இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife

Creators and Guests

J
Producer
Joseph

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

அத்தியாயம் 34. மே 19, 1987. இயேசுவா? நான்தான்; வசுலா, இந்த வழிகாட்டுதல் என்னிடமிருந்தே வருகிறது என்பதை நினைவில் வை; நான் எதற்காக ஏங்குகிறேன் என்பது உமக்குத் தெரியுமா, இயேசுவே? எனக்குத் தெரியும், மகளே; இந்த முறையில் உம்மைச் சந்திப்பதற்காக நீர் எனக்குத் தந்திருக்கிற இந்த வரப்பிரசாதமும், என் ஆன்மாவின் கண்களைக் கொண்டு உம்மைக் காண்பதற்காக நீர் எனக்குத் தந்திருக்கிற வரப்பிரசாதமும் எனக்கென்று மட்டுமே இருந்திருக்கலாம், நீரும் நானும், நானும் நீரும் என்று எனக்கென மட்டுமே நீர் இருந்திருந்தால், அப்போது நான் மிக அற்புதமாக உணர்ந்திருப்பேன். நம் இரகசியத்தை யாருக்கும் காட்டாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்திருப்பேன். நான் பெருமூச்செறிந்தேன். மகளே, நீ எனக்காக வேலை செய்ய விரும்புகிறாயா என்று நான் கேட்டேன், உன் பதில் என்னை மகிழ்வித்தது; நீ என் நேசத்திற்குரிய ஆத்துமம், உன் வழியாகவே நான் என்னையும் என் ஆசைகளையும் வெளிப்படுத்துவேன், ஏனெனில் இதுவே என் சித்தம் என்பதை நான் உனக்கு நினைவுபடுத்தவிடு; என் சர்வேசுவரா, உம் வார்த்தை கீழே இறக்கி வைக்கப்படாதிருந்தால், அது என் மீது பாரமாக இருக்கும். நான் என்ன செய்ய முடியும்? அன்பே, நான் உனக்கு உதவி செய்ய மாட்டேனா? நானே ஆண்டவர்; "சகோதரர்களே, என் செய்தியை வாசியுங்கள், மகிழ்ச்சியால் என்னை நிரப்புங்கள், என் விண்ணகச் செயல்களை நினைவு கூறுங்கள், என் அளவற்ற செல்வத்திலும் இரக்கத்திலும் விசுவாசம் கொள்ளுங்கள்!" வசுலா, என்னைப் பின் செல், நான் உன்னை வழிநடத்துவேன்; சிறியவளே, நான் என் பலத்தை உனக்குத் தருவேன், என் கரத்தை விட்டு ஒருபோதும் விலகிப் போகாதே; என் தேவனே... நீர் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்... வசுலா, நான் நேசத்தை... நேசத்தை... நேசத்தை விரும்புகிறேன்; என் சரீரம் நேசத்தின் குறைவால் வலிக்கிறது; என்னுடைய உதடுகள் நேசத்தின் மீதான தாகத்தால் வறண்டு வெடித்துள்ளன; சிறியவளே, என்னுடைய வழிகாட்டுதலுக்காக. என் கருவியாக, நான் உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன்; என் ஆண்டவரே, உம் சித்தம் செய்யப்படுவதாக, நீர் உம் ஆசைகளை நிறைவேற்றுவீராக. அன்பே, என் மீது சாய்ந்து கொள், என் குரலைக் கேள், ஒருபோதும் தனிமையாக உணராதே, ஏனெனில் கடவுளாகிய நான் உன்னோடு இருக்கிறேன்; நான் ஏதோ ஒரு வகையில் தேற்றப்படுவதாக உணர்ந்தேன். ஆண்டவரே, நாம் இந்த நாளைத் தொடங்கலாமா? வா, நான் தொடங்குவேன்; என் மீது முழுவதுமாக சாய்ந்து கொள்; நான் உன்னை வழிநடத்துகிறேன்; பிற்பாடு: பாபெட் வந்தாள். அவள் இயேசுவோடு பேசினாள். நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தோம். பாபெட் தனது கேள்வியைச் சத்தமாக கேட்க வேண்டி இருக்கவில்லை. அவள் மனதில் ஓடிய