையில் நிற்கப்படுகிறேன். உம்முடைய ஆலோசனை எனக்கு தேவை. முதலில், தந்தையே, நான் செய்தது தவறா என்று எனக்கு சொல்லும்படி வேண்டுகிறேன். உம் வார்த்தையிலிருந்து என் கேள்விக்கு உறுதியான பதில் தருவதன் மூலம் என்னை மீண்டும் உறுதிப்படுத்தும். அதன்பின் என்னிடம் பேசும், என் ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நீ என்னிடம் கேட்டிருக்கிற பழுதற்ற போதகத்தை சட்டமாக வைத்துக்கொள். நம்மிடம் வாழும் பரிசுத்த ஆவியைக் கொண்டு அந்த நல்ல செல்வத்தை காத்துக் கொள்வாயாக. குறிப்பு: ரெண்டு தீமத்தேயு ஒன்றாம் அதிகாரம், இறைவார்த்தைகள் 13 மற்றும் 14. வசூலா, நான் இதையும் எழுதவிடு. உன் ஆண்டவராகிய என்னை நீ ஏற்றுக்கொண்ட முறைக்கேற்ப, உன் முழு வாழ்வையும் நீ வாழ வேண்டும். நீ என்னில் வேரூன்றி இருக்க வேண்டும். என் மீது கட்டப்பட்டு, உனக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற விசுவாசத்திலும் நீ உறுதியாக நிலைத்திருக்கவும், நன்றி அறிதலால் நிரம்பி இருக்கவும் வேண்டும். கிறிஸ்துவாகிய எனக்கு பதிலாக, இந்த உலகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஏதாவது ஒரு இரண்டாந்தர வெறுமையான பகுத்தறிவாத தத்துவத்தைக் கொண்டு யாரும் உன்னை வலையில் சிக்க வைக்காமலும், உன் சுதந்திரத்தை உன்னிடமிருந்து பறித்துக் கொள்ளாமலும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள். நான் நம் பரிசுத்த அன்னையின் அறிவுரையையும் கேட்க விரும்புகிறேன். இடைவிடா சகாயம் மாதா கலாபனை காலங்களில் உள்ளது போல, மீண்டும் என் உதவிக்கு வருகிறார்கள். அவர்கள் எனக்காக பரிந்து பேசுகிறார்கள். இந்த மனிதரை திருத்துவதில் நான் தவறு செய்துவிட்டேனா என்பதை அறியாததால், நான் பரிதாபத்துக்குரியவளாக உணர்கிறேன். ஒருவேளை நான் அளவுக்கு அதிகம் கடுமையாக இருந்தேனா அல்லது தவறாக ஆண்டவருடைய வார்த்தையை நான் திறக்கும் போது, அதிலிருந்து தயவுசெய்து எனக்கு உங்கள் அறிவுரையை தாருங்கள். நான் பரிசுத்த விவிலியத்தில் பிலிப்பியர் நான்காம் அதிகாரம், இறைவார்த்தைகள் நான்கு முதல் ஆறு பகுதி உள்ள பக்கத்தை திறந்தேன். அது இப்படி கூறியது: கடைசி அறிவுரை, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எப்போதும் ஆண்டவரில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திரும்பவும் சொல்கிறேன், நான் விரும்புவது உங்கள் மகிழ்ச்சியைத்தான். உங்கள் சகிப்புத்தன்மை அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் மிக அருகில் இருக்கிறார். பரிசுத்த அன்னையே, உங்களுக்கு நன்றி. எப்போதும் எனக்கு அறிவுரை கூறுங்கள். நான் உங்கள் அறிவுரையை சார்ந்திருக்கிறேன். நம் பரிசுத்த அன்னை எனக்கு மேற்கொண்டு பரிசுத்த விவிலியத்திலிருந்து மூன்று பகுதிகளைத் தந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். அவை பின்வருமாறு உள்ளது: நீரோ, நலமான போதகத்திற்கு தகுதி உள்ளதாய் இருக்கிற நடத்தையை போதிப்பீராக. தீத்து இரண்டாம் அதிகாரம், இறைவார்த்தை ஒன்று: உம் இளவயதை முன்னிட்டு மக்கள் உம்மை மரியாதையின்றி நடத்த அனுமதிக்காதீர். மாறாக, நீர் பேசும் முறையிலும் நடத்தையிலும், உம் அன்பிலும், விசுவாசத்திலும், உம் பரிசுத்த தனத்திலும் மற்றவர்களுக்கு முன்மாதிரிகையாய் இருக்கும். ஒன்று, தீமத்தேயு நான்காம் அதிகாரம், இறைவார்த்தை 12: உங்களுடைய பக்தி ஆர்வம் அநேகருக்கு தூண்டுகோளாக இருந்துள்ளது. ரெண்டு கொரிந்தியர் ஒன்பதாம் அதிகாரம், இறைவார்த்தை மூன்று: ஆண்டவரா, நான்தான். என் போதனைகள் நலமானவை. ஆகவே, கவலைப்படாதே. நன்மைக்கு பதிலாக தீமை செய்பவர்களையும், நிஜத்தில் தீமை செய்து கொண்டே நன்மை செய்வது போல பாசாங்கு செய்பவர்களையும் பற்றி கவலைப்படாதே. என் திருச்சபையில் உள்ள சிதறுதல்களையும், பிளவுகளையும் பற்றி கவலைப்படு. ஆவியானவரின் வேலைகளை அலட்சியம் செய்வோரைப் பற்றி கவலைப்படு. ஏனெனில், இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் நான் என் கடுஞ்சினத்தை பொழிவேன். அவர்களே, என் குழந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள். என் ஆண்டவரே, உம்மை அன்பு செய்பவர்களிடமிருந்து உம் திருமுகத்தை மறைத்துக் கொள்ளாதிரும். எங்களை நோக்கிக் குனியும், எங்களை காப்பாற்றுவாரும், எங்களிடம் திரும்பி வாரும், எங்களிடம் திரும்பி வாரும், சீக்கிரமாக திரும்பி வாரும். உம் குழந்தைகளுக்காக நீர் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பார்களாக. உம்முடைய மகிமையை அவர்கள் காண்பார்களாக. ஜெபி, பரிகாரம் செய். இந்த யுகத்தின் பாவங்களுக்காகவும், அக்கிரமத்திற்காகவும். ஜெபி, எனக்கு பலி ஆன்மாக்கள் தேவைப்படுகிறார்கள். இறந்துவிட்ட இந்த யுகத்திற்கு அன்பைக் கொண்டு உயிரூட்டு. நீ ஒன்றுமில்லாமையாக இருந்தாலும், என்னை நேசிப்பதன் மூலம் என் நீதியை உன்னால் சாந்தப்படுத்த முடியும். என்னை அன்பு செய்வதன் மூலம் என்னை மகிமைப்படுத்து. நான் புனிதத்துவத்தை நோக்கி எப்படி உன்னை வழிநடத்துகிறேன் என்பதை நினைவில் கொள். அன்புக்குரியவளே, என்னிடம் வா. ஏன் வேறு எங்கோ பார்க்கிறாய்? மகளே, வார்த்தைகள், புறம்பேசுதல், விமர்சனங்கள் ஆகியவற்றில் விவேகம் உள்ளவளாய் இரு. இவை அனைத்தின் இடத்தையும் மௌனத்தால், என் மௌனத்தால் நிரப்பு.

சோனோ காந்தே, பாதிரி பியோ, ரெக்கார்டிலேட்டோ, சாம்பரே, பாதி பியோவாகிய நான் உன்னோடு இருக்கிறேன். அனைத்தையும் பதிவு செய்.