வெறும் சிந்தனைக்கும் கூட, அவருடைய சொந்த கையெழுத்தில் உடனடியாக பதில் தரப்பட்டது. இதன் மூலம் இயேசு தமது மெய்ப்பிரசனத்தைப் பற்றி எங்களை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரோடு அதிக அன்யோனியம் ஆகும்படியாகவும், அவரை நேசித்து, அவரது பிரசன்னத்தை நினைவில் கொண்டிருக்கும்படியாகவும், அவர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். இம்முறையில் இயேசு பாபெட்டைச் சந்தித்து உறுதிப்படுத்தினார் என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்... என் மீது சாய்ந்து கொள்; இயேசுவே, மக்கள் மாறும்படியாக நீர் மீண்டும் எங்களிடம் சரீரப்பூர்வமாக வரவேண்டும் என்று என் தோழி உம்மிடம் கேட்கச் சொன்னாள். ஆ, வசுலா... நான் திரும்பி வருவேன்; புலரும் ஒவ்வொரு விடியற்காலமும் உங்களிடம் நான் வரும் நாளுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வசுலா, இதற்கு என்ன அர்த்தம் என்பது உனக்குத் தெரியுமா? சொல்லும் ஆண்டவரே. நேசம் மீண்டும் திரும்பி வரும், நேசம் மீண்டும் உங்கள் மத்தியில் இருக்கும், நேசம் மீண்டும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொண்டுவரும்; பூலோகத்தில் உள்ள என் இராஜ்ஜியம், பரலோகத்தில் உள்ள என் இராஜ்ஜியத்தைப் போல் இருக்கும்; நேசம் நேசத்தை மகிமைப்படுத்தும்; என் நேசமே, நான் சீக்கிரத்தில் உன்னோடு இருப்பேன்; ஜெபி, ஏனெனில் காலம் அண்மையில் உள்ளது; சிறியவளே, என்னோடு இன்னமும் வேலை செய்வாயா? நான் உம்முடைய திருப்பெயரைக் கேட்க ஆசிக்கிறேன். நானே நேசம்; ஆம், நான் நேசமானவருக்காக வேலை செய்வேன்; என் இயலாமையில் முழுமையாக உம் மீது சார்ந்திருப்பேன். நான் இல்லாவிடில் நீ காணாமல் போவாய் என்பது எனக்குத் தெரியும், அன்பே; நீ என் ஒளி தேவைப்படுகிற என் மலராக இருக்கிறாய்; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! ஓ மகளே, கவனம் சிதறும் அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்! என் மீது முழுவதுமாகச் சாய்ந்து கொள்; நான் உன் பகுத்தறியும் அறிவை அதிகரிப்பேன்; என் ஆண்டவரே! நான் உம்மை உணரவும், உம்மைக் காணவும், நீர் சொல்வதைக் கேட்கவும் என் உணர்வுகளை அதிகரிக்கிறீரா? ஆம், நீ என்னை உணர்வாய், இன்னும் கூடுதலாக என்னை பகுத்துணரக் கூடியவளாய் இருப்பாய்; என் தேவனே! இந்த எல்லா வரப்பிரசாதங்களும் என் மீது எதற்காக? எதற்கும் தகுதி பெறும் அளவுக்கு நான் எதுவும் செய்துவிடவில்லை! உன்னை நான் நேசிக்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனாலும், நீ யார் என்பதை மறந்து விடாதே; இதை எனக்கு நினைவுபடுத்திக் கொள்ள தயவுசெய்து எனக்கு உதவு, ஆண்டவரே. உன் இழிநிலையை உனக்கு நினைவுபடுத்துவதன் மூலம், என்னால் தரப்பட்டுள்ள எல்லா வரப்பிரசாதங்களாலும் நீ பெருமை கொள்ளாதபடி நான் தடுப்பேன்; என்னிடமிருந்து நீ பெற்றுக் கொள்கிற எல்லா வரப்பிரசாதங்களுமே என் மகிமைக்காகத்தான் என்பதை நான் உனக்கு நினைவுபடுத்துவேன்; என்னிடமிருந்து நீ பெற்றுக் கொள்கிற எல்லா வரப்பிரசாதங்களும் என் சொந்த விருப்பங்களுக்காக மட்டுமே, உன் விருப்பங்களுக்காக அல்ல; ஆகவே, என் இருதயத்திலிருந்து முகந்து கொண்டு உன் இதயத்தை நிரப்பிக்கொள்; என் பலிபீடம் இடைவிடாமல் எரிந்து கொண்டே இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; எனக்காக வாழு, எனக்காக சுவாசி, நித்தியத்திற்கும் எனக்குச் சொந்தமாக இரு; கடவுளுக்காக அப்படி இருப்பேன், என் சர்வேசுவரனா? நான்தான், என்னை நேசி, என் சொந்த ஆவல்களைக் கவனித்துக்கொள்; ஆண்டவரே!... நான் பெருமூச்சு விட்டேன். நான் ஒரு பூஜ்ஜியம். ஆண்டவரே, நீர் அதை அறிவீர். தயவுசெய்து என்னை நம்பாதீர். என்னை உன்னில் சுதந்திரமாகச் செயலாற்ற விடு; வா, நான் உன் கேள்விக்குப் பதில் தருவேன். நேசம் உங்கள் மத்தியில் நேசமாகத் திரும்பி வரும்; நாம் சேர்ந்து ஜெபிப்போம். "ஓ பரலோக பிதாவே, அன்பின் பிதாவே, எங்களிடம் வாரும். தீமையிலிருந்து எங்களை விடுவியும், பிதாவே, எங்களை நேசியும். உம் ஒளியில் நாங்கள் தங்கியிருக்க எங்களை அனுமதியும், உமது இருதயம் ஆசிக்கிறபடியே செய்யும், உமது திருநாமம் மகிமைப்படுத்தப்படுவதாக, ஆமென்." உன்னைப் பயன்படுத்த என்னை அனுமதி, என்னை அனுமதியும், மீண்டும் உம் திருப்பெயரை நான் கேட்கவிடும். நேசமே, நான் இயேசு கிறிஸ்து, கடவுளின் திருச்சுதன்; வசுலா, நான் உன்னிடமிருந்து கேட்பதெல்லாம் நேசமும், சமாதானம் மற்றும் நேசத்தின் சிலுவையை என்னோடு பகிர்ந்து கொள்வது மட்டும்தான்; சரி, ஆண்டவரே. மகளே, என் கரத்தை ஒருபோதும் விட்டுவிடாதே; மகளே, என்னை நேசி; நாங்கள் உம்மை எப்படி நேசிக்க வேண்டும் என விரும்புகிறீரோ, அப்படியே உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத் தாரும். நீர் விரும்பினால், உலகில் மற்ற எல்லோரையும் விட அதிகமாக உம்மை நான் நேசிக்கச் செய்தருளும். நீர் புன்னகைக்கிறீர்! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இதை எனக்காகச் செய்ய நீ விரும்புகிறாயா? ஆம்! நேசமே, என்னைக் கொண்டு நீ கற்றுக் கொள்வாய்; எனக்காகத் துன்பப்படவும் விரும்புகிறாயா? ஆம், ஆண்டவருக்காக, அவர் இந்த முறையிலும் விரும்புகிறார் என்றால்.... அப்படியானால், என் சித்தப்படியே எல்லாமும் செய்யப்படும்; ஆத்துமத்திற்கு எது நல்லதென்று உமக்குத் தெரியும், ஆகவே, நான் கடவுளைச் சார்ந்திருப்பேன். நான் சர்வேசுவரன்; இப்போது என் இருதயத்தில் நான் உனக்காகக் கொண்டிருக்கிற அந்தத் தனிப்பட்ட இடத்திற்கு வந்து, அங்கேயே நிலையாகத் தங்கியிரு;

மே 20, 1987. இந்த முறையில் நான் ஏன் இயேசுவைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலைப் பெறுகிறேன்? அவருடைய செய்தியைக் கேட்டு எழுதுவதில் நான் ஏன், எப்படி, எதற்காக கவனமாய் இருக்கிறேன் என்று சில சமயங்களில் நான் என்னையே ஆச்சரியத்திற்கு உட்படுத்திக் கொள்கிறேன். இந்த எல்லா மாதங்களிலும் இது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நான் உன்னை நேசிக்கிறேன்; என்னைச் சந்திக்கும் படியான இந்த உந்துதலை உனக்குத் தருபவர் இயேசுவாகிய நான்தான்; வசுலா, என்னை எப்போதும் நேசி; நான் உன்னிடம் என் ஆசைகளைச் சொல்வேன், சகோதரி; இயேசு மிகவும் கனிவுள்ளவராக இருந்தார். ஒரு சோகமான பாவனை அவருடைய முகத்தில் இருந்தது. நான் என் குருக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்; அவர்கள் என்னை அதிகமாக நேசிக்க வேண்டும் என விரும்புகிறேன்; அவர்களிடமிருந்து மாசற்றதனத்தையும், பக்திப் பற்றுதலையும், பிரமாணிக்கத்தையும் நான் விரும்புகிறேன்; ஐக்கியமே நேசத்தைப் பலப்படுத்துகிறது, ஐக்கியமே நேசத்தை ஸ்தாபிக்கிறது என்பதை குருக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அவர்கள் மத்தியில் இன்னும் எவ்வளவு காலம் இணக்கமின்மை அரசாளும்? நேசமே ஐக்கியம்; என் நேசம் அவர்களை என்னோடு ஒன்றிக்கிறது; என் திருச்சபை அவர்களது ஒற்றுமை இன்மையால் பலவீனமாய் இருக்கிறது; ஐக்கியமே என் ஆசை; என் திருச்சபை ஐக்கியப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஆனால் ஆண்டவரே, அங்கே இணக்கமின்மை இருக்கிறது என்று நீர் சொல்கிறீர் என்றால், யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டி இருக்குமே. அவர்கள் அதை எப்படி அறிவார்கள்? தாங்கள் ஞான வெளிச்சம் பெறுவதற்காக அவர்கள் ஜெபிக்க வேண்டும்; அவர்கள் என்னிடம் வந்து என் இருதயத்திலிருந்து முகந்து கொள்ள வேண்டும்; இயேசுவே, நீர் யாரைக் குறிப்பிடுகிறீர்? 'அவர்களை' என்றும், 'அவர்கள்' என்றும் நீர் பேசும்போது? என் திருச்சபை முழுவதையும்; அவர்கள் இணைந்து ஒன்றாக்க வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்; இந்தப் பிரிவால் என் திருச்சபை பலவீனப்பட்டுள்ளது; அது பெரும் அளவுக்கு பலவீனப்பட்டுள்ளது; என் ஆண்டவரே, எனக்கு இது ஒரு புதுச் செய்தியாக ஒலிக்கிறது. படிப்படியாக, நான் வேலை செய்யும் முறையை உனக்குக் காண்பிப்பதன் மூலம் உன்னை நான் ஒளிர்விப்பேன், வசுலா; முதலாவது எனக்குப் போதிப்பது..... ஆம்..... அதன் பிறகு, பயிற்சி. அதன்பின் "சமாதானம் மற்றும் நேசத்தின் திருச்சபை சார்ந்த செய்தித் தொகுப்புகள்." அதன்பின் செய்திகளோடு கூடிய சமாதானம் மற்றும் நேசத்தின் வழிகாட்டுதல்? ஆம், வசுலா. இப்போது என் ஆசைகள் என் திருச்சபையை ஒன்றிணைக்கும் ஆசைகள்; என் சரீரத்தின் ஒன்றிரண்டு உறுப்புகள் செயலிழந்தோ, அல்லது காயப்பட்டோ, அல்லது பிரிவுபட்டோ இருந்தால், அந்தச் சரீரம் எப்படிச் செயல்பட முடியும்? முழுமையாக இருக்கிற ஒரு சரீரத்தைப் போன்ற அதே சக்தியையும் பலத்தையும் அது கொண்டிருக்குமா? என் திருச்சபையே என் சரீரம்; என் சரீரத்தை அவர்கள் செயல் இழக்கச் செய்வார்கள் என்றால், அது எப்படி செயல்பட முடியும்? மகளே, என் அடையாளத்தை வரை, இதுவே ஆதிக் கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருந்தது; நேசம் ஒன்றாக இருந்தது; நேசம் ஐக்கியப்பட்டிருந்தது; இயேசுவே, உயர்ப்பு நியாயம் வெவ்வேறு தேதிகளில் வருகிறது என்று எனக்கு தெரியும். எது சரியான தேதி என்று எனக்கு சொல்ல முடியுமா? எங்களுடையதா? அவர்களுடையதா? தயவுசெய்து ஒரு தனிக் காகிதத்தில் இதை எழுதித் தாரும். வசுலா, அப்படியானால் ஒரு காகிதத்தை எடு; உமக்கு நன்றி, இயேசுவே. இயேசு எனக்கு உயிர்ப்பு விழாவுக்காக சரியான தேதியைத் தந்தார். வா, இப்போது நாம் ஜெபத்தில் ஒன்று சேர்வோம்; ஐக்கியத்திற்காக பிதாவிடம் ஒரு ஜெபம்; பிதாவே, நான் உம்மிடம் வந்து நீர் உம் ஆடுகளை ஒளிர்விக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன்; ஐக்கியத்தில் சமாதானத்தையும் நேசத்தையும் கண்டடையும்படி அவர்களை ஒளிர்வித்தருளும், ஆமென்; வசுலா, என் ஆடுகளை ஒன்றுசேர்! இயேசுவே, உம் குருக்களை ஒன்று சேர்க்கவும். அவர்களையும், அவர்களது விவாதங்களையும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பையும் அறிந்து கொள்ள நான் யார்? ஒரு சிறிய காகிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்லவும். அதை எழுதியவர் நீர்தான் என்று அவர்களுக்குச் சொல்லவும். நான் யார்? இயேசுவே, நீர் எனக்குச் செய்திகளை தருகிறீர். நீர் உம் இருதயத்தின் ஆசைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர். ஆண்டவரே, திருச்சபையைச் சார்ந்த திருச்சபையில் ஏற்கனவே இருக்கிற யாரிடமாவது, உயர் அதிகாரிகள் அனைவரையும் எளிதாக அணுகக்கூடிய யாரிடமாவது, பிரசித்தி பெற்ற பரிசுத்த தனமும், நம்பகத்தன்மையும் உள்ள யாரிடமாவது, இந்த செய்திகளை தருவது அதிக எளிதாக இருந்திருக்காதா? ஆண்டவரே, உண்மையில் முடமானவளும், இந்த எழுத்துக்களைப் பற்றி அறிந்துள்ள குருக்களில் பாதிப் பேரால் அதைரியப்படுத்தப்பட்டுள்ளவளுமாகிய ஒருத்தியைத்தான் நீர் தேர்ந்தெடுத்திருக்கிறீர். இவற்றைப் பின்பற்ற அவர்களில் பாதிப் பேர் ஆர்வம் இல்லாதிருக்கிறார்கள். அவர்களுக்கு இவற்றைக் காண்பிப்பதில் நான் சோர்ந்து விட்டேன். ஏனெனில் அது அவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. அவர்களுக்கு எரிச்சல் மூட்டுகிறது என்று எனக்குத் தெரியும். என்ன செய்வது? உன் தோள்கள் தாங்குவது இதைத்தான், வசுலா; இதுவே உன் மீதுள்ள என் சிலுவை; நான் அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன், ஒருபோதும் சோர்ந்து போகாதே; ஆண்டவரே, உம் செய்தி எப்படி சரியான செவிகளைச் சென்றடையும்? நான் அவர்களில் ஒருத்தியல்ல. நான் வெளி ஆள். அது சென்றடையும்; அது வழிந்தோடிக் கொண்டிருக்கிற ஒரு சிற்றாறு போன்றது, மெதுவாகத்தான் விரிவடையும்; வழிந்தோடுவதிலிருந்து அது விரைந்தோடத் தொடங்கும், அதன்பின் பாய்ந்தோடும்; அந்தச் சிற்றாறு ஒரு அகன்ற பெரும் கடலாக மாறும்; வசுலா, நீ சோர்ந்து போகும்போது என் மீது சாய்ந்து கொள்; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னோடு என் சிலுவையை சுமக்க உனக்கு நான் உதவி செய்வேன்; நேசமே, ஒருபோதும் கைவிடப்பட்டவளாக உணராதே; நான் தடுமாறும்போது, இயேசு என்னை எப்போதுமே தூக்கி விடுவார் என்று நான் உணர்ந்தேன். நான் மீண்டும் பலம் பெற, அவர் மீது எப்போதும் சாய்ந்து கொள்ளலாம் என்று நான் புரிந்து கொள்ளும்படி அவர் செய்தார்... வசுலா, நான் உன்னை வழிநடத்துவேன்; மே 23, 1987. நேற்று எழுதுவதில் இயேசுவை நான் சந்திக்கவில்லை. ஆனால் அவரது பிரசன்னம் அவரால் எனக்கு உணர்த்தப்பட்டது. அவரது வார்த்தைகளும் தான். என் கணவர் அல்லது நண்பர்கள் என்னோடு பேசும் அதே வேளையில், இயேசுவும் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் என் ஒரு கரத்தையும், மற்றவர்கள் என் மறு கரத்தையும் இழுத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. குறிப்பு: உலகம். இயேசுவா? நான்தான்; விசுவாசத்தைக் கொண்டிருப்பதும் ஒரு வரப்பிரசாதமே, நேசமே; என்னிடம் சொல், நான் உன் மணவாளர்; நான் அவரிடம் ஒரு காரியம் சொன்னேன். அவர் எனக்குப் பதிலளித்தார். நான் விரும்புகிற எதையும் உன்னைக் கொண்டு செய்யவிடு; வசுலா, நான் சர்வேசுவரன், உன்னை என்னிடம் உயர்த்தியதன் மூலமும், என்னை நேசிக்க உனக்குக் கற்றுத் தந்ததன் மூலமும், இம்முறையில் என்னைச் சந்திக்க உன்னை அனுமதித்ததன் மூலமும், உன்னிடம் நான் எதையோ எதிர்பார்க்கிறேன் என்பதை இப்போது நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்; என்னால் தரப்பட்ட வரப்பிரசாதத்தைக் கொண்டு, எழுதுவதற்கு உனக்குக் கற்பிக்கப்பட்டது; உன்னைப் பயன்படுத்த உனக்கு உதவும்படி இந்த வரப்பிரசாதம் உனக்குக் கொடுக்கப்பட்டது; நீ என்னை மகிமைப்படுத்தும்படி பல வரப்பிரசாதங்கள் உன்மீது பொழியப்பட்டுள்ளன; நான் உன்னை என்னோடு இணைத்திருக்கிறேன், உன்னை என் மணவாளியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்; நானும் நீயும் இப்போது ஒன்றாய் இருக்கிறோம்; மகளே, இதை நீ தெளிவாகக் காணவில்லையா? நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன், என் சொந்த விருப்பங்களுக்காக நான் உங்களை அணுகி வந்திருக்கிறேன்; என் தேவனே, இதோ இருக்கிறேன்; நான் ஒரு விஷயத்தை அவருக்கு ஞாபகப்படுத்தினேன். வசுலா, என் இலட்சியங்களை நான் எப்போதும் நிறைவேற்றுகிறேன்; எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். நீர் அதிகத் தெளிவாக எனக்குச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகளே, உன் புத்திக் கெட்டாத மிக அதிகமான அளவில் நான் உன்னை நேசிக்கிறேன்; நீ வார்த்தைக் கெட்டாத விதமாக பலவீனமாய் இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்; நான் இல்லாமல் நீ முற்றிலும் குறைவுபட்டவளாகவும், அசைய முடியாதவளாகவும் இருக்கிறாய் என்று நான் அறிவேன்; கவலைப்படாதே, ஒரு தந்தை தன் நோயாளிக் குழந்தையைத் தூக்குவது போல, நான் உன்னைத் தூக்கிக் கொள்வேன்; நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன்; நான் உனக்குத் தேவையானதைத் தருவேன்; என் எல்லா வேலைகளையும் நிறைவேற்றப்படுமாறு நான் பார்த்துக் கொள்வேன் என்பதை நினைவில் கொள்; நீ என் பணிப்பெண்ணாக இருக்குமாறு உனக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன்; உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலை நீ நிறைவேற்றுமாறு நான் பார்த்துக் கொள்வேன்; நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை நேசி. என்னை மட்டுமே நேசி; போட்டியாளர்களை நான் விரும்பவில்லை. என்னை ஆராதி, ஏனெனில் நானே உன் தேவன்; வசுலா, உன் கடவுளுக்கு பணி செய்வது என்பது அவருக்கு ஊழியம் செய்வதாகும். எனக்கு ஊழியம் செய்; வா, என்னோடு ஒன்றாய் இரு; மகளே, உன் அறியாமையில் நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்; நான் உண்மையில் என்னை சுற்றி பிரமாணிக்கமுள்ள ஊழியர்களைக் கொண்டிருக்கிறேன்; அவர்கள் என் ஆன்மாவுக்கு பிரியமானவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் என் கண்களில் மிகுந்த மதிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்; நான் என் வேலைகளை அவர்களிடம் ஒப்படைக்கிறேன்; பக்திப் பற்றுதலோடு எனக்கு ஊழியம் செய்வதாலும், என்னை ஆராதிப்பதாலும், எனக்காகத் தங்கள் ஆன்மாக்களைப் பலியாக்குவதாலும், என் வார்த்தையைப் பெரும் வரப்பிரசாதத்தோடு வாழ்த்திப் போற்றுவதாலும், அவர்கள் என் திருப்பெயரைக் கனப்படுத்துகிறார்கள். நான் அவர்களை நேசிக்கிறேன்; அன்போடு அவர்களைக் கண்ணோக்குகிறேன்; உன் கேள்வியை நிறுத்தி வைத்துக் கொள்ளாதே; நீர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர், நான் நல்லவளில்லை. வெறுமனே எதற்காகப் படைக்கப்பட்டேன் என்றால்... குறிப்பு: நான் சொல்லி முடிக்க அவர் விடவில்லை. இழிந்த நிலை என்னைக் கவர்கிறது; மொத்தத்தில், நீ ஒன்றுமில்லாமையாக, முற்றிலும் ஒன்றுமில்லாமையாக இருக்கிறாய்! ஆனாலும், ஒன்றுமில்லாமையாக இருப்பதன் மூலம், உன்னிடம் எது இல்லையோ, அந்த எல்லாமுமாக நான் இருக்கிறேன் என்றால், எனக்கு போட்டியாக என்ன இருக்கிறது? எனக்குப் போட்டியாக எதையும் நான் உனக்குள் காணவில்லை, ஏனெனில், நீ ஒன்றுமில்லாமையாக இருக்கிறாய்; மகளே, உன்னில் நான் காணும் இன்பம் இத்தகையதே; என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இல்லை, உன்னால் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும், அது பிரச்சனை இல்லை, அது நிஜமாகவே ஒரு பிரச்சனை இல்லை, நான் படைப்பு முழுவதற்கும் அரசராய் இருக்கிறேன்; நீ முழுவதும் என்னுடையவள், மேலும், சிறியவளே, நீ மிக அற்பமான ஆவளம் என்று என்னை கவர்கிறாய்; சிறிய தன்மை என் கவனத்தைப் பிடித்திழுக்கிறது; ஒன்றுமில்லாமை என்னை வசீகரிக்கிறது; குறிப்பு: இன்ஃபேச்சுவேஷன். இந்த வார்த்தையை என் வாழ்வில் அதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை. வசுலா, ஒருநாள் என் வார்த்தைகளை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாய்; நீ எனக்கு ஊழியம் செய்வதாக இருந்தால், நான் பாடுகளைத் தவிர வேறு எதையும் உன்னில் வெளிப்படுத்த மாட்டேன்; பாடுகளா? ஆம், பாடுகள். அவை... பலவீனத்தினால், அவர் தம்முடைய கேள்வியை எழுத விடாமல், நான் அவரை தடுத்தேன். ஆனாலும், நான் அதை கேட்டேன்.... அவர் சொல்ல விரும்புவதை நான் கேட்க விடாமல், எதுவும் அவரைத் தடுக்க முடியாது. உன் அச்சத்திற்குரிய பலவீனத்திலும் நான் உன்னில் தங்கியிருப்பேன்; என்னை நேசி. வசுலா; எனக்குப் பயப்படாதே; நானே நேசமாய் இருக்கிறேன்; நான் உன்னில் மிகப் பிரியமாய் இருக்கிறேன்; நான் உனக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் உன்னிடமிருந்து கேட்க மாட்டேன்; நான் நேசமும், நேசத்தின் எஜமானருமாக இருக்கிறேன்; குழந்தாய், உன்னுடைய இடைவிடாத சந்தேகங்களையும், தோல்விகளையும் மீறி, நான் என் பலிபீடமாக உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறேன்; என் தீச்சுவாலையிலிருந்து பெற்றுக்கொள்ள இயலாத உன் நிலையை நான் அறிந்திருப்பதால், நானே என் பற்றியெறியும் ஆசைகளை உன்னில் பொழிந்து, அதன் மூலம் என் தீச்சுவாலை தொடர்ந்து பற்றியெறியச் செய்வேன்; நேசமே, வா, நீயே என் ஒளி தேவைப்படுகிற என் மலராக இருக்கிறாய்; என் ஒளியின் கீழ் வாழு, நீ அழிந்து போவதைக் காண நான் விரும்பவில்லை; ஆண்டவரே, நீரும் என்னை ஈர்க்கிறீர். உமக்குத் தெரியும்.. இது உன்னை ஆச்சரியப்படுத்துகிறதா? உன் இழிநிலை என் இரக்கத்தால் கவரப்படுகிறது; உன் வாக்குக் கெட்டாத பலவீனம் என் பலத்தால் ஈர்க்கப்படுகிறது; உன் ஒன்றுமில்லாமை நானாயிருக்கிற எல்லாவற்றாலும் ஈர்க்கப்படுகிறது; எனக்காக வாழு; நான் என் ஆசையை அவரிடம் சொன்னேன். உன் ஆசையை நீயே சம்பாதித்துக் கொள், வசுலா; இயேசு தம் ஆசையை காண்பிக்க முயல்வதை நான் கண்டேன். வசுலா, வா, எனக்கு இன்னும் நெருக்கமாக வா, வசுலா; நான் தயங்கிக் கொண்டிருந்தேன். என்னை மட்டுமே விரும்பும்படி நான் மீண்டும் உன்னை கேட்கிறேன்; வசுலா, என்னை மறுதலிக்காதே! என் இருதயத் துடிப்புகளைக் கேள்; என்னை உன்னால் தடுக்க முடிகிறதா? கடவுளைத் தடுக்க என்னால் முடியுமா? இருந்தாலும், நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஏனெனில், இதெல்லாம் எங்கு போய் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உம்மை நேசிக்கிறேன், என் தேவனே. அப்படியானால், என்னிடம் வா, உனக்கென எந்த ஆசைகளையும் கொண்டிராதே; அங்கே என்னைக் காண நீ விரும்புகிறாயா? என் மனதில் ஒரு புகழ் பெற்ற இடத்தில் உள்ள இயேசுவின் புகழ் பெற்ற படம் ஒன்று என் மனதில் வந்தது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஆண்டவரே, இது உம் விருப்பமாக இருந்தால், ஆனால் எனக்குப் பதில் சொல்லாதீர். நீர் விரும்பியபடி செய்யும். மகளே, உன் முழு வேலையும், என் மகிமைக்காக இருக்கக் கடவது; என் ஆசைகள் உன் ஆசைகளாகவும் இருக்க வேண்டும், நான் என் ஆசைகளை எழுதி, உன்னை வழிநடத்துவேன்; இது ஒருமைப்பாட்டைப் பற்றியதா? ஆம், என் திருச்சபையின் ஒருமைப்பாட்டை பற்றியது; என் சரீரம் பலப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்; ஐக்கியம் என் திருச்சபையைப் பலப்படுத்தும்; என் பிரசன்னத்தை நீ நினைவு கூர்வாயா? அப்படியானால், வா, நாம் போவோம்;